Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uyir Niraigiraen Azhaga

உயிர் நிறைகிறேன் அழகா-5

அத்தியாயம்-5  

ராஜசேகர் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்..அவர் தந்தை தனபால். வீட்டிற்கு மூத்தவர்,ஒரு தம்பி ராஜகோபால்..இருவரும் பெற்றோர்களோடு,தம் மனைவி மக்களோடும், கூட்டு குடும்பமாய் தான் இருந்தார்கள்..

ராஜசேகருக்கு மூன்று அக்கா,பொற்கொடி, கௌரி,சுதா,அவர்களுக்கு பிறகு பிறந்தவர் ராஜசேகர்..

சித்தப்பா ராஜகோபாலுக்கு, ஒரே பெண் குழந்தை மரகதம்.சிறுவயதில் இருந்தே ஒரே வீட்டில் ஒன்றாய் வளர்ந்தவர்கள்..அதனால் பெரியப்பா பிள்ளை,சித்தப்பா பிள்ளை என்று பாகுபாடு பார்க்க மாட்டார்கள்..ஒரு தாய் மக்கள் போல வளர்ந்தார்கள்..



Advertisement

[the_ad id=”6605″]

ராஜசேகர் ஒரே ஆண் வாரிசு..அதனால், போற்றி வளர்த்தார்கள்..முதல் முதலாக, பட்டணத்துக்கு சென்று, பட்டம் வாங்கிய பட்டதாரி, அவர்கள் குடும்பத்தில்..அந்த பெருமையும் உண்டு..

இவர் படித்து முடித்து வரும் போது, மூன்று அக்காவுக்கும் திருமணம் ஆகி இருந்தது..மரகதத்தையும், பக்கத்துக்கு ஊரின்  பெரிய குடும்பத்தில், கல்யாணம் செய்து கொடுத்திருந்தார்கள்..

Advertisement

வசதியான குடும்பம் அவர்கள்..மரகதத்தை, ஒரு விசேஷ வீட்டில் பார்த்து பிடித்துப் போய், உடனே பெண் கேட்டு கல்யாணம் முடித்து விட்டார்கள்..

Advertisement

மரகதத்தின் கணவர் பெயர் அருள்மொழி..அவருக்கு, ஒரே அக்கா..சாவித்திரி..அவரை பட்டிணத்தில்  திருமணம் முடித்து கொடுத்திருந்தார்கள்..

ராஜசேகர் படித்து முடித்து விட்டு,வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருந்தார்..
அப்பொழுது, பிஆர் குரூப் ஆப் கம்பெனிஸ் நடத்திய நேர் முக தேர்வில் வேலை கிடைத்தது..

அதனால், பட்டிணத்தில் தங்கி வேலை பார்க்க வேண்டிய சூழ்நிலை..மகன் சாப்பாட்டுக்கு சிரம பட கூடாதே என, தனபால் தம்பதியரும், அவரோடு சென்று விட்டார்கள்..

Advertisement

குறுகிய காலத்தில்,
தன் திறமையால்  பதவி உயர்வு பெற்றார்..
அதனால் அவர் மேல், பிரமிளாவின் தந்தை பொன்னுசாமியின் பார்வை விழுந்தது..

அந்த பார்வை, பிரமிளா ராஜசேகர் திருமணத்தில் சென்று முடிந்தது..
பொன்னுசாமியின் ஒரே பெண் பிரமிளா..ஒற்றை பெண்ணாய் செல்வ செழிப்போடு,செல்லமாய் வளர்ந்தவருக்கு, இயற்கையிலேயே கர்வம்,அகங்காரம் எல்லாம் சேர்ந்து வளர்ந்தது..

பணத்தை வைத்தே அனைத்தையும் எடை போடும் குணம் கொண்டவருக்கு,ராஜசேகர் கணவராய் அமைந்தார்..

முதல் முதலாய், அவர் விருப்பத்துக்கு மாறாய்  தந்தை எடுத்த முடிவு..தந்தைகாக, ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலை..
கட்டாயத்தினால் நடந்த கல்யாணம்..இன்று வரை, கசப்புடன் செல்கிறது..

