உனக்கென இருப்பேன் -9
உனக்கென இருப்பேன் -9
எனக்கு ஆயுசு கெட்டி . நான் நூறு வயசு வரைக்கும் உன்னோட வாழ்வேன் . கொள்ளு பேரக்குழந்தை எல்லாம் பார்ப்பேன் .
Advertisement
அவளை அணைத்து தோள்தட்ட சிறு குழந்தை போல் அவன் இடுப்பை வளைத்து கட்டிக் கொண்டாள் .
என்னால் உங்களுக்கு கடைசி வரை கஷ்ட்டம் தான் …அவள் கண்ணில் மீண்டும் நீர் கசிந்தது .
Advertisement
Advertisement
என்ன கஷ்ட்டம் ? அவள் தலையில் தலை சாய்த்தான் .
நீங்க ஆபிசில் நாலு பேர் முன்னாடி அவமானப் பட்டிருக்கீங்க…! கண்ணுக்கு தெரிந்து நாலு பேர் சிரிக்குறாங்க கண்ணுக்கு தெரியாம எத்தனை பேர் சிரிக்கறாங்களோ ?
Advertisement
ஆபிஸ் விஷயம் உனக்கு எப்படி தெரியும் ?
அவள் பதில் சொல்லவில்லை .
சரவணன் பத்த வச்சிட்டானா ?
ச்ச …ச…நான் தியானுவை தூக்கிட்டு வர போனேன் . அங்கே சரோ அண்ணா மஞ்சுமாட்ட சொல்லி வருத்தப்பட்டுகிட்டு இருந்தார் .
மகாராணி அதை ஒட்டுக்கேட்டு வந்து ஒப்பாரி வச்சிருக்கீங்க …?
ஏற்கனவே நிஷா கிண்டிவிட்டு போயிட்டா இதுல சுஜி விஷயமும் சேர்ந்து அம்மையார் அழுது கரைஞ்சுட்டிங்க!
எல்லாரும் சொல்றதும் உண்மை தானே …?அதுக்கு தான் எங்களை எங்கேயாவது …. அவள் சொல்லி முடிக்கவில்லை கழுத்தை பிடித்துவிட்டான் .
அழுத்தி பிடித்து விட்டால் கூட ஓகே தான் அப்படியே மூச்சு நின்றுவிடும் என்று எண்ணினாள் .
இதையே பேசி பேசி கடுப்படிக்காத கீர்த்தி …அடிச்சேன்னா தாங்க மாட்ட ! நீ பேச பேச என் பொறுமை பறந்து போகுது .படித்த முட்டாள் நீ, அவ்வளவு தான் உன் அறிவு !
மூட்டை பூச்சுக்கு பயந்து யாராவது வீட்டை கொளுத்துவாங்களா ?
இந்த லட்சணத்துல உன் மனசும் சிந்தனையும் இருந்தா தியானேஷை எப்படி வளர்த்து எடுக்க போற ?
ஊர் உலகம் பேசறதை கணக்கில் வச்சிக்காதே …”நீ கதறி அழுத போது ஊர் உலகம் உன் கண்ணீரை துடைக்க வரலையே “
உனக்கு நான் இருக்கேன் . திரும்ப திரும்ப ஒரே விஷயத்தை தான் சொல்றேன். உனக்கு நான் பரிதாபப்பட்டு வாழ்க்கை கொடுக்கல .
எனக்கு கிடைத்த செகண்ட் சான்ஸ் . அதை மிஸ் பண்ண நான் விரும்பல …. அவன் உணர்ச்சி பெருக்கில் ஏதோ பேசிக் கொண்டே போக ….
செகண்ட் சன்ஸா …? அவள் சரேலென்று விழி உயர்த்தினாள் .
ஐயோ உளறி கொட்டிட்டோமோ ..? நாக்கை கடித்துக் கொண்டவன் “உன்னை மேரேஜ் பண்னி ஹேப்பியா பார்த்துகிட்டா வினோத் ஆத்மா சாந்தி அடையும் !”அந்த சான்ஸை சொன்னேன் . எப்படியோ சமாளித்தான்.
“…………………..”
மனம் உடைந்து இருந்தவளை மடியில் சாய்த்து தலை கோதி ஏதேதோ ஆறுதல் கூறி தேற்றி தூங்க வைத்தான் .
ஹலோ சித்தப்பா நான் அஸ்வின் .
சொல்லு அஸ்வின் என்ன இந்நேரத்துல? கிருஷ்னசாமி பதட்டமாகிவிட்டார் .
