“ப்ச்…என்னடி இது ஒண்ணு மாத்தி ஒண்ணு கெட்டதாவே நடக்குது….”என்று பாரதி கூறிவிட,அமிர்தாவின் முகம் முழுவதும் வெறுமை பரவியது அதை பார்த்தவுடன்,
Advertisement
“அய்யோ நான் தப்பா சொல்லலைடீ….ஏதோ….”
“விடுக்கா….இப்ப உடனடியா எனக்கு ஏதாவது வேலை வேணும்…..என்ன செய்யறது அதை யோசி….ஏனா ஒரு இரண்டு மாசம் சமாளிக்கலாம் அதுக்கு அப்புறம் கஷ்டம்…..”என்று கூறிக் கொண்டே விட்டத்தை வெறிக்க,
“நான் கேட்டு பார்க்குறேன்டீ….சம்பளம் கம்மியா இருந்தா பரவாயில்லையா….”என்று கேட்க,
“அப்ப சரி….நான் என்னோட கடையிலேயே எப்படியாவது சேர்த்துவிடுறேன்….”என்று கூற அமிர்தாவிற்கு அப்போது தான் முகம் சற்று தெளிந்தது.சற்று நேரம் பாரதி அவளின் வீட்டிலிருந்து பேசியில் அழைத்திருக்க அவள் அவர்களுடன் பேசிக் கொண்டே வெளியில் சென்றுவிட அமிர்தா மீண்டும் விட்டத்தை வெறித்தபடி அமர்ந்திருந்தாள்.மனதில் பாரதி கூறியதை போல ஏன் தனக்கு ஒன்றன் பின் ஒன்றாக தவறாகவே நடக்கிறது என்ற யோசனை சென்றது.அவளின் யோசனை கலைத்தது பேசியின் அழைப்பு,இந்த நேரத்தில் யார் என்று பார்த்தவளின் கண்கள் தன் போல் ஒளிர்ந்து பின் அடங்கியது.பின் எதுக்கு இவன் தன்னை அழைக்கிறான் என்று யோசித்துக் கொண்டே இருந்தவளின் கைகள் தவறுதலாக அழைப்பை ஏற்றுவிட,
“ஹலோ அமிர்தா….”என்றவனின் குரலில் காற்றில் கலந்துவர அடுத்த நிமிடம் பேசியை காதில் வைத்தவள்,
“ஹலோ….”என்றுவிட,
“நான் உன் ஹாஸ்ட்டல் கீழ தான் இருக்கேன்….உடனே வா….”என்று கூறியவன் பேசியை அணைத்துவிட,அமிர்தாவிற்கு பதட்டம் தொற்றிக் கொண்டது.எதற்காக தன்னை அழைக்கிறான் ஒருவேளை அவனின் மனைவிக்கு என்னை அறிமுகம் செய்துவிக்க என்று நினைக்கையிலேயே அவளின் மனது நடுங்கியது.இரண்டு நிமிடம் அந்த பெண்ணை அவனின் அருகில் பார்த்தற்கே அவளாள் தாங்கிக் கொள்ள முடியவில்லை இதில் மீண்டுமா என்று நினைத்தவள் வேலையிருப்பதாக கூறி மறுத்துவிடுவோம் என்று பேசியை எடுக்க மீண்டும் அழைப்பு அவனிடம் இருந்து எடுத்தவுடன்,
“என்ன பண்ணுற….சீக்கிரம் வா நான் கீழ தான் இருக்கேன்….”என்று கூற,
“இல்ல நான் வேலை….”
“நீ உன் ரூம்ல தான் இருக்கேன் எனக்கு தெரியும் ஒழுங்கா இறங்கி வா இல்லை….”என்று மிரட்ட அடுத்த பத்தாவது நிமிடம் அமிர்தா அவனின் முன் நின்றாள்.
“என்ன கீழ பார்த்துக்கிட்டு இருக்க…என்னை பாரு….உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும்…”என்று கூற,
“வேண்டாம்…..நீங்க எதுவும் சொல்ல வேண்டாம்….”என்று அமிர்தா கூற,
“ஏன்…என்ன ஆச்சு….”என்று அழுத்தமாக கேட்க,மறுபக்கம் பதில்லை.சற்று நேரம் சிவா பேசவில்லை அவளை ஆராய்ந்தபடி பார்த்துக் கொண்டிருக்க,அமிர்தாவிற்கு தான் அவனின் பார்வை வீச்சை தாங்கமுடியமால் நிமிர்ந்து பார்க்க,
“ம்ம் பார்த்திட்டியா….இப்ப சொல்லு என்ன பிரச்சனை….”என்று கேட்க,அமிர்தா பதில் சொல்லாமல் மீண்டும் தலைகுனிந்து கொண்டாள்.
