Skip to content
Post Views: 6,762
அத்தியாயம் 28:
ஆதி சந்தியாவிடம் “உன் நிச்சயம் நின்னப்ப சித்தப்பா கால் பண்ணி பேசினாருல்ல. அது நான்தான் பேச சொன்னேன். அது எப்படி, நம்ம வீட்டு பொண்ணுக்கு யாரும் இல்லன்னு நினைச்சிடக்கூடாதுன்னுதான் பேச சொல்லி சொன்னேன்.
அப்ப உங்க அப்பா பேசினத்துக்கு பிறகு நீ பேசினியே. நா பக்கத்துலதான் இருந்தேன். சித்தப்பா ஸ்பீக்கர்லதான் போட்டு பேசினார்.
உன்னோட இருபத்தொரு வயசுக்கு நீ ரொம்ப தெளிவா பேசின டி. சுதா விஷயத்துல நானே அவ்ளோ கஷ்டப்பட்டேன். எல்லோரும் சொல்றத கேட்டு குழம்பினேன். ஆனா நீ எவ்வளவு தெளிவா முடிவெடுத்துருக்கன்னு எனக்கு ஆச்சரியம். அப்புறம் என்ன மாதிரியே நீயும் ஊர பத்தி கவலை இல்ல. என் மனசாட்சி படிதான் நடந்துக்குவேன்னு சொன்னியா.
Advertisement
முக்கியமா உனக்கு நெகட்டிவா ஸ்ரீதர் வீட்ல நடந்த விஷயத்தையே வச்சி, பாஸிட்டிவா உனக்கு பிடிக்காத கல்யாணத்துல இருந்து வெளில வந்த பாத்தியா. ரொம்ப புத்திசாலி டி பொம்முக்குட்டி நீ. அந்த உன்னோட போன் பேச்ச கேட்டே நா ரொம்ப இம்ப்ரெஸ் ஆயிருந்திருக்கேன்னு நினைக்கிறேன்.
அதனாலதான் நீங்க இங்க ஊருக்கு வந்த மறு நாளே உன்ன பாக்க முடியுமான்னு பாக்கிறதுக்காவே உங்க வீட்டு பக்கமா வந்து வயலுக்கு போனேன். என்ன ஏமாத்தாம நீ உன் வீட்டு பால்கனில சூரியனை பாத்துகிட்டு காஃபி குடிச்சிட்டு நின்ன. ஏற்கனவே மஞ்சள் கலர் நீ. அதுல இன்னும் சூரிய ஒளி பட்டு தங்கம் மாதிரி மின்னிட்டு நின்ன. என்னால கண்ண எடுக்கவே முடில. என்னடா இவ இப்படி இருக்கான்னு உன் நினைப்புதான் எனக்கு அன்னைக்கு ஃபுல்லா. அப்புறம் உன் பேரு என்னன்னு யோசிக்கும்போது சந்தியான்னு நியாபகம் வந்துச்சி. நா ஆதித்யன். நீ சந்தியா. எனக்கு இன்னும் சந்தோசமா இருந்துச்சி.
மறுநாளும் உன் வீட்டு வழியாதான் உன்ன பாத்துக்கிட்டே வயலுக்கு போனேன். நீ காலேஜ் போற டைம் , வர டைம், உன்ன யார் யாரு சைட் அடிக்கிறா. இப்படி எல்லா விஷயமும் எனக்கு தெரியும். முக்கியமா சொன்னா நீ ஊருக்கு வந்து ஒரு ஏழு நாள் உன்ன பாலோவ் பண்ணிக்கிட்டுதான் இருந்தேன்.
Advertisement
அப்புறம்தான் திடீர்னு என்னடா நீ பண்ணிட்டிருக்க. விடல பையன் மாதிரி. உனக்கு ஏற்கனவே கல்யாணம் வேற ஆகியிருக்குன்னு யோசிச்சிட்டு ரெண்டு நாள் உன்ன பாக்காம இருந்தேன்.