ராஜா, ஒரு விவசாய மாநாட்டுக்காக, வெளியூர் சென்றிருந்தான்..வயல் மற்றும் மில் பொறுப்புகளை, பாண்டி பார்த்துக் கொண்டான்..

அந்த நேரத்தில் தான், ராஜசேகர் போன் செய்து,மதுவை இங்கு அனுப்பி வைப்பதாய், கூறி இருந்தார்..இவரும் அனுமதி அளித்திருந்தார்..

“ஏலே பாண்டி..”

“சொல்லு அத்தை..”

[the_ad id=”6605″]

“மாடில ராசா அறைக்கு, எதிர் அறை பூட்டி கிடக்கும்.. இந்தா சாவி..பேச்சியை கூட்டிட்டு போய்.. அறையை சுத்தம் பண்ண சொல்லு..மெத்தை எல்லாம் தட்டி போட்டு,உறை எல்லாம் மாத்த சொல்லு..ஒரு தூசு தும்பு இருக்க கூடாது..வேலை முடிஞ்சதும், நான் வந்து பார்ப்பேன்..ஆமா சொல்லிபுட்டேன்..”

“ஜோடா கீடா வேணுமா அத்தை.. இப்படி, மூச்சு விடாம பேசுற..”

“ஏலே வாய் பேசாம,சொன்ன வேலையை செய்யு லே..”

“சரி,செய்வோம்..எதுக்கு செய்யனும்.??.சொல்லு.ஆரு வரா.. ??அவ்ளோ பெரிய ஆளு.. கவனிப்பு எல்லாம் பலமா இருக்கு..”

“என்ற மருமவ லே..”

“அடப்பாவி ராஜா..என் கிட்டே  கூட ஒரு வார்த்தை சொல்லாம,மாநாட்டுக்கு போன இடத்துல..ஒரு பொண்ணை பிடிச்சு,கல்யாணமே பண்ணிட்டியா??”

“யாரு லே இவன். கூறுகெட்ட தனமா பேசி கிட்டு..அவன் எப்போ, கல்யாணம் பண்ணான்..அதுவும், தெரியாம வேறையாக்கும்..நானே, கட்டி வைக்குறேன்னு சொல்லுறேன் .அதுக்கே நழுவுறான்.. இதுல,கல்யாணமும், காது குத்தும்..போலே ஆக்கம் கெட்டவனே..”

“நீ தானே சொன்ன மருமவன்னு.. உனக்கு இருக்குறது ஒரே மகன்.அதான் கேட்டேன்..அதுக்கு வையுற..”

“என்ற அண்ணன் மவ வராலே.. அதான் சொன்னேன்..அவளும் எனக்கு மருமவ தானே..”

“ஓ..அப்படி வரியா..அதுவும் சரி தான்..ஆரு,அன்னைக்கு போட்டோல காட்டுனியே, அந்த பிள்ளையா??”

“ஆமா லே..”

“அந்த பத்ததா உடுப்பு போட்டுருந்துச்சே..”

“ஏலே..”

“சரி,சரி கோச்சுக்காத..இங்க வரும் போதாச்சும், பெரிய உடுப்பா போட்டுகிட்டு வர சொல்லு..இல்லைனா, ஊரு புள்ளிங்க பொருட்காட்சி கணக்கா பார்ப்பானுங்க..”

“ஏலே,எல்லாரையும்  உன்னை மாதிரி நினைச்சுக்காத லே..”

“என்னை டேமேஜ் பண்ணுறதுலயே, ஆத்தாவும்,மகளும், குறியா இருங்க..சரி வரட்டும்..கிராமத்து குயில்களை பார்த்த நாம, பட்டணத்து பச்சை கிளியையும் பார்ப்போம்..”

“மறுபடியும் மறுபடியும் சொல்லுறேன் லே..அவ, உன்ற தங்கச்சி..”

“எங்குட்டு போனாலும் கேட்  போடு..போ..”

“நீ என்ன லே பண்ண போற..??”

