உனக்குள் என் உயிரே 39 2
சூர்யா அர்ஜுனுக்குப் போன் செய்து… “நாங்க எல்லோரும் மீராவோட அப்பார்ட்மென்ட்க்கு தான் வரோம். ஆனா இங்க இருந்து நாங்க வர நேரம் ஆகும். அதனால நீ இன்னும் கொஞ்ச நேரம் ஏர்போர்ட்ல இருந்து ரிலாக்ஸ் பண்ணிட்டு, மெதுவா கிளம்பு…” என்று சொல்ல… அர்ஜுன் மேலும் எதோ கேட்க வர… “அர்ஜுன் ரொம்ப டயர்ட்டா இருக்கு, எதுனாலும் நேர்ல பேசலாம் ப்ளீஸ்….” சூர்யா சொல்ல…அர்ஜுனும் சரி நேரில் பேசுவோம் என்று போன்னை வைத்துவிட்டான்.
சூர்யா எல்லோரையும் அழைத்துக் கொண்டு தன் காரில் கிளம்பினான். அவர்கள் பெங்களூரை விட்டு தள்ளி இருந்தனர். பெங்களூர்க்குள் நுழையவே இரண்டு மணி நேரம் ஆனது.
“என்னோட அக்கா வீட்ல எல்லோரும் தங்க முடியாது. இப்ப என்ன செய்றது?” சூர்யா யோசிப்பது போல் நடிக்க…மீரா வேகமாக “என்னோட அப்பார்ட்மென்ட் க்கு போகலாம்.” என்றாள். சூர்யாவும் சரி என்றான்.
மீரா இன்னும் அந்த வீட்டை காலி செய்யவில்லை.. வாரத்திற்கு ஒரு முறை ஏஜ்ன்சி ஆட்கள் வந்து, வீட்டை சுத்தம் செய்துவிட்டுச் செல்வார்கள். மீரா போகும் வழியில், தான் வேலை பார்த்த பள்ளியின் ஹாஸ்டல் சென்று, வேகமாகக் குளித்து, உடை மாற்றிவிட்டு, அவளுக்குத் தேவையான பொருட்களும், வீட்டு சாவியையும் எடுத்து கொண்டாள்.
மீரா இல்லாத போது சூர்யா வித்யாவிடம் தன் திட்டத்தைச் சொல்ல….அவர் சிரித்துக் கொண்டே சரி என்றார்.
சூர்யா நேராக மீராவின் அப்பார்ட்மென்ட் சென்றவன், மீரா இறங்கியதும், “நீ போய் ரெஸ்ட் எடு மீரா, நாங்க நைட் அர்ஜுன் வந்ததும் வரோம்.” என்றான்.
அவன் சொன்னதைக் கேட்டு மீரா முகம் வாடிவிட்டது. தன்னை மட்டும் ஏன் இறக்கிவிட்டான்? என்று அவளுக்குப் புரியவில்லை. மீரா யோசித்துக் கொண்டிருக்கும் போதே…சூர்யா வேகமாகக் காரை கிளப்பிக் கொண்டு சென்றுவிட்டான். மீராவிற்கு அழுகையாக வந்தது, அவள் திரும்பி தன் வீட்டை நோக்கி சென்றாள்.
அர்ஜுன் சூர்யா சொன்னபடி ஏர்போர்டிலேயே முகம் கழுவி தயாராகி அங்கேயே உணவு வாங்கிச் சாப்பிட்டான். அதுவே ஒரு மணி நேரத்திற்க்கு மேல் ஆகிவிட்டது. பின் அங்கிருந்து டாக்ஸ்யில் கிளம்பி மீராவின் அப்பார்ட்மென்டுக்கு வர…. வழியெல்லாம் ஒரே டிராபிக், அர்ஜுன் சீட்டில் சாய்ந்து நன்றாகத் தூங்கி கொண்டே வந்தான்.
பெங்களூரில் ஏர்போர்ட் சிட்டியைவிட்டு தள்ளி இருப்பதால்… அவன் கோரமங்களா வந்து சேர, இரண்டு மணி நேரம் ஆகிவிட்டது. “சார்.. நீங்க சொன்ன அட்ரஸ் வந்திடுச்சு..” என்று டிரைவர் எழுப்பியதும் தான் அர்ஜுன் எழுந்தான்.
மீரா வீட்டுக்குள் வந்தவள், நேராகச் சென்று சோபாவில் உட்கார்ந்து அழுதாள். அப்போது யாரோ கால்லிங் பெல் அடித்தனர். மீரா எரிச்சலோடு சென்று கதவை திறக்க… அங்கே அர்ஜுன் நின்று கொண்டிருந்தான். மீராவிற்கு ஒரு நிமிடம் ஒன்றுமே புரியவில்லை… அர்ஜுனை பார்த்ததும் அவனைத் தாவி சென்று அனைத்துக் கொண்டாள்.
