அவனைப் பார்த்து ஒருக்களித்தவாறு திரும்பி படுத்தவள், தனது விரலால் அவனது முகத்தை அளந்தவாறே பேசினாள். என்னோட சின்ன வயசுல இருந்தே, எனக்கே எனக்குன்னு சொந்தம் கொண்டாட யாரும் இல்ல.
“எனக்கு விவரம் தெரியறதுக்கு முன்னாடியே, என்னோட அப்பாவும் அம்மாவும் என்னை விட்டு போயாச்சு. அதுக்கப்புறம் எனக்கு எல்லாமே பெரியம்மாவும்…., அவங்க குடும்பமும் தான்”.
Advertisement
“எப்படி…, அவங்க பிள்ளைங்கள வளர்த்தாங்களோ, அப்படிதான் என்னையும் வளர்த்தாங்க. அவங்க நல்ல மனசோட என்னை வளர்த்தாலும், எங்களை சுத்தி இருந்த சொந்தபந்தம் எல்லாம், அவங்க என்னோட அம்மா அப்பா இல்லை. நான் அவங்க பொண்ணு இல்லன்னு, சொல்லி சொல்லி அது என் மனசுல ஆழமா பதிஞ்சிடுச்சி”.
“அது என்னையறியாமயே, என் மனசுக்குள்ள பிரிவை கொண்டு வந்துடுச்சு. இவங்க என்னோட அப்பா அம்மா இல்ல, நான் இந்த குடுபத்தை சேர்ந்தவ இல்லைன்ற எண்ணம் எப்பவுமே என் மனசுக்குள்ளேயே ஓடிட்டேயிருக்கும்”.
நானும் பல தடவை ட்ரை பண்ணியிருக்கேன் அவங்களோட மிங்கிலாகனும்னு. ம்கூம்… என்னால முடியல. ” வளர வளர, நான் தனி அப்படின்ற மாதிரியான தோற்றம், என் மனசுல ஸ்ட்ராங்கா பதிஞ்சுடுத்து”.
“பிடிச்சதை அக்காவும் அண்ணனும் சண்டை போட்டு கேட்டு வாங்கறப்ப, என்னால அப்படி எதுவும் கேட்க முடியாம மனசுக்குள்ளேயே , வெம்பி நின்னிருக்கேன் நிறைய தடவை”.
Advertisement
என்னைப் புரிஞ்சு பெரியம்மாவே பார்த்து செஞ்சாதான் உண்டு. அது சாப்பாடா இருந்தாலும், போட்டுக்கற டிரஸா இருந்தாலும் சரி. எதுவா இருந்தாலும், அவங்களா செஞ்சாதான் எனக்கு. என்னோட விருப்பத்தை வெளிய சொல்லவே மாட்டேன்.
மேபி சுத்தியிருந்த சொந்தங்காரங்க சொன்ன வார்த்தைகளால என் மனசுல பிரிவு வந்திருக்கலாம். ஆனால் பெரியம்மாவும் அவங்க குடும்பமும் என்னை நல்லாதான் பார்த்துகிட்டாங்க.
அக்கா என்னை அவங்க பொண்ணு மாதிரி கேர் எடுத்து அவ்வளவு செஞ்சிருக்காங்க. அண்ணா கூட அவங்க கல்யாணத்துக்கு முன்னாடி பாசமாதான் இருந்தாங்க.
ஒருவேளை அவங்க எனக்கு செந்திலை பார்த்து கட்டி வச்சிருந்தா……. மறுக்காம கல்யாணம் பண்ணியிருப்பேன்.
என்னவோ “என் பெரியம்மா அவனுக்கு என்னை கல்யாணம் பண்ணி குடுக்க மாட்டேன்னு உறுதியா இருந்தாங்க”. அந்த சமயத்துல அக்காவும் என்னை இங்க கூட்டிட்டு வந்து, படிக்க வச்சு, வேலைக்கு அனுப்பலைன்னா…….. நினைக்கவே பயமாயிருக்கு.
