Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

உனக்குள் என் உயிரே

உனக்குள் என் உயிரே 37 2

வருண் இத்தனை நாள் மீரா வராமல் இருந்ததிற்குக் காரணம் கேட்கமீரா இப்போது அவன் சின்னப் பிள்ளை இல்லை என்பதால்அவனிடம் மனம் திறந்து எல்லாவற்றையும் சொன்னாள். அவளுக்கும் அவள் மனதில் இருப்பதை யாரிடமாவது சொன்னால் தான் நிம்மதியாக இருக்கும் என்று தோன்றியது.

மீரா சொன்னதை எல்லாம் கேட்கும் போது வருணுக்கு இப்படிக் கூட ஒருவரை காதலிக்க முடியுமா என்று தோன்றியது. அவள் அர்ஜுன் மேல் உயிரையே வைத்திருந்தும், அவன் அம்மாவிற்காக அவனைப் பார்க்காமல் இருக்கிறாள் என்று தெரிந்த போது அவனுக்கு மீரா மீது மரியாதை வந்தது. அதே நேரத்தில் அர்ஜுன் குடும்பத்தார் மீது கோபமும் வந்தது.

எங்க அக்காக்கு என்ன குறைச்சல்? அவளுக்கு இருக்கும் அழகுக்கும், அறிவுக்கும் அவளுக்கு எப்பேர்பட்ட வாழ்க்கை அமையும், அவளைப் போய் எப்படி அர்ஜுனின் அம்மா வேண்டாம்னு சொல்லலாம் என்று நினைத்தான்


அக்காபோதும் நீ அவங்களுக்காகப் பார்த்தது, இனி நீ பெங்களூர் போக வேண்டாம். இங்கயே இருஅர்ஜுன் ஆஸ்திரேலியால இருந்து வரட்டும், ரெண்டுல ஒன்னு பார்க்கலாம்.”

என்னடா திடிர்னு வேலைக்குப் போகாதன்னு சொல்ற?” மீரா புரியாமல் கேட்க

இத்தனை நாள் நீயே எல்லா முடிவும் எடுத்தது போதும். இனி நாங்க சொல்றதையும் கொஞ்சம் கேளு.” என்றான் வருண்.

மீராவுக்கும் அந்த வேலை பிடிக்கவில்லைஅவளுக்கு ஏனோ அந்த வேலையில் மனம் ஒன்றவில்லை. இயந்திரத்தனமாக வேலை பார்ப்பது போல் தோன்றியது. அதோடு அவள் செய்து கொண்டிருந்த ப்ராஜெக்ட்டும் முடிந்துவிட்டது. இனி அடுத்த வாரத்தில் இருந்து புது ப்ராஜெக்ட் தான். அதனால் அவளும் தான் வேலையை விடப் போவதாக மெயில் அனுப்பினாள். அதை அர்ஜுனிடம் சொன்ன போது, அவன் மிகவும் சந்தோஷபட்டான். ஹப்பாஇனி தனியாக இருக்க மாட்டாள் என்ற நிம்மதி அவனுக்கு.

சஞ்சனாவிற்கு ஆண் குழந்தை பிறந்திருந்தது. அவளையும், குழந்தையையும் பார்க்க ரஞ்சனா சென்றாள். ஒரு வாரம் அங்கே தங்கி இருந்தவள், மெதுவாகச் சஞ்சனாவிடம் அவள் வித்யாவிடம் அர்ஜுன், மீரா பற்றிச் சொன்னாளா என்று விசாரிக்கசஞ்சனா அழுதுவிட்டாள்.

ரஞ்சு கா ப்ளீஸ்.. என்னை நம்பு. நான் எதுவும் அவங்ககிட்ட சொல்லலை. நீயே என்னைப் பத்தி இப்படி நினைக்கிறேன்னாமத்தவங்களும் என்னைத் தப்பா தான நினைச்சிட்டு இருப்பாங்க.”

இல்லை சஞ்சு, யாரும் அப்படி நினைக்கலை எனக்குத் தான் சந்தேகம். அது தான் அப்படிக் கேட்டுட்டேன் சாரி.” ரஞ்சனா சொல்லசஞ்சனாவிடுக்காநான் முன்னாடி அப்படித் தான இருந்தேன்.” என்று சாதாரணமாகச் சொன்னாள். தன் தங்கையின் மாற்றத்தை பார்த்து மகிழ்ந்த ரஞ்சனா அவளைக் கட்டி கொண்டாள். சஞ்சனாவும், தினேஷும் இனி திருச்சியிலேயே இருப்பது என்று முடிவு செய்திருந்தனர். அது எல்லோருக்கும் மகிழ்ச்சியைக் கொடுத்தது.

