Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

உனக்குள் என் உயிரே

உனக்குள் என் உயிரே 27

உனக்குள் என் உயிரே


அத்தியாயம் 27

சூர்யா குளியல் அறையில் இருந்து வெளியே வந்ததும், தன் செல்லை தான் முதலில் எடுத்துப் பார்த்தான். அவன் குளியல் அறையில் இருந்த போது அவனுக்குச் செல் அடிக்கும் சத்தம் கேட்டது. அதனால் ஆரு அழைத்திருப்பாளோ என்று ஆர்வமாக வந்து எடுத்துப் பார்த்தான். ஆனால் அதில் எதுவும் மிஸ்டு கால் இல்லாததால் குழம்பியவன், அப்போது தான் அர்ஜுனை தேட…. அவன் வீட்டிலேயே இல்லை. சரி எங்கோ வெளியே போய் இருக்கிறான் என்று நினைத்த சூர்யா, ஆருவுடன் பேசுவோம் என்று அவளை அழைத்தான்.

ஆரு போன்னை எடுத்தவள், “சூர்யா…” என்று அழ ஆரம்பிக்க… சூர்யாவிற்கு எதற்கு அழுகிறாள் என்று ஒன்றும் புரியவில்லை… சூர்யாஎன்ன ஆச்சு ஆரு” என்று பதற… அரு அழுதாளே தவிர ஒன்றும் சொல்லவில்லை.

காரணத்தைச் சொல்லிட்டு அழு ஆரு, நீ இப்படி அழுதா நான் என்னனு நினைக்கிறது.” சூர்யா கோபப்பட… ஆரு அதற்கும் அழுதவள், அர்ஜுன்… அர்ஜுன்… என்று மட்டும் திரும்ப, திரும்பச் சொல்ல…

அர்ஜுன் உன்னைத் திட்டினானா…” என்று சூர்யா கேட்க…

இல்ல… நான் உங்களுக்குப் போன் பண்ணேன், அர்ஜுன் தான் போன்னை எடுத்தான். அது தெரியாம நான் பேச… அவனுக்கு நம்ம விஷயம் தெரிஞ்சிடுச்சு… எனக்குப் பயமா இருக்கு…” என்று ஆரு மீண்டும் அழுதாள்.

அப்போதுதான் சூர்யாவிற்குப் புரிந்தது. அவன் குளியல் அறையில் இருந்த போது செல் அடித்தது நிஜம் தான். அர்ஜுன் தான் எடுத்திருக்கிறான், கண்டிப்பாக ஹனி என்ற பெயரையும் பார்த்திருப்பான் என்று புரிந்தது. ஆனால் இனி என்ன செய்வது என்று தான் தெரியவில்லை.

தான் முதலிலேயே தங்கள் விஷயத்தை அர்ஜுனிடம் சொல்லி இருக்க வேண்டும். அவனுக்குக் கண்டிப்பாக அதிர்ச்சியாக இருந்திருக்கும் என்று நினைத்தவன், அதையே ஆருவிடம் சொல்லி, “நீ அவனுக்குப் போன் செஞ்சு பேசு, என்னைக்கு இருந்தாலும் அவனுக்குத் தெரிய போற விஷயம் தான். அதனால அழாம பேசு, நானும் அவன்கிட்ட பேசுறேன்.” என்று சொல்லி போன்னை வைத்தான்.

ஆருவுக்குப் பயமாக இருந்ததால்… அவள் அர்ஜுனை அழைக்கவில்லை. சூர்யா அர்ஜுனுக்காகக் காத்திருக்க… அர்ஜுன் இரவு நேரம் கழித்து வந்தவன், சூர்யாவை நிமிர்ந்தும் பார்க்கவில்லை. நேராகச் சென்று படுத்துவிட்டான்.

சூர்யா சாப்பிட அழைக்க… அர்ஜுன் வெளியே சாப்பிட்டுவிட்டதாகச் சொல்லி திரும்பி படுத்துக் கொண்டான். சூர்யா அர்ஜுன் இப்படி நடந்து கொள்வான் என்று எதிர்பார்க்கவில்லை.

ஏன் இன்று அர்ஜுன் தன்னை அழைக்கவில்லை என்று நினைத்த மீரா…. அவளே அவனை அழைக்க…மீரா, நான் ரொம்ப டையர்டா இருக்கேன், நாளைக்குப் பேசுறேன்.” அர்ஜுன் சொல்ல… மீராவும் சரி என்றாள். அவளுக்கு எதுவோ சரி இல்லை என்று புரிந்தது, அர்ஜுன் இதுவரை இப்படிப் பேசியது இல்லை.

