Skip to content
Post Views: 5,677
உன் காதல் ஒரு வரமாய்……25 (இறுதி பதிவு)
தனது அலுவலகத்தில் வேலையில் மூழ்கியிருந்தாலும் சிவாவின் மனது முழுவதும் அமிர்தாவிடம் தான்.திருமணமானதிலிருந்து இன்னும் தனக்குள் இறுகிக் கொண்டிருக்கிறாள் என்று புரிந்தது.அதிலிருந்து வெளி கொண்டுவரவே அவளை தன்னுடனே வைத்துக் கொண்டான்.தான் பக்கத்தில் இருக்கும் போது வேறெந்த நினைவும் அவளுக்கு வராதபடி பார்த்துக் கொண்டான்.ஆனால் இப்போது என்று நினைத்தவன் உடனடியாக தன் மனைவிக்கு அழைத்துவிட அழைத்ததும் எடுத்துவிட்டாள்,
“என்ன உடனே எடுத்துட்ட….”என்று கேட்க,
“ம்ம்….கையில தான் இருந்தது….”என்றவள் குரல் மெதுவாக ஒலிக்க,
Advertisement
“என்ன பக்கத்துல ஆள் இருக்கா….”
“ம்ம்….சாப்பிட வந்தோம்….”என்று கூற,
“ஓய் வெளில போயிருக்கியா….”என்றவன் மணியை பார்க்க இரண்டு என்று காட்டியது.
Advertisement
“ம்ம்….கார்த்தி டீரிட் கேட்டா அதான்….”என்று கூற,
Advertisement
“என்னை விட்டுட்டு நீ மட்டும் போயிருக்க….”என்று சிவா குறையுடன் கூற,மறுபக்கம் பதிலில்லை.
“என்ன பதிலே காணும்….ம்ம்….”
“நீங்க தான் இங்க இல்லையே….”என்று கூற,
Advertisement
“அப்ப வந்திடவா….”என்றவன் குரலில் அத்தனை ஏக்கம்.அதற்கும் பதிலில்லை அமிர்தாவிடம்.
“என்னடீ….பதில் சொல்லு வந்திடவா…….”அவளிடம் அமைதி மட்டுமே.வந்துவிடு என்று சொல்ல தான் நினைக்கிறாள் ஆனால் ஏனோ வாய் தான்டி வார்த்தைகள் வர மறுக்கின்றன.
“சரி சாப்பிடு…..நான் அப்புறம் பேசுறேன்….ஆனா நீ கூப்பிட்டா தான் வருவேன்….”என்று கூறிவிட்டு வைத்துவிட அமிர்தாவிற்கு தான் அத்தனை கஷ்டமாகி போனது.அவனை காதலித்து தான் மணந்து கொண்டாள் இடையில் இந்த பிரச்சனைகள் இல்லாமல் தங்கள் திருமணம் இனிதாக நடந்திருக்க கூடாதா என்று இதோ திருமணமான இந்த நாட்களில் நூறு முறையேனும் நினைத்துவிட்டாள்.
சிவா செங்கல்பட்டிற்கு வந்து இரண்டு நாட்கள் ஆகிறது.அவன் வேலை பார்ப்பது செங்கல்பட்டில் உள்ள வருவாய் கோட்ட அலுவலகத்தில் இளைய உதவியாளர்(ஜுனியர் அஸ்ஸெடென்ட்)-ஆக பணியில் இருக்கிறான்.வேலையின் உள் நுழைந்துவிட்டால் சிவாவிற்கு மற்ற அனைத்தும் மறந்து தான் போகும் ஆனால் கடந்த இரு தினங்களாக மனைவியின் நியாபகத்தில் தான் சுற்றுகிறான்.ஆனால் அவனின் மனையாளுக்கு தான் அவனின் நினைவு இல்லை போல அவள் எப்போதும் போல பேசி வைக்க இவனிற்கு கோபம் வந்துவிட்டது ஏதோ கோபத்தில் நீ கூப்பிட்டால் தான் வருவேன் என்று வேறு கூறிவிட்டு இப்போது அவதி படுகிறான்.
