Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

உனக்கென இருப்பேன் -11

உனக்கென  இருப்பேன்-11

 

கீர்த்தனா பதில் பேசாது மௌன சிலையாகி நின்றாள். 

ஹலோ சிஸ்டர் …ஹலோ ….லைனில் இருக்கீங்களா? ஐந்து ஆறு முறை ஹலோ சொல்லி பார்த்துவிட்டு ராகவ் இணைப்பை துண்டித்து விட்டான் .



Advertisement

கீர்த்தனா உணர்சியின்றி ஜடம் போல் அதே இடத்தில்  அப்படியே நின்று கொண்டிருந்தாள் . குழந்தை அழுது அவளை நிகழ்விற்கு கொண்டு வந்திருந்தது 

மிகப்பெரிய அதிர்ச்சியை அவள் மனம் ஏற்க துணியவில்லை. ஏற்கனவே வாழ்வில்” இடி போல் விழுந்த அடி அப்படி !” 

அழும் குழந்தையை தூக்க சொல்லி மூளை கட்டளை இடவில்லை.குழந்தையை வெறித்து பார்த்தபடி உயிருள்ள ஜடமாய் நின்றாள் .

Advertisement

அவளுக்கான நம்பிக்கை அவன் தானே …அவனே பொய்த்துவிட்டால் ? எதை நம்புவது ?தன்னை சுற்றி என்ன நடக்கிறது ? அவளுக்கு எதுவும் புரியவியவில்லை .

Advertisement

அவனை எப்படி கையாள்வது ? ஒரு தவறான பார்வை கூட அவன் பார்த்ததில்லை என்று ஆறாம் அறிவு அறிவுறுத்த தான்  செய்தது.

கீர்த்தி குழ்ந்தை அழறது காதில் விழலையா ?  மஞ்சுளா ஓடிவந்து குழந்தையை தூக்கிக் கொண்டார் .

என்னம்மா ஆச்சு ? அவள் நின்ற கோலம் அவரை கலவரப்படுத்தியது .

Advertisement

கீர்த்தி ….அவள் தோளை பற்றி குலுக்கினார் .

ம்ம்ம்ம்ம்ம் …விலுக்கென நிமிர்ந்தாள் .

நல்ல பொண்ணும்மா நீ ! பேயடிச்சவ மாதிரி நிற்கிற ….குழந்தைக்கு அழுது அழுது தொண்டை காய்ஞ்சு போச்சு . அவளை கடிந்தபடி அவர் தூக்கிக் கொண்டு போய்விட்டார் .

ஏதோ நினைவு வந்தவளாய் ஓடிப்போய் அஸ்வின் கபோர்டை ஆராய்ந்தாள் . அவள் எவ்வளவு துப்புத்தேடியும் எதுவும் கிடைக்கவில்லை.

டைரி , க்ரீட்டிங்ஸ் ம்கூம் ….எதுவும் அகப்படவில்லை .

மனதை அரிக்கும் பல கேள்விகளோடு அவனை எப்படி எதிர்கொள்ள முடியும் ? எதிர்காலம் குறித்த பயம் மனதில் பாரத்தை  இன்னும் இன்னுமாய்  ஏற்றியது 

“………………………”

வினோத், அஸ்வின் பற்றி, இரு குடும்பத்திற்கான பகை பற்றி எல்லாம் சொல்லியிருக்கிறான் . அஸ்வின் என்னை விட நான்கு வயது மூத்தவன் அவன் எனக்கு அண்ணன் இல்லை நெருங்கிய நண்பன் என்று சொல்லியிருக்கிறானே ….

எங்கள்  காதலை சேர்த்து வைத்ததே அஸ்வின் தானே ….?   அவருக்கு ஏன் தெரியவில்லை தம்பி விரும்பும் பெண்ணை நினைப்பது பாவம் என்று …

தம்பி விரும்புகிறான் என்று தெரிந்தும் அஸ்வின் என்னை விரும்பினார் என்றால் ?அவள் இதய தராசில் மிகவும் கீழ் இறங்கிப் போனான் அஸ்வின் .

ஓ …..அன்னைக்கு செகண்ட் சான்ஸ் என்று இதை தான் சொன்னாரா ? நினைக்க நினைக்க அருவெறுப்பாய் இருந்தது .

அஸ்வின் நல்லவனா ?கெட்டவனா ? உள்ளுக்குள் பதற்றம் சூழ்ந்து கொண்டது.

அவனின் கனிவான முகமும்  காருண்யமான பேச்சும் அவனை கெட்டவனாக நினைக்க விடவில்லை.

அவன் பார்வையில் இருந்த அக்கறை காதலா ? அவளால் நம்ப முடியவில்லை,நம்பாமலும் இருக்க முடியவில்லை. 

அவன் பார்வையின் வித்தியாசம் தெரியாமலா ஏறத்தாழ ஒரு மாதம் அவனுடன் இருந்திருக்கிறேன் ?

