Skip to content
Post Views: 344
இப்படிக்கு,
அத்தியாயம் – 01
Advertisement
மித்ராவின் கதை
ஒரு நடுத்தர அளவு வீடுப்பா!
Advertisement
பாக்கறதுக்கு ஏதோ பரவாலன்னு தான் தோணும்..
Advertisement
என்ன,வைட் கலர் பெயின்ட வெளிச்சுவரு பூரா பூசி விட்ருக்குறதால,ஆங்காங்க படிஞ்சு இருக்குற மண் கற,பாத்ததுமே கவனத்த களவாடத் தான் செய்யுது..
லைக் லவ் அட் ஃபர்ஸ்ட் சைட்!
Advertisement
என்ன பண்றது..?
வெள்ள பெயிட்ன் அடிக்காதீங்கன்னு எங்க மாதாஜி கிட்ட படிச்சு படிச்சு சொன்னேன்..கால்ல விழாத கொறயா கெஞ்சுனேன்..அவங்க கேட்டா தான..
ப்ளேக் கலர் டைல் ஃபினிஷிங் ஓட,வைட் பெய்ன்ட் தான் அடிப்பேன்னு ஒத்தக்கால்ல நின்னாங்க..
என்ன பெத்த ஒத்தரோசாவுக்கு நா கொடுத்த கொடச்சல யோசிச்சு பாக்கும் போது,எனக்குள்ள சடன்னா ஒரு கில்டி ஃபீல் உண்டாயிருச்சு..
அப்றம் சரி அவங்க இஷ்டத்துக்கு பண்ணட்டும்னு வாய மூடிகிட்டேன்..
என்ன தான்,இருந்தாலும் இதுக்கெல்லாம் காசு செலவழிக்கப் போறது அவங்களும் அவங்க புருஷனும் தான..ஐ மீன் மை டேடியும் தான..
அதனால கம்முன்னு இருந்தேன்னு வச்சிக்கோங்களேன்!
சரி,கொசுவத்தி சுருள ரோல் பண்ணுறது விட்டுட்டு நாம காட்சிக்கு வர்லாம்ங்க..ரைட்!
அந்த வீடு ரெண்டு மாடி..ரெண்டாவது மாடில ரைட் சைட் கார்னர் ஒரு நடுத்தர அளவு ரூம் இருக்கு..அந்த ரூம்ல தான் கட்டில்ல படுத்து கால ஆட்டிகிட்டே,ஃபோன் பாத்து கிட்டு இருக்கா ஒருத்தி!
அந்த ஒருத்தி வேற யாருமில்ல நானே தான்!
எனக்கு ஒரு பேரு இருக்கும்னு நீங்க நெனக்கிறது தோணுது..அதான் திவ்யா..டைட்டில்லே இருக்கே!
ஆரம்பிக்க முன்னாடி ஒரே ஒரு விஷயம் பா!
எங்க சோகக் கதய உங்க கிட்ட சொல்ல நாங்க வெயிட் பண்ணிகிட்டு இருக்கோம்..
இப்படிக்கு, ன்னு இருக்கு..இப்படிக்கு யார்னு தோணனுமே..
நாங்க கத சொல்றோம்..யாரு காதல் பெஸ்ட்னு தோணுதோ,அவங்க நேம போட்டுக்கலாம்..
பேச்சுத் தமிழ் உரை நடைத் தமிழ் ரெண்டுலயும் எங்க கத வரும்..ஸோ அட்ஜஸ்ட் கரோ!
இப்போ காட்சிக்கு வர்லாம்!
எனக்கு இப்போ இருபத்தஞ்சு வயசு ஆகுது..இன்னும் கல்யாணம் அமஞ்ச பாடில்ல..அமையல்லன்னு சொல்றத விட நா அமைய விடலன்னு சொல்றது தான் பொருத்தம்..வர்ர வரன எல்லாம் நொட்ட சொட்ட சொல்லி தட்டி விட்டா,எங்க கல்யாணம் நடக்கும்..?
அதுவும் இல்லாம,தரகர் அப்பா கிட்ட கொடுத்து விட்ட,ஃபோட்டோ ஒன்ன கூட நா பாத்ததே இல்ல..அப்பா என் ரூம் டேபிள்ள,”பாரும்மா” ன்னு வச்சிட்டு போவாரு..
