Skip to content
Post Views: 6,587

தோப்பு வீட்டில் இருந்து இரண்டு நாட்களில் அர்ஜுனனும் சுபாவும் ஆரவுடன் தங்கள் வீட்டுக்கு வந்து விட்டனர்… இந்த இடைப்பட்ட நான்கு நாட்களில் கிரிஜாவுக்கும் ரேவதிக்கும் சண்டை அதிகம் வந்து இருந்தது…
பாட்டி அவர்களுக்கான உணவை அவர்களையே சமைக்க கூறி இருந்தார்… ராஜம்மாவை தனக்கும் கர்ணனுக்கு மட்டும் சமைக்க கூறினார்…
Advertisement
இதனால் தான் மாமியாருக்கும் மருமகளுக்கும் சண்டை தினமும் நடக்கிறது… இவள் சமைப்பாள் என கிரிஜாவும் …. அவர் சமைப்பார் என ரேவதியும் மதியம் வரை முதல் நாள் சமையல் செய்யவில்லை…
அன்றிலிருந்து மனஸ்தாபம் எழுந்து நீங்க செய்ங்க நீ செய் என சண்டை ஆகியது… இப்போது தான் கிரிஜாவிற்கு சுபாவின் அருமை புரிந்தது.. இருவருக்குள்ளும் மனஸ்தாபம் எழுந்தாலும் சாப்பாடு விஷயத்தில் எந்த கோபத்தையும் காட்ட மாட்டாள்….
ஆனால் ரேவதி இந்த நான்கு நாட்களும் வீட்டில் சமைக்கவே இல்லை… ஆன்லைனில் ஆர்டர் செய்து கணவனும் மனைவியும் சாப்பிட்டு கொண்டனர்…
Advertisement
கிரிஜாதான் சமைத்தார்… தினமும் சுட சுட வகை வகையாக சாப்பிட்டு பழகிய கிரிஜாவிற்கும் பாலாவிற்கு ஒரே சாப்பாடு இரண்டு வேளையும் சாப்பிட கஷ்டமாக இருந்தது…
Advertisement
அதுவும் கிரிஜா சமைத்து பல வருடங்கள் ஆகி இருந்தது.. இந்த வீட்டிற்கு வந்ததில் இருந்து அவர் சமைக்கவே இல்லை… ராஜம்மா தான் சமைப்பார்… கொஞ்ச மாதம் சமையலுக்கு உதவியாக இருந்தார்… ஆனால் கர்ப்பமாகியதும் அந்த வேலையும் செய்வது இல்லை…
அதனால் சாப்பாடும் ஒழுங்காக செய்யவில்லை… இதனால் பாலாக்கும் கிரிஜாவிற்கும் சிறு சிறு சண்டை வந்து கொண்டு இருந்தது..
சுபா இங்கு வந்தவுடன் நல்ல சாப்பாடு கிடைக்கும் என்று இருந்த நால்வருக்கும் ஏமாற்றம் தான்… மூவரும் அறையினுள் அதிகமாக இருந்தனர்… அர்ஜுனன் வெளியில் சென்று கொண்டு தான் இருந்தான்.. ஆனால் ஆரவும் சுபாவும் அறையிலேயே இருந்து கொண்டனர்…
Advertisement
இவர்களின் வீடும் சுத்தம் செய்து முடித்துவிட்டனர்… பாட்டி அடுத்த இரண்டு நாட்களில் நால்வரையும் அந்த வீட்டிற்கு செல்ல கூறிவிட்டார்….