அஸ்வினிடம் என்னவென்று கேட்பேன் ? வினோத்திற்கு முன்பே என்னை காதலித்தாயா ? வினோத்திற்கு போட்டியாக காதலித்தாயா ? என்றா கேட்க முடியும்?

என் மனதில் பதிந்த அஸ்வின் தேவதூதனாக …என்னை மீட்டெடுக்க வந்த ரட்சகனாக அல்லவா தெரிகிறான் !  அவன் மறுபக்கம் கோரமாக இருந்தால் ? ஐயோ கடவுளே நான் என்ன செய்வேன் …..?

பயம் பதட்டம் எல்லாம் சேர்ந்து கண்ணை இருட்டியது . தட்டு தடுமாறி கட்டிலில் வந்து சுருண்டு கொண்டாள் .

அழ முயன்றும் அழுகை வரவில்லை . அழுதால்  பரவாயில்லை கொஞ்சம் சுவாசம் சீராகும் என்று முயற்ச்சித்துப் பார்த்தாள் .ஆனால் முடியவில்லை 

முடிவெட்டிக் கொண்டு வந்தவன்  படுத்திருக்கும் மனைவியை பார்த்தபடியே குளிக்க சென்றான் .

குளித்து வந்தவன் உடைமாற்றி அவள் அருகில் வந்து பார்த்தான். சோர்வாய் படுத்திருப்பது போல் தோன்றியது .

மெல்ல அவள் நெற்றியில் கை வைத்து பார்த்தான் …தீ கங்கு தீண்டியது போல் துள்ளி எழுந்தாள் .

ஹே …ரிலாக்ஸ் ….ரிலாக்ஸ் …. டயர்டா படுத்திருந்த …ஃபீவரோன்னு  பார்த்தேன் .

அவன் முகம் காண விருப்பமற்று “இல்லை சும்மா தான் …”கூந்தலை அள்ளி  கொண்டையாக்கி கொண்டே படுக்கையில் இருந்து எழுந்து கொண்டாள்.

வேலைக்கு ஆள் வச்சுக்கோ கீர்த்தி . நான் மஞ்சுமாட்ட ஆள் பார்க்க சொல்றேன் ….அக்கறையாய் கூறினான் .

சரி என்றோ வேண்டாம் என்றோ அவள் சொல்லவில்லை . கிச்சனுக்குள் புகுந்து கொண்டாள்.

என்னாச்சு இவளுக்கு ? தோளை குலுக்கிக் கொண்டான் .

காபி கோப்பையை டீப்பா மீது வைத்துவிட்டு மஞ்சுளா வீட்டிற்கு போனாள் .

“……………………..”

அவன் முகம் பார்த்தால் ஏதாவது கேட்டுவிடுவோமோ என்ற அச்சம் . ஒருவேளை தன் முக இறுக்கம் காட்டிக் கொடுத்து விடுமோ என்ற பயமே அவனை தவிர்க்க வைத்தது 

நெடு நேரம் மஞ்சுளாவோடு பேசிக் கொண்டே அங்கேயே இருந்தாள் .

மஞ்சுளாவே விசித்திரமாக பார்த்தார் . அக்கம் பக்கத்தாரோடு அளவோடு தான் உறவாடுவாள் . இங்கு வந்தால் கூட பத்து நிமிஷம் கூட இருக்க மாட்டாள் . இன்று என்ன வந்தது ?

என்ன கீர்த்தி மதியம் சமைக்கலையா ?

மஞ்சுமா நீங்க தான் பிரியாணி பண்றீங்களே …அவருக்கும் சேர்த்து பண்ணிடுங்க ! உங்க கைப்பக்குவம் அவருக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்.

நான் உங்களுக்கு ஹெல்ப் பண்றேன் ஓகே வா ! இழுத்து பிடித்து ஒட்டாத புன்னகை  ஒன்றை உதிர்த்து வைத்தாள் .

கீர்த்தி அஸ்வின் கூட சண்டையா ? சுற்றி வளைக்காமல் நேரடியாக கேட்டார் .

“ஐயோ மஞ்சுமா அதெல்லாம் இல்லை ….” என்னவோ உடம்பும் மனசும் சோர்ந்து போய் இருக்கு அவ்வளவு தான் ! சட்டென்று அவர் மடியில் தலை சாய்த்துக் கொண்டாள்.

அவரும் ஒரு பெண்ணை பெற்ற தாய் தான் ! அவருக்கு புரிந்து கொள்ள முடிந்தது .

அஸ்வின் கீர்த்தி திருமண வாழ்வை ஊர் உலகம் ஏற்கிறதோ இல்லையோ சம்மந்தப்பட்ட இருவரும் ஏற்க கொஞ்ச காலம் தேவைப்படும் .

லேசாய் அரும்பிய கண்ணீரை உள்ளிருத்திக் கொண்டாள் .

