Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uyir Niraigiraen Azhaga

உயிர் நிறைகிறேன் அழகா-22

அத்தியாயம்-22

கண்ணில் நெருப்பு பொறி பறக்க நின்ற மீனாவின் முன், கண்ணீர் வழிய நின்றாள் மதி..“சொல்லு..எங்க போன இத்தனை மாசமா??”

“…”

“நான் மெடிக்கல் கேம்ப்க்கு போன ஒரு மாசம் இடைவெளிலே, அப்பா,அம்மா கிட்ட, சர்வீஸ் ஹெல்ப்ன்னு ஏதேதோ கதை விட்டுட்டு, எங்க போய்ட்டு வர..

அது யாருடி?? எனக்கு தெரியாம உனக்கு உயிர் தோழி..??அவளுக்கு உதவ, நீ போனியா..??



Advertisement

இதுக்கு தான், பெங்களுர்ல வேலை பார்க்க போறேன்னு கிளம்பி வந்தியா??எத்தனை போன் பண்ணேன்..பெங்களுர்ல இருக்குற மாதிரியே கதை சொல்லிட்டு..இருக்குற இடம் சொல்லாம, இத்தனை மாசம் ஓட்டி இருக்க..”

“…”

“வாயை திறந்து பதில் சொல்லு டி..இல்ல, இன்னொரு அறை வேணுமா??”

Advertisement

“அத்தை வீட்டுக்கு போனேன்..”

Advertisement

“அது யாரு டி..??புது அத்தை..”

அவளை நிமிர்ந்து பார்த்தவள்,
“என் அத்தை,மரகதம்..”

“ஓ..புது உறவா??”

Advertisement

“..”

“அங்க எதுக்கு போன??”

“போக வேண்டிய சூழல்..”

“அது என்ன சூழல், சொல்லு தெரிஞ்சுக்குறேன்..”

“மதுவை, அப்பா அங்க போக சொல்லி இருக்கார்..அவ, என்னை போக சொன்னா..??”

“அவளை போக சொன்னா, நீ ஏன் போன??நீ பண்ணத்துக்கு பெயர் என்ன தெரியுமா??ஆள் மாறாட்டம்..
சட்டப்படி குற்றம்..”

“தெரியும்..”

 

[the_ad id=”6605″]

 

 

“தெரிஞ்சும் ஏன் போன??அவ அங்க போறா, இல்ல என்னவோ பண்ணுறா.. நீ ஏன் போன??”

“அவ,  நான் அங்க போக மாட்டேன்..நீ போ..இல்லைனா, நான் போகலைன்னு தெரிஞ்சா, அப்பா கஷ்டப்படுவார். அப்புறம் உன் இஷ்டம்ன்னு சொன்னா..

அப்பா ஹெல்த் தான் உனக்கு தெரியுமே, அதான் போனேன்..அவர் வருத்தப்பட கூடாதுன்னு..”

“பெரிய தியாக செம்மல் நீ..அவ உன் கிட்ட இப்படி சொன்னா, உன் அப்பா கிட்ட சொல்ல வேண்டியது தானே..இப்படி சொல்லுறா, உங்க சீமந்த புத்திரினு..”

“…”

“சரி, உன் அத்தை வீட்டுல உனக்கு சாப்பாடே போடலியா??இப்படி எலும்பும் தோலுமா வந்து நிக்குற..”

“..”

“சரி இந்தா, இந்த பாலை குடி..”

அவள் முகத்தின் அருகே நீட்டினாள்..அதன் வாசம், மதிக்கு வாந்தியை ஏற்படுத்தியது..வாயை மூடிக் கொண்டு, குளியல் அறைக்குள் சென்றாள்..

மீனாவும் பதறி போய், அவள் பின்னே சென்றாள்..

“என்ன ஆச்சு டி??”

அவள் தலையை தாங்கி பிடித்தவள்..அவளுக்கு உதவி விட்டு, வெளியே கூட்டி வந்து படுக்கையில் அமர வைத்தாள்..

மேஜையில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து நீட்டிய மீனா, அவள் கழுத்தை பார்த்து அதிர்ந்து, தண்ணீர் பாட்டிலை கீழே நழுவ விட்டாள்..

