Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

உனக்குள் என் உயிரே

உனக்குள் என் உயிரே 18 1

உனக்குள் என் உயிரே


அத்தியாயம் 18

மீரா வீட்டுக்கு வந்ததும், வருண் அவளோடு பேசாமல் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டிருந்தான்.

மீராஎன்ன வருண் யார் மேல கோபம்?”

உன் மேலே தான். என்னை விட்டுட்டு நீ மட்டும் கல்யாணத்துக்குப் போயிட்ட இல்லை…இங்க எனக்கு ஒரே போர் அடிச்சுது.”

எனக்குக் கூட உன்னை அழைச்சிட்டு போகணும்னு தான் ஆசை, உங்க அம்மா விட மாட்டங்க. நானே ரொம்ப வருஷம் கழிச்சு, இப்பத்தான் ஒரு கல்யாணத்துக்குப் போயிருக்கேன்.”

சரி விடு, கல்யாணம் எப்படி நடந்துச்சு… நீ என்ஜாய் பண்ணியா…”

ம்ம்… ரொம்ப நல்லா நடந்தது. அவங்க சொந்தகாரங்க எல்லாம் ரொம்ப நல்ல மாதிரி, நல்லா என்ஜாய் பண்ணேன். வர்ற சண்டே இங்க வரவேற்பு இருக்கு, நாம ரெண்டு பேரும் போகலாம்.” மீரா சமாதானம் சொல்ல…. வருணும் சரி என்று கேட்டுக் கொண்டான்.

அன்று இரவு அர்ஜுன் மீராவிற்கு அவர்கள் இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களைச் செல்லில் அனுப்பி இருந்தான். இருவரும் ஒருவருக்கொருவர் பொருத்தமாக இருந்தனர். மீரா போட்டோ பார்த்துக் கொண்டிருக்கும் போதே… அர்ஜுன் போன் செய்தான்.

ஹாய் மீரா, போட்டோ பார்த்தியா நல்லா இருக்கா?”

ம்ம்…சூப்பர்.”

அப்புறம் நல்லா ரெஸ்ட் எடு… ரொம்ப அலைச்சல் தான.”

ஆமாம், நீங்களும் ரெஸ்ட் எடுங்க.”

நான் எங்க ரெஸ்ட் எடுக்கிறது, ஆதி கொஞ்ச நாள் கடைக்கு வர மாட்டான். ஹனிமூன் போறான். நான் தான் அவனுக்குப் பதில் பார்திக்கணும். அப்புறம் ஆஸ்திரேலியா போகிற வேலையும் பார்க்கணும்.” என்றதும், மீரா அமைதியாகி விட….

என்னடா சைலென்ட் ஆகிட்ட… ரெண்டு வருஷம் தான சீக்கிரம் போய்டும், முடிஞ்சா நான் நடுவுல வரேன்.” அர்ஜுன் சமாதானம் செய்ய… மீரா அப்போதும் மௌனமாகவே இருந்தாள்.

மீரா, நான் இதுவரை வெளிய ஹஸ்டல்ல கூடத் தங்கினது இல்லை, எனக்கே இப்ப வெளிநாடு போறது கஷ்டமா இருக்கு. இதுல நீ வேற இப்படி இருந்தா… எனக்குக் கிளம்பவே மூட் இருக்காது. இன்னும் நான் எதுவும் எடுத்து வைக்கவே ஆரம்பிக்கலை, விசா வந்துட்டா…. நான் எப்ப வேணா கிளம்புற மாதிரி இருக்கும்.”

மீரா தன்னைத் தேற்றிக் கொண்டு, “நீங்க நல்ல படியா போய் உங்க படிப்பை முடிச்சிட்டு வாங்க. இப்ப வருணும் இங்க வந்துட்டான். ஆரு, அங்கிள், ஆன்டி, ஆதி அத்தான், ரஞ்சனா அக்கா எல்லோரும் தான் இருக்காங்களே… எனக்கு ஒன்னும் கஷ்டம் இல்லை. நான் இருந்துப்பேன்.” என்றாள்.

