ஊஞ்சலாடும் முகில் 43
அத்தியாயம் 43
அலைபேசியை இரு விரல்களுக்கு இடையே சுழட்டிக் கொண்டு பல்லவியின் வருகைக்காக அந்த ஹோட்டலில் காத்திருந்தான் ஈஸ்வர்.
Advertisement
வந்து இரண்டு முறை அவளுக்கு அழைக்க முயற்சிக்க, இரண்டையுமே கட் செய்துவிட்டாள் பல்லவி.
“இவளை..” என வாய்விட்டே முணங்கிக் கொண்டு தான் அமர்ந்திருந்தான்.
Advertisement
Advertisement
அன்று ஒப்பு தாம்புலம் மாற்றிய அன்றே இங்கே இத்தனை மணிக்கு சந்திக்கவென்று சொல்லி தான் வந்திருந்தான் ஈஸ்வர்.
அதன்பின்னும் கூட அழைத்துக் கொள்ளாமல் குறுஞ்செய்தி மூலம் அனுப்பி இருந்தான். இன்று காலையுமே.
Advertisement
இன்று தான் பல்லவி கல்லூரியின் இறுதி நாள். அவள் ஆசையுடன் கனவையும் என ஈஸ்வர் நிறைவேற்ற உதவி செய்து பல்லவி இன்றோடு பட்டதாரி என்ற பெயரை வாங்கவிருக்கிறாள்.
இந்த நல்ல நாளோடு இன்னும் மூன்றே நாட்களில் கீர்த்திஸ்வரனின் மனைவி என்ற பெயரையும் வாங்கவிருக்கிறாள்.
தன் திருமதியாகும் முன் அவளிடம் சில வார்த்தைகள் பேச வேண்டும் என நினைத்து அவன் வந்திருக்க, இன்னும் வராதவளை எண்ணி அவன் நினைவில் இருக்கும் பொழுதே வேகவேகமாய் வந்து அவனுக்கு முன் இருந்த இருக்கையில் அமர்ந்தாள் பல்லவி.
அலைபேசியை டேபிளில் வைத்துவிட்டு ஈஸ்வர் கோபமாyய் அவளை முறைக்க, அதை கவனித்து மன்னிப்பு கேட்கும் சாதாரண பெண்ணா நம் பல்லவி?.
“அதான் காலேஜ் லாஸ்ட் டே இன்னைக்குன்னு தெரியுமில்ல? சும்மா நொய் நொய்னு போன் பண்ணிட்டே இருக்கீங்க? பிரண்ட்ஸ்ஸை பார்த்து பேசிட்டு வர வேண்டாமா? இன்னைக்கு எல்லாரும் கேங்கா வெளில போறாங்க. உங்களால நான் போக தான் முடியல. அட்லீஸ்ட் பேசிட்டு வரட்டும்னு வெயிட் பண்ணவாவது செய்யலாமில்ல?” என மடமடவென்று அவள் பேச, இப்பொழுதும் அவள் குணத்தை நினைத்து அத்தனை சிரிப்பு அவனுக்கு.
“அய்யய்ய! திட்டுறேன் சிரிக்குறிங்க?” என்றவள் முக பாவத்தில் சிரித்தபடி தலையசைத்தவன்,
“நீயே கரஸ்ல தான் கோர்ஸ் பண்ணிருக்க. இதுல லாஸ்ட் டேக்கு அவ்வளவு பில்டப்பான்னு தான்!” என்றவன் கிண்டலில் இன்னும் பிடித்துக் கொண்டாள் பல்லவி.
“ஏன் ஏன்? கரஸ்னா அவ்வளவு கிண்டல் நக்கலா உங்களுக்கு? எப்பவாச்சும் தான் பாக்குறோம்ன்னாலும் பிரண்ட்ஸ் பிரண்ட்ஸ் தானே? ரொம்பத்தான்!” என்றாள் கோபத்தோடே.
“சரி ஓகே! கோர்ஸ் முடிச்சாச்சு. கங்ராஜூலேஷன்! அடுத்து?” என்றவனிடம் அப்பொழுதும் திருமணம் செய்ய இருப்பவனிடம் பேசும் முக பாவம் அவளிடம் தென்படவே இல்லை.