கிரிஜாவும் ரேவதியும் கொஞ்சம் பொருமலுடன் தான் அன்றிரவு தூங்க சென்றனர்… இந்த வீட்டை விட அது கொஞ்சம் சிறிய வீடு தான்…. ரொம்ப சிறிய வீடு என்று கூற முடியாது…
அந்த இரவு மட்டும் தான் கிரிஜாவுக்கு நன்றாக உறங்கும் இரவு.. இதற்குமேல் அவர் செய்த செயலின் பலனை வரும் காலத்தில் அனுபவிக்க போகிறார்…. இது தெரியாமல் உறங்க சென்று இருக்கிறார் கிரிஜா…
ஒரு மருத்துவமனையில் எண்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி தன் மக்களிடம் அய்யனார் கோவில் திருவிழா பற்றி பேசிக் கொண்டு இருந்தார்.. அவர்களும் திருவிழாவில் நடந்தது அனைத்தையும் கூறினர்…
அவர்கள் கூறியதைக் கேட்டு அந்த பாட்டி உடனே ஊருக்கு செல்ல வேண்டும் என்று கூறி கேட்டார்… ரெண்டு நாள் கழித்து செல்லலாம் என்று கூறியும் அவர் கேட்கவில்லை.. கிரிஜாவின் மேல் பயங்கர கோவத்தில் இருந்தார் அவர்…
அவர்களின் மக்களும் மருத்துவரிடம் கேட்டு வீட்டிற்கு செல்லலாம் நாளை காலை டிஸ்சார்ஜ் செய்து கொள்ளுங்கள் என்று கூறி இருந்தார்….
அவர்களும் அந்த பாட்டியிடம் கூறி நாளை காலை செல்லலாம் என்று கூறி தூங்க வைத்தனர்…
அடுத்த நாள் காலை பல ரகசியங்களை உள்ளடக்கி விடிந்தது… கிரிஜாவிற்கு அன்று காலையில் இருந்து எதோ மாதிரியாக இருந்தது……
அன்று காலையில் அர்ஜுனன் சுபாவை அழைத்து கொண்டு செக்கப்பிற்காக ஆரவுடன் இவர்கள் ஊரின் அருகில் உள்ள நகரத்திற்கு சென்றுவிட்டான்… அங்கு அவர்களுக்காக ஜனனியும் நந்தினியும் தங்கள் குழந்தைகளுடன் காத்துகொண்டு இருந்தனர்…. ஜனனி குழந்தைகளை அழைத்து கொண்டு அருகில் இருந்த பார்க் சென்றுவிட்டாள்…
மருத்துவமனைக்கு நந்தினி அர்ஜுன் சுபா மூவர் மட்டும் சென்றனர்… அனைத்தும் செக் செய்துவிட்டு டாக்டர் இவர்களிடம் ” எல்லாம் ஓகே பிபி மட்டும் அப்நார்மலா இருக்கு… ரிலாக்ஸ்சா இருங்க சுபத்திரா…. பிபி அதிகமாக இருந்தா பிரச்சனை ஆகிடும்… பிபிக்கு தனியா டேப்லெட்ஸ் தரேன்… ஒரு டென் டேஸ் சாப்பிடுங்க… டென் டேஸ் கழிச்சி வாங்க செக் பண்ணலாம்” என்று கூறி அனுப்பிவைத்தார்…
அர்ஜுனன் எதுவும் கேட்காமல் வேகமாக வெளியில் சென்றுவிட்டான்.. சுபா தான் அவனின் இந்த வேகத்தில் சோகமாகி விட்டாள்… நந்தினி இவளிடம் “ஏன் சுபி சோகமாயிட்ட… பிபி அதிகம் ஆகுற மாதிரி என்ன யோசிக்குற..” என்று கேட்டாள்…
“அண்ணி மாமா கோவமா போறாரு … என் மேல கோவமா இருக்காரு நினைக்குறேன்” என்று உதட்டை பிதுக்கி பாவமாக கூறினாள்…
“சுபி சாமி சொன்ன வாக்கை நினச்சு பிபி ஏத்திக்கிட்டியா என்ன”… என்று கொஞ்சம் அதட்டலாகவே கேட்டாள் நந்தினி
சுபா பாவமாக “ஆம்” என்று தலையாட்டினாள்…
“எதுக்கு டென்ஷன் ஆகுற சுபி… அவன் அத பத்தி நினைக்காதனு சொல்லி இருப்பான்,… ஆனா நீ அத நினச்சு பிபி ஏத்திக்கிட்டு இப்ப அவன் கோவமா போறான்னு சோகமாகுற… அவன் உங்கிட்ட ரொம்ப நேரம் கோவமா இருக்க மாட்டான் வா போலாம்” என்று கூறி அழைத்து சென்றாள்
மருத்துவமனை அருகில் உள்ள பார்க்கிற்கு சென்றனர் இருவரும்… அங்கு ஒரு கற்திட்டில் கோவமாக அமர்ந்து இருந்தான் அர்ஜுனன்… சுபாவை அங்கு போக கூறினாள் நந்தினி… அவள் அதற்கு மறுத்து நீங்களும் வாங்க என்று அழைத்து கொண்டு இருந்தாள்…
“அடியே அவன் என்ன கடிச்சு திங்கவா போறான்… போ அவன்கிட்ட இதுக்கும் சேர்த்து அவன்கிட்ட பேச்சு வாங்கிக்காத” என்று கூறிவிட்டு ஜனனி இருக்கும் இடத்திற்கு சென்று விட்டாள்..
