உனக்கென இருப்பேன்-15
உனக்கென இருப்பேன்-15
ஹாய் அண்ணி ! என்ன அப்படி பார்க்கறீங்க ? உள்ளே கூப்பிட மாட்டிங்களா?உரிமையாய் கேட்டு சிரித்தாள் அக்ஷயா.
வாட் அ சர்பிரைஸ் ! வா வா…இன்முகமாய் வரவேற்றாள் கீர்த்தி.
Advertisement
எது சர்பிரைஸா ? நான் வரேன்னு அண்ணா சொல்லலையா?
அவன் தான் நான்கு நாளாய் முகம் பார்ப்பதே இல்லையே …என்னத்த சொன்னான்! மனதோடு பேசிக் கொண்டாள் .
என்ன அண்ணி யோசனை ?
Advertisement
இல்ல அக்ஷயா நேத்து காலையில் கூட சொன்னாங்க ஆனான் தான் மறந்துட்டேன் சாரி . உள்ளே வா ! நாத்தனார் கரம் பற்றி அழைத்து போனாள் .
Advertisement
அக்ஷயாவிற்கு புரிந்து போனது . அண்ணன் கண்களில் விரக்தி தெரிகிறது அண்ணியின் முகத்தில் ஏக்கம் தெரிகிறது .
அவள் ஒன்றும் புரியாத குழந்தை இல்லையே …MSC இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி . அஸ்வின் தங்கையல்லவா மெச்சுரிட்டிக்கு சொல்லவா வேண்டும்?
அறைக்குள் நுழைந்தவள் உறங்கும் குழந்தைக்கு அருகில் சென்றாள் . அச்சு அசல் கீர்த்தி போலவே இருந்தான்.
Advertisement
தியானு குட்டி தூங்கறீங்களா …அத்தை வந்திருக்கேன் உங்களை பார்க்க! அத்தை உங்களுக்கு டிரஸ், டாய்ஸ் எல்லாம் வாங்கிட்டு வந்திருக்கேன் செல்லம் .
அவன் தான் தூங்குறானே அஸ்வின் செல்லமாய் அதட்டினான் .
அண்ணா எனக்கு இப்போவே இவனை தூக்கி கொஞ்சணும்னு ஆசையா இருக்கே…. சிணுங்கினாள்.
இவர்கள் பேச்சில் குழந்தை விழித்துக் கொண்டு சிணுங்கினான்.
குழந்தைக்கு பத்து மாதம் முடிந்திருந்தது . புதிய மனிதர்களை கண்டால் சிணுங்குகிறான் . அஸ்வின் ஆபிஸ் கிளம்பும் போது தூக்க சொல்லி அழுகிறான் . அஸ்வின் குரல் கேட்டால் இப்போதெல்லாம் தத்தி தாவி நடைபயின்று தேடி வருகிறான்.
இப்போது அக்ஷயாவை பார்த்து உதட்டை பிதுக்கி அழ ஆரம்பித்து விட்டான்.
அய்ய….தியானுக்குட்டி ஏன் அழறாங்க ? அத்தை உங்களை பார்க்க வந்திருக்காங்க இப்படி அழறீங்களே செல்லம் . இப்படி அழுதிட்டே இருந்தா உங்களை அழுமூஞ்சின்னு சொல்லிடுவாங்க …குழந்தையை கொஞ்சி சமாதானம் செய்தான் அஸ்வின்.
குழந்தைக்கு வாங்கி வந்த கிலு கிலுப்பை ஆட்டிக் கொண்டே சிரிப்புக்காட்டி கொண்டிருந்தாள் அக்ஷயா.
அச்சு நான் ஆபிஸ் கிளம்புறேன் . ஈவினிங் வரேன் என்று விடைபெற்றவன் கீர்த்தியிடம் சொல்லிக் கொள்ளவில்லை. குழந்தையின் கன்னம் கிள்ளி முத்தம் வைத்து கிளப்பிவிட்டான்.
அக்ஷயா அதை கவனிக்க தவறவில்லை.
அச்சு வா சாப்பிடலாம் என்றாள் கீர்த்தி .
அண்ணன் ஹோட்டலில் வாங்கி கொடுத்து தா கூட்டிட்டு வந்தார் அண்ணி என்றாள்.
ஓ ….என்றவள் அதன் பிறகு எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை.
நீங்க இன்னும் சாப்பிடல போல ….போய் சாப்பிட்டுவாங்க நான் குழந்தையை பார்த்துக்கிறேன் என்று குழந்தையிடம் பேசி கிளுக்கி சிரித்துக் கொண்டிருந்தாள் அச்சு.
