Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uyir Niraigiraen Azhaga

உயிர் நிறைகிறேன் அழகா-35

அத்தியாயம்-35

வெளிநாட்டில் இருந்த வரை, இவள் சொல்படி கேட்கிறேன் என்று அமித் கூறியதால், அப்பொழுது அமைதி ஆகி விட்டாள் மது..

அன்னையிடம் மட்டும், அவன் பெண்கள் தொடர்பு விஷயத்தை கூறினாள்..

ஆண்கள் எல்லாம் அப்படி தான்.உன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்.. என்று, அறிவுரை கூறினார் அவர்..

அதன் பிறகு இந்தியா வந்ததும், அவன் நடவடிக்கை முற்றிலும் மாறி போனது..



Advertisement

அங்கே, அவள் எந்த பிரச்சனையும் செய்யாமல் திரும்பி வர வேண்டும் என்று அமைதி காத்தவன்..

இங்கு வந்ததும்,
அவளை அலட்சிய படுத்தினான். அவள் கோபத்தை கண்டு கொள்ளவில்லை..
அவளை சந்திப்பதை கூட தவிர்த்தான்..

ஒரு கட்டத்தில், அவள் எதிரேயே பெண்களோடு வலம் வந்தான்..

Advertisement

அன்று ஏற்பட்ட சண்டையின் முடிவில், இவளுக்கு  முதல்  அடி விழுந்தது..அதுவும் பலமாக.

Advertisement

சிறு வயதில், தந்தையிடம் வாங்கிய அடிக்கு பிறகு, யாரிடமும் அடி வாங்கியதில்லை அவள்..

அதுவே அவளுக்கு பெரிய அதிர்ச்சி..
அதற்கு மேலும் உனக்கு அதிர்ச்சி உண்டு, என்பது போல இருந்தது அவன் பேச்சு..

“என்னடி, கொஞ்சம் விட்டா, ரொம்ப அதிகாரம் பண்ணுற..”

Advertisement

“அப்படி தான் பண்ணுவேன்..நீ செய்யுறது எதுவுமே சரி இல்ல..என்னை தவிர இன்னொரு பொண்ணை பார்த்த..”

“என்ன செய்வ??”

“உங்க ரெண்டு பேரையும் கொன்னுடுவேன்..”

பெரிய நகைச்சுவையை கேட்டது போல சத்தமாய் சிரித்தான்..

“வாயை மூடு..எதுக்கு சிரிக்குற??”

இரு காதுகளையும், கைகளில் அடைத்துக் கொண்டு கத்தினாள்..

“நீ கொலை பண்ணுவியா??அச்சோ, பேபி மாதிரி பேசுற..இது வரை கொலை பண்ணி இருக்கியா??என் கிட்டேயே, கொலையை பத்தி சொல்லுற..
என் முதல் பொண்டாட்டி எப்படி செத்தா தெரியுமா??”

“தற்கொலை பண்ணிக்கிட்டு..”

“அப்படியா??என்ன காரணம்??”

அப்பாவி போல கேட்டான்..

சற்று தயங்கிய மது,
“மனநிலை சரி இல்லாம..”

“அவளுக்கா மனநிலை சரி இல்ல..??விட்ருந்தா, என்னை அப்படி ஆக்கி இருப்பா.. அவ, என்னை விட பணக்காரி.. பெத்தவங்க யாரும் இல்லாமலே, தன் தொழில் முழுசும் பார்த்துக்கிட்டவ..அவ கெட்ட நேரம், என் வலையில விழுந்தா..

அதுக்கப்புறம் உன்னை மாதிரி தான், என்னை கேள்வி கேட்டா.. எனக்கு, யார் கேள்வி கேட்டாலும் பிடிக்காது..
அதான், அவளை கொஞ்சம் கொஞ்சமா, போதைக்கு அடிமை ஆக்கினேன்..
அவ சொத்து முழுசும் எழுதி வாங்கினேன்..