ரஞ்சனாவின் பெற்றோர் ஊருக்கு செல்வதால் கணேசனும், ஆதியும் கடையில் இருந்து சீக்கிரம் வீட்டுக்கு வந்தனர். எல்லோரும் சேர்ந்து இரவு உணவு அருந்திவிட்டு ஹாலில் அமர்ந்து பேசும் போது ரஞ்சனாவின் அப்பா கணேசனிடம் மெதுவாக, “நாங்க சஞ்சனா இந்த வருஷம் படிப்பை முடிச்சதும் கல்யாணம் பண்ணிடலாம்னு பார்க்கிறோம். உங்க வீட்லயும் கல்யாண வயசுல ஒரு மாப்பிள்ளை இருப்பதால்… எதுக்கும் உங்கட்ட ஒரு வாரத்தைச் சொல்லிடலாம்னு.” என்று அவர் இழுக்க… அவர் சொன்னதைக் கேட்ட கணேசன் குடும்பத்தினர் அதிர்ந்தனர். ஆதி ரஞ்சனாவை முறைக்க… ஆரு என்ன ஆகப் போகுதோ என்று டென்ஷனாக இருந்தாள்.

நாங்க அர்ஜுனுக்குக் கல்யாணம் பண்ண எப்படியும் மூன்னு வருஷமாவது ஆகும். முதல்ல ஆருவுக்குப் பண்ணிட்டு, ரெண்டு வருஷம் கழிச்சு தான் அவனைப் பற்றி யோசிக்கணும். அதனால நீங்க காத்திருக்க வேண்டாம்.” கணேசன் நாசுக்காகத் தங்கள் விருப்பமின்மையைச் சொல்ல… சஞ்சனாவின் முகம் வாடிவிட்டது.

அதைக் கவனித்த அவளின் அப்பா, “இல்லை சஞ்சனாவை அர்ஜுனுக்குச் செய்ய உங்களுக்கு விருப்பம் என்றால், நாங்க காத்திருக்கோம்.” என்றார்.

இதுக்கு மேலே எப்படி மறுப்பைச் சொல்றது என்று எரிச்சல் அடைந்த கணேசன் வித்யாவை பார்க்க… அவரின் பார்வையைப் புரிந்த வித்யா, “அர்ஜுனும், சஞ்சனாவும் ஒரே வருஷம் பிறந்திருக்காங்க. ரெண்டு பேருக்கும் பதினொரு மாசம் தான் வித்யாசம். கல்யாணம் பண்ண குறைஞ்சது ரெண்டு வருஷம் வித்தியாசம் இருந்தா தான் நல்லா இருக்கும்.” என்றார்.

இப்போது சஞ்சனாவின் அப்பாவால் எதுவும் பேச முடியாமல் போய் விட்டது.நீங்க சொல்றது சரி தான். சஞ்சனாவை என் சம்சாரத்தோட அண்ணன் வீட்ல கேட்கிறாங்க.” என்று சொல்ல… கணேசனும், வித்யாவும் சேர்ந்துநல்லது நீங்க அங்கயே செய்ங்க.” என்று முடித்துவிட்டனர்.

சஞ்சனாவின் பெற்றோருக்கு இப்போது நன்றாகப் புரிந்துவிட்டது. அர்ஜுனுக்குச் சஞ்சனாவை செய்ய அவர்களுக்குத் துளியும் விருப்பம் இல்லை என்று. சஞ்சனாவின் முகத்தைப் பார்த்து ஆருவுக்குச் சிரிப்பு வர…. அதை அவள் கஷ்டப்பட்டு அடக்குவதைப் பார்த்து சஞ்சனாவிற்கு ஆத்திரம் வந்தது.

நானும் பார்கிறேன், உங்க அண்ணனுக்கு எந்த உலக அழகி வரான்னு என்று மனதில் நினைத்தவள், வேகமாக அறைக்குள் சென்று பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியே வந்து தன் பெற்றோரை அழைக்க… அவர்கள் இன்னும் நேரம் இருக்கிறது என்று சொல்லியும் கேட்காமல், அவர்களை இழுத்துக் கொண்டு சென்றாள். அவர்களும் சஞ்சனா செய்த கலாட்டவில் சரியாக விடை பெறாமலே கிளம்பி சென்றனர்.