“ஹ்ம்ம்..பாசமலர்க்கு  அறை ஒதுக்கீடு செஞ்சுருக்க இல்ல..அதுல போய், துப்புரவு பணி செய்ய சொல்லுறேன்..”

“சரி,சரி சீக்கிரம் செய்..”

சொல்லி விட்டு  உள்ளே சென்றார் மரகதம்..

பாண்டிக்கு, மரகததின் அண்ணன் ராஜசேகர் என்று தெரியும்..பட்டிணத்தில் இருக்கிறார் என்று தெரியும்.ஊரில் நடக்கும் நல்லது,கெட்டதுக்கு வருவார்.பார்த்திருக்கிறான்..

மற்றபடி,அவர் மனைவி மகள் எல்லாம் சிறு வயதில் பார்த்திருக்கலாம்.அந்த ஞாபகம் எல்லாம் இல்லை அவனுக்கு..

அவர் பணக்காரர் என்றும் தெரியும்..

பிஆர் குரூப்ஸ் சேர்மேன், அவர் தான் என்று தெரியாது..அவர் மகள் மது தான், தன் நண்பன் வினோத்தின் நிலைக்கு காரணம்  என்றும் தெரியாது..

[the_ad id=”6605″]

ராஜாவுக்கு தெரியும்..அவன் இவனிடம் கூறவில்லை..
அன்னையிடமும் கூட கூறவில்லை..
மதுவின் வரவிற்காக, அங்கு மரகதத்தின் வீடு  தயாராய் காத்திருந்தது..

இங்கு,
“மாம்,டாட் கிட்ட பேசுனியா??என்ன சொன்னார்..??”

“எவ்வளவோ பேசி பார்த்துட்டேன் டார்லிங்..எதுக்கும் ஒத்து வர மாட்டேங்குறார் மனுஷன்..நம்ம பொண்ணு அங்க எப்படி இருப்பா??, வசதி பத்தாது.. பிறந்ததுல இருந்து ஏசில இருந்த பொண்ணு..கிராமத்துல எப்படி இருப்பா??

அப்படி இப்படின்னு, எவ்ளோ சொல்லியும்..அசைய மாட்டேங்குறார் மனுஷன்..
பல விஷயத்துல அடங்கி போற மனுஷன்,இப்படி சில நேரம் மக்கர் பண்ணுவார்..என்ன பண்ணன்னு தெரில டார்லிங்..”

“ஓகே மாம்..யூ லீவ் இட்..நான் பார்த்துக்குறேன்..”

“என்ன பண்ண போற டார்லிங்..??”

“வெயிட் அண்ட் சீ..”

“ஏதாவது ஏடாகூடமா செஞ்சுராத டார்லிங்..அவர் கொம்பேறி மூக்கன் அஹ் மாறிடுவார்..”

“டோன்ட் ஒர்ரி மாம்..பார்த்துக்கலாம்..”

புன்முறுவலோடு கூறி விட்டு சென்றாள்..

மறுநாள் அதிகாலையில் கிளம்ப வேண்டும் என்று கூறி இருந்தார் சேகர்..

வான் நீல சுடிதாரில் அழகோவியமாய் தயாராகி வந்தாள் மது..பிரமிளாவிற்கே ஆச்சர்யம்..

உயரே தூக்கி கட்டிய போனி டைல் கூந்தல்,அவள் முதுகு தொட்டது..சிறிய கருப்பு வண்ண பொட்டு நெற்றியில்..காதில் வழக்கமாய் போடும் வைர கம்மல்,கழுத்தில் மெல்லிய சங்கில், ஒற்றை வைரம் அதன் நடுவில் தொங்கியது.. வலது கையில் தங்க பிரேஸ்லெட்,இடது கையில் தங்க சங்கிலி போட்ட கடிகாரம்..தன் ஹய் ஹீல்ஸ் சத்தமிட நடந்து வந்தாள்..

அவளை உச்சி முதல் பாதம் வரை பார்த்த சேகருக்கு, பரம திருப்தி..

