Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Vannam Theda Vaarayo

தேடல் 13

     ஜீவா காலையில் அமைதியாகவே படுக்கையில் அமர்ந்திருந்தவன் நேற்று சூர்யாவிடம் கேட்ட கேள்விக்கு அவன் கூறிய பதிலை ஒருமுறை நினைவு படுத்தி பார்த்தான்..

இதுநாள் வரை சுமி என ஒருவள் தனக்கு தெரிந்ததாக‌ அவன் காட்டிக் கொள்ளவே இல்லையே என்று நேற்று இரவு சூர்யா கூறிய பதிலை நோக்கினான்..

நேற்று இரவு காரில்…

சுமி மேடம்க்கு சூர்யா எப்படி தெரியும் அதுவும் அவனோட பிறந்தநாள் முதற்கொண்டு தெரிஞ்சு வச்சிருக்காங்க இப்படி ஒரு நட்பு இருந்ததாக இதுநாள் வரை சூர்யா சொன்னதே இல்லையே என்று யோசித்து கொண்டு இருக்க…



Advertisement

இங்கே சூர்யா ஜன்னல் வழியாக வரும் அந்த குளிர் காற்றை கூட இரசிக்க முடியாமல் அவன் சிந்தனை முழுவதும் நந்தினியின் கைகளை பற்றி இருந்த உதய் மீதும் கையில் மது பாட்டில் வைத்திருந்த சுமியின் மீதும் இருந்தது…

இவளுக்கு என்ன ஆச்சி எதுக்கு இவ இப்படி மாறிட்டா மதுவோட ஸ்மெல் கூட ஆகாதே அவளுக்கு அப்புறம் எப்படி அவ இப்படி மாறுனா அதுவும் இல்லாம இந்த உதயின்றவன் யாரு நந்து கைய வேற பிடிச்சிருந்தான் அவுங்க ரெண்டு பேருக்கும் வேற சுத்திலாம் போடுறாங்க என்னடா இங்க நடக்குது ஒன்னுமே புரிய மாட்டேங்கிதே என்று மனதில் புலம்பிக் கொண்டு இருக்க

சூர்யா சூர்யா என்று ஜீவா கத்த சுயநினைவுக்கு வந்தான்..

Advertisement

எதுக்கு டா இப்போ என்ன கூப்பிட்ட என்றதற்கு இல்ல டா அண்ணா ரொம்ப நேரமா உன் ஃபோன் அடிக்கிது உனக்கு அது கேட்டுச்சோ இல்லையோ அதான் உன்ன கூப்பிட்டேன் என்றான்..

Advertisement

சாரி நான் கவனிக்கல என்றவன் மொபைலை எடுத்து பார்க்க சிவசங்கரன் அழைத்திருந்தார்.

உடனே தன் தந்தைக்கு அழைப்பு விடுக்க சிறிது நேரத்திலே அழைப்பை உயிர்பித்தார்.

ஹலோ அப்பா சொல்லுங்க பா எதுக்கு கூப்பிட்டுங்க என்க சூர்யா ஜீவாவும் நந்து குட்டியும் எப்படி இருக்காங்க என்க அவனுக்கு அதிர்ச்சி ஏற்பட்டாலும் அதை பெரிது படுத்தாம அப்பா நான் இங்க திருச்சிக்கு ஒரு மீட்டிங்காக வந்திருக்கேன் கோவைக்கு இல்ல பா என்றான்.

Advertisement

[the_ad id=”6605″]

டேய் நான் உன் அப்பா டா எனக்கு தெரியாதா நீ எங்க பொய்யிருக்கன்னு உங்க அம்மாவ வேன்னா நீ ஏமாத்தலாம் ஆனா என்னா ஏமாத்த பாக்கிறீயாக்கும் என்றே சொல்லிட அப்பா அதெல்லாம் ஒன்னும் இல்ல நான் திருச்சில தான் இருக்கேன் என்றவன் ஜீவாவை கவனித்தான் அவன் ஏதோ கேட்க வரவும் கேட்க தயங்குவதையும் கண்டவன் அவனையே பார்த்திருந்தான்.

ஃபோனில் சிவசங்கரன் சொல்லு டா ஜீவாவும் அம்முவும் எப்படி இருக்காங்கன்னு என்று கேள்வி கேட்க காதில் வாங்கினானோ இல்லை நல்லா இருக்காங்க என்ற பதிலை மட்டும் அளித்து தொடர்பை துண்டித்தான்.

