Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

உனக்குள் என் உயிரே

உனக்குள் என் உயிரே 9 1

உனக்குள் என் உயிரே


அத்தியாயம் 9



Advertisement

மீரா கணேசனை பார்த்து வணக்கம் என்று கரம் குவித்தாள். கணேசன்வா மீரா… நாம ஒருவருக்கொருவர் நேரடியா அறிமுகம் ஆகலையே தவிர… உன்னை எனக்கு நல்லா தெரியும். ஆரு எப்பவும் உன்னைப் பத்தி தான் பேசுவா.” என்றார்.

அவர் சொன்னதைக் கேட்டு மீரா புன்னகைக்க…அப்பா ஆருவுக்கு முன்னாடி மீராவை எனக்குத் தான் தெரியும். மீராவும் எங்க காலேஜ் தான் படிக்கிறா. அன்னைக்குக் காலேஜ்ல என்னைப் பார்த்து ஒரு பொண்ணு அவுட்னு கத்தினான்னு சொன்னேன்ல… அவ இவ தான்.” அர்ஜுன் சொல்ல….

எப்படிப் போட்டுக் குடுக்கிறான் பாரு என்று நினைத்த மீரா சங்கடமாகக் கணேசனை பார்க்க… அவர்ஹா… ஹா… ஹா… நீதான் அந்தப் பொண்ணா? நான் அன்னைக்கே சொன்னேன், நீ பார்க்கணும்னு விதி இருந்தா… கண்டிப்பா அந்தப் பெண்ணைத் திரும்பி பார்ப்பேன்னு. அதே மாதிரி ஆகிடுச்சு.” என்றவர், உட்காரு மீரா என்று எதிரில் இருந்த இருக்கையைக் காட்ட… மீரா சென்று அதில் அமர்ந்தாள்.

என்ன மீரா பார்க்க ரொம்பக் களைப்பா இருக்க? எங்கையாவது வெளிய போயிட்டு வரியா?” கணேசன் கேட்க…. மீரா இல்லை என்று தலை ஆட்ட…அவ மதியமே வந்திட்டாப்பா… மேல பொம்மைகளுக்குப் புடைவை கட்டினா… இன்னைக்கு மீரா கட்டின புடவைகள் மட்டும் நாலு வித்து இருக்கு.” ஆரு பெருமையாகச் சொல்ல….

நீ ஏன்மா அந்த வேலை எல்லாம் பார்க்கிற… நீ புடவை மட்டும் செலக்ட் பண்ணிட்டு… அங்க வேலை செய்யற பொண்ணுங்களைக் கட்ட சொல்லி இருக்கலாமே, பாரு ரொம்பக் களைப்பா இருக்க.” என்ற கணேசன் அர்ஜுனிடம் அவளுக்குக் காபி கொடு என்று சொன்னவர், “வேற எதாவது சாப்பிடுறியா?” என்று கேட்க… மீராவேண்டாம் அங்கிள், எனக்கு அந்த வேலை ரொம்பப் பிடிச்சது.” என்றாள். அர்ஜுன் மீராவிடம் காபி கப்பை கொடுக்க மீரா அதை வாங்கிக் குடிக்க ஆரம்பித்தாள்.

நானே பார்த்தேன் இன்னைக்குத் தான் இப்படி டிஸ்ப்ளே வச்சிருந்த புடவை எல்லாம் சேல் ஆகி இருக்கு. உன்னோட செலெக்ஷன் ரொம்ப நல்லா இருக்கு மீரா.” கணேசன் சொல்ல…. அவர் பின்னே நின்றிருந்த அர்ஜுன் அவன் ஷர்ட் காலரை தூக்கி விட…. அதைப் பார்த்த மீரா மெலிதாகச் சிரித்தாள்.

சரி நீங்க பேசுங்க, நான் போகணும்.” என்ற கணேசன்மீரா எங்க வீட்டுக்கு ஒரு நாள் மதியம் சாப்பிட வரணும்.” என்று அழைத்துவிட்டு சென்றார்.