அர்ஜுன் அவளை அப்படியே தள்ளி கொண்டு உள்ளே வந்து, கதவை சாற்றிவிட்டு… பார்வையால் வீட்டை சுற்றி பார்த்தவன், “வீட்ல வேற யாரும் இல்லையா மீரா?” என்று கேட்டான். மீரா இல்லை என்று தலையசைக்க… அர்ஜுன் மீராவின் முகத்தை நிமிர்த்தி “எல்லோரும் எங்க?” என்றான் ஆவலாக.
“என்னை மட்டும் தனியா விட்டுட்டு… அவங்க எல்லோரும் மது அக்கா வீட்டுக்கு போய்டாங்க.” மீரா சொல்ல… அர்ஜுன் முகம் புன்னகையில் விரிந்தது.
“அப்ப நம்ம ரெண்டு பேர் மட்டும் தான் இருக்கோமா…” என்றவன், மீராவை அப்படியே தூக்கி சுற்ற…. மீராவிற்கு அப்போது தான் சூர்யா எதற்குத் தன்னைத் தனியே விட்டுச் சென்றான் என்று புரிந்தது. அவள் சந்தோஷமாக அர்ஜுனின் கழுத்தை கட்டி கொண்டாள்.
அர்ஜுன் மீராவை இறக்கிவிட்டவன் அவளோடு சென்று சோபாவில் அமர்ந்து, அவள் முகத்தைத் தன் பக்கம் திருப்பி, அவள் கண்களைப் பார்த்து “ரொம்பப் பயந்துடியாடா…” என்று கேட்டதும்…. மீராவிற்குக் கண்கள் கலங்க ஆரம்பித்தது.
மீரா அர்ஜுனின் மார்பில் முகத்தைப் பதித்து “ரொம்ப… உங்களைத் திரும்பி பார்க்கவே முடியாதோன்னு நினைச்சேன்.” என்றாள். அதைச் சொல்லும் போதே அவள் குரல் நடுங்கியது.
அர்ஜுன் மீராவை இறுகி அணைத்தவன், “வேண்டாம்டா… இனி அதை நினைக்காதே, சாரி நானே நியாபகபடுத்திட்டேன்.” என்றவன், அவள் நெற்றியில் மென்மையாக முத்தமிட்டான்.. மீரா அவன் கன்னத்தில் முத்தமிட்டாள். அடுத்து அர்ஜுனும் அவள் கன்னத்தில் முத்தமிட… மீரா அர்ஜுனின் இதழை பார்த்தவள், முத்தமிடாமல் விலக, அர்ஜுன் “உனக்கு இதே வேலையா போச்சு.” என்றவன், அவளை அருகில் இழுத்து… அவள் இதழில் அழுந்த முத்தமிட்டான்.
சிறிது நேரம் சென்ற பிறகும் அர்ஜுனின் முத்தம் நிற்காமல் தொடர… மீரா அவனை விட்டு விலகப் பார்க்க… அர்ஜுன் அவளை விலக விடவில்லை….சிறிது நேரம் கழித்து அர்ஜுனாக விலக… மீராவிற்கு மூச்சு வாங்கியது.
அர்ஜுன் மீராவை பார்த்து சிரித்தவன், “நீ இப்ப திருமதி மீரா தான… நான் என்ன வேணா பண்ணலாமா?” என்று குறும்பு புன்னகையுடன் கேட்க… மீரா அர்ஜுனை பார்த்துப் பொய்யாக முறைக்க…“சும்மா சொன்னேன்… உன்னோட வீட்டை எனக்குச் சுற்றி காட்ட மாட்டியா…மீரா” என்றதும், மீரா அர்ஜுனை அழைத்துக் கொண்டு சென்று வீட்டை சுற்றிக் காட்டினாள்.
வீட்டை சுற்றிப் பார்த்ததும் அர்ஜுன் பால்கனியில் நின்று சூர்யாவை அழைத்தான்.
“எங்கடா இருக்க…”
“மது வீட்டுக்கு போலாம்னு பார்த்தேன். ஆனா ஒரே டிராபிக்…எப்படி போயிட்டு திரும்பி வரப்போறோமோ தெரியலை…”
“நீ அங்க போக வேண்டாம், திரும்பி இங்கயே வா… எனக்கு அம்மாவை பார்க்கணும்.” என்றதும், சூர்யாவும் சரி என்று போன்னை வைத்தவன், காரை திருப்பிக் கொண்டு மீரா அபார்ட்மென்ட்டுக்கே சென்றான்.
