Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

41. ரமா சுப்ரமணி - இளம்பூவே வருந்தாதே81. Zeeraf - ஊனாகி உயிராகினாய் பெண்ணே

ஊனாகி உயிராகினாய் பெண்ணே – 35

அத்தியாயம் – 35

 

ரன்வீரின் அந்தப் பிரம்மாண்டமான கட்டிடம், அவனது மனநிலையைப் போலவே அமைதியாகவும் இருட்டாகவும் இருந்தது. காவலாளியைத் தாண்டி உள்ளே நுழைந்தவளுக்கு, ரன்வீர் ஒரு  மதுக்கோப்பையுடன் ஹாலில் அமர்ந்திருப்பதை கண்டதும் அவளுக்கு ஒரு வெறுமையான பெருமூச்சு மட்டுமே வந்தது. அவனை நேர்கொண்டு நோக்கியவள்… ​”எதுக்கு ரெண்டு நாளா வீட்டுக்கு வரல?” என்று விஷயத்திற்கு வந்தாள்.

​”வரத் தோணல…” என்று மதுவை ஒரு சிப் குடித்தபடி சொன்னவனின் விழிகள் எல்லாம் சிவந்து போயிருந்தன, இரவெல்லாம் அவன் தூங்கினானா இல்லையா என்பதே சந்தேகமாக இருந்தது…



Advertisement

​”வீட்ல எல்லாரும் நீங்க வரலன்னு கவலைப்பட்டுட்டு இருக்காங்க,” என்று அவள் மீண்டும் சொல்ல, “ஐ டோன்ட் கேர்” என்றான் அவன் அலட்சியமாக…

​”ப்ச்… உங்க குடும்பத்து மேல கூடவா உங்களுக்குப் பாசம் இல்லை?” என்று அவள் சற்று குரலை உயர்த்தி கோபமாகக் கேட்க, சிவந்த விழிகளுடன் அவளை நோக்கியவன்… ​”இப்போ நான் போதையில இருக்கேன், கெட்ட கெட்ட வார்த்தையா வாயில இருந்து வந்திடும், பேசக் கூடாதேன்னு பார்க்கிறேன், மரியாதையா போயிடு” என்றான் எச்சரிக்கையாக…

​அவள் ஒரு நிமிடம் அதிர்ந்தாலும், தன்னை சமாளித்துக் கொண்டு, “வீட்டுக்கு வர முடியுமா? முடியாதா?” என்று பிடிவாதமாகக் கேட்டாள்.

Advertisement

​”முடியாது!” என்று அவன் ஒரே வார்த்தையில் முடித்துவிட, “நீங்க வராம நானும் இந்த இடத்தை விட்டு நகர மாட்டேன்,” என்று கூறிவிட்டு அங்கேயே நின்றாள் மிருதுளா…

Advertisement

​அவளது பிடிவாதத்தைக் கண்டு அவளைத் தீயாய் முறைத்தவன், தன் கையில் இருந்த மதுக்கோப்பையை மேசையின் மீது ஓங்கி வைத்துவிட்டு,.. ​”உன்னோட அந்த வார்த்தை என்னை ஒவ்வொரு நிமிஷமும் கொல்லுது! என்னால துடிக்க துடிக்க உன் பக்கத்துல இருக்க முடியல, பைத்தியம் பிடிக்கிற மாதிரி இருக்கு… இந்த போதை இல்லைன்னா நான் செத்துடுவேன், புரியுதா? இப்போ எனக்கு ஆறுதலா, மருந்தா இருக்கிறது இந்த ட்ரிங்க்ஸ் மட்டும்தான், வீட்டுக்கு வந்தா என்னால இதை எடுத்துக்க முடியாது, அங்க என்னால இயல்பா இருக்க முடியாது, அதனால என்னை டிஸ்டர்ப் பண்ணாம இங்கிருந்து கிளம்பு!” என்று கத்தினான். அவனது குரலில் கோபத்தை விட வலிதான் அதிகமாகத் தெரிந்தது…

​அவன் கத்திய வேகத்தில் ஒரு அடி பின்வாங்கினாள் மிருதுளா,.. அவன் தன்னைத் தானே இப்படி அழித்துக் கொள்வதைப் பார்க்க அவளுக்கு வேதனையாக இருந்தது, அவன் கொலைகாரன் என்று அவள் நம்பினாலும், அவன் இப்போது அனுபவிக்கும் இந்த துயரம் அவளது மனதை என்னவோ செய்தது…

“நீங்க என்ன சொன்னாலும் சரி, நீங்க வராம நான் இங்கிருந்து போக மாட்டேன்!” என்று மிருதுளா பிடிவாதமாக சொல்ல, ரன்வீரின் பொறுமை எல்லை கடந்தது…

