Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

13. Ambal - உயிர் உருகும் காதல் எனதே

உயிர் உருகும் காதல் எனதே…..12

உயிர் உருகும் காதல் எனதே….12

இரண்டு மாதங்கள் கடந்துவிட்டது வீரா,துர்கா திருமணம் முடிந்து.இன்னும் இருவருக்கும் ஏதுவும் சரியாகவில்லை தான் ஆனால் இருவருக்குள்ளும் நல்ல புரிதல் ஒன்று உருவாகியிருந்தது அதற்கு முக்கிய காரணம் துர்கா தான்.வீராவை எப்படியேனும் பேச வைத்துவிடுவாள்.இருவரின் உரையாடல்கள் பெரும்பாலும் பள்ளி பருவத்தை குறித்து தான் இருக்கும்.வீராவிற்கும் அந்த நாட்கள் எல்லாம் தந்தையுடன் கழித்த நாட்கள் என்பதால் அவனும் ஆர்வமுடன் பேச துவங்கியிருந்தான்.வாழ்க்கையில் இருவருக்கும் பல கசப்பான விடயங்களுக்கு பின் சிறு சிறு இனிய பொழுதுகளாக நகர துவங்கியிருந்தது.அதே போல இனிய காலை பொழுதில் வீரா கடைக்கு தயாராகி சாப்பிட வர,

“ஏன்டீ என் உயிரை எடுக்குற…..நீ போய் உட்காரு நான் எடுத்துட்டு வரேன்….”என்று கற்பகத்தின் சத்தம் சமையலறையில் இருந்து வர,

“போறேன் போறேன் கற்பூ…..ஆனா எனக்கு தோசை போதும்….”



Advertisement

“கொன்னுட்டேன் உன்னை இரண்டு தோசை எப்படி பத்தும்….நீ போய் உட்காரு நான் சுட்டு எடுத்துட்டு வரேன்…..”

“இதுக்கு மேல சாப்பிட்டா நான் கிளாஸ்ல தூங்கிடுவேன்…..”என்று சமையலறை வாயிலில் நின்று துர்கா கூறிக் கொண்டிருக்க,

“மருமகளும்,மாமியாரும் சண்டை போட்டு முடிச்சிட்டீங்கனா எனக்கு சாப்பாடு எடுத்துட்டு வாங்க நான் கடைக்கு கிளம்பனும்….”என்று வீரா மேஜையில் அமர்ந்தபடி கேட்க,

Advertisement

“நாங்க எங்க சண்டை போட்டோம்….சும்மா பேசிக்கிட்டு இருந்தோம்….அப்படி தான கற்பூ…..”என்று தோசையுடன் வந்த கற்பகத்திடம் துர்கா வம்பு இழுக்க,அவளின் தலையில் கொட்டியவர்,

Advertisement

“உட்கார்ந்து சாப்பிட்டு கிளம்பு உனக்கு ஏதோ முக்கியமான வேலை இருக்குனு சொன்ன தான….”என்று கூற,

“அச்சோ மறந்தே போயிட்டேன்…..”என்றவள் வேகமாக தோசை விழுங்க,

“பொறுமையா சாப்பிடு…..”என்றவன் தண்ணீரை ஊற்றி அவளின் புறம் நகர்த்தி வைக்க,

Advertisement

“டைம் ஆகிடுச்சு வீராசாமி……”என்றுவிட்டு அவள் நாக்கை கடிக்க,

“எவ்வளவு வாங்கினாலும் நீ திருந்த மாட்ட இல்ல….”என்றவனின் குரல் உறுமலாக மாற துவங்கியது.

“சாப்பிட்டன்னா கிளம்பு….அவனை ஏன் உரண்டை இழுத்துக்கிட்டு இருக்க….போ போ….நீ சாப்பிடு வீரா…..”என்றுவிட்டு மகனின் தட்டில் தோசை வைத்தவர் இன்னும் நகராமல் இருக்கும் மருமகளிடம்,

“சீக்கிரம் கிளம்பேன்டீ…..அவன் தான் முறைக்குறான் தெரியுதுல்ல….”என்று கண்ணை காட்டிவிட்டு செல்ல,அதற்கெல்லாம் அசருபவளா துர்கா,

“ஓகே புருஷ்….நாம ஈவினிங் இந்த சண்டையை கண்டினியூ பண்ணுவோம்…..இப்ப டைம் இல்ல….”என்று அவன் அடுத்து எதும் செய்யும் முன் ஓடிவிட,வீரா அருகில் இருந்த தண்ணீரை எடுத்து வீசியிருந்தான்.அது சுவற்றில் சிந்தி சிதறியது.