மீரா… நான் ஆஸ்திரேலியா போறது ஒரு வகையில நமக்கு ஸேப்தான் ஏன் தெரியுமா? நமக்கு இன்னும் கல்யாணம் ஆக நாலு வருஷமாவது ஆகும். நீ இப்படி என்னைப் புடவை கட்டி எல்லாம் மயக்கினேன்னு வை, எனக்கு என்னைக் கன்ட்ரோல் பண்றது ரொம்பக் கஷ்டம்.” அர்ஜுன் சிரிக்க…

நான் புடவை கட்டினா உங்களுக்கு என்ன கஷ்டம்?”

ஏன்னு உனக்குத் தெரியாது, நான் சொல்லி கேட்கணும்னு ஆசைபடற… ம்ம்… சரி சொல்றேன். அது கல்யாணத்துக்கு முன்னாடியே….” என அர்ஜுன் ஆரம்பிக்க…

மீரா, “போதும் நிறுத்துங்க” என்றாள்.

அர்ஜுன், “அதெல்லாம் முடியாது… நான் சொல்ல வந்ததைச் சொல்லிட்டு தான் விடுவேன்.” என வம்பு பண்ண…

நீங்க ஒன்னும் சொல்ல வேண்டாம். நீங்க என்ன சொல்லவரீங்கன்னு…எனக்கு புரிஞ்சிடுச்சு. நீங்க ரெண்டு வருஷம் இல்லை… நாலு வருஷம் கழிச்சு… நம்ம கல்யாணத்துக்கு முன்னாடி நாள் வாங்க போதும். ஆளை விடுங்க குட் நைட்.” என்று சொல்லி மீரா போன்னை வைக்க…. அர்ஜுனும் சிரித்துக் கொண்டே போன்னை வைத்தான்.

மீரா அதன்பிறகு தினமுமே அர்ஜுன் வீட்டிற்கு வருவாள். இன்னும் ஆதியின் திருமண வரவேற்பு இருப்பதால்… நெருங்கிய உறவினர்கள் தங்கி இருந்தனர். அவர்களில் பெரியம்மாவும் ஒருவர். அவர் ஆருவோடும், மீராவோடும் சேர்ந்துகொள்ள… மூவரும் சேர்ந்து ஊர் சுற்றுவது இல்லையென்றால் அரட்டை அடிப்பது என்று பொழுது நன்றாகவே சென்றது. மதிய வேளையில் அர்ஜுனும் இவர்களோடு சேர்ந்து கொள்வான்.

வெள்ளிகிழமை காலையில் ஆதித்யாவும் ரஞ்சனாவும் வந்தனர். வித்யா அவர்கள் இருவரையும் வாசலில் நிற்க வைத்து ஆரத்தி சுற்றி வரவேற்றார். ரஞ்சனா சந்தோஷமாக வலது கால் வைத்து உள்ளே வந்தாள். அவர்களோடு சஞ்சனாவும் வந்தது தான் தொல்லை.

வித்யா சமையல் அறைக்குச் சென்று அவர்களுக்குக் காபி கலக்க…உன்னோட சம்பந்தி அம்மாவுக்குக் கொஞ்சம் கூட அறிவு இல்லையா… இப்படித் தான் புதுசா கல்யாணமாகி முதல் முதல்லா புகுந்த வீட்டுக்கு வர்ற பொண்ணோட கல்யாணம் ஆகாத பொண்ண துணைக்கு அனுப்பி வைப்பாங்களா?” பெரியம்மா புலம்ப…

நானும் அது தான் நினைச்சேன் கா. ஆனா… நாம என்ன செய்ய முடியும் விடு, வேலையைப் பார்ப்போம்.” என்றார் வித்யா.

ஆதி ரஞ்சனாவை அழைத்துக் கொண்டு அவன் அறைக்குச் செல்ல… வித்யா ஆருவிடம் சஞ்சனாவை அவள் அறைக்கு அழைத்துக் கொண்டு செல்ல சொன்னார்.
அவர் சொன்னதைக் கேட்டு அவரை முறைத்த ஆரு… அவளின் தாத்தா பாட்டியிடம் சென்று, “நீங்க ரெண்டு பேரும் என்னோட ரூம்கு வாங்க.” என்று விடாப்பிடியாக அவர்களின் பெட்டிகளைக் கொண்டு போய்… அவள் அறையில் வைத்தவள், சஞ்சனாவை கீழே இருந்த விருந்தினர் அறையில் தங்கிக் கொள்ளச் சொன்னாள்.