அந்த சத்தத்தில், அவள் முகத்தை நிமிர்ந்து பார்த்த மதி, அவள் பார்வை போன இடம் பார்த்து, தானும் குனிந்து பார்த்தாள்..

அவள் கழுத்தில், பொன் மாங்கல்யமும்  ராஜாவின் சங்கிலியும், பின்னி பிணைந்து வெளியே வந்து கிடந்தது..

பயத்தில் எச்சில் விழுங்கிய மதி,
“மீனு.. அ.. அது..”

“என்ன டி இது??உனக்கு எப்போ கல்யாணம் ஆச்சு??”

“..”

“பதில் சொல்லுடி..இல்லை கழுத்தை நெரிச்சு கொன்னுடுவேன்..”

“நாலு மாசம் ஆச்சு..”

“யாரை டி, கல்யாணம் பண்ண??”

“வரு…மரகதம் அத்தை மகன்..”

“இது எப்படி சாத்தியம்..??அவங்களுக்கு தெரியுமா??உன்னை பத்தி..”

மறுப்பாய் தலை அசைத்தாள்..

“அப்புறம் எப்படி கல்யாணம் பண்ணி வச்சாங்க..??”

 

[the_ad id=”6605″]

 

“அவங்க பண்ணி வைக்கல??”

“அப்புறம்…??”

“நானே பண்ணி கிட்டேன்..”

“என்ன??அப்புறமாச்சும் சொன்னியா??”

மறுப்பாய் தலை அசைத்தாள்..

“அறிவு கெட்டவளே, இன்னிக்கு மதுவுக்கு கல்யாணம் தெரியுமா உனக்கு??அவங்களுக்கு உண்மை தெரியாட்டி, இப்போ உன்னை, வேற ஒருத்தன் பொண்டாட்டின்னு தான் நினைப்பாங்க..
உன் அத்தை மகனுக்காச்சும் தெரியுமா??”

“தெரியாது..”

“அடிப்பாவி..அப்புறம் உங்க கல்யாணம் எப்படி நடந்துச்சு..??உங்க அப்பா, இப்போ தானே வெளிநாட்டுல இருந்து திரும்பினார்..
உங்க கல்யாணம் யார் முன்னாடி நடந்துச்சு..யார் நடத்தி வச்சா??”

“யாருக்கும் தெரியாது??எனக்கும் வருக்கும் மட்டும் தான் தெரியும்..”

ஓங்கி அவள் கன்னத்தில் அறைய வந்தவள், அவள் உடல் நிலையை பார்த்து,
கைகளை இறுக்கி மூடிக் கொண்டு, கோபத்தை கட்டுப்படுத்தினாள்..

“கடைசில நீயும், உன் அம்மா மாதிரி அங்கீகாரம் இல்லாம சமுதாயத்துல வாழ முடிவு பண்ணிட்ட இல்ல..

எது நடக்க கூடாதுன்னு நான் பயந்தனோ, அதுவே நடந்து போச்சு..
உன் அத்தை மகனை பொறுத்த வரை, இன்னிக்கு உனக்கு வேற ஒருத்தன் கூட கல்யாணம் ஆகிடுச்சு..நீ ஒரு துரோகி, அவர் பார்வையில்..இனி உன் வாழ்க்கைக்கு அர்த்தம் என்ன டி??”

தலையில் கை வைத்துக் கொண்டு அமர்ந்து விட்டாள் மீனா..

கண்கள் கலங்க,
“என் வரு, என்ன தேடி வருவார் மீனு..”

“பேசாத கொன்னுடுவேன்..கிளம்பு..இப்போவே கிளம்பு..உன்னை கொண்டு போய், உன் அத்தை வீட்டுல விட்டுட்டு, உண்மையை சொல்லிட்டு வரேன்..”

மறுப்பாய் தலை அசைத்தாள்..
“அப்பா மேல சத்தியம் பண்ணி இருக்கேன் மீனு..நானா அங்க போக மாட்டேன்..எந்த உண்மையும் சொல்ல மாட்டேன்னு..”

“நீ தானே பண்ண, நான் பண்ணல இல்ல..நான் சொல்லுறேன்..உன் அத்தை மகன் நம்பர் தா..”

