Skip to content
Post Views: 3,099
அவளின் பாவனையில் மேலும் உஸ்ணமானவன், “என்ன நின்னுட்டே தூங்கற வியாதியா உனக்கு..?
இல்லையே.. வேற ஏதோ சொன்னையே..?” என தன் தாடையே தடவியபடி யோசிப்பது போல பாவனை காட்டியவன்,
“ஆ.. ப்ளட் கேன்சர் இல்ல..!
அதுவும் லாஸ்ட் ஸ்டோஜ் வேற.. கரெக்ட்டா..?” என ஆராய்ச்சியாய் அவளின் முகத்தை பார்த்தவாரே கேட்க,
Advertisement
அவள் மனமோ, ‘இப்ப என்ன ஆராய்ச்சி பண்ண வேண்டிய நேரம்..? இவர் என்ன ஆராய்ச்சி பண்றார். எல்லாம் என் நேரம்..’ என மானசீகமாய் தலையில் அடித்து கொண்டது.
அவளின் அமைதியில் மொத்த பொறுமையும் அதோ இதோவென ஆட்டம் காட்ட, அதில் கடுப்பானவன், “கேட்டதுக்கு பதில் சொல்லமாட்டியா..?
வாய்ல என்ன கொழுக்கட்டையா வச்சிருக்க..?
Advertisement
வாய தொறந்தா ஓயாம பேசுவே. இப்ப என்ன கேடு வந்துச்சு அதுக்கு..?” என கொஞ்சம் சத்தமாக அதட்டலோடு கேட்க,
Advertisement
அதில் சுதாரித்தவள், “எதுக்கு மாமா இப்படி கத்தறீங்க..?
நீங்க போடற சத்தத்துல பயந்து பொட்டுன்னு போயிட போறேன்” என நெஞ்சில் கையை வைத்து நீவியபடி சொல்ல,
“யாரு நீ..? பொட்டுன்னு போயிடுவே..! இன்னமும் எத்தன பேர போக வைக்க இருக்கீயோ..?” என சொன்னதும்,
Advertisement
கோபமான கனிகா, “ஹலோ யாரு நானு..? சார், நா எத்தன பேர எமலோகத்துக்கு பார்சல் பண்ணத பார்த்தீங்க..?
அதெல்லாம் உங்க வேலை. என்கவுண்டர்ங்கற பேர்ல போட்டு தள்ளறது எல்லாம் உங்களுக்கு தான் சகஜம்..” என்றதும்,
“ஏய்.. பித்தலாட்டகாரிக்கு என்னோட தொழில் பத்தி பேச தகுதியே இல்ல..” என சுள்ளென எரிந்து விழுந்தவன்,
“பேச்ச மாத்த ட்ரைப்பண்ணாதே.. எப்படி.. எப்படி.. இன்னும் கொஞ்ச மாசத்துல செத்து போக போற ஆளு நீ.
நீ சொன்ன பொய்க்கு ஒத்து ஊத என்ன பெத்த ஆத்தவும் கூட்டு.. அப்படிதானே..?” என நக்கலாக கேட்டவன்,
தொடர்ந்து, “அவங்கள கூட விடு. பையனோட கல்யாணம் நடக்கனுமுன்னு உன்னோட பொய்யான நாடகத்துக்கு துணை போனாங்கன்னு வச்சுக்கலாம்.
ஏன்டீ, உங்க அப்பா அம்மாக்கு அறிவே இல்லையா..?
இப்படி ஒரு பொய்ய சொல்லி கட்டி வச்சா விசயம் தெரிஞ்சு நீ வாழாம.. வாழவெட்டியா வீட்டுக்கு திரும்பி வந்தா என்னாகுமின்னு யோசிக்க மாட்டாங்க. சரியான லூசுங்க போல..” என கோபத்தோடு வெற்றிவெல் செழியன் பேச,
அதுவரை தன்னை வெற்றி பேசியதை பொறுத்துக் கொண்ட கனிகா தன்னை பெற்றவரை பேசியதும்,
“மாமா வேணாம். எதுவானாலும் பேச்சு நம்மோட இருக்கணும்.
வீணா அவங்கள நம்ம பிரச்சனைக்குள்ள இழுந்தா சரி வராது பாத்துக்கோங்க..” என விரல் நீட்டி மிரட்டல் போல சொல்ல,
சட்டென நீண்ட விரலை பற்றி முறுக்கியபடியே, “அப்படி தாண்டீ இழுப்பேன். என்னடீ செய்வ..?
இந்த வீட்ட விட்டு போயிடுவியா..?
ரொம்ப சந்தோஷம். போ, அதான் எனக்கும் வேணும்.
இதுவரை கல்யாணமே வேணாமின்னு இருந்தவன ஏமாத்தி போர்ஜரி பண்ணிட்டு, கோபமும், ரோசமும் வேற வருதோ அம்மணிக்கு..” என முதலில் கோபமாய் ஆரம்பித்தவன் நக்கலாய் முடிக்க,
“நா, உங்கமேல வச்ச காதலுக்காக தான் அவங்க வேற வழியில்லாம இப்படி செஞ்சாங்க.