ஒற்றை படுக்கை அறை கொண்ட மிகச்சிறிய போர்ஷன் . அதை அழகாக வைத்திருந்தாள் கீர்த்தி.
“…………………..”
சாப்பிட்டு வந்த கீர்த்தியோடு சேர்ந்து பேச்சுக்கு கச்சேரி ஆரம்பித்தாள் அச்சு.
ஊரில் அத்தை மாமா நல்லா இருக்காங்களா? சற்று சங்கடமாய் கேட்டாள்.
உங்க மாமனார் மாமியார் அமோகமா இருக்காங்க அண்ணி.
அண்ணி இது நம்ம தோட்டத்துல விளைந்த நாட்டு கொய்யா . உப்பு மிளகாய் பொடி வைத்து சாப்பிட்டா சூப்பரா இருக்கும் . இது உங்க மாமியார் ஸ்பெஷல் கிடாரங்காய் ஊறுகாய் , இது அரிசி அப்பளம் , இது கறி வடகம் கீரை மீன் குழம்புக்கு எல்லாம் தாளிச்சு கொட்டினா வாசனை அள்ளும் . இது எள்ளுப்பொடி அண்ணாக்கு ரொம்ப பிடிக்கும் . அப்புறம் இது பிரண்டை துவையல் உங்களுக்கு நல்லது .
தியானுக் குட்டி அத்தை உங்களுக்கு டிரஸ் வாங்கிட்டு வந்திருக்கேன் …இந்த டாய்ஸ் எல்லாம் உங்களுக்கு செல்லம் குழ்ந்தையை மென்மையாய் அணைத்து முத்தமிட்டாள்.
தான் கொண்டு வந்த பொருட்களை கடை பரப்பி வைத்துக்குக் கொண்டிருந்தாள் அக்ஷயா.
அவள் முகத்தை வாஞ்சையோடு பார்த்துக் கொண்டிருந்தாள் கீர்த்தி.
அவள் முகத்தில் அப்படியொரு மகிழ்ச்சி. கள்ளம் கபடமில்லாத குழந்தையாகவே தெரிந்தாள். அஸ்வின் தங்காய் அல்லவா ? அவள் மட்டும் எப்படி இருப்பாள் …
தாய் வீட்டில் இருந்து வந்த சீர்போல் அவ்வளவு கொண்டு வந்திருந்தாள் அக்ஷயா.
பார்க்க பார்க்க …கண்கள் கலங்கியது கீர்த்திக்கு.
ஹலோ அண்ணி என்ன கண்ணு வேர்க்குது. பீலிங்க்ஸா? இதுக்கே கண்ணே வேர்த்தா இன்னொரு சர்பிரைஸ் இருக்கே ….பருவத்தை தூக்கினாள்.
கண்ணெல்லாம் வேர்க்கல ….சிரிப்புடன் கண்னை துடைத்துக் கொண்டவள் நாத்தனாரின் தலையில் செல்லமாய் தட்டினாள்.
டொன் டொடொய்ங் …சிறு நகை பெட்டி ஒன்றை திறந்தாள் . அழகிய செயின் ஓம் டாலருடன் இருந்தது .
இது அண்ணாவோட செயின் . அண்ணா பிறந்தப்போ பாட்டி வீட்டில் போட்டது . அப்பா அவரோட செல்லக் குட்டி பேரனுக்கு போட சொன்னார்.சிரித்துக் கொண்டே குழைந்தைக்கு போட்டு விட்டாள் அச்சு .
நம்ப இயலாத மகிழ்வுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் கீர்த்தி.
மெல்ல கீர்த்தியின் கையில் கிள்ளினாள் அக்ஷயா .
என்ன என்பதாய் பார்வையால் கேட்டாள் கீர்த்தி .
இதெல்லாம் நிஜமாங்கிற மாதிரி பிரம்மிப்பா பார்த்துட்டு இருக்கீங்களே ….அது தான் கிள்ளி விட்டேன் ….கலகலவென சிரித்தாள் .
ஏய் …வாலு …உன்னை ….செல்லமாய் அடித்தாள் கீர்த்தி.
இருவரும் நெடுங்கால தோழிகள் போல் மிகவும் நெருங்கி விட்டனர் .
“………………………”
அண்ணி நீங்க சந்தோஷமா இருக்கீங்க தானே ….? துளைக்கும் பார்வை பார்த்தாள் அக்ஷயா.
