உயிரில் ஒரு சஞ்சாரம் – அத்தியாயம் 20
அத்தியாயம் 20
அந்த தீண்டலில் அவன் ஏன் அணைத்தான் என்று தடுமாறி அவள் யோசிப்பதற்கு முன் அந்தப் பாறை இடுக்கின் வழியே அவள் தலையில் அடிப்படாதிருக்க அவளை அணைத்து இருந்தான். வைஷ்ணவி தன்னுள் பரவும் ஏமாற்றத்தை என்னவென்று வரையறுப்பது என அறியாது குழம்பினாள். அந்த படகு பாறை இடுக்கில் வழி வெளிவந்திருக்க சூரிய வெளிச்சம் சுள்ளென்று உடலைத் தீண்டியது.
‘என்னை அணைத்ததற்கானக் காரணம் நான் அடிபடாது இருக்கவா இல்லை காதலுடன் என்னை அணைத்தானா இல்லை?!”
அவள் முகம் செம்புழல் நீர் போல் அத்தனை உணர்வுகளையும் கலந்திருந்தது. அவள் அமைதியாக இருந்தால் ஒழிய தன் உணர்வுகளைப் பற்றிய தெளிவு கிடைக்காது என எண்ணி அமைதியாக இருந்தாள். மறுநாள் மாலை அவர்களுக்கு விமானம் ஏற்பாடாகி இருக்க அன்றைய இரவு யாக்ட்டில் ஒரு சிறிய விருந்து கேப்ரியலால் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஜொலிக்கும் நட்சத்திரங்களுக்கு இடையில் ஒரு சொகுசு கப்பலில் இரவு நடனம் கேளிக்கை என்ற போய்க் கொண்டிருந்தது. விழாவின் நாயகர்களான அடலினும் கேப்ரியலும் நடனமாடிக் கொண்டிருந்தனர். அவர்களோடு பலரும் ஜோடியாக நடனமாட அசோக் தனியே நின்று இருந்தான். அவள் அருகில் வந்த ரெய்ச்சல் அவனுடன் ஆடத் தொடங்கினாள். வைஷ்ணவி அதை பார்த்துக்கொண்டே இருக்க தன் மனதில் பொறாமை கலந்த ஏக்கம் பரவுவதை நினைத்துத் தடுமாறினாள்.
Advertisement
அசோக்கிடம் உண்டாவது காதலா? இரண்டு வருடக் காதல் தோல்வியான இருபது நாட்களில் இன்னொருவனுடன் தோன்றுவது காதலா?! அசோக் அதைக் கேலி செய்து விட்டால்?!’
அவள் நினைவுத் தேரில் பவனி வர சற்று நேரத்தில் அசோக் நடனத்தை விட்டு வெளிவர வைஷ்ணவி ஷெரீனிடம் பேசிக் கொண்டு இருந்தாள்.
“வைஷு , வருண் உன்னைத் தேடி இங்கு வந்திருந்தான்”
Advertisement
ஷெரீன் பேச வைஷ்ணவி முகம் இறுகியது.
Advertisement
“என்னவாம்?” வைஷ்ணவி கேட்க,
“உன் கால்ல விழுந்து மன்னிப்பு கேட்கணுமாம். நல்லா குடிச்சு இருந்தான். அவன் வைஃப் தான் வந்துக் கூட்டிட்டுப் போனா”
ஷெரீன் சொல்ல வைஷ்ணவி எரிச்சலுடன் பேசினாள்.