ஜீவா என்று அழைக்க அவன் அவனது சிந்தையில் மனதை சுழற்ற விட டேய் ஜீவா அறிவு கெட்டவனே என்று கூறியதும் சொல்லு டா அண்ணா என்க அவன் தலையில் அடித்து கொண்டு என்னத்தையோ என்கிட்ட சொல்ல வர அப்புறம் சொல்ல வேணாம்னு நினைக்கிற என்ன பிரச்சினை உனக்கு என்றே கேட்க ஜீவா திருதிருவென முழிக்க ஒழுங்கா என்ன சொல்ல நினைக்கிறன்னு சொல்லு என்றான்..

நான் ஒன்னும் உன்கிட்ட சொல்ல நினைக்கல கேள்வி கேட்க தான் நினைக்கிறேன் என்றான் படார் என்று…

சொல்லு என்ன கேக்க நினைக்கிற என்றான் புருவத்தை உயர்த்தி…

உனக்கும் சுமி மேடம்க்கும் என்ன சம்பந்தம் அவுங்களுக்கு எப்படி உன்ன தெரிஞ்சது அதுவும் அந்த நிலையிலும் உன்ன கரக்டா கண்டு பிடிச்சிருக்காங்க என்றே கேட்க..

சூர்யா மௌனமாக இருக்க சொல்லு டா அண்ணா என்க அவன் வெறும் சுமி என்னோட ஃபிரண்ட் என்றே சொல்ல

இது நம்புற மாதிரியே இல்லையே நீ பொண்ணுங்க கூடவே பேச மாட்டியே நீ பேசுற பொண்ணுங்கன்னா அது நம்ம வீட்டு பொண்ணுங்க தான் இதுல எப்போ சுமி மேடம் உனக்கு ஃபிரண்ட் ஆனாங்க என்றே கேள்வி கேட்க நான் ஒரு ப்ராஜெக்ட் காக லண்டன் போன அப்ப தான் ஃபிரண்ட் ஆனேன் .அங்க இருக்கிற வரைக்கும் ஃபிரண்டா இருந்தோம் அதுக்கப்புறம் நான் இந்தியா வந்துட்டேன் அப்பறம் நான் அவள பார்க்கவும் இல்ல பேசவும் இல்லை என்றே முடித்தவன் இருக்கையில் தலையை சாய்த்து கண்களை இருக்கே மூடிக் கொண்டான்…

இதனை எல்லாம் சிந்தித்து கொண்டிருந்தவனின் சிந்தனையை கலைத்தான் ஹரிசரன்.

இன்னைக்கு உன்னோட டேர்ன் தான் ரூம்ம கூட்டிறது நீ பாட்டுக்கு எந்திருச்சதுலர்ந்து நீ சும்மாவே இருக்க நானும் பார்த்தேன் நீ செய்வன்னு நீ இந்த இடத்த விட்டு எந்திரிக்கிர மாதிரி தெரியல அதான் நானே உனக்கு ரிமமமெம்பர் பண்ணலாம்னு தான் என்று கூறி முடித்தான்.

அவனை முறைத்த ஜீவா என்ன லுக்கு எனக்கு டஸ்ட் அலர்ஜி இருக்கு அதான் சீக்கிரமா கூட்டின்னா எனக்கு எந்த பிரச்சனையும் இருக்காது ல அதுனால தான் என்றவன் அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்…

அந்த இடத்தை விட்டு அமைதியாக எந்திரித்த ஜீவா யோசனையை தூரத்தி விட்டு அந்த அறையை கூட்ட தொடங்கினான் ..

கார்த்திக் நந்தினி இல்லாமல் போனால் யாரிடம் கேட்பது அவருக்கு போன் செய்தால் ஸ்விட்ச் ஆஃப் என்றே வருது என்று தவித்து இருந்தான்.

அந்த நேரம் பார்த்து வெங்கட் உள்ளே வர இவனிடமாவது கேட்கலாம் என்று நினைத்த கார்த்திக் அவனிடம் கேட்கவும் செய்தான்..