எனக்கும் போகணும் மீரா, ஆருவை நீ போகும் போது வீட்ல விட்டுடு.” அர்ஜுன் சொல்ல… ஆருஇல்லை… நான் இருக்கேன். நைட் உங்க கூட வரேன்.” என்றாள். சரி என்று மீரா மட்டும் கிளம்பினாள். அர்ஜுன் அவளை வழி அனுப்ப சென்றவன், வெளியில் வந்ததும் அங்கிருந்த ஜூஸ் கடைக்கு அழைத்துச் சென்று ஜூஸ் வாங்கிக் கொடுத்தான்.

இன்னைக்கு உனக்கு ரொம்ப வேலை… ரொம்பக் களைப்பா இருக்க. போனதும் குளிச்சிட்டு, மறக்காம சாப்டிட்டு தூங்கு.”

நான் தூங்க மாட்டேன் நீங்க நைட் போன் பண்ணுவீங்கள்ள….”

நான் போன் பண்ண மாட்டேன். ஒழுங்கா போய்த் தூங்கு. உன் கண்ணைப் பார்த்தாலே தெரியுது, நீ எவ்வளவு களைப்பா இருக்கேன்னு.” அர்ஜுன் சொல்ல… மீரா முகம் வாடினாள். அதைப் பார்த்த அர்ஜுன், “நாளைக்கு மதியம் இங்க வா… உனக்கு ஒரு வேலை இருக்கு.” என்றான்.

அதைக் கேட்டு மீரா முகம் மலர….விட்டா நீ எங்க கடையில வேலைக்குச் சேர்ந்திடுவ போலிருக்கு.” என்று அர்ஜுன் கிண்டல் செய்ய…. மீராகண்டிப்பா நான் படிச்சு முடிஞ்சதும், இங்க தான் வேலைக்குச் சேர போறேன்.” என்றாள்.

நீ எதுக்கு வேலைக்குச் சேரனும் மீரா… இது உன்னோட கடை தான.” அர்ஜுன் சொல்ல…. மீரா வேகமாக ஆமாம் என்றாள். அர்ஜுன் அவளைப் பார்த்து சிரித்தவன், “சரி கிளம்பு, நாளைக்கு மதியம் பார்க்கலாம்.” என்றவன், ஆருவிற்கும் ஜூஸ் வாங்கிவிட்டு பர்ஸை தேட…உங்க பர்ஸ் என்கிட்டே இருக்கு.” என்ற மீரா… அவன் பர்ஸை எடுத்து கொடுத்தாள்.

எதாவது பணம் மிச்சம் இருக்கா… இல்லைனா எல்லாத்தையும் காலி பண்ணிட்டியா..”

இருக்கு… ஆயிரம் ருபாய் தான் எடுத்தேன்.” என்ற மீரா சந்தோஷமாக அர்ஜுனிடம் விடை பெற்று செல்ல… அர்ஜுன் ரெண்டு நாளே பார்காம இருக்க முடியலைன்னு சொல்றா… இதுல நான் ஆஸ்திரேலியா போனா என்ன ஆவா? என்று யோசித்துக் கொண்டே சென்றான். சரி அவளால மட்டும் தான் உன்னைப் பார்க்காம இருக்க முடியாதா, உன்னால அவளைப் பார்க்காம இருக்க முடியுமா என்று கேட்ட மனசாட்சியிடம், என்னாலையும் அவளைப் பார்க்காம இருக்க முடியாது என்பதை ஒத்துக்கொண்டான்.

மறுநாள் மதியம் வந்த மீராவிடம் புடவைகளின் மாடல்கள் இருந்த ஒரு பெரிய புத்தகத்தைக் கொடுத்த அர்ஜுன், “இதில் இருந்து எந்தப் புடவைகள் நல்லா இருக்குன்னு செலக்ட் பண்ணி கொடு. அதை ஆர்டர் போடணும்.” என்றான். மீராவும் அலுவலக அறையில் அமர்ந்து ஆர்வமாக அந்த வேலையைச் செய்தாள். அப்போது வித்யா ஆருவுடன் கணேசனுக்கும், அர்ஜுனுக்கும் அங்கேயே மதிய உணவு கொண்டு வந்தார்.