Advertisement
ஆனா மூணாம் நாள் நீ என்ன பாத்துட்ட. அதுக்கு அப்புறம் நீ என்ன சைட் அடிக்க ஆரம்பிச்சுட்ட. என்னடா இவ. நம்மளே இவ பக்கம் போக கூடாதுன்னு முடிவெடுத்தா இவ இப்படி பண்றாளேன்னு எனக்கு ரொம்ப கஷ்ட்டமான காலம் அதெல்லாம்.
உன் பக்கம் மனசு திரும்பும்போதெல்லாம் யாராவது ரெண்டாவது கல்யாணம், ரெண்டாம் தாரம் இப்படின்னு பேசுவாங்க. ரெண்டாவது அப்படீங்கிறதுல எனக்கு எந்த தலையிறக்கமும் கிடையாது.
ஆனா முத கல்யாணத்துனால நடந்த பிரச்சனையெல்லாம் ஞாபகம் வந்து, இந்த அடுத்த கல்யாணம் எதுக்குன்னு யோசிக்க வச்சிடும்.
Advertisement
தீபாவளி அன்னைக்கு உன்னட்ட கிட்டத்தட்ட மறுக்கவே முடியல. ஆனா மறுநாள் இந்த ரமேஷ் வந்தானே இன்னைக்கு. அவன் ரொம்ப மோசமா பேசினான் பஞ்சாயத்துல. என்ன பேசினா கூட பரவால்ல. என்ன கல்யாணம் பண்ணிக்கிறவள பத்தி ரொம்ப பேசினான்.
அந்த கோபத்துல திரும்பி வீட்டுக்கு வந்தா உங்கப்பா அரவிந்த் பத்தி என்னட்ட கேட்கிறார். அவனுக்கும் உன்ன ரொம்ப பிடிக்கும்ன்னு எனக்கு முன்னாடியே தெரியும். சரி அவன்தான் உனக்கு பொருத்தமா இருப்பான்னு முடிவே பண்ணிட்டேன்.
மறுநாள் நீ வந்து பேசும்போது என்னோட பலகீனமான தருணங்களை கரெக்டா புரிஞ்சுகிட்டு அட்டாக் பண்ணியா. அதான் உன்ன அவாய்ட் பண்ண உனக்கு வலிக்கிற மாதிரி பேசி அனுப்பணும்ன்னு முடிவு பண்ணிதான் பேசினேன். ஆனா அன்னைக்கு போச்சு டி என்னோட தூக்கம்.
அதிலையும் அரவிந்த் உன்ன பொண்டாட்டின்னு சொன்னான் பாத்தியா. அப்பவே தெரிஞ்சிடுச்சி. உன்ன யார்ட்டயும் என்னால விட்ட கொடுக்க முடியாதுன்னு.
அப்புறம்தான் அரவிந்த்கிட்ட போய் பேசினேன். அவன் கல்யாணத்தை நிறுத்தலன்னா எப்படி உன்ன கல்யாணம் பண்றதுன்னு வரை ப்ளான்லாம் பக்காவா போட்டு வச்சிருந்தேன். ஆனா அவனே விலகிட்டான்.
அதுக்கு அப்புறம் நடந்ததெல்லாம் உனக்கு தெரியும். எதுக்கு நா இத இப்ப சொன்னன்னா, உனக்கு மனசுல உறுத்தல் இருக்குதான. நாம லவ் பண்ற அளவுக்கு மாமா நம்மள லவ் பண்ணல. நம்ம விடாம தொரத்துனதுனாலத்தான் நம்ம மேல அஃபக்சன் வந்து நம்மள கல்யாணம் பண்ணிக்கிட்டாருன்னு பீல் பண்றதான. அப்படியெல்லாம் இல்ல டி பொம்மு குட்டி. மாமாவே உன்ன பாத்தவுடனே விழுந்துட்டேன் தெரியுமா. நீ என்ன லவ் பண்றத வெளிப்படையா சொல்லிட்ட. நா சொல்லல. அவ்ளோதாண்டி பொம்மு. ஐ லவ் யூ டி என் மஞ்சளழகி” என்று ஆதி கூறியதும் சந்தியா அவனை பாய்ந்து கட்டி கொண்டாள். ஆதியும் அவளை இறுக்கி கொண்டான்.