ஒரு கட்டத்துல, எனக்கு அவ தேவை இல்லைன்னு தோணுன நேரத்துல..
என்னை கோவப்படுத்துற மாதிரி பேசுனா..நல்ல போதையில வேற இருந்தா, லேசா தான் பிடிச்சு தள்ளுனேன்..மாடியில இருந்து கீழ விழுந்து, உடனே காலி..
தற்கொலைன்னு சொல்லி, கேஷை முடிச்சுட்டேன்..கொஞ்சம் கேஷ் கொடுத்து..”

மதுவின் கண்களில், முதன் முதலில் பயம் தோன்றியது..

“நீ.. நீ.. சொல்லுறது உண்மையா??”

“நான் ஏன் பொய் சொல்லணும்..??நீயும் அடங்கி இரு..என்னை அடக்கலாமுன்னு பார்த்த..அப்புறம், உன்னை அடக்கம் பண்ண வேண்டிய நிலை வரும்..”

கூறிவிட்டு அவன் சென்ற பின்னும், அதே இடத்தில் பல நிமிடங்கள், திகைத்துப் போய் நின்றாள்..

அப்பொழுது அடங்கினாலும்,அடங்கி பழக்கம் இல்லாததால்,இனி இங்கு இருப்பது சரி வராது என்று, சென்னைக்கு கிளம்ப முடிவு செய்தாள்..

அலைபேசி மூலம், உடனே விமானத்தில் டிக்கெட் கிடைக்குமா?? என்று விசாரித்த விஷயம், அவன் அத்தையின் மூலம் அமித்தின் காதுக்கு சென்று, அவன் உடனேயே வந்தான்..

அப்பொழுது தான், தன் உடமைகளை சேகரித்துக் கொண்டிருந்தாள்..

 

[the_ad id=”6605″]

 

 

“எங்க கிளம்பிட்ட??”

அவனின் திடீர் வருகையில் திகைத்தாலும், தைரியமாகவே,

“நான், எங்க வீட்டுக்கு போறேன்..”

“ஏன்??”

“உனக்கும் எனக்கும் ஒத்து வராது..”

“ம்ம்….எனக்கும் அப்படி தான் தோணுது..நீ, எனக்கு போர் அடிச்சு போய்ட்டே.. அதுனால கிளம்பலாம்..ஆனா, இப்போ இல்ல..என் வக்கீல் மூலம், சில பத்திரம் ரெடி பண்ண சொல்லுறேன்..அதில் எல்லாம் கையெழுத்து போட்டு கொடுத்துட்டு கிளம்பு..அங்க போய், எனக்கு நீ எந்த பிரச்சனையும் கொடுக்க கூடாதில்லை..”

“முடியாது..அங்க போனதும், உன்னை ஒரு வழி பண்ணாம விட மாட்டேன்..
நான் யாருன்னு தெரியாம விளையாடி பார்க்குற..உனக்கு தெரியவைக்குறேன்..”

“தெரியும் டி.. நீ ஏதோ திட்டத்தோட தான் கிளம்புறன்னு.. உன்னை போக விட்டா தானே..நீ எங்கயும் போக முடியாது..”

“என்னை நீ தடுக்க முடியாது..”

“பார்ப்போம்..”

அவனை முறைத்து விட்டு, தன் உடமைகளை சேகரித்தவள் கைகளை பிடித்து இழுத்து,

“இவ்ளோ சொல்லுறேன்..என்னை மீறி கிளப்பிட்டு இருக்கியா??”

அவளை அடித்தான்..

அவளும் பதிலுக்கு அடித்ததும்,ஆத்திரம் அதிகம் வர பெற்றவன்..
அவளை அடித்து நொறுக்கி விட்டான்..

“பொறுக்கி.. விடுறா என்னை.. கொலைகாரா..உனக்கு தான் சுத்த, பல பொம்பளைங்க இருக்காளுங்களே..என்னை ஏன்டா, போக விட மாட்டேங்குற..??”