சுபாவோ போகும் அவளையே பார்த்துவிட்டு தன் மாமனை பார்த்தாள்…. இவளின் பாவனைகளை தூரத்தில் இருந்து பார்த்து கொண்டு இருந்த ஜனனி நந்தினி வந்தவுடன் “என்னாச்சு க்கா முதல்ல அண்ணன் கோவமா வந்தாரு… நம்ம நாத்தனார் சோகமா வரா என்ன ஆச்சு.. மேடம் என்ன பண்ணாங்க” என்று கேட்டாள்..
நந்தினியும் நடந்தை கூறிவிட்டு “இவளை என்ன பண்றதுனு தெரியல ஜானு அவன் சொல்லிட்டான் அத பத்தி நினைக்காதனு இவ அத பத்தி நினச்சு பிபி ஏத்திக்கிட்டு இருந்தா அவன் கோவ படாம என்ன செய்வான்… வாங்க அண்ணி அவரை சமாதானம் பண்ணலாம்னு கூப்புடுறா..
இப்ப நான் மட்டும் அவ கூட போனா அவன் அவ்வளவு தான்… திட்டினா கூட பரவால்ல ஆனா அவன் ஒரு பார்வை பார்த்தான் அவ்வளவு தான்… அவன் பொண்டாட்டியே சமாதானம் பண்ணட்டும்” என்று கூறினாள்…
ஜனனியும் அதை ஒத்துக்கொண்டு இருவரும் பேசிக்கொண்டு இருந்தனர்….
அங்கு சுபா தயங்கிக்கொண்டே அர்ஜுனன் அருகில் சென்றாள்… அவள் வந்தது தெரிந்தும் அமைதியாகவே அமர்ந்து இருந்தான்…
“மாமா சாரி பயமா இருந்தது… நான் நினைக்கவே இல்லைனாலும் மனசுல தோணிட்டே இருக்கு… அப்றம் பதட்ட படுறேன் அத நினச்சு… நான் என்ன பண்ணட்டும்,… மாமா என்னை பாரேன்” என்று அவனின் அருகில் அமர்ந்து அவளிடம் கெஞ்சிக்கொண்டு இருந்தாள்….
ஆனால் அவன் கண்டுகொள்ளவே இல்லை… இவளும் பேசிப்பேசி பார்த்து அமைதியாகி விட்டாள்… “போடா” என்று கூறிவிட்டு நந்தினியும் ஜனனியும் இருக்கும் இடம் சென்று விட்டாள்…
அவனோ இதழில் குறுநகை மின்ன போகும் அவளையே பார்த்து கொண்டு இருந்தான்…
இங்கு இவர்களிடம் வந்தவளோ நந்தினியை பார்த்து “என்ன தம்பி வளர்த்து வெச்சி இருக்கீங்க…. தெரியாம ஒரு தப்பு பண்ணிட்டேன்… அதுக்கு பேசமாட்டாராமா… ஒரு நாள் நானும் இந்த மாதிரி பேசாம இருக்குற நாள் வரும்… அப்ப அவர் என்ன கெஞ்சுனாலும் பேசவே மாட்டேன் பாருங்க” என்று கண்ணில் கண்ணீரோடு கூறிமுடித்தாள்….
