Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

உனக்குள் என் உயிரே

உனக்குள் என் உயிரே 16

உனக்குள் என் உயிரே


அத்தியாயம் 16

அர்ஜுன் மீராவையே பார்க்க, “அடங்குடா… இப்படிப் பார்த்தேன்னு வை, இன்னைக்கே உங்க அம்மாட்ட மாட்டிப்ப.” எனச் சொன்ன சூர்யா தற்செயலாக நிமிர்ந்து பார்க்க… அங்கே காரின் மறு பக்கத்தில் இருந்து இறங்கிய ஆருவை பார்த்தான். அதோடு அவன் அவன் அர்ஜுனை மறந்து ஆருவை பார்க்க ஆரம்பித்தான்.

ஆரு அடர் பச்சையில் செல்ப் பார்டர் வைத்த புடவை அணிந்து, அதற்குப் பொருத்தமான தங்க நகைகளுடன், அவள் அண்ணனின் திருமணம் என்பதால் கூடுதலாக ஒட்டியாணம், கைகளில் வங்கி அணிந்து, ஜடையில் கற்களில்ளான சின்னச்சின்ன மயில்களை வரிசையாக வைத்திருந்தாள். ஆள் பார்க்க மிகவும் அழகாக இருந்தாள். மீரா, ஆருவோடு சேர்ந்து மற்றவர்களும் மண்டபத்தின் உள்ளே சென்றனர். அர்ஜுனும், சூர்யாவும் தங்களுக்கு வந்த சோதனையை நினைத்துக் கொண்டே உள்ளே சென்றனர்.

ஆரு ரஞ்சனாவை பார்க்க மீராவையும் அழைத்துக் கொண்டு சென்றாள். ரஞ்சனா இருந்த அறை கதவை தட்டிவிட்டு ஆரு திறக்க… லைட் ரோஸ் கலர் பட்டு புடவையில் மணமகள் அலங்காரத்தில் அசத்தலாக இருந்த ரஞ்சனா, அவளைப் பார்த்து புன்னகையுடன், “வா ஆரு… எப்படி இருக்க? எப்ப வந்தீங்க?” என்று தன் நாத்தனாரை பார்த்து கேட்டவள், மீராவை யாரென்று பார்க்க….நல்லா இருக்கேன் அண்ணி, இப்ப தான் வந்தோம். இவ மீரா என்னோட ப்ரண்ட்.” ஆரு அறிமுகம் செய்ய… ரஞ்சனாவும், மீராவும் ஒருவருக்கொருவர் ஹாய் சொல்லி கொண்டனர்.

அண்ணி.. எங்க போடோக்ராபர் உங்களைப் போட்டோ எடுக்க நீங்க ரெடியான்னு பார்த்திட்டு வர சொன்னார், நான் போய் அவரை அழைச்சிட்டு வரேன்.” என்ற ஆரு மீராவை அங்கயே இருக்கச் சொல்லிவிட்டு சென்றாள்.

மீரா ரஞ்சனாவை பார்த்து அழகா இருக்கீங்க என்று சொல்ல… அவளை அழகு என்று சொன்ன மீரா தன்னைவிட மிகவும் அழகானவள் என்பதை ரஞ்சனா உணர்ந்தாள். 



Advertisement


பால் போல் வெள்ளை நிறத்தில், கலையான முகத்துடன் லேசான ஒப்பனையிலேயே ரதியை போன்று இருந்த மீராவை பார்த்து, இன்னைக்கு மண்டபத்தில எல்லோரும் இவளை தான் பார்க்க போறாங்க என்று நினைத்தாள்.

ஆரு போடோக்ராபரை அழைக்கச் சென்றபோது, அவள் எதிரில் வந்த சூர்யாவை பார்த்து புன்னகைக்க…உங்க அண்ணன் கல்யாணமா…. இல்லை உனக்குக் கல்யாணமா? “சூர்யா கேட்க… ஆரு புரியாமல் அவனைப் பார்த்து, “ஏன் அப்படிச் சொல்றீங்க?” என்றதும்,

நீ தான் பார்த்தா கல்யாண பொண்ணு மாதிரி இருக்க, ஒருவேளை உனக்குத்தான் கல்யாணமோன்னு நினைச்சேன்.” என்றான். ஆரு அவனைப் பார்த்து முறைத்துவிட்டு சென்றாள்.

சற்றுத் தூரம் சென்றதும் ஆரு திரும்பி சூர்யாவை பார்க்க…. அவனும் அவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான். ஆருவுக்கு அவனைப் பார்த்ததும் வெட்கம் வர, வேகமாக அங்கிருந்து சென்றாள்.

