Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

வேள்வி செய்கிறாய் விழியிலே

வேள்வி செய்கிறாய் விழியிலே – 2.2

இன்று.

இதோ இன்று அவர்கள் அம்மா விஜி என்கிற விஜய பார்வதியின் பிறந்த நாள்!

அவர் இறந்து ஏழு வருடங்கள் ஆகி விட்டன!

வைஷு, தன் முதல் குழந்தை  தாரிகாவை வயிற்றில் சுமந்துகொண்டு கொண்டிருந்த சமயம், அந்த வருடம் வரலக்ஷ்மி நோன்பு அன்று பூஜை செய்து விட்டு இரவு உறங்கியவர் தூக்கத்திலேயே ஹார்ட் அட்டாக்கில் இறந்தும் விட்டார்!



Advertisement

இததனைக்கும் அவருக்கு பெரிதாக எந்தவொரு நோயுமே கூட இருந்திருக்கவும்  வில்லை!

வீட்டில் இத்தனை டாக்டர்கள் இருந்தும், அவரைக் காக்க முடியவில்லை!  சுமங்கலியாக இறந்து விட்டார்!

அதன் பின் அவர்களது அப்பா ராமனாதனோ வீடு தங்குவதே இல்லை!

Advertisement

சீனியர் ந்யுரோ சர்ஜன் ஆன அவர் முழுக்க முழுக்க தன் மருத்துவ உலகில் இப்போது பழியாய் கிடக்கிறார்!

Advertisement

பெரும்பாலும் வெளிநாட்டில் அறுவை சிகிச்சை அளிக்க சென்று விடுவார்!

அமெரிக்காவில் டாக்டராக இருக்கும் தன் தங்கை கிரிஜாவும் அவள் கணவன் முரளியுடன் இருப்பார்!

இல்லையென்றால் அவர் மகள் ராகினி மாப்பிள்ளை கண்ணனுடன் பெங்களூரில் இருப்பார்!

Advertisement

எப்போதுமே ரோமிங்கில் தான் இருப்பார்!

வீட்டில் அவர் மனைவி இல்லாத வெறுமையைத் தாங்கிக் கொள்ள முடியாமல்!

ராகவனுக்கு மனைவி குழந்தைகள் என்று இருக்க, அவனுக்கு அவ்வளவாக அவன் அம்மாவின் பிரிவு தாக்க வில்லை!

ஆனால் ரகு தான் பாவம்! அவன் அம்மாவின் செல்ல பிள்ளை!

அம்மா மடியில் படுத்து தூங்குவது, அம்மா சோறு ஊட்டி சாப்பிடுவது அவரிடம் காலேஜ் சேரும் வரை கூட என்று மிகவும் செல்லம் கொஞ்சிக் கொண்டு தான் இருப்பான்!

அவரது பிரிவு அவனுள் எப்போதும் ஒரு அம்மா ஏக்கத்தை நிரந்தரமாகவே வைத்துக்கொண்டு தான் இருக்கிறது!

முப்பதை தொட்டு விட்ட இத்தனை வயதிலும்!

இதோ இன்று.. அவன் பிரிய அம்மாவின் பிறந்த நாளன்று தான் அவன் அம்மாவின் இடத்தில் இருந்து அவனிடம் அன்பு காட்டப் போகிற தேவதையை சந்திக்க போகிறான் ரகு!

மது காலையில் வந்து காண்டீன் உணவுத் தயாரிப்பில் இறங்கி, இதோ ஒருவாறு காலை உணவைக் கொடுத்து முடித்து விட்டாள்!

அவளுக்கு கொஞ்சம் ப்ரேக் கிடைக்க, அவள் ரிசப்சன் அருகே வந்தாள்!

அங்கே கமலா மேடம், அங்கு மாட்டியிருந்த விஜய பார்வதியின் பெரிய சைஸ் போட்டோவுக்கு மாலை அணிவித்து கொண்டிருந்ததை மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்தார்!

மது தன் கையில் இருந்த, அவள் பாட்டி கோர்த்துக் கொடுத்தனுப்பிய  பவள மல்லி மாலையை அந்த படத்துக்கு போடலாமா என்று அவரிடம் கேட்டாள்.

அதைப் பார்த்த கமலா, “மேம்க்கு இந்த பூ ரொம்ப பிடிக்கும், ஆனா இத எப்படி போடுவ? ஆல்ரெடி ஒரு பெரிய மாலை போட்டு இருக்கே!”

“இல்ல இப்படி கழுத்துல நெக்லஸ் மாதிரி வச்சுட்டு ட்ரான்ஸ்பரன்ட் செலோ டேப் போட்டு விடலாம்!”

“சரி செய்!”

மது, தான் சொன்னபடி அதை போட்டு விட்டு, அந்த போட்டோ அருகில் நின்று வேண்டிக் கொண்டாள்!

“மேடம், நான் இன்னிக்கு தான் உங்க ஹாஸ்பிட்டல் காண்டீன் நடத்த ஆரம்பிச்சு இருக்கேன்! நல்ல படியா நடத்த உங்க ஆசிர்வாதம் வேணும்!”