Advertisement
“ஷெரீன் ப்ளீஸ் அவன் பெயரையும் அவனைப பத்தி எதையும் எனக்கு சொல்லாதே”
வைஷ்ணவி சொல்லிவிட்டு அலைபேசியை அணைத்தவள் நடந்து முன்னிருந்த திடலுக்கு வர பென்னி அவளிடத்தில் ஒரு டெசர்ட்டை நீட்டினான். வைஷ்ணவி மரியாதை நிமித்தமாக அதை வாங்கி கண்டவள் அசோக்குடன் நடனமாட வேகமாகச் சென்றாள். அசோக் ரைச்சலுடன் ஆடிவிட்டு தன் கரங்களை நீட்ட மறுநொடி அசோக்கின் கைகளில் வைஷ்ணவி இருந்தாள். இருவரும் சேர்ந்து நடனமாட தொடங்கினர் அசோக் அவள் இணைந்து ஆட ஆட அவளது நெருக்கம் நாகரீகம் கருதி அவன் அணைக்கட்டி வைத்திருந்த ஆண்மையின் தாகத்தைத் தூண்ட அவனது கரம் வைஷ்ணவியின் இடையை அழுந்தப் பற்றியது. அவனது மார்பில் உரசும் அவளது அழகை இழுத்து அணைத்து ஆடத் தொடங்கினான். ஆணின் மோகம் செய்யும் காயம் வைஷ்ணவியின் உடல் உணரத் தொடங்க அந்த நடனம் வெகு நேரம் சென்றது. இறுதியாக அவளது இடையைப் பற்றி மார்போடு சாயத்து அவளது இதழ்களை சுவைத்தான் அசோக். அந்த அழுத்தம் அவளது உடல் முழுவதும் பரவியது. அவன் தோள்களின் மேல் சாய்ந்த வைஷ்ணவி தலை சுற்றுவதாக தோன்ற அப்படியே இறுக அசோக்கை அணைத்துக் கொண்டாள். அசோக் கிளர்ச்சியாக அவளை நோக்கி குனிய அவள் காதுகளில் வைஷ்ணவி உளறி மயக்கமுற்றாள்.
“ஏன் வருண் என்னை விட்டுட்டு போனே?”
அந்த வார்த்தைகளைக் கேட்டதும் அசோக்கின் கரங்கள் மெல்ல நடுங்கியது மெல்ல அவளை விடுவித்து இருக்கையில் அமர்த்தினான். பென்னி புன்னகையுடன் சிரித்துக் கொண்டு இருந்தான். அசோக் அவளை விடுதிக்கு கூட்டி வரும் வரை வைஷ்ணவி உறங்கி இருந்தாள். அன்று இரவு அனைவரும் தங்கி மறுநாள் காலை எழுகையில் வைஷ்ணவியின் அறையில் அசோக் இல்ல. துஃவையல் தான் காலையில் கதவுகளைத் தட்டினான் வைஷ்ணவி குழப்பமாக பார்க்க துஃவையல், அசோக் அன்றிரவே கிளம்பிச் சென்று விட்டதாக சொன்னான். வைஷ்ணவியின் இதயத்தில் சம்மட்டிக்கொண்டு அடித்தது போல் வலித்தது.
“இந்த பயணம் முடியற வரைக்கும் உன்னை தனியா விட்டுட்டு போகவே மாட்டேன்”
அவன் சொன்ன வார்த்தைகள் காதில் அறைந்து நின்றது. வைஷ்ணவி தன் உதடுகளை கடித்து நின்றிருந்தாள்.
“பின்லாந்து போகணும் மேடம் நாளைக்கு பின்லாந்தில் இருந்து உங்களுக்கு இந்தியாவுக்கு டிக்கெட் நீங்க கிளம்பிடலாம்”
துஃவையல் சொல்லிவிட்டுச் செல்ல தன் அறையை திரும்பிப் பார்த்தாள் வைஷ்ணவி. அசோக்கின் அத்தனை பொருட்களும் சுவடின்றி அழித்தது போல் வெறுமையாக இருந்தது. அவள் கண்களில் நீர் கோர்த்துக் கொள்ள அமைதியாக அமர்ந்தாள். நேற்றிரவு அவனுடன் நடனமாடியது மட்டுமே நினைவிருந்தது. அதன் பின் உயிர் இல்லா கூடு போல் அவர்களுடன் பயணம் மேற்கொண்டாள் வைஷ்ணவி. அசோக் இல்லாத அந்த பயணம் வெறுமையாக இருந்தது. அவன் அவளது வாழ்வில் வண்ணங்களை தெளிக்க வந்தவன், சுவாரஸ்யமற்று காயங்களையும் கண்ணீர் துளிகளையும் கடந்து போன நிமிடங்களின் வலிகளை மட்டுமே நினைத்துக் கொண்டிருந்தவளுக்கு வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் ரசித்து ரசித்துக் கொண்டாட கற்றுக் கொடுத்தவன். இப்பொழுது அவன் இல்லாத நொடிகள் பெரும் பாரமாகத் தோன்றியது.