சஞ்சனாவின் நடவடிக்கையைப் பார்த்த கணேசனும், வித்யாவும் நல்லவேளை ரஞ்சனா இந்தப் பெண்ணைப் போல் இல்லை என்று நிம்மதி அடைந்தனர்.

ஆதி தங்கள் அறைக்கு வந்த போது…. ரஞ்சனா குழந்தைக்குப் பால் கொடுத்து கொண்டிருந்தாள். அவள் கண்கள் கண்ணீரால் நிறைந்து இருந்தது.

அதைப் பார்த்த ஆதிக்குக் கோபம் வரநீ இப்ப எதுக்கு அழற? உனக்குத் தான் அர்ஜுன் மீராவை லவ் பண்றான்னு தெரியும் இல்ல…. அப்புறம் எதுக்கு உங்க அப்பாவை சஞ்சனாவுக்கு அர்ஜுனை மாப்பிள்ளை கேட்க விட்ட, உனக்குத் தெரியாதுன்னு சொல்லாத…” என்றான்.

அத்தைக்கு இன்னும் அர்ஜுன் மீரா விஷயம் தெரியாது. எங்க வீட்ல சொன்னா… அவங்க காதுக்குப் போய்டும்னு தான் சொல்லலை… அவங்களே நேர்ல பேசிக்கட்டும்னு நினைச்சேன். இது ஒரு தப்பா… நீங்க ஏன் என்னை எப்பவும் அர்ஜுன் மீராவை நான் தான் பிரிக்கப் போற வில்லி மாதிரியே பேசுறீங்களோ தெரியலை.”

எனக்கு என் தங்கை இந்த வீட்டுக்கு மருமகளா வரணும்னு ஆசைதான், இல்லைன்னு சொல்லலை. ஆனா… அர்ஜுனுக்கு மீராவை தான் பிடிச்சிருக்குன்னு தெரிஞ்சதுக்கு அப்புறம் நான் என்னை மாத்திகிட்டேன்.” என்றாள் ரஞ்சனா.

முழு மனசோட நீயே ஏத்துகிட்டதுக்கு அப்புறம், எதுக்கு அழற?” ஆதி கேட்க…

அது எங்க அப்பா அம்மாவை நினைச்சு. சஞ்சனா தனக்கு ஒன்னு கிடைச்சிட்டா எப்படிச் சந்தோஷத்துல தலை, கால் புரியாம ஆடுவாளோ… அதே மாதிரி அவ நினைச்சது நடக்கலைனாலும், எல்லரையும் ரொம்ப வேதனை படுத்துவா… இனி அவங்களை என்ன பாடு படுத்த போறாளோ… அதை நினைச்சு தான் கவலை பட்டேன், போதுமா…” சொல்லிவிட்டு ரஞ்சனா மேலும் அழுதாள்.

ஆதி சென்று ரஞ்சனாவை அணைத்தவன், அவள் முதுகை வருடி…சாரி டி, தெரியாம பேசிட்டேன். உங்க அம்மா அப்பாவை நாம பார்த்துக்கலாம்னு நான் ஏற்கனவே சொல்லி இருக்கேன். நீ வீணா மனசை போட்டு குழப்பிக்காத… சஞ்சனா கல்யாணம் முடியட்டும், அவ எப்படி இருக்கான்னு பார்த்துட்டு முடிவு எடுக்கலாம்.” ஆதி ரஞ்சனாவை தேற்ற… ரஞ்சனாவும் சமாதானம் அடைந்தாள்.

ரஞ்சனாவின் மடியில் இருந்த ஐஷு அது பாட்டுக்கு பால் குடித்துக் கொண்டிருந்தது. அதைப் பார்த்ததும் ஆதிக்குச் சிரிப்பு வர, “இங்க பாரு அப்பாவும் , அம்மாவும் சண்டை போட்டாலும்…. கண்டுக்காம ஒன்னு இங்க அதோட வேலைய கரெக்டா பண்ணுது.” என்றவன், தொடர்ந்துஐஷு மேடம், நாளைக்கும் கொஞ்சம் மிச்சம் வைங்க.” என்று குழந்தையைக் கிண்டல் செய்ய…குழந்தைய பார்த்து கண்ணு வைக்காதீங்க.” என்று ரஞ்சனா சிணுங்கினாள்.

