Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

66. அதி அதிரன் - இப்படிக்கு

இப்படிக்கு, – 02

இப்படிக்கு,

அத்தியாயம் – 02



Advertisement

“சீக்கிரம் அதக் கொண்டு போய் அங்க வைங்க..நீங்கெல்லாரும் இங்க வாங்க..” வேலையாட்கள் இதழ்கள் நிரம்பிய புன்னகையுடன்,அங்குமிங்கும் போகச் சொல்லி கட்டளையிட்டவாறு,வேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தார்,பரிமளா.

கால்வலியை கூட பொருட்படுத்தாமல்,அங்குமிங்கும் அலைந்தவரை இழுத்துப் பிடித்துக் கொண்டு வந்து,அமர வைத்த கணவரின் முகத்தில்,கண்டிப்பு பரவியிருந்தது.

Advertisement

Advertisement

“என்னங்க..? விடுங்க வேல இருக்குல..” கணவரின் பிடியில் இருந்து விலகப் பார்த்தவரின்,தோற்பட்டையில் கரத்தை அழுந்தப் பதித்தவாறு அவரும் அருகே அமர்ந்து விட,உறுத்து விழித்தார்,கணவரை.

“உனக்கு ஒரு தடவ சொன்னா புரியாதா பாரு..? இப்போ தான் கால் வலி கொஞ்சம் கொறஞ்சு இருக்கு..அதுக்கு இடையில ஆடியோடி, திரும்ப இழுத்து விட்டுக்க போறியா..?” காதலுடன் அதட்டினார்,மனைவியை.

Advertisement

அத்தனை காதல் மனைவியின் மீது.வீட்டினரை எதிர்த்து அவரை கரம் பிடித்த போது எத்தனை காதல் கொண்டிருந்தாரோ,அந்தக் காதலில் இது நாள் வரை துளி மாற்றமும் வந்ததில்லை.

“நம்ம வீட்டு நிச்சயதார்த்தம்னா நாம தான இழுத்துப் போட்டு வேல செய்யனும்..வேலக்கி ஆளுங்க இருக்காங்கன்னு அக்கடான்னு ஓரமா உக்காந்து இருந்தா சரியா வருமா..?” நொடித்துக் கொண்டார்,அவர்.

“இவ்ளோ ஆளுங்கள கூப்டு இருக்குறதே நீ ஸ்ட்ரெய்ன் பண்ணிக்காம ரெஸ்ட் எடுக்கனும்..அதுக்காக தான்..நீ என்னன்னா அத கேட்டுக்காம அலஞ்சு திரிர..ராத்திர முழுக்க கால்வலின்னு யாரு அவதிப் படுவா..?”

“ஏன்..? நீங்க தைலம் தேச்சு விட மாட்டீங்களா என்ன..?” அவர் விழிகளில்,அத்தனை காதல்.

“காலம் பூரா தைலம் தேச்சு விட நா ரெடி தான்..ஆனா,அதுக்குன்னு நீ கால்வலிய இழுத்து விட்டுக்கனுமா சொல்லு..” அவர் கடிந்து கொள்ளும் போதே,தொண்டையைச் செருமியவாறு அவ்விடம் வந்து சேர்ந்தாள்,நித்யா.

“கெழட்டு வயசாகப் போகுது..இன்னும் உங்க ரொமான்ஸ் தான் அப்டியே இருக்கு..மிடில டா..” போலியான அங்கலாய்ப்புடன் வந்த மகளை,முறைப்பாய் பார்த்தார்,பரிமளா.

“உன் புருஷன உன்னக் கொஞ்சலன்னு இங்க கண்ணு வக்காதடி..” அவர் மகளை கலாய்த்திட,”அத்த!” என்று அதட்டியவாறு வந்தமர்ந்தான்,பிரகாஷ்.

பரிமளாவின் அண்ணன்,மகன்.சொந்தம் விட்டுப் போகக் கூடாது என்பதற்காகவும்,அவனின் குண நலனுக்காகவும்,அவனுக்கு வேறிடங்கள் பார்த்திடும் முன்னமே,மகளுக்கு அவனை கேட்டிருந்தார்.

பிரகாஷின் தாய் தந்தையருக்குமே,மறுக்க காரணம் இல்லை என்பதால்,நித்யாவுக்கு திருமணம் செய்து வைத்திருக்க,இப்போது அவர்களுக்கு மூன்று வயதில் மகளும் இருக்கிறாள்.