“ஆமா இருக்காளுங்க..அதை, நீ கேட்க கூடாது..கேள்வியாடி கேட்குற??என்னை கேள்வி கேட்க, நீ யாரு..??”

“அப்படி தான் கேட்பேன்..நான் உன் பொண்டாட்டி..”

“பொண்டாட்டியா, ச்சே உன்னை எல்லாம் வெளிநாட்டுல பார்த்தோமா.. கொஞ்ச நாள் சுத்துனோமான்னு விட்டுருக்கணும்..

நீ சாதாரண பொண்ணா இருந்தா, அதான் செஞ்சு இருப்பேன்..எத்தனை நாள், என் கூட தனியா சுத்துன..என் கிட்ட இருந்த மருந்துல ஒன்னை,  நீ அடிச்ச சரக்குல கலக்கி கொடுத்திருந்தா..

சுலபமா என் வேலை முடிஞ்சு இருக்கும்..
உன் பின்புலம், கொஞ்சம் செல்வாக்கா இருந்தது..அங்க வச்சு நீ ஏதாவது பிரச்சனை பண்ணா, நானும், நான் கொண்டு போன சரக்கு எல்லாம் மாட்டிக்கும்.. நம்ம நாடுன்னா, கொடுக்க வேண்டியதை கொடுத்து, சுலபமா வந்துருவேன்..

அங்க சட்ட திட்டம் எல்லாம், கடுமையா இருக்கும்..மாட்டுனா, சரக்கும் போய், நானும் கம்பி எண்ணனும்..அதுனால தான், உன் மேல இருந்த ஆசையில..நீ சொன்னதுக்கு சம்மதிச்சு, கல்யாணம் பண்ணேன்..

அதான் பெரிய தப்பு..
இப்போ, என்னையே கேள்வி கேட்குற..
என்னை மீறி, எப்படி போறேன்னு பார்க்குறேன்..
இனி நீ, இங்க இருந்து போகணுமுன்னு நினைச்ச, உயிரோட போக மாட்ட..”

அதன் பிறகு, அவளுக்கு வீடே சிறை ஆனது..
அவளது அலைபேசியில் இருந்து, அனைத்து தொலை தொடர்பு சாதனங்களும் பறிக்கப்பட்டது..

பல முறை தப்பிக்க முயற்சி செய்தாள்.. அப்பொழுதெல்லாம், அடி, உதை, சிகரெட் சூடு என்று, அவளை புண்ணாக்கினான்..

ஒரு கட்டத்துக்கு மேல், அவளை அடக்க வழி தெரியாமல்,முதல் மனைவிக்கு கொடுத்தது போல..உணவில் போதை மருந்தை கலந்து கொடுத்தவன்..

அதன் பிறகு, ஊசிக்கு அவளை பழக்கினான்..

அப்பொழுது தான் ஒரு நாள் போதையில்,
“டேய்,உன்னை களி தின்ன வைக்காம விட மாட்டேன்..என் கிட்ட, உன்னை பத்தின ஆதாரம் இருக்கு..ஐ வில் டீச் யூ எ லெஸ்ஸன்..”

“ஏய்,என்ன ஆதாரம்.??என்ன ஆதாரம் வச்சு இருக்க??”

“சொல்ல மாட்டேனே..”

“எங்க வச்சு இருக்க??”

“அதுவும் சொல்ல மாட்டேன்..நீயே கண்டு பிடி..”

அவளை ஓங்கி அறைந்தான்..

“ச்சே, என்ன  பண்ணி வச்சுருக்கா தெரியலையே”

அவள் அறை முழுவதும் தேடியவனுக்கு, எதுவும் கிடைக்கவில்லை..

“என்ன ஆதாரமுன்னு சொன்னா கூட தேடலாம்..என்னன்னே தெரியாம, என்ன பண்ணுறது?? இவ்ளோ போதையிலயும் சொல்ல மாட்டேங்குற..”