உண்மையில் அதுதான் நடக்க போகிறது என்று தெரிந்து இருந்தால் அவள் இந்த வார்த்தையை சொல்லி இருக்க மாட்டாளோ?!?!?!
ஜனனி அவளை சமாதானம் படுத்திக் கொண்டு இருக்க நந்தினி அவனிடம் பேச சென்றாள்… சுபா அழுவதை பார்த்த ஆரவ் வேகமாக அங்கு வந்தான்… “ம்மா ஏன் அழுவுற… யாரோ அடிச்சியா( அடிச்சிட்டாங்களா)… வா ப்பா சொல்லலாம்.. ப்பா அவங்கள டிஷும் டிஷும்.. லிட்டில் சிங்கம் டிஷும் டிஷும்” என்று கூறினான்…
சுபாவோ “ஒன்னு இல்ல தம்பி… அம்மா கண்ணுல தூசி விழுந்துச்சு.. அதுதான் அம்மா அழுதேன்.. இப்ப பாரு அம்மா சிரிக்குறேன்…” என்று கூறினாள்..
ஆரவ் ஜனனியை தூக்க கூறி சுபாவின் முகத்தின் அருகே சென்று அவளின் கண்ணில் ப்பூ ப்பூ என ஊதிவிட்டான்….
சுபாவோ மகனின் பாசத்தில் மகிழ்ந்து போய் இருந்தாள்… அவனுக்கு முத்தம்மிட்டு விளையாட அனுப்பிவிட்டு ஜனனியும் அவளும் அமர்ந்து குழந்தைகளை பார்த்து கொண்டு இருந்தார்கள்…
இங்கு அர்ஜுனனிடம் வந்த நந்தினி “அர்ஜுன் எதுக்கு இப்ப கோவை படுற… மாசமா இருந்தா மூட் ஸ்விங் ஆகும்.. எதை எதையோ யோசிக்க தோணும்… அதுனால யோசிச்சு அவளுக்கு பிபி ரைஸ் ஆகி இருக்கு.. நீயும் பேசாம இருந்தா இன்னும் தான் சோகமா இருப்பா போய் பேசு” என்று கூறினாள்…
“என்னக்கா உன் புருஷனோட தங்கச்சிக்கு சப்போர்ட் பண்ணி பேசுறியா… ரெண்டு நாள் பேசாம இருந்தா அவ இனிமே அத பத்தி பேசமாட்டா…. ரெண்டு நாள் கழிச்சி பேசுறேன்… போய் அவங்கள அழைச்சிட்டு வெளிய வாங்க… நான் போய் ஜீப் எடுத்துட்டு வரேன்…” என்று கூறி சென்றுவிட்டான்…
நந்தினியும் குழந்தைகளை அழைத்து கொண்டு ஜனனி சுபாவுடன் பார்க்கின் வாயிலுக்கு அழைத்து வந்தான்… அங்கு ஏற்கனவே அர்ஜுனன் ஜீப் நிறுத்தி இருந்தான்…
இவர்கள் ஏறி அமர்ந்தும் ஜீப்பை எடுக்காமல் எதோ யோசனையில் இருந்தான்… நந்தினி தான் அவனின் தோளில் தட்டி “அர்ஜுன் என்ன யோசனைல இருக்க” என்று கேட்டாள்…
அவனோ “அக்கா மாரி மாமா கூப்பிட்டு இருந்தாரு மருதாயி பாட்டி நம்ம கிட்ட எதோ பேசணும்னு சொன்னாங்களாம் வீட்டுக்கு இன்னும் கால் மணிநேரத்துல வந்துவாங்கலாம் சீக்கிரம் வர சொன்னாங்க” என்று கூறினான்…..
“பாட்டிக்கு உடம்பு பரவால்லயா கொஞ்ச நாள் ஹாஸ்பிடல்லயே இருந்து இருக்கலாம்ல…. அப்படி என்ன தல போற அவசரம்… இன்னிக்கே பேச” என கேட்டாள் நந்தினி..