கீர்த்தி கவலைப்படாதேடா …. உன் பொறுமைக்கும் குணத்துக்கும் உன்னை ராசாத்தி மாதிரி தாங்கற  புருஷன் கிடைச்சிருக்கான் . எல்லாம் சரியா போயிடும், தைரியமா இருக்கணும் ! தலை கோதி பரிவுடன் பேசினார் மஞ்சுளா .

தேங்க்யூ மஞ்சுமா என்றவளுக்கு எவ்வளவு கவனமாய் தவிர்த்தும் விழி ஓரம் லேசாய் கசிந்தது.

“………………………..”

என்னாச்சு கீர்த்திக்கு ? இவ்வளவு நேரம் மஞ்சும்மா கூட இருக்கா …யோசித்துக் கொண்டே போனை எடுத்து பார்த்தான் .

கால் ஹிஸ்ட்ரியில் ராகவ் எண் இருந்தது .

நெடுநாளுக்கு பிறகு நண்பண் அழைத்திருக்கிறானே….. இவனே அவனுக்கு தொடர்பு கொண்டான் .

வாழ்த்துகள் மாப்பிளை ….மனப்பூர்வமாய் வாழ்த்தினான் .

கீர்த்தியிடம் பேசியது பற்றி ராகவ்வும் சொல்லவில்லை அஸ்வினும் கேட்கவில்லை .

நீண்ட காலத்திற்கு பிறகு இரு உயிர் நண்பர்கள் பேசுகிறார்கள் சொல்லவும்  வேண்டுமோ  ?அப்படி இப்படி என்று நாற்பது நிமிடத்திற்கு பிறகே முடிவு பெற்றது.

இன்னும் கீர்த்தி வரலையே …யோசனையுடன் நெற்றியை தேய்த்துக் கொண்டான் .குழந்தையை  பார்த்து ரொம்ப நேரம் ஆகி இருந்ததால் அஸ்வின் பொறுமை இழந்து மஞ்சுமா வீட்டிற்கு சென்றான் .

வாப்பா அஸ்வின் காபி தரவா ? மஞ்சுளா உபசாரமாய் கேட்டார் .

வேண்டாம் மஞ்சுமா காபி சாப்பிட்டேன். பேசிக் கொண்டே கிச்சன் பக்கம் பார்வையை சுழற்றினான் கீர்த்தி பூண்டு உரித்துக் கொண்டிருந்தாள் .

கவனமாய் அவனை பார்ப்பதை தவிர்த்து அதி தீவிரமாய் பூண்டு உரித்துக் கொண் டிருந்தாள் .

மஞ்சுமா இருவரையும் பார்த்து மௌனமாய் சிரித்துக் கொண்டார் .

சற்று நேரம் அமைதியாய் அமர்ந்திருந்தவனுக்கு சங்கோஜமாய் இருந்தது .விளையாடிக் கொண்டிருந்த தியானுவை தூக்கிக் கொண்டு கிளம்பிவிட்டான் .

“……………………”

எவ்வளவு நேரம் தான் இங்கே இருந்துவிட முடியும் ? வெறுப்பை விழியில் காட்டாமல் சூடான சிக்கன் பிரியாணியை எடுத்துக் கொண்டு சலிப்புடன் வீடு வந்து சேர்ந்தாள் .

கீர்த்தி நான் தான் சைவம் பழகிக்கிறேன்னு சொன்னேனே ….? நீ ஏன் பிரியாணி செய்ய கத்துக்கற ? சங்கடமாய் கேட்டான் .

இல்லை …சும்மா …உதடு கடித்து பிதற்றினாள் .

இது இருந்தா தான் சாப்பிடுவேன்னு எந்த பிடிவாதமான பழக்கமும் எனக்கு இல்லை. சோத்துல தண்ணீர் ஊத்தி உப்பு போட்டு கொடுத்தால் கூட குடிச்சிடுவேன். ரொம்ப கஷடப்படுத்திக்காதே ப்ளீஸ் என்றான்.

ம்ம்ம்ம் என்றாள் எங்கோ பார்த்தபடி …

உனக்கு லன்ச் பண்ணலையே …நான் போய் ஹோட்டலில் வாங்கிட்டு வரட்டுமா ?

இல்லை….வேண்டாம் ! மஞ்சுமா வீட்டில் தயிர் சாதம் சாப்பிட்டேன் என்றாள் .

அவன் முகம் பாராது இளக்கமற்ற குரலில் பேசிவிட்டு அறைக்குள் நுழைந்து கொண்டாள் .

எதுவோ சரியில்லை என்று பட்டது . என்ன என்று தான் அவனுக்கு புரியவில்லை.

வெளிப்படையாக பேசுபவளாக இவள் ஏன் இல்லை ..பெருமூச்சு விட்டபடி குழந்தையுடன் ஹாலில் படுத்துவிட்டான் .

 

 

 

 

 

    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!