Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Kuzhalisai Azhagae

குழலிசை அழகே – 11 (2)

“அந்த ரெண்டு இன்சிடென்டுக்கும் நான் தான் காரணம்..”

என்று தயங்கி சொல்ல மேக்னாவோ,

“அடப்பாவி..” என்றாள் அதிர்ச்சியில் வாயில் கை வைத்து…

“ஹே.. நான் எதுவும் பண்ணல ப்பா.. என்னை அறியாம நடந்தது..”



Advertisement

என்று அவசரமாய் மறுத்தவள் கொஞ்சம் கொஞ்சம் தங்கள் கதையையும் கூற அதற்குள் தூங்கி எழுந்து வந்துவிட்டான் ஆரியன்.

“தூங்கினா எழுப்பி இருக்கலாம் தானே.. என் தலைவன் படம் மிஸ் ஆகிடுச்சு..”

தங்கை ஓட்டுவாள் என தெரிந்து தானே முன் கூட்டியே சமாளிக்க,

Advertisement

“அந்த படம் இருக்கட்டும்.. இங்க அதைவிட சூப்பர் படம் ஓடுச்சு.. ஆனாலும் உன் சஸ்பென்ஷன் பின்னாடி இப்படி ஒரு காரணத்தை எதிர்பார்க்கலை ஆர்யா..”

Advertisement

என்று பூடகமாய் சொல்லி சிரிக்க இருவரையும் மாறி மாறி பார்த்தவனுக்கு புரிந்து விட்டது.

“அடடா.. இரண்டு பொண்ணுங்களை சேர்த்து விட்டால் போதுமே ஒரு கதை உடுறது இல்லை..”

என்று சொல்லி அதனை அப்படியே டீலில் விட்டான். அவர்கள் பேச்சை புன்னகையோடு கேட்டு கொண்டு மீண்டும் தான் வாசித்துக் கொண்டிருந்த பாடலின் நோட்ஸை கவனிக்க தொடங்கினாள் சக்தி. பழைய கதையை எல்லாம் பேசியதாலோ என்னவோ இன்று புதிதாய் காதல் மலர்ந்தது போல் ஆரியனை காண ஆசை பொங்கியது .

Advertisement

‘என்ன லவ்வாங்கியா பார்க்கிறா..’ என்று உணர்ந்த ஆரியனுக்கும் இதழ்கள் மலர அதை தங்கை முன் காட்டிக் கொள்ளாமல் அவளோடு வம்பில் நின்றான்.

“பின்ன.. உன் அருமை பெருமை எல்லாம் அடுத்த சந்ததிக்கு தெரிய வேணாமா ஆர்யா அவர்களே..”

என்றவள்,  ” இந்த ஃப்ளுட் ரொம்ப அழகா இருக்குடா.. ஸோ லவ்லி.. “

அவன் கொடுத்த நினைவில் லவ்லி என்று சொல்ல,

“ம்ம்ம்… இதென்ன.. இதை விட வித்தியாசம் வித்தியாசமா நிறையா வாங்கி வைச்சு இருக்கா.. அந்த கப்போர்ட்டை பார்த்தால் தெரியும்..”

என்று அவன் சொல்லவும் அவனை மேலும் கீழும் பார்த்து,

“என் அறிவு அண்ணனே.. இது நீ வாங்கி கொடுத்தது..”

என அடிக்காத குறையாய் முறைத்து சொல்ல வாங்கி பார்த்துவிட்டு, “அட.. ஆமா..” என்றவன் மனைவியை பார்த்து,

“ஹிஹி.. தூங்கி இப்ப தானே எழுந்தேன்.. அதான்.. சரியா பார்க்கல..”

என்று சொல்ல, “நீங்க சொன்னது ரொம்ப க்ரெக்ட் அண்ணி.. அழகா போயிட்டு இருக்க வழியில இவனே அக்ஷிடென்ட் பண்ணிக்கிறான்..”

என்றாள் தலையில் அடித்துக் கொண்டு.. மற்ற நேரமாய் இருந்திருந்தால் சக்தியும் அவன் மறந்ததில் கடுப்பாகி இருப்பாள். இன்று காதல் மயக்கத்தில் பெரிதாய் கண்டுக் கொள்ளவில்லை.

“நல்லா இருக்க புருஷன் பொண்டாட்டிக்குள்ள ஏன் கொளுத்தி போடுற வானரமே..”

என்றவன் தானும் அந்த குழலை தான் பார்த்திருந்தான்.

இதை வாங்கி கொடுத்தபோது அவள் கொண்ட மகிழ்ச்சி இன்னமும் மறக்கவில்லை. அவர்கள் காதல் அடுத்த பறிமானத்தை கொண்ட தருணம் அல்லவா..!! அவனும் தன்னை மறந்து புன்னகைத்தான்.