அவளை திட்டி விட்டு சென்றான்..

அவள் போதையில் இருப்பதால், அவள் அறையை, ஆரம்ப நாட்களில் பூட்டி வைக்காமல் தான் வைத்திருந்தான்..

அப்பொழுது தான், வீட்டில் நடந்த ஒரு பார்ட்டியில், போதையில், பயங்கர கலாட்டா செய்து விட்டாள் மது..

அதை வீடியோ எடுத்தவன்..அதன் பிறகு, அவள் அறையை பூட்டியே வைத்திருந்தான்..

ஆதாரத்தை எடுத்து கொண்டு, அவள் தப்பி விட கூடாது என்பதற்காக,அவளுக்கு அதிக போதை மருந்து கொடுத்தான்..
வீட்டுக் காவலை அதிகம் ஆக்கினான்..

“அவளை எதுக்கு, வீட்டுல வச்சுருக்க அமித்..??வெளிநாட்டுக்கு வித்துட வேண்டியது தானே..”

“அவளுக்கு கேட்க ஆள் இல்லைன்னா, எப்போவோ இதை பண்ணி இருப்பேன் ஆன்டி..அவ அப்பன் ரொம்ப மிரட்டுறான்..அதான், அவ அப்பனை கண்காணிக்க ஆள் போட்ருக்கேன்..அவ அப்பன் பணக்காரன் வேற..ஆட்கொணர்வு மனு வேற போட போறதா செய்தி வருது..அப்படி எதுவும் செஞ்சா,இவளை கட்டாயம் ஒப்படைக்க வேண்டி இருக்கும்..

அப்போ, இவ ட்ரக் அடிக்ட்..அப்படின்னு சொல்லியாச்சும், கோர்ட் முன்ன நிறுத்தனும்..இல்ல, நமக்கு தான் ஆபத்து..

இவ அப்பனை, இப்போதைக்கு மிரட்டி வச்சு இருக்கேன்..எவ்ளோ நாள் மிரட்ட முடியுமுன்னு தெரில..
இவ வச்சுருக்க ஆதாரம் கிடைச்சா கூட..ஒரு முடிவுக்கு வரலாம்.சீக்கிரம் கண்டுபிடிக்கிறேன்..அப்புறம் இருக்கு இவளுக்கு…பார்ப்போம்..”

இவ்வாறு சென்று கொண்டிருந்த நிலையில் தான், ராஜா வந்து, அவளை மீட்டு சென்று, சேகரிடம் ஒப்படைத்தான்..

நினைவுகளின் தாக்கத்தில், அந்த இரவு தூங்கா இரவாக கழிந்தது மதுவுக்கு..

மறுநாள் மாலை வந்த சேகர்,
“மது..”

“டாட்.. மதுமித்ரா எப்படி இருக்கா??”

 

[the_ad id=”6605″]

 

 

“நல்லா இருக்கா டா.. உனக்கு இன்னொரு குட் நியூஸ்..நீ கேட்ட ஆதாரம்..”

அந்த பென்ட்ரைவ்வை நீட்டினார்..

அதை கண்டதும்,
அவள் கண்கள் மகிழ்ச்சியில் மின்னியது..

“எப்படி கிடைச்சது டாட்..??”

“நீ தான், ராஜா கிட்ட கொடுத்திருக்க.. அவன், நேத்து கொடுத்தான்..”

“தேங்க்ஸ் எ லாட்.. அவருக்கு சொல்லிடுங்க..”

அதை வாங்கியவள்,
“டாட், ஐ நீட் லேப்டாப்..ஐ வான்ட் டு டேக் பேக் அப்ஸ்..”

காரில் இருந்து, அவரது மடிக்கணினியை கொண்டு வந்து கொடுத்தார்..