சஞ்சனாவிற்குமே ஆருவுடன் தங்க விருப்பம் இல்லை. அதனால் சந்தோஷமாக அவளுக்குக் கொடுத்த அறைக்குச் சென்றாள்.

அன்று ஆதியும், ரஞ்சனாவும் வருவதால்… மீரா காலை பத்து மணிக்கே அர்ஜுனின் வீட்டுக்கு வந்தாள். துள்ளலோடு உள்ளே வந்தவள், அங்கே சஞ்சனா ஹாலில் அமர்ந்திருப்பதைப் பார்த்ததும், அவள் துள்ளல் அடங்கி மெதுவாக நடந்து உள்ளே சென்றாள். சஞ்சனாவும் இவ எதுக்கு வர்றா என்பதைப் போல் தான் மீராவை பார்த்தாள்.

மீரா நேராகச் சென்று வித்யாவின் அருகே நிற்க… வித்யாவா மீரா சாப்பிடு.” என்றார்.

இல்லை ஆன்டி, சாப்பிட்டு தான் வந்தேன். எங்க ரஞ்சனா அக்கா?”

மேலே அவ ரூம்ல இருக்கா, இன்னும் காலை டிபன் சாப்பிடலை, நீ போய் அவங்களைச் சாப்பிட வர சொல்றியா?” என்றார். அவருக்குத் தெரியும் மீரா பார்த்து நடந்து கொள்வாள் என்று. அதனால்தான் அவளை அனுப்பினார்.

மீராவும் மாடிக்கு சென்றவள், ஆதியின் அறை கதவை தட்டிவிட்டு தள்ளி வந்து நின்று கொண்டாள். ஆதி வந்து கதவை திறந்தவன், அங்கே யாரும் இல்லாததால் சற்று வெளியே வந்து பார்க்க… மீரா நின்று கொண்டிருந்தாள்.

மீராவை பார்த்ததும் முகம் மலர்ந்த ஆதி, “ஹாய் மீரா…வா..” என்று மீராவை உள்ளே அழைக்க… அவள் உள்ளே செல்லாமல், “உங்களை டிபன் சாப்பிட வர சொன்னாங்க.” என்றாள்.

பரவாயில்லை உள்ளே வா.” என்றான் ஆதி. மீரா தயங்கி கொண்டே உள்ளே செல்ல… அங்கே ரஞ்சனா முகத்திற்குப் பவுடர் போட்டு கொண்டிருந்தவள், மீராவை பார்த்து புன்னகையுடன்வா மீரா.” என்றாள்.

ஆன்டி, உங்களை டிபன் சாப்பிட கூப்பிடாங்க.” மீரா அவளிடமும் சொல்ல…

இதோ கிளம்பிட்டேன், வந்து கொஞ்ச நேரம் தூங்கிட்டோம், அது தான் லேட் ஆகிடுச்சு.” என்றவள், நெற்றியில் பொட்டு வைத்துக் கொண்டு போலாமா என்று கேட்க… அப்போது அர்ஜுன் ஆதியின் அறை கதவை தட்டிவிட்டு உள்ளே வந்தான். 



Advertisement


அர்ஜுன் ரஞ்சனாவை பார்த்துவாங்க அண்ணி.” என்றான். ரஞ்சனா அர்ஜுனை பார்த்து புன்னகைத்தாள்.

ஆதியும், ரஞ்சனாவும் வரும்போது அர்ஜுன் தூங்கி கொண்டிருந்தான். அதனால் அவர்களை இப்போதுதான் பார்கிறான். ஆதி அர்ஜுன் அருகில் வந்து அவன் தோளில் கை போட…. அப்போது உள்ளே வந்த ஆரு, “ஆரம்பிச்சுடானுங்க டா பாசமலர் படம் காட்ட…” என்றவள், அப்போது தான் மீரா அங்கிருப்பதைப் பார்த்து, “ஹாய் மீரா… நீ எப்போ வந்த?” எனக் கேட்க… மீராஇப்ப தான் வந்தேன்.” என்றாள்.

திருச்சியில எங்கையாவது வெளியே போனீங்களா ஆதி….”

ஆமாம் அர்ஜுன், முக்கியமா பார்க்க வேண்டிய இடம் எல்லாம் பார்த்தாச்சு.”

