Skip to content
Post Views: 5,363
மது அந்த டிரெஸ்ஸிங் டேபிள் கண்ணாடியின் முன் நின்று தலை சீவி, தன் நீண்ட தலை முடியை லூசாக பின்னிக் கொண்டிருந்தாள்.
அவர்கள் எல்லோரும், இன்று ரகுவின் வீட்டு குலதெய்வக் கோவிலுக்கு கிளம்பி கொண்டிருந்தனர்.
புது மணமக்கள் முதலில் குலதெய்வ கோவிலுக்கு சென்றுவிட்டு வர வேண்டும் என்று பட்டு பாட்டி, பூஜைக்கு உண்டான எல்லாவற்றையும் ராமநாதனிடமும் வைஷுவிடமும் கேட்டு ஏற்பாடு செய்திருக்க, இதோ இவர்கள் இப்போது கிளம்பி கொண்டிருக்கிறார்கள்.
மது எப்போதும், ரகு எழுமுன் எழுந்து குளித்து ரெடியாகிவிடுவாள்.
Advertisement
இன்று ரகுவும் அவள் எழும் நேரமே எழுந்து விட்டதால், அவன் குளிக்க சென்ற நேரம் வேக வேகமாக அவள் புடவையை கட்டிக்கொண்டாள்.
குளித்து விட்டு வந்த ரகு, அவளைப் பார்த்தவன், அவளின் அந்த பின் பக்கம் ஹூக்ஸ் வைத்து தைத்திருந்த ப்ளவுசில் நடுவில் ரெண்டு மூன்று கொக்கிகள் போடப்படாமல் இருப்பதைப் பார்த்து விட்டு, அவற்றை மாட்டி விட, சட்டென்று கோபமாய் திரும்பினாள் மது!
“என்ன பண்றீங்க?”
Advertisement
“ம்ம். பார்த்தா தெரியல? நடுவுல கொஞ்சம் ஹூக்ஸ் போடாம விட்டுருக்க, அதான் போட்டு விட்டேன் அதுக்கென்ன இப்ப?”
Advertisement
“நான் உங்க கிட்ட ஹெல்ப் கேட்டேனா? நான் கீழே போய் வைஷு அக்கா கிட்ட போய் போட்டுகிடலாம்னு தான் இருந்தேன். உங்கள யார் போட்டுவிட சொன்னா?”
“அதுவர இப்படி ஓப்பான விட்டுட்டு போவியா?”
“அப்படி போவாங்களா? இப்படி சாரிய வச்சு மறைச்சுப்பேன்!”
Advertisement
“இப்ப என்ன? நான் போட்டுவிட்டது தப்பு, அதானே,இரு நானே கழட்டி விட்டுடறேன்!” என்று அவன் எல்லாத்தையும் கழட்டி விட்டுவிட்டான்!
அய்யோ! இவன் ஒரு குரங்குன்னு தெரிஞ்சும் நான் இவன் கிட்ட வாய் கொடுத்தது தப்பு தான்!
நான் அப்பவே யோசிச்சேன், இந்த மாதிரி பளவுஸ் போடணுமான்னு? அங்கன்னா மானு ஹெல்ப் பண்ணுவா.
இந்த வைஷு அக்கா சேம் சாரி கட்டலாம்னு சொல்லி வாங்கி கொடுத்தது தான், இந்த சாரியும் இந்த பேக் சைடு கொக்கி வைத்த போட் நெக் பிளவுஸ்ஸும்!
இப்போ இவன் கிட்ட வகையா மாட்டிகிட்டோம்!
“ஸ்.ஸ். யப்பா, உங்க கிட்ட ஒரே இம்சை! ப்ளீஸ் கொஞ்சம் வெளியேயாவது போய் நில்லுங்க, நான் வேற சாரி கட்டணும், இது சரியா வரல!”
‘வேற சாரி கட்டனும்னா கட்டு, அதுக்கு நான் ஏன் வெளியே போகணும்? அதெல்லாம் முடியாது, நானும் கிளம்பனும்”
“அப்ப கொஞ்சம் திரும்பி நின்னு கண்ணையாவது மூடிக்கங்க!”
“எதுவும் முடியாது, நீ சொல்லிட்ட இல்ல, அப்ப கட்டாயம் பார்க்க தான் செய்வேன்.
