Skip to content
Post Views: 3,575
உனக்குள் என் உயிரே
அத்தியாயம் 7
மீரா நிம்மதியாகத் தூங்கிவிட அர்ஜுன் தான் தூங்காமல் மீராவை பற்றி நினைத்துக் கொண்டிருந்தான். மறுநாள் காலை எழுந்ததும் அர்ஜுன் மீராவிற்குக் குட் மார்னிங் என்று மெசேஜ் அனுப்ப, மீராவும் அவன் வாழ்த்துக்குப் பதில் அனுப்பினாள்.
அர்ஜுனுக்கு அன்று முழுவதும் மீராவை பார்க்காமல் ஒரு மாதிரி இருந்தது. ச்ச… இப்ப போய் அடிபட்டடுச்சே… நாளைக்குக் காலேஜ் போனா தான் அவளைப் பார்க்க முடியும் என்று நொந்து போய் அமர்ந்திருந்தான்.
காலை உணவு முடிந்து தன் அறைக்கு வந்த அர்ஜுன், மீராவிற்கு டிபன் சாப்பிட்டியா என்று மெசேஜ் பண்ண… இன்னும் இல்லை என்று அவள் பதில் அனுப்ப, மணி பத்தாகப் போகுது இன்னுமா சாப்பிடலை முதல்ல போய்ச் சாப்பிடு, சாப்பிட்டு வந்து எனக்கு மறக்காம மெசேஜ் பண்ணனும் என்று அர்ஜுன் திரும்ப மெசேஜ் அனுப்ப, மீராவும் அவனுக்குச் சிறிது நேரம் கழித்துச் சாப்ட்டுட்டேன் என்று பதில் அனுப்பினாள்.
இப்படியே அன்று முழுதும் சாப்பிட்டியா, டான்ஸ் கிளாஸ் போயிட்டு வந்துட்டியா, டின்னெர் சாப்பிட்டியா… வந்திட்டேன், சாப்பிட்டேன், நாளைக்குக் காலையில பார்க்கலாம் போன்ற தகவல்கள் இருவராலும் அனுப்பப்பட்டது.
அர்ஜுன் மறந்தும் மீராவிடம் அவள் குடும்பத்தைப் பற்றிக் கேட்கவில்லை, மீராவும் சொல்லவில்லை.
அடுத்த நாள் காலை எழுந்து அர்ஜுனும் மீராவும் ஒருவரை ஒருவர் பார்க்க போகும் மகிழ்ச்சியில் கல்லூரிக்குச் சீக்கிரமாகக் கிளம்பினார்கள். வித்யா அர்ஜுனிடம் “என்னடா இன்னைக்கு ஒரு நாள் லீவ் போட்டுட்டு வீட்ல இருக்கக் கூடாதா… அதுவும் சீக்கிரம் வேற கிளம்பிட்ட?”என்றதற்கு,
“இன்னைக்குக் காலேஜ்ல ஒரு முக்கியமான வேலை இருக்குமா, நான் அங்க கான்டீன்ல சாப்டுக்கிறேன்.” என்றவன், வெளியில் வேகமாகச் செல்ல…
“வண்டியை பார்த்து ஓடிட்டு போ.” என்று வித்யா குரல் கொடுத்தார். “அன்னைக்கும் பார்த்து தான் மா ஓடிட்டு போனேன். ரோட்ல மண்ணு இருந்தது. அதனால தான் வழிக்கிடுச்சு கவலைப்படாம இருங்க.” என்ற அர்ஜுன் தன் வண்டியை கிளப்பிக் கொண்டு சென்றான்.
மீரா கல்லூரியில் வந்து இறங்கும் போது மழை பெய்யத் தொடங்கியது. இனி மழைக் காலம். இன்னும் ஒரு மாசம் இந்தப் பாடுதான் என்று நினைத்தவள், காரில் இருந்த குடையை எடுத்துக் கொண்டு இறங்கினாள்.
அன்று வழக்கத்தை விடக் கல்லூரிக்குச் சீக்கிரம் வந்திருந்தாள். அதனால் கல்லூரியில் வெகு சிலரே அங்கங்கே தென்பட்டனர். மீரா குடையைப் பிடித்துக் கொண்டு உடையில் சேர் பட்டுவிடக் கூடாது என்று கவனத்துடன் கீழே பார்த்துக் கொண்டே நடந்தாள்.