“இல்ல, நீயும் சொல்ல கூடாது..என் மேல சத்தியம்..”

“ஏண்டி இப்படி படுத்துற..”

சற்று நேரம் அமைதியாய் இருந்தவள்..

சட்டென இவள் முகம் பார்த்து,
“ஆமா,நீ ஏன் வாமிட் பண்ண??ஏன் இப்படி இளைச்சு போய் இருக்க??”

“..”

“சொல்லுடி, என் தலையில இன்னும் என்ன குண்டு தூக்கி போட போற??”

“..”

“மாசமா இருக்கியா??”

ஆமோதிப்பாய் தலை அசைத்தாள்..

“அடிப்பாவி..எத்தனை மாசம்..??”

“மூணு..”

“உன் அத்தை மகனுக்கு இது தெரியுமா??”

“தெரியாது..”

“உன்னையெல்லாம் என்ன டி செய்ய?? ச்செய்…”

சற்று யோசித்தவள்,
“நாளைக்கு காலையில சாப்பிடாம  தயாரா இரு..ஹாஸ்பிடல் போறோம்..”

கண்ணில் திகைப்போடு,
“எதுக்கு??”

“உன்னை மாதிரியே, உன் குழந்தையும் இந்த சமுதாயத்துல  அங்கீகாரம் இல்லாம வளர, நான் ஒத்துக்க மாட்டேன்..”

“இல்ல..என் குழந்தை,என் வரு குழந்தை எனக்கு வேணும்.. இனி என்னோட வாழ்க்கையோட பிடிப்பே, அந்த குழந்தை தான்.. நான் வர மாட்டேன்..”

“நாளைக்கு உன் பிள்ளையும், உன் நிலைமையை ஃபேஸ் பண்ணணுமா??
உன் அப்பா யாருன்னு கேட்குறவாங்க கிட்ட, உன்னால சொல்ல முடியுமா??பி ஆர் குரூப்ஸ் ஓனர், என் அப்பான்னு..நாளைக்கு உன் பிள்ளைக்கும், இந்த கஷ்டம் தேவையா??”

“நீ என்ன சொன்னாலும், எனக்கு என் குழந்தை வேணும்..எனக்கு தெரியாம ஏதாவது பண்ணலாம்ன்னு நெனச்ச, அப்புறம் என்னை உயிரோடவே பார்க்க முடியாது..”

“ஏய் மித்து, என்னடி பேசுற..??”

“எனக்கு, என் குழந்தை வேணும்..”

அவள் குரலின் உறுதியில்,
“சரி,அப்போ உண்மையை சொல்லி, உன் அத்தை வீட்டுல விடுறேன்..அதுக்காச்சும் ஒத்துக்கோ..”

“இல்ல,உனக்கு வரு பத்தி தெரியாது..அவருக்கு பொய், நம்பிக்கை துரோகம், ரெண்டும் சுத்தமா பிடிக்காது..நான் ரெண்டையும் பண்ணி இருக்கேன்..அவர் என்னை வெறுத்துடுவார்..”

இரு கைகளிலும் முகத்தை மூடிக் கொண்டு அழுதாள்.

இந்த பெண்ணை என்ன தான் செய்வது,ஆயாசமாய் வந்தது மீனாவுக்கு..

அவள் தலை கோதியவள்..
“சரி ,இப்போவும் அவர் உன்னை தப்பா தான் நினைப்பார்..அவரை ஏமாத்திட்டு, வேற ஒருத்தனை கல்யாணம் பண்ணி கிட்டதா.. உனக்கு அது புரியுதா இல்லியா??”

 

[the_ad id=”6605″]

 

“…”

“சரி, இனி உன் இஷ்டம்..நானும் உன் ஹாஸ்பிடலுக்கே வேலையை மாத்திக்கிட்டேன்..அங்க ரிசைன் பண்ணிட்டு இங்க வாரத்துக்குள்ள, என்ன பண்ணி வச்சு இருக்க?? இனி ஹாஸ்டல்ல தங்க முடியாது..வீடு பார்ப்போம்..”

அவளை நிமிர்ந்து பார்த்த மதி,அவள் மடியில் படுத்துக் கொண்டாள்..

“மீனு, என் மேல கோவம் இல்ல தானே??”

