Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

இதயத்தின் ஓசை கேட்குதோ 30

சில மாதங்கள் கடந்து இருந்தது…. சசி அவனின் மறுமணத்திற்கு ஒத்துக்கொண்டு இருந்தான்… இன்னும் பதினைந்து நாட்களில் திருமணத்தை வைத்து கொள்ளலாம் என முடிவு செய்து இருந்தனர்….. அவன் மித்ரவுடன் தனியாக பேசிய பின் தான் திருமணத்திற்கு ஒத்துக்கொண்டான்…



Advertisement

அவர்கள் தனியாக சந்தித்த போது “என்னால அந்த பழைய வலில இருந்து வெளிய வர முடியல… சீக்கிரம் அது சரி ஆகிடும்னு நம்புறேன்… அது வரைக்கும் வெயிட் பண்ணுவியா…. ” என்று சசி மித்ராவிடம் கேட்டான்….

Advertisement

அதற்கு அவளோ “நீ எனக்கு கிடைக்க மாட்டேன்னு தெரிஞ்சும் உனக்காக மட்டுமே வாழ்ந்தேன்… இப்போ நீ எனக்கு தான்னு தெரிஞ்ச பிறகு எவளோ நாள் வேணா வெயிட் பண்ணுவேன்… ஆனா ரொம்ப நாள் வெயிட் பண்ண வெச்சிடாத சசி ” என்று கூறினாள்….

Advertisement

“கண்டிப்பா உன்னை ரொம்ப நாள் வெயிட் பண்ண வைக்க மாட்டேன்… அது வரைக்கும் ப்ரெண்ட்ஸ்… ” என்று கூறி கையை நீட்டினான்….

Advertisement

அவளும் சிரித்து கொண்டே “ப்ரெண்ட்ஸ்” என்று கூறி கையை குலுக்கினாள்…

அதன் பிறகு தான் திருமணத்திற்கு சம்மதம் கூறியது… அதன் பின் வீட்டில் கல்யாண வேலை கலை கட்டியது.. ஆளுக்கு ஒரு வேலை எடுத்து செய்ய வீட்டில் கலகலப்புக்கு பஞ்சம் இல்லாமல் போனது…. சுபாவோ நிரவி குட்டியை பாட்டிகளிடம் விட்டுவிட்டு  “என் பிரென்ட் கல்யாணம் நான் வேலை செய்வேன்” என்று யார் தடுத்தும் கேட்காமல் அவளும் வேலையை இழுத்து போட்டு செய்து கொண்டு இருந்தாள்….

அதோ இதோ என கல்யாண நாளும் வந்து இருந்தது… இந்த கல்யாணத்தில் நந்தினிக்கும் சுபாவிற்கும் சிறு பிரச்சனை வந்து இருந்தது… சுபா அதை அப்போதே மறந்து இருக்க நந்தினி அதை பற்றியே யோசித்து கொண்டு இருந்தாள்… வாணன் நந்தினியிடம் எடுத்து கூறியும் அவள் “உங்க தங்கச்சிக்கு தான் நீங்க சப்போர்ட் பண்ணுவீங்க… போங்க மாமா… ” என்று கூறி சென்றுவிட்டாள்…

வாணன் சொல்வதை அவள் கேட்பதாய் இல்லை… பிரச்சனை என்னவென்றால் சசியின் திருமணத்திற்கு கிரிஜா வருவதை பற்றி… சசியின் கல்யாணத்தை பற்றி கூட யாரும் கிரிஜாவிடம் கூறவில்லை… வேறு யார் மூலமாக தெரிந்து கொண்டு மற்ற யாரிடமும் பேச முடியாது என முடிவு செய்து நந்தினியிடம் தான் பேச வேண்டும் என நினைத்து தற்போது அவள் கோவிலுக்கு வரும் நேரம் அவளிடம் பேச நினைத்து அவரும் அந்த நேரம் கோவிலுக்கு வந்து இருந்தார்…

முதலில் அவரை கண்டும் காணாமல் சென்ற நந்தினி அவர் பின்னாடியே வருவதை பார்த்து “என்ன வேணும் உங்களுக்கு எதுக்கு பின்னாடியே வரீங்க… ” என்று கேட்டாள்….

