Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

உனக்குள் என் உயிரே

உனக்குள் என் உயிரே 39 1

அத்தியாயம் 39

மீராவிற்கு அந்தப் பள்ளியில் வேலை பார்ப்பது மிகவும் பிடித்திருந்தது. காலை ஒன்பது மணிக்கு ஆரம்பிக்கும் பள்ளி, மாலை ஐந்து மணி வரை இருக்கும். மீராவிற்கு ஒரு நாளைக்கு ஆறு வகுப்புகள் இருக்கும். ஓய்வு நேரத்தில் பள்ளியில் நடை பெரும் விழாகளுக்கு, மாணவிகளைத் தயார் செய்வது அவள் பொறுப்பு. அதனால் அதற்குத் திட்டமிடுதல், மாணவிகளுக்குப் பயிற்சி கொடுப்பது என்று நேரம் சென்றுவிடும்.

மாலை ஐந்தில் இருந்து ஆறு மணி வரை மாணவிகள் விளையாடும் நேரம். மீராவும் அவர்களோடு சேர்ந்து விளையாடுவாள். பின்பு அவள் அறைக்கு வந்து குளித்து, உடை மாற்றிச் சாப்பிட செல்பவள், சாப்பிட்டதும் இரவு எட்டுமணிக்கெல்லாம் அவள் அறையில் சென்று படுத்துவிடுவாள். ஆனால் தூக்கம் தான் வராது.

கையில் செல்லை வைத்துக் கொண்டு, அதில் இருக்கும் அர்ஜுனின் படங்களை எல்லாம் ஒவ்வொன்றாகப் பார்த்து கொண்டிருப்பாள். அர்ஜுனை அழைக்க எழும் ஆவலைஅவனோடு பேசினால், எங்கே உன்னை விட்டு இருக்க முடியவில்லைஅதனால் திருமணம் செய்து கொள்வோம் என்று சொல்லிவிடுவோமோ என்ற பயத்திலேயே அடக்கினாள்.

சிறிது நாட்களிலேயே அர்ஜுனை பிரிந்து இருப்பது எல்லாம் சாத்தியம் இல்லை என்று அவளுக்குப் புரிந்துவிட்டது. அர்ஜுனாலும் தன்னை விட்டு இருக்க முடியாது. அதனால் ஆஸ்திரேலியாவில் இருந்து வந்ததும், எப்படியும் தன்னைத் தேடி வந்துவிடுவான் என்று நினைத்திருந்தவள், அவன் இரண்டு மாதத்திற்கு மேலாகியும் வரவில்லை என்றதும் மனதில் பயம் வந்தது.

அர்ஜுன் தன்னை நிஜமாகவே வெறுத்து விட்டானா…. இனி தன்னைத் தேடி வரமாட்டானா என்று மனம் தவிக்க ஆரம்பித்தது. அந்த நேரத்தில் தான் பள்ளியில் ஒவ்வொரு வகுப்பாகச் சுற்றுலா அழைத்துச் சென்றனர். இவளையும் ஒன்பதாம் வகுப்பு மாணவிகளுடன் சென்று வர சொன்னார்கள்.

முன் தினம் காலை பள்ளியில் இருந்து சுற்றுலா வந்தவர்கள், ஒரு நீர்வீழ்ச்சிக்கு சென்றனர். மாலை ஆனதும்அங்கிருந்து கிளம்பி அனைவரும் சென்று பஸ்சில் ஏறஅப்போது நாட்டு துப்பாக்கியுடன் வந்த நான்கு பேர், இவர்கள் பஸ்சில் ஏறி, டிரைவரை மிரட்டிமுன்னால் சென்ற ஜீப்பை பின் தொடர சொல்லடிரைவரும் வேறு வழியில்லாமல், அவர்கள் சொன்னபடி செய்யஎல்லோரையும் கடத்தி கொண்டு காட்டிற்குள் சென்றனர்.

இவர்கள் அனைவரையும் அவர்கள் வந்த பஸ்சிலேயே இருக்கச் சொல்லிவிட்டு, பஸ்ஸை சுற்றி பத்து பேர் காவல் இருந்தனர்.