“தெரியா தனமா சொல்லிட்டேன்….இந்த ராட்சசி என்னை கூப்பிடவே மாட்டா…..போச்சு…சும்மா பேசிட்டு வச்சிருக்கலாம்….உன் வாயே தான்டா உனக்கு எமன்….”என்று தன்னையே திட்டிக் கொண்டவன் அடுத்து அழைத்தது திவ்யாவிற்கு.இவன் பத்து முறை அழைத்த பிறகு தான் அழைப்பை ஏற்றாள்,
“இப்ப என்னடா நல்லவனே….”என்று நொந்து கொண்டே பேச,
“உனக்கு கொஞ்சமாச்சும் மனசாட்சி இருக்கா….நான் இங்க தனியா இருந்து கஷ்டப்படுறேன்….நீ உன் மாமியார் வீட்டுல ஜாலியா இருக்க….”
“எங்க இருக்கவிட்ட….அதான் போன் பண்ணி உயிரை எடுக்கிறியே இன்னைக்கு என்ன சொல்லு….”என்று அலுத்துக் கொண்டே தான் கேட்டாள்.பின்னே அவளும் என்ன தான் செய்வாள் இவன் செங்கல்பட்டு சென்றதிலிருந்து திவ்யாவை தான் அதிகம் படுத்தியெடுக்கிறான்.என் பொண்டாட்டி தனியா இருப்பா போய் பார்த்துக்கோ,அடிக்கடி பேசு என்று தினமும் போன் செய்ய ஒரு கட்டத்தில் திவ்யா இவன் அழைப்பை பார்த்தாலே எடுப்பதில்லை.
“அவ கிட்ட பேசினியா….”என்று கேட்க,
“காலையில பேசினேன்….நல்லா தான் இருக்கா….நான் நாளைக்கு போறேன் பார்த்துட்டு வரேன்…நீ வொரி பண்ணிக்காதடா….”என்று கூற,
“ம்ம்….எனக்கு தான் அவ நினைப்பாவே இருக்கு திவி….அவளுக்கு என் நினைப்பே இல்லை போல….”என்று சிவாவின் குரலில் அத்தனை ஏக்கம் என்னை அவள் தேடவில்லை என்று.அதை உணர்ந்த திவ்யாவிற்கு கஷ்டமாக இருந்தது.
“ஏய் என்னதிது….அவ சின்ன பொண்ணு சிவா….அவளுக்கும் அந்த ஏக்கம் எல்லாம் இருக்கும்….ஆனா காட்டிக்கமாட்டா…..நீ தான் புரிஞ்சுக்கனும்டா….”என்று கூற,
“ம்ம்…சரி வச்சிடுறேன்….”என்றுவிட்டு வைத்துவிட,திவ்யாவிற்கு தான் மனது பாரமான உணர்வு,
“என்னடா திவி உன் உடன்பிறப்பு என்ன சொல்லுறான்….”என்று கௌதம் கேட்க,
“ம்ம்…என்ன அவன் பொண்டாட்டியை பார்த்துக்க சொல்லுறான்….ஏம்பா இந்த பொண்ணு இப்படி இருக்கா….அவனை ரொம்ப படுத்தி எடுக்குறா….ஒரு தடவை பேசினாதான் என்னவாம்….இவளும் பேசமாட்டா அவன் பேசினாலும் ஒழுங்கா பதில் சொல்லமாட்டா….என்ன தான் செய்யறது இவளை….”என்று குறைபடிக்க,
“திவிமா….அமிர்தா சின்ன பொண்ணு அவளுக்கு இன்னும் பக்குவம் வரலை…அதோட தான் நினைச்சதுக்கு மாறா எல்லாம் நடக்குதேனு கோபம் அதனால தான் இப்படி இருக்கா….விடு….இந்த இடைவெளி கூட நல்லதுக்கு தான் கண்டிப்பா யோசிப்பா….நீ ரொம்ப உன் மண்டையை குழப்பிக்காத….”என்று கூற,திவ்யாவிற்கும் அதுவே சரியெனபட்டது.
கௌதம் கூறியது போல தான் அமிர்தா தன் வீட்டில் சிவாவை பற்றி சிந்தித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.வேலைவிட்டு வீடு வந்தவளை காலி வீடு தான் வரவேற்றது.இரண்டு வாரங்களாக சிவா எப்போதும் அவளிற்காக டீயுடன் காத்துக் கொண்டிருப்பான்.இன்று அவன் அமர்ந்திருக்கும் இடம் காலியாக இருக்க ஏதோ வலிப்பது போல இருந்தது.