திடிரென்று அவள் பிடித்திருந்த குடையை யாரோ உயர தூக்கி பிடிக்க… ஒரு நொடி பயந்தவள், அங்கே அர்ஜுன் நிற்பதை பார்த்ததும் முகம் மலர்ந்தாள். அவள் பிடித்திருந்த குடையைத் தனக்கும் சேர்த்து உயர்த்திப் பிடித்த அர்ஜுன் மீராவை பார்த்து புன்னகைக்க, மீராவிற்கு அவன் முதல் முறை அனுப்பியிருந்த மெசேஜ் நியாபகம் வர முகம் சிவந்தாள்.
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு உலகம் மறந்து நின்றனர். அப்போது மழை கொட்ட தொடங்கியதும் அர்ஜுன் மீராவின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு வேகமாக நடக்க, மீராவும் அவனோடு சேர்ந்து நடந்தாள். இருவரும் கான்டீன் சென்றனர்.
வெளியே வரண்டாவில் நின்று மழையைப் பார்த்துக் கொண்டிருந்த அர்ஜுன் மீராவை பார்த்து கண்சிமிட்டி “கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடி போலாமா… இல்லை ஓடி போய்க் கல்யணம் தான் கட்டிக்கலாமா.” என்று பாட…
மீரா பதிலுக்குக் கண் அடித்து “தாலிய தான் கட்டிக்கிட்டு பெத்துக்கலமா, இல்லை புள்ள குட்டி பெத்துகிட்டு கட்டிக்கிலாமா” என்று பாட….
“அப்படிப் போடு அருவாள… நீ ரௌடின்னு எனக்குத் தெரியுமே…” என்ற அர்ஜுன் வாய் விட்டு சிரிக்க, மீராவும் சேர்ந்து சிரித்தாள்.
அர்ஜுன் அவளோடு கான்டீன் உள்ளே சென்று அமர்ந்தவன் “பசிக்குது, நீ சாப்ட்டியா?” என்று கேட்க… மீரா இல்லை என்றாள். அர்ஜுன் இருவருக்கும் சென்று பூரி வாங்கி வந்தான். இருவரும் சாப்பிடும் போது ஒருவரை ஒருவர் அடிக்கடி பார்த்துக் கொண்டனர்.
“உனக்கு எப்ப இருந்து மீரா என்னைத் தெரியும்?”
“நான் காலேஜ் வந்த முதல் நாளே உங்களைப் பார்த்திட்டேன். நீங்க தான் என்னைக் கண்டுக்கவே இல்லை.”
“அப்படியா… ஆனா நான் உன்னைப் பார்த்தது இல்லை. அன்னைக்கு நீ என்னைப் பார்த்து அவுட்னு கத்தின பார் அன்னைக்குத் தான் பார்த்தேன். ஏன் மீரா அப்படிக் கத்தின?”
“நீங்களா என்னைப் பார்க்கிற மாதிரியே தெரியலை. இந்த வருஷம் பைனல் இயர் காலேஜ் முடிச்சு நீங்க போய்டுவீங்க. அதனால தான் உங்களைப் பார்க்க வைக்கத் தான் அப்படிக் கத்தினேன்.” என்று சொன்ன மீரா சாப்பிடுவதில் கவனம் செலுத்த…
மீரா சொன்னதைக் கேட்ட அர்ஜுன் அவளையே பார்க்க…. நிமிர்ந்து அர்ஜுனை பார்த்த மீரா, அவன் தன்னையே பார்ப்பதை பார்த்து என்னவென்று புருவம் உயர்த்த… “நான் உன்னைக் கண்டுக்காம விட்டிருந்தா…” என்றான்.
தெரியலை என்று உதடு பிதுக்கியவள் ஜன்னல் வழியாக வெளியே பார்த்து கொண்டிருந்தாள். அவள் முகத்தில் சிரிப்பு மறைந்து வருத்தம் தோன்றுவதைப் பார்த்த அர்ஜுன் “தெரியலையா… பொய் சொல்லாத, என்னைக் கடத்திட்டுப் போய்க் கல்யாணம் பண்ணி இருக்க மாட்ட..” என்றான் கேலியாக…
“அப்படியும் நடக்கலாம்.” என்ற மீராவின் முகம் மலர்ச்சியைக் காட்ட, அதைப் பார்த்து அர்ஜுனும் சந்தோஷபட்டவன், “கிளாஸ்க்கு போலாமா?” என்று கேட்க, மீரா சரி என்று எழுந்தாள். இருவரும் வெளியே வந்து bye சொல்லிக்கொண்டு அவரவர் வகுப்புக்குச் செல்லும் பாதையில் சென்றனர்.