அப்பவும் அக்கா எனக்காக பார்த்த மாப்பிள்ளைய எல்லாம் கலைச்சு விட்டு தகராறு பண்ணிட்டிருந்தான்.
“தெய்வம் போல நீங்க வந்தீங்க. அவன் கிட்டயிருந்து, என்னை காப்பாத்திறதுக்குனே”.
…………….
“என்ன பார்க்கறீங்க….? நீங்க எனக்கு தாலி கட்டின, அடுத்த செகன்ட்ல இருந்து, நீங்க எனக்கு உரிமையானவர். என்னோட புருஷன். எனக்கே எனக்குன்னு இருக்கற சொந்தம்”.
அதனால தான் “உங்க மேல எனக்கு பொஸசிவ் அதிகம். நமக்கான நேரத்தை மத்தவங்களோட, பகிர்ந்துக்கறதுல எனக்கு விருப்பமில்ல. இப்ப மட்டும் இல்ல, நம்ம வாழ் நாள் முழுக்க நான் அப்படிதான்…..”
அதை என்னால மாத்த முடியாது. சில விஷயங்கள் புத்திக்கு புரிஞ்சாலும் மாத்திக்கறது கஷ்டம். அதுமாதிரிதான் இதுவும்னு நான் நம்பறேன்.
எனக்கு தெரியுது. நான் உங்களை அளவுக்கு மீறி தொந்தரவு குடுக்கறனேன்னு. சில சமயம் எனக்கே தோணும். நான் ரொம்ப பண்றேன்னு.
என்னால மாத்திக்க முடியல. நான் என்ன பண்ணட்டும். “நான் உங்கள கன்னா பின்னான்னு லவ் பண்றேன்”. யெஸ்……. “ஐ லவ் யூ”. இது வெறித்தனமா…. கூட இருக்கலாம். பட், என்னால என்னை சேஞ்ச் பண்ணிக்க முடியும்னு தோணல.
“இத்தனை நாள் அடக்கி வச்சிருந்த என்னோட ஏக்கம், அன்பு, தேடல் எல்லாம் ஒன்னு சேர்ந்து உங்க ரூபத்துல வந்திருக்கிறதா நான் நினைச்சிட்டிருக்கேன்”.
அதை கெடுத்துக்கவும் நான் விரும்பலை. “நான் தப்பா……………?”
அவளது பேச்சினை கேட்டிருந்தவன் “கண்ணின் இமையைக் கூட அசைக்க மறந்து, அவளையே பார்த்திருந்தான். என்ன மாதிரியான கஷ்டங்களை, வலிகளை மனதில் இத்தனை வருடங்கள் பூட்டி வைத்து வேதனைப் பட்டிருக்கிறாள் என அவனுக்கு வருத்தமானது”.
அவனுக்கு தெரிந்து…, “அவள் அவ்வளவு சீக்கிரம் யாரிடமும் நெருங்கி பழகுபவள் இல்லை. இதை இத்தனை வருடங்களில் யாரிடமும் அவள் பகிர்ந்திருக்கவும் மாட்டாள்.
மனைவியின் வலியை உணர்ந்தவனுக்கு அவளை அணைத்து ஆறுதல்படுத்த கைகள் துடித்தது.
அவனது வார்த்தைகள் மட்டும் அவளை குளிர்விக்குமா? ஆறுதல் கொடுக்குமா? அவளது இத்தனை நாள் வலிகளுக்கு, வேதனைகளுக்கு எல்லாம் மருந்தாகுமா? என்பது சந்தேகமே.
அவளுடன் வாழ்ந்து ஒரு ஒரு க்ஷணமும் நான் இருக்கிறேன் உனக்கு, என செயலால் உணர வைக்க வேண்டும் என உறுதி பூண்டு கொண்டான் மனதில். அவர்களின் வாழ்வின் மூலம்தான் அவளை ஆறுதல் படுத்தமுடியும் என நினைத்துக் கொண்டான் மனதில்.
ஆதூரமாக அவளை அணைத்துக் கொண்டவன், “இல்லடா……… பூர்ணிம்மா.. தப்பில்ல…………. நான் தான் உன்னை சரியா புரிஞ்சுக்கல.”