ஆருசாப்பிட போகலாமா… அம்மா ரொம்ப நேரமா வெயிட் பண்றாங்க.” என்றதும், எல்லோரும் கீழே சென்றனர்.

அவர்களைப் பார்த்த வித்யா, “வாம்மா ரஞ்சனா…” என்றவர், ரஞ்சனாவிற்கு அவரே கூந்தளில் மல்லிகை பூவை வைத்துவிட்டார். எல்லோரும் சென்று சாப்பிட அமர்ந்தனர். அது ஆறு பேர் அமரும் டைனிங் டேபிள். ஆதியும், ரஞ்சனாவும் அருகருகே அமர, ரஞ்சனாவை அடுத்து ஆரு அமர்ந்தாள். ஆதிக்கு அடுத்து அர்ஜுன் அமர… அவனுக்கு அடுத்து சஞ்சனா அமர்ந்தாள்.

வித்யாவிற்கு உதவச் சமையல் அறையில் இருந்து வெண் பொங்கலை கொண்டு வந்து டைனிங் டேபிளில் வைத்த மீரா… அப்போதுதான் அர்ஜுன் பக்கத்தில் சஞ்சனா அமர்ந்திருப்பதைப் பார்த்தாள். ஆரு பக்கத்தில் இருக்கும் சேர் காலியாகத் தான் இருந்தது. அதில் உட்காராமல் அர்ஜுனின் அருகே அமர்ந்திருப்பதைப் பார்த்து, அவளுக்குக் கல்யாணத்தின் போது சஞ்சனாவின் தோழிகள் பேசியது நினைவுக்கு வர…. அவள் அர்ஜுனை பார்த்து முறைத்தாள்.

அர்ஜுனுக்கு அவள் எதற்கு முறைக்கிறாள் என்று புரியவில்லை. வித்யா எல்லோருக்கும் வெண் பொங்கல் வைக்க… மீரா சட்னி ஊற்றிக்கொண்டே வந்தவள், அர்ஜுனுக்கு ஊற்றும் போது… ஒரு கரண்டி நிறையச் சட்னி எடுத்து, தட்டில் ஊற்றுவதற்குப் பதில் வேண்டுமென்றே அவன் மடியில் ஊற்ற…

மீரா… என்ன பண்ற?” அர்ஜுன் பதறி எழுந்தான்.சாரி அர்ஜுன், கவனிக்காம ஊத்திட்டேன்.மீரா மன்னிப்பு கேட்க… வித்யாபரவாயில்லை விடு மீரா.” என்றவர், அர்ஜுனிடம்டிரஸ் மாத்திட்டு வா.” என்றார்.

ஆரு சிரித்துக் கொண்டேநீ தப்பிச்சடா… அவ மட்டும் சாம்பார ஊத்தி இருக்கணும்….. வெந்திருக்கும்.” என்றதும், அர்ஜுனும் சிரித்துக் கொண்டே உடை மாற்ற சென்றான். அர்ஜுன் உடை மாற்றிவிட்டு வரும்போது, மீரா படிக்கட்டில் நின்று கொண்டிருந்தாள்.

அர்ஜுன் அவளை என்ன என்பது போல் பார்க்க…திரும்பப் போய் அவ பக்கதில உட்கார்தீங்க, இந்தத் தடவை சாம்பார் தான்.” மீரா மிரட்ட… அர்ஜுன்அப்ப நீ தெரியாம ஊத்தல… வேணும்னு தான் ஊத்தி இருக்க.” என்றதும், மீரா ஆமாம் என்றாள்.

அர்ஜுனுக்குச் சுள்ளென்று கோபம் வந்தது. இப்ப அவ பக்கத்தில் உட்கார்ந்து சாப்பிட்டா என்ன? எதுக்கு இவ ஓவரா பண்றா? என்று நினைத்தவன், சாப்பிட செல்லாமல் வெளியே செல்ல…

எங்கடா போற?” வித்யா கேட்க… அர்ஜுன் கடைக்கு என்றான்.டேய் சாப்டிட்டு போடா….” வித்யா கத்த…. அர்ஜுன் அவர் சொல்வதைக் காதில் வாங்காமல் சென்று கொண்டே இருந்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!