Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

உயிரில் ஒரு சஞ்சாரம்

உயிரில் ஒரு சஞ்சாரம் – அத்தியாயம் 13

அத்தியாயம் 13

அன்று இரவு லீடிங் மென் ஹோட்டலில் இரவு உணவு ஏற்படாகி இருந்தது. வைஷ்ணவி அசோக் அடலின் கேப்ரியல் ஸ்டான் பென்னி லிடியா ரெய்சல் என இந்த நான்கு ஜோடியினருக்கும் தனியான வழிகாட்டி ஏற்பாடு செய்திருந்தான் துவையல். தன்னுடன் வந்திருந்த 13 ஜோடிகளை நான்கு குழுக்களாக பிரித்து ஒவ்வொரு குழுவுக்கும் அவர்கள் சுற்றுலா செல்வதற்கான வண்டி ஏற்பாடுகள், வழிகாட்டி என அனைத்தும் தனியே ஏற்பாடாகி இருந்தது. மறுநாள் காலை 9 மணிக்கு ஜியாங்ஜிஜே நேஷனல் பார்க்கில் அவர்களை அழைத்துச் செல்ல எரிக் எனும் வழிகாட்டி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்ததாக சொல்லிச் சென்றான் துஃவையல்.

வைஷ்ணவி அன்று இரவு அலுப்புத் தீர நன்றாக தூங்கி, மறுநாள் காலை 8 மணிக்கு தான் துயில் எழுத்தாள். அதன் பின் காலைக்கடன்களை முடித்து வர எட்டு பேர் அமர்ந்து செல்லக்கூடிய வண்டி வந்திருந்தது.

அசோக் அருகில் வைஷ்ணவி, அவர்கள் பின் ஸ்டான் பென்னி ரெய்சல் என வரிசையாக அமர்த்திருந்தனர். ஸ்டானின் பார்வை அடிக்கடி அவர்கள் இருவரின் மேல் பட்டுத் திரும்பியது. முக்கியமாக வைஷ்ணவியின் மீது படிந்த ஸ்டானின் கண்களும் அசோக்கின் கண்களும் இருமுறை கூர்மையாக உரசிக் கொண்டன. பயணம் முடிந்து இறங்கியதும் அவர்கள் முதலில் மூங்கில் கட்டைகளால் கைப்பிடிகளாக கொண்ட படிக்கட்டுகளில் ஏற வேண்டி இருந்தது. படிகள் மேலே சென்றபடியே இருந்ததைக் கண்டு வைஷ்ணவிக்கு டியா டன் கோவில் படிக்கட்டு நினைவு வந்தது.



Advertisement

அசோக்கிடம் திரும்பினாள். அசோக் வைஷ்ணவி. இருவரும் நடந்த டியா டன் கோவில் படிகட்டுகள் ஞாபகம் வர அசோக்கும் புன்னகைத்தான்.

“அவ்ளோ படிக்கட்டு இருக்காது வைஷூ”

அசோக் சொல்ல வைஷ்ணவி பெருமூச்சு விட்டாள்.

Advertisement

“இவ்வளவு பெரிய படிக்கட்டு எப்படி ஏறுறது? நான் வரல!”

Advertisement

வைஷ்ணவி சொல்ல அசோக் முறைத்து விட்டுப் பின் பேசினான்.

“கஷ்டமா தான் இருக்கும் வைஷூ தொண்ணூறு வயசு ஆச்சு உனக்கு. அங்கிருக்க கிளையை உடைச்சுட்டு வரேன். ஊனி நடக்கறீயா? எங்க வந்தாலும் முடியல நடக்கலனு தள்ளு!”

அவன் சொல்ல அசோக் வைஷ்ணவி அவனை முறைத்துக் கொண்டு மெல்ல நடந்தாள். அவளைத் தாண்டி விடு விடு என நடக்கத் தொடங்கினான் அசோக். ஆனாலும் மேலே நிற்பதும் ஒரு முறை திரும்பி அவள் வருகிறாளா என்று பார்ப்பதுமாக நடந்து கொண்டு இருந்தான். வைஷ்ணவி படிக்கட்டுகளில் ஏற முடியாது அங்கங்கே நின்றுகொண்டாள்.