நானும் சமத்துப் பொண்ணா,”சரிப்பா,அப்றம் பாக்கறேன்னு” சொல்லி பாக்காமலே வேணாம்னு சொல்லிருவேன்..
இப்போவும்,ஒரு மாப்ளய நா வேணாம்னு சொன்னேன்னு எங்கம்மா கீழ இருந்து என்ன கிழி கிழின்னு கிழிச்சிகிட்டு இருக்காங்க..
அது கேட்டும் கேக்காத மாதிரி,நானும் ஃபோன நோண்டி கிட்டு இருக்கேன்..மனசு பூரா அடச்சிப் போட்ட மாதிரி ஃபீல் ஆகுது..
அப்டியே,ஃபோன தூக்கி கட்டில்ல போட்டுட்டு விட்டத்த பாத்த மாதிரி கை ரெண்டயும் கோர்த்து நெஞ்சுல வச்சு படுத்துக்குறேன்..
என்னை அறியாமல்,என் இதழ்கள் பிளந்திட,ஆழ்ந்த நெடுமூச்சொன்று வெளிப்படுகிறது.நினைவுகளில் பிடியில் மனம் வலிக்க,ஒன்றிப் போவது போல் விழிகளிலும் துளிர்க்கிறது,ஈரம்.
அந்தந்த வயசுல அது அது சரியா நடக்கனும்னு சொல்லுவாங்க..அது உண்ம தான்..அந்தந்த வயசுல அது அது நடக்காம தள்ளிப் போக தடங்கல் வர்ரப்போ உண்டாகுற வலி கொடும தான்..
ஆனா,அந்த தடங்கலா நாமளே இருப்போம் பாருங்க! அப்போ வர்ர வலி இருக்கே,அது ரொம்ப ரொம்ப கொடுமங்க..
புன்னகையில் தோய்ந்து போய்,மௌனத்தில் உறங்கிக் கொள்ளும்,வார்த்தைகள் வார்த்தெடுப்பினும், விவரிக்க முடியா,வலி அது.
எனக்கும் ஆச இருக்கு..மத்த பொண்ணுங்க,என்னோட ஃப்ரெண்ட்ஸ்,ஏன் சொந்தத்துல இருக்குற பொண்ணுங்க எல்லாரும் இப்போ புள்ள குட்டியோட இருக்காங்க..அதப் பாக்கும் போது,எனக்கும் இயல்பா ஆச வருது..
ஆனா,அது எதுவும் நிச்சயம் இல்லன்னு சட்டுன்னு தோணும் பாருங்க..ஒரு மாதிரி,செத்துர்லாம் போல தோணும்..
அது கூட பரவாயில்லை.என் வாழ்விலும் இப்படி நடந்திடக் கூடுமா என்று என்னுள் நொடியில் முகிழ்த்து விரவிப் பரவுமே,ஓர் ஏக்கம்..அது போதும்,அன்றைய நாளுக்கென என்னுள் மிச்சமாய் இருக்கும் உயிர்ப்பு மொத்தத்தையும் கொன்று தின்றிட.
அப்பப்போ யோசிப்பேன்,இந்த கன்றாவி காதல் மட்டும் எனக்குள்ள வராம இருந்து இருந்தா,நம்ம வாழ்க்கயும் மத்தவங்களோடத மாதிரி இயல்பா இருக்குமேன்னு..வந்த வேகத்துல இது என்னடா நெனப்புன்னு அழிச்சியும் விட்ருவேன்..ஆனாலும்,என்ன மீறி வர்ர விரக்தி இப்டி நெனக்க வச்சா நானும் என்ன தான் பண்றது..?
அது என்னோட உயிரா இருந்த கூட பரவால..
ஆனா,என்னோட உயிர்ப்பா இருக்கே!
அது தான் பெரிய ப்ரச்சன..
என் லைஃபும் மத்தவங்க மாதிரி,இயல்பான ஆண் பெண் நட்போட,நெருங்கிப் பழகி பாதுகாப்ப தர்ர ஆண்களோட இருந்து இருந்தா இந்தக் காதல் இவ்ளோ தாக்கத்த எனக்கு தந்துருக்காது..
என்ன செய்ய,எல்லாம் கடவுளோட விதி..
இப்டி தான்,தெனம் தெனம் அழுக, கண்ணீர்,இறுக்கம்னு என் வாழ்க்க போகுது..