சஞ்சனா அவள் அக்கா அறைக்கு வர… அங்கிருந்த மீராவை பார்த்து இவ எதுக்கு இங்க இருக்கா என்று நினைத்துக் கொண்டே உள்ளே வந்தாள். மீரா சஞ்சனாவை பார்த்து ஹாய் என்று சொல்ல…. அதைக் கவனிக்காதது போல அவள் அக்காவிடம், “நீ ரெடியா ரஞ்சு…. மேடைக்குப் போலாமா?” என்று கேட்க…. அப்போது ஆரு போட்டோ மற்றும் வீடியோ எடுப்பவருடன் உள்ளே வந்தாள்.

சஞ்சனாவை பார்த்த ஆரு அவளைப் பார்த்து லேசாகப் புன்னகைத்து விட்டு மீராவின் அருகே சென்று நின்று கொண்டாள். முதலில் ரஞ்சனாவை மட்டும் வைத்துத் தனியாகப் போட்டோ எடுத்ததும், அடுத்து ரஞ்சனாவும், ஆருவும் சேர்ந்து போட்டோ எடுத்து கொண்டனர். ஆருநீயும் வா மீரா.” என்று மீராவையும் அழைக்க… ரஞ்சனா, ஆரு மற்றும் மீரா மூவரும் சேர்ந்து போட்டோ எடுத்து கொண்டனர்.

சஞ்சனா அனார்கலி நெட்டெட் சுடிதார் அணிந்து இருந்தாள். சுடிதார் என்றால் சின்னப் பெண் மாதிரி இருக்கும் என்று நினைத்தாள். ஆனால் இப்போது ஆருவையும், மீராவையும் பார்த்ததும் தானும் புடவையே கட்டி இருக்கலாமோ என்று தோன்றியது.

அதற்கு ஏற்றாற்போல் ரஞ்சனாவும், “சஞ்சு… நீயும் புடவையே கட்டி இருக்கலாம்.” என்று சொல்ல… ரஞ்சனாவுக்குக் கோபம் வந்துவிட்டது.

அவள் நான் என்ன கிழவியா இப்பவே புடவை கட்டிக்க” என்று எரிந்து விழ…அப்ப உங்க அக்கா கிழவியா அவங்களும் புடவை தான கட்டி இருக்காங்க.” ஆரு கிண்டலாகக் கேட்க… சஞ்சனாவிற்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை… அவளைப் பார்த்த ரஞ்சனா சரி மேடைக்குப் போகலாமா என்று பேச்சை மாற்ற… அப்போது யாரோ கதவை தட்டினார்கள்.

சஞ்சனா சென்று கதவை திறக்க….. அங்கே அர்ஜுன் நின்று கொண்டிருந்தான். சஞ்சனா அர்ஜுனை பார்த்து முகம் மலர்ந்தவள், “ஹாய் அர்ஜுன்…” என்றாள்.

சஞ்சனாவிடம் பதிலுக்கு ஹாய் என்றவன், ரஞ்சனாவை பார்த்துஹாய் அண்ணி, நீங்க ரெடியா…” என்று கேட்டதும், “ரெடி அர்ஜுன், ஒரு நிமிஷம்” என்றவள், திரும்பி கண்ணாடியை பார்க்க….. அர்ஜுன் மீராவை ஒரு முறை தலையில் இருந்து கால்வரை கண்குளிர பார்த்து விட்டு அருவிடம்அம்மா, உன்னை அண்ணியை அழைச்சிட்டு வர சொன்னாங்க.” என்றான். ஆருவும் சரி என்றாள்.

ரஞ்சனா போகலாம் என்றதும், அறையை விட்டு வெளியே வந்தனர். ரஞ்சனாவின் ஒருபுறம் சஞ்சனாவும் மறுபுறம் ஆருவும் நிற்க… ஆருநீயும் வா மீரா.” என்றாள். மீராவும் சென்று ஆருவின் அருகே நிற்க, எல்லோரும் சேர்ந்து மேடையை நோக்கி சென்றனர். அர்ஜுன் சற்று பின்னே நடந்து வந்தான்.

சஞ்சனாவிற்கு மீராவின் அழகு மேல் பொறாமை தோன்ற… இவ மேடைக்கு வந்தா எல்லோரும் இவளை தான் பார்ப்பாங்க என்று நினைத்தவள், மேடை அருகே வந்ததும், “மேடையில கூட்டமா நின்னா நல்லா இருக்காது.” என்று மீராவை பார்த்து சொல்ல… மீரா விலகி நின்றாள்.