வித்யா மீராவிடம்நீ இங்க என்ன பண்ற?” என்று கேட்க… ஆருநேத்துல இருந்து மீரா நம்ம கடையில வேலைக்குச் சேர்ந்திருக்கா.” என்று சொல்ல… வித்யா புரியாமல் பார்க்க…இல்லைமா… நேத்து மீரா ஆருவோட இங்க வந்தாள். அப்ப சில புடவைகள் அவ செலக்ட் பண்ணி மாடல் பொம்மைக்குக் கட்டி டிஸ்ப்ளே வச்சது எல்லாம் அப்பவே வித்துடுச்சு. அதுதான் இன்னைக்குத் தீபாவளிக்கு ஆர்டர் போட புடவை செலக்ட் பண்ணி தர சொன்னேன். அது தான் வந்திருக்கா.” என்றவன், “எனக்குப் பசிக்குது சீக்கிரம் சாப்பாடு போடுங்க.” என்றான்.

வித்யா அர்ஜுனுக்குச் சாப்பாடு எடுத்து வைத்தவர், “மீரா, நிறையச் சாப்பாடு கொண்டு வந்திருக்கேன், நீயும் சாப்பிடு.” என்றதற்குஇல்லை ஆன்டி, வீட்ல இருந்து சாப்டுட்டு தான் கிளம்பினேன்.” என்றவள், அவள் வேலையில் கவனம் செலுத்த… வித்யா கணேசனை சாப்பிட அழைக்கச் சென்றார்.
அவரோடு ஆருவும் சென்றுவிட… அர்ஜுனும் மீராவும் மட்டும் இருந்தனர்.

மீரா…” அர்ஜுன் அழைக்க, திரும்பி பார்த்தவளிடம்,
நிஜமா சாப்பிட்டியா” என்றான். அர்ஜுனை பார்த்து சிரித்த மீரா, “ப்ராமிஸ் அர்ஜுன், சாப்பிட்டு தான் கிளம்பினேன். எனக்கு இப்ப தான் நீங்க இருகீங்கள்ள நான் மத்தவங்களைப் பற்றிக் கவலைப்படறது இல்லை. நான் பாட்டுக்கு என் வேலைய பார்கிறேன். அவங்க எதாவது பேசினாலும் கண்டுகிறது இல்லை. நல்லா வயிறு புல்லா சாப்ட்டு தான் வந்தேன். நீங்க ஒழுங்கா சாப்பிடுங்க.” என்றவள், தொடர்ந்து, “அர்ஜுன், இப்ப தசரா பெஸ்டிவல் வருது இல்ல… அதுக்கு ஒரு தீம் மாதிரி செஞ்சு வெளிய ஷோ கேஸ்ல டிஸ்ப்ளே வைப்போமா…” என்றாள் ஆர்வமாக.

தீம்னா… என்ன? தெளிவா சொல்லு.”

தசரானா கொலு தான… நாமும் கொலு படிக்கட்டு வச்சு, சுத்தி பொம்மைகளுக்கு டிரஸ் பண்ணி வச்சா பார்க்க அழகா இருக்கும். அது வாடிக்கையாளர்கள் கவனத்தையும் கவரும்…” மீரா சொல்ல… அப்போது கணேசனோடு வித்யாவும், ஆருவும் உள்ளே வந்தனர்.

வித்யா கணேசனுக்குச் சாப்பாடு பரிமாற… அர்ஜுன் மீரா சொன்னதைக் கணேசனிடம் சொல்ல….அவரும் நல்ல ஐடியா தான். ஆனா… இப்ப கடையில இருக்கிற கூட்டத்திற்கு வேலை ஆளுங்க எல்லாம் பிஸியா இருக்காங்க. யார வச்சு பண்றது?” என்று கேட்க….