மறுநாள் காலை எழுந்த அர்ஜுன் எப்போதும் போல் சூர்யாவுடன் பேசினான். அவன் சூர்யாவிடம் அவர்கள் காதல் விஷயம் தெரிந்த மாதிரியே காட்டிகொள்ளாமல், கிளம்பி கல்லூரிக்கு செல்ல, சூர்யாவுக்கு இப்போது என்ன செய்வது என்று புரியவில்லை.

அன்றும் அர்ஜுனாக மீராவை அழைக்கவில்லை…. மீரா தான் அர்ஜுனை அழைத்தாள்.

என்ன ஆச்சு அர்ஜுன்? என்கிட்டே சொல்ல மாடீங்களா?” மீரா மெதுவாகக் கேட்க…

சூர்யாவும், ஆருவும் லவ் பண்றாங்க உனக்குத் தெரியுமா?” என்று அர்ஜுன் பதிலுக்குக் கேட்க…

மீராஅப்படியா”…. என்று சந்தோஷபட்டவள், “எனக்கு ஆதி அத்தான் கல்யாணத்தில இருந்தே சூர்யா மேல டவுட் தான்.” என்றாள்.

ஆரு உன்கிட்ட இதைப் பத்தி எதுவும் சொல்லலையா…”

ம்ம்… இல்லை, ஆனா நான் அவங்க பேசிகிட்டதை வச்சு இதை எதிர் பார்த்தேன். நீங்க ஏன் அர்ஜுன் இதுக்குப் போய் டல்லா இருக்கீங்க?”

நான் உன்னை லவ் பண்றேன்னு உன்கிட்ட சொல்றதுக்கு முன்னாடி ஆதிகிட்டையும், ஆருகிட்டையும் தான் சொன்னேன், ஆனா ஆரு….” என்று அர்ஜுன் சொல்லிக்கொண்டு இருக்கும் போதே…. மீரா குறுக்கிட்டுஅர்ஜுன்… நீங்க வேற டைப், ஆரு வேற டைப். அவளுக்கு உங்ககிட்ட சொல்ல பயமா இருந்திருக்கலாம்.” என்றாள்.

நானும் அதே தான் மீரா சொல்றேன். ஆரு என்ன தான் வாய் பேசினாலும், அம்மா ஒரு அதட்டு அதட்டினா பயந்து அவங்க பேச்ச தான் கேட்பா… அவ அவளோட லவ்ல உறுதியா இருப்பாளா… இவளால சூர்யா தான் பாதிக்கபடுவான், அதுதான் எனக்குக் கவலையா இருக்கு.” என்றான் அர்ஜுன்.

அர்ஜுன் சொல்வது உண்மை என்பதால்… சிறிது நேரம் யோசித்த மீராநீங்க சொன்னா உங்க அம்மா கேட்க மாட்டாங்களா அர்ஜுன்.” என்று கேட்க…

ம்ம் தெரியலை மீரா… என்ன சொல்வாங்கன்னு, ஆனா… நம்ம விஷயம் தெரிஞ்சா… நம்மைப் பார்த்து தான் ஆரு கெட்டு போய்ட்டான்னு கண்டிப்பா சொல்வாங்க.” என்றான் அர்ஜுன் யோசனையாக….

இப்ப என்ன அர்ஜுன் பண்றது?” என்று மீரா கவலைப்பட….

சரி அதை அப்புறம் பார்ப்போம். நீ இப்ப எனக்குச் சமையல் சொல்லி தரணுமே.” என்றான் அர்ஜுன் சிரித்துக் கொண்டே…
நீங்க எதுக்குச் சமைக்கணும்? அது தான் சூர்யா அண்ணன் பண்ணுவாங்களே…” என்றாள் மீரா.

இதனை நாள் அவன் என்னோட ப்ரண்ட் மட்டும் தான், இனி வீட்டு மாப்பிள்ளையும் கூட… அவனை மட்டும் எப்படி வேலை வாங்குறது? நானும் செய்ய வேண்டாமா…அவன் வெளிய போய் இருக்கான். அவன் வர்றதுக்குள்ள சமைக்கிற மாதிரி எதாவது சொல்லு….”