சஞ்சனா சொன்னதைக் கேட்ட ஆருவிற்குக் கோபம் வந்துவிட்டது. ஆரு பட்டென்று, “அப்படினா நீ வராத.” என்றவள், ஒரு கையில் ரஞ்சனாவையும், மறு கையில் மீராவையும் பிடித்து அழைத்துக் கொண்டு மேடைக்குச் செல்ல… சஞ்சனா அங்கயே திகைத்து நின்று விட்டாள். ரஞ்சனா திரும்பி சஞ்சனவை பார்த்து வா என்று அழைக்க… ஹப்பா… என்று நினைத்த சஞ்சனா… அவள் அக்காவுடன் சென்று சேர்ந்து கொண்டாள்.

மீரா முகத்தில் எதையும் காமிக்கவில்லை அமைதியாக இருந்தாள். மேடைக்குச் சென்றதும், ஆரு ரஞ்சனாவை ஆதியின் அருகே நிற்க வைக்க… மீரா மேடையில் இருந்து மெதுவாகக் கீழே இறங்கி பெண்கள் அமர்ந்திருக்கும் இடத்திற்குச் சென்றாள்… மீராவை பார்த்த அர்ஜுனின் பெரியம்மா மீராவை தன்னோடு அமர வைத்துக் கொண்டார்.

அர்ஜுன் ஆதியின் அருகே சென்று நின்று கொண்டான். மீரா மேடையைப் பார்ப்பதும், கீழே அமர்ந்து இருக்கும் பெண்கள் பேசுவதைக் கேட்பதுமாக இருந்தாள்.

அர்ஜுனின் பார்வை மீரா மீதே இருந்தது. அவன் இத்தனை நாள் பார்த்த பார்வைக்கும், இன்று பார்க்கும் பார்வைக்கும் நிறைய வித்தியாசம் இருந்தது. அவன் பார்வையில் சிவந்த மீராஒரு நிமிஷம் இதோ வரேன்.” என் அர்ஜுனின் பெரியம்மாவிடம் சொல்லிவிட்டு, தனியாகச் சென்று அர்ஜுனை செல்லில் அழைத்தாள். அர்ஜுன் செல்லில் மீராவின் நம்பரை பார்த்ததும் மேடைக்குப் பின்புறம் சென்று போன்னை எடுத்தான்.

என்ன மீரா? எதுக்குப் போன் பண்ண?”

எதுக்கு என்னையே பார்கறீங்க அர்ஜுன்?”

நீ பார்க்கிற மாதிரி இருக்க, அது தான் உன்னையே பார்கிறேன். ஏன் நான் உன்னைப் பார்க்க கூடாதா?” என்றான் ஏக்கமாக….

அவன் குரலில் இருந்த தாபத்தை உணர்ந்த மீரா, “நீங்க இப்படி என்னையே பார்த்தா… இன்னும் கொஞ்சம் நேரத்தில, நீங்க என்னையே பார்க்கிறது எல்லோருக்கும் தெரிஞ்சிடும் பரவாயில்லையா?” என்றாள்.


தெரிஞ்சா தெரிஞ்சிட்டு போகட்டும்.” அர்ஜுன் கூலாகச் சொல்ல…. மீராப்ளீஸ் அர்ஜுன் என்னையே பார்க்காதீங்க” என்றாள்.

நான் இன்னைக்குத் தான் உன்னைப் புடவையில் பார்க்கிறேன். அதுதான் என்னவோ உன்னையே பார்க்கணும் போல இருக்கு.. சரி இனி கவனமா இருக்கேன்.” என்றதும், மீரா போன்னை வைக்க… அர்ஜுன் மேடைக்குச் சென்று ஆருவுடன் சேர்ந்து ஆதியை கிண்டல் அடித்தவன், மீராவையும் யாருக்கும் தெரியாத மாதிரி பார்த்துக் கொண்டான்.

ஆதியின் நண்பர்கள் மேடைக்கு வந்ததும், அர்ஜுன் சூர்யாவை அழைத்துக் கொண்டு மீரா அமர்ந்திருந்த இடத்திற்குச் சென்று அவனும் அங்கேயே அமர்ந்து கொண்டான். அர்ஜுனின் பெரியம்மா அவனைப் பார்த்து, “ஆஸ்திரேலியா போறியாம்.” என்று கேட்க…ம்ம்… ஆமாம் போறேன்.” என்றான் உற்சாகமில்லாமல்.

என்னடா ரொம்ப அலுத்துகுற, நீ தான போக ஆசைபட்ட…”

அது அப்ப…” அர்ஜுன் சொல்ல… அதைக் கேட்ட அவனின் பெரியம்மா, “அப்ப இப்ப?” என்று அவனை ஆச்சர்யமாகப் பார்க்க… அர்ஜுன் மீராவை ஒரு பார்வை பார்த்துவிட்டு அமைதியாக இருந்தான்.

