Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

உன்னைத் தேடிவருவேன் ஓடிவருவேன்

உன்னைத் தேடிவருவேன் ஓடிவருவேன் ♥️1

அதிகாலை 4.10 நியூயார்க் John F kennadi International  airport.

எண்ட்ரா அகி ஒக ஆயம்மக்கு ஓசம் சாலசெப்பு வெச்சி உண்டன்டி…. சலிப்புடன் மொபைலை பாண்ட் பாக்கெட்டில் சொருகி கொண்டு கடு கடுத்தான் அவன்.

டேய் மச்சி ஆயம்மான்னு அசிங்கமா சொல்லாதேடா… அதட்டினான் அகிலன்.

ஹா ஹா மர்யாதகா பேபி சிட்டர் தர்வதா வஸ்தனானி செப்பலா? கண்கள் குறுக்கி நக்கலாய் தலை கோதி சிரித்தான்.



Advertisement

வரவங்க ஒரு வகையில் எனக்கு தூரத்து ரிலேட்டிவ் மச்சி.

ஹோ இதி இங்கா என்த தூரம்? (எவ்வளவு தூரம் )

போடா டேய் உன் மொக்க ஜோக்கை உடைப்புல போட….

Advertisement

மி அல்லுடு வஸ்தே நன்னு  எந்துக்கு சம்பெஸ்தாவு?

Advertisement

சாரி மச்சி அனவுன்ஸ்மென்ட் கேட்டல்ல….இன்னைக்கு பிளைட் டிலே.ஹெவி ஸ்னோ ஃபால்… தலையை சொரிந்தான் அகிலன்.

நள்ளிரவு 12.10 க்கு லேண்ட் ஆகி இருக்க வேண்டிய விமானம் இவ்வளவு தாமதமாகி அதிகாலை 4.10 ஆவிட்டது.

சென்னை நுந்தி நியுஜெர்சிக்கு நேருக்கா பிளைட் லேதா? மீண்டும் மொபைலை கையில் எடுத்து சலிப்புடன் நோண்ட ஆரம்பித்தான் அவன் ஹரிசரண்.எப்போதும் அலட்சியம் தாங்கி நிற்கும் அவன் கண்கள் பலரை ஈர்க்கும்,சிலரை வெறுப்பேற்றும். அவன் கர்வம் கொண்டவனா? பிறர் நலன் பேணும் நல்லவனா என்று அவனுக்கேத் தெரியாது.

Advertisement

டிக்கெட் கிடைக்கல மச்சி நியுயார்க் வந்து அங்கிருந்து கனெக்ட்டிங் பிளைட்.

ம்ம்ம்ம் நா சன்டே மூட் போயிந்தி… புலம்பிக் கொண்டே சிவந்த கண்களுடன் குறுக்கும் நெடுக்குமாய் நடக்க தொடங்கினான் ஹரி.

வாஷிங்டன் Ronald Reagan விமான நிலையத்தில் இருந்து வரும் Icelandair airways F2122 இன்னும் சற்று நேரத்தில் தரையிரங்க உள்ளதாக அறிவிப்பு வர… சார்ஜ் 12% என்று எச்சரித்த மொபைலை சுவிட்ச் ஆஃப் செய்து  பேண்ட் பாக்கெட்டில் போட்டுக் கொண்டு  கொட்டாவியை கட்டுப்படுத்தி அகிலனின் தோளில் சாய்ந்து நின்றான் வரப்போகும் பேபி சிட்டரை பார்க்க…

என்னவோ வரப்போகும் பெண்மணி தான் விமான தாமதத்திற்கு காரணம் போலும் அவனுக்குள் ஒரு எரிச்சல் மண்டியது. பொறுமை இல்லா குணம் அவனுக்கு. வெண்டைக்காய் பேர்வழி அல்ல அவன். எப்போதுமே பரபர, துறு துறு டைப்.

பேக் பேக்குடன் ஒரு பெண் அகிலனை நோக்கி டிராலியை தள்ளிக் கொண்டு வந்தாள்.

மச்சி என்ன ஆன்டி வஸ்துனதோ குஸ்தே ஓ மகிளா வச்சி ஆகிந்தி…? (என்ன ஆன்டி வரும் என்று பார்த்தால் ஒரு பொண்ணு வந்திருக்கு ) அதி முக்கிய சந்தேகத்தை நண்பனின் காதுக்குள் கேட்டு வைத்தான் ஹரிசரண்.