Advertisement

லிடியா ரெய்ச்சல் அடலின் எல்லாம் முன்னே நடந்துக் கொண்டிருந்தனர். அசோக் கடந்து ஸ்டானும் பென்னியும் நடந்துக் கொண்டிருந்தனர். அசோக் அவர்களைத் தாண்டி நடக்க ஸ்டான் மெல்ல மெதுவாக நடக்கத் தொடங்கினான்.

மிக மிக உடல் வலுவுள்ளவன் ஏன் இவ்வளவு மெதுவாக நடக்கிறான் என பென்னி அவனுடைய தோழனைக் கண்டு சந்தேகமாக நின்றான். அவனது பார்வை புரிந்தவனாக ஸ்டான் பேசினான்.

“Dude little sprain you carry on”

ஸ்டான் கால் சுளுக்கு ஏற்பட்டதாகச் சொன்னதை நம்பாத பென்னி சிறிது நேரத் தயக்கத்திற்குப் பின் ஸ்டானை மெதுவாக வரச் சொல்லி விட்டு வேகமாக மேலே ஏறினான்.

அதுவரை வைஷ்ணவியை திரும்பிப் திரும்பி பார்த்து வந்து கொண்டிருந்த அசோக் தன்னை கடந்துப் போகும் பென்னைக் கண்டதும் ஒரு சந்தேக பார்வையோடு கீழே திரும்ப அவன் நினைத்தது போலவே ஒரு தூணின் மீது சாய்ந்து வைஷ்ணவி நின்றிருந்தாள். அவள் அருகில் ஸ்டான் நின்று அவளோடு உரையாடிக் கொண்டு இருந்தான். அந்த காட்சியில் அசோக் வேகமாக படிகளில் கீழிறங்கத் தொடங்கினான்.

“என்ன மிஸ்.வைஷ்ணவி நடக்க முடியலையா?”

ஸ்டான் வைஷ்ணவியிடம் ஆங்கிலத்தில் கேட்டு தனது கையில் இருந்த வலிநிவாரணி ஸ்பிரையை நீட்ட அவள் ஆம் என்பதாக சொல்லி அவன் நீட்டிய ஸ்பிரேயை வாங்கினாள்.

ஸ்டானோ மெல்ல கீழ் அமர்ந்து அவனது மடியில் அவளது கால்களை வைக்கச் சொல்ல வைஷ்ணவி தயங்கி பின் அனுமதிக்க அவளது முன் பாதத்தில் மெலிதாக வீங்கியிருந்த இடத்தில் அந்த ஸ்பிரேயை அடித்து விட்டு நிமிர்ந்தான்.

கொஞ்ச நேரம் தான் சரியாயிடும் என்றவன் அசோக் வருவதைக் கண்டு அவள் பாதங்களை விலக்கி அசோக்கிடம் புன்னகையை சிந்தி விட்டு நகர்ந்தான்.

அடலின் காபிரியேல் அவர்களுக்கு கீழே வந்து கொண்டிருந்தவர்கள் அதைக் கண்டனர். வைஷ்ணவியின் கைகளில் தான் கொண்டு வந்திருந்த பழச்சாறு பாட்டிலை நீட்டினான்.

“என்னாச்சு ?!”

அசோக் கேட்க

“ஒண்ணுமில்ல அசோக் கீழே தடுக்கிட்டு, அதான் கொஞ்சம் சாய்ஞ்சு நின்னேன். ஸ்டான் ஹெல்ப் பண்ணார்”

அசோக் “சத்தம் கொடுத்திருக்கலாம்ல” என கடிந்துக் கொண்டவன் அதன் பின் வைஷ்ணவியை விட்டு மேலே செல்லவே இல்லை. ஒவ்வொரு முறையும் அவன் அவள் அருகிலேயே நடந்து வந்தான். அவள் நிற்கும் போது நிற்கவும் பின்பு மேலே ஏறி வரவும் என இருந்தான்.

ஒரு வழியாக மலையின் சமநிலத்திற்கு வர அங்கே பெரிய கல் சீன எழுத்துக்கள் பொறிக்கப்பட்டு நடப்பட்டிருந்தது.

அதைத் தாண்டி பார்வையை தன்னை விட்டு அகலாது நிறுத்தியது எதிரே அரக்கர்கள் போல் வானுயர்ந்த உன் எழுந்து நின்ற பாறை மலைகள். செங்குத்தான சற்றே தடிமனான குச்சி போல ஓங்கி உயர்ந்து நின்றது.

வைஷ்ணவிக்கு அவற்றை எங்கேயோ பார்த்தது போல இருக்க அசோக்கிடம் திரும்பிக் கேட்டாள்.