ஆரியன் வானரம் என்றதற்கும் பதில் கொடுக்க நினைத்தவள் இருவர் முகத்தையும் பார்த்ததும்,

‘இனி இங்க இருந்தால்.. நீ கரடியாய் மட்டுமல்ல.. காட்டெருமையாகவும் தெரிவாய்.. “

என்று அசிரீரியாய் ஒலிக்க,

“ப்பெ..” என்று அவனை ஒரு தள்ளு தள்ளிவிட்டு வெளியே சென்றுவிட்டாள்.

“ஹே.. ஏன் ஆர்யா அப்படி சொன்ன.. பார் கோச்சிட்டு போறா..”

“அவ எல்லாம் கோச்சிக்கிற டைப் ஆ.. மேடம் ப்ரைவஸி கொடுக்கிறாங்கலாம்..”

என்று அவன் சிரிக்க அவளுக்கும் சிரிப்பு வந்துவிட்டது.

மீண்டும் அந்த ஃப்ளுட்டை அதன் இடத்தில் வைத்து விட்டு,

“எல்லாமே நேத்து நடந்தா மாதிரி இருக்குடி..”

என்று ஆர்யன் அருகில் வந்து நிற்க,

“நானும் அதே தான் நினைச்சேன்.. நீ இல்லாம என்ன ஆகி இருப்பேன்னு யோசிச்சு பார்த்தேன்… கற்பனை கூட கசக்குது..”
என்றாள் நிமிர்ந்து அவன் விழியில் கலந்து..!!

அவள் தோளில் கை சுற்றி போட்டுக்கொண்டு அருகில் அமர்ந்தவன்,

“அழகி..” என்று கொஞ்சி,

“எனக்காக எதாவது..”

என்று கீப்போர்ட்டை கண்ணால் காட்டி சொல்ல மோகனமாய் புன்னகைத்த சக்தியும்  பின் மெதுவாய் வதிகளை அழுத்தி இசைக்க தொடங்க சில நொடிகளில் அந்த பாடலை பிடித்து விட்டான். ஒரு கான்செர்ட்டில் அவனுக்காக என்று எல்லோர் முன்பும் கூறி அவள் வாசித்த பாடல்..!!!

பற்கள் தெரிய சிரிப்போடு ஆர்யன் அவள் சற்றும் எதிர்பாரா வகையில் இசைக்கேற்ப பாட தொடங்கினான்.

பால் வெளியே கடல் ஆக்கவா
வளர் பிறையே படகு ஆக்கவா
நிலவொளியே வலை ஆக்கவா
உன் நிழலை சிறை ஆக்கவா
என்ன நான் செய்வேன்
வான் மேகம் தூர
என்ன நான் செய்வேன்
என் தாகம் தீர
என்ன நான் செய்வேன்
உன் கூட ஆட
என்ன நான் செய்வேன்
உன் கூட வாழ
உன் கூட வாழ

‘உன் கூட வாழ..’ என்று முடித்து கன்னத்தில் முத்தமிட்ட அவனும் கண்களை மூடி இதழ் மலர அதனை பெற்றுக் கொண்ட அவளும் காதல் கவிதையின் மொத்த இலக்கணமாய் அந்நொடியில் மாறியதில் ஐயமில்லை.

மேக்னாவின் திருமணம் நெருங்க நெருங்க மற்ற எல்லாம் விடுத்து திருமண வேலைகள் வேகமெடுத்தது.

அழைக்க வேண்டிய உறவுகளின் எண்ணிக்கையை கணக்கெடுப்பது, யார் யார் என்னென்ன செய்ய என திட்டமிடுவது, சமையலில் தொடங்கி அனைத்திற்கும் ஆள் பேசி முடிவு செய்வது, அழைப்பிதழ் அடிப்பது, கல்யாணம் சீர்வரிசைகள், உடைகள், நகைகள் வாங்குவது என அனைத்தும் கடகடவென நடக்க சக்தியையும் கையிலே பிடிக்க முடியவில்லை. தங்கள் வீட்டு விஷேசம் என அவள் உரிமையாய் கலந்துக் கொள்ளும் முதல் நிகழ்வு..!! எனவே  ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்ய ரம்யாவிற்கு ஆச்சரியமே..!!

அவளின் விருப்பத்தை கண்டு மகிழ்ச்சியாகவே அனைத்து விஷயங்கள் பின்னிருக்கும் காரண காரியங்களை தன் மருமகளுக்கும் சொல்லிக் கொடுத்தார்.

ஆர்யனோ அவளின் ஆசையை பார்த்து தனக்கு இப்படி எல்லாம் நடக்கவில்லையே என்று ஏக்கம் இருக்காதா..?? என நினைத்தான்.

நம்மால் இந்த சின்ன சந்தோஷங்களை கொடுக்க முடியவில்லையே என சின்ன வருத்தம் எழுவதை தவிர்க்க முடியவில்லை.

ஆனால் ஆரியன் யோசிக்கும் விஷயத்தை அவன் பெற்றோர் அவனுக்கு முன்பாகவே யோசித்து அதற்காக ஓர் தீர்வையும் வைத்திருக்கிறார்கள் என்பது பத்திரிகை அச்சிட்டு வந்த பின்பு தான் புரிந்தது.