அதற்கு கிரிஜாவோ “நந்து ம்மா சசிக்கு கல்யாணம் பண்ண போறீங்கனு பேசிகிட்டாங்க… அதுகூட என்கிட்ட சொல்லல நீங்க… அவளோ வேண்டாதவளா போயிட்டேனா நான்… அவன் கல்யாணத்துக்கு முன்னாடி நின்னு எதுவும் செய்யலனாலும் ஒரு ஓரமா நின்னு கல்யாணத்தை பார்த்துட்டு போயிடுறேனே… வீட்டுல கேட்டுட்டு சொல்லு நந்தும்மா… வெள்ளிக்கிழமை இதே நேரத்துக்கு கோவிலுக்கு வரேன்… அப்போ சொல்லு ம்மா ” என்று கண்ணீரோடு விடைபெற்றார்…

நந்தினி கோவிலில் இருந்து வீட்டுக்கு சென்று அனைவரிடமும் கூறினாள்… அவள் கூறியவுடன் அனைவரும் சசியை தான் பார்த்தனர்… ஆனால் அவனோ தரையை பார்த்தாவாரு அமந்துவிட்டான்….

நந்தினி அவனிடம் “ரொம்ப கெஞ்சுறாங்க சசி… ஓரமா நின்னு பாத்துட்டு போகட்டும்…. “என்று கூறினாள்…

“அவங்க வர வேண்டாம் க்கா… எனக்கு அவங்கள பாக்க கூட பிடிக்கல… அவங்க வந்தா நான் என்ன பண்ணுவேன்னு தெரியாது ” என்று கூறி அறைக்குள் சென்று விட்டான்….

நந்தினி சுபாவிடம் “நீ சொல்லு சுபா அவன் கேட்பான்” என்று கூறினாள்….

அதற்கு சுபாவோ “நான் சொல்றதுக்கு என்ன இருக்கு அண்ணி… இது அவன் முடிவு… நான் சொன்னா கேட்க மாட்டான்… நீங்க மாமாவை கேட்க சொல்லுங்க இல்ல நீங்களே இன்னொரு முறை அவன்கிட்ட கேளுங்க அண்ணி… பாப்பா அழுகுறா… நான் போறேன்….” என்று கூறி சென்றுவிட்டாள்…

அப்படி சென்றது நந்தினிக்கு ஒரு மாதிரி இருந்தது… வெள்ளிக்கிழமை அன்று சசி கூறியதை கூறினாள்… அது மட்டும் இல்லாமல் சுபா கூறியதையும் கூறினாள்…. அதற்கு கிரிஜாவோ “அவ எப்பயும் அப்படி தான்… மதிக்காம திரிவா… நீ தான் அவளுக்கு அதிகமா இடம் கொடுக்குற…. நான் பண்ண பாவம் என் பையன் கல்யாணத்தை பாக்க முடியாத மாதிரி ஆகிடிச்சி… என் பையன் எங்க இருந்தாலும் சந்தோசமா இருக்கட்டும்” என்று கூறி அழுதவாறே சென்று விட்டார்…

கிரிஜா இன்னும் திருந்தவில்லை… நந்தினி மூலம் குடும்பத்திற்குள் சென்றுவிடலாம் என்று நினைத்து தான் அவளிடம் பேசி பார்த்தது… தற்போது நடக்காது என தெரிந்து சண்டையாச்சும் மூட்டி விடலாம் என நினைத்து சுபா பற்றி மெளிதாக கூறிவிட்டு சென்றுவிட்டார்…. அவரிடம் பேசியபோது  இருந்தே நந்தினி சுபாவை திட்டி கொண்டே தான் இருந்தாள்….

வாணன் கேட்டாலும் “நீங்க உங்க தங்கச்சிக்காக தான் பேசுவீங்க” என்று கூறி சென்றுவிடுவாள்.. அர்ஜுனன் கண்டும் காணாமல் இருந்துவிட்டான்… சுபா அவனிடம் “விடுங்க மாமா… அண்ணி எதோ புரியாம பேசுறாங்க… உடனே பேசிடுவாங்க” என்று கூறிவிட்டாள்….

அதிகாலை சசிகுமார் நவமித்ரா திருமணம் கோவிலில் கோலகாலமாக நடைபெற்றது… சடங்குகள் எல்லாம் முடிந்து சசியும் மித்ராவும் வீட்டிற்கு அழைத்து வந்து பால் பழம் எல்லாம் கொடுத்து சிறிது நேரம் ஓய்விற்கு பிறகு வரவேற்பிற்காக மண்டபம் அழைத்து செல்ல பட்டனர்…

வரவேற்பு முடிந்து வீட்டிற்கு வரவே இரவு ஆகியது… வந்ததும் இருவருக்கும் முதல் இரவு ஏற்பாடு செய்யப்பட்டது….  அங்கு அறையில் ஏற்கனவே சசி இருக்க மித்ராவை அலங்காரம் செய்து அறைக்கு சென்று விட்டனர்….

