Skip to content
Post Views: 18,508
இலக்கணம் பெண்மையே!…
இறுதி அத்தியாயம்
தேவி முழுதாக பிரபாவோடு ஒன்றி கொண்டாள். தெரியாதவர்களோ, அறிமுகம் அற்றவர்களோ அல்லவே. பிரபா தவழ்ந்தது தேவி கைகளில் தான்.
பிரபாக்கு என்னவோ ஒரு பெரிய பாரம் இறங்கியதை போல உணர்ந்தான். தாய் இல்லை என்று தெரிகிறது. ஆனாலும் தாய்க்கான ஏக்கம் மனதில் இருந்து கொண்டு தான் இருந்தது. தன் குடும்பத்தில் அந்த அன்பை எதிர்பார்க்கவும் செய்தான். மூத்தவன் சூழ்நிலை உணர்ந்து தன்னை தேற்றி கொண்டான். அப்பாக்கு, தன்னை விட பாரம் அதிகம் என்று தெரியும். மனைவி இல்லை என்பதோடு வளர்ந்த இரு பிள்ளைகள், வீடு, தோட்டம், மாடு எல்லாம் இவர் ஒருவரே தான் பார்க்க வேண்டும். பசிக்கு உணவு கிடைக்கும். ஏதோ ஒன்று இருக்குமாறு பார்த்து கொள்வார். ஆனால், பெற்றவள் போல மகனுக்கு இது தான் பிடிக்கும் என்று வைக்க தெரியாது. அவரின் தோது, வேலை பளு பொறுத்து சமையல் இருக்கும்.
Advertisement
பிரபாக்கு விடுதி சாப்பாடு அப்பா சமையலே பரவாயில்லை என்ற அளவில் தான் இருந்தது. ஆனாலும் வேற வழி இல்லை. உள்ளுக்குள் அரவணைப்புக்கு ஏங்கி கொண்டு தான் இருந்தான். திடீரென ஒரு தாயன்பை அவனால் இந்த வயதில் ஏற்க முடியாது. ஆனால், தேவியோடு அவனுக்கான பிணைப்பு என்பது மீனாட்சியோடு உள்ளது போல பிறந்ததில் இருந்தே தொடர்வது என்பதால் தயங்காமல் ஒன்றி கொண்டான்.
தேவிக்கும் வேற என்ன வேண்டும். யாரும் பங்கு கொள்ள முடியாத பிள்ளை பாசம் கை வந்து விட்டதே… அவளின் நாள் பயங்கர ஓட்டம் தான். காலையில் எழுந்து மகனை கவனித்து, காலை உணவு, மதிய உணவு என்று மகனுக்கு தனியே செய்து, போனையே பார்த்து கொண்டு இருக்கும் மகனை அதட்டி கிளம்ப செய்து, அவனோடு சாப்பிட்டு, அவன் கூடவே கல்லூரி வாசல் வரை வந்து வழியனுப்பி விட்ட பின் தான் அவள் கடைக்கு செல்வாள்.
இப்போது கடை வேலையில் கூடுதல் கவனம் வேறு… தன் மகனுக்கு ஒரு தனி சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி கொடுக்கும் ஆசை வந்தது. அதனால் ஒரு வருமானம் என்றில்லாமல், தன் அடுத்த தலைமுறைக்கு என்ற முனைப்பு இருந்தது.
Advertisement
பிரகாஷ் கொஞ்சம் கூட சாலாவை நெருங்க வில்லை. அவள் ஓட்டத்தை ஓடி கொண்டு தான் இருந்தாள். சும்மா கூட அவளை சீண்டி விட்டு தன்னை மொத்தமாக ஒதுக்கி விட கூடாது என்பதில் கவனமாக இருந்தான். ஆனால், அதே நேரத்தில் தான் திருந்தி விட்டேன் என்று மறைமுகமாக உணர்த்தவும் தவற வில்லை.
Advertisement
வாரத்தில் இரண்டு முறை அஜய் போன் செய்வான். குடும்பமாக நல விசாரிப்பு நடக்கும். மகனின் செலவுகள் அனைத்தும் விசாலாட்சி பக்கம் தான். எதற்கும் கணவனை சார்ந்து நிற்க வில்லை. ஜெய பிரகாஷ் மனைவியை ஆச்சர்யமாக தான் பார்த்தான். டெல்லி அகாடமி என்பது சாதாரண இடம் அல்ல. தரத்துக்கு தக்க பணமும் கொட்ட வேண்டும். எல்லா செலவுகளையும் அவள் செய்வது என்றால் அவள் உயரம் தான் என்ன?… ஏதோ ஒரு துணி கடை ஓரளவு விஸ்தாரமாக நடத்துகிறாள் என்று தெரியும். அதில் இவ்வளவு வருமானமா?… மூன்று வருடம் இருக்குமா!… லாபம் எடுப்பது என்றால் எவ்வளவு உழைப்பை போட்டு இருக்க வேண்டும். மனைவியை பிரமித்து பார்த்தான் பிரகாஷ்.