நீண்ட நேரமாக ஒன்றும் சொல்லாமல் அவன் நெஞ்சில் ஆசுவாசமாக சாய்ந்திருந்தவளிடம் “என்னடி பொம்மு. இப்ப சந்தோசமா உனக்கு” என்றதும் அவனிடமிருந்து விலகியவள்
“அடப்பாவி மாமா. அப்ப எனக்கு முன்னாடியே என்ன சைட் அடிச்சிருக்கீங்க. இதுல நா உங்கள பாக்கும்போதெல்லாம் நா ஒருத்தி பக்கத்துல இருக்கேன்னே தெரியாத மாதிரி கௌரிட்ட பேசிட்டு போவீங்க. அதுதான் என்ன முதல்ல உங்கள பாக்க வச்சிது. அப்புறம் நீங்க எப்பவாவது என்ன பாக்கும் போதும் உங்க பார்வை அப்படியே என்ன என்னமோ பண்ணிடும். வயித்துக்குள்ள பட்டாம் பூச்சி பறக்க ஆரம்பிச்சுடும்.
தீபாவளி அன்னைக்கு அவ்ளோ சந்தோசமா இருந்தேன். ஆனா மறுநாளே அவ்ளோ கஷ்ட்டம். அதும் உங்ககிட்ட வந்து பேசும்போது நீ ஸ்ரீதர லவ் பண்ணிட்டு ஈஸியா அவன மறந்துட்டு இப்ப என்ன லவ் பண்றன்னு சொல்ற, அப்படின்னு சொன்னீங்க பாத்தீங்களா. என்னால தாங்கவே முடியல. ஏன்னா எனக்கு லவ்ன்ற ஒரு உணர்வ முதல்ல அறிமுக படுத்தி வச்சதே நீங்கதான். ஆனா அது உங்களுக்கு புரியவே இல்லையான்னு நினைச்சி ரொம்ப கஷ்ட பட்டேன்” என்றுவிட்டு அழுதவளை கட்டி கொண்டவன்
“சாரிடி பொம்மு. உன்ன பேசிட்டு நானும் அவ்ளோ கஷ்ட பட்டேன். உனக்கு நல்லதுன்னு நினைச்சித்தாண்டி அப்படி பேசினேன். ஆனா பிறகுதான் புரிஞ்சது. நீ எனக்காகவே பொறந்தவ. உன்ன விட்டா நீயும் சந்தோசமா இருக்க மாட்ட. என்னாலயும் சந்தோசமா இருக்க முடியாதுன்னு. ஆனா எனக்கு ஒன்னு மட்டும்தான் புரியல. அரவிந்த் உன் விஷயத்துல எப்படி இவ்வளவு ஈஸியா விட்டு கொடுத்தான்னு”
“அது நா அவர் என்ன பொண்ணு பாக்க வந்தன்னைக்கே இத மாதிரி உங்களைத்தான் லவ் பன்றேன்னு சொல்லிட்டேன். அதுக்கு அவர்தான் இல்லல்ல எனக்கு ஓகே சொல்லிடு. அப்புறம் உன் மாமா தானா உன்ன தேடி வருவான்னு சொல்லி பிளான் போட்டு கொடுத்தார். அதுபடிதான் நா, கிருஷ்ணன் அங்கிள், கௌரி, அருண் எல்லாருமே நடிச்சோம்.