நானும் உங்கள பார்த்த நாள்ல இருந்து எத்தன தடவ கேட்டேன்..
உங்க எப்படி நா கரெக்ட் பண்ணி கல்யாணம் பண்ணறதுன்னு. பதில் சொன்னீங்களா மாமா..?
இல்லல்ல. அதான் நாங்களே உங்கள எப்படி உங்கள கல்யாணத்துக்கு ஒத்துக்க வைக்கன்னு யோசிச்சு ப்ளேன் போட்டோம். இதுல என்ன தப்பு..?” என நியாயம் பேச,
‘நா சரியா தான் பேசிட்டு இருக்கேனா..? என யாரிடமாவது கேட்கலாமா..?’ என்ற யோசனைக்கு போய்விட்டான் அவளின் பதிலில்.
எத்தனையோ குற்றவாளிகளை கேள்வியால் மடக்கி பதிலை வாங்கும் அவனையே ஒரு நொடி விழி பிதுங்க வைத்துவிட்டாள் அவனின் சரிபாதி.
அவளின் பதிலில் குழப்பியது ஒரு நொடி தான் அடுத்த நொடி தன்னை நிலைபடுத்தி கொண்டவன்,
“ஏய்.. மறுபடியும் பேச்ச மாத்த முயற்சி செய்யாதே..
நீ ஏன் உனக்கு ப்ளட் கேன்சர் ன்னு பொய் சொல்லி என்னை ஏமாத்தின..?” என்றதும்,
‘உங்களுக்கு அப்ப உண்மை தெரிஞ்சிடுச்சா..?’ என ஒரு பார்வையை கனிகா வெற்றியை நோக்கி வீச,
“மண்டபத்துலையே உன் விசயம் எனக்கு தெரிஞ்சிடுச்சு.. சொல்ல வேண்டியவங்க தெளிவாவே உன்ன பத்தி சொல்லிட்டாங்க..” என அவளின் விழி மொழிக்கு வாய் மொழியாய் அவன் பதிலுரைக்க,
‘சப்பா.. வந்த சனியன் எதோ சடபின்னிட்டு போயிடுச்சி போலவே. யாரா இருக்கும்..? சரி விடு சமாளிப்போம்..’ என மனதில் நினைத்தவள்,
அவன் பற்றியிருந்த விரலை வேகமாய் இழுத்து அவனிடமிருந்து விடுவித்து கொண்டு, பொறுமையாய் நடந்து சென்று அங்கிருந்த டீப்பாய் மீது பால் செம்பை வைத்துவிட்டு நிதானமாக வந்து மெத்தையில் சம்மணம் போட்டு அமர்ந்தவள்,
“அத தானே மாமா உங்கள பார்த்த நாள்ல இருந்து சொன்னேன்.
உங்கள எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. உங்கள கட்டிக்க என்ன வழின்னு கேட்டேன்.
நீங்க பதிலே சொல்லல. அதான் இப்படி..” என கூலாக கனிகா சொல்ல,
அவளின் அசராத பதிலில் அவளை அடிக்க துடிக்கும் கரத்தை தனது ஷாட்ஸ் பாக்கெட்டில் விட்டு அடக்கியவன்,
“சரி அத விடு. ப்ளான் போட்டிங்க சரி. அதெப்படி உன்னோட பேர்ல ரிப்போர்ட் வாங்கினே..?
அதும் நா போய் அந்த ஹாஸ்பிடல்ல விசாரிப்பன்னு தெரிஞ்சும், அதை தைரியமா என்கிட்ட கொடுத்திருக்கன்னா.. அங்கே உனக்கு ஹெல்ப்புக்கு ஆள் வச்சியா..?” என,
‘நடந்ததை அறிந்து கொண்டே ஆகவேண்டும்..’ என்ற நிலையில் அடுத்த கேள்வியை தொடுத்தான்.
“நா ஹெல்ப்புக்கு ஆள் பிடிக்கல மாமா. ஆண்டவன் தானே ஹெல்ப் பண்ணிட்டார்..” என கனிகா புன்னகையோடு சொன்னதும்,
புரியாது நின்றவனை பார்த்தவள், “புரியலையா..? நா ஒரு தடவ ப்ளட் டோனேட் பண்ண அந்த ஹாஸ்பிடல் போனப்போ என்னோட ஏஜ் லிமிட் இருக்கற பொண்ணுக்கு ப்ளட் கேன்சர்ன்னு ட்ரீட்மெண்ட்டுக்கு அங்கே வந்திருந்தா.
அவளோட பேரு கனிஷ்கா. அவகூட அப்போ பேசினத வச்சு அவங்க ரிப்போர்ட் மட்டும் தான் அங்கிருந்து ஆட்டைய போட்டேன்.
அதோட முதல் பேஜ் மட்டும் மாத்தி தான் உங்ககிட்ட கொடுத்தேன்.