அர்ஜுன் நான் அவங்க வர்றதுக்குள்ள குளிச்சிட்டு வந்துடுறேன் என்று குளிக்கச் செல்ல…மீரா அவர்கள் வருவதற்குள் வீட்டை பெருக்கிவிட்டு, அவர்கள் அப்பார்ட்மென்ட்டில் இருந்த கடையில் சென்று தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு வந்தவள், பாலை காய்ச்சி கொண்டிருக்கும் போது கால்லிங் பெல் அடித்தது.
மீரா கதவை திறக்க செல்ல…அர்ஜுனும் குளித்து உடை மாற்றிக்கொண்டு வந்தான். இருவரும் சென்று கதவை திறக்க… வெளியில் நின்ற வித்யா, அவர்கள் இருவரையும் சேர்ந்து பார்த்தும் மிகவும் சந்தோஷபட்டார்.
வித்யா உள்ளே வந்ததும் அர்ஜுன் தன் அம்மாவை அனைத்துக் கொண்டான்,.அதை மீரா முகத்தில் புன்னகையுடன் பார்த்தது கொண்டிருந்தாள். அர்ஜுன் அவனது மற்றொரு கையால் மீராவை அருகில் இழுத்து அவளையும் சேர்த்து அனைத்து கொண்டவனின் கண்கள் கலங்க… அதைப் பார்த்து மற்றவர்களும் கண்கலங்கினர்.
சிறிது நேரம் சென்று அர்ஜுன் அவர்களை விட்டு விலக… அவனிடம் ஐஷு சித்தப்பா என்று பாய்ந்தது. அர்ஜுன் தன் மகளைக் கொஞ்ச…மீரா சமையல் அறைக்குச் சென்று… ஒரு அடுப்பில் பால் காய்ச்சி கொண்டே… ஒரு பக்கம் குக்கரில் சாதம் வைத்தாள். அவளுக்குத் தெரியும் ஐஷுவுக்குப் பசிக்கும் என்று. எல்லோருக்கும் சாப்பிட பிஸ்கட், மிக்ஸ்ஷர் எல்லாம் ஒரு தட்டில் வைத்துக் கொண்டு போய்க் கொடுத்தவள், பிறகு எல்லோருக்கும் காபியும் போட்டு கொடுத்தாள்.
ஆதிக்கும், சூர்யாவுக்குத் தங்கள் மனைவிமார்களைச் சமாதானப்படுத்தும் மிக முக்கியமான வேலை இருந்ததால்… முதலில் ஆதி மெதுவாக வித்யாவிடம் “அம்மா… நாம ப்ளைட்ல தான வந்தோம். அதனால அலுப்பாவே இல்லை… நான் ரஞ்சனாவோட வெளிய போய்ட்டு வரட்டுமா…” என்று கேட்க… ரஞ்சனா அவனை ஆச்சர்யமாகப் பார்க்க… “போயிட்டு வாங்க, ஐஷு என்னோட இருக்கட்டும்.” என்றார் வித்யா.
ரஞ்சனா சென்று கிளம்ப… அதற்குள் ஆதி அர்ஜுனை தனியே அழைத்துச் சென்று…கடந்த இரண்டு வாரமாக வீட்டில் நடந்த அனைத்தையும் சொல்லி… வித்யாவுக்கு உடம்பு சரி இல்லாமல் போனதையும் சொன்னான். அதைக் கேட்டு அர்ஜுன் முகம் மாறினான்.
அவன் தோளில் தட்டி கொடுத்த ஆதி “இப்ப ஒன்னும் பிரச்சனை இல்லை…அம்மா நல்லா இருக்காங்க.” என்றவன், ரஞ்சனா தயார் ஆனதும், அவளை அழைத்துக் கொண்டு வெளியே சென்றான்.
அடுத்து குளித்துவிட்டு வந்த சூர்யா…மீரா பசிக்குது என்றதும், மீரா சூர்யாவுக்கும், ஆருவுக்கும் ஹோட்டலில் இருந்து வந்த உணவுகளைப் பரிமாற… அதைச் சாப்பிட்டதும் சூர்யா “நைட் கார் ஓட்டினது டயர்டா இருக்கு….நான் தூங்க போறேன்,” என்றவன், அர்ஜுனை பார்த்து “காலையில அஞ்சு மணிக்கெல்லாம் கிளம்பனும், நீங்களும் சீக்கிரம் தூங்குங்க.” என்று சொல்லிவிட்டு ஆருவையும் அழைத்துக் கொண்டு அங்கிருந்த படுக்கை அறைக்குச் சென்று கதவை பூட்டி கொண்டான். அவன் உள்ளே காதல் செய்கிறானா…அல்லது ஆருவின் காலில் விழுகிறானா என்று அவனுக்கு மட்டும் தான் தெரியும்.
