Skip to content
Post Views: 5,555
தீபனும் சுபாஷும் ஒருவரை ஒருவர் முறைத்து நிற்க தேசிகனுக்கு பெரும் தலைவலியாக இருந்தது.
“என்ன பிரச்சினை தீபு?”மகனிடம் சோர்வாக கேட்க
Advertisement
“என்னைக் கேளுங்க மாமா நான் சொல்றேன்”முந்திரி கொட்டை போல வந்தான் சுபாஷ்.
வீட்டுப் பெண்களில் மனைவியும் மருமகளும் பெற்றவளும் இருக்க மூவரில் இருவர் முகமும் சுபாஷிற்கு ஆதரவு போன்றதொரு தோற்றத்தில் நிற்க பொன்னியோ பேரனா மருமகளா என்று மனதில் பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருந்தார்.
Advertisement
Advertisement
“இதோப் பாருங்க ப்பா. நம்ம கடைக்கு வர்ற கஸ்டமர் கிட்ட எப்படி பேசணும் னு எனக்குத் தெரியாதா. இவர் அவங்க முன்னாடி வச்சு எனக்கு கிளாஸ் எடுக்கறார். அது கூட பரவாயில்லை நான் வியாபாரம் செய்ற இடத்தில் இவர் குறுக்க பேசினா அங்கே எனக்கு என்ன மரியாதை”என்று காய்ந்தான் அவன்.
Advertisement
“தெரியாததை சொல்லித் தந்து தானே மாமா ஆகணும். கஸ்டமர் கிட்ட வெலையை உடனே சொல்லி பேசினா எப்படி வியாபாரம் நடக்கும்”என்று தன் பேச்சிற்கு நியாயம் கற்பித்த சுபாஷிற்கு ஆதரவாக தரங்கினி “அதானே”என்றதை தேசிகனே ரசிக்கவில்லை.
“என்ன அண்ணி, அதானேன்றீங்க. நான் ஒண்ணும் அங்கே மாடு விற்க போகலை மரச்சாமான் தான் விற்க போறேன் எல்லாத்திலும் பிக்ஸட் ரேட் தான். கல்யாண ஆர்டர் இல்லை விழாச்சலுகை மட்டும் தான் நம்ம கடையில் இதுநாள் வரைக்கும் அப்படி தான் வியாபாரம் பண்றேன்.இதுவரைக்கும் எங்க அப்பாவே என்னை இப்படி பேசினது இல்லை”என்றான் கடுப்பாக.
“ஃபிக்ஸட் ரேட் வச்சு விக்கிறதால தான் வியாபாரமே ஓட மாட்டேங்குது. ஆடத் தெரியாதவன் தெரு கோணம் சொன்ன மாதிரி இருக்கு தீபுவோட கதை”என்று நக்கலடிக்க “சுபாஷ் தேவை இல்லாத பேச்சு வேண்டாம்”என்ற தேசிகன்,”எது சொல்றதா இருந்தாலும் நீ தீபு தனியா இருக்கும் போது சொல்லணும் சுபாஷ். கூட்டத்தில் சொன்னா அது நம்ம கிட்ட வேலை பார்க்கும் ஆளுங்களுக்கு மத்தியில் அவனுக்கு மரியாதை குறைவா போயிடும்”என்றார் கண்டிப்புடன்.
“இனிமே பார்த்துக்கிறேன் மாமா”நயமாய் உரைத்து விட்டு “சாரி தீபு”என்ற தீனமான மன்னிப்போடு அங்கிருந்து சென்ற சுபாஷ் தங்கையின் ஆதூர பார்வையையும் அத்தையின் மெச்சுதல் பார்வையையும் பரிசாய் பெற்றுக் கொண்டான்.
வீட்டு பெண்கள் விஷயம் அவ்வளவு தான் முடிந்தது என்பது போல நகர்ந்திருக்க தீபனோ குறையாத எரிச்சலோடு தந்தை முன் நின்றிருந்தவன் “இதெல்லாம் எனக்கு சரியாப் படலைப்பா”என்று சொல்லி விட்டு “உங்க கிட்ட என் மாமனார் வேற பேசறேன்னு சொன்னார்”என அங்கிருந்து வெளியேறி இருந்தான் .
மறுநாள் அவனின் மாமனாரிடம் பேசியதில் தேசிகன் தலை சுற்றிக் கீழே விழாத குறையாக அலைந்தார்.