“இல்ல, குளுக்குளுன்னு இருக்கேன்..”

“ச்சு போடி..”

“உன்னை கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்திட்டு, உன்னை எப்படி போக விட்டார், உன் வரு..”

“அவரு இல்ல, நான் கிளம்பும் போது..”

“ரொம்ப சந்தோசம்..ஒரு விஷயமாவது நல்ல விஷயமா சொல்லுறியா??”

“நீ, சீக்கிரம் அத்தை ஆக போற..அது நல்ல விஷயம் இல்லியா??”

“அதை, உன் புருஷனை கூட்டிட்டு வந்து சொல்லி இருந்தா, சந்தோஷ பட்டுருப்பேன்.. என்னமோ போ..நீயாச்சும், உன் அம்மா மாதிரி இல்லாம  வாழனுமுன்னு ஆசைப்பட்டேன்..”

ஒரு பெரு மூச்சுடன்,
மீனா கவலையில் ஆழ்ந்தாள்.. மதி அவள் மடியில், களைத்து போய் துயில் கொண்டாள்..

இரண்டு மாதங்கள் கடந்திருந்தது..
தன் படுக்கையில்,  கைகளினால் கண்ணை மறைத்த படி படுத்திருந்தான் ராஜா..

தீவிர சிந்தனையில் ஆழ்ந்திருந்தான்..
மதியின் முன்னுக்கு பின் முரணான செயல்களுக்கு, ஓரளவு விளக்கம் புரிந்தது..

கல்யாணத்துக்கு அவசர பட்டது..அதன் பிறகு இவர்களின் வாழ்க்கையை ஆரம்பிக்க அவசரப்பட்டது..
அவளின் ஒவ்வொரு செயலும், ஏதோ ஒரு அவசரம், பயம், பாதுகாப்பு இன்மையை வெளிப்படுத்தியது..

‘என்னை நம்பலையா அவ..??என் கிட்ட சொல்லி இருக்கலாம் தானே??அந்த நம்பிக்கையை கூட, நான் கொடுக்கலையா அவளுக்கு..??”

மதுவின் கல்யாணம் முடிந்து வந்ததும், அவன் வேகமாய் சென்று பார்த்தது, மதுவை பற்றிய ரிப்போர்ட்டை தான்..
துப்பறியும் நிறுவனம் கொடுத்த ரிப்போர்ட்..

அதில் தெளிவாய், மதுவை பற்றி இருந்தது..
அவளின் பழக்கவழக்கம், பார்ட்டி கல்ச்சர்,அவள் பின்னே சுற்றியவர்கள்.. வினோத்தை பற்றி கூட..    
கடைசியாய், அவள் பின்னே சுற்றிய கரிகாலன் வரை..ஆனால், அவளை தவிர யாரை பற்றியும் இல்லை…

மதியை பற்றி எதுவும் இல்லை..
சலிப்பாய் அதை தூக்கி போட போகும் முன், அதில் இருந்து ஒரு புகைப்படம் விழுந்தது..

அதை எடுத்து பார்த்தான்..ஒரு பெண்ணின் புகைப்படம் அது..

‘இந்த பொண்ணை எங்கயோ பார்த்து இருக்கேனே??’
நினைவடுக்கில் தேடினான்..

அந்த புகைப்படத்தை திருப்பி பார்த்தான்..
மீனா,ராஜசேகரின் நண்பர் நடராஜனின் மகள். செவிலியராக வேலை பார்க்கிறாள்..தினமும் அவர்கள் வீட்டிற்கு சென்று வருவாள்.. போன்ற விபரம் இருந்தது..

“ச்சு..”

அதை, அந்த கோப்பிலேயே வைத்து விட்டான்..
இப்பொழுது சட்டென ஒரு பொறி தட்ட, படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்தான்..

 

[the_ad id=”6605″]

 

‘இந்த பொண்ணு கூட தானே மதி, டிக் டாக் பண்ணி இருந்தா, அவ தோழி, வெல்விசர்,இன்னும் எல்லாமும்ன்னு சொன்னா..இவ சேகர் மாமா பிரெண்ட் பொண்ணு.. மதுவும் மீனாவும் தோழியா??அப்போ மது தான் மதியா??
இல்ல,என் மதி வேற..
ஏதோ சம்மந்தம் இருக்கு..
என்ன அது??’

