Skip to content
Post Views: 1,720
அத்தியாயம் 24
நான்கு மாதங்கள் முடிந்து ஐந்தாவது மாதம் தொடங்கியது முத்துவிற்கு.
Advertisement
உடலளவிலும் மனதளவிலும் ஆரோக்கியமான பெண் முத்தாயி. அதனால் கர்ப்ப காலத்தை சுகமாகவே அனுபவிக்கிறாள்.
இருவருமே தங்கள் வேலையில் பிஸியாக இருந்தாலும், இரவு ஏழு மணிக்கு மேல் தங்களுக்கான நேரம் என்று ஒதுக்கி கொண்டார்கள்.
Advertisement
Advertisement
“ஏன் தயா, நமக்கு பொண்ணு பிறக்குமா பையன் பிறக்குமா? உனக்கு என்ன வேணும்?” என்றாள் முத்து ஊஞ்சலில் அமர்ந்து ஆடி கொண்டு.
“எனக்கு எதுவா இருந்தாலும் ஓகே தான் முத்து. உனக்கு?”
Advertisement
“எனக்கும் எதுனாலும் ஓகே தான்..”
“என்னாச்சு உன்னோட கேஸ் இன்னிக்கு? ஏதோ புருஷன் பொண்டாட்டி தகராறுன்னு தாத்தா சொல்லிட்டு இருந்தாங்களே”
“ஆமா தயா, இரண்டு பேரும் சேர்ந்து லோன் போட்டு வீடு வாங்கிருக்காங்க.. புருஷன் காசை வீட்டு செலவுக்கு வச்சிக்கிட்டு, பொண்டாட்டியோட சம்பளத்துல லோன் கட்டி இருக்காங்க.
இப்ப ரெண்டு பேரும் டிவோர்ஸ் அப்பளை பண்ணி இருக்காங்க. வீடு ரெண்டு பேர் பேர்லயும் சேர்த்து ரெஜிஸ்டர் பண்ணிருக்காங்க. இப்ப அந்த பையன் அவனுக்கு தான் வேணும்ன்னு தனியா கேஸ் போட்டிருக்கான்”
“நீ யார் பக்கம்?”
“நான் எப்பவுமே நியாயத்தின் பக்கம் தானே தக்காளி”
“அதானே, அத்தை சொல்ற மாதிரி என்னிக்கு நேரா பதில் சொல்லி இருக்க அரிசி மூட்ட?”
“நீங்க சொல்லுங்க பார்ப்போம், யாருக்கு வீடு சேரணும்?”
“இரண்டு பேருக்கும் சமமா சேரலாம்.. நீயே சொல்லு என்னாச்சு?”
“நான் வீட்டை பத்தி பேசாம, அவங்க டிவோர்ஸ் காரணம் என்னன்னு கேட்டேன்.
உடனே நம்ம எதிர்கட்சி அலமேலு அது தனி கேஸ், இப்ப எதுக்கு அதை இழுக்குறீங்கன்னு ஆரம்பிச்சாங்க. எலி தானா பொறியில மாட்டிக்கிச்சு..”
“இதுல என்ன முத்து இருக்கு? இதுல க்ளூ ஒன்னும் இருக்கிற மாறி எனக்கு தெரியலையே?”
“அங்க தான் நிக்குறா இந்த முத்து”, என்று காலரை தூக்கிவிட்டுக் கொண்டு மீண்டும் கதையை தொடாந்தாள்.
“அப்போ டிவோர்ஸ் அப்ளை பண்ணது யாரு?என்ன காரணம்ன்னு கேள்வி கேட்க ஆர்மபிச்சேன்..”
“அந்த பையனா?”
“இல்ல.. அந்த பொண்ணு தான்.. காரணம் என்னன்னு தெரியுமா அந்த பையனுக்கு கோவம் வருதாம். பொண்ணு வீட்ல அக்கறையா சொல்றதை புரிஞ்சுக்க மாட்டேங்கிறானாம்.”
“இதுக்கு எல்லாம் டிவோர்ஸ் கேட்பாங்களா முத்து?”
“அதுவுமில்லாமல் இருபது லட்சம் நஷ்ட ஈடு கேட்டு கேஸ் போட்டிருக்காங்க..”
