திருமண வேலைகள் கலைக்கட்ட தொடங்கி இருந்தது… பேச்சு வார்த்தையாக பேசி முடித்து இருந்தாலும் முறைப்படி நல்ல நாள் பார்த்து பெண் பார்க்க வருவதாக கூறி வாணன் வர்ணன் குடும்பம் விடைபெற்றது…
Advertisement
கார்த்திகா நிரவியை சந்தேகமாக பார்த்து கொண்டு விடைபெற்றள்… இரண்டு நாட்களில் நிரவிக்கு ஜேஇஇ(jee) தேர்வு முடிவு வந்து இருக்க நல்ல மதிப்பெண் பெற்று தேர்வாகி இருந்தாள்… அவளுக்கு அவள் நினைத்தது போல் டெல்லி ஐஐடியில் (iit) தேர்வாகி இருந்தாள்… வீட்டில் அனைவருக்கும் சந்தோஷம்… சிவா ரித்தி திருமணம் முடிந்த கையோடு டெல்லி செல்வதாய் ஏற்பாடு… முதலில் ஹாஸ்டளில் தங்கி படிப்பதாக தான் இருந்தது… ஆனால் ஆஷா தான் அண்ணா நான் இங்க இருக்க அப்ப என் மருமக யாரும் இல்லாத மாதிரி தனியா இருக்கனுமா என்று கேட்டு அர்ஜுனனை சம்மதிக்க வைத்து இருந்தார்…
ஆனால் சுபா ஒத்துக்கொள்ளவில்லை… எப்படி வயசு பையன் இருக்கும் வீட்டில் பெண்ணை தங்க வைப்பது என்று கூறி மறுத்தார்… ஆனால் அர்ஜுன் சமாதானம் செய்து சம்மதிக்க வைத்தார்…
Advertisement
ஒரு நல்ல நாளில் அனைவரும் பெண் பார்க்க வந்தனர்… வீடு தற்போதே கல்யாண கலை கட்டி இருந்தது… இருபது நாட்களில் வரும் முகுர்த்த நாளில் திருமணத்தை வைத்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்து இருந்தனர்…
Advertisement
அதன்பின் அனைவருக்கும் நாட்கள் ரெக்கை கட்டி கொண்டு பறந்தது… உறவினர்களை அழைக்க மண்டபம் புக் செய்ய அனைவரும் அலைந்தனர்.. குறைவான நாட்களே இருப்பதால் மண்டபம் கிடைக்கவில்லை… எனவே அவர்கள் நிலத்திலேயே மண்டபம் போன்ற அமைப்பை தயார் செய்ய ஆரம்பித்து இருந்தனர்…
அர்ஜுனன் சுபா அனைவரையும் அழைக்க சென்றுவிட கர்ணன் சசி இருவரும் மற்ற வேலைகளை பார்க்க ஆரம்பித்து இருந்தனர்… பிரியாவும் மித்ராவும் ரித்திகவிற்கு உடைகள் நகைகள் என வாங்க சென்றனர்…
Advertisement
அங்கு வாணன் நந்தினி இருவரும் அழைப்பு விடுக்க வர்ணன் ஜனனி இருவரும் மற்ற வேலைகளை பார்த்து கொண்டனர்… முகுந்தன் குடும்பம் இருபக்கமும் தேவையான வேலைகளை பார்த்து கொண்டது… நிரவிக்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும் அதை ஏற்றுக்கொண்டு கடந்துவிட்டாள்.. டெல்லி சென்றுவிட்டால் யாரையும் பார்க்க கூடாது பேச கூடாது என முடிவு எடுத்து இருந்தாள்…
திருமணத்திற்கு இன்னும் ஐந்து தினங்களேஇருக்க ஆரவ் அன்று தான் நீண்ட நாள் கழித்து ஊருக்கு வந்து இருந்தான்… நாட்கள் யாருக்கும் காத்திராமல் வேகமாக செல்ல அன்று பெண்ணழைப்பு… ரித்திகாவிற்கு நலங்கு வைத்து மெய்யனூருக்கு அழைத்து செல்ல தயாராக தான் கிடைத்தது முதல் தான் பெட்ரா பிள்ளையாய் வளர்த்த அர்ஜுனன் சுபா இருவரையும் அணைத்து கொண்டு அழுதுவிட்டாள்…
