Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

உனக்கென இருப்பேன் -7

உனக்கனே இருப்பேன் -7

மொபைல் அழைக்கவே எடுத்து பார்த்த பொன்னுசாமி போனை கையில் எடுத்துக் கொண்டு மொட்டை மாடிக்கு ஏறினார் .

போனை ஆன் செய்து காதில் வைத்தவர் எதுவும் பேசவில்லை . அவனும் எதிர்முனையில் ஹலோ சொல்லவில்லை

ஓரிரு வினாடி மௌனம் சூழ்ந்திருக்க …ஹலோ அப்பா என்றான் படபடப்புடன் அஸ்வின்.



Advertisement

ம்ம்ம்ம்ம் என்றார் . கண்கள் அதுவாய் கலங்கியது அவருக்கு . எதற்கும் உடைந்துபோகாத பெரிய மனிதன் இப்போது கரைந்து கொண்டிருக்கிறார் தன்  செல்ல(வ) மகனின் அப்பா என்ற ஒற்றை சொல்லில் . 

ஸாரிப்பா நான் தெரியாம தப்பு பண்ணல …தெரிந்து தான் கீர்த்தியை கல்யாணம் பண்ணினேன் .

அப்பா …கீர்த்தி பாவம்பா …வினோத் கடைசியா என் கைப்பிடித்து கேட்டதை ஒரு அண்ணனா நான் நிறைவேற்றி இருக்கேன் .

Advertisement

அப்பா நானும் வினோத்தும் ஒரே வயித்துல பிறக்கலை  தான் ஆனா நீங்களும் சித்தப்பாவும் ஒரே வயித்துல பிறந்தவங்க தானே …?

Advertisement

அப்பா கீர்த்தி நம்ம வீட்டு பொண்ணுப்பா …அவளை தவிக்க விடலாமா ?

நான் தானேப்பா அவங்களுக்கு கல்யாணம் பண்ணி வைத்தேன் .இப்போ அவ தனிமரமா நிற்கிறப்போ நான் எப்படிப்பா வேடிக்கை பார்க்கிறது ?

அஸ்வின் பேசிக்கொண்டே போக …பொன்னுசாமி அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தார் .

Advertisement

அப்பா கீர்த்தியை தவறா நினைக்காதீங்க ?நான் எடுத்த முடிவுக்கு அவளை கட்டுப்பட வைத்தேன் .

ம்ம்ம்ம்ம் என்றார் புரிந்து கொண்டவராய் .

அப்பா பேசுங்க ப்ளீஸ் …ஏதாவது திட்டுங்கப்பா …நான் உங்க வளர்ப்பு பொய்யாகமாட்டேன் . நான் பண்ணினது தவறா இருந்தா மன்னிச்சுடுங்க! பேசாம இருக்காதீங்க எனக்கு மூச்சு முட்டுது , மனசு நடுங்குதுப்பா….பேசுங்கப்பா பேசுங்க ….கேவினான் .

மகனின் கண்ணீர் அவரை நிலைகுலைய செய்தது . தோளில் கிடந்த துண்டில் கண்ணீரை துடைத்துக் கொண்டவர் அஸ்வின் எதுக்கு கண்கலங்குற ?அதட்டினார் .

அப்பா…சாரி …அப்பா நான் … விம்மினான் . இப்போது தான் பேச்சு பழகும் குழந்தை போல அத்தனை அப்பா சொன்னான் . அவன் சொல்லும் ஒவ்வொரு அப்பாவும் அவரை என்னென்னவோ செய்தது .

அஸ்வின் எங்க ஸ்கூல் ஹெட்மாஸ்டர் சொன்னார் அவர் பொண்ணு சென்னையில் டாக்டரா இருக்காங்களாம் . முப்பத்திரண்டு வயசு ஆகுதாம் . ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி அவங்க ஹஸ்பெண்ட் ஒரு விபத்தில் தவறிட்டாராம் . ஒரு பெண் குழந்தை இருக்காம் . மறுமணம் செய்து வைக்க ரெண்டு வருஷமா முயற்சி பண்றாராம் …மாப்பிள்ளை  கிடைக்கலையாம்.

