Skip to content
Post Views: 575
யுகத்தின் தலைவன்
அத்தியாயம் 34
நித்யாவும் கங்காவும் அவர்கள் வீட்டிற்கு செல்ல பஸ்ஸூக்காக காத்திருந்தனர்.
கங்காவின் விதி என்றுதான் சொல்ல வேண்டும்.மாலதியும் சல்மானும் ஒரே ஊரை சேர்ந்தவர்கள்.அவர்களுக்கான பஸ் வந்து சேர்ந்தது.மாலதி நேரே உள்ளே சென்று இருவர் மட்டும் அமரும் இருக்கையை பிடித்து அமர்ந்தாள்.
கங்காவின் முகத்தை பார்த்தே “எதாச்சு எங்கிட்ட சொல்லனுமா” என்றான் சல்மான்.
சிரித்து கொண்டே பையில் இருந்த குலாப்ஜாமூனை எடுத்து தந்தாள்.
Advertisement
அவனும் அதை வாங்கி கொண்டு பஸ்ஸினுள் ஏறினான்.மாலதி அவனை அருகில் அமர வைத்துக் கொண்டாள்.
அவளது முகத்தில் இருந்த நரியைப் போன்ற சிரிப்பும், அவளது நடத்தையும் கங்காவிற்கு சுத்தமாக பிடிக்கவில்லை.
ஏன் கங்கா ஒரு மாதிரி இருக்கே?லேட்டா போனா அப்பா திட்டுவாரா?நான் வேணுனா உன் வீடு வரைக்கும் வந்து சொல்லி விடவா?என்றாள் நித்யா.
Advertisement
அதெல்லா வேண்டாடீ. நான் பாத்துக்கறே. இந்த மாலதி ஏன் இப்படி நடந்துக்கறா?அவளை நான் என்னோட ப்ரெண்டாதா நினைக்கறே.ஆனா அவ என்னை அவளோட போட்டியா நினைக்கறா போலவே.
Advertisement
கங்கா இப்படி சொன்னதும் நித்யாவுக்கு புரிந்து விட்டது.அவளுக்கு சல்மான் மேல “க்ரஷ்” இருக்கு.ஆனா அது நல்லது இல்ல.
ஏன் இப்படி சொல்றே நித்யா.
இவங்க ரெண்டு பேரும் எடுத்த ஃபோட்டோ, பண்ணிகிட்ட சேட் எல்லாம் காலேஜ் சிஸ்டம்லே போட்டு வெச்சிட்டு வீட்டுக்கு போயிட்டா.அடுத்த நாள் காலைலே எக்ஸாம்.கொசின் பேப்பர் பிரின்ட் போட, சிஸ்டம் ஆன் பண்ணுனவங்களுக்கு ஒரே அதிர்ச்சி. இவங்க ரெண்டு பேரு ஃபோட்டோ முன்னாடி இருக்கு.
Advertisement
அவங்க சேட் எல்லா படிச்சு பாத்தவங்க சல்மான் நார்மல் மெசேஜ் தான் பண்ணிருக்கானும்,
இவதான் ஓவரா பண்ணிருக்கானும் சொன்னாங்க. இருந்தும் எல்லாரும் சல்மானை கேள்வி கேட்க ஆரம்பிச்சுட்டாங்க. அவன் எப்படியோ சமாளிச்சிட்டான்.
எல்லாரும் யூஸ் பண்ணறே சிஸ்டம்னு தெரிஞ்சும் வேனுனே இப்படி பண்ணிருக்கா.
சல்மான் நல்ல பையனா இருக்கான். ஆனா இவ ரொம்ப டேன்ஜர் போலவே நித்யா.
ரொம்ப ரொம்ப டேன்ஜர்,கங்கா.
அப்பறோம் ஏன் சல்மான் அவகிட்ட இன்னமும் பேசிட்டு இருக்கான்?
நீ சந்தேக படற அளவுக்கு எல்லா அவன் இல்ல.அவன பொருத்தவரை ஒரு நல்ல புரொபசர் ஆகனும்.அம்மா அப்பாவை பாத்துக்கணும்னு அவன் வேலைல மட்டும் கண்ணும் கருத்துமா இருக்கான். ஆனா இவதான் தேவை இல்லாத வேல பண்ணிட்டு இருக்கா. அடுத்த வாரம் என் “வைவா” வருது இல்ல அப்போ வந்து பாரு அவளோட ஆட்டத்தை என்றாள்.