பயந்த பிள்ளைகளுக்குத் தைரியம் சொல்லிஅவர்கள் சாப்பிட கொடுத்த ராகிக் கூழை குடித்துஎப்படியோ இரவை ஓட்டி விட்டனர். இப்போது விடிந்து இவ்வளவு நேரமாகியும் அவர்களை விடாமல் பிடித்து வைத்திருந்தனர். அவர்கள் பேசுவதில் இருந்துஅவர்கள் கூட்டாளியை போலீஸ் பிடித்து வைத்திருகிறது என்றும், அவனை விட்டதும்இவர்களையும் விட்டுவிடுவார்கள் என்று புரிந்தது.

போலீஸ் எப்ப அவனை விடுறதுஇவங்க எப்ப நம்மை விடுறது என்று நினைத்து மீரா பெருமூச்சு விடஅப்போது தூரத்தில் நிறைய ஆட்கள் வந்தனர். அவர்களைப் பார்த்ததும் பஸ்சில் இருந்த அனைவரும் இன்னும் பயப்பட…. அருகில் வந்ததும் பார்க்க, அவர்கள் அனைவரும் கிராமத்து மனிதர்கள் போல் தோன்றியது.

அதிலிருந்த பெரியவர் ஒருவர்உங்க கூட்டாளிய விடஇவங்களை நீங்க பிடித்து வைத்திருப்பது என்ன நியாயம்?” என்று கேட்க.. அதற்குக் கடத்தல் கும்பலில் இருந்த ஒருவன்உங்களுக்கு இது தேவை இல்லாத விஷயம். நீங்க தலையிடாதீங்க.” என்றான்.

நீங்க செய்ற காரியத்தாலபாதிக்கப் படபோறது நாங்க தான். நீங்க காட்டுக்குள்ள இருப்பீங்கஊருக்குள்ள இருக்கிற எங்களைத் தான் போலீஸ் பிடிப்பாங்க. எங்களைத் தான் நீங்க எங்கன்னு கேட்டுக் கொடுமை படுத்துவாங்க.” என்றவர் தொடர்ந்துஇந்தப் பிள்ளைங்களோட பெத்தவங்க எல்லாம் கதறி அழுகிறதை பார்க்க முடியலைமரியாதையா விட்டுடுங்க.” என்றவர் முன்னேறி செல்ல

அவங்க எங்க ஆளை விடட்டும், நாங்களும் இவங்களை விட்டுடுறோம். எப்படியும் இன்னைக்கு அவனை விட்டுடுவாங்க.” என்று கடத்தல்காரர்களில் இருந்த மற்றொருவன் சொல்ல

போலீஸ் இப்ப அவனை விட்டாலும், அப்புறம் எல்லோரையும் வேட்டையாடி கொல்லுவாங்க, அது தேவையாவேண்டாம். அதுக்கு நாமலே அனுப்பிட்டாஉயிராவது மிஞ்சும்.” என்ற அந்தப் பெரியவரும் அவரோடு வந்த மற்றவர்களும் சென்று அந்தக் கடத்தல்காரர்களிடம் இருந்து துப்பாக்கியை பறிக்க முயல

முதலில் மோதிய கடத்தல்காரர்களும் கிராமத்து மக்களைப் பகைத்துக் கொண்டால்தங்களுக்குத் தான் கஷ்ட்டம் என்று அங்கிருந்து அவர்களைத் திட்டிக்கொண்டே சென்றனர்.

மீரா மற்றும் அவளோடு இருந்தவர்களால் நடந்ததை இன்னும் நம்ப முடியவில்லை. அந்தக் கிராமத்து மனிதர்கள் அவர்களிடம் நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டு.. அவனுங்க எல்லாம் தீவிரவாதீங்க இல்லைங்கஅரசாங்கமும், அதிகாரிகளும் பண்ற கொடுமை தாங்காம அப்படி ஆகிட்டானுங்க. எங்களுக்கு நாங்க வாழவும், எங்க புள்ள குட்டிங்க படிக்கவும் வழி காட்டினா போதும், என்றவர்கள், டிரைவருக்கு வழிகாட்ட என்று இரு ஆட்களையும் அவர்களுடன் அனுப்பினர்.