அர்ஜுன் ஆஸ்திரேலியா சென்று ஒரு மாதம் ஆகியிருந்தது. மீராவும் கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் பெங்களூரில் இருந்ததால்இப்போது அவள் வீட்டில் சென்னையில் இருப்பது மனதுக்குச் சந்தோஷமாக இருந்தது. அவளும் வருணும் சேர்ந்து ஷட்டில் விளையாடுவது, ஒன்றாகச் சினிமாவுக்குச் செல்வது என்று சந்தோஷமாகப் பொழுதை போக்கினர். மீரா தன் பரத நாட்டிய வகுப்பிற்குத் திரும்பி செல்ல ஆரம்பித்தாள். மீனாட்சியும் இப்போது மீராவுடன் நன்றாகப் பழகினார். மீராவும் இப்போது தான் தன் சொந்த வீட்டில் இருப்பது போல் உணர்ந்தாள்.

அர்ஜுனும், மீராவும் போன்னில் பேசிக்கொள்வார்களே தவிரஸ்கைப்பில் கூடப் பார்ப்பது இல்லை. இருவருக்கும் தங்களின் வருத்தத்தை மற்றவர்களுக்குக் காட்ட விருப்பும் இல்லை. அதனால் பேச்சோடு முடித்துக் கொள்வார்கள்.

ஒரு நாள் ஆருவும், ரஞ்சனாவும் வித்யாவிடம் ஷாப்பிங் செல்வதாகச் சொல்லிவிட்டு மீராவை வெளியில் சந்தித்தனர். ஐஷுவை வித்யாவிடம் விட்டு வந்ததால்மூவரும் ஜாலியாக ஊர் சுற்றிவிட்டு ஒரு ஹோட்டலுக்குச் சாப்பிட சென்றனர்.

அப்போது பேச்சு வாக்கில் ரஞ்சனா, “இன்னும் எத்தனை நாள் நீயும், அர்ஜுனும் இப்படியே இருக்கப் போறீங்க மீராஅத்தை தான் உங்களைக் கல்யாணம் பண்ணிக்கத் தான சொல்றாங்க. ஆனாஒரே வீட்ல இருக்கக் கூடாது தனியா போகச் சொல்றாங்க. பேசாம நீங்க அவங்க சொல்லும் போதே கல்யாணம் பண்ணிக்கோங்க. அப்புறம் கொஞ்சம், கொஞ்சமா அவங்க மனசை மாத்தி நம்ம வீட்டுக்கு வந்துடுங்க. அர்ஜுன் ஊருக்கு போன அன்னைக்கு மாமாவும் அத்தைய திட்டிட்டாங்க.” என்று வீட்டில் நடந்த அனைத்தையும் விவரமாகச் சொல்லமீரா அதைக் கேட்டு அதிர்ந்தாள். ஆனால்…. ரஞ்சனாவிடமும், ஆருவிடமும் எதையும் காட்டிக்கொள்ளவில்லை…. பேசாமல் சாப்பிட்டாள்.

மீரா வீட்டுக்கு வரும் வழியெல்லாம்தன்னால் அர்ஜுனின் வீட்டில் பிரச்சனை வருகிறதே, என்று வருத்தப்பட்டுக் கொண்டே வந்தாள். வீட்டுக்குள் சென்ற போது அங்கே அவளது அம்மா ஷ்யாமளா அவளுக்காகக் காத்திருந்தாள். அவளைப் பார்த்ததும் மீராவிற்கு எரிச்சல் தான் வந்தது. இந்தத் தடவை எதற்கு வந்திருக்காறோ என்று நினைத்துக் கொண்டே அவர் எதிரில் சென்று அமர்ந்தாள்.

ஷ்யாமளா பொதுவான நல விசாரிப்புகளுக்குப் பிறகுமீராநான் சொல்றதை இப்பவாவது கேளு. உங்க அப்பா உனக்குக் கல்யாணம் பண்ணி வைக்கிற மாதிரி தெரியலை. நீ அவரை நம்பிட்டு இருந்தாகாலமெல்லாம் இப்படியே இருக்க வேண்டியது தான்.” என்று பேசமீராவிற்குச் சுள்ளென்று கோபம் வந்தது.

உங்களுக்குத் தேவை இல்லாத விஷயம் எல்லாம் நீங்க பேச வேண்டாம். எதுக்கு வந்தீங்களோ அதை மட்டும் சொல்லிட்டு போங்க.” என்றாள் கடுப்பாக.

நான் உன்னோட அம்மா…. எனக்கு உன் கல்யாண விஷயத்தைப் பத்தி பேச உரிமை இல்லையாநான் அதுக்குத் தான் இப்ப லண்டன்ல இருந்து வந்தேன். வம்ஷி இன்னும் உன்னை விரும்புறான், இப்பவும் நீ ஓகே சொன்னாகல்யாணம் பண்ணிக்கத் தயாரா இருக்கான். சரின்னு சொல்லு மீராஅப்புறம் நீ ராணி மாதிரி வாழலாம்.” ஷ்யாமளா ஆர்வமாகக் கேட்க

முதல்ல இங்க இருந்து போங்க, எனக்கு யாரை, எப்ப கல்யாணம் பண்ணிக்கணும்னு தெரியும். நீங்க என் விஷயத்துல தலையிடாதீங்க…” மீரா கோபமாகச் சொல்ல

நீ இன்னும் அந்த அர்ஜுன் உன்னைக் கல்யாணம் பண்ணிப்பான்னு நம்பிக்கையில இருக்கியாஅது நடக்காது. நான் அர்ஜுனோட அம்மாகிட்ட விளக்கமா பேசிட்டேன். உங்களை மாதிரி சாதாரணக் குடும்பத்திலஎல்லாம் என் பொண்ணு மீரா வந்து வாழ மாட்டாஅப்படியே வந்தாலும், அவளுக்கு உங்க வீட்டுல இருக்க முடியாது. அவளும் என்னை மாதிரி தான் போகப் போறான்னு சொன்னேனே…” ஷ்யாமளா பெருமையாகச் சொல்லஅது மீராவிற்கு உச்சகட்ட அதிர்ச்சியாக இருந்தது.