“பிஎச்டி முடிக்கறதுல கடைசி படிதான் இந்த ‘வைவா’ “நாம் எழுதிய ஆய்வை பெரிய பேராசிரியர்கள் முன்னாடி நின்னு விளக்கம் சொல்லணும்.அவங்க கேக்குற கேள்விக்கெல்லாம் பதில் சொல்லி, நம்ம ஆராய்ச்சி உண்மையாவே நம்மதுதான்னு நிரூபிக்கணும்.” ஒரு விதத்துல இது பரீட்சை மாதிரிதான். ஆனா பேப்பர்ல எழுதுறதுக்குப் பதிலா நேருக்கு நேர் பேசுற பரீட்சை.”இதுல பாஸ் ஆயிட்டா தான் ‘டாக்டர்’னு பெயருக்கு முன்னாடி போட முடியும்,”
இந்த வைவா பற்றிய அறிவெல்லாம் அப்போது கங்காவிற்கு இல்லை. நித்யாவிற்காக சென்று அப்படியே தனக்கு ஒரு மேற்பார்வையாளரை பார்க்க வேண்டும் என்ற திட்டத்தோடு சென்றாள்.
ஆய்வை பேராசிரியர்கள் முன்பு விளக்க ஆரம்பித்தாள், நித்யா.பயிற்சி செய்ய வில்லை போல. அவள்தான் ஆராய்ச்சி செய்தாளா? என்றிருந்தது அவளது விளக்கம்.ஒரு கேஜி வகுப்பு ஆசிரியர் கூட இந்த அளவிற்கு பாடத்தை விளக்கமாட்டார்.அந்த லட்சணத்தில் இருந்தது அந்த விளக்கம்.
ஒரு ஆசிரியர் மாணவர்கள் முன்பு நிற்கும் போதே, நெஞ்சை நிமிர்த்தி நிற்க வேண்டும். எப்படியும் கவனச்சிதறல் ஏற்படும்.அவரது நடை உடை பாவனை தாண்டி,ஏதோ ஒன்று அவரை நோக்கி நம்மை ஈர்க்க வேண்டும்.குரலின் ஏற்ற இறக்கம், தேவையான இடத்தில் அழுத்தம், இடை இடையே நகைச்சுவை, பொது அறிவு, நிகழ்கால நிகழ்வு இதையெல்லாம் உள்ளே கொண்டு வந்தால் மட்டுமே மாணவர்களை இருக்கையில் அமர வைக்க முடியும். இல்லையென்றால் விடிய விடிய ராமாயணம் சொல்லி, விடிந்ததும் சீதைக்கு ராமன் சித்தப்பன் என்ற கதைதான்.
இதையெல்லாம் வைவாவில் எதிர்பார்க்க முடியாதுதான்.
கொஞ்சமே கொஞ்சம் ஏற்ற இறக்கத்தோடு படித்தாவது இருந்திருக்கலாம் என்றே தோன்றியது கங்காவிற்கு.கேள்வி நேரம் பேராசியர்கள் கேட்க,இவள் அவர்களிடம் சண்டை போடுவது போலவே பதில் தந்தாள். அதற்குள் ஒரு நாற்பது வயது மதிக்கத்தக்க பேராசியர் எழுந்து இவளுக்கு பதில் அவரே பதில்களை தந்து நிலையை சமாளித்தார்.
கங்காவின் மூளையில் சட்டென வெளிச்சம். இவர்தான் தனக்கான மேற்பார்வையாளர் என நினைத்தாள். ஒருவழியாக எல்லாம் முடிந்தது. சொன்னதை போலவே மாலதியின் ஆட்டம் கொஞ்ச நஞ்சமல்ல,மாலை மூவரும் ஒரு ரெஸ்டாரண்டில் சாப்பிட அமர, இறுதியாகதான் சல்மான் வந்தான்.