“அந்த பையன், என்கிட்டே இந்த வீட்டை தவிர வேற ஸேவிங்ஸ் இல்ல, அதையும் அந்த பொண்ணுக்கு கொடுத்திட்டா நான் எப்படி காசு கொடுப்பேன்னு” புலம்பிட்டு வீட்டு மேலே தனியா ஒரு கேஸ் போட்டிருக்கான்.
“அட பாவமே..”
“இப்பலாம் நிறைய இந்த மாதிரி கேஸ் வருது தயா.. பொண்ணுங்களுக்கு சாதகமா சட்டம் இருக்குன்னு சிலர் அதை தப்பா உபயோகிக்கிறாங்க.. ஒரு பொண்ணு வரததட்சனை கொடுமைன்னு ஒரு அப்பாவி குடும்பத்தையே மாட்டிவிட பார்த்துச்சு. நான் தான் அந்த கேஸையும் நடத்தினேன்”
“ஹ்ம்ம்.. அப்புறம் இந்த கேஸை முதல்ல சொல்லு முத்து?”
“அப்புறம் நான் துப்பறிந்து கண்டுபிடிச்சதுல, இது எல்லாத்துக்கும் மாஸ்டர் பிளான் அந்த பொண்ணோட அப்பான்னு கண்டுபிடிச்சிட்டேன்.. அந்த ஆளுக்கு மூனு பொண்ணுங்க.. இது தான் கடைசி பொண்ணு. மூனு பொண்ணுங்களும் அவ்வளவு அழகா இருக்காங்க.. அவருக்கு இது தான் வேலையே.
அழகா இருக்க பொண்ணுங்கன்னு, செலவு இல்லாமல் ரொம்ப நல்ல குணமுள்ள நடுத்தர வர்க்கத்துல மாப்பிள்ளையை தேடி பிடிச்சு கல்யாணம் பண்ணி வைக்கிறது. கொஞ்சம் வருஷம் அவனையே நம்ப வச்சு குடும்பத்தை நடக்க விடறது. அப்புறம் டிவோர்ஸ் அப்ளை பண்ணி, பெரிய அமௌண்டா ஆட்டைய போட வேண்டியது. வந்த காசை அவர் வச்சுக்கிட்டு, பொண்ணுங்களுக்கு மறுபடியும் நல்ல இளிச்சவாயனா பார்த்து அதுவும் வெளிநாட்டு மாப்பிளையா, கல்யாணம் பண்ணி அனுப்பி வைக்கிறது. இப்படித்தான் பெரிய பொண்ணு ரெண்டு பேருக்கும் பண்ணி இருக்கான்.”
“இது என்ன முத்து, இப்படி எல்லாமா நாட்டுல ஏமாத்துறாங்க? நூதன திருட்டு, மாதிரி இது நூதன ஏமாத்தா இல்ல இருக்கு?”
“நான் ஆதரத்தோடு நிரூபிக்கவும், இந்த சின்ன பொண்ணு ஒரே அழுகை. அக்காங்க மாதிரி இல்லாம இந்த பொண்ணு புருஷன்ன உண்மையா லவ் பண்ணிருக்கு. கேஸ் கொடுக்கலைனா தற்கொலை பண்ணிப்பேண்ணு அவ அப்பா மிரட்டி தான் கேஸ் கொடுக்க வச்சிருக்காரு. அதுவுமில்லாமல் பெரிய பொண்ணுங்க விஷயத்துல மாப்பிள்ளைங்க கேரெக்ட்டர் சரி இல்லைன்னு சொல்லி ஈஸியா முடிச்சிருக்காங்க. இந்த பொண்ணு அப்படி கேஸ் கொடுக்க முடியாதுன்னு சொல்லிடுச்சு போல. அதான் மாட்டிகிட்டாரு”
“என்ன மனுஷன் இவனெல்லாம்?”
“அப்புறம் அந்த பெரிய பொண்ணுங்களோட முன்னாள் கணவர்களை எல்லாம் வர சொல்லி விசாரணை போச்சு. பாவம், அவங்க ரெண்டு பேரும் கடன் தொல்லையால நொந்து போய் இருந்தாங்க.