“கடவுளே…..இதுக போடுற சண்டையில என் பாடு தான் திண்டாட்டம் ஆகுது…..நீயும் கொஞ்சம் பொறுமையா தான் இரேன்டா….”என்று திட்டியபடி கற்பகம் அவனிற்கு தோசையை வைத்துவிட்டு சிந்திய நீரை துடைக்க,

“என்னையே அடக்குங்க….உங்க மருமகளை எதுவும் சொல்லிடாதீங்க….”

“அவளையும் தான் திட்டுறேன்….”

“யாரு நீங்க….அதான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி பார்த்தேனே மருமகளை காப்பாதிவிட்டத….சும்மா சொல்லிக்கிட்டு இருக்காதீங்கமா…..எல்லாம் நீங்க கொடுக்குற இடம் தான்….வர வர ரொம்ப பண்ணிக்கிட்டு இருக்கா வாங்க போறா என்கிட்ட பாருங்க…..”என்று கத்திவிட்டு வீரா போக,

“மக்கும் இதுக இரண்டுமே இப்படி சின்ன பிள்ளையாட்டம் சண்டை போட்டுக்கிட்டு கிடந்தா நான் எப்ப என் பேர புள்ளைய பார்க்க….இது எப்ப தான் மறுமோ…..”என்று ஒரு சிறு கவலை மனதின் ஓரத்தில் இருந்தாலும் முன்பு போல ஓய்ந்து அமர்வது இல்லை கற்பகம்.அவரை அதிகம் யோசிக்கவிடாமல் செய்து கொண்டிருந்தாள் துர்கா.

“என்ன முணுமுணு ஏதோ சொல்லிக்கிட்டு இருக்கீங்க….”என்றபடி வீரா வர,

“ஒண்ணுமில்ல சாமி நீ கிளம்பு….”

“வர வர அவகூட சேர்ந்து நீங்களும் மாறிக்கிட்டு வரீங்கமா….சரியில்லை……”

“அடேய்….இது என்னடா நீ இப்படி மல்லுக்கு நிக்குற….போ போய் வேலையை பாரு….”

“நான் போறது இருக்கட்டும் உங்க மருமக இன்னும் கிளம்பாம என்ன பண்ணிக்கிட்டு இருக்கானு பாருங்க…..”என்று வாசலை அவன் காட்டிவிட்டு செல்ல,

“இவ இன்னும் போகமா என்ன பண்ணிக்கிட்டு இருக்கா….இன்னைக்கு என்னை ஒருவழியாக்கம இரண்டும் போகாது போலவே…..”என்று திட்டிக் கொண்டே அவர் வாசலிற்கு வர,துர்கா தன் இரு சக்கர வாகனத்தை உதைத்தபடி நின்று கொண்டிருக்க,

“அடியே…இன்னும் கிளம்பாம என்ன பண்ணிக்கிட்டு இருக்க…”

“நான் என்ன பண்ணேன்…..என் வண்டி தான் சதி பண்ணுது…..”

“அவன் வேற கத்திக்கிட்டே இருக்கான்….சீக்கிரம் என்னானு பாரு….”என்றவரின் குரல் இங்கு இருந்தாலும் கண்கள் என்னவோ உள்ளே தான் இருக்க,

“ஏன் அத்த இப்படி பயப்படுறீங்க….”என்றவளின் விளிப்பில் கற்பகம் அதிர்ந்து திரும்ப,எதிர் வீட்டில் இவர்களை பார்த்தபடி நின்று கொண்டிருந்தார் பார்வதி பாட்டி.அவரின் பொழுதுபோக்கே யார் வீட்டில் என்ன நடக்கிறது என்று பார்ப்பது தான்.