ஆனா நீங்க அவர்ட்ட நிச்சயத்தை நிப்பாட்ட சொல்லி பேசின பிறகுதான் அவர் என்னட்ட சொல்லாமலே ஊரை விட்டு கிளம்பிட்டார். அப்புறம் நம்ம கல்யாணம் முடிஞ்சி நேத்து ஈவினீங்தான் என்னட்ட பேசினார்” என்றதும்
“எனக்கு அப்பவே டவுட் இருந்தது டி பொம்மு. நீ எப்படி அரவிந்த்தோட கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்ட. இந்த அரவிந்த்தும் எப்படி நா சொன்ன உடனே விலகி போனான்னு. உனக்காகத்தான் விட்டு கொடுத்திருக்கான் . எனக்காகன்னா ஒரு இம்மி அளவுகூட விட்டு தர மாட்டான். இதுல உங்களுக்கு என் தம்பி தங்கச்சியும் கூட்டு வேறயா. கூட்டு களவாணிங்களா” என்றுவிட்டு அவளை தூக்கி மடியில் தன்னை பார்க்குமாறு உட்கார வைத்து கொண்டான்.
“ஹலோ பாஸ். உங்கள விடவா நாங்க பண்ணிட்டோம். அப்புறம் ஆரம்பத்துலயே வசந்தண்ணாதான் உங்கள பத்தி எனக்கு எல்லாம் சொன்னார். அப்புறம் முரளிதான் நீங்க என்ன அவாய்ட் பண்ணும் போதெல்லாம் நீங்க எங்க இருக்கீங்கன்னு சொல்வான். ஆனா அரவிந்த் நிச்சயதார்த்த நாடகத்தை பத்தி அவங்ககிட்ட சொல்ல கூடாதுன்னு சொல்லிட்டார்.
அரவிந்த்தோட நா நிச்சயத்துக்கு ஓகே சொன்ன பிறகு வசந்த் அண்ணாவும், முரளியும்தான் நீ எப்படி ஓகே சொன்னன்னு சண்டை என்கிட்ட. என்னால ஒண்ணுமே சொல்ல முடியல. அப்புறம் அரவிந்த் ஊரை விட்டு போய் உங்களுக்கும் எனக்கும் நிச்சயம் நடந்த பிறகுதான் உண்மைய சொன்னேன். அவங்களுக்கும் ரொம்ப சந்தோசம். இப்படி எல்லாரும் நமக்கு அவ்ளோ சப்போர்ட்” என்றதும்
“சரி டி பொம்மு. உன்னோட கோவம்லாம் போய்டுச்சா?”
“கோவம்லாம் இல்ல பாஸ் . வருத்தம்தான் இருந்தது. அதும் இப்ப போயிடுச்சி. ஆனா இன்னும் ஒரே ஒரு டவுட் மாமா?”
“இன்னும் என்ன பொம்மு”
“அது வந்து, நம்ம கல்யாணத்துக்கு முன்னாடி நீங்க அவ்ளோ டீசண்டா நடந்துப்பீங்க. எவ்ளோ வாய்ப்பு இருக்கும் போதும், உதாரணமா நா இன்ஸ்கர்ட்டோட தோட்ட வீட்ல இருந்த போது, எனக்காக நாத்து நட்ட போது, அப்புறம் எனக்கு புடவை கட்டி விட்ட போது இப்படி எல்லாம். ஆனா நம்ம கல்யாணம் முடிஞ்சதுல இருந்து ரொம்ப ரொமான்ஸ் பண்ணிட்டு அலையீறீங்களே. நா கோவமா இருந்தேன்னுதான், ரெண்டு நாளா இப்படி நடந்துகிட்டீங்களா அதாவது நடிக்கிறீங்களா”
“அடியே பொம்மு. விடிய விடிய கதை கேட்டு என்னமோ சொல்வாங்களே அது மாதிரி கேள்வி கேக்கிற. நா அப்பல்லாம் அப்படி நடந்துக்கிட்டேன்னா நமக்கு கல்யாணம் ஆகுமாங்கிறது நிச்சயம் இல்ல. இப்ப நீ முழுசா என்னோட சொந்தம். அதான் இப்படி உரிமையா நடந்துக்கிறேன்.