நான், ஆரு அப்புறம் ஆன்டி மூண்ணு பேரும் சேர்ந்து செய்றோம்.” மீரா வேகமாகச் சொன்னவள்… சொன்னதும்தான், தான் அதிகப்படியாகப் பேசி விட்டமோ என்று நினைத்தவள், வித்யாவை பார்க்க…. அவர்செய்யலாம் மீரா… நீ சொன்னதும் தான் எனக்கே இதெல்லாம் முன்னாடியே செஞ்சிருக்கலாம்னு தோணுது. ஆம்பிளைங்களுக்கு இதெல்லாம் தெரியாது. நாம தான் இதெல்லாம் செய்யணும்.” என்றவர்,

என்ன செயலாம்னு சொல்லு.” என்று கேட்க… மீராவும் ஆர்வமுடன் விளக்க ஆரம்பித்தாள்.

கணேசன் வாணியையும், ஷீபாவையும் அவர்களுக்கு உதவச் சொன்னார். மீரா பயந்து கொண்டிருந்தாள். எங்கே வித்யா முன்பு வாணியும், ஷீபாவும் தன்னை அண்ணி என்று அழைத்து விடுவார்களோ என்று… ஆனால் அவர்கள் மீரா அக்கா என்று தான் அழைத்தனர். அதன் பிறகு தான் மீராவிற்கு நிம்மதியான மூச்சு வந்தது.

கொலு பொம்மைகள் வாங்கினர். அதோடு வித்யா தங்கள் வீட்டிற்குச் சென்று சில பொம்மைகள் எடுத்து வந்தார். மீரா ஐந்து படிக்கட்டுகளில் வாணியைப் பொம்மைகளை அடுக்கச் சொன்னாள். மேலிருந்த குடோனில் ஒரு மாடல் பொம்மைக்கு மடிசார் புடவை கட்டியவர்கள், மற்றொரு பொம்மைக்கு டிசைனர் புடவையைக் கட்டினார்கள். ஒரு ஆண் பொம்மைக்கு வேஷ்ட்டி சட்டையும், மற்றொரு பொம்மைக்குக் குர்தா பைஜாமாவும், சின்னக் குழந்தைகள் பொம்மைக்குப் பட்டுப் பாவடை, சட்டையும் போட்டு விட்டனர். அதோடு இன்னும் ஒரு ஆண் பொம்மைக்குப் பேன்ட் ஷர்ட்டும், பெண் பொம்மைக்கு அழகான அனார்கலி சுடிதாரும் போட்டு விட்டனர். எல்லாப் பொம்மைகளுக்கும் ஆபரணங்கள் போட்டவுடன் பார்க்க நிஜமான மனிதர்கள் போலத் தான் இருந்தது.

ஏற்கனவே கீழே ஷோகேஸ்சை மீரா சென்று வாங்கி வந்த லேஸ் துணியால் அலங்கரித்து வைத்திருந்தனர். அதில் கொலு படிக்கட்டுகள் ஒரு புறமும் அதைச் சுற்றி விதவிதமான உடைகளில் மாடல் பொம்மைகள் நிற்பது போல் செய்தவுடன், பார்க்க நிஜமாக வீட்டில் நடக்கும் விழா போல் தான் இருந்தது.

மீரா அதுவரை மேலே குடோனில் இருந்து தான் வேலை பார்த்தாள். எல்லாம் அவள் சொன்னபடி செய்திருகிறார்களா என்று கீழே வந்து பார்த்தவள் அசந்துவிட்டாள். சிறிது நேரம் அங்கேயே நின்று பார்த்து கொண்டிருந்தாள். அப்போது அங்கே வித்யாவும், ஆருவும் அவளோடு வந்து நின்று பார்த்தனர்.

ரொம்ப நல்லா இருக்கு மீரா.” வித்யா மனம் திறந்து பாராட்ட….சூப்பர் மீரா… நம்ம கடை தான் மத்த கடையவிட ஜொலிக்குது.” ஆரு சந்தோஷ ஆரவாரம் செய்ய… மீரா எல்லாவற்றையும் அமைதியான புன்னகையுடன் பார்த்திருந்தாள்.

எல்லாம் சரியாக இருப்பதை உறுதி செய்தவுடன் உள்ளே அலுவலக அறைக்குச் சென்றனர். அப்போது அர்ஜுன் அங்கே வந்தவன், மூன்று பெண்களும் களைப்பாக இருப்பதைப் பார்த்து… ஒரு ஆளை அனுப்பி ஜூஸ் மற்றும் சாப்பிட சமோசா வாங்கி வர சொல்லி அனுப்பினான்.