இரண்டு மாதிரியான பத்திரிகைகளை பார்த்ததும்,

“ஏன் ப்பா இரண்டு பத்திரிகை.. ஆர்டர் கொடுக்கும் போது கூட என்கிட்ட சொல்லலையே..”

என ஆரியன் குழப்பமாய் கேட்க,

“ஆமா.. முகூர்த்ததுக்கு தனியாவும் வரவேற்புக்கு தனியாவும் நான் தான் கொடுத்தேன்..”
என்று திரு சொல்ல,

“அப்படியா.. எதுக்குப்பா… கல்யாணத்துக்கு அழைக்கிற எல்லாரையுமே ரிசெப்ஷனுக்கும் கூப்பிடுறதா தானே இருக்கோம்..”

என்று வாய் கேட்டாலும் கை தன் போக்கில் பத்திரிகையை பிரித்து பார்க்க திருவும் ரம்யாவும் பார்த்துக் கொண்டாலும் அவனுக்கு எந்த பதிலும் சொல்லவில்லை. இங்கே ஒன்றும் புரியாமல் பார்வையாளர்களாய் மேக்னா மற்றும் சக்தி.

வரவேற்பு பத்திரிகையில் மணமக்களாய் மேக்னா – கார்த்திக்கேயன் உடன் சக்திஸ்ரீ – ஆரியன் பெயரும் இடம் பெற்று இருக்க,

“எங்களுக்குமா..”

என்று அதிர்ச்சியாய் தன் பெற்றோரை ஏறிட அவர்களும்,

“ஆமா.. உங்களுக்கும் தான் வரவேற்பு வைக்கலைல.. அதான்.. அன்னைக்கே சேர்த்து வைச்சுடலாம்னு நாங்க முடிவு பண்ணிட்டோம்..”
என்று சொல்ல இப்போது அதிர்ச்சி சக்திக்கும் தான்..!!

“என்கிட்ட சொல்லவே இல்லையே..”

என ஆரியன் மெதுவாய் முணுமுணுத்தாலும் ‘ஏன் இப்போ..’ என்று கேட்கவில்லை. அவனுக்கு நல்ல யோசனையாக தான் தோன்றியது.

ஆரியன் வேண்டாம் என்று மறுப்பான் என்பதாலே பத்திரிக்கை வந்ததும் சொல்லி கொள்ளலாம் என்று எண்ணி இருந்தார்கள்.

எனவே,

“செஞ்சுட்டு சொல்லிக்கலாம்னு தான்..”

என திரு சொல்ல சக்தியிடம் தான் மறுப்பு கிளம்பியது.

“இப்போ ஏன் மாமா.. அன்னைக்கு பொண்ணு மாப்பிள்ளையா அவங்க மட்டும் நின்னா தான் அழகா இருக்கும்.. இத்தனை நாளுக்கு அப்புறம் எதுக்கு..”
என்று தயக்கமாய் சக்தி இழுக்க,

“ஏன்.. உங்களுக்கு மட்டும் கல்யாணம் ஆகி வருஷம் ஆகிடுச்சா.. நீங்களும் புது ஜோடி தான்.. இங்க பார் சக்தி..  வரவங்க எல்லாரும் நம்மளை புரிஞ்சுபாங்கன்னு சொல்ல முடியாது.. எல்லார் கிட்டையும் விளக்கமும் கொடுக்க முடியாது.. உங்களையும் எல்லாருக்கும் பொதுவாய் அறிமுகப்படுத்துறது தான் சரி..”
என்று ரம்யாவும்,

“இரண்டு சம்பந்தி வீட்லயும் கலந்துகிட்டு தான் முடிவு பண்ணோம் சக்தி.. எல்லாருக்குமே இதில் சந்தோஷம் தான்.. நீ ஏன் தயங்குற..”

என்று திருவும் சொல்ல, ‘இரண்டு வீட்லயும் னா.. அப்பா – அம்மா கிட்ட  பேசினாங்களா.. அவங்க என்ன சொல்லி இருப்பாங்க..’ என்று எண்ணியபடி கணவனை கண்டாள். அவன் உன் முடிவு என்பது போல் அவளை தான் பார்த்திருந்தான்.சக்தியின் பார்வையை உணர்ந்த ரம்யா,

“உங்க வீட்ல எப்போ பேசினோம்னு யோசிக்கிறியா…? என்ன பண்றது நான் சொல்லியும் நீங்க கண்டுக்கல.. பெரியவங்க நாங்களும் அப்படி இருக்க முடியுமா..”
என்று சடைந்து கொள்ள சக்தி மௌனமாகி விட,

“என்ன அண்ணி இவ்வளவு யோசிக்கிறீங்க… நம்ம ரெண்டு பேருமே ப்ரைட்.. ஒரே மாதிரி மேக்கப் அண்ட் காஸ்டியும் போட்டு சும்மா தெறிக்க விடலாம்.. ஓகே சொல்லுங்க..”

என மேக்னாவும் ஆர்பாட்டமாய் கையை பிடித்துக் கொண்டு சொல்லவும் அதற்கும் மேல் ஏன் மறுக்க போகிறாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!