நீங்க சொல்றது சரிதான். நான் உங்களுக்குச் சமையல் சொல்லி தரேன். நீங்க இன்னைக்குப் பெப்பர் சிக்கன் பண்ணுங்க, ரொம்ப ஈஸி…” மீரா உற்சாகமாகச் சொல்ல…

ஏய் நீ ஐயர் வீட்டு பொண்ணு தான, எனக்கே சந்தேகமா இருக்கு.” என்றான் அர்ஜுன்.

அவன் சொன்னதைக் கேட்டு சிரித்த மீராநான் டிவில பார்த்த ரெசிபி தான் சொல்ல போறேன், நானா சாப்பிட போறேன்.” என்றாள்.

யாருக்கு தெரியும், உங்க அப்பாவுக்குத் தெரியாம, உள்ள தள்றியோ என்னவோ…” அர்ஜுன் மீராவை கிண்டல் செய்ய… அதற்கு மீரா பதில் கொடுக்க… என்று இருவரும் ஒருவரை ஒருவர் கிண்டல் செய்து பேசினர்.

பின் இருவரும் ஸ்கைபில் வர…… சமையல் மேடையில் லேப்டாப்பை வைத்து விட்டு, மீரா சொல்ல சொல்ல… அர்ஜுன் பெப்பர் சிக்கன், ரசம் மற்றும் சாதம் செய்தான்.

அர்ஜுன் சமையல் முடிக்கும் போது… அங்கே வந்த சூர்யா, தான் செய்ததைச் சாப்பிட பிடிக்காமல் தான், அர்ஜுன் இப்படிச் செய்கிறான் என்று நினைத்து, “அர்ஜுன், எனக்கு என்னடா குறை? நான் உன் தங்கையை நல்லா பார்த்துக்க மாட்டேனா…நீ ஏன் டா இப்படிப் பண்ற?”என்று சண்டைக்குச் செல்ல… அவன் சொன்னதைக் கேட்டு அர்ஜுன் விழுந்து விழுந்து சிரிக்க… மீராவும் அடக்க முடியாமல் சிரித்தாள்.

சூர்யாவின் கோபம் எல்லை மீற… அவன் சென்று அர்ஜுனின் சட்டையைப் பிடிக்க…சூர்யா ஏன் இப்படிப் பண்றீங்க?” மீரா சத்தமாகக் கேட்க…பின்ன இவன் மட்டும் லவ் பண்றான், ஆனா நாங்க லவ் பண்ணா தப்பா…” சூர்யா கோபபட… 



Advertisement


அர்ஜுன் அப்படிச் சொன்னாங்களா சூர்யா. நீங்களும், ஆருவும் லவ் பண்றதை அவங்ககிட்ட நீங்க சொன்னீங்களா… அவங்களுக்கா தெரியும் போது, கொஞ்சம் ஷாக்கா இருக்கும் தான…” மீரா சொல்ல…. சூர்யா மெளனமாக இருந்தான்.

அவங்க உங்க சமையலை சாப்பிட கூடாதுன்னு இன்னைக்குச் சமைக்கலை. நீங்க இனி அவங்க வீட்டு மாப்பிள்ளை, உங்களை மட்டும் வேலை செய்ய விடுறது தப்புன்னு தான் அவங்க இன்னைக்குச் சமையல் செஞ்சாங்க…” மீரா அர்ஜுனுக்காகப் பரிந்து பேச…

சூர்யா சென்று அர்ஜுனை அனைத்து கொண்டவன்சாரி அர்ஜுன், ரெண்டு நாளா நீ பண்ண டென்ஷன்ல தப்பா நினைச்சிட்டேன்.” என மன்னிப்பு கேட்க….

பரவாயில்லை விடுடா, நான் உன்னை டென்ஷன் பண்ணது உண்மை தான..” என்றான் அர்ஜுன்.

போதும் ரெண்டு பேரும் பாசத்துல பொங்கினது, போய் நல்லா சிக்கன வெட்டுங்க.” மீரா சிரித்துக்கொண்டே சொல்ல….இன்னைக்குச் சிக்கனா….” என்று சூர்யா வாயை பிளக்க…

மீரா தான் எப்படிச் செய்யணும்னு சொல்லி தந்தா.” அர்ஜுன் சொல்ல…. சூர்யா சென்று சிறிது சிக்கனை எடுத்து வாயில் போட்டு பார்த்தவன், “ம்ம்… சூப்பர் மாமி, கலக்ரேல்….” என்று மீராவை கிண்டல் செய்ய….”ரெண்டு பேரும் போய்ச் சாப்பிடுங்க.” என்று சொல்லி மீரா தொடர்பை துண்டித்தாள்.