நான் உனக்கு என்ன பாவம் செஞ்சேன்? என்னைப் பெத்திட்டு ஏன் இந்தப் பாடுபடுத்திற? முதல்ல என்னை ஆறு வயசில தவிக்க விட்டுட்டு…. உன்னோட சந்தோஷம் தான் பெருசின்னு போன. இப்ப என்னோட வாழ்க்கையவே இப்படிக் கெடுத்து வச்சிருக்கியே. இதுக்கு நீ என்னைப் பெறாமலே இருந்திருக்கலாமேஇப்படி என்னைக் கொஞ்சம்கொஞ்சமா கொல்றதுக்குஎன்னை மொத்தமா கொன்னுடு…” என்று கதறிய மீரா, சென்று ஷ்யமளாவின் கைகளை எடுத்து தன் கழுத்தில் வைத்து அழுத்த…. வருண் வேகமாக ஓடி வந்து அவளைப் பிடித்து இழுத்து அனைத்துக் கொண்டான்.

அக்கா விடுக்காடென்ஷன் ஆகாத அமைதியா இரு…” என்று வருண் தேற்றமீனாக்ஷி மீராவிற்குக் குடிக்க நீர் கொண்டு வந்து கொடுத்தவள். ஷ்யமளாவை பார்த்து, “நீங்க மீராவை அவங்க அப்பா பொறுப்பிலே விட்டுட்டு போய்டீங்க….இப்ப ஏன் வந்து தொந்தரவு கொடுக்றீங்க? அவ மேஜர் அவளுக்கு யாரை கல்யாணம் பண்ணிக்க விருப்பமோ அவங்களைக் கல்யாணம் பண்ணிக்க அவளுக்கு உரிமை இருக்கு. இதிலெல்லாம் நீங்க தலையிடுறது நல்லாயில்லை…”

அர்ஜுனோட அம்மாட்ட போய் இப்படிப் பேசி இருக்கீங்களேநாளைக்கு மீரா போய் அந்த வீட்ல வாழணுமே, அவளுக்கு அவங்களைப் பார்க்க சங்கடமா இருக்காதாஉங்களுக்கு நீங்க பண்ணது தப்புன்னு தோணலை.” என அவர் கேட்க, ஷ்யாமளா தலை குனிந்தாள்.

இனி நீங்க எங்க அக்கா வாழ்கையில தலையிட்டீங்க, நான் மனுஷனாவே இருக்க மாட்டேன். உங்க மேல போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்துடுவேன்.” வருண் மிரட்ட…. ஷ்யாமளா அமைதியாக வெளியே சென்றாள்.

ஷ்யாமளா போன வருடம் இந்தியாவிற்கு வந்த போது அர்ஜுனையும், மீராவையும் ஒரு மாலில் பார்த்தாள். இருவரின் நெருக்கமே காதலர்கள் என்று காட்டி கொடுத்தது. இதனால் தான் மீரா வம்ஷியை வேண்டாம் என்று சொல்கிறாள் என்று நினைத்து வித்யாவிடம் சென்று போட்டு கொடுத்தாள்.

மீரா இன்னும் அழுது கொண்டிருக்கஅப்போது ராம்நாத் அங்கே வந்தார், அவரை மீனாக்ஷி தான் போன் செய்து அழைத்திருந்தாள். மீனாக்ஷி நடந்ததையெல்லாம் ராம்நாத்திடம் சொல்ல….அவர் இதுக்கு முதல்ல முடிவு கட்டனும் என்றவர், உடனே கிளம்பி ஷ்யமளாவின் பெற்றோரை சந்திக்கச் சென்றார்.

மீரா அவள் அறையில் விடிய விடிய அழுதவள், விடிந்த போது ஒரு முடிவிற்கு வந்திருந்தாள். பெற்ற தன் தாய்க்கே தன் மேல் அக்கறை இல்லாத போது, வித்யா தன்னை வேண்டாம் என்று சொல்வதில் தவறு எதுவும் இல்லை. தன்னால் அவர்கள் குடும்பம் பிரியவும் வேண்டாம். அவர்கள் குடும்பத்தில் பிரச்சனையும் வேண்டாம். அதனால் தான் எங்காவது சென்று விடலாம் என்று உணர்ச்சி வேகத்தில்(அர்ஜுன் பயந்த மாதிரியே) முடிவு எடுத்தாள்.



Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!