இப்பொழுதே ஓடிப்போய் தனது அறைக்குள் பு.தைந்து கொள்ள அவள் மனம் ஏங்கியது பட்டாம்பூச்சியாய் இறகுகளை விரித்து பறக்கச் சொல்லிக் கொடுத்தவனே மீண்டும் கம்பளிப் புழுவாக ஒரு கூட்டுக்குள் அடைந்துக் கொள்ள அவளை ஏங்க வைத்தான்.
‘இந்த மாற்றங்களை அவளிடம் கொண்டு வந்தவன் ஒரு வார்த்தையும் சொல்லாது ஏன் சென்றான்? அவனிடம் ஒரு விடை பெறுதல் கூட பெற முடியாத அளவுக்கு இருந்து விட்டேனா நான்?’
அவள் இதயத்தில் கூர் ஈட்டிப் பாய பாயவே நான்கு மணி நேர விமான பயணத்தில் பின்லாந்து வந்தடைந்தாள். அருகில் இருந்த இருக்கை அவனில்லாது அவள் மனதைப் போலவே வெறுமையாக இருந்தது.
அன்று மாலை அசோக்கை பற்றி விசாரிக்கலாமா என்று இருந்த தனது மனதை அவளது தன்மானம் தடுத்தது. ஒரு வார்த்தை கூட தன்னிடம் எதையும் சொல்லாது போனவனிடம் அவன் யார் என்ன என்று விசாரிப்பது அநாகரீகம் என்று தோன்றியதால் அவள் அமைதியாகவே இருந்தாள். அன்று இரவு பின்லாந்தில் உள்ள கண்ணாடி வீடுகளில் இருந்து நார்த்ர்ன் லைட்ஸ் எனப்படும் நிறம் மாறும் நட்சத்திரங்களை காண்பதற்கு ஏற்பாடாகி இருந்தது. வைஷ்ணவி அன்றைய நாள் முழுவதும் இயந்திரத்தனமாகவே இருந்ததால் அடலினுக்கு அவளைக் காண வருத்தமாக இருந்தது.
அன்று தனியறையில் அவள் அமர்ந்திருக்க அசோக்கின் சிரித்த முகமும் கேலிப் பேசி சீண்டிய பொழுதுகளும் நினைவு வர இந்த வெறுமை மிகவும் வலித்தது. வருணைப் பிரிந்தப் போது உண்டானது வெறும் சினம் தான் ஆனால் அசோக் வெறும் பத்து நாட்களில் இவ்வளவு வலிகளைக் தருகிறான்.
தனக்கானது தனிமை மட்டும் தான் என கண்ணாடி வீட்டின் மேலே நிறம் மாறும் வானத்தைப் பார்த்தப்படி அமர்ந்திருந்தாள். கண்களில் கண்ணீர் எட்டிப் பார்த்தது.
‘எதற்காக நிராகரிக்கப்பட்டோம் என அறியாதே தண்டிக்கப்படுவது என் வாழ்வின் சாபமா? எதற்கு மனிதர்கள்? எதற்கு இதயம் கிழிப்படும் வலி! தனிமை ருசித்து சாவு!” என அவள் மனம் அவளையே சபித்துக் கொண்டே இருந்தது.
வைஷ்ணவி கண்களில் நீர் வழிய அமர்ந்திருக்க கதவின் வெளிப்புறம் உருவம் தெரிந்தது. வலி மிகுந்து இறப்பு எல்லாம் ஒரு பொருட்டு இல்லை என எண்ணும் போது அச்சம் முற்றிலும் அர்த்தமற்றதாகிறது. வைஷ்ணவி துணிந்து கதவு நோக்கி வர அடலின் கதவைத் தட்டி உள்ளே வந்தார். அவரைக் கண்டதும் கண்ணீரை மெல்ல உள்ளே வாங்கிய வைஷ்ணவி புன்னகையை முகத்தில் பூசிக் கொண்டாள். ஆங்கிலத்தில் உரையாடல் தொடங்கியது.