இருவரும் அவளுக்கு நெற்றி முத்தமிட்டு அனுப்பிவிட்டன.. அனைவரிடமும் விடைபெற்று மெய்யனூர் நோக்கி கிளம்பிவிட்டாள்… அடுத்த நாள் அவர்கள் குலதெய்வ கோவிலில் திருமணத்தை நடக்க ஏற்பாடு செய்து இருந்தனர்…
மணமக்கள் இருவரும் கோவிலுக்கு அழைத்து வந்து விட நல்ல நேரத்தில் மருதாயி பாட்டி கடவுளை வேண்டிக்கொண்டு தாலியை எடுத்து கொடுக்க சிவா ரித்திகாவின் கழுத்தில் இரண்டு முடிச்சு இட கார்த்திகா மூன்றாம் முடிச்சு போட்டு ரித்திகாவை தன் அண்ணியாகி இருந்தாள்… சிவா மிகவும் சந்தோசமாக இருந்தான்.. அவன் கண்கள் ஒரு நிமிடம் கலங்கி இருந்தது… அதை ரித்திகா கவனித்துவிட்டாள்… தனக்காக கலங்குகிறான் என்று அவள் உடலே ஒரு நிமிடம் சிலிர்த்துவிட்டது…
அவளை பொறுத்த வரை இது பெரியவர்கள் ஏற்பாடு செய்த திருமணம் ஆனால் அவனுக்கு இல்லையே… காத்திருப்பின் நாட்கள் அதிகம் இல்லை என்றாலும் அவளின் படிப்பு முடியும் வரை காத்திருந்து வீட்டில் சொல்லி அதை அவன் தந்தை மறுத்து பிறகு ஒத்துக்கொண்டது என அவனுக்கு பெரிய போராட்டம் அல்லவா…
அவளுக்கு நெற்றி வட்டில் குங்குமம் இடும் போது அவளுக்கு நெற்றி முத்தமிட அவனின் நண்பர்கள் இவனின் தம்பி தங்கைகள் ஓ’வென சத்தமிட்டு தங்கள் சந்தோசத்தை வெளிப்படுத்தினர்… ரித்திகாவிற்கு நொடியில் முகம் எல்லாம் சிவந்துவிட்டது… அவன் முத்தமிடுவான் என அவள் எதிர்பார்க்கவில்லை…
பெரியவர்களுக்கு சந்தோஷம் தான்..
இந்த இருபது நாட்களில் நிரவி கொஞ்சம் மீண்டு இருந்தாள்.. அவனுக்கான காதல் தான் இல்லை என புரிந்து கொண்டு இருந்தாள்.. கார்த்திகா புரிய வைத்து இருந்தாள்… ஆம் கார்த்திகா அவளிடம் பேசினாள்… அன்று வீட்டில் சிவா பேசியதை கூற கார்த்திகா அவளிடம் நிரவி அண்ணா பேசுனதுல அவர் உன்னை லவ் பண்ணல… அந்த வயசுல அது லவ் அப்படினு நினச்சு இருக்காரு… அவருக்கு ரித்திகா அண்ணியை பார்த்ததும் தான் உண்மையான லவ்னா என்னனு புரிஞ்சு இருக்கு.. அவர் கூட உனக்கு கல்யாணமாகி இருந்தா கண்டிப்பா உங்களால நல்ல ஹஸ்பன்ட் வைப்பா வாழ முடிஞ்சு இருக்காரு.. அவர் உன்னை குழந்தையை மட்டுமே பாப்பாரு.. அவருக்கு மனசுல பதிஞ்சு இருக்கு.. நீ அவரோட குழந்தை அப்படினு.. சோ நீ உன் மனசை மாத்த ட்ரை பண்ணு.. டெல்லி போக போற.. இனிமே த்ரீ மந் ஒன்ஸ் இல்லனா லீவ் டைம்ல தான் வர போற.. சோ ஹாப்பியா இங்க இருக்க டைம் என்ஜாய் பானு என்று அவளை சமாதானம் படுத்தினாள்…
அருணேஷ் இதை கேட்டுவிட்டான்.. எனவே அவனுக்கு ரித்திகாவை பிடிக்காமல் போய்விட்டது… நிரவி வர வேண்டிய இடத்திற்கு இவள் ஏமாற்றி வந்துவிட்டதாக நினைத்து கொண்டான்.. எனவே அவளிடம் இப்போது வரை சிரித்து கூட பேசவில்லை..