“அசோக் இதை நான் எங்கேயோ பார்த்திருக்கேன்? எந்த பிக்சர்?!!”

அசோக் அந்த மலைகளை ரசித்துக் கொண்டே பதில் சொன்னான்.

“அவதார் படம் பார்த்து இருக்கேல அங்க வானத்தில் மிதக்கும் தொங்கற பாறை இதோட இன்ஸ்பிரேஷன் ஐ எடுத்தது. செமயா இருக்குல”

அசோக் கேட்க வைஷ்ணவி தனது கண்களை அகல விரித்து அந்தக் காட்சியை இதயத்தில் பதித்துக் கொண்டாள்.

ஆம் அவதார் படத்தில் வந்தது போன்ற பாறைகள் தான் காட்சியும் அதனை ஒட்டி இருந்தது. என்ன பாறைகள் ஒவ்வொன்றும் மிதக்கவில்லை கீழே நிலத்தில் ஊன்றி நின்றுக் கொண்டு இருந்தது.

“இப்ப இந்த மலை உயரத்துக்குப் போக போறம்மா?”

ஆர்வ மிகுதியில் வைஷ்ணவி கேட்க அசோக் சிரித்தான்.

“கால் வலிக்குது நொண்டி நொண்டி ஆக்சன் பண்ணிட்டு எப்படி கேட்குது பாரேன். ஏ! ஸ்டானு! அத்தனையும் நடிப்பு டா!”

அசோக் சொல்ல ஸ்டான் தன் பெயர் உச்சரித்ததைக் கண்டு அவர்கள் புறம் திரும்பினான். வைஷ்ணவி ஸ்டானிடம் என்ன சொல்வது எனப் புரியாது அசோக்கின் முதுகில் அடிக்க அசோக் அதை அழகாக சமாளித்துப் பேசினான்.

“standing marvellous”( அழகா நிற்குதுல)”

அடலின் அவர்களது டாம் அண்ட் ஜெர்ரி ஷோவை ரசித்து விட்டு செல்ல அருகே ஒரு நீண்ட கம்பி தடுப்புகள் இருந்த நுழைவுச்சீட்டு வாங்கும் இடத்திற்கு அனைவரும் நடந்தனர். எரிக் அவர்கள் முன்னே நுழைவுச்சீட்டு வாங்க வழி செய்துக் கொடுத்து விளக்கம் சொல்லிக் கொண்டு இருந்தான். ஒவ்வொரு வழிக்கும் தனித்தனியாக மக்கள் சென்று கொண்டே இருந்தனர். ஒரே நேரத்தில் 3000 மக்களை மேலே கூட்டிச் செல்லும் ஒரு நீண்ட எலிவேட்டர் எனப்படும் மின் தூக்கி அவள் கண் முன் ஒரு மலை ஏறும் அளவுக்குப் பெரிதாக காட்சியில் விரிந்தது. வைஷ்ணவி அதன் அமைப்பை பார்த்து பிரமித்துப் போனாள். மீண்டும் அசோக்கிடம் திரும்பி கேட்டாள்.

“இதுல தான் போப்போறோமா?!”

மழலையின் ஆர்வ மொழியில் பேசும் அவளது முகப்பாவம் கண்டு அசோக்கிடம் புன்னகை பிறந்தது.

“ஆமா இதுல தான் போக போறோம் வா”

அவன் கைப்பிடித்து செல்ல எரிக் அவர்கள் முன் வந்து நின்றுப் பேசினான். அது ஒரு காலத்தில் சீன சிற்றரசன் அரசாங்கத்திற்கு எதிராக கிளர்ந்தெடுத்த வரலாற்று நிகழ்வை விளக்கிவிட்டு அவன் பதுங்கியிருந்து புரட்சி செய்த இடம் இதுவென அழைத்துச் சென்றான். உள்ளே செல்கையில் ஒரு நீண்ட வழிப்பாதை இருந்தது. அந்த குகை போன்ற அறை நேராக ஒரு லிப்ட்டில் செல்லும் பாதையில் முடிந்தது.