“அசோக் ஏன் போயிட்டார்?”
அந்த கேள்விக்கான பதில் தனக்கும் தெரிந்திருக்க வேண்டும் என்று தான் ஆசை ஆனால் என்ன சொல்ல ஏதோ அவசர வேலை என்று மட்டும் துஃவையல் சொல்லி இருந்ததால் அதையே பதிலாக அடலினிடம் சொன்னாள்.
“ஏதோ அவசர வேலைனு போனான்!”
வைஷ்ணவி சொல்ல சொல்லவே அவளது கண்களில் நீர் திரண்டது. அடலின் அவளை அணைத்துக் கொண்டவர் பின் பேசினார்.
“நீ இங்க தனியா இருக்க வேண்டாமே! வா எங்களோட!”
அவர் பெருந்தன்மையுடன் அழைக்க வைஷ்ணவி புன்னகைகத்துச் சொன்னாள்.
“தனிமை பழகனும் நான். பழகிக்கிறேன்” அந்த வார்த்தைகளின் கனம் அவளது விழிகளில் தெரிந்தது. அடலின் அவளது கரத்தை ஆதரவாகப் பற்றியவர் பேசினார்.
“உண்மையான அன்பு எங்க எவ்வளவு தூரம் இருந்தாலும் உன்கிட்ட திரும்பி வரும். இல்லைனா அது உனக்கு தகுதியானதில்லைனு விட்டுடு”
அடலின் சொல்லிவிட்டுச் செல்ல வைஷ்ணவி வெகு நேரம் அந்த நார்த்தன் லைட்ஸை பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தாள். தனிமை அவளைக் கொஞ்சம் கொஞ்சமாக கொன்று தின்று செரித்தது.
அதன் பின் இந்தியா வந்தடைந்த வைஷ்ணவி செரீனிடமோ பிராவோ விடமோ, யாரிடமும் அசோக்கைப் பற்றி விசாரிக்கவே இல்லை. அசோக்கின் மேல் அவள் செலுத்திய காதல் அன்பு ஏதோ ஒரு பெயரிட்டு கொண்டாலும் அதை ஒருவரிடமும் அவள் வெளிப்படுத்த அவள் தயாராக இல்லை. அடிக்கடி அவன் பாடிய பாடலை நினைவு படுத்திக் கொள்வாள். ஐ அம் டூ குட் அட் குட்பைஸ்.
இந்தியா வந்து ஒரு வாரம் தனது தாய் தந்தையரை ஊருக்குச் சென்று பார்க்க அவரது தாய் லட்சுமி தான் அவளது தந்தை மணியரசனிடம் வருத்தமுற்று சொல்லிக் கொண்டிருந்தார்.
“ஒரே பொண்ணுன்னு செல்லம் கொடுத்து செல்லம் கொடுத்து இப்படி வந்து நிற்கிறா! அவளுக்கு 28 வயசு ஆச்சு? என்னதான் நினைச்சிட்டு இருக்கீங்க?”
லட்சுமி சொல்ல மணியரசன் பேசினார்.
“அதான் ஜோசியக்காரர் கிட்ட போய் பாத்துட்டு வந்தாச்சுல்ல. இந்த வருஷத்துல கல்யாணம் ஆகும்னு சொல்லிட்டாங்க சும்மா எதுக்கு புள்ளய ஏசிட்டே இருக்கிறே?!”
அவர் மகளுக்கு ஆதரவாகப் பேச லட்சுமி மேலும் எரிச்சலாகிப் பேசினார்.
“எந்த வரன் பார்த்தாலும் இது நொட்டை அது நொட்டைனு தட்டி விட்டுட்டே இருந்தா எப்படி?!”
அவரது கேள்விக்கு மணியரசன் பதில் பேசும் முன் வைஷ்ணவியே பேசினாள்.