சுபாஷ் தன் வாயை குறைப்பதாகவே இல்லை. தன்னை அவ்விடத்தின் முதலாளி போல் காட்டுவதற்கு தன்னால் இயன்றவரை முயற்சி செய்தான். தீபனின் கோபமும் ஆதங்கமும் உயர்ந்து கொண்டே சென்றது.
*********
“அமுதா இந்த தடவை நல்ல ரோஸ் வுட் பலா மரம் தேக்கு கிடைச்சாலும் எனக்கு வேணும்”என்றான் ஆழியன்.
“அதுக்கென்ன இந்த ட்ரிப் பண்ருட்டி தானே போறேன் பலா நல்ல தரமாவே வாங்கிட்டு வர்றேன் ஏதாவது ஆர்டராடா”என்று அமுதனும் கேட்க
“ஆமாம் ரோஸ் வுட் ல நகைப்பெட்டி செய்ய சொல்லி இருக்காங்க. இன்னொண்ணு வீணை செய்ய கேட்டு வந்தது.”
“சூப்பர் டா. வீணை இதுவரை நீ செஞ்சது இல்லையே”என்று கேள்வியாக நிறுத்த மையமாய் சிரித்தான் ஆழியன்.
“ஹ்ம்ம்”என்ற அமுதன் வேறு பேசத் துவங்கிட
“ஏன் மச்சான் இதுல அப்படி என்ன வருமானம் வரும்”என்று சுபாஷ் கேட்க
“எல்லாம் வருமானத்தை பாத்து செய்ற ஆள் நான் இல்லேயே”என்ற ஆழியன் அதற்கு மேல் பேச விரும்பாது எழுந்து கொண்டான்.
“உன் பொண்டாட்டிய எப்போ கூட்டிட்டு வர செல்வம்”அடுத்த கேள்வி வளர்மதியிடம் இருந்து வர “இதுக்கு நான் நேத்தே பதில் சொல்லிட்டேன் திரும்பத் திரும்ப கேட்டாலும் அதே பதில் தான் மா. ஆமா தீபன் மகனை எப்போ கூட்டிட்டு வர்றீங்க “என்று கேட்டவன் “நாளைக்கு பாப்புவை பார்க்க போறேன். தடுப்பூசி அவளுக்கும் போட்டு இருக்காங்க. நீங்க வர்றீங்களா”என்றான்.
“நாளைக்கா… ஹ்ம்ம் அப்பா கிட்ட கேட்கிறேன்”என்றார் வளர்மதி.
சரியென்ற தலையசைப்புடன் உள்ளே சென்று விட்டான் ஆழியன்.
*********
மூன்றாம் மாதம் துவங்கியதுமே நீரதி குழந்தையுடன் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டாள்.
ஸ்வர்ணிகாவிற்கு பள்ளி இருக்கிறது அவளை கவனிக்க முடியவில்லை தரங்கினியால் மூன்று பிள்ளைகளை சமாளிக்க முடியாது உன் வீட்டிற்கும் பள்ளிக்கும் வெகுதொலைவு உன் மகள் எங்களிடம் தலை சீவ மாட்டேன் என்கிறாள் சாப்பிட மறுக்கிறாள் செல்வம் தான் படாதபாடு படுகிறான் என்றெல்லாம் புகார் பட்டியல் வாசிக்கப்பட்டு நீரதி ஒரு வழியாக புகுந்த வீட்டிற்கு வந்தாயிற்று.
கொள்ளைச் சிரிப்பும் சிணுங்கலுமாய் இருந்த ஆழியனின் மகள் வியர்த்ததும் நைநைத்து அழுதாள்.
நீரதியின் வீட்டின் அருகில் மரம் இருப்பதால் மெல்லிய காற்று இதம் சேர்க்கும் பிள்ளைக்கு.
“பட்டுக்கு வேர்க்குதாடா”என்று மகளைக் கொஞ்சிய ஆழியன் ஸ்வர்ணிகா பிறந்த போது எப்படி இருந்தானோ அதே மனநிலையும் சந்தோஷமுமாக இப்போதும் இருந்தான்.