“என் ஆசீர்வாதம் உனக்கு உண்டும்மா எப்போதும்!”  யாரோ ஒரு பெண்மணி ரிசப்சனில் சேரில் அமர்ந்து கொண்டு யாரிடமோ போனில் பேசிக் கொண்டு இருந்தார்!

அது அப்படியே கோயின்சைடாக விஜய பார்வதியே அவளை வாழ்த்துவது போல் இருந்தது  மதுவுக்கு!

அவளுக்கு மட்டுமல்ல அவள் கும்பிடுவதைப் பார்த்துக் கொண்டிருந்த கமலாவுக்கும் கூட!

பின்,  தான் ஒட்டிய மாலை சரியா இருக்குதான்னு பார்க்க, கொஞ்சம் தூரமாக பின்னால் தள்ளி சென்று பார்க்க முயன்றாள் மது!

அப்படியே பின்னால் சென்றவள் யார் மீதோ மோதி விட்டாள்!

“சாரி சாரி!”  என்று தடுமாறிய அவளைக் கீழே விழாமல் பிடித்துக் கொண்டு இருந்தவன் ரகு!

அவனும் போன் பேசிக் கொண்டே வந்ததில் அவளைக் கவனிக்காமல் போகவே மோதிக் கொண்டார்கள் இருவரும்!

அவன் கரம் அவளது இடுப்பைப் பற்றி இருக்க, சட்டென சுதாரித்துக்கொண்டு அவன் கையை மெதுவாக விலக்கி விட்டு “தாங்க்ஸ்” சொல்லி நகர்ந்தாள் மது!

“என்னாச்சு மது?”  என்று கமலா அழைத்த பிறகே அவள் தான் அந்த மது என்று அறிந்து  அவளைப் பார்த்தான்  ரகு!

“குட் மார்னிங்  ரகு!” என்று கமலா விஷ் செய்தவுடன்  தான் அவன் தான் டாக்டர் ரகுநந்தன் என்று அறிந்தாள் மதுவும்!

தன் முன் நின்ற மதுவைப் பார்த்தான் ரகு!

சிம்பிள் ஆன காட்டன் சாரி ! கிரீம் கலர் பேசில் ரெட் கலர் டிசைன் உள்ள சாரி!

காதில் சின்ன வளையங்கள்!

மூக்கில் ரொம்பவும்  சிறிய வைர மூக்குத்தி!

ஒரு கையில் வாட்ச் இன்னொரு கையில் மெல்லிய ப்ரேஸ்லெட்!

விரல்களில் அவன் அம்மா அணிந்திருந்ததைப் போல ஒரு பழைய மாடல் பவள மோதிரம்!

கை விரல் நகங்கள் வெட்டப்பட்டு சுத்தமாக இருந்தன!

கழுத்தில் ஒரு மெல்லிய செயின் அதில் கோர்க்கபட்டிருந்த ஆலிழை கிருஷ்ணர் டாலர்!

இதுவும் அவன் அம்மாக்குப் பிடித்ததே!

காட்டன் சேலைக்கு மாட்சாக அவள் அணிந்து இருந்த நல்ல அடர் சிவப்பு வண்ண பிளவுஸ் அவள் இடையழகை எடுத்துக் காட்டியது!

இடையழகு என்றால் அவள் ஒன்றும் லோ ஹிப்பில் அணிய வில்லை!

அதே சமயம் ரொம்பவும் வன்முறையாக சாரியை ரொம்ப மேலே இழுத்துப் பின் போட்டுக்கவும் இல்லை!

ரொம்ப இயல்பாக, சின்ன மின்னல் போல தெரிந்தது அவள் இடை!

ரகு எந்த பெண்ணையும் இப்படி ஆழ்ந்து பார்த்து ரசித்தது இல்லை! உணர்ச்சி பொங்க பார்த்ததும் இல்லை!

பார்வையில் ரொம்ப கவனம், கண்ணியம் வேண்டும் என்று சொல்லி வளர்க்கப்பட்டவன் அவன்!

நம் டாக்டர் தொழிலுக்கு அது மிகவும் முக்கியம் என்று அவனுக்கு அறிவுரை சொல்லியிருந்தார்கள்!

இல்லையென்றால் பெண் நோயாளிகளுக்கு மருத்துவம் பார்ப்பது கஷ்டம்!

ஆனால் இப்போது மதுவை அவன் அப்படி பார்க்கவில்லை!

ஏதோ அவள் தனக்கு சொந்தமானவள் போல உரிமையுடன் அவளைப் பார்த்தான்!

அங்கு மதுவின் நிலையும்கூட கிட்டத்தட்ட இதே மாதிரி தான்!

அவள் பாட்டி அடிக்கடி சொல்லும், அவளை கட்டிக்க போகும் ராஜகுமாரன் இவன் தான் என்பது போல,

கஷ்டத்தில் இருந்து சின்ட்ரெல்லாவை தூக்கி போக வந்த இளவரசன் இவன் தான்!

அவள் வாழ்வின் டெஸ்டிநேசன்(Destination) இவன் தான் என்பது போல எல்லாம் தோன்றியது மதுவுக்கு!