கணவன் நினைப்பது போல எல்லாம் ஒன்னும் கிடையாது. எப்பவும் போல சாலா அவளின் நகைகளை தூக்கி தான் வைத்து இருக்கிறாள். அந்த வகையில் பெற்றோர் போட்ட நகை நல்ல பலன் தான். கடையை தொடங்க அடகு வைத்தது, சமீபமாக தான் திருப்பி எடுத்தாள். இதோ திரும்பவும் போயாச்சு. அடகு வைக்கும் முன் ஒரு முறை மகள் கழுத்தில் போட்டு அழகு பார்த்து, ஒரு போட்டோ எடுத்து கொண்டாள். அடுத்து எப்போ கை வரும் தெரியாது. இனி எல்லாம் மகளுக்கு தான்.
வெள்ளை கல்லில் நடுவில் பச்சை கல் வைத்த அட்டியல் மட்டும் எடுத்து கொண்டாள். இது அவளின் பேவரட். அவளிடம் எல்லாம் தங்க நகைகளாக இருக்க, அவள் தந்தை வற்புறுத்தி எடுத்தது இந்த அட்டியல்.
Advertisement
“ஏத்தா சாலா… எம்புட்டு நகை போட்டாலும் ஒத்த கல்லு வச்ச நகை ஊட கிடந்தா தான் எடுப்பா இருக்கும்…” என்று ஆசையாக செய்து வைத்தார். விசாலாட்சிக்கு பச்சை கல், மீனாட்சிக்கு சிவப்பு கல்.
மீனாட்சிக்கு பெண் பிள்ளை இல்லாததால் அவளின் சிவப்பு கல் அட்டியலை தங்கை மகளுக்கு கொடுத்து விட்டாள். சாலா கூட சொன்னாள்.
“வேணாம் மீனா, அஞ்சு சின்ன பொண்ணு. இப்பவே குடுக்காத… அவ கல்யாணம் அப்போ சீரா கொடு. உனக்கு விசேஷம் எதுக்கும் போடணும் தானா…”
யாரு உங்க மாமா கிட்ட. அடி போடி கூறு கெட்டவளே!… தென்னைக்கு, வாழைக்கு மாத்தி, மாத்தி போகும். ஒன்னும் கை வராது. காலம் என்ன கணக்கு வச்சு இருக்கோ! நான் இருக்கும் போதே ஒவ்வொன்னா எம் மகளுக்கு செய்யணும். சொல்லிபுட்டேன் உன் மகனுககிட்ட, பாருங்கடா நகை எல்லாம் தங்கச்சிக்கு தான்னு… அதான் பத்திரமா வாங்கி உள்ளே வை…” ஆஞ்சுக்கு ஐந்து வயதில் காது குத்தும் போது வீடு வந்தது.
அதற்கு சித்ரா ஒரு பக்கம் முகத்தை தூக்கி கொண்டு திரிந்தாள். வீட்டின் மூத்த பெண் பிள்ளை காவ்யா இருக்க, தங்கை மகளுக்கு கொடுப்பதை பார்…
அந்த நகையை தொடும் போதே கண்ணீர் கண் கட்டியது. உடன் பிறந்தவள் இழப்பு காலத்துக்கும் தொடரும். இந்த காலத்து பெண்கள் பழைய நகைகளை விரும்ப மாட்டார்கள். தன்னுடைய நகைகளை மாற்றி எடுத்தாலும், மீனா உடையததை மாற்ற கூடாது. அதை மட்டும் வைத்து கொள் அஞ்சு என்று சொல்ல வேண்டும்.
சாலா மீண்டும் ஒரு முறை நகைகளை தொட்டு பார்த்தாள். அவளுக்கு தெரிந்து அஜய் வயிற்றில் சுமந்து வளைகாப்பில் போட்டாள் அத்தனை நகைகளையும்… அதன் பின் எங்கே போடுவது. புது மருமகள் கவனிப்பு குறைந்து மூத்த மருமகள் எனும் பொறுப்பு தலையில் நின்று விட்டது. தற்போது இருக்கும் நடுத்தர வயதில் பெரிய மாலைகளை போட ஒரு மாதிரி இருந்தது. இத்தனை வயதின் பின் மகளுக்கு போட்டு அழகு பார்க்காமல் தான் மாட்டி கொள்ள முடியுமா?…
பிரகாஷ் தன் வேலையை மதுரைக்கு மாற்றி கொண்டான். அவன் தகுதிக்கு இங்கு குறைவு தான். ஆனால், தன் குடும்பம் இங்கு இருக்க, சம்பளம் குறைவாக இருந்தாலும் பரவாயில்லை என்று மாற்றி கொண்டான்.