“ப்ச்….அமிர்தா ஒரு தடவை பரிட்சையில தோத்துட்டனா…..அதுக்காக இப்படி தான் இருப்பியா….நான் உன்கிட்ட ஒரு சந்தோஷமான விஷயத்தை சொல்ல வந்தேன்…இப்ப என் மூடே மாறி போச்சு….”என்று குறைபட,
“நீங்க எதுவும் சொல்ல வேண்டாம்….எனக்கு வேலையிருக்கு நான் போகனும்….”என்று கூற,
“என்ன வேலையிருக்கு….அதான் உனக்கு இருந்த வேலையும் போச்சே….”என்று கூற அமிர்தா அதிர்ந்து அவன் முகம் பார்த்தாள்.
“வேணாம் நான் தான் எனக்கு நீங்க எதுவும் சொல்லவேணாம்னு சொன்னேனே….”என்று கூற அதுவரை அவள் ஏதோ பரிட்சை தோல்வியில் இப்படி பேசுகிறாள் என்று நினைத்திருந்தவன் இப்போது அவளை கூர்ந்து கொண்டே,
“என்ன பிரச்சனை….சொல்லு….”என்று அதிகாரமாக கேட்க,
“என்ன என்ன பிரச்சனை….எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை….நீங்க தான் கூப்பிட்டீங்க நான் வந்தேன்….அவ்வளவு தான்….”என்று கோபமாக கத்த,
“ம்ம்….அதுக்கு நீ என்னை சொல்ல விடனும்….இப்படி நான் சொல்லவந்தா நீ காதை பொத்திக்கிட்டா என்ன செய்யறது…..சரி விடு ஏதோ டென்ஷனா இருக்க….டீ சாப்பிடுறியா…”
“இல்ல வேணாம்….நீங்க சொல்லுங்க….”என்றவளின் தொண்டை குழி ஏறி இறங்கியது அவன் எதைக் கூற போகிறானோ என்று.கண்கள் குலம் கட்ட தொடங்கியது மனது வேகமாக துடிக்க தொடங்க,
“அமிர்தா….”என்று அவளை காப்பற்றவென்றே வந்தாள் கீதா வேலைவிட்டு வந்தவள் டீ கடையில் அமிர்தாவும் கூடவே ஒரு இளைஞனும் நிற்பதை பார்த்தவள் தொலைவிலேயே நின்று இவர்களை கவனிக்க தொடங்கினாள்.அவன் ஏதோ கேட்பதும் அதற்கு அமிர்தா பதில் கூற முடியாமல் தடுமாறியதையும் பார்த்தவள் ஒரு கட்டத்தில் அவள் தன் அழுகையை அடக்குவதை பார்த்ததும் தாள முடியாமல் அவளிடம் வந்துவிட்டாள்.
“இங்க என்ன பண்ணுற அமிர்தா….”என்று கேட்டபடி அருகில் வந்தவள் சிவாவை பார்த்து சிநேக புன்னகை சிந்த,அவனும் தலையசைத்து ஏற்றவன்,
“நான் தான் கூப்பிட்டேன்….வந்துடுவா…நீங்க போங்க….”என்று சிவா பட்டென்று கூறிவிட கீதா திருதிருக்க,அமிர்தாவோ தன்னை நிலை படுத்த முயன்று கொண்டிருந்தாள்.தான் கூறிய பிறகும் கீதா செல்லாமல் முழித்துக் கொண்டிருக்க சிவாவிற்கு எரிச்சலானது.
“அதான் வருவான்னு சொன்னேனே….கிளம்புங்க….”என்று கோபமாக கூற கீதா ஒரடி பின் வைத்துவிட்டவள் பின் அமிர்தாவை பார்த்து தன்னை நிதானித்து அவளின் கைகளை இறுக பற்றிவிட்டவள்,
“வருவாங்க கிளம்புங்க….”என்று சிவாவிடம் இருந்து பதில் வர,இதற்கு மேலும் இருந்தால் அடித்தாலும் அடித்துவிடுவான் என்று பயந்து கீதா ஓடிவிட,
“மேடம் கீழ என்ன தேடிக்கிட்டு இருக்க….நிமிரு….”என்று பல்லிடுக்கில் கத்த,அவனின் கோபத்தில் அதிர்ந்து நிமிர்ந்தவள்,
“எதுக்கு இப்ப கத்திக்கிட்டு இருக்கீங்க…சீக்கிரம் நீங்க சொல்ல வந்ததை சொல்லிட்டு கிளம்புங்க….”என்று தன் மனதில் நினைத்ததை கூற,
“எனக்கு வேலை கிடைச்சிடுச்சு….செங்கல்பட்டுல தான் வேலை….அடுத்த மாசம் நான் ஜாயின் பண்ணும்….இன்னும் இரண்டு வாரத்துல நான் கிளம்பிடுவேன் வெளில வேலைக்கு ஒத்துக்கிட்டு இருக்கேன் அங்க போயிட்டு அப்படியே செங்கல்பட்டுக்கு போயிடுவேன்……ம்ம்…..அப்புறம்….நீ ஒழுங்கா படி…அடுத்த எக்ஸாமுக்கு அப்ளை பண்ணிட்டியா….”என்று கேட்க,அமிர்தா அவன் திருமணத்தை பற்றி கூறத்திலேயே சற்று நிம்மதி அடைந்தவள்,
“இல்லடீயம்மா…சொல்லலை…போதுமா….அங்க சொன்னா இங்க பத்திக்குது….”என்று கீதா அதற்கும் குத்த,
“கீதா நீ சும்மா இரு….ஏய் எதுக்குடீ கூப்பிட்டாரு…”என்று பாரதி பதட்டத்துடன் கேட்டாள். கீதா வந்தவுடன் அமிர்தா கீழே சிவாவுடன் நிற்கிறாள் என்று கூறியதிலிருந்தே பாரதிக்கு மனது திக்கென்று இருந்தது.இப்போது தான் அவள் சற்று தெளிந்து வருகிறாள் திரும்பவுமா என்றிருந்தது.