அது மட்டுமில்லாம பொம்மு, நா முன்னாடியும் அப்படிலாம் டீசண்டா நடந்துக்கலடி. உதாரணமா நீ சொன்னியே எனக்கு வாய்ப்பு இருந்ததுன்னு. அந்த வாய்ப்பு இருக்கும் போதெல்லாம் உன்ன சூப்பரா சைட் அடிச்சிடுவேண்டி. வேணுன்னா உன் உடம்புல… என்றுவிட்டு அவள் காதில் அந்தரங்கமாக பேசியவனை, கையில் கிடைத்த தலையணையை எடுத்து அடிக்க ஆரம்பித்தாள்.
சிறிது நேரம் அவளிடம் அடி வாங்கியவன், பிறகு அவளை அப்படியே தூக்கி அணைத்து அசைய விடாமல் மடியில் வைத்து கொண்டான்.
“விடுங்க. விடுங்க. எவ்வளவு பேட் பாயா இருக்கீங்க” என்று திமிறியவளிடம்
“அடியே பொம்மு. நா உன்னட்ட பேட் பாயா தாண்டி இருக்கணும். இல்லன்னாதான் உலகம் என்ன தப்பா பேசும். உனக்கு ஒன்னு தெரியுமாடி. நிறைய உன்ன சைட் அடிச்ச பயலுகள கூப்பிட்டு மிரட்டி விட்ருக்கேன்.
அதுல ரொம்ப கடுப்பேத்தினவன் ஒருத்தன் இருக்கான். பேரு சந்தோஷ். ஸ்கூல்தான் படிக்கிறான். ஒருநாள் கூப்பிட்டு கேட்டேன். உண்மையா நீ சந்தியவைதான் பாக்குறியா டா. அவ காலேஜ் படிக்கிறா. நீ ஸ்கூல்தாண்டா போற. உன்ன விட பெரிய பொண்ணையா பால்லோவ் பண்றன்னு கேட்டேன்.
அதுக்கு அவன், அண்ணா நீங்க 90ஸ் கிட்ஸ் . இதெல்லாம் உங்களுக்கு புரியாது. இப்பல்லாம் இதான் ட்ரெண்ட். நா நல்லா விசாரிச்சிட்டேன். அந்த புள்ளைக்கு 21 வயசுதான் ஆகுது. எனக்கு பத்தொன்பது. மூணு வயசுதான் வித்தியாசம். இதெல்லாம் மேட்டரே இல்ல, அப்படீன்னு சொல்றான்.
அப்படி என்னடா உனக்கு இந்த பெட்ரோமாஸ் லைட்டேதான் வேணுமான்னு கேட்டேன் . அதுக்கு அவன், அண்ணா நீங்களே பாருங்க . நம்ம ஊர்பக்கம்லாம் இத மாதிரி பொண்ணுங்கள பாத்திருக்கமா. சினிமால மட்டும்தான் பாத்துருக்கோம்.
எதோ அதிர்ஷ்டவசமா நம்ம ஊருக்கு இப்படி ஒரு புள்ள வந்துருக்கு. வாய்ப்பை யூஸ் பண்ணிக்கணும் அண்ணா. நீங்களும் தான் இருக்கீங்க. அந்த புள்ளைக்கு முறை பையன். என்ன பிரயோஜனம். நா மட்டும் உங்க இடத்துல இருந்திருந்தா, இந்நேரத்துக்கு அந்த புள்ளைய கல்யாணமே முடிச்சிருப்பேன்னுட்டு போறான்.