எனக்கென்ன நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்! உதட்டில் இருந்தே வார்த்தை வந்தது.
அண்ணன் உங்களை எவ்வளவு விரும்பினார் தெரியுமா ?
தெரியாது என்பதாய் உதட்டை பிதுக்கினாள் .
அண்ணன் உங்கட்ட எதுவும் செல்லையா ?
ம்கூம் என்று இடவலமாய் தலையாட்டினாள் .
என்ன அண்ணன் சொல்லலை ….அஸ்வின் வாசலில் நின்றபடி கேட்டான் .
ஆகான் வந்துட்டானே கரடி ….. இன்னைக்கு பார்த்தா சீக்கிரம் வரணும் ? அரை மணி நேரம் பொறுத்திருந்து வந்திருந்தா கூட அக்ஷயாட்ட கேட்டு தெரிந்திருக்கலாமே ….மனதிற்குள் திட்டி தீர்த்தாள்.
அது …நான் MSC மேத்ஸ் படிக்கிறது அண்ணிக்கு தெரியாதாம். அது தான் அண்ணா சொல்லலையான்னு கேட்டுட்டு இருந்தேன்.
நீ எங்க படிக்கிற ? சும்மா காலேஜ்க்கு போய் டைம் பாஸ் பண்ணிட்டு வர…அது தான் நான் சொல்லலை.
அண்ணா….நான் படிக்காம தான் யுனிவர்சிட்டி ரேங்க் ஹோல்டரா இருக்கேனா ? சினுங்கினாள் .
அது கம்பியூட்டர் ஏர்ரரா(Error) இருக்கும்..
அண்ணா வருங்கால மேத்ஸ் புரஃபஸரை ஓவரா கலாய்க்கிற நீ …செல்லமாய் முறைத்தாள்.
நீ இப்படி கலாய்ச்சா உன் பையனுக்கு மேத்ஸ் சொல்லி தரமாட்டேன் அவள் பிகு பண்ணினாள்.
என் பிள்ளையை உன்கிட்ட டியூஷன் அனுப்புவேன்னு நினைச்சியா ? எவ்வளவு செலவானாலும் நல்ல டீச்சரா பார்த்து தான் டியூஷன் வைப்பேன் என்றான்.
அண்ணா ….காலை தரையில் உதைத்துக் கொண்டு சிணுங்கினாள் .
இவன் இப்படி எல்லாம் பேசுவானா?
ஹெவிரோல் பண்ணும் விஜய் சேதுபதி போல லுக் விடுபவன் இப்போ தனுஷ் ரேஞ்சுக்கு காமெடி ஜானரில் கலாய்க்கிறான்? விழி பிதுக்கி அவனையே பார்த்திருந்தாள் கீர்த்தி.
அண்ணி அண்ணாக்கு காபி கொண்டு வாங்க ! பேச்சை மாறினாள் அச்சு.
காபியா ? அவருக்கு டெய்லி டீ தானே கொடுப்பேன் ?
ஓ….சார் பில்டர் காபி தானே சாப்பிடுவார் . எங்க ராஜமாதா காலையில் முதல் வேலையா மகனாருக்கு பில்டர் தானே போடுவாங்க.அண்ணனை நக்கலாய் பார்த்தாள் .
அது ஒன்னுமில்ல அச்சு ….உங்க அண்ணி இஞ்சி ஏலக்காய் போட்டு டீ சூப்பரா போடுவா ! நீ குடித்து பாரு செம்மையா இருக்கும் . பர்ஸ்ட் டைம் இன்டிரெஸ்ட் இல்லாம தான் குடித்தேன். லைட்டா டே(டெ)ஸ்ட் பண்ணி பார்த்தேன் டேஸ்ட் நாக்கில் ஒட்டிக்கிச்சு.அதுதான் அப்படியே கன்டினியூ பண்றேன்.
அண்ணனின் சமாளிப்பை அச்சுவும் கணவனின் சமாளிப்பை கீர்த்தியும் வெகுவாய் ரசித்தனர்.
“………………….”
அண்ணி என்ன டிபன் பண்ண போறீங்க ? நான் ஹெல்ப் பண்ணவா ?
இல்ல அச்சு நான் பார்த்துக்கறேன் நீ தியானு கூட விளையாடு!
நான் குருமா பண்ணிட்டேன் , சப்பாத்தி மட்டும் தான் போடணும் .அதை நான் பார்த்துக்கறேன் .