விடோயர், டிவோர்சி கூட குழந்தையோட இருக்க பொண்ணு வேண்டான்னு சொல்றாங்களாம் .

நம்ம நாட்டில் உறுப்புதானம் பற்றின விழிப்புணர்வு இருக்கும் அளவிற்கு கூட விதவை மறுமணம் பற்றிய முற்போக்கு சிந்தனை இல்லைன்னு ரொம்ப ரொம்ப வேதனையா பேசினார் .

நீ செய்த செயலை அவ்வளவு பாராட்டினார் . உயர்ந்த வளர்ப்புன்னு என் தோள்தட்டி அவ்வளவு புகழ்ந்து பேசினார் .

எனக்கு எல்லாம் புரியுது அஸ்வின் . ஆனா …நான் கொஞ்சம் பழமையில் ஊறிய கிராமத்தான் . இதெல்லாம் ஏத்துக்க கொஞ்ச நாள் ஆகும் !

தேங்க்ஸ் பா ….இது போதும் …நான் நிம்மதியா இருப்பேன் .

பேரன் எப்படி இருக்கான் ?

நல்லா இருக்கான் ! உங்க மருமகளும் நல்லா இருக்கா ? கூடுதல் தகவலை மகன் வழங்க …மகனின் பேச்சு சாதுர்யம் கண்டு பெருமை கொள்ளாமல் இருக்க முடியவில்லை .

அம்மாவை கன்வின்ஸ் பண்ண ட்ரை பண்ணுங்க ப்ளீஸ் …அம்மா குரல் கேட்காமல் எதையோ இழந்த மாதிரி வெறுமையா இருக்குப்பா .

அஸ்வின் அவ என்னைவிட கொஞ்சம் பிற்போக்கானவ …. கொஞ்சம் ஆறப்போட்டு தான் சமாதானம் செய்யணும் !

ரொம்ப கெஞ்சினா ஓவரா முறுக்குவா … மனைவியை சரியாய் புரிந்தவர் அல்லவா .

நீ மனசு கலங்காதப்பா …குழந்தையை நல்லா பார்த்துக்கோ … மருமகளையும் தான் !

சரிங்கப்பா …நீங்க உடம்பை கவனிச்சுக்கோங்க !

“…………………..”

என்ன மாமாட்ட  பேசிட்டீங்களா ? தெளிந்த முகமும் புன்சிரிப்புமாய் நின்றவனை கேட்டாள் .

ம்ம்ம்ம்ம் என்றான் சாதாரணமாய் .

ம்ம்ம்ம் னா ?

ம்ம்ம்ம்ம் னா ம்ம்ம்ம் தான் !

என்ன சொன்னார் ? கோபமா பேசினாரா ? அத்தை பேசினாங்களா ? அத்தை  அழுதாங்களா ? அடுக்கடுக்காய் கேள்விக் கணைகள் தொடுத்தாள் .

ரிலாக்ஸ் ….ஒன்னொன்னா சொல்லவா ? உன் மாமனார் நல்லா  இருக்கார் ,  உன் மாமியாரும் .அப்புறம் என்னை திட்டலை …கொஞ்சம் சமாதானம் ஆகி இருக்காரு .

பேரனையும் மருமகளையும் நல்லா பார்த்துக்கணுமாம் 

நிஜமா ? நம்ப மாட்டாமல் தலை சாய்த்து விழி விரித்தாள் .

நான் சொன்னா நம்ப மாட்டியா ? வேணும்னா உன் மாமனாருக்கு  கால் பண்ணவா ? நீயே கேட்டுக்கோ 

அய்யோ….. தோளை குறுக்கினாள் .