வந்தவன் பாக்கெட்டில் இருந்த பேனாக்களை எடுத்து கங்கா முன்பு வைத்தான்.அதற்குள் மாலதி நரித்தந்திரம் செய்து கங்காவிற்கு நேர் எதிரில் சல்மானுடன் அமர்ந்து கொண்டாள்.பார்ப்பதற்கே அருவருப்பாக இருந்தது.அவள் மீது இருந்த மொத்த கோபமும் சல்மான் மீது திரும்ப,தன் முன் அவன் வைத்த பேனாக்களை எடுத்து அவன் மீதே எறிந்து விட்டாள்.மேற்கொண்டு அவனிடம் எதுவும் பேசாது வீடு வந்து விட்டாள்.
சல்மான் ஃபோனில் அழைத்து “ஏன் இப்படி பண்ணுனே” என கேட்க
ஒன்றுமில்லை என அவனை திசை திருப்பினாள்.
சல்மான் வைவா இப்படி தான் இருக்குமா?
இல்ல கங்கா ரொம்ப கஷ்டமா இருக்கும்.
உன் வைவா எப்போ வரும்?
இன்னமும் மூனு வருஷம் இருக்கு.
சல்மான் என்னை கூப்பிடுவையா?
இல்லை கங்கா கூப்பிட மாட்டேன்.
சரி வேண்டா. இன்னைக்கு ஒரு சார் எழுந்து பதில் சொன்னாரே.
அவர்கிட்ட சீட் கிடைக்குமா?
அவர் பேரு ராஜ சேகர். அவர்கிட்டதான் நானும் பிஎச்டி பண்ணிட்டு இருக்கே. அவர் கிட்ட சீட் கிடைக்கறது ரொம்ப கஷ்டம் கங்கா. ஆனா நீ எதுக்கும் ட்ரை பண்ணு.
சரி சல்மான்.குட் நைட் என பேச்சை முடித்தாள்.
இரண்டு வாரங்களில் கங்காவின் பிறந்தநாள் வந்தது. ஒரு ரெஸ்டாரண்டில் கேக் வெட்ட ப்ளான் செய்தனர்.கங்கா தயாராகி இந்த முறை தொப்பியை எடுத்துக் கொண்டு கிளம்பினாள்.
ரெஸ்டாரண்ட் வர, சல்மான் மட்டுமே இருந்தான்.நித்யாவும்,மாலதியும் வர தாமதமானது.
கங்காவை பார்த்தும் கையை நீட்டி “ஹேப்பி பர்த்டே”என்றான். மறுப்பு சொல்லாமல் அவன் கையை பிடித்து “தேங்க்யூ”என்றாள்.
இரும்புக்கு இடையில் வேலை செய்து சிவராமனின் கை இரும்பை போல இருக்கும்.ஒரு அடி அடித்தால் தலை சுற்றி கீழே விழுந்து விடலாம் அப்படி இருக்கும் கை.
ஆனால் இன்று சல்மான் கை மிருதுவாக இருந்தது. “சல்மான் உன் கை ரொம்ப சாப்ட்டா” இருக்கு என்றாள். மேற்கொண்டு அவன் ஏதும் பேச வில்லை.
கேக் வர, சல்மான் “கங்கா நின்று வெட்ட சவுகரியமாக இருக்குமா?”என ஆராய்ந்து டேபிள் மேல் எடுத்து வைத்தான்.
கங்கா கேக் வெட்டி, நித்யாவிற்கும் மாலதிக்கும் ஊட்டி விட்டாள். சல்மானுக்கும் ஊட்டி விட செல்ல, அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.கங்காவா இது என,சிரித்து கொண்டே வாங்கி கொண்டான்.அவள் அவனுக்கு ஊட்டி விடுவதை நித்யா வீடியோவாக எடுத்தாள்.நீங்கா நினைவாக கங்கா அதை பத்திரப்படுத்தி வைத்தாள்.
கிளம்பும் போது தொப்பியை அவனிடம் தந்தாள்.உன் பர்த்டே க்கு நீ எனக்கு கிஃப்ட் தரே என்றான்.நீதான் எனக்கு இவ்வளவு பெரிய கிஃப்ட் கொடுத்துட்டையே அப்பறோம் என்ன என்றாள் அவள்.