அண்ணி நான் மேத்ஸ் ஸ்டூடன்ட் அப்டிங்கிறதுனால எல்லா ஷேப்பிலேயும் திரட்ட மாட்டேன். எல்லாரையும் போலவே சர்கிளாவோ செமி சர்கிளாவோ திரட்டி தரேன் என்றாள் சிரிப்புடன்.
ஹே அச்சு …. உன் அண்ணியே அல்மோஸ்ட் செமி சர்க்கிளா தான் திரட்டுவா … நோ பிராப்ளம் நீ தாராளமா ட்ரை பண்ணு! சிரிக்காமல் சீரியஸாய் சொன்னவனை கடுப்புடன் முறைத்தாள் கீர்த்தி.
“…………………”
அண்ணி ரியலி சப்பாத்தி செம்ம …புகழ்ந்தபடியே நாலாவது சப்பாத்தியை பன்னீர் பட்டர் மசாலாவில் பிரட்டி உள்ளே தள்ளிக் கொண்டிருந்தாள் அச்சு.
அச்சு ஐ திங்க் இனி நீ லைஃப்ல சப்பாத்தியே பார்க்க போறதில்ல …. நமட்டு சிரிப்புடன் சொன்னான் அஸ்வின் .
ஏன் ? புரியாமல் கேட்டாள்.
இல்ல ….இது கடைசி …இனி பூமியில் எங்கும் சப்பாத்தியே
கிடைக்காதுங்கிற மாதிரி வெளுத்து கட்டிட்டு இருக்கியே … வஞ்சனையின்றி தங்கையை கலாய்த்துக் கொண்டிருந்தான்.
ச்சு …சாப்பிடற பிள்ளையை பார்த்து கண்ணு வச்சிக்கிட்டு …சலித்துக் கொண்டே இன்னுமொரு சப்பாத்தியை தட்டில் வைத்துக் கொடுத்தாள் கீர்த்தி.
இங்கிருந்து போறதுக்குள்ள செஞ்சுரி அடிச்சிடுவ போல …. சிரித்தபடியே கை கழுவ போனான்.
அண்ணி போதும் …சடைத்துக்கு கொண்டாள் அச்சு.
அவர் கிடக்குறாரு நீ சாப்பிடு ! அதட்டினாள் நாத்தனாரை.
“…………………….”
அச்சு நீ அண்ணி கூட ரூமில் படுத்துக்கோ நான் ஹாலில் படுத்துக்கறேன் என்றான் .
ஐயோ அண்ணா நான் ஜாலியா டிவி பார்த்துட்டு ஹாலில் படுத்துக்கறேன் நீ ரூமில் படுத்துக்கோ என்றாள்.
ஹலோ பெரிய மனுஷி….நீங்க ரொம்பலாம் யோசிக்க வேண்டாம் . அதுக்கெல்லாம் இன்னும் காலமிருக்கு . இப்போதைக்கு ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்க ட்ரை பண்ணிட்டு இருக்கோம் .
சாரிண்ணா … த்ன் நினைப்பிற்கு வருந்தினாள்.
அண்ணா எவ்வளவு பெரிய வீடு நம்ம வீடு ! கடல் மாதிரி வீட்டுல வாழ்ந்துட்டு இந்த சிங்கிள் பெட்ரூம் போர்ஷனில் கஷ்டப்படணுமா ?
இல்ல அச்சு நான் ஆபிஸ் போயிட்டா கீர்த்தியையும் குழந்தையையும் பார்த்துக்க இங்கே மஞ்சுமா இருக்காங்க .அக்கம் பக்கம் எல்லாம் பழகின மனுஷங்க. குழந்தை கொஞ்சம் வளரும் வரைக்கும் இங்கே இருக்கிறது தான் நல்லது.
அதுவும் சரி தான் என்றாள் .
அண்ணனும் தங்கையும் பேசிக் கொள்வதை கேட்டு நெகிழ்ந்து போனாள் கீர்த்தி.
“………………..”
கீர்த்தியோடு கதை பேசியபடி கட்டிலில் படுத்திருந்தாள் அக்ஷயா.
அச்சு உங்க அண்ணாக்கு என்னை முன்னாடியே தெரியுமா ?
எஸ் …நீங்க தனலட்சுமி சீனுவாசனில் D.pharm படிக்கும் போதே தெரியும்!
காலேஜ் படிக்கும் போதா …எப்படி ? வியப்பும் ஆவலுமாய் கேட்டாள்.
………………….தொடரும் …………….