நான் சொன்னா நம்ப மாட்ட ? வம்புக்கிழுத்தான் .

இல்லை …அது …என்ன சொல்வது என்று அவளுக்கு தெரியவில்லை .

சொல்வதெல்லாம் உண்மை உண்மையைத் தவிர வேறொன்றும் இல்லை ….அவள் விழிகளை ஊடுருவினான் .

அவன் விழி வீச்சில் தாக்கு பிடிக்க முடியாமல் அமைதியாகி தலைகுனிந்து கொண்டாள் .

கீர்த்தி நிஜமா அப்பா நல்லா பேசினார் . கூடிய சீக்கிரம் அம்மாவும் புரிஞ்சுக்குவாங்க . கண்கள் மூடித்திறந்து ஆறுதல் அளித்தான் .

“………………..”

ஹாலில் பாய் விரித்து பொம்மைகளை போட்டு குழந்தையை விளையாட விட்டிருந்தாள் .

நகவெட்டி வைத்து நகம் வெட்டிக் கொண்டிருந்தான் அஸ்வின் .

மதிய உணவிற்கு காய்கறி வெட்டிக் கொண்டிருந்தவள் என்னங்க …கிரைண்டர் வாங்கணும் !  மாவு இல்லாம தினமும் என்ன டிபன் செய்யறதுன்னு மண்டை காயுது என்றாள் .

சரிங்க ….இன்னைக்கு சன்டேங்க…. பர்னிச்சர் ஷோரூம்ஸ் லீவுங்க நாளைக்கு கிரைண்டர் கூட பிரிட்ஜூம் சேர்த்து வாங்கிடலாங்க …அவள் சொன்னது போலவே அதே தொனியில் அவன் சொல்ல அவளுக்கு இளநகை அரும்பியது .

கீர்த்திமா …நீ இட்லிக்கு ஊறப்போடு நான் அரைச்சு  தரேன் என்றார் மஞ்சுளா .

இருக்கட்டும்மா …உங்களுக்கு தொந்தரவு கொடுக்க கூடாதில்லையா ? 

எப்படி இருந்தாலும் கிரைண்டர் வாங்கி தானே ஆகணும் ?

ஏம்மா …. நான் ஒத்தாசை பண்ணினா  ஏத்துக்க மாட்டியா ?  குழந்தையை தூக்கி மடியில் வைத்துக் கொண்டார் .

அப்படி இல்லைம்மா …நைட்டுக்கு சாதம் தான்  பண்ணனும்னு சாம்பாருக்கு நிறைய பருப்பு ஊற வச்சிட்டேன். இதுக்கு மேல ஏன் இட்டலிக்கு ஊறவைக்கணும் ? நாளைக்கு பார்த்துக்கலாம் 

கீர்திம்மா இந்த தூக்குல சூடா  சிக்கன் பிரியாணி இருக்கு சாப்பிடுங்க என்றார்.

ஐயோ சிக்கனா ?அவள் பதறிவிட்டாள் .

ஏம்மா சிக்கன் சாப்பிட மாட்டியா ? மட்டன்  தான் சாப்பிடுவியா ?

ஐயோ அம்மா நாங்க சுத்த சைவம் .

இல்லம்மா நாங்க சுத்த அசைவம் என்றான் பொங்கி வந்த சிரிப்புடன்.

மஞ்சுளா  சிரித்தபடி இருவரையும் பார்த்தார் . எப்படி இறைவன் இதுகளை ஜோடி சேர்த்திருக்கார் பாரு .…தனக்குள்ளே நகைத்துக் கொண்டார் .

“……………..”

ஏன் கீர்த்தி மஞ்சுமா தான் மாவு அரைச்சுதரேன்னு சொன்னாங்களே…இன்னைக்கு ஒரு நாள் அடஜஸ்ட் பண்ணிக்கலாமே …

நம்மால் முடிந்தவரை பிறருக்கு தொல்லை கொடுக்காம 

 இருக்க முயற்ச்சி  பண்ணனும் . மெல்லிய சிரிப்புடன் காய்கறி நறுக்கினாள் .