ஐஷுவுக்கு வித்யா பால் சாதம் ஊட்ட …அது சமத்தாகச் சாப்பிட்டு விட்டுத் தூங்கியது. அர்ஜுன் ஐஷுவை தூக்கி கொண்டு மீராவின் படுக்கை அறைக்குச் சென்றவன், அங்கே அவளைப் படுக்க வைத்துவிட்டு, “அம்மா, இங்க வாங்களேன்.” என்று வித்யாவை அழைத்தான்.
வித்யா அந்த அறைக்குள் இப்போது தான் வருகிறார். வித்யா உள்ளே வந்ததும், அர்ஜுன் அங்கே இருந்த சுவற்றைக் காட்ட… அதைப் பார்த்த வித்யாவின் முகம் ஆச்சிர்யத்தில் மலர்ந்தது.
அந்தச் சுவற்றில் அர்ஜுன் கிரிக்கெட் விளையாடுவது போல் ஒரு பெரிய போட்டோ இருந்தது. அடுத்து அர்ஜுனும், மீராவும் ஆதியின் திருமணத்தில் சேர்ந்து எடுத்துக் கொண்ட போட்டோவும், அதற்கு அடுத்து ஆரு திருமணத்தில் எடுத்துக் கொண்ட படம் என்று அந்தச் சுவர் முழுவதும் புகைப்படங்களை மீரா மாட்டி வைத்திருந்தாள்.
அதைப் பார்த்ததும் வித்யா, இவ்வளவு ஆசையா, பாசமா இருக்கும் பெண்ணைக் கஷ்ட்டபடுத்திடோமே என்று கண்கலங்க… அவரின் எண்ணத்தை உணர்ந்த அர்ஜுன் “வருத்தபடதீங்க மா… நானும் மீராவும் எவ்வளவு தடைகள் வந்திருந்தாலும், அதைத் தாண்டி சேர்ந்திருப்போம்.”
“எங்க பிரிவு வெறும் உடலுக்குத் தானே தவிர… மனதுக்கு இல்லை. எனக்குத் தெரியும் உங்களுக்கு மீராவை பிடிக்கும்னு…நீங்க எதோ ஒரு காரணத்திற்காகத் தான் மீராவை வேண்டாம்னு சொல்றீங்கன்னு தெரிஞ்சதுனால தான், மீரா விலகுறேன்னு சொன்னதும் அமைதியா இருந்தேன்.”
“எனக்குத் தெரியும் அந்த விஷயம் உங்களுக்குத் தெரியும் போது, நீங்க கண்டிப்பா எங்களைச் சேர்த்து வைப்பீங்கன்னு. எல்லாம் நல்லபடியா முடிஞ்சிருக்கும், மீரா மட்டும் கடத்தபடலைனா…நடுவுல மீரா கடத்தல் வந்து எல்லோரையும் ஒரு வழி ஆக்கிடுச்சு.” அர்ஜுன் வித்யாவின் மனதில் இருந்த குற்ற உணர்வை அவருக்கும் தெரியாமல்… அவர் மனதிலிருந்து நீக்க…
அர்ஜுனும் மீராவும் எந்த நிலையிலும் பிரிந்திருக்க மாட்டார்கள் என்ற உண்மை புரிந்ததும், வித்யாவின் மனதில் இருந்த கலக்கம் மறைந்து, சந்தோஷம் வந்தது. அவர் மனதிற்குள் சீக்கிரம் அர்ஜுனுக்கும் மீராவுக்கும் திருமணம் செய்துவிட வேண்டும் என்று நினைத்தவர், சாப்பிட்டுவிட்டு ஐஷுவுடன் சென்று படுத்துக் கொண்டார்.
அர்ஜுனும் மீராவும் சாப்பிட்டதும், பால்கனியில் சென்று நிற்க… மீரா வானத்தில் இருந்து முழு வெள்ளி நிலவை ஆசையாகப் பார்த்து கொண்டிருந்தாள். அர்ஜுன் அவன் அருகில் இருந்த பெண் நிலவை ஆசையாகப் பார்த்தான்.
அர்ஜுன் மெதுவாக மீராவின் பின்புறம் சென்று நின்று, அவளைத் தன்னோடு சேர்த்து அணைத்தவன், அவள் தோளில் தன் முகத்தை வைத்து, நிலவை பார்த்துக் கொண்டே… “மீரா.. அந்த நிலவைவிட, நீ தாண்டி அழகா இருக்க…” என்றவன், அவள் கன்னத்தில் முத்தமிட…. மீராவின் முகம் தாமரையாக மலர்ந்து சிவந்தது. உண்மையான காதலர்களைக் கண்ட ஆனந்தத்தில், அன்று நிலவும் அதிகப் பிரகாசமாகத் தான் இருந்தது.
(https://www.voiceoverherald.com/)