“ரெண்டும் பொண்ணா”என்று தரங்கினியின் அம்மா இளக்காரமாய் கேட்டதும் “என்னவோ அவன் குடுத்து வச்சது அதான் போல”என்ற வளர்மதியின் பதிலையும் மனதில் இருத்தி வைத்தாலும் பெரிதாய் வெளிப்படுத்தாது மனதினுள் புதைத்தவன் மகள்களின் நினைவில் ஐக்கியமானான்.
மர மில்லில் இருந்து வந்த குட்டி யானையில் இருந்து இறங்கியது தேக்கு மரத்திலான அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய குழந்தைக்கான தொட்டில் ஒன்று. மகளுக்கு என்று மரத்தை இழைத்து நெய்திருந்தான் ஆழியன் அத்தனை நேர்த்தியாக.
அடேங்கப்பா என்று ஆச்சரியத்தில் வாய் பிளந்தனர் தரங்கினி குடும்பத்தினர்.
“இந்த மாதிரி தொட்டி எல்லாம் என் பிள்ளைக்கு கூட செய்யலை வீட்டுக்கு முதல் வாரிசு அவன்”என்று நொடித்த தரங்கினியின் முகம் காணாமல் “அதை உங்க வீட்டுக்காரர் கிட்ட கேளுங்க அண்ணி. என் மகள்களுக்கு செய்ய தோணுச்சு செஞ்சேன்”என்று மகளை நாடி பிடித்து கொஞ்ச அவளும் கிளுக்கி சிரித்தாள்.
“என்ன இருந்தாலும் நீ வருணேஷ்க்கு இப்படி செஞ்சு தந்திருக்கணும் செல்வம்”என்று வளர்மதி கூற சட்டென தரங்கினி “அதெல்லாம் தானா வரணும் அத்தை. அதென்னவோ நான் தான் எல்லா பிள்ளைகளும் ஒண்ணுனு நினைக்கிறேன் இங்கே இருக்க யாரும் அப்படி நினைச்சது போல தெரியல.”என்று தொட்டிலை பொறாமையோடு பார்த்தபடி பேச
“இப்போ என்ன அவனுக்கும் செஞ்சா போச்சு”என்றவனிடம்,” ஒண்ணும் தேவை இல்லை” என்று முறுக்க,” ஓகே உங்க இஷ்டம்” என்றவன் மகளோடு அறைக்குள் சென்று விட்டான்.
‘இவனுக்கு இப்படி எல்லாம் பேசத் தெரியுமா’என்று நீரதியே அவனை வியப்பாக பார்த்தபடி அவன் பின்னால் சென்றாள்.
“ஏங்க”என்று அழைத்தவளிடம் “டேக் ரெஸ்ட் ரதி. பாப்பா எழுந்தா கூப்பிடுறேன்”என்று மகளைத் தொட்டிலில் போட்டு அருகில் பெரிய மகளோடு அமர்ந்து கொண்டான்.
“அப்பா பாப்பா எப்போ பேசும் விளையாடும் நான் தூக்கவா”என்று ஸ்வர்ணிகா அடுக்கடுக்காக கேள்வி கேட்க
“இப்போ வேண்டாம் டா பக்கத்தில இருந்து பாரு நீ”என்றவன் படுக்கையில் அமராமல் நின்றிருந்த மனைவியை பார்த்தான்.
இரவு உறக்கம் இல்லாமல் போனாலும் பிள்ளை பெற்ற பூரிப்பும் தாய்மையின் பூரணத்துவத்தோடு நின்றவளைக் கண்டு மனம் மயங்கினாலும் அதை அவள் அறிய வெளிக்காட்டவில்லை ஆழியன்.
நேரம் கடக்க இரு மகள்களும் உறங்கி விட “நீயும் தூங்கு ரதி”என்றவன் வெளியே செல்ல தேசிகன் வளர்மதி இருவரும் பேசிக் கொண்டது கேட்டது.
அவர்களின் பேச்சில் முகத் தாடை இறுக வழக்கம் போல தன் உணர்வுகளை கட்டுக்குள் கொண்டு வந்தவன் விறுவிறுப்பான மீண்டும் அறைக்குள் புகுந்தான்.
“நீ தூங்கி ரெஸ்ட் எடு நான் மில் வரைக்கும் போயிட்டு வர்றேன்”என்று வண்டி சாவியை எடுத்துக் கொண்டு கிளம்பியவன் அதற்கு மேல் எங்கும் நிற்கவில்லை.