குட் பாலிசி …எனக்கு ஏத்தவ தான் நீ ! பெருமையாய் சிரத்தான் .

சிரிக்கும்போது அவன் முகம் அவ்வளவு கலையாக இருந்தது .

எனக்கு ஏற்றவள் என்ற வார்த்தையை அவளால் ரசிக்கவும் முடியவில்லை ..…ஒதுக்கவும் முடியவில்லை .

சூடு ஆறப்போகுது  நீங்க பிரியாணி சாப்பிடுங்க ! அவன் புறம் தூக்கை தள்ளி வைத்தாள் .

நீ கொஞ்சம் டேஸ்ட் பண்றியா ? மஞ்சுமா பிரியாணி செம்மையா இருக்கும் . அஞ்சப்பர்  தலைப்பாபாக்கட்டி எல்லாம் பக்கத்துலே வர முடியாது.

கன்றாவி …தலையில் அடித்துக் கொண்டாள் .

கீர்த்தி நான் அசைவம் விரும்பி சாப்பிடறவன் தெரியுமா ? எனக்கு வாரத்துல நாலு நாள் குழம்பு நாறினா தான் சோறு உள்ளே இறங்கும்.அவியல் பொரியல் போட்டு சமாளிக்க முடியாது. என்ன பண்ண போற ? 

அப்படியா …அது தான் ஊருக்கு நாலு முனியாண்டி விலாஸ் , ஸ்டார் பிரியாணி ,KFG இருக்கே …

ஓட்டலில் சாப்பிட பொண்டாட்டின்னு ஒருத்தி எதுக்கு ? கண்களை விரித்து பதில் கூருமாறு கேட்டான்.

காய்கறி நறுக்கிய கத்தியை காட்டி குத்திவிடுவேன் என்பதாய் சைகை செய்தாள் .

தியானு குட்டி உங்கம்மா ஊமைன்னு நினைத்தேன் …கொலை பண்ற அளவுக்கு டெரர் பீசா இருக்காளே … அவன் குழந்தையிடம் பஞ்சாயத்து கூட்ட ….வாய் விட்டு சிரித்தாள் கீர்த்தனா .

அவள் மனம் விட்டு சிரித்து பல மாதங்கள் ஆகியிருந்தது . இன்று சிரிக்கிறாள் .

கீர்த்தி சும்மா சொன்னேன் …வீக்லி ஒன்ஸ் அசைவம் சாப்பிடுவேன் . அதுவும் ஹோட்டலில் சாப்பிட மாட்டேன் . அம்மா கைவண்ணத்தில் தான் மீன்குழம்பு பிடிக்கும். இறால் பிடிக்கும் .சிக்கன் ரொம்ப பிடிக்காது . நீ பயப்பட வேண்டாம் . நான் சைவத்துக்கு மாறிக்கிறேன் .

ஐயோ வேண்டாம் ….என்னால் நீங்க சைவத்துக்கு மாற வேண்டாம் ப்ளீஸ்  . நான் பிரியாணி சமைக்க மஞ்சுமாட்ட கத்துக்கிறேன் என்றாள்.

வேண்டாம் கீர்த்தி ..நான் கொஞ்ச நாள்  டயட் கான்ஷியஸா இருக்கணும் ! கொஞ்சம் வெயிட் குறைந்தால் நல்லா இருக்கும் . இதை ஒரு சாக்கா  வைத்து  அசைவத்தை நிறுத்திடலாம் . எப்படி அய்யாவோட ஐடியா ? மிக அழகாக அவளுக்கு குற்றவுணர்வு வராத வகையில் சமாளித்தான் .

இவன் ஏன் இவ்வளவு நல்லவனா இருந்து தொலைக்கிறான்  ? கீர்த்தி எண்ணி எண்ணி கடுப்பாகி போனாள் .