இப்ப அந்த அப்பா பரந்தாமனை, இவங்க ரெண்டு பேருக்கும் செட்டில்மெண்ட் பண்ண சொல்லி தீர்ப்பு சொல்லிட்டாங்க. அது மட்டும் இல்லாமல் அவருக்கு ஆறு மாசம் ஜெயில் தண்டனையும் கொடுத்திருக்காங்க. இந்த பொண்ணு இந்த கேஸோட சேர்த்து டிவோர்ஸ் கேஸையும் வாபஸ் வாங்கிடுச்சு.
போகும்போது என்னை மிரட்டிட்டே போனான் அந்த பிராடு பரந்தாமன்.”
“நமக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே முத்து, போலீஸ் கிட்ட பாதுகாப்பு கேட்கணுமா?” என்றான் ஹிருதய் சற்றே பதற்றமாக.
“அது எல்லாம் வேண்டாம் தயா.. அந்த ஆளுக்கு அறிவு தான் கிழக்கால மேற்காலன்னு வேலை செய்யும்.. மத்தப்படி டம்மி பீஸ் தான்” என்று இலகுவாகவே கூறி,
“நைட்டுக்கு ஏதாவது காரமா சாப்பிடணும் போல இருக்கு தயா” என்று பேச்சை மாற்றி விட்டாள்.
பின் இருவரும் சேர்ந்து, மிளகு தூக்கலாக போட்டு, பொங்கலும் வடகறியும் சேர்ந்து செய்து சாப்பிட்டார்கள்.
மறுநாள் ஹிருதய், கந்தசாமியிடம்,
“இன்னிக்கு ரெண்டு பேரும் காரிலே போங்களேன். அந்த ஆள் வேற நேத்து முத்துவை மிரட்டி இருக்கான்.” என்று ஹிருதய் கூறியதை பொருட்படுத்தாமல் , “அது எல்லாம் நாங்க பார்த்துகிறோம், நீ கிளம்பு” என்று அவனை அனுப்பி விட்டனர் இருவரும்.
ஹிருதய் பயந்ததை போலவே, பரந்தாமன், அடி ஆள் வைத்து முத்துவை தாக்க ஏற்பாடு செய்து தான் இருந்தார்.
அய்யாவும் முத்துவும் புல்லட்டில் சென்றுகொண்டிருக்கையில் பின்புறம் இவர்களை ஒரு லோட் ஏத்தும் வேன் ஒன்று பின் தொடர்ந்தது.
அதை முத்து கவனித்துவிட்டாள்.
“அய்யா, சில லூசு மாய்க்காய்ங்க நம்மள பால்லொவ் பன்றாங்க.. நீங்க அவனுங்களுக்கு போக்கு காட்டிகிட்டே ஓட்டுங்க. நான் அதுக்குள்ள போலீசுக்கு தகவல் சொல்லிடறேன்” என்று மெதுவாக கூறி, கைபேசியில் காவல் துறைக்கும் செய்தி அனுப்பி, கூடவே இவர்களது லைவ் லொகேஷன்யையும் அனுப்பி விட்டாள்.
ஆள் நடமாட்டம் இருக்கும் தெரு பக்கம் வண்டியை விட்டார் கந்தசாமி. சரியான நேரத்தில் இவர்கள் வண்டியை தட்டிவிட நேரம் பார்த்துக்கொண்டிருந்தது அந்த வேன்.
கந்தசாமி முத்து இருவரும் ஒரு தெருவில் திரும்பும் சமையம் புல்லட்டை லேசாக தட்டிவிட்டது. மிதமான வேகத்தில் சென்றதால் பெரிய அடி இல்லை. இருவரும் சுதாரிப்பாக இருந்ததால், லாவகமாக கீழே விழுந்தனர். இருந்தும் இருவர் கையிலும் அடி .
பின்னே வந்த போலீஸ் இடித்தவர்களை பிடித்து கைது செய்துவிட்டார்கள்.
இவர்கள் இருவரையும் மருத்துவமனையில் விட்டுவிட்டு வீட்டிற்கு தகவல் அளித்துவிட்டு சென்றனர் போலீஸ்காரர்கள்.
இருவருக்கும் சிறு பிராக்சர்.. ஒரு மாசம் ஆகும் சரி ஆவதற்கு என்று கூறி கட்டு போட்டிருந்தார்கள்.