இதிலேந்து என்ன தெரியுது. அப்படி ஒரு ரேர் பிகரு நீ. அப்படிப்பட்டவளை கல்யாணம் பண்ணிட்டு நா எப்புடி டி சும்மா இருக்கறது. அப்புறம் இந்த சந்தோஷ் பையன் அப்பவே என்ன அசிங்க படுத்திட்டான். இதுல நமக்கு கல்யாணம் முடிஞ்சு முழுசா ரெண்டு நாளாகுது. இதுல நா இன்னும் சும்மாவே இருக்கேன்னு தெரிஞ்சா இந்த உலகம் என்ன எப்படி பேசும். தயவு செய்து அந்த அவபெயர்ல இருந்து என்ன காப்பாத்தி விடு டி பொம்முக்குட்டி”
“எல்லாம் சரிதான் மாமா. ஆனா என்னோட லட்சியம்……….” என்று இழுத்தவளை பார்த்து “மறுபடியும் முதல்ல இருந்தா” என்று பெட்டில் படுத்த ஆதி பெட் ஷீட்டை இழுத்து காலிலிருந்து தலை வரை மூடி கொண்டான்.
மெதுவாக அவனை தட்டி பார்த்தவள் “மாமா… மாமா …… தூங்கிட்டீங்களா. நா போய் நைட் ட்ரெஸ் போட்டுட்டு வரவா?” என்றாள்.
அவனிடமிருந்து சத்தமே வராததால் “சரி. உங்களுக்கு புடவை தான் பிடிக்கும்ன்னு பாத்தேன். நீங்க தூங்கிட்டீங்கன்னா நா போய் நைட் ட்ரெஸ்” என்று சொல்லி கொண்டிருந்தவளை வேகமாக இழுத்து பெட்டில் போட்டு அவள் வாயை தன் வாயால் மூடினான்.
எவ்வளவு நிமிடம் கடந்ததோ தெரியவில்லை. அவள் உதட்டை விடுவித்தவன் “உண்மையிலேயே உனக்கு ஓகே வா பொம்மு. உன்னோட படிப்பு” என்றவனின் உதட்டில் விரல் வைத்து மூடியவள்
“என்னால என் படிப்பையும் மேனேஜ் பண்ணிக்கிட்டு என் மாமாவையும் சந்தோசமா வச்சுக்க முடியும். ஏன் நீங்க எனக்கு துணையா இருக்க மாட்டீங்களா. இன்னைக்கு சாதாரண பொங்கல் வைக்கிற விஷயத்துக்கே நீங்களும் நம்ம குடும்பமும் எனக்கு எவ்ளோ சப்போர்ட்டா இருந்தீங்க. அப்புறம் நா ஏன் பயப்படணும் மாமா. இப்போதைக்கு என்னோட மிக பெரிய லட்சியம் என் மாமா கலருக்கு நா மாறனும். முடியுமா உங்களால” என்று கண்களால் சவால் விட்டாள் சந்தியா.
அவ்வளவுதான் தெரியும் அவளுக்கு. அதற்கு பிறகு ஆதியின் மோக புயலில் சிக்குண்டாள். காம வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டாள். காதல் சுனாமியில் மூழ்கடிக்க பட்டாள்.
எல்லாம் முடிந்து அவன் மேலேயே படுத்திருந்தவள் “சரியான ரக்கட் பாய் மாமா நீங்க. இந்த சாஃப்டா ஹேண்டில் பண்றதெல்லாம் தெரியாதா உங்களுக்கு” என்றவளை திரும்பவும் பெட்டில் சாய்த்தவன் “வாடி பொம்மு . இந்த டைம் மாமா உன்ன சாஃப்டா ஹேண்டில் பண்றேன்” என்றவன் அவளை பதில் பேசவே விடாமல் திரும்பவும் ஆக்கிரமித்தான். ஆனால் அவனுக்கு மென்மையெல்லாம் வரவேயில்லை. ஒரே வன்மைதான்.
அவள் ரகசியங்களை ஒன்று விடாமல் களவாடினான். அவனின் எதிர்பார்ப்புகளை அவளிடம் கேட்டு பெற்று கொண்டான். சந்தியாவிற்கு தெரியாத வேறு வேறு உலகங்களை அறிமுகப்படுத்தினான். விளைவு சந்தியா களைத்து போனாள்.
விடிந்து ஆறு மணிக்கு அவளை எழுப்பினான் ஆதி.
error: Content is protected !!