அவர்கள் நால்வராக ஒரு லிப்டில் ஏறியதும் வைஷ்ணவியின் கண்முன் கண்ணாடி திரையாக மின் தூக்கியின் முகப்பு இருந்தது. அதில் கீழிருந்து ஓங்கி உயர்ந்து நின்ற அந்த மலைகளின் அடிவாரம் அவள் கண்களில் மெதுமெதுவாக மேலே வரத் துவங்க அப்பொழுதுதான் உணர்ந்தாள் வைஷ்ணவி, நாம் கீழிருந்து அந்த மழை மீது ஏறிக் கொண்டிருக்கிறோம் என்பதை. ஒலிபெருக்கியில் முன்னே தெரியும் காட்சியைப் பற்றிய விளக்கங்கள் ஆங்கிலத்தில் சொல்லப்பட்டுக் கொண்டு இருந்தது. ஒரு கட்டத்தில் கீழிருந்து அவள் கண்ட உயர்ந்த பாறை மலைகள் அவள் கண்ணுக்கு நேராகத் தெரிய தொடங்கியது. அந்த பாறை மலையின் உச்சிக்கு க்ஷசமமாக அவர்கள் நிற்க விழிகளை மூடாது அசைவற்று நின்றாள் வைஷ்ணவி.

அசோக் அதை புகைப்படமாக எடுத்துக் கொண்டிருந்தான்.‌ அவன் அதிகமாக புகைப்படம் எடுத்ததில்லை. ஒவ்வொரு பயணத்திலும் மிக ரம்மியமான காட்சி மட்டுமே அவனது புகைப்படக் கருவியில் படமாகும். அந்தமான் உட்பட எல்லா இடத்திலும் மிக மிக ரசிக்கும் இடத்தை மட்டுமே காட்சியாக்கினான்.

மின் தூக்கி அந்த மலை உச்சியின் சமதளத்திற்கு வர எடுத்துக் கொண்ட நிமிடங்கள் வெறும் இரண்டு நிமிடங்கள் தான். சீனா உண்மையில் தொழில்நுட்பம், உற்பத்தியில் ஆகச் சிறந்த வளர்ந்த நாடு தான் என்பதை நிரூபித்தது அந்த மின்தூக்கி.

“அசோக் இப்போ, இவ்வளவு சீக்கிரத்தில் மேல வந்துருச்சா?”

வைஷ்ணவி நம்பாது கேட்க மின்தூக்கியின் கதவுகள் திறந்துக் கொண்டது. அசோக் வெளியே நடக்கையில் அவளது கேள்விக்கு பதில் தந்தான்.

“வைஷூ இதுதான் உலகத்திலேயே ரொம்ப பெரிய வேகமான எலிவேட்டர்”

அவன் சொல்லிவிட்டு நடக்க அவர்கள் சென்ற பாதையின் முன்னே சமதளம் ஒரு சின்ன பாலம் தாண்டி நடந்தனர். எரிக் குரங்குகள் இருக்கும் என எச்சரித்து நடந்தான். அதன் பின் வழியில் ஒரு அறிவிப்பு பலகை இருந்தது. அதில் அந்த மலையை சுற்றிய வழித்தடங்கள் ஒவ்வொரு இடத்திலும் நின்று நடுவில் நிற்கும் அந்த பாறை மலைகளை பார்ப்பதற்கான சைட் சீயிங் என்று சொல்லப்படும் இயற்கையைக் காட்சியாக காணும் இடங்கள் இருந்தது.

கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட இடங்களில் இருந்தது. சுற்றிலும் இருக்கும் மலைத்தொடர்களின் பக்கவாட்டில் பாதைகளை அமைத்து அதன் ஒவ்வொரு வளைவிலும் நடுவில் இருந்த செங்குத்து பாறை மலைகளைக் காண வழிவகை செய்திருந்தது சீன சுற்றுலாத் துறை.

அசோக் வைஷ்ணவி உட்பட எட்டு பேரும் ஓரிடத்தில் சேர்ந்து நின்றிருந்தனர்.‌ எரிக் வழிகளில் விளக்கம் சொல்லிச் செல்ல அசோக் அவனது காதுகளில் ஏதோ விசாரித்தான். அதற்கு எரிக் மிக அதிக தூரம் போக வேண்டாம் என எச்சரித்து ஓரிடத்தில் அவர்களை வரச் சொல்லி மீதி ஆறு பேருக்கும் வழிமுறைகள் சொல்ல அசோக் வைஷ்ணவியை இழுத்துக் கொண்டு வேறுபாதை நடந்தான்.