நீ சொன்ன மாதிரி, பின்னாடி நமக்கு பசங்க வந்தாலும், நீ…. நீயாவே இருக்கலாம். உன்னை மாத்திக்கனும்னு அவசியமில்ல. நான் எப்பவும் என் பூரணிக்கு மட்டும்தான், என்று முதுகைத் தடவிக் கொடுத்துக் கொடுத்து அவளை ஆசுவாசப்படுத்தினான் வெகு நேரம் வரை.
அவனிடம் பேசிக்கொண்டிருக்கும்போதே உணர்வு மிகுதியால் கண்ணீர் வழிந்தது.
அவளது முதுகை ஆதுரமாக தடவிக் கொடுத்தவன், அவளது முகத்தை தனது மார்பிலிருந்து பிரித்து, தனது ஒரு கையால் அவளது முகத்தை நிமிர்த்தி, நெற்றி வருடி, புருவத்தை நீவி, கன்னத்தை வருடி விட்டான் காதலாக.
எனக்கு உன்னை மாதிரிலாம் “ஐ லவ் யூன்னு” சொல்ல வராது. என் மனசு முழுக்க நீதான் நிறைஞ்சு இருக்க.
“உன்னை முதல் தடவை போட்டோல பார்த்தப்பவே எனக்கு பிடிச்சிருந்தது. இன்னும் கொஞ்ச நாள் போய், தொழில டெவலப் பண்ணிட்டுதான் கல்யாணம்னு இருந்த என் முடிவு, உன்னை போட்டோல பார்த்ததுமே மாறிடுச்சு”.
“நேர்ல பார்த்ததும் இன்னும் உறுதியா என் மனசுல உட்கார்ந்துட்ட நீ”. உன்கிட்ட பேசும்போது நீ படிச்சவன்னு தெரிஞ்சதும் எனக்கு ஏமாற்றமாயிடுச்சு.
“படிச்ச பொண்ணு வேணாம்னு உறுதியா இருந்தேன் நான். உனக்கும் சில எதிர்பார்ப்புகள் இருக்கும்ல, உங்க வீட்டுல வற்புறுத்தி கட்டி வைக்கறாங்களோன்னு நினைச்சி, அம்மா கிட்ட பேசி கல்யாணம் வேணாம்னு மறுத்திட்டேன்”.
“உன்னை வேணாம்னு மறுத்தாலும் உன் நினைவு என்னை அலைகழிச்சிட்டே தான் இருந்தது. தெய்வாதீனமா….” அந்த சிவனே உன்னை என் கண்ணுல காட்டி, நம்மள சேர்த்து வச்சிட்டாரு”.
“இனி எப்பவும் நீ தனின்ற எண்ணம் உனக்கு வரவே கூடாது. உனக்காக நம்ம குடும்பம் இருக்கு. நான் இருக்கேன். ம்…. சரியா..,, நீ தனி கிடையாதுடா”. சரியா…ம்மா.
“உன்னோட உணர்வுகளை நெஞ்சுலேயே போட்டு மூடி வைக்காம, என்கிட்ட நீ நீயாவே இருக்கனும். சரியாடா………………. இருப்பீங்களா………….?”
அதுக்காக நான் உன்கிட்ட சண்டையெல்லாம் போடமாட்டேன். எப்பவும் சாப்டாவே, அன்பாவே இருப்பேன்னு அர்த்தமில்ல.
நமக்குள்ள சண்டை வரலாம். வாக்குவாதம் வரலாம். ஆனால் “எது வந்தாலும், நாம ஒன்னுதான்ற எண்ணம் உனக்கு எப்பவும் இருக்கனும்”. பருஷன் பொண்டாட்டிகுள்ள சண்டை வரது சகஜம்தான.