அத்தோடு ஒரு பெரிய வேலையும் செய்தான். அதாவது சென்னையில் இருக்கும் தன் வீட்டை விற்று விட்டான். அந்த விலைக்கு மதுரையில் பெரிய வீடு வாங்கி கொண்டான். அஜய், அஞ்சுக்கு எல்லாம் பெரிய சந்தோசம். அதுவும் சாலாக்கு பிடித்த மாதிரி நாலு பக்கமும் தோட்டம் போடும் அளவில்… வீடும் சாலா பேரில் தான் முடித்தான்.
பத்திர பதிவு வரை சாலாக்கு கூட தெரியாது. அங்கு சென்ற பின் தான் அவளுக்கே தெரியும். பிள்ளைகள் முகம் பெருமையில் விகாசித்தது. சகுந்தலாவை கையில் பிடிக்க முடியவில்லை. மகன் பெருமை பேசியே ஓய்ந்தார்.
இது இப்படி தான் போகும் என்று சாலா நன்கு அறிவாள். அதனால் தான் முன் ஏற்பாடாக வாயே திறக்கவில்லை. முத்தையா, பாண்டியம்மாள் தம்பதிக்கு ஒரு ஆறுதல். இந்த மகளாவது நன்றாக வாழட்டும்.
குமரன், சித்ரா தம்பதிகளும் வந்து இருந்தார்கள். குமரன் பார்வை தேவியையே சுற்றி வந்தது. ஆனால், வாய் வார்த்தையாக ஒன்றும் சொல்ல வில்லை. போலீசில் அடி வாங்க வைத்து விட்டாள் என்ற ஆரம்ப கட்ட கோபம் போய், தற்போது தேவியை பார்க்கும் போது ஏக்கம் வந்தது.
தேவியில் எந்த மாற்றமும் இல்லை. அதே போல தழைய புடவை கட்டி, நீண்ட பின்னல், ஜாதி பூ என்று அம்சமாக இருந்தாள். போலீஸ் கவனிப்போடு, சித்ரா மூன்று பிள்ளைகள் உடன் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டி இருக்க, தற்போது வாயை மூடி கொண்டு இருக்க வேண்டிய நிலை. ஆனாலும், பார்வை அவளையே வட்ட மிட்டது.
தேவியை இது துளியும் பாதிக்க வில்லை. ஆனால், சித்ராவை பாதித்தது, வெளியில் காட்டி கொள்ள வில்லை. கடக்க தான் வேண்டும் தூசு போல, ஊரில் இருக்கும் பெண்கள் போல… தேவியை போல துணிந்து எல்லாம் நிற்க முடியாது. தனக்கு மூன்று பிள்ளைகள் இருக்கு, கரையேத்த வேண்டும்.
மணிமாறன், அருண் உடன் வந்தார். தேவி, பிரபா உடன் நின்று கொண்டாள். பார்க்கும் சிலர் பேச தான் செய்தார்கள்.
“தேவி எந்த வயசுல சொத்து சேர்க்குதாம். வாரிசு வேணும்ல. அத்தோடு தாய் இல்லா பிள்ளை, யாரு பார்ப்பா. அதான் மணி விட்டு கொடுத்துட்டான்…” பேச்சு அடி பட்டாலும் யாரும் கண்டு கொள்ள வில்லை.
தாய் இல்லா பிள்ளை தான், ஆனாலும் பெற்றவருக்கு விட்டு கொடுக்க ஒரு மனம் வேண்டும் அல்லவா!… அதே போல மலடி என்று பட்டம் கட்டி தன்னை ஒதுக்கி வைத்த குடும்பத்தில் இருந்து தாய் இல்லா பிள்ளைக்கு தாயாக சுமக்க முன் வரவும் ஒரு மனம் வேண்டும் தானே!…
மலேசியாவில் இருக்கும் ஒரு பலமாடி கட்டிடத்தில் விட்டத்தை வெறித்து படுத்து கிடப்பது ஷாலினி தான். முழுதாக ஊரை விட்டு துரத்தி அடிக்க பட்டாள். அப்படி தான் சொல்ல வேண்டும். செயலால் இல்லாமல் பார்வையால், உதாசினத்தால் துரத்தி விட பட்டாள். படிப்பு கை கொடுக்க, பார்ப்பார் கண்ணில் இருந்து மறைந்து கொண்டவள். ஆனால், அவள் மனதிடம் இருந்து ஒளிந்து கொள்ள முடிய வில்லை.
