Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

05. முகில் - ஊஞ்சலாடும் முகிலே

ஊஞ்சலாடும் முகிலே 32

அத்தியாயம் 32

 

“இன்னும் என்ன பல்லவி?” அவள் பார்வையின் மாற்றம் புரிந்து கவலையும் கனிவுமாய் கேட்டான் ஈஸ்வர்.

 



Advertisement

ஒரு பக்கம் இது இன்னும் எத்தனை நாட்களுக்கு என எரிச்சலாய் இருந்ததும் நிஜம் அவனுள். என்னவோ நினைக்கிறாள் மனதை அலைக்கழிக்கிறாள் என புரிந்தாலும் பக்கமிருந்து ஆறுதல் சொல்ல முடியாத தன் நிலையில் உண்டான எரிச்சல் அது.

 

“இல்ல! என்ன ரொம்ப மோசமான பொண்ணுன்னு நினைச்சுப்பிங்க இல்ல?” என்றவள் கேள்வி இன்னும் அவனுள் தூபம் வார்த்தது.

Advertisement

 

Advertisement

“என்னானாலும் நம்மகிட்ட தானே வந்து நிக்கறானு நினைச்சிருப்பிங்க இல்ல?” என்ற அவளின் அடுத்த கேள்வியில்,

 

“நான் சொன்னேனா அப்படி?” என்ன முறைப்புடன் அவன் கேட்க,

Advertisement

 

“ஆனா தோணும் தானே?” என்றவள்,

 

“லதாம்மா அப்படி எல்லாம் நினைக்க மாட்டாங்க. எனக்கு தெரியும். நீங்க நினைக்க வாய்ப்பிருக்கு. அன்னைக்கு வீட்டுக்கு வந்த உங்களை முகத்துக்கு நேரா வேறே ஓவரா பேசிட்டேன்ல?” என்றவள்,

 

“ஆனா அப்போ எனக்கு தெரியாது உங்களுக்கு தெரியாம தான் உங்க அப்பா எங்க வீட்டுக்கு வந்து பேசினாங்கனு. முன்னாடியே தெரிஞ்சிருந்தா அவருக்கு லெப்ட் அண்ட் ரைட் குடுத்த கையோட லதாம்மாக்கும் கால் பண்ணி உங்க வீட்டுக்காரரை எந்த ஹாஸ்பிடல்ல சேர்க்க போறிங்கனு கேட்டிருப்பேன்” என்றவள் சொல்லில் இவன் அமைதியாய் இருக்க,

 

“எனக்கே தெரியுது நான் அதிகமா பேசுறேன்னு. ஆனா அவ்வளவு கோபம் அவங்க மேல. அதுவும் என்னை பேசின பேச்சுக்கு…” என்றவள் இப்போதும் அதை நினைத்து பல்லைக் கடித்தாள்.

 

“இந்த காசு மட்டும் இடையில இல்லைனா உங்க குடும்ப சங்காத்தமே வேண்டாம்னு போயிருப்பேன்.. இன்னும் அஞ்சு வருஷமாகும் நான் அதை திருப்பி தர. அதுவரை இப்படி தான் அப்பப்போ லூசு மாதிரி உளறிட்டு இருக்க தான் போறேன்!” என்றவள் சொல்லில் சிரிப்பும் வந்தது கீர்த்திஸ்வரனுக்கு.

 

“நீங்க நினைக்குறதுக்காக பேசாம காசை வாங்கிட்டு போக முடியல. பின்ன யாரு எனக்காக பேசுவா? நான் தானே பேசணும்? இல்லைன்னா நீங்களும் உங்க அப்பா மாதிரி என்னை நினைச்சுட்டா!” என்று அவள் சொல்ல,

 

“பல்லவி! ஏன் இவ்வளவு யோசிக்குற?” என்றுவிட்டான் சட்டென்று.

 

அன்னை முன் இப்படியெல்லாம் அவள் பேசி இருந்தால் கூட அவர்களுக்கு தனிமை கொடுத்து இவன் விலகி நழுவி சென்றிருக்க கூடும். இது தான் அவள் மனதில் இருந்து அவனிடம் பேசும் முதல்முறை. அதுவும் எப்பொழுதும் அவளிடம் ஒரே மாதிரியான பேச்சு தான் என்பதில் மாற்றமில்லை.

