Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

உன் சுவாசம் என் மூச்சில்

உன் சுவாசம் என் மூச்சில் ………முன்னோட்டம்

        உன் சுவாசம் என் மூச்சில்    

             (சுவாச காதல்)

 

“காதல் “



Advertisement

     நாம் படிக்கும் நாவல்கள் , பார்க்கும் தொடர்கள் , படங்கள் என அனைத்திலும் காதல் என்று ஒன்று இருந்தால்தான் சுவாரசியமாக இருக்கும். இவை அனைத்தும் வெற்றி பெறும். அப்பிடி இருக்க நாம் வாழ்க்கையில் காதல் இல்லையென்றால் எப்படி???…..

    திருமணத்திற்கு முன் வரும் ஒருதலை காதல் சிலருக்கும் வெற்றி பெறும்  பலருக்கும்  அது கிட்டாது .

  அதே திருமணத்திற்கு பின் தன் இணையின் மீது வரும்  காதல் ஒருதலைபட்சமாக இருக்கும்  பட்சத்தில் வாழ்க்கையில்  சுவாரசியம் இருக்குமா??

Advertisement

  அதுவும் திருமணத்தில் இணைந்த இரு இருதயத்தில் ஒரு இதயம் மற்றொன்றிக்காக துடிக்க மற்றொன்று கர்வத்திலும் ஆண்  என்ற ஆணவத்திலும் துடித்தாள் அந்த வாழ்க்கை இனிக்குமா????….

Advertisement

  விட்டுக்கொடுக்கும் வாழ்க்கை வெற்றி அடையும் . ஆனால் இருவரில் ஒருவர் மட்டும் விட்டு கொடுத்துக்கொண்டிருந்தால்  அந்த வாழ்க்கை நாளடைவில் கசந்துவிடுமா???….

 என் கேள்விகளுக்கான தேடல் கதிரவன் -எழில்விழி  வாழ்க்கையான  

        உன் சுவாசம் என் மூச்சில்

Advertisement

PRECAP:1

  “ டேய்!!… கதிரு இங்கன கொஞ்சம் வந்துட்டு போடா” என பக்கத்து வயலில் இந்த வருட ஆடி திருவிழாவிற்கு உருவாராம் செய்துக்கொண்டிருந்த தனது நடு மகனை  அழைத்த தெய்வானையின் வெண்கல குரலை கிஞ்சித்தும் கவனியாது தனது செயலையே  கருத்தாக செய்துகொண்டிருந்தவனின் அலட்சிய போக்கை என்றும் போல் இன்றும் எண்ணி வாயில் இருந்த சொற்ப பற்களை கடித்த தெய்வானை,

   தனது சேலை முந்தியை இழுத்து சொருகி கொண்டு கால்களை எட்டி வைத்து வேக நடையுடன் கதிரவன் முன் நின்றார். அதனை கண்டும் காணாது போல தனது வேலையை தொடர்ந்தவனை கண்டு,

“ ஏண்டா உன்னையதான் கூப்பிட்டேன்”

“ கேட்டுச்சு கேட்டுச்சு”

“ அப்போ என்னன்னு கேட்குறது. இந்த வயசான காலத்துல ஏன்தான் என்னைய படுத்தி எடுக்குறீங்களோ. நான் கட்டுனது சரி இல்ல நான் பெத்த அஞ்சு மக்களும் சரி இல்ல” என கூறி மூக்கை உறிஞ்ச

“ இங்க பாரு ம்மா ஒப்பாரி வைக்கணும்ன்னா அங்குட்டு போய் வை. எனக்கு ஆயிரம் ஜோலி  இருக்கு” என கூறி தனது வேலையை தொடர

“ அப்போ நான் சும்மா இருக்கேனா??” என அதுக்கும் எகுறிய தெய்வானை கதிரவனின் முறைப்புக்கு கப்சிப்பென அமைதியாகிவிட்டார்.

  ஏன்னெனில் கதிரவனுக்கு கோவத்தில்  முதலில் கை பேசும் என்பதை விட கை மட்டும் தான் பேசும். ஏதோ அம்மா அப்பாவை அடித்தால் பாவம் வரும் என யாரோ கூறியதை கேட்டு சற்றே அடக்கி வாசிப்பது தெய்வானையிடம் மட்டும் தான்.

  அதுவும் கதிரவனின் கோவம் எல்லை கடப்பதற்கு முன் அவனின் பார்வையை வைத்தே அமைதியாகிவிடுவார்.

“ டேய் பக்கத்து ஊரு பரஞ்சோதி இருக்காருல அவருக்கு ஒரு மாந்தோப்பு நாலு பசு மாடு பத்து ஆடு சொத்து இருக்குடா. அவுரு ஒரே பொண்ணுக்கு உன்னைய மாப்பிள்ளையா….” என தெய்வானை கூறிக்கொண்டிருக்கையில் 

“ அடிங்க யாரும்மா??… அவன்????…. என்னைய ஒன்னத்துக்கும் வக்கு இல்ல நான் சம்பாரிக்க மாட்டேன்னு நினைச்சனா??….. அவன் சம்பாரிச்சு வச்சுருப்பான் நான் அவனுக்கும் அவன் பொண்ணுக்கும் சேவகம் பண்ணணுமோ??… எனக்கு பொண்டாட்டியா வரவ எனக்கு அடங்கி இருந்தா போதும்.