“ஓ ஓ அதுதானா விஷயம்….”என்றவிட்டு துர்காவிடம்,

“சரி சரி சீக்கிரம் கிளம்பு….”என்று கூறிக் கொண்டிருக்கும் போது,வெளி வந்த வீரா இருவரையும் பார்த்துவிட்டு தன் வாகனத்தை நோக்கி செல்ல,

“அத்த வண்டி ரிப்பேர்….உன் பிள்ளையை கொண்டு போய்விடு சொல்லேன்…”என்று மாமியாரின் காதை கடிக்க,

“இதை அவன் கிட்ட வம்பு இழுக்குறதுக்கு முன்னாடி யோசிச்சு இருக்கனும்…..இப்ப சொன்னா கேட்பானு கூட தெரியலையே…..இந்த கிழவி வேற இங்கயே தான் பார்த்துக்கிட்டு நிக்குது…..உங்களோட போராடியே என் வாழ்க்கை போயிடும் போல….”என்று புலம்பிக் கொண்டே மகனிடம் செல்ல,

“அச்சோ அத்த புலம்பா போயேன்….”என்று சிரித்துக் கொண்டே கூறியவளுக்கு கற்பகத்தை நினைத்து பாவமாகவும் இருந்தது.

“என்ன காத்து என் பக்கம் அடிக்குது…..”என்று தன் வண்டியை துடைத்துவிட்டு நிமிர,

“அது…..”என்றவரின் குரலே என்னவோ போல இருக்க,வீராவும் அவரை மேலும் சோதிக்காமல்,

“வர சொல்லுங்க….”என்றுவிட்டு தன் வண்டியை நகர்த்த,கற்பகம் துர்காவை கட்டை விரலை காட்ட,துர்காவும் அதே போல செய்ய,

“என்னென்ன சேட்டை எல்லாம் எங்க அம்மாக்கு சொல்லிக் கொடுத்திருக்கா  பாரு….”என்று சிரித்துக் கொண்டே அவளை ஏற்றிக் கொண்டு புறப்பட்டான்.துர்கா அமைதியாக வர,

“எத்தனை தடவை உன்கிட்ட சொல்லியிருக்கேன்….அப்படி கூப்பிடாதனு….காலையிலேயே பிரச்சனை பண்ணி அம்மாவையும் படுத்துற….”என்று வீரா கேட்க,

“இன்னைக்கு நிஜமா வாய் தவறி தான் வந்திருச்சு….சாரி….”என்றுவிட,வீரா திகைத்துவிட்டான்.இதே வீடு என்றால் அவனை ஒருவழியாக்கிவிட்டு தான் சென்றிருப்பாள்.

“டீச்சர் மோடுக்கு வந்துட்டியா….”

“ம்ம்….அப்படினு இல்ல….நான் சும்மா….இல்ல வேணாம்….இதை நாம அப்புறமா  பேசலாம்….”என்றுவிட்டு தன் பள்ளி வாயிலில் இறங்கி கொள்ள,வீரா எதுவும் சொல்லவில்லை தலையாட்டிவிட்டு சென்றுவிட்டான்.சில நேரங்களில் இப்படி தான் ஏதோ கூறவந்து சொல்லாமல் சென்றுவிடுவாள்.வீராவும் அது போல சமயங்களில் வேறு எதுவும் கேட்கமாட்டான்.

“என்ன பெரிம்மா….இப்ப தான் சாப்பிட்டுக்கிட்டு இருக்க….”என்று கேட்டபடி நர்மதா வர,

“எல்லாம் வழக்கம் போல தான்….இதுக சண்டை போட்டுக்கிட்டு என் உயிரை வாங்குது….”என்று கூறிக் கொண்டே பாத்திரங்களை எடுத்து வைக்க,

“சரி விடு எல்லாம் சரியாகிடும்….”என்று நர்மதாவும் அவருக்கு உதவ,

“இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி இருக்க போகுதுங்கனு தெரியலை…..இந்த பொண்ணும் சும்மா இருக்க மாட்டேங்குது……அவனுக்கு கோபம் அதிகமா வருது….என்ன பண்றதுனே தெரியலை….”

“சரி விடுங்க….எல்லாம் நல்லது நடக்கும்….வீரா முன்ன மாதிரி இல்ல பார்த்தீங்களா….இப்ப எல்லாம் பேசுறான்….அதுவே நல்ல முன்னேற்றம் தான்…..”

“என்னவோ நீ தான் சொல்லுற….”

“கண்டிப்பா மாறும்….”என்ற நர்மதாவின் வார்த்தைகள் பலிக்கும் நாட்கள் வெகு அருகில் வந்து கொண்டிருந்தது.

அன்று வீரா வீட்டிற்கு வருவதற்கு நேரம் எடுத்துவிட,துர்கா தான் அவனிற்காக அமர்ந்திருந்தாள்.