 

“இங்க யாரும் உன்னை தப்பு சொல்ல முடியாது பல்லவி. நீ இப்படி பேசலைனா தான் தப்பே. அப்கோர்ஸ் உனக்காக உன்னை விட யாரால சரியா பேசிட முடியும்?” என்றவன் பேச்சில் கண்களிலும் உதடுகளிலும் சிறு நிம்மதி கலந்த புன்னகை பல்லவியிடம்.

 

“நான் தர்றதா சொல்லி இருந்த பணத்தை கேட்க தான் நீ வந்திருக்க. இதுல கில்டியாக என்ன இருக்கு? முதல்ல படிப்பை நல்லபடியா முடிக்க பாரு. அப்புறம் இதையெல்லாம் நாம பேசி முடிப்போம்!” என சூசகமாய் அவன் சொல்வது அவளுக்கு புரிய வாய்ப்பில்லை.

 

“ஹ்ம் நானும் அப்படி நினைச்சு தான் வந்தேன். ஆனாலும் ஒருமாதிரி ஆகிடுச்சு. வேற ஒண்ணுமில்ல” என்றவள்,

 

“ஓகே சார்! நான் கிளம்புறேன்!” என்று எழுந்து கொண்டாள்.

 

“ஹ்ம் பார்த்து போ!” என்றவன்,

 

“அம்மாக்கு நீ அவங்களை பார்க்க வர மாட்டன்னு தெரியும். ஆனா உன் கால்க்காக இப்பவும் வெய்ட் பண்ணிட்டு தான் இருக்காங்க!” என்று சேர்த்து அவன் சொல்ல,

 

“நான் பண்ண மாட்டேன். அன்னைக்கு மட்டும் போகும் போது நீ வரலைனாலும் நான் உன்னை பார்க்க வர்றேன்னு சொல்லிட்டு தானே போனாங்க. எத்தனை நாளாச்சு? என்னை பார்க்கணும்னு அவங்களுக்கு இல்லை தானே?” என்றவள் சொல்லில் தலையசைத்து அவன் சிரித்துக் கொள்ள,

 

“லதாம்மாக்கு என்னை தெரியும். நான் கேட்டேன்னு கூட நீங்க சொல்ல வேண்டாம்!” என்றும் சொல்ல, தோள் குலுக்கிக் கொண்டான் ஈஸ்வர்.

 

“ஹ்ம்!” என்றவள் முறைப்போடே விடைபெற, சிரித்தபடி தானுமே கிளம்பிவிட்டான் வீட்டிற்கு.

 

வந்து நடந்ததை அன்னையிடம் ஈஸ்வர் சொல்ல, “அவ்வளவு தானா! நான் கூட என்னவோ ஏதோனு பயந்துட்டே இருந்தேன் ஈஸ்வர். உனக்கு போன் பண்ணலாம்னு கூட நினைச்சேன். பக்கத்துல அவ இருந்தா என்ன பண்ணனு தான் பண்ணல!” என்று சொல்லிய லதா,

 

“இனி சின்ன அம்பானி ஆனா தான் அவ கீழேயே இருப்பா பாரு!” என்றுmம் சேர்த்து கூறியவர் முகத்தில் புன்னகை.

 

“ரொம்ப நல்ல பொண்ணு ஈஸ்வர். நாம எல்லாம் ஒண்ணு நினைச்சா அவ வித்தியாசமா அதை நினைக்குறா!” என்றவருக்கு கவலையும் தான்.

 

“என்ன சொல்லு இன்னும் மனசு ஆறல எனக்கு உன் அப்பா பண்ணி வச்ச வேலைக்கு. இன்னும் ஆறு மாசத்துல அவ படிப்பு முடிஞ்சுடும். அதுக்குள்ள உன் அப்பாவை வழிக்கு கொண்டு வர்றது ஒரு பக்கம். முதல்ல பல்லவி? அவகிட்ட என்னனு இதை பேச. தாம்தூம்னு குதிக்க போறா பாரு!” என்றார்.

 

“பார்த்துக்கலாம் ம்மா!” என்ற கீர்த்திஸ்வரன் அங்கிருந்து எழுந்து தன்னறைக்கு செல்ல திரும்பியவன்,

 

“அப்புறம் ம்மா! இன்னும் ஆறு மாசம் எல்லாம் இல்ல. நாலே மாசம் தான்!” என்று சொல்லி சிரித்தபடி செல்ல, அதைப் பார்த்தவருக்கு இன்னும் பொறுக்கவில்லை.