நீ என்ன சொன்ன? உன்னைத் தொட்டா சார்ஜ் பண்ணுவன்னு சொன்ன?
ஆனா, பார்க்கிறதுக்கு இல்லையே, நான் பார்ப்பேன்! நல்லா உட்கார்ந்து ரசிச்சு பார்ப்பேன்!”
“ஏன் இப்படி?” மது சொல்லிக் கொண்டு இருக்கும் போதே அவள் போனில் வைஷு வந்து “இன்னும் ரெடி ஆகலியா?” என்று அவசரப்படுத்த,
மது வேற வழியில்லாமல் ரகுவையே ப்ளவுஸ் கொக்கி போட்டு விட சொல்லும்படி ஆகிற்று!
அவன் வெற்றி புன்னகையோடு செய்து விட்டு,
“நானும் என் சர்வீஸ்க்கு சார்ஜ் பண்ணுவேன்!” என்றான் குறும்பாக!
அவன் இப்படி தன் ட்ராக்கை மாற்றிக் கொண்டதுக்கு காரணம் மது தான்!
அவன் இப்போது முழுவதும் தன் தவறை உணர்ந்து, மதுவின் மனக் காயத்தின் ஆழம் உணர்ந்து அவளிடம் பல வகையில் சாரி கேட்டுப் பார்த்து விட்டான்!
அவளோ, நத்தைக் கூட்டுக்குள் ஒடுங்குவது மாதிரி அவள் மனதை உள்ளுக்குள் போட்டு பூட்டி விட்டாள்!
அவ்வபோது அவள் வெளிப்படுவது, இப்படியான சீண்டல்களின் போது தான்!
அவள் இப்படி உணர்ச்சிகளை உள்ளுக்குள் பூட்டி வைத்து வெறும் மண் போல நடமாடுவது அவனுக்கு மிகவும் வலித்தது!
அவள் மவுனம், அவளின் விலகல் அவனைக் கொன்றது!
அவள் தொடர்ந்து தன்னிடம் கோபப்படுவதால், அல்லது ஆர்க்யு பண்ணிவதால் அவளுக்கு ஒரு வடிகால் அமையட்டும் என்று அவன் நினைத்தான்!
அது மெல்ல அவள் மனக்காயத்தினை ஆற்றும் எனவும் அவன் நினைத்தான்!
அது வரை பொறுமையாக இருக்கதான் வேண்டும்! தான் புத்திக் கெட்டுப் போய் பேசியதற்கு தண்டனை!
ரகு சாம பேத தான தண்டம் அனைத்தையும், தேவைப் பட்டால் காலில் விழுந்தும் கூட அவளை சமாதானப்படுத்த அவன் ரெடி தான்!
ஆனால் அவள், அவன் சமாதானம் செய்ய முற்படும்போது தான் வேகமாக தன் மனதை கூட்டுக்குள் இழுத்துக் கொள்கிறாள்!
எனவே ரகு, இப்போது ரூட்டை மாற்றி விட்டான்!
அவளை சீண்டிப் பார்த்து சீண்டிப் பார்த்து அவளை மீண்டும் மீண்டும் கோபப்படுத்தி, அவளை அவளாக வைத்துக் கொண்டிருக்கிறான் இப்போது!
முதலில் அவள் தரையில் படுத்து தூங்குவது அவனுக்கு வலித்தது!
அதை மாற்ற, அவளிடம் “ஏன் மது, உனக்கே உன் மேல் நம்பிக்கையில்லையா? எங்கே பக்கத்தில் படுத்தால், தூக்கத்தில் “நந்து” என்று என்னைக் கட்டிப் பிடித்து விடுவோன்னு?
அவள் கடுப்பானாள்.
“என்ன என்னன்னு நினைச்சீங்க? அவ்ளோ அண்டர் எஸ்டிமேட் பண்ணாதீங்க! நான் மெண்டல்லி ரொம்ப ஸ்ட்ராங்! உங்கள மாதிரி , பயப்பட எல்லாம் மாட்டேன்!”
“கேட்டீங்க பாருங்க, உன் கண்ட்ரோல்ல எடுத்துடுவியான்னு!
ஏன்? ஏன்னா.. உங்களுக்கு தான் உங்க மேலே நம்பிக்கை இல்ல! அதான்!