அந்தக் காரிடர் முடிவில் சென்று மீரா திரும்பி பார்க்க…. அர்ஜுனை காணவில்லை. அன்று மாதிரி இன்றும் திரும்பி பார்த்து சிரிப்பான் என்று நினைத்து கொண்டிருந்தவள், அவன் இல்லை என்றதும் ஏமாற்றமாக உணர்ந்தாள்.
Advertisement
அதுக்குள்ளையா போய்ட்டான் என்று நினைத்தவள், வேகமாக அவன் சென்ற வழியே சென்று… காரிடாரில் திரும்ப… அங்கே அர்ஜுன் நின்று கொண்டிருக்க, மீரா அவனைக் கவனிக்காமல் அவன் மேல் மோதி நின்றாள்.
மீரா தன்னைத் தேடுகிறாளா என்று பார்க்க தான் அர்ஜுன் மறைந்து நின்றான். ஆனால் அவள் இவ்வளவு பதட்டபடுவாள் என்று அவன் எதிர்ப்பார்க்கவில்லை. அவள் கலங்கிய கண்களைப் பார்த்தவன் “என்ன மேடம் விழுந்து அடிச்சு ஓடி வரீங்க. பயந்துடீங்களா… இவன் நம்மளை உண்மையா தான் விரும்புறானான்னு நினைச்ச தான…” அவன் கேட்க…. மீரா மெளனமாக நின்றாள்.
அவள் அமைதியாக நிற்பதிலேயே அவளின் எண்ணத்தை அறிந்தவன். அவள் கண்களை நேராகப் பார்த்து “I Love YOU மீரா.” என்றான். மீராவின் கலக்கம் மறைய, முகத்தில் புன்னகை மலர சரி என்று தலை ஆட்டியவள் திரும்பி நடக்க, அவள் கை பிடித்து நிறுத்திய அர்ஜுன், “நீயும் சொல்லு” என்றான்.
முதலில் திகைத்த மீரா தூரத்தில் யாரோ வருவதைப் பார்த்தவள் வேகமாக, “I Love You அர்ஜுன்.” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து செல்ல, அர்ஜுன் அங்கயே நின்று சிரித்துக் கொண்டிருந்தான்.
மீரா காரிடர் முடிவில் சென்று திரும்பி பார்க்க… அர்ஜுன் அவளையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தான். போங்க என்று ஜாடை காண்பித்தவள் சிரித்துக் கொண்டே சென்றாள். அவளைச் சிலர் ஒரு மாதிரி பார்க்க, அப்போது தான் அவளுக்குக் கல்லூரியில் இருப்பது நினைவு வர முகத்தைச் சாதாரணமாக வைத்துக் கொண்டு சென்றாள்.
அங்கே முகம் எல்லாம் புன்னகையுடன் வந்த அர்ஜுனை பார்த்து “என்னடா ரொம்பச் சந்தோஷமா இருக்க…” சூர்யா கேட்க… அர்ஜுன் நடந்ததைச் சொல்ல… “டேய் ரெண்டு நாள்ல இவ்வளவு நடக்குமா டா.” என்று ஆச்சர்யப்பட்டவன், அடுத்து என்ன கல்யாணமா என்று கேட்க….
பட்டென்று கனவு உலகத்தில் இருந்து இறங்கிய அர்ஜுன் “டேய் வெருப்பேத்தாத எங்க அண்ணனுக்குக் கல்யாணம் பண்ணி, ஆருவுக்குக் கல்யாணம் பண்ணி அப்புறம் தான் எங்களோடது. அதுக்கு இன்னும் ரொம்ப நாள் இருக்கு.” என்று பெருமூச்சு விட….
“ரொம்ப இழுக்காத, இதுக்கு நடுவில நாம ரெண்டு பேரும் ஆஸ்திரேலியா போய் ஹையர் ஸ்டடீஸ் படிக்க அப்பளை பண்ணி இருக்கோம். அது உனக்கு நியாபகம் இருக்கா…” சூர்யா கேட்க, அதைக் கேட்டதும் அர்ஜுன் முகம் மாறினான்.
அர்ஜுன் தான் சூர்யாவை ஆஸ்திரேலியா சென்று படிப்போம் என்று சொன்னது. ஆனால் இப்போது அவனுக்கு மீராவை விட்டு செல்ல விருப்பம் இல்லை. அவனது நிலை அறிந்து ஆறுதலாக அவன் தோளில் தட்டிய சூர்யா “ரெண்டு வருஷம் தான் அர்ஜுன் சீக்கிரம் போய்டும்.” என்றான்.
Advertisement
error: Content is protected !!