“மது,உன் கூட நான் வர முடியாது..பிரைவேட் செக்யூரிட்டி ஏஜென்சில இருந்து, ஒரு ஆள் ஏற்பாடு செஞ்சுருக்கேன்..அவன் உன் கூட துணைக்கு வருவான்..ஊர் போய் சேருற வரை தான், ஜாக்கிரதையா இருக்கனும்..ஊர் எல்லைக்குள்ள போய்ட்டா..

அப்புறம், என் தங்கச்சி மகன் ராஜா கட்டுப்பாட்டை மீறி, யாரும் உன்னை எதுவும் செய்ய முடியாது..ஊரே, அவன் பேச்சுக்கு கட்டுப்படும்..”

‘ஆமா,பெரிய நாட்டாமை…’
அலட்சியமாய், உதடு சுழித்தால் மது..

“செல்வாக்கான, பெரிய குடும்பம்..அவங்க பேருக்கு பாதகம் வராம நடந்துக்க..
ஊருக்குள்ள, எங்க வேணா போய்ட்டு வா.. மரகதம்  அனுப்புற துணையோடு..அவங்க அனுமதியோடு..நேரத்துக்கு, வீடு திரும்பிடு..

கொஞ்ச நாள் தான், அப்புறம் இந்த கரிகாலனை, உள்ள நிரந்தரமா தள்ளிட்டா, பிரச்சனை தீர்ந்துடும்..

அப்பா,திரும்ப திரும்ப சொல்லுறேன்னு நினைக்காத..அங்க அனுசரிச்சு போ..உன் பேரையும் கெடுத்து,எங்க பேரையும் கெடுத்துடாத..புரியும்ன்னு நினைக்குறேன்..உன் பழக்க வழக்கம் எல்லாம், இங்கயே விட்டுட்டு போய்ட்டு வா.. “

நீண்ட அறிவுரை அளித்தார்..
கரிகாலனின் பார்வை, இவர் மீது இப்பொழுது இருக்கும் என்றே, இவர் செல்லாமல், அதிகாலை வேளையில், ஒரு பாதுகாவலருடன், மதுவை அனுப்பினார்..

“ஓகே டாட்.. எனி திங்க எல்ஸ்..”

இதை, எப்படி எடுத்துக் கொள்வது.??அலட்சியமா,இல்லை அடுத்து என்ன என,  தெரிந்து கொள்ள கேட்கும் கேள்வியா??

“உன் சிம் இங்கயே வச்சுட்டு போய்டு..வாட்ஸ் அப் கால்,மெஸெஜ் மூலம் பேசிக்கலாம்..இல்லைனா உன் அத்தை வீட்டு போனுக்கோ,ராஜா போனுக்கோ கூப்பிடுறேன்..சிம் வச்சு, உன்னை கண்டு பிடிக்க  ட்ரை பண்ணாலும் பண்ணுவான்..”

“ஓகே டாட்..நான் வேற சிம் வாங்கிக்கிறேன்..”

“அது…”

“என் பிரெண்ட் பேர்ல வாங்கிக்கிறேன்..”

“ஓகே…டேக் கேர் மது..”
அவள் தலையில் கை வைத்து, கூறினார்..

“சூர் டாட்..”
அவரை அணைத்து  விடை பெற்றவள்..அன்னையையும் அணைத்து,

“பை மாம்..”

“அடிக்கடி கால் பண்ணு டார்லிங்..”

“யா மாம்..”

கட்டை விரலை  உயர்த்தி காட்டி விட்டு புன்முறுவளோடு சென்றாள்..

[the_ad id=”6605″]

காரின் பின் சீட்டில்  இவள் அமர்ந்து கொள்ள,டிரைவரின் அருகே, அந்த பாடிகார்ட் அமர்ந்து கொண்டார்..

இருவரும் கை அசைத்து, மகளுக்கு விடை கொடுத்தனர்..

சூரியன் தன் கதிர்களை கொண்டு, மெது மெதுவாய் பூமியை அணைத்து, தன் ஆளுமைக்குள் கொண்டு வந்தான்..

இந்த காட்சிகளை  இது வரை பார்த்திராத மது, கார் கண்ணாடி வழியாக, ரசித்து பார்த்துக் கொண்டு வந்தாள்..