தங்கச்சிக்கி வேற நல்ல வரன் வர்ரதால,நா ஒண்டிக்கட்டயா இருக்குறது பெரிய ப்ராப்ளமா இருக்கு..
என்னோட,காதல்ல நா ரொம்ப டிபெண்டாகி இருக்கேன்..
ஒரு வேள,அதத் தாண்டி ஒரு காதல நா கண்டா,என்னால இந்த நெலமய லேசா கையாள முடியுமோ தெரில..
என்ன பண்றது..?
எல்லாத்தயும் தாங்கித் தான ஆகனும்..
ஆனா,அவருக்காக இதெல்லாம் தாங்குறது தப்பே இல்லன்னு தான் தோணும்.
பிகாஸ்,ஹீ ஈஸ் அ ஜெம்!
ஜாப் எடுத்துட்டு வந்து உங்க வீட்டுல பொண்ணு கேக்கறேன்னு சொன்னாரு அவரு..
அது மட்டுமா..?
இமை சிமிட்டி, விழிகளின் ஈரத்தை விரட்டும் முயற்சியில் நான் இருக்க,உரைகள் தோற்றிடும் என் உணர்வுகள் புரிந்தது போல்,விழி விழியே ஆறுதல் கொடுத்து,அவன் தந்து விட்ட ஒற்றைப் புன்னகை!
அது போதும்,என் ஆயுள் ரேகை தீரும் வரை என்றே,அதன் நிழல் நெஞ்சை நிறைக்கையில் என் மனதில் எண்ணம்,வண்ணம் கீறும்.
நானே,ஜாப் எடுத்துட்டேன்..ஆனா,இன்னும் அவர காணோம்..
அப்டியே,கண்ண மூடி கிட்டு பழச அச போட்றேன்..
இதழ்களில் தவழும் புன்னகையுடன்,விழிகளில் மெல்லிய குறும்பு தெறிக்க,கனிவான முகத்துடன் என் மூடிய விழிகளுக்குள் வந்து நிற்கிறான்,அவன்.
●●●●●●●
அபினவ்வின் கதை
நான் அபினவ்..
எங்ப்பா அம்மாவுக்கு மூத்த பையன்..
எனக்கு ஒரு தங்கச்சியும் இருக்கா..சரியான அறுந்த வாலு அவ பேரு…அத அப்றமா சொல்றேன்..!
பான் வித் சில்வர் ஸ்பூன்னு சொல்றத விட பான் வித் கோல்டன் ஸ்பூன்னு சொல்லலாம்..
அவ்ளோ,பணம்!
சின்ன வயசுல இருந்து நா ஆசப்பட்டது எதுவும் நடக்காம போன சரித்திரமே இல்ல..
அப்பா,தமிழ் நாட்டுல இருக்குற டாப் டென் பிஸினஸ் மேன்ல ஒருத்தர்..அம்மா,வழக்கம் போல ஹவுஸ் வைஃப்..
அம்மா – அப்பா ரெண்டு பேரும் ரொம்ப நல்லவங்க..ஆனா,அப்பா மட்டும் கொஞ்சம் பணம் அந்தஸ்து எல்லாம் பாப்பாரு..
முக்கியமா,என் கிட்ட காட்டிக்காட்டியும் அவரு காஸ்ட் பாப்பாரு..
அத என் கிட்ட காட்டி கிட்டதில்ல..அது எனக்கு தெரியுங்குறதும் அவருக்கு தெரியாது..
புடிச்ச மாதிரி,கஷ்டமே காணாத ஒரு லைஃப் ஸ்டைல்..
ஆம்பள பசங்க மட்டுல்ல,பொண்ணுங்க கூடவும் எனக்கு ரொம்ப நல்ல ப்ரெண்ட்ஷிப் இருந்துச்சு..
ஆனா,யாரயும் காதலிக்க தோணுனது இல்ல..காதல் மேல நம்பிக்க இல்லாதது ஒரு காரணம்,ஏன்னா பொண்ணுங்கன்னா பணத்துக்காக வந்து ஏமாத்திட்டு போவாங்கன்னு ஒரு தாட் எனக்குள்ள எப்பவும் இருந்ததுண்டு..
காலேஜ் ஜாய்ன் ஆகறதுக்கு முன்னாடி டைம் அது..