திடீரென அவன் கண்களில் ஒளி,
‘படிப்பு கூட ரிலேட்டட்ன்னு சொன்னா தானே..மது பிஇ..இந்த பொண்ணு நர்ஸ்..சோ, என் மதி மருத்துவம் சம்மந்தமா படிச்சவ.. அருக்காணி பையனுக்கு, மருந்து சொன்னா தானே??
என் மதியும் நர்ஸ் அஹ்..??’

அவன் குழப்பத்தை தெளிய வைக்க, அவன் அத்தை மகன் மிதுன் வந்தான் இரண்டு நாட்கள் கழித்து..

மறுநாள்..
கூடத்தில் சோர்வாய் அமர்ந்திருந்தான் ராஜா..
மகனை பார்த்த படி வந்தார் மரகதம்..

‘ஏன் இப்படி இருக்கான்??ரெண்டு மாசமா, ஏதோ பறிகொடுத்தவன் மாதிரி..இளச்சு போய், சோர்வா??ஒருவேளை, மது கண்ணை விரும்பி இருப்பானோ..??அவளுக்கு கல்யாணமான்னு, அதிர்ந்து போய் கேட்டான்..

ஊருல இருந்து வந்ததும் வராததுமா, அவ கல்யாணத்துக்கு ஓடுனான்..
முன்னவே, இவன் விருப்பத்தை சொல்லி இருந்தா, அண்ணன் கிட்ட கெஞ்சியாச்சும், இவுக கல்யாணத்தை முடிச்சு இருப்பேன்..

இப்போ என்ன பண்ணுறது??அதுக்கு கல்யாணம் ஆயிடுச்சு..இனி ஒண்ணும் செய்ய முடியாது..
மனசை தேத்திக்க தான் வேணும்..’

“ஏலே ராசா..”

“என்ன ம்மா..??”

“சாப்பிட வா..”

“பசி இல்லை ம்மா..”

“ஏன் லே, ஒழுங்கா சாப்பிடவே மாட்டேங்குற..??”

“அப்படி எல்லாம் இல்ல ம்மா..”

“உனக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி, பொறுப்பை உன்ற பொண்டாட்டி கிட்ட ஒப்படைச்சுட்டா, அவ பார்த்துக்குவா.. அதுக்கும் ஒத்துக்க மாட்டேங்குற..

உன்ற அத்தை சாவித்திரிக்கு சொந்தகார பொண்ணு ஒன்னு இருக்காம்..

நேத்து போன்ல சொன்னுச்சு..
போய் பார்ப்போமா??”

“ச்சு.. எப்போ பாரு கல்யாணம்.எனக்கு இப்போ கல்யாணம் வேண்டாம்…”

“பின்ன, எப்போ பண்ணிக்குவ??அறுவது வயசுலேயா??
அதென்ன, பொண்ணு போட்டோ கூட பார்க்காம, வேண்டாமுன்னு ஒரேடியா சொல்லுற..

கிட்டாதாயின் வெட்டன மற..
அப்டின்னு, பெரியவங்களே சொல்லி இருக்காங்க..

கிடைக்கலைனா மறந்துட்டு, அடுத்ததை பார்க்கனும்..
யாரையாச்சும் நெனச்சு கிட்டு, கல்யாணத்தை தள்ளி போடாத..

எனக்கும் வயசாகுது..பேரன்,பேத்தி பார்க்கணுமுன்னு ஆசை இருக்காதா??”

“அதான், அகல் பையன் இருக்கான்ல..அப்புறம் என்ன??”

“என்ன லே நக்கலா..உன்ற அத்தை மவன், நாளைக்கு இங்க ஒரு கல்யாணத்துக்கு வரானாம்..
அவன் கிட்ட, போட்டோ ஜாதகம் எல்லாம் கொடுத்து விடுறேன்னு சொன்னுச்சு,  சாவித்திரி அண்ணி..

ஒழுங்கா பார்க்குற..பொண்ணு பிடிச்சா, இந்த பொண்ணையே முடிச்சு, வார மாசம் முகூர்த்தம் வைக்குறோம்..
இதான் என்ற முடிவு, சொல்லிப்புட்டேன்..”