“மாமாக்கும் என்ன விஷயம்னு தெரியாது போல வாங்க போலாம்…” என்று கூறிவிட்டு “அக்கா சீட் பெல்ட் போட சொல்லுக்கா” என்று சுபாவை ஓரக்கண்ணால் பார்த்தவாறு கூறினான்…
அவள் போடாமல் வீம்பாக அமர்ந்து இருந்தாள்… அவன் அவளை முறைத்தவாறே பின்னால் இருவரையும் பார்த்தான்.. இருவரும் கீழே குனிந்தவாறு எதையோ தீவீரமாக தேடிக் கொண்டு இருந்தார்கள்..
அதனால் அவனே அவளை தாண்டி சென்று சீட் பெல்ட்டை இழுத்து போட்டு விட்டான்… ஆனால் அவனின் உடம்பு இவள் மேல் படவே இல்லை…
இவர்கள் இருவரும் இன்னும் குனிந்து கொண்டு தான் இருந்தனர்… “இப்ப என்ன ஜீப்புக்குள்ள புதையல் தேடிட்டு இருக்கீங்கலா நிமிருங்க ரெண்டு பேரும்” என்று கூறிவிட்டு “அப்படியே இவரு ரொமான்ஸ் பண்ணி கிழிச்சிட்டாலும்” என்று அதை மட்டும் முணுமுணுத்தாள்….
அவனுக்கு மட்டும் தான் அது கேட்டது… திரும்பி அவளை ஒரு பார்வை பார்த்தான்… அவ்வளவு தான் அவளுக்கு குப்பென்று முகம் எல்லாம் சிவந்துவிட்டது அவனின் பார்வையில்…
அவனை பார்க்காமல் அப்படியே வெளியே வேடிக்கை பார்க்க திரும்பிவிட்டாள்… இவர்கள் வீட்டிற்கு வரும் முன் மருதாயி பாட்டியின் குடும்பத்தினர் வீட்டிற்கு வந்து இருந்தனர்…
மருதாயி பாட்டி சுபாவின் அப்பா பரமசிவனிற்கும் கிரிஜாவிற்கும் அத்தை முறை வருபவர்… அந்த பாட்டி அய்யனார்புறத்தில் தான் இருக்கிறரர்.. அவரின் மூலம் தான் கிரிஜாவிற்கு பாலாவுடன் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது…
இவர்கள் வீட்டினுள் நுழையும் போதே மருதாயி ஒரு முறைப்புடனே கிரிஜாவை பார்த்து கொண்டு பட்டம்மாள் பாட்டியிடம் பேசிக்கொண்டு இருந்தார்…
கிரிஜாவோ கையை பிசைந்து கொண்டு நின்று இருந்தார்… பேச்சு திருவிழா பற்றி வரும் போது பாட்டி கிரிஜாவிடம் திரும்பி “உன் புள்ளைக்கு எப்படி முதல் மரியாதை கிடைக்கும்… கர்ணனுக்கு கூட தரலாம் எப்படி சசிகுமாருக்கு தர முடியும்… பாலா உனக்கு தெரியும்ல எப்படி சசிகுமாருக்கு தர முடிவு பண்ண” என்று கேட்டார்…
அவரின் கேள்வியில் குழப்பம் அடைந்து பட்டம்மாள் “என்ன சொல்ற மருது… சசியும் என் பேரன் தானு எப்படி அவனுக்கு இல்லாத உரிமை கர்ணனுக்கு இருக்கு… ஆனா நீ பேசுறதே தப்பு அது அர்ஜுனனுக்கு மட்டும் தான் உரிமை” என்று கூறினார்..
“பட்டு உன் குடும்பத்து ரத்தத்துக்கு மட்டும் தானே உரிமை… சசி தான் கிரிஜாவுக்கு அவ முத புருஷனுக்கு உருவான குழந்தையாச்சே… இந்த உண்மை பாலாக்கும் தெரியுமே” என்று கூறினார்…
அதை கேட்டு அந்த இடமே நிசப்தம் ஆகியது….
error: Content is protected !!