Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

இதயத்தின் ஓசை கேட்குதோ 32(3)

நான்கு மாதம் கழிந்து இருந்தது…. அர்ஜுனனுக்கு வந்த அழைப்பை ஏற்று பேசிவிட்டு கோவமாக “அம்மு… அம்மு.. வெளிய வா… ” என்று கத்தினான்…. ஆரவை எல்கேஜியில் சேர்த்து இருந்தனர்… அவனை பள்ளிக்கு அனுப்ப தயார் செய்து கொண்டு இருந்தவள் வேகமாக கீழே ஓடி வந்தாள்… மித்ரா சமையல் அறையில் அவளுக்கும் ஆரவுக்கும் பள்ளிக்கு கொண்டு செல்ல உணவை பேக் செய்து கொண்டு இருந்தாள்… அவளும் அர்ஜுனன் சத்தத்தில் ஓடி வந்து இருந்தாள்….

வெளியே நிரவி குட்டிக்கு விளையாட்டு காட்டி கொண்டு இருந்த சசியும் கர்ணனும் என்னவென்று தெரியாமல் உள்ளே வந்தனர்…. கீழே வந்த சுபா  “என்ன மாமா ஏன் கத்துனீங்க” என்று படபடப்பாக கேட்டாள்…



Advertisement

“என்கிட்ட எதையோ மறைக்குறியா அம்மு” என்று  கொஞ்சம் சத்தமாக கேட்டான்… “இல்லை மாமா நான் எதுவும் மறைக்கல” என்று கொஞ்சம் தடுமாற்றமகவே கூறினாள்….

Advertisement

“உன் பரதநாட்டியம் மாஸ்டர் எனக்கு கால் பண்ணாங்க சுபி ” என்று கொஞ்சம்  கோவமாக கூறினான்…

Advertisement

“அது எல்லாம் வேணாம் மாமா தம்பி பாப்பா ரெண்டு பேரையும் வெச்சிட்டு ரொம்ப நேரம் அது எல்லாம் பண்ண முடியாது… அது இல்லாம டச் விட்டு போச்சு மாமா வேணாம்… நான் மேல போறேன் தம்பிக்கு ஸ்கூல்க்கு டைம் ஆகிடிச்சு” என்று கூறிவிட்டு மேலே செல்ல போனவளை அவனின் கோவ குரல் தடுத்து நிறுத்தியது….

Advertisement

“ஒரு அடி எடுத்து வெச்ச அவ்வளவு தான்…. ஒழுங்கா திரும்பி இங்க பக்கத்துல வா ” என்று கூறினான்… “இல்ல மாமா…” என்று மறுத்து கூற வந்தவளை தடுத்து “உன்னை இங்க வானு கூப்பிட்டேன் ” என்று கோவமாக கூறினான்….

“ஏன் அம்மு உன் மாஸ்டர் கிட்ட  வர மாட்டேன்னு சொன்ன…. உனக்கு எவ்வளவு பெரிய சான்ஸ் இது தம்பி பாப்பா ரெண்டு பேரையும் நாங்க பாத்துக்குறோம்….. நீ அவங்க சொல்ற மாதிரி அரங்கேற்றம் பண்ணு” என்று கூறினான்….

இவர்கள் பேசியதை குழப்பதுடன் பார்த்து கொண்டு இருந்த மூவரில் சசி அர்ஜுனனிடம் “அண்ணா என்ன பேசிக்குறீங்க… ” என்று கேட்டான்…

“இவளையும் இன்னொரு பொண்ணையும் வேர்ல்ட் ரெகார்ட் பண்றதுக்காக செலக்ட் பண்ணி இருக்காங்க.. மேடம் வேணாம்னு சொல்லிட்டாங்க.. அது தான் அவங்க மாஸ்டர் எனக்கு கால் பண்ணி சொன்னாங்க….” என்று கூறினான்…

அதை கேட்டுவிட்டு மற்ற மூவரும் அவளை பேசியே ஒத்துக்கொள்ள வைத்து இருந்தனர்… மற்றவர்களிடமும் விஷயத்தை கூறி அவர்களும் சுபாவிடம் பேசி அவள் ஒத்துக்கொண்டு இருந்தாள்…

ஒரு மாத பயிற்சிக்கு பிறகு இவளும் இன்னொரு பெண்னும் சிதம்பரம் நடராஜர் கோவிலில் அரங்கேற்றம் செய்ய சென்றனர்.. இந்த முறை அர்ஜுனன் முதல் ஆளாக அமர்ந்து அவளின் நாட்டியத்தை ரசிக்க அமர்ந்து இருந்தான்… குடும்பத்தில் மற்றவர்களும் அமர்ந்து பார்க்க தயாராகி இருந்தனர்….

பல முன்னனி நாட்டிய பேரொளிகள்.. பல நாயகிகள் பல அரசியல்வாதிகள்  என பல பேர் அவர்களின் நாட்டியத்தை காண அமர்ந்து இருந்தனர்..