 எதாவது அப்பன் வீட்டுல இருந்து கொண்டுவந்துட்டு என்னைய கா காசு  மதிக்காம போறதுக்கா. இன்னொருமுறை எவனாவது பொண்ணு இருக்கு கண்ணு இருக்குன்னு வீட்டு வாசற்படியை மிதிச்சான் காலை வெட்டிடுவேன்” என  கதிரவன் கோவமாக கூற தெய்வானை முழுத்திக்கொண்டிருந்தார்.

xxxx….x…..xx…

PRECAP 2

 “ லட்சுமி அக்கா லட்சுமி அக்கா”

“ என்ன பொன்னு வா வா. என்ன விஷயமா வந்துருக்க???….”

“ அக்கா நம்ம எழிலுக்கு ஒரு வரன் கொண்டு வந்துருக்கேன்கா”

“ அப்படியா!!….. பையன் என்ன பண்ணுறாப்புல????…. ஜாதகம் கொண்டுவந்துருக்கியா???….”

“ ஹ்ம்ம் இந்தா ஜாதகம். பையன் நம்ம பிள்ளையார்கோவில் தெருவில தையல் கடை வச்சுருக்காரு” என பையன் பத்தி கூற

“ எது!!!…. அவனா!!!!….  அவன்  வயசென்ன என் மக வயசென்ன???…. உன் மகளுக்கு இப்படி மாப்பிளை பார்ப்பியாடி” என கோவமாக கேட்ட லட்சுமிடம்

“ ஹ்ம்ம் என் மகளுக்கு என்ன தலையெழுத்தா இப்படி மாப்பிளை பார்க்க. அவ காலேஜ் போய் படிக்குறா.  அவளுக்கு  ஒரு நல்ல அரசாங்க மாப்பிளைத்தான் பாப்போம்” என பொன்னு நீட்டி முழக்க

“ எதே  காலேஜா??… நல்ல படிச்ச பிள்ளையை உன் மக பேச்சை கேட்டு அனுப்பலைல நான். அதுக்கு இது தேவைதான். நீ உன் மகளுக்கு ஒரு வாத்தியாரே  இல்ல ஒரு இன்ஸ்பெக்டரோ பார்த்த நான் என் மகளுக்கு ஒரு கான்ஸ்டபிளெலாவது பார்க்க மாட்டேன்” என கோவமாக கூறினார் எழில்விழி அன்னை அன்னலட்சுமி.

xxxx……xxxxx…

PRECAP 3

 “ கதிரு சீக்கிரம் கிளம்பு இன்னைக்கு ட்ரைனிங்க்ல” என கேட்ட அண்ணன் கணேஷிடம்

“ ஹ்ம்ம் ஆமா அண்ணே இதோ கிளம்பிட்டேன்” என கூறிக்கொண்டிருந்த கதிரவனை கண்டு

“ ஹம்ம்ஹும் என்னமோ கலெக்டர் உத்தியோகம் மாதிரித்தான்” என மூர்த்தியின் மனைவி நொடிக்க

“ ஏண்டி எங்க கிராமத்துலையே போலீஸ் உத்தியோகத்து போற முதல் ஆளு என் தம்பிடி. இந்த கான்ஸ்டாப்பிலே உத்தியோகம் இப்போ கிடைக்குறதே  எவ்வளவு கஷ்டம் தெரியுமா வந்துட்டா பெருசா பேச” என கணேஷ்   சிடுசிடுத்தார்.

 XXXX…..XXXXX….      

PRECAP 4

       திருமணம் முடிந்து மணமக்கள் இருவரும் அந்த கிராமத்து வீட்டின் முன் நின்றுகொண்டிருக்க ஊர்க்காரர்கள் ஆண் பெண் என அனைவரும் மணமகளின் எலுமிச்சை நிறத்தில் ஆவென  பார்த்துக்கொண்டிருக்க மணமகனான    கதிரவன்  கடுப்புடன் பல்லை கடித்துக்கொண்டிருநதான்.

   சுற்றி நடக்கும் எதுவும் தெரியாது பிறந்தவீட்டை  பிரிந்த  ஏக்கத்தில்  குனிந்த தலை நிமிராது கண்ணீரை உள்ளிழுத்து கொண்டிருந்த எழில்விழியிடம் கதிரவனின் பெரிய அக்கா,

“ ஏத்தா எழிலு  செத்த குனிஞ்சு வாத்தா.  இல்லைனா வாசப்படி  ஓடு தலைல தட்டும்” என கூறி ஆழம் சுற்றி  வீற்றிக்குள் அழைத்துச்சென்று பூஜை அறையில் விளக்கேற்றி  சாமி கும்பிட சொல்ல,

  அதே போல் சாமியை வணங்கிவிட்டு கண்ணை துறந்த எழில்விழி தனது எதிரே  காலையில்  போட்டிருந்த பட்டுசட்டையை கழட்டி கையில் வைத்துக்கொண்டு கையில்லா   வெள்ளை பனியனை அணிந்து கொண்டு பட்டு வேஷ்டியை மடித்துக்கட்டி எழில்விழியை தனது விழியால் முறைத்துக்கொண்டிருந்தவனை கண்டு பயத்துடன் பார்க்க,

“ என்ன முழிக்குற?… ஏன் மாகாராணி கையை நீட்டி என் சட்டையை வாங்க மாட்டிகளோ???….  போ போயி எதிர்த்தாப்புல இருக்குற ஊரணி குளத்துல இந்த சட்டையை துவச்சுட்டுவா  ஒரே  கரை ஆகிடுச்சு போ” என கத்தவிட்டு சென்ற கணவனின் முதுகை கண்ணீருடன் வெறித்துக்கொண்டிருந்தாள் எழில்விழி

 

எப்பிடி இருக்குன்னு  ஒரு வார்த்தை  சொல்லிடுங்க……. friends…… 

Next we will meet in episode ……..  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!