அதில் அவளுக்கு வேண்டிய வேலைகளை பார்த்தவள்,
“டாட், நாளைக்கு நம்ம வக்கீல் அங்கிள்ல கூட்டிட்டு வாங்க..ஐ வில் எக்ஸ்பிளைன் எவெரிதிங்க டு ஹிம்..அவனை நிரந்தரமா உள்ள போடணும்..

எத்தனை பேர் வாழ்க்கையை கெடுத்துருக்கான்..
நானும் ஒரு காலத்துல, சுயநலமா இருந்துட்டேன்..என் வாழ்க்கை சரியாய் இருந்தா போதுமுன்னு..

இந்த போதையில நானே, என்னை மறந்து, எவ்ளோ வயலெண்ட் அஹ் இருந்துருக்கேன்..

இவ்ளோ செல்வாக்கா வளர்ந்த எனக்கே இப்படி ஒரு நிலைமைனா..

ஏழை, அப்பாவி பொண்ணுங்க எல்லாம், இதுக்கு அடிமை ஆனா, என்ன ஆகும்..??
அவங்கள என்ன பண்ணாலும் தெரியாது..
இது மட்டுமா பண்ணி இருக்கான்..??

எல்லா இல்லீகல் வேலையும் பார்த்துருக்கான்..
இவனை வெளியவே விட்டா, ஊரையே அழிச்சுடுவான்..

இந்த போதை பொருள் கேஸ் ஒன்னு போதும்..இவனுக்கு பெயில் கூட கிடைக்காது..

இதோட பேக் அப்ஸ் எல்லாம், நெறைய எடுத்துருக்கேன்..நீங்க ஒன்னு வச்சுக்கோங்க..வக்கீல் அங்கிள் கிட்ட ஒன்னு இருக்கட்டும்..இன்னும், நம்பிக்கையான ரெண்டு பேர் கிட்ட கொடுப்போம்..

அவன் என்ன தில்லாலங்கடி பண்ணாலும், வெளிய வரவே கூடாது..”

அவள் கண்கள் கோபத்தில் ஜொலித்தது..

அவள் சொல்படி, மறுநாள் வக்கிலை அழைத்து வந்தார்..அவரும் அந்த ஆதாரத்தை பார்த்து விட்டு, நம்பிக்கை அளிக்கும் வகையில் பேசிவிட்டு சென்றார்..

அதன் பிறகு, மடமடவென வேலைகள் நடந்து,அவன் மேல் கேஸ் பதிவு செய்து, நீதிபதி மூலம் அர்ரெஸ்ட் வாரெண்ட் வாங்கினார், சேகரின் வக்கீல்..

“அவனை, இன்னிக்கு கைது பண்ணிடுவாங்க மது..என்ன பணம் கொடுத்தாலும், வெளியவே வர முடியாது..
இது, நான் பெய்லபில் கேஸ்..
வெளிய வாரது கஷ்டம்..”

வக்கீல் அறிவித்து விட்டு சென்றார்..

மறுநாள் சேகர்,
“அவனை கைது பண்ண முடியல மா..விஷயம் தெரிஞ்சு உஷார் ஆகி, வீட்டை விட்டு எங்கேயோ போய்ட்டானாம். போலீஸ் தேடிட்டு இருக்காங்களாம்..”

கண்ணில் கோபம் மின்ன,
“பணம் கொடுத்து, எல்லா இடத்துலயும் ஆள் வச்சு இருப்பான்..அதான், இங்க வாரெண்ட் வாங்குனதும், அங்க செய்தி போயிடுச்சு..”

“ஆமா மா..என்னையே, கண்காணிச்சுட்டு தான் இருந்தான்.நம்ம வக்கிலை கூட, நெறைய தடவ மிரட்டி இருக்கான்..”

அவள் உள்ள கொதிப்பை சற்று குளிர்விப்பது போல, இரண்டு நாளில் ஒரு செய்தி வந்தது..

