Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நீ எனக்கு தந்த காதல்

நீ எனக்கு தந்த காதல் – 35.

தமிழ் தன்னை விட்டு விலகுவதை புரிந்து கொள்ளும் நிலா.

 

ஆபிசில் எப்போதும் போல் நிலாவும், நந்தினியும் பேசிக் கொண்டே வேலை பார்த்தனர்.

 



Advertisement

இனி,

 

‘நந்தினி தமிழ் என்ன அவாய்ட்  பண்றாரோன்னு தோனுது’, என நிலா சொல்ல,

Advertisement

 

Advertisement

‘என்ன நிலா ஏன் அப்டி சொல்ற. ‘, என நந்தினி கேட்க,

 

‘எங்கிட்ட சரியா முகம் குடுத்து பேச மாட்டேங்கறாரு. நானா பேசினாலும் கூட ஒரே வார்த்தைல பதில் சொல்லிட்டு போய்டறாரு. அப்புறம் இன்னிக்கு ஆபிஸ்க்கு கூட என்னை விட்டுட்டு எதோ முக்கியமான வேல இருக்குன்னு சொல்லிட்டு வந்துட்டாரு’, என நிலா சோகமாய் சொல்ல,

Advertisement

 

‘ஏய் நிலா அப்டி எல்லாம் எதுவும் இருக்காது. நீ கண்டதையும் போட்டு மனசை குழப்பிக்காத. தமிழ் சார் ஏன் உன்ன அவாய்ட் பண்ணனும்.  அவர் தான் உன் மேல உயிரையே வச்சிருக்காரே. உன்ன அவாய்ட்  பண்ண அவருக்கு என்ன ரீசன் இருக்கும்’, என நந்தினி கேட்க,

 

‘அதே தான் நானும் யோசிக்கறேன். என் மேல உயிரே வச்சிருக்கறவரு எதுக்கு என்ன அவாய்ட் பண்ணனும். அப்டி என்ன அவருக்கு அவசியம். என் கிட்ட தெரியாம கூட மனசு கஷ்டபடற மாதிரி நடந்துக்க மாட்டாரு. ஆனா அவரு என்ன அவாய்ட் பண்ணா மனசு கஷ்டப் படுவேன்னு தெரிஞ்சும் அத செய்றாருன்னா அப்டி என்ன ரீசனா இருக்கும்’, என நிலா யோசிக்க,

 

‘நிலா ரொம்ப யோசிக்காத. அப்டி உனக்கு சந்தேகமா இருந்தா நேரா அவரு கிட்டயே கேட்ரு’, என நந்தினி சொல்ல,

 

‘நானும் அத தான் யோசிச்சேன். ரெண்டு நாள் முன்னாடி கூட எங்கிட்ட நான் உன்ன விட்டு தூரமா போனா என்ன பண்ணுவன்னு கேட்டாரு. நான் அப்ப அத சீரியசா எடுத்துக்கல. ஆனா இப்ப அவரு நடந்துக்கறத பாத்தா ஏதோ மனசுல வச்சு கிட்டு தான் எங்கிட்ட அவரு அந்த கேள்விய கேட்ருக்காருன்னு தோனுது’,  என நிலா சொல்ல,

 

‘சரி இவ்ளோ கன்ஃப்யூசன் எதுக்கு . உனக்கு என்ன கேக்கனும்னு தோனுதோ அத அவரு கிட்ட நேராவே கேட்ரு’, என நந்தினி சொல்ல,

 

‘ம் அதான் கரெக்ட்.’, என நிலா சொல்ல இருவரும் பேசிக் கொண்டே வேலை பார்த்தனர்.

 

தமிழ், நிலா இருவரும் வேலை முடிந்து ஆபிஸிலிருந்து கிளம்ப ,

 

‘நிலா நீ உன் டூ விலர்லயே வீட்டுக்கு வந்துரு. அப்புறம் ஒரு வாரத்துக்கு எனக்கு முக்கியமான வேலை இருக்கு. அதனால நீ எனக்காக வெய்ட் பண்ணாம காலைலயும், சாய்ந்தரமும் நீயே வந்துரு’, என சொல்லி விட்டு தமிழ் நிலாவின் பதிலை கூட கேட்காமல் காரை எடுத்துக் கொண்டு சென்றான்.