இன்னொன்னு மாமா.. அந்த ஹாஸ்பிடல்ல பேஷன்ட் நேமை விட, அவங்களுக்கு கொடுக்கற நெம்பரையும் இப்ப புதுசா பார்கோட் செக்கிங் முறையிலையும் தான் டீட்டெய்ல்ஸ் சொல்வாங்கன்னு தெரியும்.
சோ, நீங்க போய் நேம் சொல்லி டீட்டெய்ல்ஸ் கேட்டாலும், அவங்க அந்த பார்கோட ஸ்கேன் மட்டும் பண்ணிட்டு டீட்டெயில் சொல்லிடுவாங்க.
நீங்க பண்ணற என்கவுண்டர், உங்கள பத்தின நியூஸ் எல்லாம் படுச்சு நான் கூட உங்கள வேற மாதிரி போலீஸ் ன்னு நினைச்சேன்.
ஆனா நீங்க ஒரு டம்மி போலீஸ் போல.
அங்கே போய் விசாரிக்கும் போது இதெல்லாம் யோசிக்கவே இல்ல நீங்க.
அய்யோ.. அய்யோ.. வடிவேல் சொல்ற மாதிரி சின்ன புள்ள தனமாவல்ல இருக்கு..” என சிரித்தவளை பார்த்தவன் தனது மொத்த பொறுமையும் பறக்க,
“அடுச்சு பல்லகில்லையெல்லாம் கழட்டிடுவேன் பாத்துக்க. எவ்வளவு திமிர் உனக்கு..” என கையை ஓங்கிய படி அவளிடம் நெருங்க,
அசராது அவனை பார்த்தவள், “பஸ்ட் நைட் அதுவுமா கழட்ட எத்தனையோ இருக்கு.. இவருக்கு பல்லு தான் கிடச்சது போல..” என ஒரு பெருமூச்சோடு முணுமுணுக்க,
அவனுக்கு தான், ‘ஏன் தான் பேச போனோம்..?’ என்றானது.
அதில் விளைந்த கசப்போடு, “ச்சீ..! பொம்பளையாடீ நீ..? ஒரு ஆம்பள கிட்ட எப்படி கொஞ்சம் கூட கூச்சமே இல்லாம பேசற..?” என முகத்தை அஷ்டகோணலாக்கி கேட்க,
“நா பொண்ணா இல்லையான்னு எனக்கு நல்லாவே தெரியும் மாமா.
டவுட் உங்களுக்கு தான்னா செக் பண்ணிக்க வேண்டியது உன்னோட வேலை.
இதெல்லாம் ரொமான்டிக்கா நீங்க பேசி நா கேட்கனும்,
விதி.. இங்கே எல்லாம் உல்டாவா நடக்குது..” என அவன் சொன்னதை, அவனுக்கே திருப்பிவிட்ட தனது விதியை நொந்து கொள்வது தவிர வேறு வழியில்லாது போயிற்று வெற்றிவேலுக்கு.
‘இவள எப்படி இங்கிருந்து பேக் பண்ணலாம்..?’ என தீவிர யோசனையில் இருந்தவனை கலைத்தது கனியின் குரல்.
“கேள்வி பதில் செஷன் முடுஞ்சுதுன்னா லைட் ஆஃப் பண்ணிட்டு வந்து படுங்க” என்றபடி மெத்தையில் படுத்தவளை பார்த்தவன்,
‘இவகிட்ட நம்பி ஒண்ணா படுக்கலாமா..?’ என யோசிக்க ஆரம்பித்திருந்தான்.
அவனின் யோசனை அவளுக்கு எப்படி தெரிந்ததோ, “மாமா தைரியமா வந்து படுங்க. உங்க கற்புக்கு நா கேரண்டி” என அசால்ட்டாய் சொன்னவள் கட்டிலின் ஒரு பகுதியில் படுக்க,
வெற்றியின் மனசாட்சியோ, “வெற்றி பொண்ணு அவளே உன்கூட தில்லா படுக்கறா..!
நீ கோபத்துல பெட்டை விட்டு கீழயோ அல்லது ஷோஃபாலயோ படுத்தா கோவலமா இன்னும் பேசுவா..’ என சொல்ல, வீராப்பாய் விளக்கை அணைத்தவன் கட்டிலின் மறுபுறம் வந்து படுத்திருந்தான்.
பல பல குழப்பங்கள், இருக்கும் சூழல்.. எல்லாம் அவனின் தூக்கத்தை கெடுக்க அவன் கனிகாவை முதல் முறை சந்தித்த நிகழ்வில் முழ்கி போனான்.
என்ன தான் அவன் முன்பு தைரியமாய் பேசினாலும், தனது காதலை சுத்தமாய் ஒரு தூசியாய் கூட மதிக்காத இவன் மேல் காதல் கொண்ட தருணத்தை நோக்கி பயணப்பட்டாள் கனிகாவும்..
error: Content is protected !!