காலை உணவுக்காக, ஒரு உணவு விடுதி அருகே  நிறுத்த சொன்னாள்..

“மேம், நீங்க காருக்கு உள்ள இருங்க..நான் போய், உங்களுக்கு வாங்கிட்டு வரேன்..அப்புறம், டிரைவர் சாப்பிட போவார்..”

“ஏன் நான் வந்தா என்ன??அதான், சிட்டி எல்லையை  தாண்டியாச்சு தானே..அதோட, ஐ ஹாவ் டு பர்சேஸ் சம்திங்க..நீங்க சாப்பிடுங்க..நான், அந்த ஷாப்பிங் மால் போய் வாங்கிட்டு வரேன்..”

“இல்ல மேம், உங்களை  தனியா அனுப்ப முடியாது..என்ன வேணும் சொல்லுங்க, நான் வாங்கிட்டு வரேன்..”

“எல்லாத்தையும், உங்க கிட்ட சொல்ல முடியுமா.. ச்செய்..”

முகம் சுருங்கிய பாடிகார்ட்,
“ஓகே மேம்.. வாங்க, நானும் உங்க கூட வரேன்..அப்புறம் வந்து சாப்டுக்குறேன்..”

“ஐம் நாட் கிட், ஓகே??”

“பட், இட்ஸ் மை டூட்டி மேம்..”

“வாங்க..”

கூறிவிட்டு இறங்கினாள்..

டிரைவர் சாப்பிட சென்றார்..
இவர்கள் ஷாப்பிங் மாலுக்குள் சென்றனர்..கொஞ்ச நேரம் சுற்றி, நிறைய உடைகள்,இதர பொருட்கள் வாங்கி குவித்தாள்..அவள் பின்னோடு சுற்றினான், அந்த பாதுகாவலன்..

பிறகு பில்லிங் செக்ஸன் சென்று, பில் போட சொன்னவள்…
அதை வாங்கிக் கொண்டு,ரெஸ்ட் ரூம் நோக்கி, சென்றாள்..

ரெஸ்ட் ரூம் வாயில் அருகே வந்தவள்..

“இங்கயும், என் பின்னாடி வராதிங்க.. இதெல்லாம் வச்சுட்டு, இங்கேயே இருங்க..”

அவர் கையில், வாங்கிய பொருட்கள் எல்லாம் திணித்து விட்டு,உள்ளே சென்றாள்..

உள்ளே சென்றவள், வெளியே வரவில்லை..வெகு நேரமாய்..
பதறிய பாடிகார்ட்,உள்ளேயும் செல்ல முடியாமல்,என்ன செய்வது  என்று தெரியாமல், நின்றார்..

சேகருக்கு கால் செய்து விடலாம் என்று, தன் அலைபேசியை எடுத்த போது,
வெளியே வந்தாள் மது..
நிம்மதி பெரு மூச்சு விட்டவர்..

“போலாமா மேம்..”
தலை அசைத்தாள்..

ஷாப்பிங் மால் விட்டு வெளியே வந்தார்கள்..மென் நடையுடன் வந்தாள் மது..ஒரு இடத்தில்  இடரி விழ போனாள்.. அவள் கையை பிடித்து நிறுத்தினார் பாடிகார்ட்..

வேகமாய், அவரிடம் இருந்து கையை உருவினாள் அவள்..

“சாரி மேம்.. விழப் போனீங்க..”

“இட்ஸ் ஓகே..தேங்க்ஸ்..”

“பரவால்ல மேம்.. என்னாச்சு மேம்??ஒரு மாதிரி நடக்குறிங்க..??”

“அது,ரெஸ்ட் ரூம்ல  ஸ்கிட் ஆயிடுச்சு..அதான் காலுல, சுளுக்கு மாதிரி..”

“ஓ..டாக்டர் கிட்ட போலாமா மேம்..”

“இல்ல..இல்ல..நௌ ஓகே..போலாம்..”

“சரி மேம்..”

காரின் அருகே வந்ததும்,வாங்கிய பொருட்களை காரின் பின்னால் வைத்து விட்டு,

“சாப்பிட போலாம் மேம்..”