“வாங்க சார்! அதிசயமா இருக்கு வீட்டுப்பக்கம் வந்து இருக்குறது..?இப்போ தான் இந்தப் பக்கம் வர்ரதுக்கு வழி தெரிஞ்சுதோ..?” நெடுநாள் கழித்து,அவனின் வருகை இருக்க,அதை கண்டித்தார்,அவர்.

“பிஸி அத்த” அவன் கூறும் முன்பாகவே,எழுந்து கொண்டு சமயலறைக்கு நுழைந்தவரை, தலையில் அடித்துக் கொள்ளாத குறையாய் பார்த்தான்,பிரகாஷ்.

“நா காஃபி கேக்க முன்னாடியே கெளம்பிர்ராங்களே மாமா!” சடைத்தவனை சிறு புன்னகையுடன் பார்த்தார்,பிரசாத்.மனைவியின் குணம்,அவருக்கு அத்துப்படியே.

“அவ அப்டித்தான்னு தெரியும்ல..”

“ஆமா,எங்க மாப்ள பையன்..? வந்ததுல இருந்து ஆள காணோம்..நிச்சயதார்த்தம்னு மறந்துருச்சா அவனுக்கு..” நித்யா தம்பியைத் தேடிட,அவளின் குரலில் மெல்ல புன்னகைத்தவாறே கீழிறங்கி வந்தான்,ஆகாஷ்.

ஆறடி உயரமும் அதற்கு தோதான,கட்டுமஸ்தான தேகக் கட்டும்,அவனுக்கு ஆளுமையை வாரியிறைத்தன.நேர்தத்தியாய் வெட்டிப்பட்டிருந்த,அலையலையான கேசம்,அவனின் நடைக்கேற்ப கொஞ்சமாய் அசைந்தாடின.திராவிட நிறத்தில் இருந்தவனிடம்,அத்தனை கம்பீரம் நிரம்பி வழிந்தது.

“என்னடா மாப்ள..நிச்சயம்னதும் ஆளயே காணோம்..அதுவும் இல்லாம,யாழினி கூட அடிக்கடி வெளில போறதா கேள்வி பட்டேன்..” அவள் நக்கலடிக்க,தந்தையைக் கண்ணால் காட்டி முறைத்தான்,அவன்.

“அக்கா!”,இதழசைத்து எச்சரித்தவனின் முகம் வேறு இலேசாக சிவந்து போயிருக்க,அசடு வழியும் புன்னகையுடன் தந்தையைப் பார்த்திட,அவரின் இதழ்களில் விரிந்த புன்னகை.

மகனின் முகத்தில் இருந்த நிறைவும் பொலிவும்,அவர் எடுத்த முடிவு சரி என்று அவருக்கு கூறுவது போலவே தோன்றிட,நிம்மதியாய் உணர்ந்தது மனம்.

“டேய்,கல்யாணமே ஆகப் போகுது..இன்னும் அப்பாவுக்கு பயந்து கிட்டு இருக்க..அதுவும் கட்டிக்கப் போற பொண்ணு கூட வெளில போறதுக்கும் அப்பா கிட்ட பர்மிஷன் கேக்கனுமா என்ன..? அப்பா பாருங்கப்பா இவன!” விடாது,அவள் தம்பியை சீண்டிட,அவனுக்கோ எப்படி சமாளிப்பதென்றே தெரியவில்லை.

இயல்பிலேயே மென்மையும் அமைதியும் கொண்டவனிடம் நாணம் வேறு குடிபுகுந்திட,அக்காளை முறைத்தானே தவிர,எதுவும் பேசவில்லை.

“மச்சான்,உங்கக்கா இவ்ளோ பேசறா..? நீங்க என்னன்னா எதுவும் சொல்லாம அமைதியா இருக்கீங்க..? சும்மா வாய மூடுன்னு ஒரு அதட்டல தான் போட்றது..”

“கட்டுன புருஷன் நீங்களே பம்மி கிட்டு இருக்கும் போது நா எப்டி மாமா..?” அவன் பிரகாஷை வாரிட,நித்யாவோ நமுட்டுச் சிரிப்பு சிரித்தாள்.