“எங்க செலப்ரேட் பண்ண விட்டிங்க? இன்னும் மூணு நாள் தான் அம்மாவோட இருக்க முடியும். அடுத்து உங்க வீட்டுக்கு வரணும். அம்மா பாவம்!” என்றவள் அத்தோடு நில்லாமல்,
“லதாம்மா அதைவிட பாவம்!” என்றும் சொல்ல,
“மை காட்! பல்லவி! அம்மா, லதாம்மா… இதெல்லாம் ஓகே! கல்யாணத்துக்கு அப்புறம் என்னோட தான் உன் லைஃப். என்னையும் கொஞ்சம் கவனி!” என்று படபடவென்று அவன் சொல்லியதும் தான் நிறுத்தி நிதானமாய் அவனைப் பார்த்தாள் பல்லவி.
“மூச்சை பிடிச்சிட்டு இவ்வளவு நாளும் அமைதியா இருந்தது உன் டிகிரிக்காக தான். நீ கொஞ்சமும் என் நினைப்பில்லாம ஒரு இடத்துல இருந்து இன்னொரு இடத்துக்கு டூர் போற மாதிரி என்னென்ன பேசுற?” என்றவன் பேச்சில்,
“அதுக்கு என்ன பண்ண முடியும்? எவ்வளவோ சொன்னேன் செட் ஆகாதே வேண்டாமேனு. நான் தான் வேணும்ன்னு அடம் பண்ணி வர்ற நீங்க தான் பயப்படணும் லைஃப் எப்படி இருக்குமோனு. எனக்கெல்லாம் எதுவுமில்லை. எனக்கு நல்லா தெரிஞ்ச ஒரு பேமிலி. அவ்வளவு தான்!” என சர்வ சாதாரனமாய் அவள் சொல்ல,
“ஓஹ்!” என ஒற்றை புருவத்தை ஏற்றி இறக்கியவன்,
“இங்க என்ன?” என்றான் அவள் உதட்டுக்கு கீழான நாடிப் பகுதியை கை காண்பித்து.
“என்ன?” என்றவள் கைவைத்து தட்டிவிட்டு தன் கையில் பார்த்து,
“ஒண்ணுமில்லயே!” என்று அவனைப் பார்க்க,
“ஓஹ்! மச்சமா?” என்றவனை மேலேயும் கீழேயுமாய் பார்த்து வைத்தாள் பல்லவி.
‘சரியில்லையே!’ என உள்ளுணர்வு முதல் முதலாய் விழித்துக் கொள்ளப் பார்த்தது பல்லவியிடம்.
“என்ன சாப்பிடுற?” என அவள் பதிலை அங்கேயே விட்டு ஈஸ்வர் கேட்க,
“பசிக்குது. எதுவானாலும்!” என்றவளுக்கும் தனக்குமான உணவை அவன் வர செய்ய, சில நிமிடங்கள் தான் இருவரிடமும் அமைதி.
“இன்னைக்கு காலேஜ்ல ஒண்ணு தோணுச்சு!” என்றதும் என்னவென அவன் பார்க்க,
“உங்க காசு!” என்றதும் புஸ்ஸென்றானது அவளுக்கு. ‘உன்கிட்ட சொல்லி புரிய வைக்கிறதுக்குள்ள!’ என்று பல்லைக் கடித்தவன், தலையை உலுக்க,
“கல்யாணமே ஆனாலும் திருப்பி குடுக்கணும் தான். அன்னைக்கு என்ன சொன்னிங்க? என் காசே எனக்கு வரணும் இல்ல நான் தந்ததா இருக்கணுமா? வேற யார் பணமும் வேண்டாம்?” என்றவள் முறைப்பில், அன்றைய தின நியாபகம் தான் அவனிடமும்.
“ஆமா பின்ன? அதுவும் அன்னைக்கு நான் பணத்தை எல்லாம் நினைக்கவே இல்லை. உனக்கு கல்யாணம்னு சொன்னாங்களேனு டென்ஷன்ல இருந்தேன். நீ யோசிக்காம நான் பணத்தை தந்துடுவேன் அது இதுண்ற! போற போக்குல புருஷன் இவன் தான் அவன் பணம் தான்னு எனக்கு விபூதியாகிடுமோன்ற கடுப்புல சொன்னது அது!” என்றான் இப்போதும் முறைத்து.
அவன் சொல்ல சொல்ல பல்லவியிடம் இப்பொழுது ஒரு புன்னகை. அப்போது புரியாதது இப்போழுது என்னவோ புரிவதை போல இருந்தது.