“ஏன் நீ உட்கார்ந்திருக்க….நான் சாப்பிட்டுக்க மாட்டேனா….”என்று கேட்டபடியே தன் அறைக்குள் நுழைந்தவன் சில மணித்துளிகள் கழித்து தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வெளியில் வர,

நான் சாப்பிட்டு வரேன் நீ போய் படு….”

“அது எனக்கு தெரியாதா…..நான் உங்களுக்காக உட்கார்ந்து இல்ல….எனக்கு கொஞ்சம் வேலை இருந்துச்சு அதான் அதை பார்த்துட்டு இருந்தேன்…..சாப்பிடுங்க….”என்றுவிட்டு அவள் எழ,அப்போது தான் அவள் கையில் இருந்த விடைதாள்களை பார்த்தான்.விடைதாள்கள் திருத்தி,சரிபார்த்துக் கொண்டிருந்திருப்பாள் போலும்.துர்கா அனைத்தையும் எடுத்து தன் பையில் வைத்துவிட்டு வரும் போது வீரா சாப்பிட்டு முடித்திருந்தான்.இருவரும் சேர்ந்து அனைத்தையும் ஒதுங்க வைத்துவிட்டு அறைக்குள் வர,

“ஆமா காலையில ஏதோ சொல்லுறேன் சொன்ன….”என்று வீரா கட்டிலில் அமர்ந்தபடி கேட்க,

“என்ன சொன்னேன் நியாபகம் இல்லையே….”என்றவளும் படுப்பதற்கு தயாராக,

“ம்ம் என் பேரை மாத்தி கூப்பிடாதனு சொன்னதுக்கு ஏதோ சொல்லுறேன் சொன்ன….”என்று நியாபகபடுத்த,

“ஆமா மறந்துட்டேன்….அது பெருசா ஒண்ணுமில்ல நீங்க என்கிட்ட எப்போதும் கடுகடுனு தான் ஸ்கூல்ல பேசுவீங்க….அப்ப என் பிரண்ட் தான் சொல்லுவா இந்த அண்ணாவை பார்த்தா அப்படியே என் வீட்டு வீரன் சாமி மாதிரி இருக்குனு…..அதை நான் வீராசாமி மாதிக்கிட்டு உங்களை மனசுக்குள்ள அடிக்கடி கிண்டல் பண்ணுவேன்…..ஆனா உங்களை ஹெர்ட் பண்ணனும் செய்யல….சாரி…..”என்று கூற,

“இந்த பேருக்கு இப்படி விளக்கமா….எனிவே இனி கூப்பிட்ட அவ்வளவு தான்….”என்று மிரட்டல் போல கூற,

“முயற்சி பண்ணுறேன்….”என்றுவிட்டு படுத்துவிட,வீரா முறைத்துக் கொண்டு நின்றான்.சற்று நேரம் வரை படுத்திருந்தவள் அவன் படுக்காமல் நின்றிருப்பதை உணர்ந்து,

“என்ன நின்னுக்கிட்டே இருக்கீங்க போய் கீழ படுங்க….எனக்கு தூக்கம் வருது….”

“உன்னை ஒருநாள் வெளுக்க போறேன் பாரு….”

“அச்சோ அணைக்கவே முடியலையாம்….இதுல….”என்றுவிட்டு சிரித்துவிட,வீராவின் முகம் நொடியில் மாறிவிட்டது.அவள் ஏதோ சாதரணம் போல் தான் கூறினாள் ஆனால் அது அவனின் மனதை காயப்படுத்திவிட,

“சாரி….நான் அப்படி…..”

“வேணாம்…..நான் கேட்கல…..”என்றுவிட்டு தலையணை எடுத்து கீழே போட்டு படுத்துவிட,துர்காவிற்கு தான் அய்யோ என்றாகியது.

“வீரா….வீரா….”என்று அழைக்க அவனிடம் அசைவில்லை.சிறிது நேரம் கழித்து வீராவின் பக்கத்தில் துர்கா படுக்க வர,

“ஏய்…..”என்று எழுந்துவிட்டான் வீரா.என்னதான் அவளிடம் ஒரு நண்பன் போல பழகினாலும் அவளை இன்னும் அவன் மனைவியாக பார்க்கவில்லை அதனாலோ என்னவோ இன்று துர்கா பேசியதும் மனதை பிசைய அமைதியாக படுத்துவிட்டான்.ஆனால் அவனின் மனைவி விட்டானே பார் என்று அவனை படுத்த தொடங்கியிருந்தாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!