ஹிருதய் தான் இருவரையும் வீட்டிற்கு அழைத்து வந்தான். கந்தசாமி வீட்டிற்கே வந்துவிட்டனர்.
——————
கந்தசாமி வீட்டு திண்ணையில் இருவரும் கட்டோடு ஜாலியாக அமர்ந்திருந்தார்கள்.
ஹிருதய்யின் முகம் தான் கலங்கி இருந்தது.
“விடு இதயா, இது எல்லாம் ஒரு காயமா.. நாட்டுக்கு நாலு நல்லது பண்ணா இது எல்லாம் சகஜம் தானே” என்றார் கந்தசாமி உற்சாகமாகவே.
“அதானே, கீழே விழுந்ததுல உங்க வாயில அடிபட்டிருக்கணும்.. பேச்சை பார்த்தியா ஹிருதய்.. நீ எதுக்கு இப்ப தவிச்சு நிக்குற.. அது எல்லாம் ரெண்டுக்கும் ஒன்னும் ஆகாது. இந்தா நீ இந்த ஜூசை குடி” என்று நித்யகல்யாணி வந்து ஹிருதய்க்கு மாதுளை ஜுஸை கொடுத்தார்.
அவன் அதை மனைவியிடம் கொடுக்க எழுந்திருக்கவும், “அவளுக்கு அப்புறம் கொடுப்போம்.. நீ தான் கிறங்கி போய் இருக்க. அவளோட மல்லுக்கு நிக்க தெம்பு வேணுமா இல்லையா, பேசாம குடி” என்று மிரட்டி குடிக்க வைத்தார்.
“நான் எப்படி இவரை சமாளிக்கிறேன்னு புரியுதா.. முதல்ல நாம தெம்பா இருக்கணும்.. இல்லைனா இவங்க இழுத்து விடற ஏழரைக்கு எல்லாம் எப்படி ஈடு கொடுக்கிறது சொல்லு” என்று நித்யகல்யாணி கூறவும் தான் அதுவரை இருந்த இறுக்கம் தளர்ந்தது ஹிருதய்க்கு.
அதன் பிறகே தாத்தாவிற்கும் பேத்திக்கும் ஜூஸ் வந்தது.
“இங்க பாரு அப்பத்தா, சும்மா இந்த ஜூஸ் மட்டும் கொடுத்து எங்களை ஏமாத்தாதே.. நல்லா நல்லி எலும்பு வாங்கியாந்து சூப் வச்சு கொடு, புரியுதா?” என்று முத்து கூறினாள்.
“இன்னும் பத்து நிமிஷத்துல வருவா உங்க அம்மா.. வரும்போதே சூப்போட தான் வருவா இரு” என்று நொடித்துவிட்டு உள்ளே சென்று விட்டார் நித்யகல்யாணி.
“ஐயோ அய்யா, கணக்கு டீச்சர் கிட்ட யார் சொன்னது?”
“அதை விடு முத்து, கணக்கு டீச்சர் சூப் சுமாராத்தேன் இருக்கும்”
“ஆமா அய்யா” என்று இருவரும் கவலையாக பேசிக்கொண்டு இருக்கையில்,
மாலதியும் சௌந்தரும் பதறிக்கொண்டு வந்தார்கள்.
“கொஞ்சமாச்சும் மாசமா இருக்கோம்னு அடங்கி இருக்கியா?” என்று திட்டிக்கொண்டே தான் வந்தார் மாலதி.
பழக்க தோஷத்தில் முத்து தலையில் கொட்ட வந்து பின் ஹிருதய் இருப்பதை பார்த்து கையை கீழே இறக்கி கொண்டார்.
முத்துவிற்கு அதை பார்த்ததும் பரமானந்தம் தான்.
“கவனமா இருக்கணும் இல்லடா” என்றார் சௌந்தர் மகளிடம் கலக்கமாக…
“சரிப்பா, அந்த ஆளு அவ்வளவுக்கு ஒர்த் இல்லைனு கொஞ்சம் அசந்துட்டேன். விடுங்க ப்பா சின்ன அடி தான்” என்று தந்தைக்கு சமாதானம் கூறினாள்.
அடுத்த ஒரு மணி நேரத்தில், மதுரை கும்பல் வந்து இறங்கியது.