“அம்மா இப்படியே பேசிட்டு இருந்த நான் இன்னைக்கே ஊருக்கு கிளம்பிடுவேன்”
அவள் சொல்ல “பேசலை ஆத்தா பேசலை” என்று சொல்லி கோபத்தில் சென்றார் லட்சுமி.
ஒரு வாரம் தனது தாய் தந்தை உடன் இருந்து விட்டு சுவிட்சர்லாந்து கிளம்பினாள் வைஷ்ணவி.
சுவிட்சர்லாந்துல் குறைந்தபட்சம் இரு வருட ஒப்பந்தத்தில் தான் வந்திருந்தாள். வாரத்தில் நான்கு நாட்கள் அவளது வேலையை மனதார முழுத் திறமையுடன் செய்தவள் வார விடுமுறையில் சுவிட்சர்லாந்து ஒவ்வொரு சுற்றுலா இடங்களை ரசித்துப் பார்க்கவும் நேரம் செலவிட்டாள். சுவிட்சர்லாந்தில் உள்ள ஆல்ப்ஸ் மலைத்தொடர்கள் ஒய்டி காணக்கூடிய ஒவ்வொரு இடத்தையும் சனி ஞாயிறு பயணமாக சென்றுவிடுவாள்.
அசோக்கின் நினைவுகளை மறக்கவோ நினைவுப்படுத்தவோ இல்லை காயங்களைக் கீறி கீறி வலி அனுபவிக்கும் மனப்பிறழ்வுக்கு பழக்கம் ஆயினள் வைஸ்ணவி. அந்த வலி அவளுக்கு மிகவும் தேவைப்பட்டது.
ஒவ்வொரு பயணத்திலும் ஒருவேளை அசோக் அருகில் இருந்தால் என்னென்ன சொல்லி இருப்பான் என்னென்ன செய்திருப்பான் என்ற யூகங்கள் அவள் மனதிற்குள் தோன்றி மனம் இன்பமான நினைவுகளைத் தேட, ஆனால் ஏன் தன்னிடம் எதுவும் சொல்லாமல் சென்று விட்டான் என்ற கேள்வி பெரும் காயம் தந்தது. கிட்டத்தட்ட நான்கு ஐந்து மாதங்கள் சென்றிருந்தது.
அதேசமயம் அவளைப் போலவே மிகப்பெரிய குழப்ப நிலையில் ஓவியங்களை வரைந்து வரைந்து கிழித்து எறிந்துக் கொண்டு இருந்தான் அமெரிக்காவில் மிகப் புகழ்பெற்ற ஒவியனும் இசைக் கலைஞனுமான அசோக் கௌதமன். அவனது தந்தை லீடங் அன்று அவனிடம் பேசியாக வேண்டும் என அவனது அறைக்குள் நுழைந்தார்.
அவர் அமெரிக்காவில் உள்ள ஒரு மிகப்பெரிய மருத்துவமனையில் நரம்பியல் நிபுணராக வேலை பார்க்கிறார். அவரது மனைவி தமிழ்ச்செல்வி வேதியல் துறை ஆராய்ச்சியாளராக அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகத்தில் வேலை செய்கிறார்.
அசோக் ஓவியங்களை வரைந்து மீண்டும் கிறுக்கி கொண்டிருக்க பயணம் முடிந்து வந்த மூன்று மாதங்கள் அவன் அமைதியாக இருக்கட்டும் என்று எதுவும் தொந்தரவு செய்யாமல் இருந்தவர் அன்று அவனது அறைக்குச் சென்றார். “என்னடா அசோக்?” எனக் கேட்டு அவர் பார்க்க முதன் முதலில் வைஷ்ணவியை அவன் கண்ட அந்த பார் டேபிள் அவள் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்த நிலையில் ஓவியம் அழகாக பளிச்சிட்டது. அவர் அதைப் பார்க்க அசோக் பேசினான். அவன் குரல் வருத்தத்தில் ஒலித்தது.
“நான் ஒரு ராசி இல்லாதவன் அப்பா!”