குழந்தைக்கு ஏதாவது ? அவர் மனதில் ஏதேதோ எண்ணங்கள் நொடி பொழுதில் உதயமாகிவிட்டது .
அதெல்லாம் இல்லை எல்லாரும் நல்லா இருக்கோம் . நீங்க பதட்டப்படாதீங்க ப்ளீஸ் .
நிஷா கணவனுடன் வந்து நிகழ்த்தி சென்ற கோரமான நாடகத்தை சொல்லி வருந்தினான் .
உங்களுக்காக தான் சித்தப்பா பார்க்கிறேன் . இல்லைனா அந்த பிரகாஷை நார் நாரா கிழிச்சிடுவேன் . இந்த நிஷாக்கு புத்தி எங்கே போச்சு ? சொத்து ஆசை கண்ணை மறைக்குதா ? வாய் இருக்கேன்னு என்ன வேணா பேசலாமா ?
கோப படாதே அஸ்வின் …கொஞ்சம் பொறுமையா இரு ! நான் கண்டித்து வைக்கிறேன் .
எங்க பாரத்தை நீ சுமக்கிற …அதுக்கு பாராட்டு பாத்திரம் வாசிக்க நிஷா வந்திருக்கா போல …நொந்து போனார் கிருஷ்ணன் .
சித்தப்பா சொல்லி வைங்க உங்க பொண்ணுக்கு இனி ஒரு முறை இங்கே வந்தா நன் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது !
ப்ளீஸ் அஸ்வின் நான் என் ஒத்த பிள்ளையை பறிகொடுத்துட்டு நடைபிணமா வாழ்ந்துட்டு இருக்கேன் . இந்த சூழ்நிலையில் நான் யாரையும் கடுமையா பேச முடியாது .
பகலில் எப்படியோ ஸ்கூல், வேலைன்னு போயிடுது .ராத்திரிக்கு என் புள்ள நினைப்பு என்னை வாட்டி வதைக்குது . இருபத்தைந்து வயசு புள்ளையை எமனுக்கு தூக்கி கொடுத்துட்டு நிற்கிறேனே …. நான் ஏற்கனவே நிம்மதி இல்லாம தவிக்கிறேன் இதுல ஆளுக்கு ஆள் இன்னும் என்னை வேதனை பட வைக்கிறாங்க ! நான் என்ன பண்ண முடியும் ? சிறு பிள்ளை போல் குரல் உடைந்து மனம் உடைந்து அண்ணன் மகனிடம் புலம்பினார் .
நீங்க கவல படாதீங்க சித்தப்பா …நான் இருக்கேன் . உடம்பை கவனிச்சுக்கோங்க ! உங்க மாப்பிள்ளைக்கு கொஞ்சம் புத்திமதி சொல்லி வையுங்க !
“………………”
தலையணை எடுத்து போட்டு பாயில் படுக்க போனவனை “ஒரு நிமிஷம்” என்றாள்.
என்ன என்பதாய் எழுந்து அமர்ந்தான் .
சுஜியை லவ் பண்ணீங்களா? மென்று விழுங்கி கேட்டே விட்டாள் .
உள்ளுக்குள் பொங்கிய சிரிப்பை அடக்கிக் கொண்டு ம்கூம் …சுஜியை இல்லை …வேற பொண்ணை …ரொம்ப டீப்பா …கண்ணடித்து சிரித்தான்.
மேற்கொண்டு எதுவும் அவள் கேட்கவில்லை . அவனும் பேசிக்கொள்ளவில்லை .
மௌனமாய் ஒருக்களித்து படுத்தவளின் கண்ணீர் தலையணையை நனைத்தது .
தன்னால் அவர் காதல் தோற்றுவிவிட்டதா ? பாவம் எவ்வளவு ஆசையை வைத்திருந்தாரோ …? தங்களால் எவ்வளவு பிரச்சனை….நொந்து போனாள் .
இன்னொருபுறம் அவளுக்கு பொறாமையாய் இருந்தது . இவ்வளவு நல்லவன் மனதில் அவளா …. யார் அந்த அதிர்ஷ்டசாலி ?அவள் மனம் ஏங்கியது .
அது எப்படி அவன் மனதில் இன்னொருத்தி இருக்கலாம் ? படபடப்பாய் இருந்தது . எண்ணமே கசந்தது .