“தேவயா உங்களுக்கு..?” அவள் கணவனுக்கு பழிப்புக் காட்ட,காஃபியை கொண்டு வந்து மருமகனிடம் நீட்டி விட்டு,கணவரின் பக்கத்தில் அமர்ந்து கொண்டார்,பரிமளா.

இரு ஜோடிகளையும் கண்ட ஆகாஷின் மனதிலோ,தானும் யாழினியும் இது போன்றதோர் அழகிய வாழ்வை வாழ வேண்டும் என்கின்ற எண்ணமே,வட்டமடித்தது.

               ●●●●●●●●

“இது தான் என்னோட பியான்ஸே,பேரு ராகவ்!”பக்கத்தில் இருந்தவனின் கையோடு கை கோர்த்து,முன்னிருந்தவனிடம் அறிமுகப் படுத்த,அவனின் முகமோ எந்த வித உணர்வையும்,வெளிப்படுத்தாமல் நிச்சலமாய் இருந்தது.

“காங்கிராட்ஸ்!” சிறு புன்னகையுமின்றி,வாழ்த்துச் சொல்லிட,”இதுக்கு விஷ் பண்ணாமலே இருந்து இருக்கலாம்” என்கின்ற எண்ணம் தான்,ராகவ்வின் மனதில்.

“இன்னும் ரெண்டு மாசத்துல எங்களுக்கு கல்யாணம்” அவளோ இதழ் பிரித்துச் சொன்ன போதிலும்,அவன் எதிர்வினை ஏதுமின்றி இருந்திட,அவளுக்குத் தான் சப்பென்று ஆனது.

அவனிடம் கோபத்தை எதிர்பார்க்காவிடினும்,சிறு மாறுதலையேனும்,அவள் மனம் எதிர்ப்பார்த்து,சத்தியமான உண்மை.அவன் எதிர்ப்பார்ப்புக்களுக்கு,அப்பாற்பட்டவன் என்கின்ற உண்மை அவளுக்கு புரிந்திருக்கும் சாத்தியமில்லை.

“கல்யாணத்துக்கு சொல்றேன் கண்டிப்பா வந்துருங்க..நீங்க வர்லன்னா என் கல்யாணம் நடக்காது..” அவள் நடிப்பை பிழிந்திட,அவனோ மடிக்கணினியின் திரையில் இருந்து,விழிகளை அகற்றிடாமலே,”ஷ்யூர்!” என்றிட,ராகவ்வுக்கோ இவன் என்ன ரகம் என்றே தோன்றிற்று.

“கண்டிப்பா வருவீங்க தான..?” மேசையில் கிடந்த பேபர் வெயிட்டை உருட்டி,விழிகளில் நயனம் கோர்த்து அவள் வினவிய போதும்,விழி நிமிர்த்தினானில்லை,கல்நெஞ்சக்காரன்.

“வந்த கெஸ்டுக்கு மரியாத தர மாட்டீங்களா சார்..?” அவள் கேட்கும் போதே,இரு குளிர் பான குவளைகளுடன் அனுமதி கேட்டவாறு,உள்ளே நுழைந்தான்,சிற்றூழியன் ஒருவன்.

சிற்றூழியனிடம் இருந்து ட்ரேயை வாங்கி,அவனே இருவரிடமும் நீட்ட,ராகவ்வின் பார்வையோ பக்கத்தில் இருந்தவளைத் தான்,தழுவியது.

அவளுக்கோ,அவனின் முகம் பார்த்திடவே,முடியவில்லை.அவள் கேட்ட கேள்விக்கு அவன் செயல்,கன்னத்தில் அறைந்தது போல் இருந்தது.

அவனைப் பார்த்தவாறே,அவள் காஃபியை பருகிட,அவனோ அலைபேசியை எடுத்துக் கொண்டு சற்றுத் தள்ளி சென்று, ஏதோ கதைக்கலானான்.

புரிந்து கொள்ள முடியாத புதிர் அவன்.அவனை விட புதிர் போட்டு தலையைப் பிய்த்துக் கொள்ள வைத்திடும்,அவனின் நடத்தைகள்.

அடங்காதவன் தான்.திமிர் பிடித்தவன் தான்.அழுத்தக்காரன் தான்.ஆனால்,அவனிடத்தில் தானே,அவள் காதலுற்றது.முரணானவன்,அவளை ஈர்த்திருக்க,அவளுமே முழுதாய் அவன் வசம் வீழ்ந்து இருந்தாள்.