அமிர்தாவிற்கு இப்போது அவன் வேண்டும்,வேண்டாம் என்ற நிலை அவனில்லாமல் நிச்சயம் இருக்க முடியாது ஆனால் அவனை காயப்படுத்திவிடுகிறேன் அது இன்னும் வலிக்கிறதே என்று தன்னையே நொந்து கொண்டாள்.மதியமே சரியாக சாப்பிடவில்லை சிவா பேசி வைத்தவுடன் ஏனோ சாப்பிடும் எண்ணமில்லாமல் போனது ஏதோ பேருக்கு கொரித்துவிட்டு வந்துவிட்டாள்.இப்போது பசிக்கிறது ஆனால் சாப்பிட மனமில்லாமல் தன் படுக்கையில் படுத்துவிட்டாள்.
அன்று காலையில் இருந்தே அமிர்தாவிற்கு தலைவலி இதில் சிவா வேறு ஞாயிறு என்பதால் அவளிற்கு போன் சொய்து கொண்டே இருக்க ஒருகட்டத்தில் அவனிடம் கத்திவிட்டாள்.எப்போதும் அமைதியாக போகிறவன் அவனும் பதிலுக்கு பேசிவிட வார்த்தைகள் முத்தி,
“இனி நீயா கூப்பிடாம நான் பேசவேமாட்டேன்….நான் தப்பு பண்ணிட்டேன் அதுக்காக தான் அமைதியா போறேன் ஆனா நீ என்னை ரொம்ப சோதிச்சிட்ட….பை….”என்று கோபத்தில் வைத்துவிட,
“பேசாதீங்க யார் பேச சொன்னா உங்களை….வேண்டாம் எனக்கு யாரும் வேண்டாம்….”என்று இவளும் கத்த மறுபக்கம் தான் அதை கேட்க ஆள் இல்லை.
இதோ இரண்டு வாரங்கள் ஓடிவிட்டது சிவா பேசி அமிர்தாவும் முதலில் வீம்பாக இருந்தவள் நாட்கள் ஆக ஆக தவறு தன்மீது என்று புரிந்தது ஆனாலும் வீம்பாக இருக்க நாட்கள் ஆனதே தவிர அவனின் அழைப்பு வரவில்லை.தினமும் இவளிடம் பேசும் திவ்யாவும் தன் வேலை விஷயமாக வெளிநாட்டிற்கு சென்றிருக்க வீம்பு ஏக்கமாக மாறியது.ஒருகட்டத்தில் தாள முடியாமல் அவனிற்கு அழைத்துவிட்டாள்.ஆனால் அழைப்பு போய் கொண்டிருந்ததே தவிர எடுக்கப்படவில்லை.
அடுத்தநாள் அரைநாள் விடுப்பெடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டாள் அவனை காண நேராக அவனின் அலுவலகம் சென்று அவனை காண வேண்டும் என்று கூற,அவர்கள் அவன் வெளியில் சென்றிருப்பதாக கூறினர்.அங்கு இருக்கும் ஒரு மர பெஞ்சில் அமர்ந்து அவனிற்காக காத்துக் கொண்டிருந்தாள்.
“அவரு கோபமா பேசினாலும் நீ பேசாத….பொறுமையா பேசு….”என்று தனக்குள் கூறிக் கொண்டே அமர்ந்திருக்க,
“சிவா சார் வந்துட்டாருமா…நீங்க போய் பாருங்க….”என்று அங்கு பணிபுரிபவர் கூற அவனை பார்க்க சென்றவள் தூரத்தில் அவனை பார்த்தவுடன் அதிர்ந்து நின்று பின் வேகமாக அவனை நெருங்கி,
“என்னாச்சு உங்களுக்கு….எப்படி அடிப்பட்டது….”என்று படபடப்பாக கேட்க,அங்கு அமிர்தாவை எதிர்பார்க்காத சிவா அதிர்ந்துவிட்டான்.
“அமிர்தா நீ எப்ப வந்த….”என்று கேட்டுக் கொண்டே தன் இருக்கையில் இருந்து எழுந்தவன்,அவளின் கையை பிடித்துக் கொண்டு யார் கவனத்தையும் ஈர்க்காமல் வெளிவந்தான்.
“நான் கேட்டேன்….உங்களுக்கு எப்படி அடி பட்டுச்சு….”என்று அவனின் இடது கையை ஆராய்ந்து கொண்டே கேட்டாள்.இடது கையில் பெரியதாக கட்டு போடப்பட்டிருந்தது.அதையே வருடிக் கொண்டிருந்தவளின் கண்களில் கண்ணீர் நிற்காமல் வர,
“ப்ச்….அமிர்தா இது ஆபிஸ்….”