“அய்யா.. கண்ண கட்டுதே.. நம்மளை ஹவுஸ் அரெஸ்ட் பண்ணிபுடுவாங்க போல”
“ஆமா முத்து.. ஆனா உங்க அய்யா வந்திருக்காரு, கொஞ்சம் தைரியமா இருக்கலாம். நாம கவனிக்க வேண்டியது ஒன்னு தான். அவரை நம்ம கூடவே வச்சுக்கணும்..”
“ஓகே அய்யா.. “
இவர்கள் இருவரும் குசுகுசுவென பேசிக்கொண்டிருந்ததை கேட்டு கொண்டிருந்த ஹிருதய் வழக்கம் போல.. “சரியான கேடிங்க ரெண்டும்” என்று நினைத்து கொண்டான்.
பின் அவன்தான் வீட்டாளாய் அனைவரையும் வரவேற்றான். பாட்டியிடமும் மாலதியிடமும் என்ன வாங்கிக்கொண்டு வரவேண்டும் என்று பொறுப்பாய் கேட்டு அனைத்தையும் வாங்கி வந்து கொடுத்து, என எல்லா உதவிகளையும் செய்தான்.
கொஞ்சமும் ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியாக இருந்த ஹிருதய்யின் செயல்கள் அனைவரையும் கவர்ந்தது.
“என்ன அய்யா இது, வழக்கமா நாம செய்யுற வேலையை இன்னிக்கு எல்லாரும் சேர்ந்து இல்ல செய்றாங்க..?”
“ஆமா முத்து” என்றார் கந்தசாமி உர்ரென்று
மதுரை கும்பல் வந்ததுமே சௌந்தர் அமைதியாக இவர்கள் பின்னால் அமர்ந்துகொண்டார். இவர்கள் பேசுவதை கேட்டு, “அப்படி என்ன செய்றாங்க எல்லாரும்?” என்றார் ஆர்வமாக.
“வேற என்ன ப்பா, என் புருஷனை சைட் அடிக்கிறாங்க..” என்று முத்து கூறவும், தலையில் அடித்துக்கொண்டு சென்று விட்டார்.
வந்தவர்கள் அனைவரும் முத்துவிற்கும் கந்தசாமிக்கும் அறிவுரைகளை வாரி வழங்கினார்கள்.
இருவரும் நொந்து போய் இருந்தாலும்,மதியம் மாலதியின் அம்மாவும் அத்தைகளும் இவர்களுடன் இணைந்து சமைத்திருந்த உணவில் மனதை ஆற்றிக்கொண்டார்கள்.
முத்துவிற்கு பிடித்த அனைத்தையும் சமைத்திருந்தாரக்ள்.
“என்ன இருந்தாலும் தங்கச்சி செய்யுற அல்வாவிற்கு ஈடு இணையே இல்ல மச்சான்” என்றார் கந்தசாமி மாலதி அப்பாவிடம்.
அதை கேட்டதும், கிளம்பலாம் என்று இருந்தவர்கள் இருந்து அல்வாவை கிண்டி கொடுத்துவிட்டே புறப்பட்டனர்.
இரண்டு டீச்சர்களின் பாசப்பார்வைகளை அய்யாவும் பேத்தியும் வழக்கம் போல கண்டுகொண்டால் தானே?
ஒருவழியாக இவர்களை கிளப்பி அனுப்பி அப்பாடா என்று அனைவரும் உட்கார்ந்தார்கள்.
அதன் பிறகே ஹிருதய் வீட்டிற்கு அழைத்து சுருக்கமாக நடந்ததை கூறினான்.
அங்கே சிவங்கரிக்கு டைபாய்டு காய்ச்சல். ஹாசினிக்கும் எக்ஸாம் சமயம். அதனால் அவர்களிடம் லேசான காயம் என்று மட்டுமே கூறினார்கள்.
பின் அவர்கள் அனைவரும் ஒவ்வொருவராக பேசி அவர்கள் பங்குக்கு அறிவுரைகளை கூறி வைத்தனர்.
“முத்து இது தான் காலக் கொடுமைன்னு சொல்றது.. இன்னும் அந்த ப்ரதம்மோட பையன் மட்டும் தான் அறிவுரை சொல்லல?” என்றார் கந்தசாமி கடுப்பாக.