 

அத்தனை கவனமாய் இருந்தனர் அடுத்த நான்கு மாதம் முடிவதை எண்ணி.

 

மகன் விருப்பம், கணவன் கோபம், பல்லவி படிப்பு என கணக்கு வைத்து தான் நாட்களை நகர்த்தும்படியானது லதாவிற்கு.

 

இடையில் பல்லவி அஞ்சலி எண்ணை மட்டும் வைத்து கோபமாய் எதாவது வாட்சப்பில் ஸ்டேட்டஸ் வைக்க, தானும் கோபம் தான் என்பதை உணர்த்தும் பொருட்டு அஞ்சலியும் அதே போல அவளுக்கு மட்டும் என ஸ்டேட்டஸ் வைக்க, செய்தியை மட்டும் அன்னையிடமும் அண்ணனிடமும் அவ்வபோது கூறிக் கொள்வாள்.

 

“கோவத்துல கூட விளையாட்டு தான் அவளுக்கு!” என்று அத்தனை எளிதாய் கடக்க முடிந்தது அனைவருக்குமே.

 

இடையில் மகேஸ்வரன் தரகரை வீட்டிற்கு வர வைத்திருக்க, அன்று விடுமுறை நாள் என்பதால் அஞ்சலியும் வீட்டில் தான் இருந்தாள்.

 

பார்த்ததுமே கண்டு கொண்ட லதாவிற்கு கோபமான கோபம் கணவரை நினைத்து. மகன் இன்னும் அவன் அறையில் இருந்தே வரவில்லை. இப்படி விடிந்தும் விடியாத வேளையில் பிரச்சனையை இழுத்துக் கட்டி கொண்டு வருகிறார் என பொருமி நிற்க,

 

“தேவி! காபி கொண்டு வா!” என சமையலறை நோக்கி குரல் கொடுத்தார் மகேஸ்வரன்.

 

“சொல்லு டி!” என அஞ்சலியிடம் லதா சொல்ல,

 

“தேவிஅக்கா இன்னும் வர்ல ப்பா!” அஞ்சலி கூறியதும் தான் மகேஸ்வரணும் மணியைப் பார்த்தார்.

 

இன்னும் அந்த நிகழ்வின் பின் மனைவியிடம் அவர் பேசியிருக்கவில்லை. மனைவியும் தன்னிடம் பேசவில்லை என்பதை அவர் உணரவில்லை.

 

“காபி எடுத்துட்டு வா அஞ்சலி!” என மகளிடம் சொல்லிவிட்டு தரகரை அமர சொல்லி உபசரிக்க,

 

“இன்னைக்கு நான் பேசுற பேச்சுல. மனுஷன் அடுத்து பொண்ணு பார்க்கவே போக கூடாது. வீட்டைவிட்டு போறேன்னு அன்னைக்கு மிரட்டினார் இல்ல? இனி நிஜமாவே போனாலும் கவலை இல்ல!” என புலம்பியபடி கிட்சனில் சென்று காபி கலந்தார் லதா.

 

“அவ்வளவு திமிரா இவருக்கு? பையனோட ஆசை எல்லாம் ஒண்ணுமே இல்லையா இவருக்கு? அப்புறம் எதுக்கு அப்பான்னு சும்மா பேருக்கு?” என அத்தனை ஆத்திரம்.

 

தரகர் இருந்தாலும் அவர் முன் இதையெல்லாம் சொல்லி இன்று நன்றாய் பேசிவிட வேண்டும் என சமையலறையில் பால் கொதிக்கும் முன் பேச வேண்டிய அனைத்தையும் நியாபகத்திற்கு கொண்டு வந்து தயாராகி காபி கலந்து லதா வெளியில் வர,

 

“சாரி அங்கிள்! அப்பா இப்படி எங்களுக்கு தெரியாம உங்களை வர சொல்லி கஷ்டப்படுத்திட்டாங்க. ஆல்ரெடி பொண்ணு பார்த்தாச்சு. இன்னும் கல்யாணத்துக்கு தான் நாள் குறிக்கல. பேமிலிக்குள்ள தான் சின்ன மிஸ்ஸண்டர்ஸ்டாண்டிங். தேவை இருக்கும் போது நிச்சயமா கூப்பிடுறோம்!” என மொத்தமாய் அங்கே கீர்த்திஸ்வரன் பேசியதில் தரகர் எழுந்து கொள்ள,