காட்டின் எல்லை பகுதிக்கு வந்ததும், அந்த இருவரும் பஸ்சில் இருந்து இறங்கி கொண்டு இவர்களை வழி அனுப்பினர். பஸ்சில் இருந்த மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மிகவும் மகிழ்ச்சி. தங்களைக் காப்பாற்ற போலீஸ் தான் வரும் என்று நினைத்திருந்தவர்களுக்குசாதாரணக் கிராமத்து மனிதர்களின் துணிச்சலும், மணிநேயத்தையும் பார்த்து ஆச்சர்யபட்டனர். காட்டில் இருந்து வெளியே வந்ததும் சற்றுத் தூரத்தில் போலீசும், மாணவிகளின் பெற்றோரும் நின்று கொண்டிருப்பது தெரிந்தது.

மாணவிகள் தங்கள் பெற்றோரை பார்த்ததும் உற்சாகக் குரல் எழுப்பினர். பஸ் நின்றதும் மாணவிகள் வேகமாக இறங்கி தங்கள் பெற்றோரை தேடி ஓடமீரா அவர்களைப் புன்னகையுடன் பார்த்துக் கொண்டே நடந்து வந்தாள். அப்போது அவளை யாரோ வந்து வேகமாக அனைத்து, மீரா என்று அழைக்கமீரா குனிந்து பார்த்தவள், தன்னை அனைத்தவரை பார்த்து நம்ப முடியாமல் நின்றாள்.

வித்யா அவளைக் கட்டிபிடித்துக் கொண்டு அழமீராவும் அழுதாள். வித்யா நடுங்கும் தன் கைகளால் மீராவின் முகத்தைப் பற்றியவர்… “உனக்கு ஒன்னும் ஆகலையில்ல மீராஉன்னை எதுவும் அவங்க அடித்து, கொடுமை எதுவும் பண்ணலை தான.” என்று கேட்கமீரா அதுவரை நம்ப முடியாத ஆச்சர்யத்தில் இருந்தவள். “இல்லை ஆன்டி, அவங்க எங்களைக் கடத்திட்டு தான் போனாங்க, மத்தபடி எங்க நிழலையும் அவங்க தொடலை…” என்றாள்.

எல்லாம் என்னால தான். நீயும் அர்ஜுனும் உண்மையா தான் ஒருத்தரை ஒருத்தர் விரும்புரீங்கலான்னு தெரிஞ்சிக்கத் தான், கோபமா இருந்த மாதிரி நடிச்சேன். கடைசியில அது உன்னை இப்படி ஆபத்துல கொண்டு வந்து விடும்னு எதிர் பார்க்கலை. கைல கிடைச்ச வைரத்தை நானே தொலைக்கப் பார்த்தேன்.” வித்யா வருத்தபட

அவர் சொன்னதைக் கேட்டு மகிழ்ந்த மீராபரவாயில்லை ஆன்டி விடுங்க, பீல் பண்ணாதீங்க. அது தான் நான் நல்லபடியா வந்துட்டேன் தான.” என்றவள், வித்யாவின் கண்களைத் துடைத்துவிட்டாள்.

இவர்கள் இருவரும் பேசுவதைச் சற்று தள்ளி நின்று பார்த்துக் கொண்டிருந்த மற்றவர்கள் அருகில் வந்தனர். மீரா ராம்நாத்தை பார்த்ததும், ஓடி சென்று அவரை அனைத்து கொண்டாள். அவரருகில் இருந்த வருண் மீராவை கட்டிபிடித்து அழமீராவும் அழுதாள். மீனாட்சியும் கண் கலங்கினார்.

அவர்களுக்கு அடுத்து ரஞ்சனாவும், ஆருவும் மீராவிடம் சென்று, “எங்களால தான் நீ அர்ஜுனை விட்டு போனியா?” என்று கேட்கமீராவிற்கு அர்ஜுன் நியாபகம் வந்துவிட்டது. அவள் எனக்கு அர்ஜுனை இப்ப பார்க்கணும் என்று அழஆதியும், சூர்யாவும் அவரவர் மனைவியைப் பார்த்து முறைத்தனர்.

இவளுங்க வாயை திறந்தாலே பிரச்சனைதான் என்று நினைத்தவர்கள், அர்ஜுன் வந்துகிட்டு இருக்கான், இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்துவிடுவான் என்றார்கள்.