சிறுவயதில் இருந்து பலபேர் இவ்வாறு பேசாமல் சென்றதால் அவளுக்கு பெரியதாக தெரியவில்லை… ஆனால் அவள் செய்த ஒரு செயல் பெரியவர்களிடம் நற்பெயரை எடுத்து இருந்தாள்.. என்ன தான் ஜனனியும் வர்ணனும் நன்றாக பேசி பழகினாலும் அவர்கள் அவர்கள் வீட்டிற்கு வரவில்லை.. இன்னும் ஜனனியின் தாய் வீட்டில் தான் உள்ளனர்.. ரித்திகா ஜனனி நந்jதினியிடம் எனக்கு எல்லாரும் ஒரே வீட்டுல இருக்கனும்னு ஆசையா இருக்கு அத்தை.. முன்னாடி நடந்தது பேசுனப்ப நீங்க எல்லாரும் ஒரே வீட்டுல இருந்ததா பேசுனாங்க.. இப்போ ஏன் தனி தனியா இருக்கீங்க… என்று கேட்டாள்..
இருவருக்கும் என்ன கூறுவது என்று தெரியவில்லை… நந்தினிக்கு ஆசை தான் அழைக்க ஆனால் அவர் செய்த காரியத்தால் அவரால் வீட்டிற்கு வாருங்கள் என்று கூற முடியவில்லை… அதே போல் தான் ஜனனிக்கும் வீட்டை விட்டு வெளியில் வந்து பல வருடங்கள் சென்றுவிட்டது.. மீண்டும் அந்த வீட்டிற்கு செல்ல தயக்கமாக இருந்தது.. இருவரும் ரித்திகா கேட்டதும் சரி என்று கூறிவிட்டனர்… இதனால் இரு மாமியாருக்கும் கல்யாணத்திற்கு முன்பாகவே செல்ல மருமகளாகி விட்டாள் ரித்திகா…
கோவிலில் இருந்து வீட்டிற்கு மணமக்களை அழைத்து கொண்டு அனைவரும் வீட்டிற்கு கிளம்பினர்… வீட்டில் மணமக்களை ஆரத்தி எடுத்து வரவேற்று உள்ளே அழைத்து சென்றனர்…
ரித்திகாவை சாமி அறையில் விளக்கேற்ற கூறி அனைவரும் வணங்கி விட்டு சிவா ரித்திகா இருவருக்கும் பால் பழம் கொடுத்தனர்…. விருந்தினர்களுக்கு மண்டபம் ஏற்பாடு செய்த இடத்தில் காலை உணவு ஏற்பாடு செய்து இருந்தனர்.. கர்ணனும் ஆகாஷும் அதை பொறுப்பு எடுத்து இருக்க அவர்கள் அதை பார்த்து கொண்டனர்…
மணமக்கள் பெரியவர்கள் தவிர்த்து அனைவரும் அங்கு உணவு உண்ண சென்றனர்… அவர்களுக்கு உணவு வீட்டிற்கே வந்தது… அனைவரும்உணவுமுடித்துவந்ததும்சிறிதுநேரம்ஓய்வுஎடுத்தனர்.. அதிகாலைமுகுர்த்தம்என்பதால்அதிகநேரம்உறங்கவில்லை.. ஒருஇரண்டுமணிநேரம்அனைவரும்உறங்கியதே அதிகம்..