“நமக்கு பிடிச்சதை கேட்டு அப்பா, அம்மாவோட சண்டை போடறதில்லையா…..? கூடப் பிறந்தவங்களோட தகராறு வரதில்லையா…….? அவங்களோடலாம் சண்டை போட்டா உடனே நாம பிரிஞ்சிடறோமா…? இல்ல அவங்க நமக்கானவங்களா இல்லாம போயிடறாங்களா….? சண்டை வந்தாலும் நீ எப்பவும் என் பொண்டாட்டி தான், நான் உன் புருஷன்தான், இதுல எப்பவும் மாற்றமே இல்ல”.
அவனது பேச்சில் நிம்மதியடைந்தது அவளது உள்ளம். மது தன்னை திருமணத்திற்கு முன்னமே விரும்பியிருக்கிறான் என்ற வார்த்தையை, அவன் வாயாலேயே சொல்லக்கேட்டு “தேனாய் தித்தித்தது நெஞ்சம் முழுதும்”.
ஹ்ம்ம்….. என தலையசைத்தவள், எக்கி அவனது கண்களில் முத்தமிட்டு, இரண்டு கன்னத்திலும் முத்தமிட்டாள் அன்பாக.
அவளது உதட்டை ஆட்காட்டி விரலால் வருடியவன்….. நாளைக்கு ஊருக்கு கிளம்பனும். தூங்குடா…… என்றான்.
“ஹ்ம்ம்…………., பேச்சு மாறமாட்டீங்களே, இனி என்னோட டைம் ஸ்பென்ட் பண்ணுவீங்க இல்ல, இப்படி வெளியில வருவோமில்ல…..” என்றாள். சிறுகுழந்தையாக
ஹா……. ஹா………… என கலகலவென சத்தம் போட்டு சிரித்தான்.
அவன் சிரிப்பைப் பார்த்து, அவளுக்கும் வெட்கம் வந்தது.
“என்னடா………. அப்படி பார்க்கிற…….?”
“ம்கூம்” என தலையசைத்தவள், “உங்களோட டைம் ஸ்பென்ட் பண்ணனும்னு, எனக்கு ஆசையிருக்காதா…..? காலையில நான் எழுந்துக்கறதுக்கு முன்னமே போயிடறீங்க. நைட் மோஸ்ட்லி பாதி இராத்திரில வரீங்க……”
“ச்ச ச்ச…… எனக்கு உன்னோட பீலிங்ஸ் புரியுதுடா……, எனக்கும் கொஞ்சம் டைம் குடுடா. சின்ன தொழில். இன்னும் ஆரம்பிச்சு ஒரு வருஷம் கூட ஆகல. இதுல சுத்தி கடன் வாங்கி ஆரம்பிச்சிருக்கேன். என் நிலைமைய யோசிச்சு பாருடாம்மா………”
“மத்த தொழில் மாதிரி ஓட்டல் தொழில் இல்ல. நாம நேர்ல இருந்து பார்த்தாதான், எல்லாமே சரியா நடக்கும். எனக்கு சப்போர்ட் பண்ணவோ, ஹெல்ப் பண்ணவோ கூட யாரும் இல்ல”.
எல்லாமே நானேதான் பார்த்துக்கனும். அப்பாவ சொல்லி குத்தம் இல்ல. அவருக்கு அந்த அளவுக்கு விவரமும் கிடையாது. நாம சொல்றதை செய்வார்.
அவரா எல்லாம் எதையும் செய்யமாட்டார். ” தொழில் கொஞ்சம் முன்னேற வரைக்கும், எனக்கு வேலை இப்படிதான் இருக்கும். நீ தான் அட்ஜெஸ் பண்ணிக்கனும்”.
என்னால முடிஞ்சளவு, உனக்காக நேரம் ஒதுக்க ட்ரை பண்றேன். இதோ இந்த மாதிரி எப்பவாவது லீவ்ல நாம வெளில வர ட்ரை பண்ணலாம்.
அன்று இரவு முழுவதும் உல்லாசமாக பொழுதைக் கழித்தவர்கள், மறுநாள் எழுந்து கிளம்பினார்கள். காரிலேயே மைசூர் வரை வந்தவர்கள், அங்கிருந்து டிரெயினைப் பிடித்து இரவு சென்னைக்கு வந்து, அங்கிருந்து பேருந்து மூலம் விடியற்காலையில் முட்லூருக்கு வந்து இறங்கினர்.