சுபாவும் இன்னொரு பெண்ணும் மேடைக்கு வந்து ஆட தயாராகினர்…. அவர்கள் அட ஆரம்பித்தவுடன் யாரும் வேறு எங்கும் பார்வையை செலுத்தவில்லை.. தொடர்ந்து ஐந்து மணிநேரம் விடமால் பாரதநாட்டியம் ஆடி வேர்ல்ட் புக் ஆப் ரெகார்ட்டில் சுபாவும் இன்னொரு பெண்ணும் இடம்பெற்றனர்…

வந்து இருந்த அனைவரும் இருவரையும் வாழ்த்தி பரிசுகள் தந்துவிட்டு சென்றனர்… குடுபத்தினர் அனைவரும் அவளை வாழ்த்தினர்….  இரவே அனைவரும் வீட்டிற்கு திரும்பினர்.. சுபாவும் வாணனும் நந்தினியிடம் இன்னும் பேசவில்லை… அனைவரும் அவரவர் வீட்டிற்கு சென்றுவிட்டனர்… கர்ணன் ஆரவை தன்னுடன் தூக்கிக்கொண்டு சென்றுவிட்டான்…

மிகவும் சோர்வாக இருந்தாள் சுபா… பாப்பாவை படுக்க வைத்துவிட்டு அர்ஜுனனும் சுபாவும் சிறிய அறைக்குள் சென்றனர்… முதலில் அர்ஜுனன் காலை நீட்டிக்கொண்டு கீழே  அமர  அவனின் காலுக்கு நடுவில் அவள் அமர்ந்து அவனின் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்…

தேங்க்ஸ் மாமா… லவ் யூ..  நீ மட்டும் இல்லனா இது எல்லாம் நடந்தே இருக்காது… ”  என்று கூறி மேல் நோக்கி அவனின் கன்னத்தில் முத்தமிட்டாள்… அவன் குனிந்து அவளின் உச்சியில் முத்தமிட்டு “நோ தேங்க்ஸ் அம்மு .. லவ் யூ” என்று கூறி மீண்டும் அவளை உச்சியில் முத்தமிட்டான்….

அவனை நோக்கி திரும்பி அமர்ந்து  “மாமா இப்போ உன் மனசுல நான் மட்டும் தானு இருக்கேன்… இது என் இதயம் தானு ” என்று கேட்டாள்…

“இன்னும் உன் சந்தேகம் போகலையாடி ” என்று சத்தமாக கேட்டான்

“ப்ச் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு மாமா” என்று  கூறினாள்….

“நீ மட்டும் தான் இருக்க ஓகேவா…  இந்த இதயம் என் அம்முவோட இதயம் மட்டும் தான்… வேற யாரோட இதயமும் இல்லை… ” என்று சத்தமாக கூறினான்….

“அப்டினா வா என் நெஞ்சுல சாஞ்சிக்கோ” என்று கையை நீட்டினாள்… அவளை மட்டுமே பார்த்து கொண்டு இருந்தவன் “ஐ லவ் யூ ஆல்வேஸ் அம்மு” என்று கூறி அவளில் நெஞ்சில் சாய்ந்து கொண்டே கூறினான்….

தற்போது அவனுக்கு சுபாவின் இதயத்தின் ஓசை மட்டுமே கேட்டது… இனிமேல் அவனுக்கு அவளின் இதயத்தின் ஓசை எப்போதும் கேட்டு கொண்டே இருக்கும்…….

.

.

.

.

.

.

வெயிட் வெயிட் இன்னும் கதை முடியல.. படிச்சிட்டு யாரும் திட்ட கூடாது சொல்லிட்டேன்…..

சில வருடங்களுக்கு பின் காட்ஸ் ஓன் கண்ட்ரி என்று அழைக்கபடும் கேரளாவில் ஒரு பெண் வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்புகிறாள்.. வீட்டினுள் நுழைந்தவுடன் “மாமா நான் வேலைக்கு போயிட்டு வந்துட்டேன்… இன்னிக்கு ஒரு புது பொண்ணு ஜாயின் பண்ணா… அந்த பொண்ணோட அம்மா வீட்டு வேலை செய்றவங்கலாம்… அந்த வீட்டுக்கு ஓனர் தான் அந்த பொண்ணை கிளாஸ்ல சேர்த்து விட்டு இருக்காங்க… அவங்க ரொம்ப கிரேட்ல…. சரி மாமா எனக்கு ரொம்ப பசிக்குது நான் போய் ப்ரெஷ் ஆகிட்டு சமைக்குறேன்” என்று கூறிவிட்டு அவள் அறைக்குள் சென்றாள்…. அவள் சொன்னதை புன்னகை முகம் மாறாமல் கேட்டு கொண்டு இருந்தான் புகைப்பட சட்டத்தில் இருந்த அர்ஜுனன்…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!