“ஆனாலும் கொஞ்சம் ஜெர்க் ஆச்சு. ஊருபட்ட பிரச்சனையை கூடவே வச்சுட்டு உன்கிட்ட என்னனு நான் பேச?” என்றான் அவனே.
“அதென்ன பிரச்சனை? ஊருபட்ட பிரச்சனை?” என்றவளிடம் கதை கேட்கும் பாவமும் கூடவே சிறு சுவாரசியமும்.
“ஆமா! பின்ன! உன்னை கல்யாணம் பண்ணனும்ன்றது கொஞ்சம் கொஞ்சமா எனக்குள்ள உண்டான ஒரு இன்ட்ரெஸ்ட் தான். அதை புரிஞ்சிக்கவே அவ்வளவு நேரம் எனக்கு தேவைப்பட்டுச்சு. சரினு புரிஞ்சு அம்மாகிட்ட சொன்னா சந்தோஷப்பாடுவாங்களேன்னு சொன்னா அதை அப்பா ஒட்டுக்கேட்டு உன்கிட்ட அத்தைகிட்ட எல்லாம் பிரச்சனை பண்ணி!” என்று சொல்லவே பல்லவியிடமும் அந்த நாள் நியாபகம்.
அதிகத்திற்கும் அதிகமாய் தான் பேசி இருந்தார் மகேஸ்வரன். அதன் தாக்கம் தான் இன்று வரை அவரிடம் இவளால் நேராய் பேச முடியவில்லை.
“இப்பவரை நம்ம கல்யாணம் இவ்ளோ தூரம் எப்படி சாத்தியமாச்சுன்னு எனக்கே வியப்பா தான் இருக்கு. முதல் முதல்ல உங்க வீட்டுக்கு ஹெல்ப் கேட்டு வந்தப்ப அம்மாக்கு அவ்ளோ தயக்கம். நான் தான் வேலை தானே கேட்க போறோம். வந்தா மலை போனா டேஷ்னு சொல்லிட்டு வந்தேன். ஆனா அப்ப கொஞ்சம் இருந்த பயம் கூட லதாம்மா கூட பழக பழக விட்டுப் போச்சு. அகைன் அந்த பேச்சு வந்தப்புறம் என்னவோ உங்க வீட்டுக்கு வரவே தோணல!” என அவளும் தன் பக்கமாய் பேசினாள் பல்லவி.
“அப்படி என்ன நாம கீழ போய்ட்டோம் இவங்களுக்குன்னு ஒரு கோவம்” என இப்போதும் தகித்த மனதுடன் அவள் கேட்க,
“ஹ்ம்! அதான் திருப்பி நல்லா குடுத்துருக்கியே!” என சிறு புன்னகை தான் அப்போதும் ஈஸ்வரிடம்.
“ஆமா பின்ன சும்மா விடவா?” என்றாலும் அவளிடம் அன்றைய பேச்சில் இப்பொழுது முகம் சிவந்தது.
‘ஏன் நான் உங்க பையனை கட்டிக்கிட்டா என்ன?’ என்றெல்லான் கேட்டிருந்தாளே!.
“உன்னோட ஒவ்வொரு போல்ட் மூவ்வும் தான் உன்கிட்ட என்னை திரும்பிப் பார்க்க வச்சது பல்லவி” என்றான் உண்மையை உண்மையாய் விழித்து.
“அப்புறமும் ஏகப்பட்ட இஸ்ஸுஸ். அப்பாவை சமாளிச்சு சம்மதத்தோட கல்யாணம் பண்ணனும், உன் படிப்பு முடியனும், உனக்கும் எல்லாம் தெரியணும், என்னை புரிய வைக்கணும்னு அவ்வளவு ட்ரீம்ஸ்!” என்றவன் சொல்ல சொல்ல,
பல்லவியிடம் புதிதாய் ஒரு உணர்வு. அன்று அன்னையிடம் தன் சம்மதம் கூறும் போது உண்டான அதே உணர்வு. இப்பொழுது தான் புரிந்தது உணரவும் முடிந்து அவளுக்கு.
அதுக்குள்ள அப்பாக்கு சின்னதா அச்சிடேன்ட். அவங்களை சரி பண்ண நினைச்சா படிப்பு முடியும் முன்ன உன்னை பொண்ணு பார்க்க வர்றாங்கனு ஒரு தகவல்னு என்ன டா இதுன்னு ஆகிப் போச்சு எனக்கு!” என்றவன் சொல்லில் பல்லவியிடம் மென்னகை.