அர்ஜுனின் பெரியம்மா என்ன இவன் ஒரு மாதிரி பதில் சொல்றான் என்று நினைத்தவர், மீராவை பார்த்து, “நீ எப்ப கல்யாணம் பண்ணிக்கப் போற, படிப்பு முடிஞ்சதுமா… இல்லை படிச்சு முடிச்சு வேலைக்குப் போன பின்னாடியா…” என்று கேட்க…. அவர் திடிரென்று இப்படிக் கேட்டதும் மீராவிற்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை? அவள் அர்ஜுனை பார்க்க…

அவங்க அப்பா பெரிய பிசினஸ்மேன். அப்புறம் அவ எதுக்கு வெளிய வேலைக்குப் போகணும். அவங்களோட பிசினஸ் பார்த்தாலே போதும்.” என்றான் அர்ஜுன்.

அர்ஜுனின் பெரியம்மா, அவளைக் கேட்டா இவன் பதில் சொல்றான் என்று நினைத்தவர், “சரி, நீ எப்ப கல்யாணம் பண்ணிக்கப் போற?” என்று அர்ஜுனை பார்த்து கேட்க…

நான் இப்ப கூட ரெடி தான் பெரியம்மா.” என்றான் அர்ஜுன் கூலாக…

பொண்ணு பார்க்க வேண்டாமா?” பெரியம்மா அர்ஜுனை பார்க்க…

பொண்ணு தான பார்த்துட்டா போச்சு…” அர்ஜுன் மீராவை பார்த்துக் கொண்டே சொல்ல… மீராவிற்குப் பயமாக இருந்தது. என்னடா இவன் இப்படிப் பேசுறான், மாட்டி விட்ருவானோ என்று நினைத்தவள், மேடையைப் பார்க்க, ஆரு மீராவை பார்த்து வா என்று அழைத்தாள். மீரா அர்ஜுனிடம் இருந்து தப்பித்தால் போதும் என்று மேடைக்குச் சென்றாள்.

மேடையில் ஆருஎனக்கு ரெஸ்ட் ரூம் போகணும் மீரா… நீ கொஞ்ச நேரம் மேல நின்னு வர்ற கிப்ட் வாங்கி வை, நான் கொஞ்ச நேரத்தில் வந்திடுறேன்.” என்று சொல்லிவிட்டு செல்ல…. மீரா ஆதியின் அருகே நிற்காமல், சற்று தள்ளி நின்றாள்.

ஆதி மீராவை அருகில் அழைத்து ரஞ்சனாவிற்கு அறிமுகம் செய்ய, ரஞ்சனா தெரியும் என்றாள்.அர்ஜுன் சொன்னானா.” ஆதி சிரித்துக் கொண்டே கேட்க…இல்லை… ஆரு சொன்னாள்.” என்றாள் ரஞ்சனா.

சஞ்சனாவின் தோழிகள் மேடைக்கு வர… அவர்களைச் சஞ்சனா ஆதிக்கும், ரஞ்சனாவிற்கும் அறிமுகம் செய்தாள். போட்டோ எடுத்ததும், சற்று தள்ளி வந்த தோழிகள் கூட்டம், “சஞ்சு, உன்னோட ஆள் சூப்பர்… சஞ்சனா அர்ஜுன் பேர் பொருத்தம் கூடச் சூப்பர்.” என்று சொல்லி சிரிக்க… மேடையில் ஓரமாக நின்ற மீரா அவர்கள் பேசுவதைக் கேட்டு அதிர்ந்தாள்.

மேடையில் இருந்து கீழே இறங்கிய சஞ்சனாவும், அவள் தோழிகளும் அர்ஜுன் அமர்ந்திருந்த இடத்தின் அருகே சென்று அமர்ந்தனர். சஞ்சனா அப்போதுதான் அங்கிருந்த அர்ஜுனை பார்ப்பது போல் பார்த்து, “நீங்களும் இங்க தான் இருக்கீங்களா…” என்றவள், அவள் தோழிகளிடம் அர்ஜுனை அறிமுகபடுத்த… அவள் தோழிகளில் ஒருத்திநீங்க பார்க்க ஆக்டர் விஜய் மாதிரி இருக்கீங்க.” என்று சொல்ல…. அர்ஜுன் சத்தமாகச் சிரித்தான்.