வெங்கட் நர்ஸ் நந்தினிக்கு என்ன ஆச்சி ஏன் இப்போல்லாம் அவுங்க வேலைக்கே வரது இல்ல அவுங்களுக்கு எதாவது ப்ராப்லமா என்று கேட்க

கார்த்திக்கை ஏற இறங்க பார்த்தவன் அவனது தவிப்பை மனதில் பதித்து கொண்டு எதுக்கு கேக்குறீங்க கார்த்திக் என்று கேட்க சும்மா தான் வெங்கட் நாம சென்னை வந்ததுல இருந்து நான் பாக்கவே இல்ல மிஸ். கீர்த்தி தான் எனக்கு அசிஸ்டன்ட் டா இருக்காங்க அதுனால தான் உங்க கிட்ட கேட்டேன் என்றான்..

எனக்கு தெரியல கார்த்திக் ஆனா அவுங்க வேலைய விட்டு பொய்ட்டதா என இங்க இருக்கிற மத்த ஸ்டாப்ஸ் சொன்னாங்க என்றான் அவன் முகத்தை ஆராய்ந்த படி..

அவன் முகம் அதிர்ச்சியில் நெற்றி சுருங்கியது . இதை எல்லாம் மனதில் பதித்து கொண்டான்..

[the_ad id=”6605″]

சரி வெங்கட் என்றவன் அதிர்ச்சியை வெளி படுத்திக்கொள்ள விரும்பாமல் வேலையில் மூழ்கிக் கொள்ள நினைத்து லேன்லைன் மூலமாக கீர்த்தியை அழைத்தான்.

கீர்த்தி உள்ளே வரவும் வெங்கட் அவன் அமர்ந்திருந்த இருக்கையில் இருந்து எழுந்து சரி கார்த்திக் நான் போய் வேலைய பாக்கிறேன் என்று வெளியே சென்றான்..

கீர்த்தி அமைதியாக இருக்க வெங்கட் வெளியே சென்றதும் சொல்லுங்க டாக்டர் என்க பேஷனட்ஸ் யாராவது இருந்தா அனுப்பிவிடுங்க என்றான்.

அவளும் சரிங்க சார் என்று கூறி விடை பெற்றாள்.

உதய் ஒரு பிராஜெக்ட் விஷயமாக வெளியூர் செல்ல இருப்பதால் அதற்கான துணிகளை அடுக்கிக் கொண்டு இருந்தான்.

சுமி அறைக்குள்ளே முடங்கி கிடந்தாள். காலை உணவை கூட தவிர்த்து விட்டாள். மதியம் உணவையாவது தரலாம் என்று வந்த சுமதியை சுமி நன்றாக திட்டி அனுப்ப இதை கண்ட நந்தினி சுமதியிடம் சென்று அக்கா அந்த தட்ட இங்க கொடுங்க நான் கொண்டு போய் கொடுக்கிறேன் என்க அவளோ அதெல்லாம் வேண்டாம் மா சுமி மேடம் உன்னையும் திட்டுவாங்க எனக்கு இந்த திட்டெல்லாம் பழகி போச்சி உனக்கு எதுக்கு இந்த தேவை இல்லாத வேலை என்று அந்த இடத்தை விட்டு நகர எத்தனிக்க பரவால குடுங்க நான் பாத்துக்கிறேன் என்று சுமதியிடமிருந்து தட்டை வாங்கிக் கொண்டு சுமியின் அறைக்கு சென்றாள்…

சுமி மேடம் கதவ திறங்க மேடம் இப்படி நீங்க சாப்பிடாம ரூம் குள்ளேயே அடஞ்சி இருந்தா எதுவும் ஆகாது மேடம் உங்களுக்கு என்ன பிரச்சனைன்னு எனக்கு  தெரியல ஆனால் உங்களுக்குள்ள ஏதோ பிரச்சினை இருக்குன்னு மட்டும் தெரியுது ஆனா அதுக்காக நம்ம வயிற நாம காயப் போட விட கூடாது எதுவா இருந்தாலும் தைரியமா இருக்கனும் மேடம் கதவ திறங்க என்றவள் கதவை தட்ட வேணாம் மா வாங்க போகலாம் அவுங்க இப்போ கதவ திறந்தாங்கன்னா உங்கள சும்மா விட மாட்டாங்க என்று கூறி அழைக்க இல்ல சுமதி அக்கா என்னால வர முடியாது அவுங்க நேத்திலற்ந்து சாப்பிடாம இருக்காங்க என்று கூறி மீண்டும் கதவை தட்ட ஆயத்தமாக அதற்குள் சுமியே கதவை திறந்தாள்…