மரக்கட்டையால் ஆன கைப்பிடிகள் இருக்க கீழே மரத்தளங்கள் இருந்தது. மலையைச் சுற்றி பாதை எழுப்பி அந்தப் பாதையின் ஓரம் தடுப்புகளை அமைத்து அதன் வழி நடந்தால் நல்ல பா வடிவ திண்டில் இருந்து எதிரே தெரியும் மலைத்தொடரைக் காணும் வகையில் இருந்தது. அசோக்கும் வைஷ்ணவியும நடந்து சென்று முதலில் ஒரு இடத்தில் நின்று எதிரே நின்ற அந்த பாறை மலைத் தொடர்களை பார்த்தனர்.

ஒவ்வொரு பாறையில் உயர்ந்து மேலே மலை போல் நிற்க ஐந்தாறு பாறைகள் எதிரே நின்று இருந்தது. அவதார் திரைப்படத்தின் மிதக்கும் பாறைகள் தனியே அந்தரத்தில் மிதக்கும் இங்கே அதே பாறைகள் கீழே நிலத்தில் காலூன்றி நிற்க அதன் உச்சி மேகம் கிழித்து நின்றிருந்தது. அசோக்கும் வைஷ்ணவியும் அந்த காட்சியில் சிறிது நேரம் பிரமித்து நின்றிருந்தனர். அசோக் சற்று தள்ளி நின்று அவளை ஒரே ஒருமுறை அவள் மலையை பிரமித்து ரசிக்கும் அந்த காட்சியை ஒரு புகைப்படம் ஆக எடுத்துக் கொண்டான். இதுவரை அவன் புகைப்படம் எடுத்ததே இல்லை ஆனால் ஏனோ அன்று அவள் ரசித்த அழகு அவன் ரசித்துப் பார்க்கும் இயற்கையின் அழகை தோற்கடித்து அதி அற்புதமாக இருந்தது. பெண்மை ஏன் இயற்கையின் அழகோடு ஒப்பீடு செய்யப்படுகிறது என்பதன் விளக்கத்தை அவளும் அந்த மலைகளின் அழகும் எடுத்தியம்பி நின்றது.

அசோக் திரும்பி நடக்கத் தொடங்கினான். எப்பொழுதும் நடப்பதற்கு சங்கடப்படும் வைஷ்ணவிக்கு இம்முறை அவ்வாறு தோன்றவில்லை. ஒவ்வொரு முறையும் அதே மலைத்தொடர்களை தான் பார்க்கிறோம். ஆனால் சுற்றி சுற்றி வந்து ஒவ்வொரு இடத்திலும் பார்க்க பார்க்க அதனுடைய ஒவ்வொரு அமைப்பும் ஒவ்வொரு பரிணாம் ஆக அழகுறுவது தெரிந்தது.

வழியில் சீன தம்பதியர் மேல் உயரத்திற்கு சென்றுக் கொண்டு இருந்தனர். வழிகள் எல்லாம் ஒரே மாதிரி இருக்க வைஷ்ணவி அசோக்கிடம் திரும்பி கெஞ்சும் பார்வையில் பேசினாள்.

“மொழியும் தெரியாது. யாருமே தெரியாது. மறுபடியும் திருவேலை ஏதாவது பண்ணிராதே அசோக்! இங்கிருந்து ஹெலிகாப்டர், ஜெட் னு பறக்க முடியாது முக்கியமா நிலத்தில் இருந்து இரண்டாயிரம் அடி மேலே இருக்கோம்”

அசோக் அவள் பேசியதை விட அவள் பார்வையில் இருந்த கெஞ்சலிலும் அவள் சொல்லிய விதத்திலும் சிரிப்பை வர அசோக் சிரித்துப் பேசினான்.

“சரி விடு இவ்வளவு கெஞ்சி கேக்குறேன் நான் வேற எங்கேயும் போகல சரியா எல்லாத்தையும் பார்த்துட்டு திருப்பி வந்துடலாம்”

அசோக் சொல்ல வைஷ்ணவி,

“கடவுளே மறுபடியும் எங்கேயாவது என்னை சுத்த விடாம என்னை இவன் கூட சிக்க விடாம எப்படியாவது காப்பாத்தி கீழ கொண்டு போயிடுங்க கடவுளே”