அதன் பிறகு கையில் அடிபட்டதை சாக்காக வைத்துக்கொண்டு தங்களாலான அனைத்து அலப்பறைகளையும் கூட்டி கொண்டிருந்தார்கள் அய்யாவும் பேத்தியும்.
ஹிருதய், மெல்ல பாட்டியிடம் சென்று “பாட்டி இரண்டு பேரையும் ஒன்னா சமாளிக்க முடியாது. நான் முத்துவை கூட்டிட்டு கிளம்புறேன்” என்றான்.
அவன் முத்துவுடன் தனியே இருக்க விரும்புகிறான் என்று புரிந்தது அவருக்கு. இருந்தாலும், அவன் போக்கிலே “ஆமா ப்பா.. ரெண்டையும் ஒன்னா மேய்க்க முடியாதுதான்.. நீ ஒன்னை ஓட்டிட்டு போயிடு” என்றார் சிரித்து கொண்டே.
மாலதி தான், “நான் பார்த்துகிறேன் ஹிருதய். இங்கேயே இருங்க இரண்டு நாளைக்கு” என்றார்.
ஹிருதய் பாவமாக முழிக்கவும்,
“அது எல்லாம் என் புருஷன் என்னை நல்லா பார்த்துப்பாரு.. எல்லாரும் போய் அவங்கவங்க வேலையே பாருங்க” என்று நாட்டாமை போல கூறிவிட்டு, ஹிருதய்யுடன் தங்கள் வீட்டிற்கு வந்துவிட்டாள் முத்து.
வீட்டினுள் நுழைந்ததுமே கணவனின் இறுகிய அனைப்பில் இருந்தாள் முத்து.
அவன் அனைப்பே கூறியது அவன் மிகவும் பயந்திருக்கிறான் என்று.
“அது எல்லாம் எனக்கு ஒன்னும் ஆகுது தயா.. சின்ன அடி தான்.. கட்டு தான் பெருசா போட்டு இருக்காங்க”
அவன் பதில் கூறாமல் அனைப்பை மட்டும் இறுக்கினான்.
அதில் கொஞ்சம் கோவம் இருப்பதாக தோன்றியது.
“நீங்க சொன்னதை கேட்காம பைக்கில போயிருக்க வேண்டாம் தான். ஆனா, நாங்க அலெர்ட்டா தான் இருந்தோம். போலீசுக்கு சரியாய் இன்ஃபார்ம் பண்ணி அவங்களை பிடிச்சிட்டோம் இல்ல” என்றாள் பெருமையாக.
“————-”
“பேசாம இருந்தா என்ன அர்த்தம். சரி சாரி” என்றாள் இறங்கி வந்து.
“கலகலப்பா இருக்கிறது எனக்கு பிடிக்கும் முத்து. எப்பவுமே சேட்டை செய்றதும் கூட பரவாயில்லை. ஆனா உன் பாதுகாப்பு முக்கியம் இல்லையா? உனக்கு ஏதாவதுனா என்னால தாங்க முடியாது அரிசி மூட்ட” என்று கூறுகையில் ஹிருத்யயின் குரல் கரகரத்தது.
“ இங்க பாருங்க தயா.. எனக்கு எல்லாம் ஒன்னும் ஆகாது.. எனக்கு ஏன் தெரியுமா முத்தாயின்னு பேர் வச்சிருக்காங்க..” என்று பேச்சு கொடுத்து கொண்டே அவனுடன் நடந்து ஊஞ்சல் அருகில் வந்து விட்டாள்.
ஹிருதய் அமர்ந்துகொண்டு அவளை வாகாக மடியில் படுக்க வைத்து கொண்டான்.
“எனக்கு முதல்ல நித்யான்னு தான் பெயர் வச்சிருந்தாங்க. எனக்கு இரண்டு வயசு வந்தப்ப, அம்மை போட்டிருச்சாம்.. அம்மைன்னா உடம்புல ஒரு துளி கூட இடமே இல்லாம முத்து முத்தா போட்டிருக்கு..”
“ஏன், நீங்க தடுப்பூசி எல்லாம் போடலயா?”