அந்த வார்த்தைகள் ஒரு தந்தையாக அவருக்கு வலி ஏற்படுத்தியிருக்க லீடங் அவன் கரங்களை பற்றி அவன் அருகில் வந்து அவனை அணைத்துக் கொண்டார்.
“அவ காதலன்னு ஒருத்தன் இல்லாத போது அவளை நான் பார்த்திருக்கணும்பா! அவளை நான் தான் முதலில் பார்த்து இருக்கணும்பா”
அவன் சொல்ல லீடங் நெற்றியை நீவி அமர்ந்திருந்தார். வைஷ்ணவியைப் பார்த்ததிலிருந்து எல்லாம் அவனிடம் சொல்லி தான் இருக்கிறான். ஆனால் அவளை காதலிப்பதாக இன்று தான் சொல்கிறான்.
“ஏன்டா உனக்கு அந்த பொண்ணு அவ்ளோ புடிச்சிருந்தா அப்பவே சொல்லி இருக்கலாம்ல”
“அவ வலியில் இருந்தாப்பா! அப்புறம் பத்தே நாள்ல என்னோட அன்பில் மாறுனா! பசிச்சிருந்தவனுக்கு பழைய சோறு கூட அமிர்தமா தெரியற மாதிரி!”
அவன் சொல்ல “உன் பர்ஸ்ட் லவ்வர் ஸ்மிதா உன்னை நினைச்ச மாதிரி!” என்று சொல்லி அவனது வாக்கியத்தை முடித்தார் லீடங்.
“ஸ்மிதா மாதிரி அவ இல்லைப்பா அவ இல்லைனு தான் நினைச்சேன். ஆனா அவ என் தோள்ல சாஞ்சு என் ஆசைகள் அத்தனையும் ஒரே ஒரு பார்வையில் தூண்டி..வருண்னு”
அசோக் அழ முடியாது தனது தூரிகையை உடைக்க லீடங் பேசினார்.
“ஸ்மிதா மாதிரி, அம்மா உன்னை விட்டுட்டு போன மாதிரி, அவளும் பண்ணினா என்னால் தாங்க முடியாது பா அதான் வந்துட்டேன்”
அவனது மனக்குமுறலில் ஒரு தந்தையாக பேச்சற்று அமர்ந்திருந்தார் லீடங். ஆரோவில் மன அழுத்தத்திற்காக சிகிச்சை பெறும் போது தான் லீடங்கை சந்தித்து இருந்தார் அவனது தாய் தமிழ்ச்செல்வி அமெரிக்க வாழ் தமிழ்ப்பெண். முதலில் இருவரும் மிக சந்தோஷமான திருமண வாழ்க்கையை தான் வாழ்ந்தனர் அசோக் பிறந்த இரு வருடத்தில் அமெரிக்காவில் குடியேறினர். லீடங் ஆரோவில் தனது செல்வத்தை முழுவதும் செலவிட இருவருக்குள்ளும் சண்டை பெரிதானது. தமிழ்ச்செல்விக்கும் லீடங்குக்கும் இடையே இருந்த வேறுபாடுகள் ஆறு வருடங்களுக்கு முன் மிகப்பெரியதாக மாற இருவரும் பிரிந்து இருந்தனர்.
“உன் அம்மா என்னை விட்டுட்டு போனானு உனக்கு யாரு சொன்னா?”
அசோக் அவரைப் பார்த்தான்.
“நீ ஒருத்தன் தான் என்னையும் உன் அம்மாவையும் இணைச்சு வச்சிருக்கேன்னு நினைக்கிறாயா? உன் அம்மாவும் நானும் கொஞ்சக் காலம் தனியா இருக்க முடிவு பண்ணிருக்கோம். அவ என்கிட்ட திரும்பி வருவான்ற நம்பிக்கை அவ மனசு மாறும் ன்ற நம்பிக்கை என் காதல் எப்பவும் எனக்கு கொடுத்திருக்கு”
அவர் சொல்ல அசோக் அமைதியாகப் இருந்தான்.
