Skip to content
Post Views: 3,422
தன்னை செல்லமாக அடிக்க வந்த மாமியாரை, கட்டிக் கொண்டு “சாரி அத்தை! எனக்கு உங்கள சமாதானப் படுத்த வேற வழி தெரியல!
பூஜை ரூமில் அழுது கொண்டு தான் உட்கார்ந்திருந்தேன்.
அப்ப அங்க இருந்த சமயபுர மாரியம்மன் போட்டோவை பார்த்தவுடன்,
Advertisement
முன்பு மாமா விஜய் அண்ணா கல்யாணத்தின் போது செய்த டிராமா ஞாபகம் வந்துச்சு, நானும் அதையே பாலோ பண்ணிட்டேன்! சாரி அத்தை” என்று சொல்லிக்கொண்டு இருந்த போது அங்கு பிரனிதாவும் வந்து விட்டாள்!
“ஹாய் அபிக்குட்டி!” என்றவாறு!
“மிஸஸ் ப்ரனிதா ஸ்ரீராம், இந்த அபிக்குட்டி கிபி குட்டி எல்லாம் இத்தோட நிறுத்திகோங்க! நான் உங்களுக்கு அண்ணி ஆகப் போறவ! அதனால கால் மீ அண்ணி!” என்றாள் அபி!
Advertisement
சற்றே திகைத்த ப்ரனிதா, அவளின் கோபத்தைப் புரிந்துகொண்டு, “ஏய் அபி எல்லாம் உன் நல்லதுக்காக தாண்டி!”
Advertisement
“நீங்க உங்க அண்ணனுக்கு தங்கச்சியா மட்டும் நடந்துகிட்டீங்க! எனக்கு பிரண்டா இல்ல! நான் எப்படி அழுதேன் தெரியுமா?”
“அது வந்து அபி.. ஆ..” ப்ரனிதா எழ முயன்ற ப்ரனிதா புடவை தடுக்கி விட தடுமாறினாள்!
சட்டென அவளை பிரபுவும் ஸ்ரீயும் தாங்கி பிடிக்குமுன் அவர்களை முந்திக் கொண்டு ப்ரநிதாவை பிடித்துக்கொண்டாள் அபி!
Advertisement
“பார்த்து.. ப்ரநிக்கா..” என்றவாறு.
“அப்படி வா வழிக்கு!” என்று அவளைப் பிடித்துக் கொண்டாள் ப்ரனிதா!
அப்புறம் இரு தோழிகளும் செல்லம் கொஞ்சி கொண்டார்கள் வழக்கம் போல்.
“உன்னை விட ஒரு வயது தான் நான் பெரியவள் என்றாலும், எனக்கு நீ தாண்டி முதல் பேபி!” என்றாள் ப்ரனிதா அன்புடன்!
அவளை பாசத்துடன் கட்டிக்கொண்டாள் அபி!
பின் அடுத்து வந்த ஒரு நல்ல முஹூர்த்தத்தில் அபிக்கும் பிரபுவுக்கும் பெரியவர்கள் ஆசியுடன் நகரின் ஒரு பெரிய மண்டபத்தில் திருமணம் நடந்தது!
அவள் சுந்தரி பாட்டியும் அவளது மாமன்களும் ஒரு கலக்கு கலக்கி விட்டார்கள் ஆசை தீர சீர் செய்து!
ஒரு குட்டி எபிலாக்.
சுந்தரி பாட்டி அபியின் பங்கு சொத்துக்களை அவளிடம் ஒப்படைக்க, அபி அதை வாங்கி தன் அம்மா பவித்ராவின் பெயரில் ஒரு டிரஸ்ட் ஆரம்பித்து, பவித்ரா நினைவு மருத்துவமனை மற்றும் வேம்பு அம்மாள் நினைவு முதியோர் இல்லம் ஆரம்பித்தாள்!
ஹாஸ்பிட்டல் நிர்வாகத்தை தன் சித்தி சாந்தியிடமும், முதியோர் இல்ல நிர்வாகத்தை மணி மாமா மற்றும் ஹேமா அத்தைக்கும் கொடுத்தாள்.
ராணிம்மாவை கன்வின்ஸ் செய்து அவரது மகன் சதீஸ்க்கு வெண்ணிலாவை திருமணம் செய்ய ஏற்பாடு செய்தாள்.
சதீஸ்க்கும் பார்த்தவுடன் வெண்ணிலாவைப் பிடித்து விட்டது! அவனும் சம்மதித்தான்!
அவர்கள் திருமணமும் நல்லபடி நடந்தேறி, அவர்களை ஹைதராபாத்தில் தனிக்குடித்தனம் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது!
அவர்கள் ஏர்போர்ட்டில் வழியனுப்பும் போது, ஹேமா வெண்ணிலாவிடம் “பார் வெண்ணிலா , உனக்கு இந்த வாழ்க்கை அபி தந்தது! இனியாவது அவ கிட்ட நல்லபடியா நடந்துக்கோ” என்று ஆரம்பிக்க,
“அய்யோ அத்தை, இதில் என் பங்கு ஒண்ணும் இல்ல, சதீஷ் அண்ணாக்கு அவளை பிடிச்சு போய் இந்த கல்யாணம் நடந்தது! அவ்வளவுதான்! இப்படி சொல்லி சொல்லி தான் அவ மனசுல என் பேர்ல துவேசம் வளர வச்சுட்டீங்க, போது அத்தை விட்டுடுங்க!” என்றாள் அபி!
“இல்ல அபி! அம்மா சொல்றது சரி தான்! இந்த வாழ்க்கை நீ கொடுத்தது தான்! நான் அந்த நன்றிய மறக்கவே மாட்டேன்!” என்று நெகிழ்ந்து போய் அவளைக் கட்டி கொண்டு கண் கலங்க சொன்னாள் வெண்ணிலாவும்!
அங்கே ஹைதராபாத்தில் வெண்ணிலா வாழ விரும்பிய லைப் ஸ்டைல் கிடைத்தது!
அவள் ஆசைப் பட்டபடி, ஒரு பெரிய கேட்டடு கம்யூனிட்டியில் உள்ள பிளாட்!
வீக் எண்டு ஷாப்பிங்! அவுட்டிங் போவது என்று!
அவளை ஒரு முறை IKEA மாலுக்கு கூட்டிக் கொண்டு சென்றான் சதீஷ்.
அவள் அப்படியே அசந்து மலைத்து நின்று விட்டாள்!
அவள் அபிக்கு மனதில் நன்றி சொல்லிக் கொண்டாள்! இதையெல்லாம் வாழ்நாளில் காண்போம் என்று அவள் நினைத்து கூட பார்த்ததில்லை!
அது தான் அபி!
தீமைக்கும் நன்மை செய்யும் பெருந்தன்மை!
பாட்டி வேம்புவிடம் இருந்து கற்றுக் கொண்ட முந்தைய தலைமுறையின் எத்திக்ஸ் மற்றும் மாரல் வால்யுக்களுடன், தன் கணவன் மூலம் கற்றுக் கொண்ட இன்றைய தலைமுறையின் ஸ்மார்ட்நெஸ்ஸும் ஒருங்கே அமையப்பெற்ற ஒரு ரேர் பீஸ்! இந்த அபி!
நாமும் அவளை வாழ்த்துவோம்!
சுபம்!
error: Content is protected !!