“அந்த அமித்லால், ஆக்சிடெண்ட்ல இறந்துட்டானாம் மா..”

அவள் முகத்தில் இருந்து, எந்த உணர்வும் தெரியவில்லை..

“ஓ..”

“என்ன மா..??உனக்கு சந்தோசம் இல்லியா??”

“இப்படி உடனே போய்ட்டானே..அவன் பண்ணத்துக்கு, அணுஅணுவா சித்திரவதை அனுபவிச்சு, போய் இருக்கனும்..
எப்படி இறந்தான்..??”

“கார் விபத்து..அவன் கிட்ட இருக்கும் விலை உயர்ந்த கார்ல போய் இருந்தா, ஏர்பேக் வந்து காப்பாத்தி இருக்கும்..

போலீஸ், நம்பர் வச்சு கண்டு பிடிக்க கூடாதுன்னு அவசரத்துல..ஷெட்ல இருந்த பழைய கார்ல தப்பிச்சு, மலை பிரதேசம் போய் இருக்கான்..

பிரேக் சரி இல்ல..எதிர்ல வந்த லாரில மோதி, மலையில இருந்து உருண்டு, கார் நசுங்கி இறந்துட்டான்..”

“அது அவன் தானா??இல்ல, இதுவும் செட் அப் அஹ்??”

“அவன் தான் மா..முகம் தெரிஞ்சுது..மீடியா முழுக்க, இந்த நியூஸ் தான்..
நமக்கு தெரிஞ்ச இடத்துல இருந்தும், கன்பர்மேசன் வந்துடுச்சு..”

ஒரு நீண்ட பெருமூச்சு வந்தது அவளிடம்..

“ஓகே டாட்.. எப்போ வீட்டுக்கு போலாம்..டாக்டர் கிட்ட கேளுங்க..”

அவனுக்கு உண்டான தாக்கம் அவ்வளவு தான் என்பது போல, அடுத்த விஷயத்தை சாதாரணமாய் பேசினாள்..

அதன் பிறகு நாட்கள் விரைந்து ஓடி, மது முழுவதும் தேறி விட்டாள் என்று மருத்துவர்கள் அளித்த சான்றின் பெயரில், வீட்டுக்கு அழைத்து வர பட்டாள் மது..

வீட்டில் அடைந்து கிடைந்தவளை கண்டு சேகர்,
“மது,இன்னும் இப்படியே இருந்தா எப்படி மா?? இனி என்ன பண்ண போற??என்ன முடிவு பண்ணி இருக்க??”

“விட்ட படிப்பை  தொடரலாமுன்னு இருக்கேன் டாட்.. இனி, அந்த காலேஜ் போக விருப்பம் இல்லை..டிஸ்டன்ஸ் எஜுகேஸன்ல படிக்குறேன்..”

“சரி மா..உன் விருப்பம்..”

மீனா மற்றும் பாண்டியின் திருமண நாளும் வந்தது..

உலகையே வென்றவன் போல, மணமேடையில் அமர்ந்திருந்தான் பாண்டி..

அருகில் அமர்ந்திருந்த மீனாவை, அடிக்கடி பார்த்துக் கொண்டான் காதலோடு..

அவள், அவனை நிமிர்ந்து பார்க்கவில்லை..
ஓரபார்வையில், யாரும் அறியாமல் பார்த்தாள்..

மணப்பெண் தோழியாய், அகல் நின்றாள்..மீனாவின் தேவைகளை கவனித்துக் கொண்டு..

தம்பியின் முகத்தை கண்டு விட்டு,
அவர்கள் அருகில் வந்த, பாண்டியின் முதல் அக்கா கனகம்,

“ஏம்மா, யாரு உனக்கு பவுடர் போட்டது..??இம்புட்டு ரோஸ் பவுடரை கொட்டி இருக்காங்க.. இதெல்லாம், என் தம்பிக்கு பிடிக்காது..”