“இப்ப மட்டும் நான் அமிர்தாவா….முதல்ல என்னாச்சு சொல்லுங்க….இல்ல இன்னும் சத்தம் போட்டு அழுவேன்….”என்று கூற,
“நான் சிரிக்கல…புரியுதா….”என்றான் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டு,எப்போதும் இது போல் பேசினால் சிரித்துவிடுபவன் இன்று இறுக்கத்துடன் இருக்க,
“நான் தான் தப்பு….என் மேல தான் தப்பு….நீங்க சொல்லுங்க என்னாச்சு ப்ளீஸ்….”என்று கெஞ்ச,
“ஒரு சின்ன ஆக்ஸிடென்ட் இரண்டு வாரத்துக்கு முன்ன….இப்ப பரவாயில்லை….நாளைக்கு கட்டு பிரிச்சிடுவாங்க….”என்று கூற,அமிர்தாவிற்கு புரிந்து போனது அன்று தான் பேசிய பிறகு நடந்திருக்கிறது என்று.
“என்னாலையா….”என்று கேட்டவளின் குரல் உடைந்துவர,
“ச்சு….இல்ல….நான் தான் ராங்கா வண்டியை விட்டேன்….முதல்ல இப்படி அழாத….”
“இல்ல நான் அழலை லீவ் போட்டுட்டு வாங்க வீட்டுக்கு போகலாம்….”
“இல்ல எனக்கு இப்ப வேலை இருக்கு….நீ கிளம்பு….”
“சரி வீட்டு சாவி கொடுங்க வீட்டுக்கு போறேன்….”
“இங்க நான் தனியா எல்லாம் இல்லை….நான் இருக்கிறது மேன்ஷன்….நீ கிளம்பு இரண்டு நாள் கழிச்சி நானே வரேன்….”என்று கூற,அமிர்தா எவ்வளவு மறுத்துக் கூறியும் கேட்காமல் அவளை தாம்பரத்திற்கு அனுப்பி வைத்துவிட்டான்.
இரண்டு நாட்கள் என்று சொன்னவன் அந்த வார இறுதியில் தான் தாம்பரம் வந்தான்.அவன் வீட்டிற்கு வர வீடு பூட்டியிருந்தது.தன்னிடம் இருக்கும் சாவியைக் கொண்டு வீட்டை திறந்து கொண்டு உள்ளே சென்றவன் கண்டது அலங்கோலமாக இருந்த வீட்டை தான்.அதுவரை ஏதாவது வேலையில் இருப்பாள் என்று நினைத்தவன் வேறு எதையும் யோசிக்காமல் அழைத்துவிட்டான். இந்த நாட்களில் அமிர்தா பலமுறை அழைத்தும் சிவா பேசவில்லை.அவளிற்கு அழைக்க அழைப்பு போய் கொண்டே இருக்க சிவாவிற்கு பதட்டம் அதிகமானது.ஒருகட்டத்தில் எங்கு சென்றிருப்பாள் என்று யோசித்தவாரே வெளியில் வர அப்போது தான் வீட்டின் கேட்டை திறந்து கொண்டு உள்ளே வந்து கொண்டிருந்தாள் அவள்.
சோர்ந்த நடையுடன் மாடி ஏறியவள் தன் வீட்டின் முன் நின்றிருந்தவனைக் கண்டு,வேகமாக அவனை நெருங்கி,
“எப்ப வந்தீங்க….”என்று கேட்க,சிவா அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான் மிகவும் இளைத்து கருத்து போயிருந்தாள்.
“உள்ள இருக்க வேண்டியது தான…”என்று கதவை திறந்து கொண்டு உள்ளே போக அவளின் பின் சென்றவன்,
“எங்க போயிட்டு வர நீ….”
“அது யோகா செஞ்சிட்டு வரேன்….நீங்க எப்ப வந்தீங்க….”என்று கேட்க,கைகளை கட்டிக் கொண்டு அவளை தான் தீர்க்கமாக பார்த்தான் சிவா.