நான் விஜய் மாதிரி இருக்கேனா…” என்றவன், அருகில் இருந்த சூர்யாவை பார்த்துக் கண் சிமிட்டிவிட்டு, “அப்புறம் வேற யார் மாதிரி இருக்கேன்.” என்று ஆர்வமாகக் கேட்பது போல் கேட்க..

நிஜமா தான் சொல்றேன்.” என்ற அந்தத் தோழி சஞ்சனாவை பார்த்து, “இவரு பார்க்க ஆக்டர் விஜய் மாதிரிதான இருக்காரு…” என்று கேட்க, சஞ்சனாவும் ஆமாம் என்று அர்ஜுனை பார்த்து வெட்கப்பட… இதை எல்லாம் மேடையில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த மீராவின் ரத்த அழுத்தம் ஏறியது.

அர்ஜுனும், சூர்யாவும் அடக்க முடியாமல் சிரித்துக் கொண்டிருந்தனர். ஆரு மேடைக்கு வந்ததும், மீரா கீழே இறங்கி வந்தவள், அர்ஜுனின் பெரியம்மா அருகில் சென்று அமர்ந்தாள்.

நான் விஜய் மாதிரி இருக்கேனா…. அப்படியே இந்த மண்டபத்தில யாரு எனக்குப் பொருத்தமா இருக்காங்கன்னு சொன்னீங்கன்னா, எனக்குக் கொஞ்சம் வசதியா இருக்கும்.” அர்ஜுன் வேண்டுமென்றே சத்தமாகச் சொல்ல… மீரா அர்ஜுனை பார்த்து முறைக்க….

அவன் மீராவை கண்டு கொள்ளாமல்பரவாயில்லை சொல்லுங்க.” என்று மீண்டும் கேட்க… தோழிகள் கூட்டத்திற்குச் சஞ்சனாவின் பெயரை சொல்லலமா வேண்டாமா என்று தெரியவில்லை. இன்னொன்று அவர்களுக்கே அப்படிச் சொல்ல மனது இல்லை. அவர்கள் என்ன சொல்வது என்று தெரியாமல் முழிக்க…

அர்ஜுனின் பெரியம்மா நான் சொல்றேன் என்றவர், மண்டபத்தைச் சுற்றி பார்க்க, எல்லோரும் அவர் யாரை சொல்ல போகிறாரோ என்று ஆவலாகப் பார்த்தனர். மீரா இது வேறயா என்ற நினைத்தவள், அர்ஜுனை பார்த்து மீண்டும் முறைத்தாள்.

அர்ஜுனின் பெரியம்மா, “நம்ம மீரா தான் பொருத்தமா இருப்பா.” என்று சொல்ல…. அர்ஜுன், மீரா இருவரின் முகமும் மலர்ந்தது. ஆனால் அதை மற்றவர்கள் பார்க்கும் முன் மறைத்தனர். தோழிகள் கூட்டம் யார் மீரா என்று கேட்க…. சூர்யா மீராவை காட்டினான்.

மீராவை பார்த்ததும் சஞ்சனாவின் தோழிகள் இவ்வளவு அழகா என்று வியந்தவர்கள், சஞ்சனாவை சாரி என்பது போல் ஒரு பார்வை பார்த்துவிட்டு, அர்ஜுனிடம் விடைபெற்று சென்றனர். சஞ்சனாவும் மேடைக்குச் சென்றாள்.

அர்ஜுன் அவன் பெரியம்மாவிடம்மீராவை போய் எப்படிச் சொன்னீங்க?” என்று வியக்க…

அந்தப் பொண்ணுங்க உன்கிட்ட ஜொள்ளுவிட… உன்னை விஜய்னு சொன்னாங்க, நான் நீ மீராவை பார்த்து ஜொள்ளு விடுறதை வைத்து சொன்னேன். நான் சொன்னது சரியா?” பெரியம்மா அர்ஜுனை ஆவலாகப் பார்க்க….

அர்ஜுன் சிரித்துக் கொண்டே தன் தலையைக் கோதியவன், “அப்படியா?” என்று அவரையே பதிலுக்குக் கேட்டுவிட்டு அங்கிருந்து நழுவினான்.

கத்திரிக்காய் முத்தினா கடை தெருவுக்கு வந்து தான ஆகணும். அப்ப இருக்கு உனக்கு என்று நினைத்த பெரியம்மா மீராவை பார்க்க…. அவள் இவர்கள் பேசியது எதையும் கேட்காதது போல் மேடையையே பார்த்து கொண்டிருந்தாள். பெரியம்மா, என்ன ஒரு ஆக்டிங்டா சாமி, இப்பவே கண்ணைக் கட்டுதே என்று சொல்லிக்கொண்டே சாப்பிட சென்றார்.

Advertisement

Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!