“இதுக்கு மேல பார்த்துட்டு இருந்தா எல்லாமே கைவிட்டு போய்டும்ன்னு புரிஞ்சது. அப்புறம் தான் உனக்கு தெரியுமே!” என்றவன்,
“அப்பாகிட்ட அம்மா தான் சின்னதா ஒரு ட்ராமா பண்ணி ஓகே சொல்ல வச்சாங்க. அதையும் சொல்லிட்டேன். எதுக்கு மறைச்சுட்டு!” என்று அதையுமே சொல்ல,
“அதான் பார்த்ததும் தெரிஞ்சுதே அவர் முகத்துல!” என்றாலும் மகேஸ்வரனைப் பற்றி எதுவும் பேசவில்லை அவள்.
“ஆக நான் சொல்ல வந்தது. இவ்வளவுக்கு அப்புறம் தான் இப்படி நான் உன் முன்னாடி உக்கார முடிஞ்சிருக்கு. சும்மா நீ என்னை ஜஸ்ட் லைக் தட்ன்னு தட்டி விட பார்க்காத புரிஞ்சதா?” என்று சொல்ல,
“ஓஹ்! அப்போ நீங்க தலையை சுத்தி மூக்கை தொடுறிங்களா?” என்றாள் அப்போதும் விளையாட்டாய்.
“ஹ்ம் ஆமா! எல்லாம் மச்சத்தை தொட தான்!” என்றவன் குரலும் பார்வையும் என சட்டென்று கப்சிப்பென்றாகிவிட்டாள். அத்தனை சிரிப்பும் குறும்பும் அதில் ஈஸ்வருக்கு.
இப்பொழுது தான் முழு நிறைவாய் தோன்றியது கீர்த்திஸ்வரனுக்கு. அவளுக்கு முழுதாய் தெரிந்து கொள்ள வேண்டும் கூடவே தன்னையும் புரிய வேண்டும் என நினைக்க, இப்பொழுது தான் அவளுக்கு புரியாமல் இல்லை இன்று தெளிவாய் தெரிந்தது.
அவளிடம் சொல்லிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தவனை வரவேற்றது பந்தல் தோரணங்கள்.
இன்னும் இரண்டே நாட்கள். மூன்றாம் நாளில் பெரிதாய் தன் வாழ்வின் அடுத்தபடியான கீர்த்திஸ்வரனின் பல்லவி எனும் மாற்றம் அவனை வரவேற்கக் காத்திருந்தது.
பெரிதாய் எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி எங்கோ ஆரம்பித்த பல்லவியின் வாழ்க்கை பயணம் கீர்த்தி லஸ்வரனோடு இணைந்து பயணிக்கும் நாள் அருகில் நெருங்கிவிட,
தன்னை நேசிக்கும் ஒருவனின் கரங்களில் தன் வாழ்க்கை என்ற பெருமிதமும் அவளை காதலாய் கொள்ளையிட்டு அவளையூம் அந்த அன்பின் எல்லையில் இணைத்துக் கொண்டது.
அஞ்சலி, லதா என இவர்களோடு சேர்ந்து திருமணத்தின் ஒவ்வொரு நிகழ்வுக்கும் தனக்கானதை என பல்லவி தேர்வு செய்து அதை அவர்களிடமே காட்டி சம்மதம் கேட்டு என இன்னுமே ஈஸ்வரிடம் பேச்சு வாங்கிக் கொள்ளவும் மறக்கவில்லை அவள்.
“இனி எதுவானாலும் அவன்கிட்டயும் கேளு பல்லவி. எங்களை இம்சை பண்ணுறான்!” என லதாவே மருமகளை சொல்லும்படி தான் ஆனது.
இதோ ஈஸ்வர் எதிர்பார்த்த அந்நாள். அனைவரின் ஆசியோடு தன் ஆசையை நிறைவேற்றி பல்லவி கரம் கோர்த்து மேடையில் நின்றவன் அனைவரின் ஆசீர்வாதம் பெற்று வந்த மாங்கல்யத்தை கரங்களில் ஏற்றி பல்லவியின் தலையசைப்புடன் அவளிடம் சேர்ப்பித்திருந்தான்.