“நிஜமா யோகா சென்டருக்கு தான் போயிருந்தேன்….வீட்ல இருக்க என்னவோ போல இருந்துச்சு அதான் அங்க போனேன்….”என்றவள் வேகமாக சென்று கதவடைக்க,சிவாவிற்கு ஒன்றும் புரியவில்லை இருந்தும் அமைதி காக்க,அடுத்த நிமிடம் அவனை காற்று புகாதபடி அணைத்திருந்தாள் அமிர்தா.சிவா திகைத்துவிட்டான் ஏதோ சொல்ல போகிறாள் என்று நினைத்திருந்தவனுக்கு அவளின் அணைப்பும் அதில் இருக்கும் இறுக்கமுமே ஏதோ உணர்த்தியது.
தான் கட்டிப்பிடித்தும் தன்னை அணைக்காமல் இருப்பவனை நிமிர்ந்து பார்த்தவள்,
“கட்டிக்கமாட்டீங்களா….ப்ளீஸ் கட்டிக்கோங்க….எனக்கு சிவா வேணும்….நான் தப்பு பண்ணிட்டேன் மன்னிச்சிடுங்க….உங்களை காயப்படுத்திட்டேன்….இதுக்காக என்கிட்ட கோச்சிக்கிட்டு போயிடாதீங்க….”என்று சிறு குழந்தை போல அழ,அவளை தன்னிடமிருந்து பிரித்தெடுத்தவன் கையை ஓங்கிவிட்டான்.
“பைத்தியமாடி உனக்கு….நான் எதுக்கு உன்னை விட்டு போகனும்….புருஷன் பொண்டாட்டினா சண்டை வர தான் செய்யும் அதுக்கு விட்டுட்டு போவாங்களா…உன்னை…..”என்று அவளை தள்ள,அவளோ தள்ள தள்ள ஒட்டி வந்தாள்.
“தள்ளி போயிடு….செம கோபத்துல இருக்கேன்….நான் தான் உனக்கு சொல்லி தான அனுப்பினேன் எனக்கு வேலை அதிகம் அதனால பேச முடியாதுனு….அப்புறமும் இப்படி பேசினா…”என்றவன் அவளை தன்னிடமிருந்து பிரிக்க அவளோ அவனின் மேல் அட்டை போல ஒட்டிக் கொண்டாள்.
“ஏன் என்கிட்ட உங்களுக்கு அடி பட்டதை சொல்ல….”
“நீ பயப்படுவனு தான் சொல்ல….திவிக்கு கூட தெரியாது….நீ திடீர் வருவேனு நான் எதிர் பார்க்கல….நானே வந்திருப்பேன் கலெக்டர் இன்ஸ்பெக்ஷன் போயிட்டு இருந்தது அதனால வர முடியல….”
“அப்புறம் ஏன் என்னை விரட்டினீங்க….எத்தனை தடவை உங்களை பார்க்க வரேன்னு போன் பண்ணேன்….வேண்டாம்னு சொன்னீங்க….ஏன்???”என்று கேள்விகளாக தொடுக்க,
“எனக்கு வேலை அதிகம் அதோட உன்னை எங்க தங்க வைக்கிறது அதனால தான் வர வேண்டாம்னு சொன்னேன்….”என்றவன் சோர்ந்துவிட,
“நான் பயந்துட்டேன்….”என்றவள் அவனை கட்டிக் கொண்டே அழ,சிவா எதுவம் கூறவில்லை மனது ரணமாக வலித்து,
“பேசுங்க….”என்றவளின் குரலில் தான் நிகழ்வுக்கு வந்தவன்,
“ஆங் என்ன கேட்ட….”என்று கேட்க,
“நீங்க பிரஷ் ஆகிட்டு வாங்க…நான் சாப்பாடு செய்யுறேன்…”என்று அவள் நகர அவளை இழுத்து அமர வைத்தவன்,
“என்னதான்டீ செய்யனும் நானு….எனக்கே புரியலை….என்ன செஞ்சா என்னை நம்புவ…..”என்று அவளின் முகம் தாங்கி கேட்க,
“நீங்க எதுவும் செய்ய வேண்டாம் நான் தான் சரியில்லை அதனால தான் டாக்டர் கிட்ட போயிட்டு வந்தேன்…”என்று கூற,
“என்னடீ சொல்லுற….எதுவுமே என்கிட்ட சொல்லமாட்டீயா…..நான் யாரு உனக்கு ஆங்….”என்று கோபமாக கத்த,
“ஷ்…..ஷ்….கத்தாதீங்க….”