“க்கா….அவருக்கு வேலை கிடைச்சிட்டு சொல்ல தான் கூப்பிட்டார் வேற எதுவுமில்ல…..”
“எதுவுமில்லாம தான் அழுதுகிட்டு இருந்தியா நீ……”என்று கீதா கேட்க,
“அ…அது….ஒண்ணுமில்ல….அதை விடுங்க…..அவரு ஊருக்கு போறாரு….அவ்வளவு தான்….இனி கூப்பிட என்ன பேச கூட நேரம் இருக்காது….”என்று கூற,
“ம்ம்…நீ இப்படி தான் ஏதாவது சொல்லிக்கிட்டே இருப்ப….முதல்ல அந்த பையன் நம்பரை டெலிட் பண்ணு….அது தான் உனக்கு நல்லது….”என்று பாரதி கூற,
“க்கா நான் பார்த்துக்குறேன் விடுங்க….நாளைக்கே உங்க கடைக்கு போகலாம்….”என்று அமிர்தா பேச்சை மாத்த,
“என்ன புள்ள பேச்சை மாத்துற….”என்று இருவரும் கேட்க,
“க்கா….எத்தனை நாளைக்கு ஓட முடியும் ஒரு நாள் நான் பார்த்து தான் ஆகனும்….ஆனா அது உடனே நடக்க வேண்டாம் அது நான் வேண்டிக்கிறேன் அவ்வளவு தான்….”என்று அமிர்தா கூற,கீதா அவளின் தலைகோதி,
“எல்லாம் சரியா போகும்….நாம பலவீனமா மாறிடும் போது நமக்கு நாம தான் பலம் சேர்த்துக்கனும்….அதுக்கு எல்லாத்தையும் கடக்க பழகனும்….சரி வாங்க சாப்பிடலாம் வாங்க….”என்று கீதா இருவரையும் அழைத்து சென்றாள்.
பாரதி கூறியது போல அடுத்த நாளே அமிர்தாவை தன் கடையில் சேர்த்துவிட்டுவிட்டாள்.காலை பாரதியுடன் கிளம்பி வேலைக்கு செல்பவள் இரவில் படிக்கவும் நேரம் ஒதுக்கவாள்.இப்போது கீதாவும் இவர்களுடன் சேர்ந்துவிட அவளும் அமிர்தா படிக்க என்ன செய்ய முடியுமோ செய்து கொடுப்பாள்.இரண்டு வாரங்கள் கடந்த நிலையில் சிவாவிடமிருந்து வேலைக்கு செல்வதாகவும் நல்லபடி படிக்கவும் எனவும் குறுஞ்செய்தி வந்தது.அமிர்தா அதை பார்த்தாலும் அதற்கு பதில் எதுவும் அனுப்பவில்லை.அதன் பிறகு சிவா என்பவன் அமிர்தாவின் வாழ்வில் வரவில்லை.இவளும் அவனை தேட முயலவில்லை தனித்து வாழ முடிவு செய்தாள்.
கடந்தது வாரங்கள் மாதங்களாக கடந்தது அமிர்தாவின் வாழ்வும் அதனுடன் கடந்தது.இந்த நாட்களில் அவள் சிவா என்பவனை மறந்தெல்லாம் விடவில்லை அவனின் நினைவுகளை தன்னுடன் மட்டும் வைத்துக் கொண்டாள்.அது தனக்கு மட்டுமே ஆன ஒரு உலகம் அதில் அவனும் அவளும் மட்டுமே அதில் வேறு யாருக்கும் இடம் இல்லை என்பது போல் உருவக படுத்திக் கொண்டாள்.இது தவறு என்று மூளை கட்டளையிட்டாலும் மனது அதை ஏற்க மறுக்க ஒரு கட்டத்தில் நிஜத்தில் தானே அவன் தனக்கில்லை நிழல் உலகில் அவனும் அவளும் மட்டும் வாழ்ந்து கொண்டிருந்தனர்.
வரங்கள் வாழ்க்கையில் எளிதில் கிடைப்பதில்லை ஆனால் வரமாக சிலர் கிடைப்பர் அது போல தான் அமிர்தாவின் வாழ்வில் பாரதியும்,கீதாவும் மாறி போயினர்.இருவரும் அவளிற்கு சிவா என்பவன் நினைவே இல்லாமல் பார்த்துக் கொண்டனர்.அமிர்தாவும் சிவா என்பவன் நினைவு நிகழ்காலத்தில் இல்லை என்பது போல காட்டிக் கொண்டாள்.