சொல்லிவிட்டு, கோபமாய் உள்ளே சென்றார்..

“ச்சை.. எல்லாம் இந்த மதியால.. அவ மட்டும் கிடைக்கட்டும்..”

பல்லை கடித்துக் கொண்டு, எதிர் சுவரை பார்த்தான்..அதில், மதியும் அகலும் எடுத்துக் கொண்ட புகைப்படம், சுவரில் ஃபிரேம் செய்து மாட்டி இருந்தது..

அவள் சென்ற பிறகு, மரகதம் பாண்டியிடம் சொல்லி மாட்ட சொல்லி இருந்தார்..

அதை முறைத்தவன்..
‘நீ மட்டும் என் கண்ணுல சிக்கு..அன்னைக்கு இருக்கு, உனக்கு திருவிழா..’

அவன் கோபமாய் அமர்ந்திருக்கும் போது, அகல் வந்தாள்.. இவனை ஒரு பார்வை பார்த்து விட்டு, சமையல் அறைக்குள் சென்றாள்..

“என்ன ம்மா, அண்ணன் உம்முன்னு உக்காந்து இருக்கு??”

“அவன் என்னைக்கு சிரிச்சான்.. அதுவும் இந்த ரெண்டு மாசமா, சிரிச்சா முத்து உதிர்ந்து போய்டும்னு, வாயை இறுக்கி மூடிக்குறான்..எனக்கு என்னமோ சந்தேகமா இருக்கு, இவன் என்ற அண்ணன் மவ மதுவை விரும்பி இருப்பானோன்னு..அதை முன்னவே சொல்லி இருக்கணும்.. இப்போ இப்படி இருந்து, என்ன ப்ரியோஜனம்..

சாப்பிடாம, தூங்காம ,களை இழந்து போன முகமா உட்கார்ந்திருக்கான்..
இந்த பாண்டி மட்டும் இல்லைன்னா, தொழில் கூட சரியாய் பார்க்க மாட்டான்..

போ..போய் அவனை சாப்பிட கூட்டிட்டு வா..”

அவன் அருகில் வந்து நின்றாள் அகல்..அதை கூட உணராமல், ஏதோ சிந்தனையில் இருந்தான்..

“அண்ணே..”

அவள் அழைப்பில் நிமிர்ந்து பார்த்தான்..

“சொல்லு அகல்..”

“ஏன், இப்படி இருக்க??அண்ணி கிடைச்சுடும்..நீ இப்படி இருந்தா, அம்மா கவலைப்படுத்து..நீ அண்ணியை விரும்பி இருப்ப போலன்னு, என் கிட்ட சொல்லுது..
நீ சாப்பிட வா.. சீக்கிரம் கண்டு பிடிச்சுடலாம் அண்ணியை..”

“ச்சு.. அதுக்குள்ள, உன் அம்மா எனக்கு வேற கல்யாணம் பண்ணிடும் போல..”

“ஏன் ண்ணா இப்படி சொல்லுற??”

 

 

[the_ad id=”6605″]

 

 

“ஆமா, நாளைக்கு மிதுன் வரானாம்..அத்தை ஏதோ, பொண்ணு போட்டோ அனுப்புறாங்களாம்..கொண்டு வரானாம்..”

“ஓ..விடு ண்ணா.. அம்மா கவலை அதுக்கு..போட்டோ தானே..பார்த்துக்கலாம் விடு.. நீ சாப்பிட வா..ஆமா, இது என்ன சட்டை?? இப்படி போட்டுட்டு உக்காந்து இருக்க..முன்ன எப்படி இருப்ப, டீக்கா டிரஸ் பண்ணிட்டு..இப்போ இப்படி, டல்லா உடுப்பு போட்டு.. போ ண்ணா போய் மாத்திட்டு வா..”

சட்டென ஒரு மின்னல் மூளைக்குள் வெட்ட,
“அகல், நீ எனக்கு ஒரு சட்டை கொடுத்தியே, கிரீடம் எம்பிராய்டரி பண்ணி.அதை, ஏதோ ஒரு இடத்துக்கு போட்டுட்டு போக சொல்லி வற்புறுத்துனியே..உனக்கு ஞாபகம் இருக்கா??”