சற்று நேரம் கழித்து,அவளை வெளியே இழுத்துக் கொண்டு வந்த ராகவ்வோ,காரித் துப்பாத குறையாய்,அவளை முறைத்தான்.

“எதுக்குடி இப்டி இருக்க..? அந்தாளு உன்ன ஒரு மனுஷியாவே மதிக்கல..நீ என்னன்னா வழியப் போய்..அறிவிருக்காடி..?” காட்டுக்கதல்லாய் எகிறியவனுக்கு,வெறும் தோள் குலுக்கலே அவள் பதிலாய் இருந்தது.

அவனை வெறுப்பேற்றவென்று,மாமன் மகனை மணாளன் என்று அழைத்துக் கொண்டு வந்திருக்க,அவளுக்கு தான் அவனின் செயலில் மூக்குடைபட்டு போனது.

               ●●●●●●●

வாசுவின் கதை..

அது என்ன சத்தியம்னு,நா அப்றமா சொல்றேன்!

அதுக்கு முன்னாடி பாக்க வேண்டியத பாத்துட்டு வர்லாமே..இட் வீல் பீ ஈஸி..

காலேஜ் டைம்ல எனக்கு ஒரு ஃப்ரெண்டு இருந்தான்..அவன் பேரு..அது தேவயில்லன்னு நெனக்கிறேன்..சும்மா,எதுக்கு கதக்குள்ள கேரக்டர இழுத்து விடனும்..?

ஹ்ம்ம்ம்ம்!

அவ ஸ்கூல் டைம்ல இருந்து,ஒரு பொண்ண லவ் பண்ணான்..காலேஜ் டைம்ல கூட,அவங்க லவ் அப்டியே கன்டின்யூ ஆச்சு..அப்றமா,ரெண்டு வீட்லயும் பேச,அவங்களுக்கும் சம்மதம்..பட்,அவங்க உறுதி எதுவும் கொடுக்கல..

அந்த பொண்ணோட,அப்பா அகைன்ஸ்டா இல்லன்னாலும்,அவரு முழு மனசா ஒத்துக்கல..

அவரு சம்மதத்துக்காக தான் வெயிட்டிங்க்னு சொன்னான்..

கூடிய சீக்ரம்,அவரும் ஒத்துப்பாரு..கடவுள் கிட்ட வேண்டிக்கோடான்னு,என் கிட்ட அடிக்கடி சொல்லி கிட்டே இருப்பான்..

ஒரு நாள் பாத்தா,அவனோட அம்மா காலைல ஃபோன் பண்ணாங்க..அடுத்த பத்து நிமிஷத்துல,நா ஹாஸ்பிடல்ல ஐசியூ முன்னாடி நின்னுட்டு இருப்பேன்னு,அவங்கம்மா ஃபோன் பண்ணும் போது கூட,எனக்கு தெரியாது..

சூசைட் அட்டம்ப்டாம்!

அவன் தான்,கைய அறுத்து கிட்டு இருக்கான்..பக்கத்துல ஒரு லெட்டர் வேற இருந்துச்சுன்னு அவங்கம்மா அப்டி ஒரு அழுக..

என்னால,நம்பவே முடில..நேத்து வர நல்லா தான இருந்தான்..தீடிர்னு என்னாச்சு அவனுக்குன்னு ஒரே யோசன..சத்தியமா அந்த செகண்ட் என்னால எதயும் நம்ப முடில..

ட்ரீட்மண்ட் பண்ணாங்க..பட் ஹெவி ப்ளாட் லாஸ்..காப்பாத்த முடிலன்னு டாக்டர்ஸ் கைய விரிக்க,அப்டியே நா இடிஞ்சி பொய்ட்டேன்..

அழக் கூட முடியல என்னால..அழக் கூட மறந்து தான்,அங்க நின்னுட்டு இருந்தேன்னு சொல்லனும்…

பத்து நாள் கடந்து போச்சு..அவன் இல்லங்குறது என்னால நம்பவே முடில..அவன எனக்கு ரொம்ப புடிக்கும்..என்ன ரொம்ப புரிஞ்சு நடந்துப்பான் அவன்..

அப்போ தான் தெரிய வந்தது,அவன் சூசைட் பண்ணக் காரணமே,ப்ரேக் அப் தான்னு..சந்த்ரு சொன்னதும் என்னால நம்பவே முடில..