அர்ஜுன் வர்றாங்களாநிஜமாவாஎப்ப வர்ராங்க? எங்க வருவாங்க?” மீரா கேள்வி மேல் கேள்விகளாகக் கேட்க… “அம்மா தாயேநீ போய் ஆக வேண்டிய வேலையைப் பாரு. அர்ஜுன் வந்ததும், அவன்கிட்ட உன் எல்லாக் கேள்வியையும் கேளு….நாங்க நேத்து நைட்ல இருந்து சாப்பிடலை….முதல்ல சாப்பிடனும்.” சூர்யா சொல்லமீராவும் சரி அர்ஜுன் நேர்ல வரட்டும் பேசிக்குவோம் என்று அமைதியாக இருந்தாள். அவளுக்கு அவன் எப்போது கிளம்பினான் என்று தெரியாததால்….அவன் எப்போது வருவான் என்றும் தெரியவில்லை.

மதியம் இரண்டு மணிக்கு அர்ஜுனின் விமானம் பெங்களூரில் வந்து தரை இறங்கியது, அர்ஜுன் விமானம் நின்றதும் சூர்யாவை தான் முதலில் அழைத்தான். சூர்யா வேறு எதுவும் சொல்லாமல் முதலில், “மீரா பத்திரமா வந்தாச்சு..”. என்று மட்டும் சொல்லஅர்ஜுன் அப்படியே தன் கைகளில் முகம் புதைத்து, சிறிது நேரம் உட்கார்ந்துவிட்டான். சூர்யாவும் நிலைமையைப் புரிந்து கொண்டு அர்ஜுன் பேச காத்திருந்தான்.

அர்ஜுன் முகத்தை அழுந்த துடைத்துநன்றாக முச்சை இழுத்து விட்டு, தன் மனதை அமைதிபடுத்திக்கொண்டு பேச ஆரம்பித்தான். “இப்ப எங்க இருக்கீங்க சூர்யா?”

இன்னும் எல்லோரும் அங்க தான் இருக்கோம். மீரா இப்ப தான் வந்தாவந்து அஞ்சு நிமிஷம் தான் ஆகுது. இன்னும் இங்க பார்மாலிடீஸ் முடியலை. நீ ஏர்போர்ட்ல இருந்து வெளியே வந்துட்டியா அர்ஜுன்.”

இல்லை, இப்ப தான் ப்ளைட் இறங்கி இருக்கு.”

சரி நீ வெளிய வந்துட்டு போன் பண்ணு, நாங்க இருக்கிறது ஒரு பக்கம், ஏர்போர்ட் இருக்கிறது ஒரு பக்கம். எங்க மீட் பண்ணலாம்னு சொல்றேன். நாங்களும் இங்கிருந்து கிளம்ப நேரம் ஆகும்.” சூர்யா சொல்ல….அர்ஜுனும் சரி என்று போன்னை வைத்து விட்டான். அவனுக்கு இப்போது வேறெதுவும் கேட்க தெம்பும் இல்லை. பிறகு பார்த்துக் கொள்வோம் என்று நினைத்தான்.

எல்லாப் பிள்ளைகளின் பெற்றோரும் அங்கு இருந்ததால்அவர்களை எல்லாம் சரி பார்த்து அவர்களுடன் அனுப்பிவிட்டு, ஆசிரியர்களும் அங்கிருந்த அதிகாரிகளிடமும், பள்ளி நிர்வாகியிடமும் சொல்லிவிட்டு கிளம்பினர். மீராவும் கிளம்பினாள்.

ராம்நாத் வழியெல்லாம் மீராவிடம் நடந்ததைப் பற்றி விசாரித்துக் கொண்டே வந்தார். வழியில் இருந்த ஓட்டலில் சூர்யா காரை நிறுத்த, மற்றவர்களும் நிறுத்தி இறங்கினர். அப்போது மணி மூன்றுஎல்லோரும் நல்ல பசியில் இருந்ததால், அந்த நேரத்திற்கு என்ன சாப்பாடு இருந்ததோ அதை வாங்கி வேக வேகமாகச் சாப்பிட்டனர்.