காலையில் வந்ததும் குளித்து முடித்து, இருவரும் வேலைக்கு கிளம்பினர். பூர்ணியை கொண்டுபோய் ஸ்கூலில் விட்டவன், ஓட்டலுக்கு சென்றுவிட்டான்.
இவளைப் பார்த்த ‘’நேயா ஹேய் என்ன முகமெல்லாம் தவுசன்ட் வாட்ஸ் பல்ப் போட்ட மாதிரி பிரைட்டா இருக்கு. என்ன விஷயம், எனி குட் நியூஸ்…….. என்று கலாய்த்தாள் கண்களை சிமிட்டி”.
பூர்ணி சிரித்துக் கொண்டே “போடி………” என அவள் தோளில் தட்டிவிட்டு வகுப்பிற்கு சென்றுவிட்டாள்.
சங்கருடன் பானு சரியாக பேசியே இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகியிருந்தது. கேட்கும் கேள்விகளுக்கு சைகையால் பதிலளிப்பாள். இல்லையென்றால் இரண்டொரு வார்த்தைகளில் பதில் சொல்லிவிட்டு நகர்ந்து விடுவாள்.
அவனுக்குதான் மனைவியின் நடத்தையில் தலை சுற்றியது. எத்தனை முறை அவன் இறங்கி வந்து பேசினாலும், அதற்கு எந்த பிரிதிபலிப்பும் இல்லை அவளிடமிருந்து.
இருவருக்கும் வாழ்க்கை ஆரம்பித்த இடத்திற்கே வந்து நின்றது போல இருந்தது. என்ன ஒரு முன்னேற்றம், எப்பொழுதும் போல் சமைத்து டேபிளில் கொண்டு வந்து வைப்பவள். அவனுக்கான லன்சையும் பேக் செய்து வைத்துவிட்டு சென்றுவிடுவாள்.
பானு அன்று தரணியுடன் டீ நகரில் உள்ள பெரிய ஜவுளிக் கடைக்கு வந்திருந்தாள். அவனது அம்மாவின் பிறந்த நாளுக்காக புடவை செலக்ட் செய்வதற்காக அவளை அழைத்து வந்திருந்தான்.
வேலை முடிந்து வீட்டிற்கு செல்வதற்கு முன் இங்கே வந்திருந்தனர், புடவை எடுப்பதற்காக. பானு தனக்கு அந்த அளவு புடவை எடுப்பதில் பரிச்சயம் இல்லை என்று எடுத்து கூறியும், அவளிடம் மறுக்காத வகையில் பேசி, உதவி என்று கேட்டு அழைத்து வந்திருந்தான் தரணி.
வேலையில் அவளுக்கு அவன் பல முறை உதவியிருந்ததால், அழுத்தி மறுக்கவும் மனம் வராமல் கூட வந்திருந்தாள்.
அவனது அம்மாவுக்கு புடவை எடுத்தவன், இன்னொரு புடவையையும் அவளை செலக்ட் செய்ய வைத்து, அவளுக்கே… கிப்டாக கொடுத்தான்.
நீங்க எனக்கு இவ்வளவு தூரம் வந்து செலக்ட் பண்ணி கொடுத்திருக்கீங்க. அதுக்காக என கூறி அவளுக்கு பிரசென்ட் செய்தான்.
பானு வாங்காமல் மறுத்து பேசியும், அவன் விடாமல், அதையும் இதையும் பேசி கட்டாயப்படுத்தி அவளை வாங்க வைத்திருந்தான்.
அவளுக்கு அந்த புடவையை வாங்க விருப்பமேயில்லை என்றாலும், அவனிடம் இருந்து தப்பித்தால் போதும் என வாங்கிக் கொண்டு கிளம்பிவிட்டாள் வீட்டிற்கு.
அவனே அவளை ட்ராப் செய்கிறேன் என கூறியும், மறுத்து ஆட்டோ பிடித்து வீட்டிற்கு சென்றுவிட்டாள்.