இன்னைக்கு எவ்வளவு செலவு பண்ணின?”
ரெண்டாயிரம்…”
அர்ஜுன் அவன் பர்சில் இருந்து பணத்தை எடுத்து கொடுக்க… மீராவும் மறுக்காமல் வாங்கிக் கொண்டாள்.

ஆதி மாலை எழு மணி போல் கார்மென்ட்ஸில் இருந்து தங்கள் கடைக்கு வந்தவன், கடையின் ஷோ கேஸ் அலங்காரத்தைப் பார்த்து அசந்து விட்டான். அவனும் அலுவலக அறைக்குள் வர அங்கிருந்த எல்லோரையும் பார்த்து, “இன்னைக்கு உங்களுக்கு எல்லாம் என்ன ஆச்சு? கடை ஜொலிக்குது. அம்மா வேற இங்க இருக்காங்க என்ன விஷயம்?” என்று கேட்க…

எல்லோரும் சேர்ந்து மீரா சொன்ன யோசனையும் அதன்படி எல்லோரும் சேர்ந்து வேலை செய்ததையும் சொல்ல…. ஆதி மனதார மீராவை பாராட்டினான். இனி ஒவ்வொரு பண்டிகைக்கும் இப்படி அலங்காரம் பண்ணிடலாம் என்றான். அப்போது கணேசனும் அங்கே வர எல்லோரும் சேர்ந்து சமோசாவும், ஜூஸ்ஸும் சாப்பிட்டனர்.

சாப்பிடும் போதுநீ ரொம்ப நேரம் இங்க இருக்கியே, உங்க அம்மாட்ட சொல்லிட்டு தான வந்த மீரா… அவங்க உன்னைத் தேட மாட்டாங்களே.” வித்யா கேட்க…

சட்டென்று முகம் மாறிய மீராவின் பார்வை அர்ஜுனிடம் சென்றது.அதெல்லாம் சொல்லிட்டு தான் வந்திருப்பா…” என்றான் அர்ஜுன்.

அப்போது கணேசன்உங்க அப்பா பேரு என்ன மீரா? என்ன செய்றார்?” என்று கேட்க…. மீராராம்நாத்…” என்றதும், “ஷைன் பைனான்ஸ் கம்பெனி வச்சிருக்காரே…. அந்த ராம்நாத்தா?” என்றார் சந்தேகமாக.

மீராஆமாம்….” என்று சொல்ல… 


அவ்வளவு பெரிய இடத்து பொண்ணா இருந்திட்டு எங்க கடையில வேலை பார்கிறியே, உங்க அப்பாவுக்குத் தெரிஞ்சா எங்களைத் தான மீரா தப்பா நினைப்பார்.” கணேசன் சொல்ல…. மீரா அமைதியாக இருந்தாள்.ஆமாம்…. பொண்ணு மேல ரொம்ப அக்கறை இருக்கிறவர் தான்.” என்று நினைத்து அர்ஜுன் பல்லை கடித்தான்.

நான் உங்க அப்பா அம்மாவை நிறையத் தடவை பிசினஸ் விருந்துல பார்த்திருக்கேன். உங்க அப்பா ரொம்பப் பிஸியா இருப்பார். அதனால அவரோட பேசினது இல்லை. ஆனா உங்க அம்மாவோட பேசி இருக்கேன். அவங்களுக்கு ஒரு பையன் தானே இருக்கான்னு சொன்னதா நியாபகம். ஒருவேளை நான் சரியா கேட்கலையோ…” கணேசன் சொல்ல….

அவர் சொன்னதைக் கேட்டு முகம் வெளுத்த மீரா, “நீங்க சரியா தான் கேட்டு இருக்கீங்க. அவங்க சொன்னபடி அவங்களுக்கு ஒரு பையன் தான். அவங்க என்னோட அம்மா இல்லை. எங்க அப்பாவோட ரெண்டாவது மனைவி.” என்றாள். அதைக் கேட்ட அர்ஜுனை தவிர மற்றவர்கள் அதிர்ந்தனர்.

X

Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!