அவள் சத்தமாகவே சொல்ல அருகே நடந்த ஒரு சீன குழந்தை தனது தாய் தந்தையரிடம் இருந்து திரும்பி அவளைப் பார்த்தது‌. மொழி புரியவிட்டாலும் அவர்கள் பேசுவது சிரிப்பாக இருந்தது அம்மக்களுக்கு. வைஷ்ணவி அதை பார்த்து அசடு வழிய வேறு பாதை நடக்க ஒரு நீர்த்தேக்கம் வந்தது. அதன் நடுவில் அங்கங்கே ஆமையின் சிலைகள் வடிவமைக்கப்பட்டிருந்தது. இருபுறமும் பாதைகள் இருக்க நடுவில் ஒரு சிறிய பாலம் இருந்தது. அதன் கீழ் தண்ணீர் இருக்க அவர்கள் நடக்கும் பாதையின் மறுபுறம் சீனக் கட்டிடக்கலை அம்சத்தில் அறைகள் இரண்டு மூன்று இருந்தது.

அசோக் வைஷ்ணவி இருவரும் அதன் வழி செல்ல அசோக்கிடம் கேட்டாள் வைஷ்ணவி.

“எல்லா பக்கமும் ஏன் அசோக் ஆமை சிலை இருக்கு?”

அவள் கேள்விக்கு நடந்துக் கொண்டே பதில் பேசினான் அசோக்.

“சீனர்கள் நம்பிக்கைப்படி அவங்களுடைய முதல் அரசருக்கு மஞ்சள் நதியின் வேகமான நீரோட்டத்தை கட்டுப்படுத்த ஒரு ஆமை உதவி செஞ்சுச்சாம் அதனால அந்த ஆமைக்கு அந்த அரசர் ஆயிரம் வருஷம் வாழ்வதற்கு வரம் கொடுத்தார்னு நம்புறாங்க. அதனால எந்த ஒரு விஷயத்தையும் நீண்ட காலம் நடக்கணும் நல்லபடியா நடக்கணும் அப்படிங்கறதுக்காக அவங்க ஆமைகளை ஒரு அதிர்ஷ்ட உருவமா வச்சிருப்பாங்க. முக்கியமா அதனுடைய ஓடுகள் பாதுகாப்பையும் நீண்ட கால லாபத்தையும் வரவையும் குறிக்கும்”

அவன் சொல்ல வைஷ்ணவி அந்த நீர்த்தேக்கத்தைத் தாண்டி மீண்டும் அதன் படிகளில் மேல் ஏற மீண்டும் ஒரு சைட் சீயிங் திண்டு இருந்தது. அங்கிருந்து பாறைகளை பார்க்க அதை சுற்றிலும் மேகம் சூழ்ந்திருந்தது. சற்று நேரம் அந்த ரம்மியமான காட்சியைக் கண்டு ரசித்து விட்டு மீண்டும் கீழ் நடக்க அசோக் இந்த பாதையில் செல்லலாம் என்று சொல்ல வைஷ்ணவி நடந்தாள். இரண்டு மூன்று முறை நடந்து மீண்டும் மீண்டும் அவர்கள் கடந்து வந்த அதே ஆமை நீர்த்தேக்கம் மீண்டும் வர வைஷ்ணவி அசோக்கிடம் சண்டையிட்டாள்.

“எரிக் வரச் சொன்ன ரூட் இல்ல இது. நீ அது வேண்டாம் இந்த வழியில் கூட்டிட்டு வந்தே! இப்ப மறுபடி மறுபடி இங்கேயேத் தான் சுத்திட்டு இருக்கோம். நீ சொன்ன பேச்சே கேட்க மாட்டியா அசோக்”

வைஷ்ணவி கடிந்துக் கொள்ள

“நான் என்ன செய்யறது கொஞ்சம் வழி தப்பிருச்சு. இப்படி கேக்குற நேரம் நடந்துட்டே இருந்தா போயிடலாம்”

அசோக் பதிலளித்தான்.

ஃ”லூசா டா நீ தயவு செய்து சொன்னா கேளு. அங்க போறாங்களா அவங்க கிட்ட எப்படி மேல போறதுன்னு கேட்கலாம். உனக்கு தான் மேன்டரின் தெரியுமில்ல”

“அதெல்லாம் வேணாம். எனக்கு தெரியும் வா”

அவன் மீண்டும் கூட்டி செல்ல வைஷ்ணவி தலையில் அடித்துக் கொண்டு அவனோடு நடந்தாள். ஒரு சுற்றில் நடந்து மீண்டும் அதே இடத்தில் வந்து நின்றிருந்தனர் இருவரும். வைஷ்ணவி அங்கிருந்த கல்லை தேடி எடுத்து அவனை அடிக்க முயல சுற்றிலும் இருந்த சீனச் சுற்றுலா பயணிகள் அவர்கள் செய்வதை கண்டு அதிர்ச்சியாகி நின்றனர். அசோக் அவர்களைப் பார்த்து தன் கைகளை அவன் தலைக்கு அருகில் வைத்து விரல்களை சுற்றி கொஞ்சம் பைத்தியம் என்பது போல் சைகை செய்து ஓடினான்.