 

“அறிவுகெட்டத் தனமா பேசி வைக்காத ஈஸ்வர். நீங்க உக்காருங்க!” என தரகரை மகேஸ்வரன் சொல்ல, கீர்த்திஸ்வரன் அத்தனை உறுதியாய் அவரைப் பார்த்து நின்றதில்,

 

“பரவால்ல சார்! நீங்க வீட்டுல பேசிட்டு எப்பனாலும் சொல்லுங்க நான் வர்றேன்!” என்று சொல்லி கிளம்ப தயாராகிவிட்டார்.

 

“கோஃபி குடிச்சுட்டு போகலாமே!” என லதாவும் மகன் பேச்சைக் கேட்டபடி முகமெல்லாம் புன்னகையோடு காபியை கொண்டு வந்து நீட்ட,

 

“இருக்கட்டும் ம்மா! அதான் பொண்ணு இருக்காளே! அப்புறமா வரதானே போறேன்!” என்று சொல்லி சென்றுவிட்டார் அவர்.

 

“இத்தனை நாளும் வீட்டுக்குள்ள அசிங்கப்படுத்தினது போதாதுன்னு வர்றவன் போறவன் முன்ன எல்லாம் அசிங்கப்படுத்திப் பார்க்கிங்க இல்ல குடும்பமா?” என ஆரம்பித்துவிட்டார் மகேஸ்வரன்.

 

“நீங்க தான் ப்பா என்னை பேச வச்சுட்டு இருக்கீங்க அடுத்தவங்க முன்னாடி. என்கிட்ட சொல்லலை பரவால்ல அம்மாகிட்டவாச்சும் இப்படி தரகரை வர சொல்லிருக்கேன்னு சொல்லனுமா இல்லையா நீங்க?” என ஈஸ்வர் கேட்க,

 

“சும்மா நடிக்காத ஈஸ்வர். நீயும் உன் அம்மாவும் சேர்ந்து என்ன பிளான்ல இருக்கீங்கன்னு எனக்கு தெரியாது?” என்றவரை கேள்வியாய் அவன் பார்க்க,

 

“வேலைக்கு வந்தவளை இந்த வீட்டுக்கு மருமகளா கொண்டு வர தானே ரெண்டு பேரும் சதி பண்ணிட்டு இருக்கீங்க? இப்பவும் அந்த ஆள்கிட்ட பொண்ணு பார்த்தாச்சுன்னு தானே சொல்லி அனுப்பியிருக்க நீ?”

 

“ப்பா தப்பா பேசாதீங்க ப்பா!” என பொறுமை இழந்து சத்தமிட்டவன்,

 

“நானும் அம்மாவும் கூட்டு சதி பண்ணி உங்களுக்கு தெரியாம எதுவும் தனி நாட்டுக்கா போக போறோம்? உங்க முன்னாடி தானே பொண்ணு பார்த்தாச்சுன்னு சொல்றேன்? அந்த பொண்ணை உங்களுக்கு தெரியும் தானே? இதுல என்ன இருக்கு மறைக்க? நீங்க தான் எங்களுக்கு தெரியாம இப்படி ஆளை வர சொல்லி எங்களை இன்சல்ட் பண்ணிட்டு இருக்கிங்க!” என சொல்லி துவண்டு நின்றான்.

 

“ஏன் இப்படி இருக்கீங்க? கல்யாணம்னா எனக்கு பிடிக்க வேண்டாமா அந்த வாழ்க்கை? உள்ள தள்ளி விட்டா போதும்னு நினைக்குறிங்க இல்ல? இதோ இப்ப அம்மா வாழ்ந்துட்டு இருக்குற மாதிரி?” லதா அருகே வந்து அவர் கைகளைப் பற்றி அத்தனை வருந்தி நின்றான் ஈஸ்வர்.

 

மனம் சோர்வாய் போனது அந்த நிமிடம். ‘இந்த பல்லவி என் வாழ்க்கைல வராமலே இருந்திருக்கலாம்!’ மனம் நினைக்க,

 

‘வந்துட்டாளே! என்னனு விட முடியும்?’ என்றதும் அதே மனம் தான்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!