நான் அப்படி கிடையாது! ரொம்ப ஸெல்ப் கண்ட்ரோல் இருக்கு என்கிட்ட!”
“அப்ப கட்டில்ல வந்து என் பக்கத்துல படுக்க வேண்டியது தானே! ஏன் இப்படி பாத்ரூம் கிட்ட போய் படுத்துட்டு இருக்க?”
அவளை கட்டிலில் தூங்க வைத்தான்!
“உனக்கு ஒண்ணும் பயம் இல்லையே! நானெல்லாம் உன்னைப் பார்த்து டெம்ப்ட் ஆனா, ரொம்ப ஹானஸ்டா சொல்லிடுவேன்!
நீ எப்படி? மாமாவை இத்தனை நாள் புல் பார்மல் ட்ரெஸ்ல தான் பர்த்துருக்க, இனி இப்படி சட்டை இல்லாம.. இல்ல இப்படி ஷார்ட்ஸ் மட்டும் போட்டுட்டு இருக்கப்ப உனக்கு என்னை பார்த்து பயம் வரலாம்! அதான் இப்பவே கிளியர் பண்ணிட்டேன்!” அவளை சீண்டினான்!
“அப்புறம் இன்னொன்னும் சொல்லிடறேன், நான் தூக்கத்தில் கையை காலை போடத்தான் செய்வேன்!”
“அதுக்கு உனக்கு ஓகே தானே?” “ஓகே தான்! நீ தான் மெண்டலி ஸ்ட்ராங் ஆச்சே!”
அவள் முறைத்தாள்.
இப்போது,
“ம்ம். நான் ரெடி, வாங்க போகலாம்!” மது கோவில் செல்ல ரெடியாகி அவனை அழைத்தாள்.
“ம்ம்.. சரி” என்று அவன் வேகமாக கீழே இறங்க முயற்சிக்க, மது அவனை நிறுத்தினாள்.
“ஏங்க இன்னொரு ரிக்வெஸ்ட், நீங்க இப்படி என்னை விட்டுட்டு தனியே போனா வைஷு அக்கா மோப்பம் பிடிச்சுடுவாங்க, நமக்குள்ள ஏதோ சரியில்லன்னு”
“அதுக்கு?”
“கொஞ்சம் என்னோடு இப்படி ஒட்டி நடங்க! அப்பப்போ இப்படி தோளில் கைப்போடுங்க! நீங்க நம் கல்யாணத்திற்கு முன் எப்படி இருப்பீங்களோ அப்படி!”
அவள் சொல்வது சரி தான்! இல்லன்னா வைஷு இல்லன்னா கூட இந்த தன்வி குட்டிக் கூட கண்டுபிடிச்சு அவ அம்மா கிட்ட சொல்லிரும்!
‘அம்மா மதுவுக்கும் சித்தாக்கும் ஏதோ பைட் போல” என்று!
அந்த ரிஸ்கை அவனும் எடுக்க விரும்பவில்லை! ஆனால் கூடவே மதுவையும் சீண்ட நினைத்து,
“கொஞ்சம் செலவாகும் பரவாயில்லையா?”
“என்ன?”
“ஏன் நீ மட்டும் தான் உன் சர்வீஸ்க்கு சார்ஜ் பண்ணிவியா? நானும் பண்ணுவேன்!’
“என்ன?” மது ஷாக்கானாள்.
“ஆனா இது பண்டமாற்று முறை! என்னோட சர்வீஸ்க்கு, சார்ஜ் உன்னோட சர்வீஸ்! டீல் ஓகேயா?”
‘சகிக்கல!”
ரகு சிரித்தான்! “போடி செல்லம், மெல்ல மெல்ல உன் மனசை என் பக்கம் திருப்புவேன்! எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு! ஏன்னா நீ என் மேல கோபமா தான் இருக்க! ரொம்ப வருத்தமா தான் இருக்க!
ஆனா என்னை வெறுத்து விடல! உன்னால அது முடியவும் முடியாது!
ஏன்னா உன் நந்துடி! உன் செல்ல நந்து!
கொஞ்சம் புத்திக் கெட்டு போய், இப்ப திருந்தி வந்திருக்கிற உன்னோட முதல் குழந்தை நான்!
ரகு மிகுந்த நம்பிக்கையில் இருந்தான்!
நம்பிக்கை கை கொடுக்குமா?
error: Content is protected !!