அறையில் பால் சொம்பை மேசையில் வைத்துவிட்டு சசியின் காலில் விழ வந்த மித்ராவை தடுத்து நிறுத்தி கட்டிலில் உட்கார வைத்தான்… மித்ரா அவனிடம் “உங்களுக்கு என் மேல லவ் வர வரைக்கும் நான் டிபிகல்ட் ஹஸ்பண்ட் அன்ட் வைப் மாதிரி கீழ தான் நான் படுக்கணுமா” என்று கேட்டாள்….

“ஹே மித்ரா  அப்படிலாம் இல்ல மேலயே படுக்கலாம்… வா “என்று கூறி அவனும் கட்டிலில் அவளுக்கு பக்கத்தில் படுத்தான்….

“சும்மா தான் சசி கேட்டேன்…” என்று கூறி அவளும் ஓய்வு அறைக்கு சென்று அலங்காரத்தை கலைத்து இரவு ஆடை மட்டும் அணிந்து வந்து படுத்தாள்… எந்த அலங்காரமும் இல்லாமல் இரவு உடை அணிந்து அவன் காலையில் கட்டிய மஞ்ச தாலியுடன் தேவதை போல் நடந்து வந்தவளை பார்த்து மனது மயங்கினாலும் பழைய நிகழ்வில் இருந்து இன்னும் வெளியில் வராமல் இருப்பதால் மனதை அடக்கி கொண்டு “ஹே மித்து அது என்ன ஒவ்வொரு டைம் மரியாதையா கூப்புடுற… ஒவ்வொரு டைம் வா போனு கூப்டுற….” என்று மிதிராவிடம் கேட்டான்….

“அது தானா அப்படி தான் வருது சசி… மரியாதையா தான் கூப்பிடணுமா என்ன”…. என்று கேட்டாள்….

அதற்கு அவனோ “உன் இஷ்டம் மித்து எப்படி வேணா கூப்பிடு குட் நைட்….” என்று கூறி கண்ணை மூடினான்

அவளும் “குட் நைட் சசி… மித்து ட்ரீம்ஸ்” என்று கூறிவிட்டு போர்வையை போர்த்தி கொண்டாள்….

“நீ சொல்லாம இருந்தாலும் இப்பலாம் மித்து ட்ரீம்ஸ் தான் வருது… உனக்கும் சசி ட்ரீம்ஸ்” என்று கூறி அவனும் படுத்துவிட்டான்…. அவன் கூறியதை கேட்டு முகம் சிவக்க அவன் முகம் காணாமல் தூங்கி விட்டாள் நவமித்ரா….

அர்ஜுனன் அறையில் ஆரவ் அவனின் கட்டிலில் தூங்கி இருக்க நிரவி குட்டி கூட்டத்தில் இருந்ததால் அழுதவாறே இருந்தாள்… காய்ச்சல் வந்துவிட்டது…. அர்ஜுனன் சுபத்திரா இருவரும் நிரவி குட்டியை அழைத்து கொண்டு மருத்துவமனை சென்றனர்…. ஆரவை கர்ணன் அறையில் விட்டுவிட்டனர்….

வைரல் பீவர்ரெண்டு நாள் இங்கயே அப்சர்வேசன் பேபி இருக்கட்டும்அதுக்கு அப்பறம் வீட்டுக்கு கூட்டிட்டு போங்கஎன்று கூறிவிட்டார் மருத்துவர்…. இரண்டு நாட்கள் நான்கு நாட்கள் ஆன பின் தான் அர்ஜுனன் சுபா நிரவி குட்டி மூவரும் வீட்டிற்கு வந்தனர்…. இந்த நான்கு நாட்களில் சுபாவிற்கும் காய்ச்சல் வந்து இருந்தது

மறுவீடு செல்லாமல் குழந்தையை பார்க்க புறப்பட்ட புதுமண தம்பதியர்களை மிரட்டி மித்ராவின் வீட்டிற்கு அனுப்பி வைத்தாள் சுபா…. இங்கு இவர்களுக்கு துணையாக தேவியின் அம்மா மருத்துவமனையில் தங்கிவிட்டார்….

மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்த சுபாவை நந்தினியின் தொடர் பேச்சால்(கிரிஜாவின் போதனையால் ) வாணன் திட்டியிருந்தான்அவன் திட்டியதும்  ஏற்கனவே அவன் ஒழுங்காக பேசாத காரணத்தினால் மனவருத்தத்தில் இருந்த சுபா அவனின் இந்த பேச்சில் அழுது இருந்தாள்…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!