எங்கப்பாவோட ப்ரெண்டு பொண்ணு,ஒருத்திக்கு என் மேல விருப்பம் இருக்குறது எனக்கு தெரிய வந்தது..
அப்றம் அவளே வந்து ப்ரபோஸ் பண்ணா..
நா அழகா ரிஜெக்ட் பண்ணி விட்டேன்..
ரெண்டு நாள் கழிச்சி,பணத்துக்காக தான் அவ என்ன லவ் பண்ற மாதிரி நடிச்சதாவும் நா மசியலன்னும் அவ ஃப்ரெண்ட்ஸ் கிட்ட சொல்லி கிட்டு இருந்தா..
அப்றம்,ரெண்டு மூனு ப்ரபோஸல்..எல்லாம் பணத்துக்காகன்னு தெரிஞ்சதும்,ஏனோ பொண்ணுங்க மேல இருந்த நம்பிக்கயே மொத்தமா போச்சு..
என்னோட,அந்தஸ்து பாத்து என் கூட,யாரும் பழக கூடாதுன்னு நா என்ன ரொம்ப சிம்பிளா காமிச்சு கிட்டேன்..
அப்டியே,காதல் எதுவும் வேணாம்னு நா பாட்டுக்கு,மொத்தமா என்ன மாத்துனது ரெண்டு பேரோட லவ் தான்..
ஒன்னு என் தங்கச்சி லவ் பண்ற பையன்..
பண்ற பையனா..?
இல்ல,பண்ண பையனான்னு அவ கிட்ட தான் கேக்கனும்..
கேட்டாலும் உண்மய சொல்ல மாட்டா!
ஆமாங்க,அவளுக்கு அந்த பையன் மேல வன் சைட் லவ்!
ஆனா,அந்த பையனுக்கு இன்னொரு பொண்ணு மேல வன் சைட் லவ்!
அந்தப் பொண்ணு மேல இவன் வச்சிருக்குற லவ்வ பாத்து தான்,அவன் மேல இவளுக்கு லவ்வே வந்துச்சாம்..
அடிக்கடி சொல்லுவா..
இவ சொல்றத கேட்டு,எனக்கே அந்த பையன பாக்கனும்னு தோணும்..
எங்கப்பா கிட்ட இவ விருப்பத்த சொன்னப்போ,மொதல்ல முறுக்கி கிட்டாரு..
அப்றம்,அந்த பையன மீட் பண்ணி பேசிருப்பாரு போல..
எங்கப்பாவே,மொத்தமா அவன் பக்கம் சாஞ்சிட்டார்னா பாத்துக்கோங்களேன்!
எனக்கு,ரொம்ப பெரிய ஷாக் அது!
“அந்த பையன் கூட இவ ஓடிப் போய் இருந்தா கூட நா கோவப்பட்ருக்க மாட்டேன் டா..ப்யூர் ஜெம்!” நெகிழ்வுடன் தளர்ந்து போய் ஒலித்த என் தந்தையின் குரலில்,அவன் காதலின் மீதான பிரமிப்பு தேயாது உறைந்தே கிடந்தது.
“எதுக்கு அவன் இவ்ளோ லோயலா இருக்கான்..” அஷ்வினி,பொலம்பவும் செஞ்சா..
அந்த லவ் சேரவே வாய்ப்பில்லன்னு சொல்லி கிட்டு அந்த பையன வன் சைடா லவ் பண்ணா அப்போ..
அவன் ஹார்ஷா பேசிட்டான் போல..
இப்போ,இல்லன்னு சொல்றா..
ஆனா,உண்ம என்னன்னு அவளுக்கும் நம்ம கடவுளுக்கும் தான் தெரியும்.
அந்த பையனோட காதல் ஒரு பக்கம் என்ன மாத்தி இருக்க,மொத்தமா என்ன சரிச்சு போட,என் வாழ்க்கைலயும் வந்தா ஒரு மகராசி!
அவள் வந்தாள்,
உயிரின் மின்னல் கீற்றாய்..
உணர்வுகளின் சுவாசக் காற்றாய்..
●●●●●●●
வாசுவின் கதை
“டேய் மெதுவாடா..” சந்த்ரு கத்துன கத்தல,கொஞ்சமும் கண்டுக்காம ஷாட்டல் காக் அ நா அடிச்ச அடில,ரேக்கட் அப்டியே ரெண்டா தெறிஞ்சு கீழ விழுது..