எப்படி இவனுக்கு என் மீது இவ்வளவு அக்கறை ? நான் என்ன அவ்வளவு ஸ்பெஷல் ?

சித்தப்பா மருமகள் என்பதற்காகவா இவ்வளவு கரிசனம் ? நம்ப இயலாது நெகிழ்ந்து போனாள் .

“……………….”

என்னங்க ஷர்ட் அயன் பண்ணிட்டேன் …லன்ச் பேக்ல ஹாட் வாட்டர் வைக்கவா ? கோல்ட் வாட்டர் வைக்கவா ? சேமியா கிச்சடி செய்து தேங்காய் சட்னி அரைத்து வச்சிருக்கேன்.இன்னைக்கு அடஜஸ்ட் பண்ணிக்கோங்க .சாயந்திரம் வரும்போது கிரைண்டரோட வந்துடுங்க !

லன்ச் பேக்  பண்ணிட்டேன் நல்லா சாப்பிட்டு வாங்க !  ஓடி ஓடி வேலை செய்து கொண்டிருந்தாள்.

ஹே இங்கே வா ! அவள் கை பிடித்து இழுத்து சோஃபாவில் அமர்த்தினான் .

இப்போ எதுக்கு இந்த பரபரப்பு ?

டைம் ஆச்சு நீங்க ஆபிஸ் கிளம்பணுமே!

ஆமா…. அதுக்கு கைக்குழந்தையை வச்சிட்டு இவ்வளவு அல்லாடனுமா ?

ஆபிஸ் ஒரு கிலோ மீட்டர் தூரம் கூட இல்லை . அதுக்கு தான் பக்கத்தில் வீடு பார்த்தேன் .

அப்புறம் இன்னைக்கு மட்டும் தான் லன்ச் கொண்டு போவேன் . இனி லன்ச் கட்டி அனுப்பாதே … மதியம் வீட்டுக்கு வந்துடறேன். நிதானமா சிம்பிளா சமைத்தால்  போதும் .கிளி பிள்ளைக்கு சொல்வது போல் சொல்லி வைத்தான் .

வினோத்திற்கு இந்தமாதிரி ஓடி ஓடி பணிவிடை எதுவும் செய்ததில்லை . பத்மினி செய்யவிட்டதில்லை .

எந்த உரிமையில் அஸ்வினுக்கு இதெல்லாம் செய்கிறோம் என்று அவள் யோசிக்கவேயில்லை . அவளின் பாதுகாவலன் அவளுக்கு தெய்வம் அவ்வளவு தான் .

இன்னும் கொஞ்சம் சட்னி போடவா? பார்த்து பார்த்து பரிமாறினாள் .

போதும்மா …ஓவரா சாப்பிட்டா  இன்னும் வெயிட் ஏறிடும் ! கிண்டலுடன் சாப்பிட்டு எழுந்தான் 

“……”

கீர்த்தி குழந்தை பத்திரம். வேலை பார்த்த வரைக்கும் போதும் ரெஸ்ட் எடு ! போரடிச்சா கீழே போய் மஞ்சுமா கூட பேசிட்டு இரு ! எதையும் நினைத்து குழம்பிக்க கூடாது சரியா ?  நான் ஆபிஸ் போயிட்டு கால் பண்றேன் .

ஆயிரம் கவனம் சொல்லிவிட்டு குழந்தையை அள்ளி  முத்தமிட்டு அவளுக்கு கையசைத்து விடை பெற்றான்.

“………………”

அவன் வருகைக்கு முன்னே அவன் திருமணம் பற்றிய தகவல் அலுவலகம் முழுதும் பரவி இருந்தது .

சிலர் நக்கலாகவும், சிலர் மரியாதையோடும் அவனை  பார்வையால் மொய்த்தனர் .

வருகை பதிவேட்டில் கையொப்பம் இட்டவனை கை  குலுக்கி வாழ்த்தினார் மண்டல இயக்குனர் .