“ஹ்ம்ம்..அது ஒரு மூணு வருஷம் இருக்குமே..ஒரு லேடீஸ் காலேஜ்க்கு போட்டுட்டு போக சொன்னேன்..பொண்ணுங்க எல்லாம் உன் பின்னாடியே சுத்தும் பாரு, இந்த சட்டையை பார்த்துட்டுன்னு சொன்னேன்..நீ கூட திட்டுனியே, ஒழுங்கா பேசுன்னு..”

“எஸ்….ஸ்…ஸ்..”

மலர்ச்சியாய் கூறியவன், வேகமாய் மாடிக்கு, அவன் அறைக்கு சென்றான்..

அவனின் குறிப்பேடுகள் இருந்த இடத்தில், மூன்று வருடம் முன்பு உள்ள குறிப்பேட்டை எடுத்து, கொஞ்சம் புரட்டினான்..

சென்னையில் உள்ள, ஒரு பிரபல பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு, கல்லூரி தினத்துக்கு பேச அழைத்திருந்தார்கள்..

அங்கு படிக்கும் தாவரவியல் மாணவர்களுக்காக..விவசாயம், செடி கொடிகள் பற்றிய சந்தேகங்கள் தீர்க்க..
அங்கு உள்ள ஆடிட்டோரியத்தில் பேசினான்..கல்லூரி முழுதும் இருந்தது..

‘அதில் இவள், எந்த பிரிவு மாணவி..
மருத்துவம் சம்மந்தமாய் எந்த பிரிவு, பயோடெக்,கெமிஸ்ட்ரி,விலங்கியல் கூட வரும்..’

‘அந்த கல்லூரி முதல்வருக்கு அழைத்து பேசினால் தெரிந்து விடும்..’
அவரின் எண்ணுக்கு அழைத்தான்..

“ஹெலோ சார்..நான் ராஜவர்மன் பேசுறேன்..”

“சொல்லுங்க மிஸ்டர் ராஜா..பார்த்து ரொம்ப நாள் ஆச்சு..”

“அது, எனக்கு ஒரு உதவி வேணும் சார்..”

“சொல்லுங்க ராஜா..”

“சில தகவல்கள் தேவை படுது..”

“கேளுங்க சொல்லுறேன்..”

“அது, ஒரு பொண்ணு பத்தி டீடைல்..அதான்..”

“தயங்காம கேளுங்க..உங்களை பத்தி எனக்கு நல்லாவே தெரியும்..அதுனால, ஒண்ணும் பிரச்னை இல்லை..”

“நன்றி சார்..ஒரு பொண்ணு போட்டோ அனுப்பி வைக்குறேன்..அவ, எந்த வருஷம் படிச்சா?? என்ன படிச்சா?? அப்பா, அம்மா, இப்படி பொதுவான தகவல்கள் தான் வேணும்..”

“தரேன் ராஜா.எக்ஸாம் முடிஞ்சு, செமஸ்டர் லீவு நேரம்..அதுனால, ஆபிஸ்ல அதிகம் ஆள் இருக்க மாட்டாங்க..  இன்னிக்கு   காலேஜ் டைம் ஓவர்..நாளைக்கு  காலையில, நீங்க கேட்ட தகவல் எல்லாம் அனுப்பி வைக்குறேன்..
அப்புறம், இஃப் யூ டோன்ட் மைண்ட்.. இந்த தகவல் எதுக்குன்னு தெரிஞ்சுக்கலாமா??”

“அந்த பொண்ணு, ஒரு ரிசேர்ச் சம்மந்தமா என் கிட்ட உதவிக்கு வந்தா. அதான், அவளை பத்தி தெரிஞ்சுகிட்டு உதவி பண்ணலாமுன்னு..”

சட்டேன்று வாயில் வந்ததை கூறினான்..

 

 

“ஓகே ராஜா..நாளைக்கு முழு தகவலும் தரேன்..”

“தேங்க்ஸ் சார்..”

அவள் புகைப்படத்தை அவருக்கு அனுப்பி வைத்தான்..

மறுநாள், அவளை பற்றிய தகவல்கள் அவனுக்கு கிடைத்தது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!