சிவராமன் மீண்டும் ஒரு மாப்பிள்ளையை பிடித்து விட்டார். கங்காவே,” இப்படி எல்லார் முன்பு சென்று நிற்க விருப்பமில்லை. இந்த வரனாவது அமைந்து விட வேண்டும்” என வேண்டிக் கொண்டே சென்றாள்.
ஆச்சரியம்! இந்த முறை எல்லாம் சரியாக அமைந்தது.
மாப்பிள்ளையும் அமைதியானவராக நல்லவராக தெரிந்தார். இவளை கடந்த காலம் பற்றிய கேள்விகளால் துளைத்து எடுக்க வில்லை.
மாப்பிள்ளையின் அம்மா தரப்பில் மட்டும் ஒரு கோரிக்கை வைக்கப்பட்டது. திருமணம் முடிந்த உடன் கங்கா வேலையை விட வேண்டும் என்று. தங்கள் வீட்டு பெண் வெளியில் வேலைக்கு சென்றால்,குடும்ப கெளரவம் பாதிக்கப்படுமாம்.
சிவராமனும் அந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்டார்.ஆனால் கங்காவிற்கு மட்டும் வேலையை விட விருப்பம் இல்லை.அது சாதாரண வேலை இல்லையே.எத்தனையோ காயங்களின் நிழலில் இருந்து தன்னை வெளியே கொண்டு வந்த ஆபத்பாந்தவன் அல்லவா.
சிறுவயதில் இருந்தே பள்ளி முடித்து வந்தபின் சாக்பீஸ் வாங்கி சுவரெல்லாம் கிறுக்கி டீச்சர் விளையாட்டு விளையாடி சேமித்த கனவு அது.அதை எப்படி இன்று வந்த ஒருவனுக்காக விட முடியும்.தன்னால் முடியாது.
கங்கா,மாப்பிள்ளை உனக்கு பிடிச்சு இருக்கா?எங்கே ‘புடிக்கலப்பா’ என சொல்லி விடுவாளோ என்ற ஏக்கத்தில் சிவராமன் கேட்க…
என்னதான் தன் வாழ்க்கை. ஏன் ஏதாவது குறை உடையவனையே தனக்கு தர வேண்டும்? சரி வேலை மட்டும்தானே…கொஞ்ச நாள் வேலையை விடலாம். பிறகு அவனிடம் பேசி வேலையை தொடரலாம் என சிவராமனுக்காக இறங்கி வந்தாள்.
பிடிச்சிருக்குப்பா…
சிவராமனின் சந்தோசத்தை பற்றி கூறவா வேண்டும். கங்காவிற்கு பிடித்ததை எல்லாம் வரும் வழியிலேயே வாங்கி குவித்தார்.
வீடு வந்தவள் நித்யாவிடம் ஏதாவது ஐடியா கேட்கலாம். அவள்தான் வரும் மாப்பிள்ளை இடம் அவளது கேரியரை பற்றி ஸ்ட்ராங்காக பேசக் கூடியவள் என அழைக்க எடுக்க வில்லை.
சல்மானுக்கு அழைத்து நித்யா பற்றி கேட்க, அவ கொஞ்சம் பிஸியாக இருக்கா, என்ன வேணும்? சொல்லு கங்கா என்றான்.
இவள் மாப்பிள்ளை பார்த்த விசயத்தை மட்டும் பகிர்ந்து கொண்டாள். அவர்களின் கண்டிஷன் பற்றி எல்லாம் எதுவும் கூற வில்லை.
இப்போ எங்கே இருக்கே?
வீட்டுல.
பர்ஸ்ட் நீ ஸ்கூல்க்கு கிளம்பு.வீட்டுல இருந்தே தேவை இல்லாம கண்டதையும் நீ யோசிசிட்டு இருப்பே. நல்ல வேலை நீ இந்த ப்ரோபசன் எடுத்தே.நீ அங்க இருக்குற குழந்தை கிட்ட பேசறது.அடுத்தடுத்த க்ளாஸ்க்கு பிரேபர் பண்றதுன்னு பிசியா இருப்பே. என்னை பொருத்தவரை அது உன்னோட கருப்பு பக்கத்துல இருந்து வெளியே கொண்டு வர ஒன்னு. எக்காரணத்தை கொண்டும் இந்த வேலையே விட்றாதே கங்கா.பர்ஸ்ட் கிளம்பு.