போதும் மூட்றா…. பல்லைக் கடித்த அகிலன் ஹாய் என்று வந்து நிற்கும் பெண்ணை பார்த்து கை அசைத்தான்.

இந்திய நிறத்தில், நடுத்தர உயரத்துடன் லட்சணமான, முகவடிவாக சற்று ஒடிசலான உடல்வாகுடன் வந்து நின்றாள் அந்த அழகியப் யுவதி!

பவித்ரா….?அகிலன் சந்தேகத்துடன் கண்களை குறுக்கி கேட்க….

எஸ் என்று தலையாட்டி ஊர்ஜிதம் செய்தவளுக்கு வயது இருபத்து நான்கு நிறைவடைந்து நான்கு மாதம் ஆகியிருந்தது.

கடினப்பட்டு பல்லிடுக்கில் அவள் பேசிக் கொண்டிருக்கும் போதே அவள் உடல் வெட வெடத்துக் கொண்டிருந்தது.

அமெரிக்க குளிர் அவளை ஊசியாய் துளைத்து காதுக்குள் நுழைந்து மூளை வரை குடைந்தது.

ஹரிசரண் அவளை ஒரு பார்வை பார்த்தான். ஒரே பார்வை தான் பார்த்தான் அவன் பாட்டிற்கு நடக்க தொடங்கி விட்டான்.

“உல்லன் ஸ்வெட்டர் எல்லாம் இங்கே தாங்காது…”

மைனஸ் டிகிரியில் குளிர் இருக்கு… ஜெர்கின் மாதிரி கணமா போடணும்! பேசிக் கொண்டே டிராலியை தன் கைக்குள் கொண்டு வந்து தள்ளி கொண்டு நடந்தான் அகிலன்.

சௌமி அக்கா நல்லா இருக்காங்களா? குழந்தைங்க எப்படி இருக்காங்க? அவன் முகம் பாராது மென்குரலில் கேட்டாள். சம்பிரதாயமாக இல்லாமல் அக்கறையுடன் இருந்தது அவள் பேச்சு.

அகிலனுடன் இயல்பாய் பேச கொஞ்சம் சங்கடமாய் உணர்ந்தாள் பவித்ரா.

இதுவரை பார்த்ததில்லை, பேசி பழகியதில்லை… முற்றிலும் புதிய இடம், புது மனிதன் இயல்பாய் எப்படி பேச்சு வரும்?

அண்டை மாநிலமே சென்றிராதவள் கண்டம் விட்டு கண்டம் வந்திறங்கி இருக்கிறாளே….

சௌம்யா நல்லா இருக்கா…. குழந்தைங்க இப்போ கொஞ்சம் ஓகே….! பதில் அளித்துக் கொண்டே நண்பனை தேடினான்.

கார் பார்க்கிங்கில் நின்று கொண்டிருந்தான் ஹரிசரண்.

ஹரி கிளம்பளாமா?

ம்ம்ம்ம்…. என்று திரும்பி நின்றவனை மச்சி இந்த பேக்கை தூக்கி டிக்கியில் வை! என்றான் அகிலன்.

“வாட்? இ ஆயம்மக்கு நேனு பணிமனுஷனா….?”

அவன் பேசுவது புரியவில்லை என்றாலும் ‘ஆயம்மா’ என்ற வார்த்தை நன்றாகவே புரிந்தது பவித்ராவிற்கு.

அலட்சியம் தாங்கி பார்க்கும் அவன் பார்வையை அமைதியாய் பார்த்து நின்றாள்.

தன்னை நேருக்கு நேர் நோக்கும் அவள் பார்வை அவனுக்குள் உஷ்ணத்தை ஏற்றியது.

ஏனோ அவனுக்கு மீசை துடித்தது உறக்கம் தொலைத்த கண்கள் சிவப்பபேறியது.

————-தொடரும் ——

அன்பு தோழமைகளுக்கு வணக்கம் 🙏  வழக்கம் போல் நம்ம பார்முலா ஸ்டோரி தான். ஆன்டி ஹீரோ,ஓவர்  ரொமான்ஸ், இரட்டை அர்த்த வசனங்கள், வன்முறை, திக் திக் திருப்பம் இருக்காது. கொஞ்சம் பெரிய ஸ்டோரி. என்னுடைய தெலுங்கில் பிழை இருக்கலாம் குற்றம் இருப்பின் பொருத்தருள்க!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!