 

நிலா என்ன நடக்கிறது என்று புரிந்து கொள்ள முடியாமல் குழப்பத்துடன் தன் வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பினாள்.

 

‘நிலா சாரி உன்ன கஷ்டப் படுத்தறைன்னு எனக்கு நல்லா தெரியுது. ஆனா என் மேல உனக்கு இருக்க பாசத்தை வெறுப்பா மாத்த எனக்கு வேற வழி தெரியல. ‘, என தமிழ் தனக்குள் பேசிக் கொண்டு நிலா வண்டியை அவளுக்கு தெரியாமல் பின் தொடர்ந்தான்.

 

நிலா முன்னாடி வீடு வந்து சேர,  ‘நிலா எங்க தமிழ காணோம். நீ இன்னிக்கு டூ விலர்லயா ஆபிஸ்க்கு போன’, என தமிழ் அப்பா கேட்க,

 

‘ஆமா அங்கிள் தமிழ்க்கு ஒரு வாரத்துக்கு ஏதோ முக்கியமான வேல இருக்காம். அதனால என்னைய டூ விலர்ல போய்ட்டு வர சொன்னாரு’, என நிலா சொல்லி விட்டு போய் பிரஷப் ஆகி கீழே வர தமிழும் வீட்டுக்கு வந்து சேர்ந்தான்.

 

‘தமிழ் அப்டி என்ன முக்கியமான வேல நிலாவுக்கு தெரியாம’ என தமிழ் அப்பா கேட்க,

 

‘ஏன் எல்லா விசயமும் மேடம் கிட்ட சொல்லிட்டு தான் நான் பண்ணனுமா டாடி. ‘, என தமிழ் கோபமாக கேட்க,

 

‘டேய் இது என்ன புது பழக்கம். ஏன் நிலா கிட்ட சொல்லிட்டு செஞ்சா என்ன ‘, என தமிழ் அம்மா குறுக்கே வர,

 

தமிழ் எதுவும் பதில் சொல்லாமல் மேலே ரூமுக்கு சென்று பிரஷப் ஆகி வந்தான்.

 

‘ராஜி எனக்கு கொஞ்சம் காபி’, என தமிழ் கேட்க,

 

தமிழ் அம்மா அதை காதில் வாங்காமல் தமிழ் அப்பாவுடன் பேசிக் கொண்டு இருவரும் காபி குடித்துக் கொண்டிருந்தனர்.

 

நிலா காபி போட்டு எடுத்து கொண்டு வந்து தமிழிடம் குடுக்க,

 

‘தேங்க்ஸ் நிலா’, என சொல்லி விட்டு தமிழ் வேறு எதுவும் பேசாமல் ஆபிஸ் பைல்களை எடுத்து பார்த்துக் கொண்டிருந்தான்.

 

பிறகு சிறிது நேரம் கழித்து தமிழ் தனது அப்பா, அம்மாவிடம் வந்து உட்கார்ந்து, ‘சாரி டாடி, சாரி ராஜி எதோ ஆபிஸ்ல இருந்த டென்சன்ல அப்டி பேசிட்டேன். முக்கியமான விசயம்னு சொல்றேன்ல. அத இப்பத்திக்கு உங்க யார் கிட்டயும் என்னால சொல்ல முடியாது’, என மன்னிப்பு கேட்க,

 

‘டேய் எங்க கிட்ட எதுக்கு இப்ப மன்னிப்பு கேக்குற. நீ கஷ்டப் படுத்துனது நிலாவ. போய் அவ கிட்ட மன்னிப்பு கேளு.’, என தமிழ் அம்மா சொல்ல,

 

‘ஆமா டா நீ கோபமா பேசுனதில அவ முகமே வாடிருச்சு . போ போய் அவள சமாதானப் படுத்து’, என தமிழ் அப்பா சொல்ல,