“அசோக் ஜப்பான்ல ஒரு பழக்கமிருக்கு. உடைஞ்சு போன மண்பாண்டத்தை தங்கத்தை வைச்சு ஒட்டுவாங்க அதுக்கு அப்புறம் அது விலைமதிக்க முடியாத மண்பாண்டம் ஆகிடும். விரிசல் விழுந்து உடைஞ்ச மண் பாண்டம் தங்கத்தினால ஒட்டியிருக்கும். அது ஏன் தெரியுமா? உறவுகளோ மனுஷங்களோ அப்படித்தான் விரிசல் இருக்கும் வேறுபாடு இருக்கும் எதுவுமே பர்ஃபெக்ட்டா இருக்காது அசோக்! ஆனால் உடைஞ்சு போன மனசை ஒட்ட வைச்சது தங்கம்னா ஒட்டப்பட்டது அழகான உறுதியான மண்பாண்டம்னா அது விலை மதிப்பில்லாதது ஆகிடும்! ஒரு வேளை அதுவும் வெறும் மண் குப்பையாக இருந்தா மீண்டும் உடையும் ஸ்மிதா மாதிரி. நீ தங்கம்னு எனக்கு தெரியும் நீ ஒட்ட வைச்ச மனசு அழகானது உறுதியானது தான் னு என் பையன் வெதும்பி அழற கண்ணுல தெரியுது! நீ யோசி!”
லீடங் சொல்ல அசோக் மனமுடைந்து அழுதான்.
“அவ தங்கம் பா! நான் தான் மண் குப்பை ஆயிட்டேன். தனியா விட்டுட்டு போக மாட்டேன் னு வார்த்தையைக் கொடுத்துட்டு ஒரே ஒரு வார்த்தைல அவளை விட்டுட்டு வந்துட்டேன் பா! ஐ லாஸ்ட் ஹெர். ஐ அம் எ லூசர் பா”
அசோக் அழ லீடங் அவன் தோள் தட்டி அவனை ஆறுதல் படுத்தினார். மறுநாளில் இருந்து அசோக் தன்னுடைய ஆர்ட் கேலரிக்கு சென்று வந்தான். ஒரு வாரம் சென்றிருக்க அன்று அவனது தாய் தந்தையுடன் டின்னர் முடித்து வீடு வந்தான். அசோக்கை லீடங் அவனது வீட்டில் டிராப் செய்ய வந்திருந்தான் அசோக்கின் நண்பனும் லீடங் மருத்துவமனையில் வேலை செய்யும் மருத்துவனுமான செந்தில்நாதன்.
“என்னடா இங்க நிற்கிற?” லீடங் கேட்க
“பாஸ் நான் அசோக்கைப் பார்க்க வந்தேன். தள்ளுங்க”
செந்தில் சொல்லி விட்டு நேராக வீட்டுக்குள் வந்த அசோக்கிடம் வந்தான்.
“டேய் கௌதம் எனக்கு எப்படியாவது ஹெல்ப் பண்ணுடா?”
செந்தில் கேள்வியில் ஃப்ரிட்ஜில் தண்ணீரை எடுத்துக் குடித்துக் கொண்டு இருந்த அசோக் அவன் புறம் திரும்பினான்.
“என்ன உன் மச்சினிச்சிக்கு பாட சொல்லித் தரணுமா? என்னால முடியாது ஓடிப் போயிடு! அவ ஃபோன் Tinder னு டார்ச்சர் பண்றாடா!”
அசோக் சொல்ல செந்தில் பெருமூச்சு விட்டுப் பேசினான்.
“அதை விடுடா என் மாமியார் ஒரு இளிச்சவாயனை அவளுக்கு கட்டி வைக்க முடிவு பண்ணிருக்கு! இது வேறொரு ஹெல்ப் டா”
செந்தில் பேச அசோக் அவனை நோக்கினான்.
“நீ நாளைக்கு என் கூட இந்தியா வர்ற”
செந்தில் சொல்லிவிட்டு அசோக்கின் காதில் வந்து சில விஷயங்கள் பேச அசோக் முடியவே முடியாது எனத் தலையசைத்தான்.