“இல்ல,வாங்கிட்டு வந்துடுங்க..போற வழில சாப்பிட்டுக்கலாம்..”

அவளை
ஆச்சர்யமாய் பார்த்தவன்,
“நீங்க தானே மேம், பார்சல் வேண்டாம்ன்னு சொன்னிங்க..”

“இப்போ, கால் கொஞ்சம் வலி.. அதான்…, வாங்கிட்டு வந்துடுங்க..”

“ஓகே மேம்..”
இருவருக்கும் பார்சல் வாங்கி வந்தான்..டிரைவர்  அதற்குள் சாப்பிட்டு இருந்தார்..
கார் கிளம்பியது..

பின்னால், திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டு வந்தாள் மது..
பாடிகார்ட் பார்க்கும் போது, நேராய் உட்கார்ந்து கொண்டாள்..

மதிய உணவுக்கும், காரை விட்டு இறங்க வில்லை அவள். வாங்கி வர சொல்லி  உண்டு விட்டு,வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்..

அந்தி சாயும் வேளையில், அந்த அழகிய கிராமத்துக்குள் நுழைந்தது அவளின் கார்..
இயற்கை அழகை ரசித்த படி வந்தாள் மது..

அந்த ஊரின்  மாளிகை போன்ற பெரிய வீட்டின் முன்னே நின்றது கார்..
கண்கள் விரிய, வியந்து பார்த்த வண்ணம்  இறங்கினாள் மது..

“கண்ணு,வா, வா.. சின்ன பிள்ளையில பார்த்தது..என்னமா வளர்ந்துட்ட..ஏன் இங்கயே நிற்குர உள்ள வா..”

பாசமாய் அவள் கன்னம் வழித்து நெட்டி முறித்து, கை பிடித்து  உள்ளே கூட்டி சென்ற பெண்மணியை, ஆச்சர்யமாய் பார்த்தாள் மது..

“என்ன கண்ணு, அப்படி பார்க்குற..உன்ற அத்தை கண்ணு..மரகத அத்தை.. இப்போ தானே வர… அதான் தெரியல..”

உள்ளே, தயக்கமாய் நுழைந்தாள் மது..
அவள் பைகளை எல்லாம், டிரைவரும் பாடிகார்ட்டும் கொண்டு வந்தார்கள்..

“இங்க வச்சுடுங்க பா..”
கூறியவர்,

“ஏலே பேச்சி, இதெல்லாம் கொண்டு போய், மாடில சுத்தம் பண்ணில்ல, அந்த அறைக்குள்ள வை..”

“சரி ம்மா.. “
இவளை பார்த்து சிரித்து விட்டு, அந்த பெண், அனைத்தையும் எடுத்துக் கொண்டு, மாடிக்கு சென்றார்..

சேகருக்கு கால் செய்த பாடிகார்ட்,
“சார்,மேம் ஷேப்..கொண்டு வந்து சேர்த்துட்டோம்..பேசுறீங்களா..??”

“…..”

“ஓகே சார்..”

“பெரியம்மா,உங்க கிட்ட பேசனுமாம் சார்..”

போனை, அவர் புறம் நீட்டினார் பாடிகார்ட்..

அதை வாங்கி பேசினார் மரகதம்..

“அலோ..அண்ணா..பிள்ளை வந்துருச்சு..இனி என் பொறுப்பு. கவலையை விடு..நீயே வந்தா கூட, என்னை மீறி பார்க்க முடியாது..சரியா..??”
கூறிவிட்டு, கலகலப்பாய் நகைத்தார் மரகதம்..

“சரி ண்ணா.. சரி ண்ணா.. பிள்ளை கிட்ட பேசுறியா..??”

[the_ad id=”6605″]

“……”

“அப்புறம் பேசுறியா..??சரி, அந்த தம்பி கிட்ட கொடுக்குறேன்..”

வாங்கி பேசிய பாடிகார்ட்,போனை அணைத்து விட்டு,
“சரி பெரியம்மா..கிளம்புறோம்..”