 

‘சரி அத நான் பாத்துக்கறேன். ராஜி பசிக்குது’, என தமிழ் கேட்க,

 

‘ம் போய் உன் பொண்டாட்டிய கேளு’, என தமிழ் அம்மா சொல்ல,

 

‘ராஜி ப்ளீஸ்’, என தமிழ் கெஞ்ச நிலா தோசையும் சட்னியும் வைத்து எடுத்து கொண்டு வந்து  டைனிங் டேபிளில் வைத்து விட்டு,

‘ஆன்டி, அங்கிள், தமிழ் எல்லாம் வாங்க டிபன் ரெடி ஆயிடுச்சு சாப்டலாம்’, என நிலா கூப்பிட,

 

‘நீ தராட்டி என்ன எனக்கு டிபன் வந்துருச்சு நான் போய் சாப்ட போறேன்’, என சொல்லி தமிழ் சென்று எடுத்து வைத்து சாப்பிட தமிழ் அம்மா, அப்பா, நிலா என அனைவரும் சேர்ந்து சாப்பிட்டனர்.

 

எல்லா வேலைகளையும் முடித்து விட்டு அனைவரும் தூங்க சென்றனர்.

 

தன் இடத்தில் தமிழ் படுத்து கொண்டு நிலாவை சமாதானப் படுத்த அவளை கூப்பிட,

 

‘ஒரு நிமிஷம் தமிழ் இந்தா லைட் ஆஃப் பண்ணிடறேன்’, என சொல்லி நிலா லைட்டை ஆஃப் செய்து விட்டு படுக்க தமிழும் எதுவும் பேசாமல் படுத்துக் கொண்டான்.

 

‘நிலா சாரி உன் மனச காயப் படுத்தனதுக்கு ‘, என தமிழ் தன் மனதுக்குள் சொல்லி கொண்டு அழ,

 

‘தமிழ் நான் என்ன தப்பு செஞ்சேன்னு எனக்கு தெரியல. ஆனா அது எதுவா இருந்தாலும் எனக்கு இவ்ளோ பெரிய தண்டனை குடுக்காதீங்க ப்ளீஸ்’, என நிலா தனக்குள் பேசிக் கொண்டு அழ இருவரும் அப்படியே தூங்கி போனார்கள்.

 

காலையில் எழுந்து இருவரும் தனித் தனியாக கிளம்பி வந்து சாப்பிட்டு விட்டு தனி தனியாக ஆபிஸ்க்கு கிளம்பினர்.

 

‘என்னாச்சு நிலா. கேட்டியா. தமிழ் எதாவது சொன்னாரா’, என நந்தினி கேட்டது தான் தாமதம் நிலா கண்களில் இருந்து கண்ணீர் ஆறாய் வழிந்தது.

 

‘நிலா என்னாச்சு ஏன் இப்ப இப்டி அழுகுற.’, என நந்தினி கேட்க,

 

‘தெரியல நந்தினி தமிழ் என்னை விட்டு பிரிஞ்சு போயிருவாரோன்னு எனக்கு ரொம்ப பயமா இரூக்கு’, என நிலா அழுது கொண்டே சொல்ல,

 

‘நிலா அப்டி எல்லாம் எதுவும் நடக்காது. நான் வேனா உனக்காக தமிழ் சார் கிட்ட பேசவா’, என நந்தினி கேட்க,

 

‘அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். நானே இந்த பிரச்சனை என்னன்னு தெரிஞ்சு கிட்டு அதுக்கு ஒரு முடிவு கட்றேன்’, என நிலா சொல்லி விட்டு வேகமாக தமிழ் ரூமுக்கு சென்றாள்.

 

‘மே ஐ கமின்’, என நிலா கேட்க,

 

‘கமின்’, என தமிழ் சொல்ல உள்ளே வந்தாள் நிலா.