ஓடிப்போய் அவனைக் கட்டிக் கொண்டு அவன் மார்பில் தலை சாய்ந்து கொள்ள மனம் பரபரத்தது!

ரொம்பவே பிரயத்தனப்பட்டு தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு நின்று கொண்டிருந்தாள் அவளும்!

அடங்கு மது!

இது என்ன இப்படி முதல் முதலா பார்க்கும் ஒரு ஆளைப் போய் இப்படி நினைக்கிற!

அவன் ரேன்ஜ் என்ன! உன் ரேன்ஜ் என்ன!

நீ இருக்கும் நிலைமை என்ன? உனக்கிருக்கும் கடமைகள் எத்தனை?

இவ்வளவு கஷ்டத்திலும் உனக்கு எப்படி இதெல்லாம் தோணுது!

இந்த ரணக்களத்திலும் உனக்கு ஒரு குதூகலம் கேட்குதா? என்று அவள் மனமே அவளை டாமேஜ் செய்துக் கொண்டிருந்தது!

ஆனாலும் அவளால் அவள் பார்வையை அவனை விட்டு திருப்ப முடியவில்லை!

அப்படியே அவனை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்!

ஏய்! ஏய்! அப்படி பார்க்காதேடி! அங்கே ரகுவும் திணறிக்கொண்டிருந்தான்!

“உன் விழி ஈர்ப்பு விசையினிலே அன்பே அன்பே

நான் வந்து விழுந்து விட்டேன் அன்பே”

பாடல் அவனுக்கு நினைவு வந்தது!

விழி  ஈர்ப்பு விசை நிஜம் தானோ?

இவ பார்வை என்னை என்னமோ செய்யுதே!

அப்புறம் அவள் தடுமாறி விழப்போன போது அவன் தாங்கிப் பிடிக்கையில் அவளிடம் இருந்து வந்த அந்த வாசனை?

அது.. அது  அவன் அம்மா வாசனை!

அம்மா வாசனை என்று அவன் நினைப்பது மது போட்டு இருந்த கஸ்தூரி மஞ்சள், கோகுல் சாண்டல் பவுடர் மற்றும் தலைக்கு தேய்த்து குளித்த சீயக்காயும் தான்! கூடவே அவளது சின்ன வியர்வை மணமும்!

கலவையாக அவன் அம்மாவை நினைவுப் படுத்த, அவள் பார்வையோ அவனை முற்றிலும் தடுமாற வைத்தது!

அவளோ அவன் மீது வைத்தப் பார்வையை எடுக்க முடியாமல்,

“ஏய் மது! வெட்கம் கெட்டவளே! அவன் ஏற்கனவே உன் மேல் கொலை காண்டில் இருக்கான் என்று சொன்னார்கள்!

அவன் பிரண்ட விரட்டிட்டு நீ வந்து இருக்கன்னு! இப்போ நீ வேறே அவன இப்படி பார்க்குற! அவன் ஒன்ன ரொம்ப சீப்பா நினைக்க போறான்! அவள் மனம் அறிவுறுத்த மெல்ல மீண்டாள் அவள்!

அவனோ, நம் உயரத்திற்கு சரியாக தான் இருக்கிறாள் என்கிற அளவு நினைத்து விட்டு, உடனே தெளிவானான்!

“அய்யோ நாம என்ன இவள கல்யாணத்திற்கா  பெண் பார்க்கிறோம்? காண்டீன் காண்ட்ராக்ட் தானே கொடுத்து இருக்கோம்!”

சுதாரித்துக் கொண்டு விட்டான் அவனும்!

இரவில் கூட அவனால் அந்த பார்வையை மறக்க முடியவில்லை!

ஷ்.. அப்பா கண்ணா அது! அப்படியே என்னை தின்னுடும் போல!

இன்னும் கொஞ்சம் நேரம் அவளை பார்த்துக் கொண்டு இருந்திருந்தா, நான் என்ன மாதிரி ஆகியிருப்பேனோ!

சரியான மாயக்காரி! வசியக்காரி! இன்னும் அவனுக்கு தெரியாத தமிழ் வார்த்தைகளில் அவளை திட்டிக் கொண்டு இருந்தான் இரவு முழிவதும் தூங்காமல்!

விடிந்து தான் தூங்கினான்!

அங்கோ மதுவும் அப்படி தான் தூக்கம் வராமல் புரண்டாள்!

பின் நெற்றியில் மஞ்சள் அமிர்தாஞ்சனம் தேய்த்துக்கொண்டு தூக்கத்தை வலு கட்டாயமாக வர வைத்தாள்!

இது அவள் அம்மாவிடம் இருந்து ஒட்டிக் கொண்ட பழக்கம்!

“யப்பா இனி அவளைப் பார்ப்பதை தவிர்த்து விடனும்!” என்று அவனும்,

“இனி அவனை பார்க்கவே கூடாது” என்று அவளும் ஒரே மாதிரி முடிவு செய்து விட்டு தூங்கினார்கள்!

லவ் அட் பர்ஸ்ட் சைட் என்பதெல்லாம் உண்மை தான் போல!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!