அப்போ தான் ஒரு விஷயம் க்ளிக் ஆச்சு..அவன் லவ் பண்ண பொண்ணு,அவனோட எறப்புக்கே வர்லன்னு..

அது ஒரு மாதிரியா என் மனசுல பதிஞ்சு போச்சு..

அப்றம் தான்,தெரிய வந்தது,அந்த பொண்ணுக்கு அவங்க வீட்ல வேற மாப்ள பாத்துட்டாங்களாம்..அவ அப்பாவுக்கு புடிக்கலன்னு இவளும் ப்ரேக் அப் பண்ணிட்டான்னு..

வீட்ட எதிர்க்க முடியலன்னா என்ன டேஷுக்கு லவ் பண்ணனும்..? அப்டி தைரியம் இல்லன்னா,வீட்ல காட்டுறவனுக்கு கழுத்த நீட்டிட்டு இருக்க வேண்டியது தான..

அவ்ளோ,கோவம் எனக்கு..சத்தியமா,அந்தப் பொண்ணு பக்கம் நியாயம் இருந்தாலுமே,அது பக்கம் நின்னு நா யோசிச்சு இருப்பேனான்னு என்னால சொல்ல முடியாது..

ஏன்னா,நா தொலச்சுட்டு நின்னது என்னோட,என் ஃப்ரெண்ட..என்ன தான் இருந்தாலும்,அவன் உசுரு போயிருச்சுல..அது மட்டுந்தான்,என் மைன்ட்ல இருந்தது..

இந்தக் கருமம் புடிச்ச காதல் மட்டும் வர்லன்னா,அவன் உசுரோட இருந்து இருப்பான்ல…

அப்டிங்குற எண்ணம் மனசுல,ஆழமா பதிஞ்சு போச்சு..!

அந்தப் பொண்ணுக்கு என்ன சிட்டுவேஷனோன்னு சந்த்ரு சொன்னதயெல்லாம் என்னால,நம்ப முடில..விசாரிச்சு பாத்தப்போவும்,அவ விருப்பத்தோட தான் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டு இருக்கான்னு கன்ஃபார்மா தெரிய வர,எனக்கு அவ்ளோ கோவம்..அவ மேல மட்டுல்ல,இந்தக் காதல் மேல..

அதுவும்,பொண்ணுங்கன்னாலே கெட்டவங்கன்னு ஒரு தாட் எனக்குள்ள உருவாக,அந்த இன்சிடன்ட் தான் காரணமா இருந்து இருக்கனும்..

அப்டியே இருக்குறப்போ தான்,என்னோட சொந்தக்கார அண்ணன் ஒருத்தரோட கல்யாணத்துல,மணமேடைல பொண்ணு கல்யாணத்த நிறுத்திட்டு,எழுந்து போச்சு..

எனக்குள்ள முழுசா,பொண்ணுங்கன்னாலே சுயநலவாதிங்க..கெட்டவங்கன்னு ஒரு எண்ணம் வர,இந்த ரெண்டும் தாராளமா போதுமா இருந்தது..

அதுவும்,தெனம் தெனம் காலேஜ் என் பக்கத்துல இருக்குற காலி சீட்ட பாக்கும் போது வெறியாகும்..

ரொம்பவே கஷ்டப்பட்டேன் அவன் இல்லாம…அவனோட எறப்பு,என்ன அதிகமா பாதிச்சுதுன்னு சொல்லலாம்..

எந்தப் பொண்ணும் என் லைஃப்ல இல்லன்னு,உறுதியான முடிவோட இருந்தேன்..அதுவும் இந்தக் காதல்னா..சுத்தமா எனக்கு நம்பிக்க இருக்கவே இல்ல..

மகளிர் மீதும் கொஞ்சமும் நல்லபிப்பாரயம் வர வாய்ப்பு இல்லை…காதல் மீதும் துளியும் நன்னம்பிக்கை உண்டாக சந்தர்ப்பமும் இல்லை..இனி எந்தப் பெண்ணிற்கும் என் வாழ்வில் இடமும் இல்லை..

என்று,திடமாய் உறுதி பூண்டிருந்த என் இதயத்தில் தான்,அவள் மீதான காதல் வேர் பிடித்து உயிர் பற்றியது.

தொடரும்.

🖋️அதி..!

2026.05.13

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!