மீராவுக்கு அர்ஜுன் வருகிறான் என்ற சந்தோஷத்தில் பசிக்கவே இல்லைபெயருக்கு ஒரு வாய் சாப்பிடுவதும், பின் தன் கையில் இருக்கும் செல்லில் நேரம் பார்ப்பதுமாக இருந்தாள். அவள் முகத்தில் எப்போதும் ஒரு புன்னகை இருந்தது. அதை எல்லோரும் பார்த்தும் பார்க்காதது போல் இருந்தனர். அவர்களுக்குத் தெரியும், அது அர்ஜுன் வரப்போகிறான் என்பதால் என்று.

மீரா நீ அடிக்கடி டைம் பார்த்தா மட்டும் டைம் வேகமா போகுமா என்ன? ஒழுங்கா சாப்பிடு…” சூர்யா சொன்னதும், மீரா சிரித்துக் கொண்டே சாப்பிட்டாள்.

அர்ஜுன் பெங்களூர் வந்ததைச் சூர்யா யாரிடமும் சொல்லவில்லை. அவன் அர்ஜுனுக்கும், மீராவுக்கும் ஒரு ஸ்வீட் சர்ப்ரைஸ் கொடுக்க நினைத்தான். சாப்பிடும் போது ஆதியிடம் மட்டும் மெதுவாகத் தனது திட்டத்தைச் சொன்னான். ஆதியும் புன்னகையுடன் சரி என்றவன், நிமிர்ந்து ரஞ்சனாவை பார்க்க, அவள் அவனைப் பார்த்து முறைத்தாள்.

அய்யய்யோஅர்ஜுன் மீராவை சேர்த்து வைக்கிற ஆர்வத்துலநம்ம ஆளை ரொம்ப நோகடிசிட்டோமோஇப்படி நீயே உனக்கு ஆப்பு வச்சிகிட்டியே, இப்ப என்ன செஞ்சு மாரி ஆத்தாவை மலை ஏத்துறது என்று ஆதி மைன்ட் வாய்ஸில் பேசிக்கொண்டிருந்தான்.

ஆருவும் சூர்யாவை பார்த்து, இருங்க உங்களை அப்புறம் பார்த்துகிறேன் என்று ஜாடை காட்டஅதைப் பார்த்த சூர்யாவும் உஷார் ஆனான்.

அர்ஜுன் பார்மாலிடீஸ் முடிந்து வந்த போது, விமான நிலையத்தில் இருந்த டிவியில் மாணவிகள் பத்திரமாக வந்த செய்தி தான் ஓடிக்கொண்டிருந்தது. அதில் மாணவிகளைப் பெற்றோர் கட்டிபிடித்துக் கொண்டு அழுவதைக் காட்டினர். அப்போது வித்யாவும், மீராவும் கட்டிப்பிடித்துக் கொண்டு அழுவதும் வந்தது. அதைப் பார்த்ததும் அர்ஜுனுக்கும் கண்கள் கலங்கியது.

ஒரு நாளில் என்னவெல்லாம் நடந்துவிட்டது என்று நினைத்தவன், தன்னைச் சமன்படுத்த அங்கயே அமர்ந்தான். சிறிது நேரம் அந்தச் செய்தியே திரும்பத் திரும்ப வந்ததுஅர்ஜுன் தன் அம்மாவையும், மீராவையும் கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். அம்மாவே மீராவை பார்க்க வந்திட்டாங்க, அப்ப இனி பிரச்சனை இருக்காது என்று நினைத்தவன் மனது சந்தோஷமும் நிம்மதியும் அடைந்தது.

சாப்பிட்டதும் எங்குச் செல்வது என்று எல்லோரும் யோசிக்கும் போது, “எல்லோரும் இங்க இருக்க வேண்டாம். மணி இப்ப மூன்னு தான் ஆகுது. அதனால இப்ப கிளம்பினா நைட் பத்து மணிக்குள்ள சென்னை போய்டலாம்யாரெல்லாம் வர்றீங்க.” ராம்நாத் கேட்க

யாருக்குமே அர்ஜுனை பார்க்காமல் கிளம்ப மனம் இல்லை. கணேசன் மட்டும் தான் வருவதாகச் சொல்லசூர்யா மற்றவர்களைத் தன் அக்கா மது வீட்டுக்கு அழைத்துக் கொண்டு செல்வதாகச் சொன்னான். ராம்நாத்தின் காரில் டிரைவர் வண்டி ஓட்டஅவரோடு கணேசன், மீனாக்ஷி மற்றும் வருண் சென்றனர்.



Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!