“என்ன தம்பி,காலுல வெண்ணி கொட்டுன மாதிரி..வந்ததும் கிளம்புறேன்னு நிக்குறிங்க..இருங்க, ரா சாப்பாடு சாப்பிட்டு கிளம்புங்க..டிரைவர் தம்பியும் தொடர்ந்து ஓட்டிக்கிட்டு வந்தது களைப்பா இருக்கும்..கொஞ்சம் ஓய்வு எடுக்கட்டும்.. என்ன, நான் சொல்லுறது சரி தானே..??”

டிரைவரை பார்த்து, கேட்டார்….

“மரகதம்மா சொன்னா, எப்போ தப்பா போய் இருக்கு..”

டிரைவர், பல முறை சேகருடன் வரும் போது, மரகதம்மாவை பார்த்து  பேசி இருக்கிறார்..எனவே சகஜமாய் பேசினார்..

“ஹ்ம்ம்..அம்புட்டு தான்.. உட்காருங்க..வா கண்ணு..உன்ற அறையிலே, கொஞ்ச நேரம் ஓய்வெடு..அப்புறம், ரா சாப்பாடு சாப்புடுவ..”

அவர் பேசுவது, இவளுக்கு வித்தியாசமாய் இருந்தது..
சிறிது நேரத்தில், பேச்சி ஒரு தட்டில் வெள்ளை பணியாரம் கொண்டு வந்தாள்..

“சாப்பிடு கண்ணு..உன்ற அப்பாக்கு ரொம்ப பிடிக்கும்..இது..உனக்கும் பிடிக்கும் தானே..”

தலை அசைத்தவள், அதை சாப்பிட ஆரம்பித்தாள்..
மரகதம், அவர் பாட்டுக்கு பேசிக் கொண்டிருந்தார்..
பாதி காதில் விழுந்தது..சில விஷயம் கருத்தில் விழுந்தது..

“என்ன கண்ணு,வந்த அன்னைக்கே அத்தை படுத்துறனா..??”

“ச்சே..ச்சே..”

“சரி கண்ணு..முகம் கழுவி, உடுப்பு மாத்துறதுன்னா மாத்து.. சாப்பாடு தயார் ஆனதும், கூப்பிடுறேன்..”
கூறிவிட்டு கீழே சென்றார்..

கண்களை விரித்து,
“ஊப்ஸ்..”
என்று உதட்டு வழியாக வேகமாய் காற்றை வெளியே விட்டவள், அங்கிருந்த படுக்கையில் விழுந்தாள், விட்டத்தை பார்த்த வண்ணம்..

சிறிது நேரத்தில், உணவு தயாராகி விட்டதாய்  பேச்சி வந்து கூறினாள்..
முகம் கழுவி  வேறு உடை மாற்றியவள், கீழே வந்தாள்..

டிரைவரும் பாடிகார்ட்டும், சாப்பிட்டு கிளம்ப தயாராய் இருந்தனர்..

இவளை கண்டதும்,
“ஓகே மேம் கிளம்புறோம்..”

“சின்னம்மா வரேன் மா..”
விடைபெற்றனர்..

தலை அசைத்து விடை கொடுத்தாள்..
அவர்கள் சென்றதும், இவளும் சாப்பிட்டாள்..

“போய் தூங்கு கண்ணு..பொழுது முச்சூடும், வண்டில வந்தது, களைப்பா இருக்கும்..”

அவர் கூறியதும்  மாடிக்கு வந்தவள், அங்கு இசைத்துக் கொண்டிருந்த, தன் மொபைலை எடுத்தாள்..

“ஹ்ம்ம்..வந்துட்டேன்..”

[the_ad id=”6605″]

“…..”

“ஹ்ம்ம்…”

“….”

“ஹ்ம்ம்..சரி..”

பேசிவிட்டு  படுக்கையில்  விழுந்தவளுக்கு, தூக்கம் வரவில்லை..

வெகு நேரம் புரண்டு விட்டு, நித்திரா தேவியை  வலுக்காட்டாயமாய் இழுத்துக் கொண்டாள்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!