நடு இரவில் வீடு திரும்பியவன் உறங்கும் மனைவி மகளை பார்வையால் வருடி கீழே ஒரு போர்வையை விரித்து படுத்து விட்டான்.
இரண்டு நாட்கள் வரை நீரதிக்கு சலுகை தான். சமைக்க மேல் வேலை செய்ய என இரண்டு பேர் இருக்க பிள்ளைகளின் வேலையை மட்டும் அவள் கவனித்துக் கொள்ள எல்லாம் சரியாக சென்றது .
அன்றிரவு அனைவரும் உண்டு முடித்திருக்க வளர்மதி மெதுவாக “நாளைக்கு சமையக்காரி லீவு. அதனால காலையில் பழைய மாதிரி எழுந்து சமைச்சுடு நீரா. பிள்ளையை நான் பாத்துக்கிறேன்”என்றார்.
“தரு அக்கா சமைக்கலாம் ல அத்தை . பாப்பா விடிய விடிய தூங்க மாட்டா காலையில் தான் நானும் அவளும் தூங்க முடியும்”என்ற நீரதியை அதிர்வாய் பார்த்தாலும் சட்டென சுதாரித்து “நீயாவது கைப்பிள்ளை காலையில தூங்கிடும். இந்த வருக்குட்டி விடியகாலம்பற எல்லாம் முழிச்சுக்கிறான். அவளால சமாளிக்க முடியாது”என்று சொல்ல “என்னால எழ முடிஞ்சா வந்து சமைக்கிறேன் அத்தை இல்லாட்டி கஷ்டம்”என்று அவரின் பதிலைக் கூட கேட்கவில்லை போய் விட்டாள். எல்லாம் ஜனனியின் கைங்கர்யம்.
அந்த வீட்டில் நீ மட்டும் தான் இருக்கியா … ஏன் மத்தவளுக்கு எல்லாம் கைகாலு நொண்டியா இல்லை கிச்சனுக்கு தான் உன்னை கட்டி வச்சோமா…நீ மறுத்து பேசாத வரைக்கும் அந்த வீட்டில் எல்லா வேலையும் உன் தலையில் தான் விழும். பாப்பாவை வச்சுட்டு காலையிலும் பச்சைத் தண்ணியில் கை வைக்காத நீரு. சளி பிடிச்சா விடாது. இப்படியே செஞ்சா உன் புருஷனை கூப்பிட்டு வார்ன் பண்ணுவேன் நான் என்று மிரட்டியே அனுப்பி இருந்தாள் ஜனனி. கணவனிடம் இதைப் பற்றி பேசினால் அவன் அதற்கும் மேலாக நிற்பானே… நம்ம கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டதே பெருசு ரதி னு இழுத்தா இருக்கிற டிப்ரஷனுக்கு நானே கத்தினாலும் கத்திடுவேன். அதுக்கு மாமியார் முணுமுணுப்பே தேவலாம் என்று எண்ணி தான் தைரியமாக பேசி இருந்தாள் நீரதி. அதன் பின் விளைவுகள் எப்படி இருக்குமோ தெரியாது ஆனால் ஜனனி தந்த தைரியம் அவளை பேச வைத்திருந்தது.
காலையில் அவள் எண்ணியது போலவே நீரதிக்கு உறக்கம் அண்டியிருக்க அவள் விழித்தெழும்போது மணி ஒன்பது ஆகியிருந்தது.
வெளியே கசகசவென்று பேசும் சத்தமும் அவ்வபோது வளர்மதியின் குரலும் ஓங்கி ஒலித்ததில் ‘போச்சு நம்ம பஞ்சாயத்து தான் போல. அய்யோ கடவுளே இன்னைக்கு வழக்கமான டயலாக் வருமே அவர் கிட்ட இருந்து’என்று எண்ணியபடி அவள் வெளியே வர “நீயா பேசலைடா எல்லாம் இந்த பசப்பி உன்னை மயக்கி பேச வச்சிருக்கா”என்று ஆவேசமாக நீரதியை கைகாட்டி வளர்மதி ஆழியனை நோக்கி கத்தினார்.
இம்மையும் புரியாமல் மறுமையும் புரியாமல் திகைத்து நின்றவளை நோக்கி ஆங்காரி போல வந்த வளர்மதியைக் கண்டு பீதியாக நின்றாள் நீரதி.
…… தொடரும்
error: Content is protected !!