அர்ஜுன் சூர்யாவோடு சகஜமாக இருந்தாலும், அவனாக ஆருவை அழைத்துப் பேசவில்லை. அதேபோல் ஆருவும் பயந்து கொண்டு அர்ஜுனை அழைக்கவில்லை… அர்ஜுன் வித்யாவிடம் மட்டும் செல்லில் பேசிவிட்டு வைத்தான்.

மூன்று நாள் பொறுத்த ஆரு, நான்காவது நாள் அர்ஜுனை அழைக்க… அவன் எடுத்து சொல்லு ஆரு என்றதும்.நீ ஏன் டா என்கிட்டே பேசமாட்டேங்கிற….நீ மட்டும் லவ் பண்ற, நான் லவ் பண்ணா தப்பா… உனக்குப் பிடிக்கலைனா நான் வேணா சூர்யாகிட்ட வேண்டாம்னு சொல்லிடவா.” என்று உளற…. அர்ஜுனுக்குக் கோபம் தலைக்கு ஏறியது.

இதோ… இதுக்குத் தான், நீ லவ் பண்றேன்னு தெரிஞ்சதும் நான் பயந்தேன். நான் ரெண்டு நாள் பேசலைனதும், நீ சூர்யாகிட்ட வேண்டாம்னு சொல்வியா…. அப்ப அம்மாவுக்குத் தெரிஞ்சு அவங்க உன்கிட்ட பேசாம இருந்தா… நீ உடனே சூர்யாவை திரும்பியும் பார்க்க மாட்ட அப்படித்தான. உனக்குக் காதல்னா விளையாட்டா போயிடுச்சு இல்லை.” அவன் ஆருவை திட்ட… 


இப்ப என்ன தான் அர்ஜுன் என்னைப் பண்ண சொல்ற?…” ஆரு கேட்க….

அது உனக்குத் தான் தெரியணும். லவ் பண்ண தெரிஞ்சிது இல்ல…. லவ் பண்ணவனைக் கல்யாணம் பண்ணவும் தெரியனும்.” அர்ஜுன் சொல்ல….

அப்ப நீ எனக்கு ஹெல் பண்ண மாட்ட… சரி போ, நானே பார்த்துக்கிறேன். உன்னோட தயவு இல்லாம நான் சூர்யாவை கல்யாணம் பண்ணி காட்றேன்.” என ஆரு அர்ஜுனுக்குச் சவால் விட்டுப் போன்னை வைத்தாள்.

அர்ஜுனுக்கு ஆருவின் மீது கோபம் இல்லை. ஆனால் தைரியமாகக் காதலிக்கத் தெரிந்தது போல்… அதை வீட்டில் சொல்லி கல்யாணம் செய்து கொள்ளவும் தெரிய வேண்டும் என்று நினைத்தான்.

என்னதான் அவர்களுக்குத் தான் துணை நின்றாலும், அம்மா ஆருவிடம் கேட்கும் போது… பயத்தில் அவள் மாற்றிச் சொல்லிவிட்டாள் எல்லாம் வீணாகிவிடும். ஏற்கனவே வித்யாவிற்குக் காதல் மீது அவ்வளவு நம்பிக்கை இல்லை. அதனால் முதல் அடியை அவளே எடுத்து வைக்கட்டும், நாம் அடுத்து பார்த்துக் கொள்வோம் என்று நினைத்தவன், அதன் பிறகு அவளிடம் சூர்யாவை பற்றியோ, அவர்கள் காதல் பற்றியோ பேசவில்லை. பொதுவாகப் பேசிவிட்டு வைத்துவிடுவான்.

இப்போது அர்ஜுனும், சூர்யாவும் கல்லூரியில் ப்ராஜெக்ட் செய்து கொண்டிருந்ததால் அவர்களுக்கு முன்பு மாதிரி நேரமும் இல்லை. மீராவுக்கும் கல்லூரி ப்ராஜெக்ட் ஆரம்பிக்கப் போகிறது, அதனால் தினமும் இரவு சிறிது நேரம் செல்லில் பேசிவிட்டு வாரத்தில் ஒரு முறை தான் ஸ்கைபில் பார்த்து கொண்டனர்.

அர்ஜுன், ஆரு இடையே நடந்த வாக்குவாதம் சூர்யாவிற்கோ, மீராவுக்கோ தெரியாது.

Advertisement

Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!