இவன்தான் இவனேதான் நான் எதிர்பார்த்த துணை என அவளது அறிவு நங்கென அவளது தலையில் கொட்டிச் சொன்னது.அதன் பிறகு அவன் பேசியதெல்லாம் அவள் காதில் ஏறவில்லை.
கல்லூரி படிக்கும் போது தனது கணவனை பற்றிய எண்ணம் வேறு. அழகா இருக்கனும்,உயரமா இருக்கனும்,சிரித்தால் கண்ணத்தில் குழி விழுகனும் அவ்வளவுதான்.
ஆனால் தற்போது வாழ்வில் அடிபட்டு வெந்து நொந்த பின் கணவனை பற்றிய எதிர்ப்பார்ப்பு வேறு. தனக்கு நிம்மதியை தரும் ஒருவன்.தன்னை எந்த நிலையிலும் விட்டுக் கொடுக்காத ஒருவன்.தன் மேல் அக்கறை கொண்ட ஒருவன்.
எப்படி யெல்லாம் தனக்கு ஒருவன் வேண்டும் என எண்ணினாலோ.
இதோ அந்த எண்ணங்களுக்கு உடலையும் உணர்வையும் கொடுத்து இறைவன் அனுப்பி விட்டான். போதும் இவன் மட்டும் போதும்.எந்த நிலையிலும் தன்னை விட மாட்டான் என்ற எண்ணம் அவள் உடம்பின் ஒவ்வொரு செல்லிலும் ஆணி அடித்ததை போல பதிந்தது.
என்ன கங்கா லைன்ல தான் இருக்கையா?
சொல்லு சல்மான். கிளம்பு கங்கா இவ்னிங் பேசிக்கலாம்.
“சரி” என வீட்டிலும் தனக்கு முக்கிய வேலை பள்ளியில் இருப்பதாக பொய் சொல்லி கிளம்பி விட்டாள்.
“இது சரியா? தவறா? நடக்குமா? நடக்காதா?” பஸ்ஸின் ஜன்னலோரம் அமர்ந்தபடி வெளியே ஓடிய மரங்களை பார்த்துக் கொண்டிருந்தாள் கங்கா.
காதல் என்றால் திகட்ட திகட்ட இனிக்கும் கரும்பு என்று தானே எல்லாரும் நினைக்கிறார்கள்.
வயலில் வளர்ந்த கரும்பை ஒரு நிமிஷத்தில் பிடிங்கி தின்னலாம்…ஆனால் அந்த ஒரு கரும்பு வளர
எத்தனை மாதங்கள் வெயிலையும், மழையையும், காற்றையும் தாங்கி நிற்க வேண்டி இருக்கும்.
அதே மாதிரிதான் காதலும்…
வெளியிலிருந்து பார்க்கிறவர்களுக்கு
அது சிரிப்பு, மெசேஜ், போட்டோ, நினைவுகள் மட்டும்தான்.
ஆனால் அந்த காதலை
உள்ளுக்குள் சுமக்கிறவர்களுக்கு மட்டும் தெரியும்…
அதற்காக எவ்வளவு பயம்,
எவ்வளவு பொறுமை,
எவ்வளவு கண்ணீர்,
எவ்வளவு காத்திருப்பு,
எவ்வளவு விட்டுக்கொடுத்தல் தேவைப்படும் என்று.
காதலின் இனிமையை மட்டும் ரசிக்கும் உலகம், அதற்குள் மறைந்திருக்கும் காயங்களையும் போராட்டங்களையும் பெரும்பாலும் பார்ப்பதே இல்லை.
சல்மான் அவளுக்கு வேண்டுமென்பது மட்டும் தெளிவாக தெரிந்தது.
ஆனால்… அவனை அடைவதற்கான பாதை. முள்ளால் நிரம்பி இருப்பதையும் அவள் உணர்ந்திருந்தாள்.
என்ன செய்து தன் காதலை கங்கா அடையப் போகிறாளோ? எவ்வளவு தூரம் இது செல்லும்? சிவராமன் இதையெல்லாம் ஏற்றுக் கொள்வாரா?
நிச்சயம்… ஏற்க மாட்டார்.
–தலைவன் வருவான்…
error: Content is protected !!