நாத்தனார் கெத்தை காட்டினார்..

‘ஆத்தி. நான் எப்போ சொன்னேன்..??’

மீனா, அவனை கூர்ந்து பார்த்தாள்..

‘இந்த அக்கா, கல்யாணத்துக்கு முன்னவே, டைவோர்ஸ் வாங்கி கொடுக்கும் போலவே..’

“அக்கா,நான் உன்கிட்ட சொன்னனா??”

“உன்னை பத்தி எனக்கு தெரியாதா டா தம்பி?? அந்த  கோமதியை கூட, அம்புட்டு பவுடர் போடுது..பூச்சாண்டி கணக்கான்னு சொல்லுவியே..”

“பூச்சாண்டி எப்போ பவுடர் போட்டுச்சு??நீ போய் பார்த்தியா??போ..அங்க பாரு..மாமா, எந்த பொண்ணு கூடவோ கடலை போடுறார்..என்னன்னு பாரு..”

“அடி ஆத்தி, இந்த மனுஷனை பார்த்துக்கிட்டே இருக்க வேண்டி இருக்கே..”

அவர் சென்றதும்,
‘ஹப்பா..’
என்று நிம்மதி பெருமூச்சு விட்டான்..

திருமணம் இனிதே நடைபெற்றது..

 

[the_ad id=”6605″]

 

 

மதி, மாமியாரின் கட்டளையின் பெயரில், நடந்து திரியாமல், மேடையின் அருகே ஓர் இடத்தில் அமர்ந்து, திருமணத்தில் கலந்து கொண்டாள்..அருகே மரகதம்..

கையில், அவள் மகன் அருள் அமுதன்..மாமனாரின் பெயரை வைக்க வேண்டும் என்ற, மாமியாரின் ஆசையின் படி வைத்திருந்தார்கள்..

ராஜா, திருமண வேலைகளில் மும்முரமாய் இருந்தான்..அவ்வவ்போது, மனைவி மற்றும் மகனின் நலத்தையும் கவனித்துக் கொண்டான்..

பாண்டியின் வீட்டில், மணமக்களை ஆரத்தி எடுத்து வரவேற்றார்கள்..

அவர்களுக்கு பால் பழம் கொடுத்த இரண்டாவது அக்கா ராதிகா,
மீனாவை உற்றுப் பார்த்து விட்டு,

“ஏன்டா,அந்த புள்ள விமலாவை கலர் கம்மி, பிடிக்கலைன்னு சொன்ன..இந்த பிள்ளை ஒன்னும், அம்புட்டு கலர் இல்லியே..”

“அது என் பிரச்சனை.. கலர் பத்தாட்டி,பெயிண்ட் அடிச்சு விடுவேன்..அங்குட்டு போ..”

அவளிடம் கடுப்பாய் கூறிவிட்டு, மீனாவை பார்த்தான்..

அவள் முகம், கடுகடுவென இருந்தது..

மூன்றாவது அக்கா பாக்கியம் அருகில் வந்தாள்..

‘இவ என்ன இம்சை கொடுக்க போறாளோ..??’

“என்ன??”

“ஏன்டா இப்படி கடிக்குற..?? தம்பி பொண்டாட்டி கிட்ட பேசுவோமுன்னு வந்தேன்..பேச விட மாட்டேங்குற”

“நீ பேசுனது போதும்..உள்ள போ..நானே இன்னும் பேசல..”

“ரொம்ப தான்..”

தோள்பட்டையில் முகத்தை இடித்துக் கொண்டு சென்றாள்..