 

‘சொல்லு நிலா என்ன விசயம்’, என தமிழ் நிலாவின் முகத்தை பார்க்காமல் கேட்க,

 

”உங்க கூட கொஞ்சம் பேசனும்’, என நிலா சொல்ல,

 

‘சாரி இப்ப நான் கொஞ்சம் பிசியா இருக்கேன். அப்புறமா பேசலாமே’, என தமிழ் சொல்ல,

 

‘ஆபிஸ்ல பிசியா இருப்பீங்க,  வீட்ல டயர்டா இருப்பீங்க,  கார்ல கூட கூட்டிட்டே போக மாட்டீங்க. அப்ப எப்ப நான் உங்க கூட பேசறது. நீங்களே ஒரு டேட், டைம், ப்ளேஸ் சொல்லிருங்க . நான் அப்ப வந்து உங்க கூட பேசிக்கறேன்’, என நிலா கேட்க,

 

‘சரி நைட் வீட்ல பேசிக்கலாமே’, என தமிழ் சொல்ல,

 

‘ரொம்ப தேங்க்ஸ் அப்பாயின்மெண்ட் குடுத்ததுக்கு’, என சொல்லி விட்டு நிலா அங்கிருந்து வெளியே வந்து நந்தினியோடு சேர்ந்து வேலையை செய்தாள்.

 

வேலை முடிந்ததும் நிலா டூ விலர் எடுத்துக் கொண்டு ஆபிசிலிருந்து கிளம்ப தமிழ் எப்போதும் போல் அவள் பின்னாடியே அவளுக்கு தெரியாமல் காரை ஓட்டிக் கொண்டு சென்றான்.

 

இருவரும் வீட்டுக்கு வந்து பிரஷப் ஆகி விட்டு வர எப்போதும் போல் எல்லாரும் சேர்ந்து காபி குடித்தனர்.

 

தமிழ், நிலா இருவரும் தமிழ் பெற்றோர் முன் சகஜமாக பேசிக் கொண்டனர்.

 

தமிழும், அவன் அப்பாவும் சேர்ந்து டிவி பார்க்க,  தமிழ் அம்மாவும், நிலாவும் சமையலறையில் பேசிக் கொண்டே வேலை பார்த்துக் கொண்டிருந்தனர்.

 

என்ன தான் டிவி பார்த்து கொண்டிருந்தாலும் தமிழ் மனதில் நிலா என்ன கேக்க போகிறாளோ அதற்கு தான் என்ன பதில் சொல்ல போகிறேனோ என ஓடிக் கொண்டிருந்தது.

 

திடீரென யோசனை வர, ‘டாடி நான் கவின் கூட போன்ல பேசிட்டு வந்தரேன்’, என தமிழ் தன் அப்பா விடம் சொல்லி விட்டு வராண்டாவிற்கு வந்து கவினுக்கு போன் செய்தான்.

 

‘சொல்லு டா நிலாவ எப்டி சமாளிக்கறதுன்னு தெரியலையா’, என கவின் கேட்க,

 

‘டேய் எப்டிடா கரெக்டா நான் எதுக்கு போன் பண்ணன்னோ அத அப்டியே சொல்ற’, என தமிழ் ஆச்சர்யமாக கேட்க,

 

‘ஆமா இத கண்டுபிடிக்க நாசா விஞ்ஞானியா வருவாங்க,  இல்ல சிபிசி ஐடி வருவாங்களா. நீ எங்கிட்ட சொன்ன மாதிரி அவ கிட்ட நடந்திருந்தா அடுத்து இந்த சீன் தானப்பா வரும்’, என கவின் சொல்ல,

 

‘டேய் என் வாழ்க்க உனக்கு படம் பாக்கற மாதிரி இருக்கா’, என தமிழ் கேட்க,

 

‘அத விட கொஞ்சம் சுவாரசியமா தான் போகுது’, என கவின் கிண்டல் செய்ய,

 

‘சரி உன் ஹெல்ப்பே எனக்கு வேணாம்’, என சொல்லி விட்டு தமிழ் கோபமாக போனை கட் செய்தான்.

 

நிலா கேட்க போவதுக்கு தமிழ் சொல்ல போகும் பதில் என்ன?

 

தொடரும்…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!