“டேய் ஓடாதே!”

என்று சொல்லி வைஷ்ணவி மீண்டும் அவனை துரத்தினாள். ஒரு வழியாக பாதையைக் கண்டுபிடித்து மேல் வர மேலேறி அவர்கள் நடக்க நடக்க அந்த இறங்கி வரும் பாதைகளின் மரக்கைப்பிடிகள் எல்லாம் சிகப்பு வண்ண துணிகள் கட்டப்பட்டிருந்தது. அந்த கைப்பிடி சுவரை தெரியாத அளவுக்கு சிவப்பு வர்ண துணிகளாக கட்டப்பட்டிருந்தது. தமிழ்நாட்டின் கோயில்களில் இது போன்ற நம்பிக்கைகளைக் காணலாம். ஏதோ ஒரு வேண்டுதல் வைத்து மஞ்சள் துணி கட்டுவது நமக்கு வழக்கம். சில இடங்களில் தொட்டில் கட்டி விடுவர் அந்த மலை உச்சியில் இருக்கும் பாதையில் ஒரு சிறிய கோயிலும் அதன் உள்ளே சிகப்பு துணிகள் உட்பட பல விடயங்கள் விற்கப்பட்டுக் கொண்டிருந்தது.

வைஷ்ணவி ஆர்வத்துடன் அதைப் பார்க்க அசோக் பேசினான்.

“சீனர்களுடைய நம்பிக்கைப்படி சிகப்பு கலர்னா லைப் எனர்ஜி சொல்ற symbol”

அவர்கள் கோவில் வ

ழி நடக்க ஒரு சிகப்புத் துணி வாங்கிக் கட்டுங்க எனச் சொல்ல அசோக் ஒரு சிகப்பு நூல்கண்டை அவ்விடத்திலிருந்து எடுத்தான் அசோக். வைஷ்ணவியும் அதையே எடுக்க ஒரு முனை அவளிடத்திலும் மறுமுனை அசோக்கிடமும் சிக்கி இருந்தது. அந்த சீனப் பெண்மணி அசோக்கிடம் புன்னகையோடு பேசினார்.

“இந்த நூல் இரு உடல் ஒரு ஆன்மாவா வாழ்வதைக் குறிக்கும். நீங்க எவ்ளோ தூரம் பிரிஞ்சிருந்தாலும் இந்த நூல் உங்களை இணைச்சு சேர்த்து வைச்சுட்டே இருக்கும்”

அவர் சொல்லி வைஷ்ணவி அசோக் இருவரையும் அழைத்துச் சென்று அந்த கயிறு கட்ட வைத்து சிரித்தார். பின் அவள் தலையில் கை வைத்து ஆசீர்வதித்து அருகில் இருந்த அசோக்கின் கையில் தலையிலும் கை வைத்து ஆசீர்வதிச்சு சென்றார். அவர் சொன்ன வார்த்தை எதுவும் அவளுக்கு புரியவில்லை ஏதாவது ஒன்றையாவது ஞாபகம் வைத்து எரிக்கிடம் விளக்கம் கேட்கலாம் என்றால் ஒரு வார்த்தை கூட அவள் வாயில் நுழைய முடியாது இருந்தது. அந்த சீனப் பெண்மணி சென்றதும் வைஷ்ணவி அசோக்கிடம் அவர் என்ன சொன்னார் எனக் கேட்க,

“சொன்னா வருத்தப்பட மாட்டேல?”

“ஏன் அந்தம்மா எனக்கு ஏதாவது தப்பா நடக்கும்னு குறி சொல்லுச்சா?”

வைஷ்ணவி கேட்க,

“சொல்றதுக்கே ரொம்ப கஷ்டமா இருக்கு! நீ கடைசி வரைக்கும் கல்யாணம் ஆகாம ஔவையாராத் தான் இருப்பனு சொல்லுச்சு. இவ கூட இப்படியே நீ மட்டும் தான் சுத்திட்டு இருப்ப பார்த்துக்கனு சொல்லுச்சு”

“வேண்டாம் பொய் சொல்லாதே!”