“என்ன கத்தாதீங்க…..என்ன நினைச்சுக்கிட்டு இருக்க நீ….”என்று மீண்டும் கத்த தொடங்கியவனின் வார்த்தைகள் மொத்தமும் அமிர்தாவின் இதழ்களுக்குள் தஞ்சம் புக,வார்த்தைகளால் காட்டாத காதலை எல்லாம் மொத்தமாக அவனிடம் இறக்க,அதன் தாக்கம் தாங்கமுடியாமல் சிவா தான் திண்டாடி போனான்.நீண்ட நெடிய முத்ததிற்கு பிறகு விலகியவள் அவனின் முகம் காணமல் அவன் நெஞ்சில் தஞ்சம் புகுந்து கொள்ள,சிலபல நொடிகள் எடுத்தது சிவாவிற்கு நிகழ்விற்கு வர,
“என்னங்க….”என்று அமிர்தா அவனை உலுக்க,அதில் நிகழ்வுக்கு வந்தவன் பேசமுடியாமல் திருதிருக்க அவனின் முகபாவனையில் அவளிற்கு வெட்க சிரிப்புடன்,
“இப்படி முழிக்காதீங்க….”என்று அவனின் கண்களை மூட,அதை தட்டிவிட்டவன்,
“ஒழுங்கா சொல்லு…அப்புறம் என்னை தாஜா பண்ணலாம்….”என்று கூற,
“அது நான் அன்னைக்கு உங்களை பார்த்துட்டு வந்ததுக்கு அப்புறம் மனசுக்கு கஷ்டமா போயிடுச்சு….அதனால அடுத்த நாளே நான் முன்னாடி பார்த்த டாக்டர் கிட்ட போயிட்டேன்….அவங்க தான்….நீ உன்னையே கஷ்டப்படுத்திக்கிட்டு உன் கூட இருக்குறவங்களையும் கஷ்டபடுத்துற….இதனால நீ தான் உன் வாழ்க்கையை இழக்குற….நல்லா யோசி நீ எந்த வாழ்க்கைக்காக ஏங்குனியோ அதையே இன்னைக்கு கடவுள் உன்கிட்ட திரும்ப கொடுத்திருக்காரு….அதை நல்ல முறையில் வாழப்பாரு….அதை விட்டுட்டு பழைசை நினைச்சிக்கிட்டு இருந்தா நீ தான் அந்த வாழ்க்கையில தோத்து போவ….நீ உன் கணவருக்கிட்ட தோத்து போயிடுவனு தான பயப்படுற….நான் ஒண்ணு சொல்லவா அவருக்கிட்ட தோத்து போ தப்பில்லை….சில சமயங்கள்ல தோல்வி கூட நல்லதுக்கு தான்….நீ கொஞ்சமா உன்னை மாத்திக்கிட்டா எல்லாரும் சந்தோஷப்படுவாங்கன்னா அதை ஏன் செய்ய யோசிக்கிற…..அதனால உன்னை மாத்திக்க அது தான் உன் வாழ்க்கைக்கு நல்லதுனு சொன்னாங்க….”என்றவள் சிவாவின் முகத்தை பார்க்க,
“இன்னும் ஏதாவது இருக்கா மொத்தமா சொல்லிடு…”என்று கேட்க,
“எனக்கு உங்க கூட வாழனும் சந்தோஷமா….உங்க கை பிடிச்சிக்கிட்டு லைப் லாங்…..அதனால தயாராகிகோங்க…நான் இப்படி தான் அடிக்கடி சண்டை போடுவேன்….நீங்க….”என்றவளின் அடுத்த வார்த்தைகள் அவனுள் தஞ்சமாக,அவனை கனப்பாடுபட்டு விலக்க,
“ம்ம்…இன்னும் என்னடீ…..”என்றவன் குரலில் அத்தனை எரிச்சல்,
“என்னை அம்மு சொல்லி கூப்பிடவேயில்லை நீங்க….அம்மு சொல்லுங்க….”என்று அழுகையுடன் கேட்க,
“அடியே என் மக்கு அம்மு…இப்ப போய் எதை கேட்குற….உன்னை…..”என்றவன் வன்மையாக அவளை ஆட்கொள்ள அவளும் மொத்தமாக அவனுள் தஞ்சம் புகுந்தாள் முழுமனநிறைவுடன்.
error: Content is protected !!