“மச்சான் இதுக்கு மட்டும் நீ ஒத்துக்கலைனா நான் தற்கொலை பண்ணிக்கறது தவிர வேறு வழியில்லை மச்சான். ப்ளீஸ்டா”
செந்தில் அவன் காலில் விழ அசோக் அவனைப் பார்த்து பெருமூச்சு விட்டான்.
மறுநாள் இருவரும் அமெரிக்காவில் இருந்து கிளம்பி கோவை விமான நிலையத்திற்கு வந்தடைந்தனர். அங்கிருந்து சேவூர் எனும் கிராமத்திற்குச் சென்றனர். வழி நெடுகிலும் அசோக்கிடம் கெஞ்சிக் கொண்டே வந்தான் செந்தில். வண்டி ஒரு மிகப்பெரிய தூண்கள் முன்னிருந்த வீட்டில் நிற்க அசோக் கீழிறங்கினான். ஏதோ விசேஷம் நடக்க வேண்டும் பரபரப்பாக இயங்கிக் கொண்டு இருந்தது வீடு.
செந்தில் நேராக தன் வீட்டில் நுழைய அசோக்கிற்கு முதலில் நல்ல மரியாதை கிடைத்தது.
‘இந்த நாய் இதுக்கு அப்புறம் சொல்லப் போற பொய்ல இவங்க கொடுக்கிற மரியாதை’ அசோக் பெருமூச்சு விட்டு அமர்ந்திருக்க உள்ளிருந்து செந்திலின் தாய் பெருங்குரலெடுத்து அழுவது கேட்டது. சிறிது நேரத்தில் உள்ளிருந்து பெரியவர்கள் ஒவ்வொருவராக அசோக்கை வந்துப் பார்த்து செல்ல சிறிது நேரத்தில் செந்தில் வெளி வந்தான்.
“என்னடா வொர்க் அவுட் ஆச்சா?”
அசோக் கேட்க செந்தில் பேசினான்.
“இதுகளை எல்லாம் சமாளிச்சாச்சு! இன்னொரு பெரிய கண்டம் இருக்கு அதைக் கடந்துட்டோம் னா போதும். மச்சான் உனக்கு தமிழ் தெரியாத மாதிரியே மெயின்டைன் பண்ணுடா ப்ளீஸ்”
அசோக் தலையை ஆட்டி நீ திருந்தவே போறதில்லை என தனது கையில் இருந்த மொபைலை நோண்ட ஒரு பெரியவர் அவனை வெறித்துப் பார்த்துக் கொண்டு பேசினார்.
“ஏன்டா கொரியக்காரனாமே! கலிகாலம்! இதுக்கு தான் அமெரிக்கா அது இது னு புள்ளைக்குட்டிகளை அனுப்பறதில்ல சொன்னாக் கேட்டானா பெரியசாமி”
அவர் அவனை வெறித்துப் பார்க்க அசோக் சிறிது நேரம் எவரையும் நிமிர்ந்துப் பார்க்காது தலைக் குனிந்தே அமர்ந்து இருந்தான். அவன் பார்வை தாழ்ந்து இருக்க மஞ்சள் நிற பட்டுச்சேலை தழைய தழைய மென்பாதங்கள் தெரிய நிமிர்ந்தான். அசோக் முகத்தில் ஈயாடவில்லை எதிரே மாம்பழ நிற பட்டுச்சேலை சிகப்பு வண்ண பஃப் வைத்த ரவிக்கையில் தலை நிறைய மல்லிகைப்பூவோடு நின்றிருந்தாள் வைஷ்ணவி.
“இவள் தான் கல்யாணப் பெண்ணா?”
அசோக் திகைத்திருக்க வைஷ்ணவி அவனது திகைப்பானப் பார்வையை அலட்சியம் செய்து அறைக்குள் சென்றாள்.
கவிதை
பிரபஞ்சம் பிணைத்த
உயிர்களடி நாம்!
பிறப்பு எடுத்ததே
நானும் நீயும் நாமாக எனில்
பிரிவு எங்ஙனம் சாத்தியமாகும் சகியே!