வைஷ்ணவி அவனை முறைத்துப் பேச

“உன் மேல சத்தியமா உண்மை வைஷூ”

அவன் மேலும் நடிக்க,

வைஷ்ணவி தலையில் அடித்துக் கொண்டு நகர்ந்தாள்.

அசோக் சிரித்துக் கொண்டே அவளுடன் நடந்தான். வெகு நேர பயணத்திற்கு பிறகு ஒரு இடத்தில் வைஷ்ணவி மனம் பயந்து நின்றது காரணம் இதுவரையில் படிகளில் தரைத்தளம் மரத்தில் இருக்க தற்போது தளம் கண்ணாடியாக இருந்தது. அதல பாதாளம் கண்களில் கண்ணாடி போல் விரிய எப்படி மேலே ஓரடி எடுத்து வைப்பது. வைஷ்ணவிக்கு கை கால் நடுங்கத் தொடங்கியது. தைரியமாக சென்ற அதலிலே கூட சற்று பயத்தில் முகம் வெளிர காபிரியேல் கைகளை பிடித்து நடந்துக் கொண்டிருந்தார். சற்று தள்ளி லிடியா ரெய்ச்சல் இருவரும் கைப்பிடிச் சுவர் பிடித்து நடந்துக் கொண்டிருந்தனர். வைஷ்ணவி அங்கேயே நின்றுவிட்டாள். அசோக் திரும்பி ஏன் வரலையா என்பது போல் கேட்க, எனக்கு கீழ பார்த்தா பயமா இருக்கு என்று சொல்ல வந்த வார்த்தையை விழுங்கிக் கொண்டாள்‌.

‘அதற்கும் கேலிப் பேசுவான்’ மனதில் நினைத்து

“இல்ல நீ போ. நான் வரேன்”

என்று சொல்லி கீழே பார்க்காது நடந்தாள். அசோக் பார்வையில் இருந்து திருப்புமுனையில் மறைய க்ரீச் என்ற சத்தம் கேட்டது. அந்த சத்தத்தில் கண்ணாடி உடைந்து விட்டதோ என அஞ்சி அவள் அச்சத்தில் உறைந்து கீழே விழ வைஷ்ணவிக்கு அழுகையில் இதயம் விம்மி வெடித்து விடும் போல இருந்தது. தட்டுத்தடுமாறி எழ வெட்கம் கோபம் என மாறி மாறி அடிக்க பத்து நிமிடமாக யாரும் வராது இருக்க அவள் அருகே வந்து கரங்களை நீட்டினான் ஸ்டான்.

அவன் கரங்களை பற்றி அந்த கண்ணாடியில் ஆன பாலத்தைக் கடந்தாள் வைஷ்ணவி.

“கீழே பார்க்காதீங்க!”

ஸ்டான் சொல்ல அந்த பாதை முடிந்ததும் அவளை நேராக நிறுத்திவிட்டு இன்னும் அவள் உடல் அதிர்வது கண்டு அவளை ஒரு முறை அணைத்து விடுவித்தான் ஸ்டான். ஒரு மெல்லிய புன்னகையுடன் அவளை அணைத்தவன்

பயப்படாதீங்க என்று சொல்லவும் வைஷ்ணவி சரி என்பதாக தலையசத்தாள். சற்று நேரத்தில் அவளைக் காணாது அசோக் திரும்பி வர அவனுடன் நடந்தாள் வைஷ்ணவி. அதன் பின் அவர்கள் கேபிள் கார் கீழே இறங்கினர் மலை உச்சியில் இருந்துக் கீழே இறங்கினர். அதன் பின் ஒரு உள்ளூர் இரயில் பயணத்தில் அங்கிருந்து வெளியேறி அவர்கள் தங்கி இருந்த ஹோட்டலில் அன்று ஒரு நாள் இரவு அவர்கள் தங்கி விட்டு மறுநாள் காலை வேறிடம் செல்வதாக இருந்தது.

கவிதை

ஏக்கம் பொறாமை தனிமை என

அறிமுகமற்ற உணர்வுகளை எல்லாம்

அதிகம் பரிச்சயமாக்கியது

அவள் எனும் அகராதி!

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!