தன் முதல் கல்யாண வாழ்வில் வந்த தோல்வியில் முடங்கி போனவள். கொஞ்சம் தேறியாது சாலா கை கொடுத்த பின் தான்.
தாங்கள் எல்லாம் பூமர் ஆங்கிள் என்று கிண்டலடிக்கும் பிரகாஷ் மாமாவை கிட்ட பார்க்கும் போது அவனின் நிஜ பிம்பம் ஆச்சர்யமாக இருந்தது. படிப்பு பற்றி மட்டும் பேசும் இவனா, மனைவியை இவ்வளவு காதல் செய்வது.
ஷாலினிக்கு தன் கணவனோடு ஒத்து போகாமல் பிரச்சனையான பல விசயங்களை பிரகாஷ், சாலா தம்பதிகள் எளிதாக கையாளுவதை ஆச்சர்யமாக பார்த்தாள். பிரகாஷ் நேர்மை, கண்ணியம், குடும்ப பொறுப்பு, சம்பாத்தியம், குணம் என்று நேரில் பார்க்கும் போது ஒரு ஹீரோ வேர்ஷிப் உருவானது.
அத்தோடு முடிந்து இருந்தால் பரவாயில்லை. அவனின் அசைவுகள் ஒவ்வொன்றையும் கவனிக்க ஆரம்பித்து. அதன் மேல் ஒரு ஆர்வம் வந்து, கிராஷ் ஆகி, கொஞ்சம் கொஞ்சமாக கிராஷ்க்கு மேல ஒரு உணர்வு வர தொடங்கியது.
கற்பனைக்கு கால் இல்லை. அதை கட்டிவிக்க தெரியாமல் முழுதாக பிரகாஷ் பின்னால் விட்டாள் ஷாலினி. அவன் மேல் இருந்த ஆர்வம் சாலா இடத்தில் தன்னை பொருத்தி பார்க்க தொடங்கியது. தான் இருந்தால் எப்படி இருக்கும், தன்னோடு எப்படி இழைவான் என்றெல்லாம் கற்பனை பறக்க, விசாலாட்சி இடத்தில் தன்னை பொருத்தி கொண்டாள்.
வயதான ஆண்களுக்கு மட்டுமே பொறுமையையும், அன்பும், விட்டு கொடுத்து போகும் பண்பும், அரவணைப்பும் உள்ளதாக தோன்றியது. சம வயது என்பதால் தன் கணவனோடு தனக்கு வந்த கஷ்டம், பிரகாஷ் உடன் வராது என்று நம்பினாள். பிரகாஷ் மாதிரி ஆட்கள் மட்டுமே பெண்களுக்கு ஏத்தவர்கள் என்று தன் யோசனை போல எண்ணம் பிறக்க. அதன் வழி போய் வழி மாறியது தான் மிச்சம்.
தற்போதும் ஷாலினி அப்படியே நினைத்தாள், விசாலாட்சியை பார்க்க வேண்டும் என்று…
பிரகாஷ் தன்னை திட படுத்தி கொண்டான். அஞ்சு பள்ளி டூர் போய் இருக்க, வீட்டில் யாருமில்லை. மனைவியை எதிர்பார்த்து காத்து இருந்தான். நாள் கடந்து வருசம் போய் விட்டது. நிச்சயம் மனைவிக்கு பக்குவம் வந்து இருக்கும். தன் மனமும் புரிந்து இருக்கும் என்று முழுதாக நம்பினான்.
பத்து மணிக்கு மேல் தான் சாலா வந்தாள். தன் அறைக்கு சென்று சுத்தப்படுத்தி, உணவு உண்டு படுக்க ஆயத்தமாக, மெல்ல உள்ளே வந்தான் பிரகாஷ்.
“சாலா…”
நிமிர்ந்து பார்த்தாள். புருவம் மட்டுமே உயர்ந்தது.
“என்னை மன்னிக்கவே மாட்டியா?… நான் செஞ்சது தப்பு தான். இப்போ மனசார திருந்தி தான் வந்து இருக்கேன். உன் மன கோபம் தான் என்ன?”
வருசம் போனாலும், அவன் வார்த்தை மட்டும் மாறாது…
“மூவாயிரத்து எண்ணுத்து நாப்பத்தி ஆறு…” சாலா சொல்ல,
புரியாமல் பார்த்தவன், “என்ன சாலா?…”
“நீங்க உங்க கள்ள காதலி கிட்ட சொன்ன ஐ லவ் யூ”
“என்ன?…” அதிர்ந்து போய் பிரகாஷ் நெஞ்சில் கை வைத்தான் பிரகாஷ்.
திருமணம் ஆன இத்தனை வருடத்தில் ஒரு முறை கூட சாலாக்கு ஐ லவ் யூ என்ற வார்த்தையை சொல்லவே இல்லை.
error: Content is protected !!