தான் இன்னொருத்தனுக்கு மனைவியாய் வாழ்ந்தோம் என்பது பின்னுக்கு சென்றுவிட்டது . இன்னும் அவன் மனதில் அவள் இருப்பாளோ ? பதற்றமாய் இருந்தது .
காரணம் அறியா எண்ணங்களும் குழப்பங்களும் அவளை வாட்டி வதைத்தது .
இன்னொரு பெண்ணின் வாழ்வை தட்டி பறித்து விட்டோமே என்ற குற்றவுணர்ச்சி அவளை இன்னும் வதைத்தது .
“…………………”
உன்னை தான் லவ் பண்ணினேன் நாலு வருஷமா …ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிஷமும் உன் நினைவால் துடித்தேன் . கடைசிவரை கல்யாணமே வேண்டாம் உன் நினைவோடே வாழ்ந்துடனும் என்றே எண்ணியிருந்தேன் என்று அவளிடம் எப்படி சொல்வது ?
இப்போது என் காதலை சொன்னால் அவளுடன் கூடி களிக்க பொய்யுரைப்பதாய் நினைத்து விடுவாளே ?
ஒருபுறம் மனம் புழுவாய் துடித்தாலும் மறுபுறம் ஜாடையாக தன் மனதை சொல்லிவிட்டோம் என்ற குதூகலம் . இரட்டை மனநிலையில் ஆசுவாசம் இல்லாமல் போராடினான் .
தன்னுடன் இருக்கிறாள், அவள் முகம் பார்த்து வாழும் பாக்கியம் கிடைக்கப் பெற்றதே புண்ணியம் என்று சிலிர்த்துக் கொண்டான்
இருவருக்கும் மிக நீண்ட …..உறக்கம் இல்லாத இரவாகிப் போனது .
“………………….”
அம்மாடி நிஷா உனக்கு ஒரு குறையும் இல்லாம சீரும் சிறப்புமா கல்யாணம் செய்து அனுப்பினேன் .
உனக்கு என்ன குறைச்சல் ? உன் புருஷன் ரெயில்வே எம்பிளாயி . எக்கச்சக்க சொத்துபத்து உள்ள குடும்பத்தில் தான் கட்டி கொடுத்திருக்கேன் . இன்னும் என்ன குறைன்னு நாயா அலையற ?
உன் புருஷன் தூண்டி விட்டா உனக்கு புத்தி எங்கே போச்சு ? நீங்க எந்த உறவில் உரிமையில் அஸ்வின் வீட்டுக்கு போனீங்க ? கிருஷ்ணன் பேச்சில் அனல் பறந்தது .
அப்பாவின் அவதாரத்தில் மிரண்டு விட்டாள் நிஷா . பொறுமையே உருவான கிருஷ்ணன் இவ்வளவு கோபம் கொள்வதை
குடும்பமே இன்று தான் காண்கிறது .
அப்பா …அது …இல்லப்பா …நிஷா சமாளிக்க வழி தேடினாள் .
நிஷா நான் உன்னை மட்டும் பெறலை ! உனக்கு மட்டும் நான் அப்பா இல்லை .
நான் என்ன சொல்ல வரேன்னு புரியும்னு நினைக்கிறேன் !
இனி கீர்த்தி விஷயத்தில் தலையிடாதீங்க . இப்போ அவ அஸ்வின் பொண்டாட்டி . மீறி ஏதாவது வம்பு பேசி பிரச்னையை இழுத்து விடுவேன்னு வரிஞ்சுக்கட்டிக்கிட்டு நின்னா என் பையன் இல்லலைன்னு ஆன மாதிரி மூத்த பொண்ணு இல்லைன்னு தலை மூழ்கிடுவேன் .
என்னங்க …பத்மினி பதறிவிட்டார் .
கீர்த்தி இப்போ எனக்கு மருமகள் இல்லை ஆனா தியானேஷ் எப்போதும் என்னோட பேரன் . “என் மகன் மூலம் உதித்த என் வாரிசு! “யாராலும் அதை மாற்ற முடியாது . ஆவேசமாய் பேசிவிட்டு துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டு போய்விட்டார் .
“………………..”
அஸ்வின் முகத்தை நேர்கொண்டு பார்க்கவே கூசியது . ஆனால் அவனுக்கு தேவையானதை செய்து கொண்டிருந்தாள் .
அவள் தயக்கம் புரிந்தவனுக்கு சிரிப்பு வந்துவிட்டது .
தியானுக்குட்டி அப்பா பார்க்க அவதார் மாதிரியா இருக்கேன் ?