அய்யோ இவ வேற தொறந்துட்டாலே இன்னைக்கு இந்த நந்தினினால நான் திட்டு வாங்கன்னும்மா எல்லாம் என் நேரம் டா என்று மனதினுள் சுமதி புலம்பிய படியே நடப்பவற்றை வேடிக்கை பார்க்க நந்தினி அவளின் நிலமையை கண்டு பதறினாள்…

அய்யோ மேடம் என்றவள் மயங்கி சரியும் நேரம் அவளை தாங்கிக் கொண்டாள்..

சுமியை அழைத்து வந்து படுக்கையில் படுக்க வைத்தவள் பக்கத்தில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து முகத்தில் தெளிக்க  சுமியிடம் சிறிது அசைவு தெரியவே நந்தினிக்கு நிம்மதியாக இருந்தது..

அதன் பின் அவளை கை தாங்களாக அமர வைத்தவள் சுமதியிடமிருந்து வாங்கி அவளுக்கு சாப்பாட்டு ஊட்டி விட கையை அவள் புறம் சாப்பாட்டை கொண்டு வர அதனை சமி மறுக்க அதனையும் மீறி அவளுக்கு ஊட்டி விட்டாள் நந்தினி .

அதன் பின் அவள் வாயை துடைத்து விட்டு தட்டை எடுத்துக் கொண்டு செல்ல எத்தனிக்க அவளது கையை பிடித்து தடுத்து நிறுத்தினாள் சுமி.

அவளை என்னவென்று நந்தினி பார்வையால் கேட்க கொஞ்ச நேரம் என்கூட இருக்கியா என்றே குழந்தை போல் கேட்க அவளது தவிப்பை உணர்ந்த நந்தினி சுமதியிடம் தட்டை கொடுத்து அனுப்பி விட்டு சுமியின் பக்கத்தில் அமர்ந்துக் கொண்டு சொல்லுங்க மேடம் என்க என்ன இந்த மேடம்ன்னு சொல்லிலாம் கூப்பிட தேவை இல்லை எனக்கு ஏதோ ஒரு மாதிரியா இருக்க  என்றாள்..

நீங்க தான மேடம் உங்கள மேடம்ன்னு தான் சொல்லி கூப்பிடனும்னு அன்னைக்கு சொன்னிங்க என்க அத மறந்துடு இனி என்ன அக்கான்னு சொல்லியே கூப்பிடு எனக்கு உன்ன பாக்கும் போதெல்லாம் எங்க அம்மா ஞாபகம் தான் வருது என்றவள் என்னோட அத்தை எப்போதும் இப்படி தான்  நம்ம வயிற நாம காயப் போட விட கூடாது நாம சாப்பிடாம இருக்கிறதுனால அந்த பிரச்சினை ஒரு முடிவுக்கு வராது இத புரிஞ்சி  எதுவா இருந்தாலும் தைரியமா இருந்து அதை சந்திக்கனும்னு   சொல்லுவாங்கன்னு எங்க அம்மா நிறைய தடவ சொல்லியிருக்காங்க . நீயும் அதே மாதிரி தான் சொல்ற என்றவள் உன் மடியில கொஞ்சம் படுத்துக்கவா என்று கேட்க நந்தினி இன்முகத்துடன் படுத்துக்கோங்க அக்கா என்றாள்..

சுமியும் நந்தினியின் மடியில் படுத்துக் கொண்டாள்.. நந்தினியின் மடியில் அவளது அன்னையின் பாசத்தை அவளால் உணர முடிந்தது. நந்தினி தலையை வருடி கொடுக்க சுமி பல நாள் கழித்து இன்று அமைதியாக உறங்கி போனாள்..

அவளை படுக்கையில் நன்றாக படுக்க வைத்தவள் கீழே சென்றாள்.எதர்ச்சியாக இதனை பார்த்த மஹாலிங்கத்தின் கண்களில் கண்ணீர் பெருக்கெற்றது அவரது தங்கையை நினைத்து….