“இத்தோட இன்னிக்கி மூணாவது ரேக்கட்..” என் காதுல கேக்க,திட்டி கிட்டே அடுத்த ரேக்கட்ட அவன் நீட்ட,நானும் பேசாம வாங்கிட்டே,கோர்ட்டுக்குள்ள வர்ரேன்!
தேகம் வியர்வையில் மொத்தமாய் குளித்துப் போயிருந்தது.அடங்காது நிற்கும்,என் கருநிற அடர்கேசமும் அநியாயத்துக்கு வியர்வையில் நனைந்து போய்,அடங்கி கிடக்கிறது.
அடர் கேசத்தை இடக்கரம் கொண்டு,ஒதுக்கியவாறே மீண்டும் என் ஆட்டம் துவங்குகிறது.மனதில் அடைத்திருந்த கனம்,தேகத்தின் களைப்பை உணர விடவில்லை,போலும்.
“டேய் போதும்டா..” ரொம்ப மெனக்கெட்டு,சந்த்ரு என்ன இழுத்து வந்து இன்டோர் ஸ்டேடியத்துல இருந்து வெளில கூட்டிட்டு வர்ரான்..கூட்டிட்டு வரும் போதே,செம்மயா எனக்கு திட்டு விழுது..
அப்பாவோட இருக்குற கோபத்த எதுக்கு உன் மேல காமிச்சிக்கிறன்னு அவன் திட்டுற,திட்டெல்லாம் என் காதுல விழுந்தாலும்,நா எதயும் கண்டுக்கல.
இப்போ,நாலஞ்சி மாசத்துக்கு முன்னாடி என்னோட அப்பா தான்,எனக்கு சூப்பர் ஹீரோ!அவ்ளோ நம்பிக்க,வச்சு இருந்தேன் என் அப்பா மேல!
எல்லா பசங்களுமே,அம்மா செல்லம் தான்..அம்மா கூட தான் அதிகமா ஒட்டிப்பாங்க..ஆனா,நா அதுக்கு டோட்டலா டிஃபரன்ட்!
எனக்கு அம்மாவ விட,அப்பாவ தான் ரொம்ப புடிக்கும்.சின்ன வயசுல இருந்து அப்பாவ பாத்து பாத்து அவர ரோல் மாடலா வச்சு வளந்தவன் நானு!
என்னோட,அப்பா என்ன எல்லா சிட்டுவேஷன்லயும் புரிஞ்சிப்பாருன்னு அசக்க முடியாத நம்பிக்க,அன்னிக்கி வர என் கிட்ட இருந்துது!
என்னோட விருப்பத்துக்கே என்ன விட்டு,சரி தப்பு எதுன்னு தெளிவா சொல்லித் தந்து,என்ன ஒரு நல்ல மனுஷனா வளத்து விட்டது யாருன்னா,கண்டிப்பா அது எங்கப்பா தான்!
ஆனா,அவரு ஃபர்ஸ்ட் டைம் ஒரு விஷயத்துல என்ன ஃபோர்ஸ் பண்ணாரு..இத நீ செய்யனும்னு கூட சொல்லாத மனுஷன்,இதத் தான் நீ செய்யனும்னு மொத தடவயா என் கிட்ட ஆர்டர் போட்டாரு!
வேற என்ன விஷயம்னாலும்,எனக்கு பரவால! அப்டியே ஒத்துகிட்டு இருப்பேன்!
ஆனா,இது..?அதுவும் அவரு வாங்குன சத்தியம்..இப்போ நெனச்சாலும் கூட,எனக்கு அப்டியே பத்தி கிட்டு தான் வருது!
சத்தியம் பண்ணிட்டேன்,அதுவும் அவரு மேல.படிச்சவன் தான்,மூட நம்பிக்க எதயும் நம்பாதவனா இருந்தாலும்,உணர்வுகளோட ஒன்றிப்போன விஷயம்னா,அத கண்டிப்பா நம்மளால ஈசியா எடுத்துக்க முடியாது.
அந்த அப்பா சென்டிமன்ட் தான்,என்ன அவருக்கு எதிரா எதயும் செய்ய விடாம,அப்டியே தடுத்து நிறுத்தி வச்சு இருக்கு!
அது என்ன சத்தியம்னா….
தொடரும்.
🖋️அதி..!
2026.05.13
error: Content is protected !!