உங்கம்மா பயந்துட்டு பார்க்கவே மாட்டேங்கிறா ….அஸ்வின் சீண்ட கீர்த்திக்கு கடுப்பானது .
வேண்டுமென்றே அவளை கூப்பிட்டு கூப்பிட்டு வேலை வாங்கினான் .
கீர்த்தி இன்னும் கொஞ்சம் சட்னி போடு , கீர்த்தி சட்னி காரமா இருக்கு பொடி கொண்டு வா , கீர்த்தி ஒரு டம்ளர் காபி கிடைக்குமா ? கீர்த்தி கீர்த்தி என்று அவன் ஏலம் விட்டுக் கொண்டிருந்தான் .
அவனை தவிர்க்க முடியாமல் திண்டாடிப் போனாள் .
கீர்த்தி யார் வந்தாலும் என்ன பேசினாலும் எனக்கு சொல்லு !
அழுது வடிந்து அலப்பறை பண்ணாதே … நான் ஆபிஸ் கிளம்பறேன் . பை செல்லம் என்று குழந்தையின் கன்னம் கிள்ளி முத்தம் வைத்து போனான் .
“………………”
குழந்தைக்கு இட்டலி ஊட்டி தூங்க வைத்துவிட்டு ,,,பாத்திரம் கழுவி, துணி துவைத்துவிட்டு சற்று நேரம் ஓய்வெடுத்தாள் அறையை ஒழுங்குபடுத்தி தூசு தும்பு தட்டினாள்
கபோர்டை ஒழுங்கு படுத்தி துடைத்து அடுக்கும் போது கோப்புகள், புத்தகங்கள் , நோட்டுகள் என்று அழகாய் வரிசையாய் அடுக்கி வைத்தாள் .
பேனா செருகப்பட்ட நோட்டு ஒன்று கண்ணை கவர….ஆர்வமாய் பிரித்தாள் .
அச்சு கோர்த்தார் போல் அவ்வளவு அழகிய கையெழுத்து. ஒவ்வொரு நாளும் செய்யும் செலவுகளை பைசா பாக்கி இல்லாமல் எழுதியிருந்தான்
ஆளு ரொம்ப கெட்டி தான் ….சிரித்துக் கொண்டாள் .
சட்டென்று ஒரு மின்னல் வெட்ட ….இந்த கையெழுத்து ?!
அதே …அந்த,…கையெழுத்து
// அழிவின் விளிம்பில் பல நூறு மொழிகள் இருக்கிறதாம்!
உன்மொழி அப்படியல்ல ….
ஆம் …உன் மொழி “மௌன மொழி “
உலகம் உள்ளவரை
உயிர்கள் உள்ளவரை
நிலைத்திடும் தொன்மொழி “உன் மொழி”
உன் மௌனத்தை உடைக்க முடியாமல்
நான் உடைந்துக் கொண்டிருக்கிறேன்!
என்றாவது ஒரு நாள்
உன் மௌனத்தை என் காதல் ஆட்சி செய்யும் !
அன்று உன் மௌனம் சிதைந்து
சிறு துகளாகி இந்த பிரபஞ்ச பெருவெளியில்
கரைந்து காணாமல் போகும் ! //
இந்த கையெழுத்து …இது….அவளுக்கு மேனி நடுங்கியது.
அடுத்தடுத்த பக்கங்களை புரட்டினாள் .
// நசுங்கி பிதுங்கி ஒற்றைக்கால் கொக்கு போல்
அவஸ்தையாய் பயணிக்கும்
இந்த பேருந்து பயணம் கூட இனிக்க தான் செய்கிறது!
இந்த பேருந்து பயணத்தில் துணை வருபவள்
வாழ்க்கை பயணத்திற்கும் வர வரண்டுமே …! //
இதே கையெழுத்து இதே கவிதை அவள் நோட்டில் பார்த்திருக்கிறாளே ….
கல்லூரிக்கு போகும் போது பேருந்து பயணத்தில் அவள் நோட்டில் யாரோ எழுதி வைத்திருந்தார்கள் . படித்து பார்த்துவிட்டு கசக்கி வீசியிருக்கிறாள் .
எரிச்சலுடன் கசக்கி எரிந்தாலும் அந்த அழகிய கையெழுத்தை ரசித்திருக்கிறாள் .
எவனோ வேலையற்றவனின் கிறுக்கலுக்கு ஏன் முக்கயத்துவம் கொடுக்க வேண்டும் ? என்று அசட்டையாய் இருந்த நினைவு இப்போது வந்தது .