ஜான்வி குட்டி ஹாலில் அமர்ந்திருக்க நந்தினிக்கு அவளுடன் சேர்ந்து சிறு பிள்ளையாய் மாறி விளையாட தொடங்கினாள்…

இரவு போல் உதய் அவனது அறையில் இருந்து கிளம்பி மாடியில் இருந்து கீழே வர இவன் வரதை கவனியாது நந்தினி கூறிக்கொண்டிருந்த கதையை கேட்டுக் கொண்டிருந்தனர் இரு குழந்தைகள் ஜான்வி மற்றும் மரகதம் முதுமையில் ஒரு நிலையில் அவர்களும் குழந்தைகள் எனவே போற்றப் படுவர்..

உதய் மெதுவாக வந்து அமைதியாக டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிட தொடங்கினான். அவன் சாப்பிட்டு முடிக்கும் வரை உதயை கண்டு கொள்ள வில்லை .

மஹாலிங்கம் வந்து உதய் பக்கத்தில் அமர்ந்து உதய் என்று கூப்பிடும் வரை இப்படி ஒருத்தன் இருக்கான் என்று மூவரும் கண்டு கொள்ள வில்லை…

கிளம்பிட்டியா உதய் என்றே மஹாலிங்கம் கேட்க ஆமா அங்கிள் கிளம்பிட்டேன் பத்து நிமிஷத்துல கிளம்பிடுவேன் என்று கூற மரகதம் தன் வீல் சேர் உதவியால் உதயிடம் வந்தவள் பாத்து பத்திரமா பொயிட்டு வா மா என்றார் அக்கறையாக…

அவன் கிளம்பும் நேரம் நந்தினி உதய்யை பார்த்து நான் கொஞ்சம் உங்க கிட்ட தனியா பேசலாமா என்று கேட்க டைம் பார்த்து சரி என்றவன் இருவரும் வீட்டில் வெளியே இருந்த பூங்காவிற்கு வந்தனர்..

உதய் சேர் நான் ஒன்னு சொல்றேன்னு கோப படாதீங்க சார் சுமி மேடம்க்கு என்ன பிராப்ளம்னு தெரியல அவுங்க ரொம்ப பிப்ரஷன்ல இருக்காங்க அவுங்க இப்படியே இருந்தா பைத்தியமாக கூட வாய்ப்பு இருக்கு. சோ கொஞ்ச நாளைக்கு அவுங்க இருக்கிற இடத்த சேஞ்ச் பண்ண பாருங்க சார் இதுனால அவுங்க டிப்ரஷன் கொஞ்சம் கொறையலாம்  அசே அ நர்ஸா இத சொல்றேன் அப்புறம் அது உங்க இஷ்டம் என்றாள்…

அவள் கூறியதை யோசித்தவனுக்கு நந்தினி கூறுவது சரியாக போக சரி நான் ஊருக்கு பொயிட்டு வந்ததுக்கு அப்புறம் எதாவது டூர் போல கூட்டிட்டு போறேன் என்றவன் அடுத்த நொடி அந்த இடத்தை விட்டு சென்றிருந்தான்…

[the_ad id=”6605″]

அவளும் சிறிது நேரத்திலே வீட்டிற்குள் வந்து சேர்ந்தாள். உதய் கிளம்பி காரில் ஏறிச் சென்றான்…

இரண்டு மணி நேரத்தில் கோவை வந்தடைய அதன் பின் சிங்கப்பூர் செல்லும் ஃபிளைட் ஏறி பறந்தான்…

சூர்யாவும் கோவையிலிருந்து சென்னை செல்லும் பேருந்தில் ஏறினான்.

ஹாஸ்பிடல் விட்டு வேகமாக வீட்டிற்கு வந்த வெங்கட் ஸ்விட்ச் ஆகி இருந்த ஃபோனிற்கு சார்ஜ் போட்டு விட்டு ரெஃபிரெஷ் ஆக சென்றான்..

சிறிது நேரத்திலே வந்தவன் தன் மொபைலை உயிர்பித்து உதய்க்கு கால் பண்ண அது ஸ்விட்ச் ஆஃப் என்றே வர கடுப்புடன் ஃபோனை கீழே வைத்து தன் உற்ற தோழலலான  உதய்யை கோபம் தீரும் வரை திட்டி தீர்த்தவன் கால் மீ என்று மெசேஜ் செய்து விட்டு உறங்க சென்றான்….

தேடல் தொடரும்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!