சில நாட்களாகவே அவன் தொல்லை தாங்க முடியவில்லை. வாட்சப்பில் காலையில் எழுந்ததும் குட்மார்னிங்ல ஆரம்பித்து, நைட் குட்நைட் என மெசேஜ் அனுப்பும் அளவு அவனது இம்சை அதிகரித்திருந்தது.
உண்மையிலேயே அவளுக்கு குழப்பமாக இருந்தது. அவனது பேச்சிலோ, நடத்தையிலோ, இதுவரை எந்த அநாகரிகமும், அவள் உணரவில்லை. எல்லாம் பொதுவாகத்தான் இருக்கும். சில சமயம் அவனது பேச்சில்…, அதிக உரிமை எடுப்பது போல் இருக்கும்.
அவளுக்கே தர்மசங்கடமாக உணர்ந்தாள். தவறாக ஏதும் இல்லையென்றாலும், ஏதோ உள்ளுணர்வு… அவளை எச்சரித்துக் கொண்டே இருந்தது.
இவனிடமிருந்து தள்ளியிருக்க வேண்டும் என அவள் நினைத்தாலும்…, அதற்கு வாய்ப்பில்லாமல் போனது. அவனுக்கு கீழ் அவள் வேலை செய்கிறாள். வேலை நிமித்தமாக, அவனிடம் பேச வேண்டியிருக்கும்.
இன்று அவன் அவளுக்கு புடவை பிரசென்ட் பண்ணது அவளுக்கு எரிச்சலை உண்டு பண்ணியிருந்தது. வேண்டாம் என மறுத்தும் தன்னை கட்டாயப்படுத்தி வாங்க வைத்ததை எண்ணி எரிச்சல் மூண்டது மனதில். இதுக்கான பணத்தை திருப்பி கொடுத்திட வேண்டும் என முடிவு செய்து கொண்டாள் மனதில். அதன் பிறகுதான் உறுத்தல் சரியானது.
அடுத்த நாள் அவனிடம் சேலைக்கான பணத்தை நீட்டிவளிடம் வாங்காமல், அவளை நிமிர்ந்து பார்த்தான்.
“நேத்து, நீங்க எடுத்து கொடுத்த சேலைக்கான பணம் ஸார்”.
“நீங்க அசிங்கப்படுத்தறீங்க பானு. நான் அதை உங்களுக்கு ஆசையா பிரசென்ட் பண்ணது. அதுக்கு திரும்ப பணம் கொடுத்து அசிங்கப்படுத்துவீங்களா……..? என்னை”.
“ஸாரி ஸார், ஆசையா யார் புடவை எடுத்து கொடுத்தாலும் வாங்கிக்க முடியுமா………..? எனக்கு ஆசையா எடுத்து தர, என் ஹஸ்பன்ட் இருக்கார். பாசமா எடுத்து தர அண்ணன் இருக்காங்க”.
“தெரியாதவங்க கிட்டயிருந்து புடவை எல்லாம் அன்பளிப்பா வாங்கிக்க முடியாது. எனக்கு அதுல உடன்பாடு இல்ல. ப்ளீஸ் இந்த பணத்தை மறுக்காம நீங்க வாங்கிக்கோங்க”.
எனக்கு நீங்க வேலையில நிறைய ஹெல்ப் பண்ணியிருக்கீங்க, அதுக்காக தான், நீங்க கேட்ட போது நான் மறுக்காம வந்து, உங்க அம்மாக்கு சேரி செலக்ட் பண்ணேன்.
“நான் உங்களுக்கு தெரியாதவனா…..?”
“ப்ளீஸ் ஸார்….. இதுல ஆர்க்யூ பண்ண வேணாமே…… பணத்தை வாங்கிக்கோங்க…” என அவன் டேபிளில் பணத்தை வைத்துவிட்டு, வந்து அவளிடத்தில் அமர்ந்துவிட்டாள்.
அவளை முறைத்துப் பார்த்தவன் பணத்தை எடுத்து ஜோப்பியில் சொருகிக்கொண்டான்.