மூன்று பேரும் தங்கள் அன்னை கோகிலாவிடம்,
“அம்மா,இப்போவே உன் பிள்ளை, மருமக முந்தானையை பிடிச்சுக்கிட்டு சுத்துறான்..ஆரம்பத்துலேயே இழுத்து பிடி..இல்ல, உனக்கு தான் கஷ்டம்.. ஒத்தை பிள்ளையை பெத்து வச்சுருக்க..மாமியார் கெத்தை விடாத..
அப்புறம், அவ கிட்ட எல்லா உரிமையும் போய்டும்.
நீ வெத்துவேட்டு ஆயிடுவ.. பார்த்துக்கோ..சூதானமா பிழைச்சுக்கோ..அம்புட்டு தான் சொல்லுவோம்..”

எல்லா திசையிலும் வந்த உபதேசத்தில்,
முந்தானையை  இழுத்து சொருகிக் கொண்டு வந்த கோகிலா,

“பால் பழம் கொடுத்தாச்சுல்ல?? இன்னும் என்ன, இங்கேயே உட்கார்ந்து இருக்க??உன் அறைக்கு போடா..
நீ, இந்த அறைக்கு போய்,சேலையை மாத்திக்கிட்டு, கொஞ்ச நேரம் படு..
ரவைக்கு தயாராகனும்..”

மகன் மருமகளை வெற்றிகரமாக பிரித்து விட்டு, உள்ளே சென்றார் கோகிலா..

அக்கா மூன்று பேரும், வில்லிப் பார்வை பார்த்தார்கள்..

‘இதுங்க எல்லாம், சீரியல்ல வில்லி வேஷம் போடலாம்..அம்சமா பொருந்துங்க..எனக்குன்னு அக்காவா பொறந்துருக்குங்க..’
கடுப்பாய் உள்ளே சென்றான்..

பாண்டி ஆவலாய் எதிர்பார்த்த முதல் இரவு..

உள்ளே வந்த மீனா,இவன் அருகில் இருந்த மேஜையில் பால் செம்பை வைத்தாள்..

அத்தனை பற்களும் காட்டிய படி எழுந்து நின்றவன்..

“காலுல எல்லாம் விழ வேண்டாம், மீனு குட்டி..”

“நான் விழுறேன்னு சொல்லலியே..”

முந்தானையை இழுத்து சொருகிக் கொண்டாள்.. போருக்கு செல்பவள் போல..

“உட்காரு டா..”

“ஹ்ம்ம்..”

“ஏதாவது பேசு டா..”

“கோமதி யாரு??”

“எந்த கோமதி??”

“உங்க அக்கா சொன்னாங்களே.. பவுடர் போடும் அதிகமான்னு”

“அவ ஒரு வேஸ்ட் பீஸ்.. அவளை பத்தி எதுக்கு இப்போ??”

“அப்புறம், விமலா யாரு..??”

‘இது, எப்போ, யாரு சொன்னா??’

தீவிரமாய் யோசித்தவன்..

“என்ன மீனு??நம்மள பத்தி பேசுவோம்..யார் யாரை பத்தியோ எல்லாம் கேட்குற??”

“இப்போ தான், உங்க மூணு அக்காவும் சொன்னாங்க..
மாலதி,அம்சவேணி,கனிமொழி, இதெல்லாம், உங்களுக்கு ரொம்ப வேண்டிய பொண்ணுங்க..அதை பத்தி எல்லாம் நீ கேட்க கூடாது..என் தம்பிக்கு பிடிச்ச மாதிரி நடந்துக்க..அடக்க ஒடுக்கமா இருன்னு..அரைமணி நேரம் உபதேசம் பண்ணி தான் அனுப்புனாங்க..
சரி சொல்லுங்க..யாரு இவங்க எல்லாம்..??”

கை முஸ்ட்டியை மடக்கிய படி கேட்டாள்..

‘அடி பாதகத்திகளே, நீங்க எல்லாம் என் உடன்பிறப்புகள்.இனி விடிய விடிய, ஒரே என்டேர்டைன் மெண்ட் தான்.. யூ ப்ரோசீட் ராசாத்தி…’

தலையில் கை வைத்துக் கொண்டு அமர்ந்து விட்டான் பாண்டி..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!