“அது எல்லாம் போட்டு தான் இருந்திருக்காங்க.. சில விஷயங்கள் சயின்ஸ்க்கு அப்பாற்பட்டது. அப்ப உயிருக்கே ஆபத்து மாதிரி நிலைமை.”
“அப்புறம்?”
“நம்ம முத்தாயி அம்மாச்சி கோவிலுக்கு தான் அப்பத்தா என்னை தூக்கிட்டு ஓடி இருக்காங்க..
அப்ப அங்க வந்த யாரோ ஒரு அம்மா, ‘இது அந்த முத்துமாரி பிள்ளை.. நீங்க கும்பிடற உங்க முத்தாயி தான் பிள்ளையா பிறந்திருக்காங்க.. அவ பேர் சொல்லி கூப்பிடுங்க சரி ஆயிடும்னு..” சொல்லி இருக்காங்க.
இது எல்லாம் உண்மையா பொய்யான்னு எல்லாம் எனக்கு தெரியாது. ஆனா, அப்ப எங்க அப்பத்தா இவ இனி முத்தாயி தான்.. உன் பெயரே வைக்கிறோம் அம்மாச்சி, பிள்ளையை காப்பாத்தி கொடுன்னு கேட்டிருக்காங்க.
அதுவரைக்கும் கண்ணே திறக்காம இருந்த நான் கண் திறந்து எல்லாரையும் பார்த்தேனாம்.
அடுத்த இரண்டே நாள்ல அம்மை இறங்கி எனக்கு சுகமாயிடுச்சாம்.
இந்த விஷயம் எல்லாருக்கும் தெரிய வர, அதுக்கு அப்புறம் கொஞ்ச நாளைக்கு என்னயவே சாமியா பார்த்திருக்காங்க இந்த ஊர் மக்கள்.
வளர வளர எனக்கு அது பிடிக்கலை.
அதை அய்யா கிட்ட சொல்லி இருக்கேன். அதுக்கப்புறமா தான் என்னை சாமியா பார்க்கிற பார்வையை மாத்த, என்னை சேட்டைக்கார பொண்ணா மாத்தினாரு அய்யா. நான் பண்ற குறும்புல எல்லாரும் சாமியா பார்க்கிறதை விட்டுட்டு என்ன சேட்டை செய்ய போறேன்னு பீதியா பார்க்க ஆரம்பிச்சாங்க..”
“ஓ ..”
“அப்புறம் என்னோட சுபாவமும் கொஞ்சம் அப்படித்தான் போல.. நானும் அய்யாவும் அடிக்காத லூட்டிகளே இல்லை..”
“சரி முத்து..” என்றான் ஹிருதய் இன்னும் வருத்தமாகவே.
“இங்க பாரு அரிசி மண்டி.. எனக்கு சோகமாவே இருந்தா பிடிக்காது.”
“எனக்கு கூட தான் இப்படி நீ அடிபட்டு வந்திருக்கிறது பிடிக்கலை..”
“நான் என்ன வேணும்னேவா கையை உடைச்சுக்கிட்டேன்..”
“—————-”
“சரி சரி.. இனி கவனமா இருக்கேன்.. கண்டிப்பா ஆபத்து வராம பார்த்துகிறேன்..”
தலையை மட்டும் ஆட்டி வைத்தான் ஹிருதய்.
“உன்னை மலை இறக்க பக்கம்பக்கமா பேசி எனக்கே களைப்பா இருக்கு” என்று முத்து சோகமாக சொல்லவும் தான் ஹிருதய் இறங்கி வந்தான்.
பின் அவள் குளிப்பதற்கு உதவி செய்து, வேறு இலகுவான ஆடைகளை மாற்றி பால் கலந்து கொடுத்து படுக்க வைத்தான். மாசமாக இருப்பதால் வலி நிவாரணிகள் கொடுக்கவில்லை.
அவளுக்கு வலிக்கும் என்று இவனுக்கு வருத்தமாக இருந்தது.
லேசாக அனைத்து தட்டிக்கொடுத்துக்கொண்டே இருந்தான்.
அவன் பாசத்தில் உருகித்தான் போனால் முத்தாயி. கணவனின் கதகதப்பில் சுகமாக நித்திரைக்கு சென்றாள்.
——————
error: Content is protected !!