ஸ்டெனோ கிராபர் சுஜி எரிக்கும் பார்வை பார்த்தாள் . 

ஆம் இரண்டு ஆண்டுகளாக அவளும் பல விதமாக தன்  காதலை அஸ்வினுக்கு தெரிவிக்க முயன்று கொண்டிருக்கிறாள் .

அவள் குலுக்கள் மினுக்கள் கண்டு அஸ்வின் அற்பமே என்று ஒதுங்கி சென்றான். அவளை ஒரு பொருட்டாக அவன் நினைத்ததே இல்லை .

அஸ்வின் திடீர் திருமணத்தை சுஜியால் ஏற்கவே  முடியவில்லை .

என்னை வேண்டாம் என்று ஒதுக்கியவன் எப்படிபட்டவளை மணந்திருக்கிறான்? உள்ளுக்குள் கருவினாள். அப்படியா தான் தரம் தாழ்ந்து போய்விட்டோம் என்ற கொதிப்பு அவளுக்கு .

அவன் மனதை காயப்படுத்தி தன் கொதிப்பைத் தணித்துக் கொள்ள துடித்தாள் . 

அதற்கான சந்தர்ப்பம் பதினோரு மணி டீ  பிரேக்கில் அமைந்தது அவளுக்கு .

அஸ்வின் ரெஸ்ட் ரூம் போய்விட்டு கேன்டீன் நோக்கி வந்தான் .”என்ன அஸ்வின் சார் …. கல்யாணம் ஆகி குழந்தை பெத்துக்க பத்து மாசம் ஆகும்னு குழந்தை பெத்த பெண்ணா பார்த்து தள்ளிட்டு வந்துட்டீங்க போல …” செம்ம விபரம் சார் நீங்க …விகாரமாக  கைகொட்டி  சிரித்தாள்.

அத்துணை பேர் முன்னிலையில் அவனை அசிங்கப்படுத்திவிட்ட குரூர திருப்தியில் நின்றவளை பளார் என்று ஓங்கி அறைந்தான் .அவளுக்கு மூளை கலங்கியது. கான்டினில் இருந்தவர்கள் ஸ்தம்பித்து நின்றுவிட்டனர் . யாருமே எதிர்பார்க்கவிலை  இப்படி ஒரு அறையை .

எல்லோரின் பார்வையும் இவர்கள் மீதே குவிந்து கிடந்தது .

நீ ஒன்னு பண்ணு ! எவனையாவது மேரேஜ் பண்ணிட்டு குழந்தை பெத்துக்கிட்டு வா … அப்புறமா உன்னை கட்டிக்கிறதா வச்சிக்கிறதான்னு டிசைட் பண்றேன் எனக்கு ஒன்னும் அப்ஜக்ஷன் இல்லை என்றான் .

வீங்கிய கன்னத்துடன் அவனை முறைத்தாள்.

உனக்கு கோபம் வருதுல்ல … அப்படிதான் எனக்கும் ! இனி ஒரு வார்த்தை என் வைஃப் பற்றி  பேசின கொன்னு புதைச்சுடுவேன் ! உறுமினான் .

சார் என்ன இதெல்லாம் ? சரவணன் நடுவில் புகுந்து அவன் கைபிடித்து இழுத்து போனான் .

என் பொண்டாட்டியை பத்தி பேச இவ யாரு ? அவளை பத்தி இவளுக்கு என்னத் தெரியும் ? ராஸ்கல் என்ன கேரக்டர் இவ… எல்லார் முன்னாடியும் என் பர்சனல் பத்தி ….அவ மூஞ்சை உடைக்கணும் . அவனுக்கு கொதிப்பு அடங்கவில்லை .

சார் ப்ளீஸ் காம் டவுன் ! கெஞ்சி பேசி மலை இறக்கினான் சரவணன் .

“‘………….

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!