Advertisement

​”ஏய்!” என்று மிருகத்தைப் போல உருமியவன், “உனக்கு ஒரு தடவை சொன்னா புரியாது? ஏன்டி என்னை இப்படி சாகடிக்கிற? என்னை ஒவ்வொரு நிமிஷமும் துடிக்க வைக்கிறதுல அப்படி என்னதான் உனக்கு சந்தோஷம்?” என்று ஆக்ரோஷமாகக் கத்தி, கோபத்தின் உச்சத்திற்க்கே சென்றவன், தன் கையில் இருந்த கண்ணாடி டம்ளரைச் சுவரில் ஓங்கி வீசிட, அதுவோ சில்லு சில்லாகச் சிதறி அந்த அறையெங்கும் சிதறியது…

​அந்தச் சத்தம் கேட்டு தான் பக்கத்து அறையிலிருந்த நிதின் பதறியடித்துக்கொண்டு ஓடி வந்தான், அங்கே அதிர்ச்சியில் உறைந்து நின்ற மிருதுளாவையும், கோபத்தில் கண்கள் சிவக்க நின்ற தன் நண்பன் ரன்வீரையும் மாறி மாறி பார்த்தவன்… ​”ரன்வீர், என்னாச்சு? எதுக்கு இப்படிப் பண்ற?” என்று  பதற்றத்துடன் வினவ, ரன்வீரோ மிருதுளாவை ஆட்காட்டி விரலால் சுட்டிக்காட்டி, “முதல்ல இவளை இங்கிருந்து போகச் சொல்லுடா! இவ என் கண்ணு முன்னாடி நிக்கக் கூடாது!” என்று கத்தினான்…

​மிருதுளாவோ அசையவில்லை, அதே உறுதியுடன், “நீங்க வராம நான் போக மாட்டேன்!” என்று மீண்டும் அதையே கூறினாள்…

​அவளது அந்த விடாக்கண்டமான பதிலைக் கேட்ட ரன்வீர், அவளை ஒருவித வெறியுடன் பார்த்தான். அந்த பார்வையில் அத்தனை காலம் தேக்கி வைத்திருந்த காதல், வலி, ஏமாற்றம் மற்றும் இப்போது ஏற்பட்டிருக்கும் அடக்க முடியாத ஆத்திரம் என அனைத்தும் கலந்திருந்தது.

​அவளை அப்படியே வெறித்தவன்,
“என் குடும்பத்தைப் பத்தி கவலைப்பட நீ யாரு?” என்று ஆக்ரோஷமாக வினவிட..
​”நீங்க தான் ரன்வீர் அந்த உரிமையை எனக்குக் கொடுத்தீங்க! பிடிக்கலன்னு தெரிஞ்சும் என் கழுத்துல தாலியைக் கட்டி, உங்க வீட்டுக்கு மருமகளா கொண்டு வந்து நிறுத்துனது நீங்க தானே, இப்போ நீ யாரு’ன்னு கேட்டா அதுக்கு என்கிட்ட பதில் இல்லை”  என்று அவள் கண்கள் சிவக்கப் பதில் சொன்னாள்…

​அவளது வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவனைச் சுட, அவளை ஏளனமாகப் பார்த்துச் சிரித்தான், அந்தச் சிரிப்பில் வேதனை மட்டுமே நிறைந்திருந்தது…

சிரித்துக் கொண்டே ​முகத்தை அழுந்த துடைத்தவன்,.. “எனக்கு என்ன சொல்றதுனே தெரியல, சிரிப்பு தான் வருது, என்னை ஹர்ட் பண்ணுவாளாம் ஆனா என் குடும்பத்தை மட்டும் தாங்குவாளாம்” என்று விரக்தியுடன் சொன்னவன்,.. மேஜையின் மீதிருந்த மது பாட்டிலை எடுத்து வாயில் சரிக்க,.. “எதுக்கு இப்படி குடிச்சு உடம்பை கெடுத்துகிறீங்க” அவள் வினவ,.. “ஜஸ்ட் மைண்ட் யுவர் ஓன் பிஸினஸ்” என்றான் கறாராக…

​அந்த கணம் நிதின் குறுக்கிட்டு, “ரன்வீர், நிறுத்துடா… மிருதுளா சொல்றது சரி தான், நீ இப்படி குடிச்சிட்டு கிடந்தா அங்க வீட்ல இருக்கிறவங்க நிலமை என்னாகும்னு யோசிச்சுப் பாரு,” என்று நண்பனை தடுக்க வர, அவனோ… ​”இவளை இங்கிருந்து போக சொல்லுன்னு சொன்னேன்ல? இவளோட இந்தப் போலியான அக்கறை எனக்குத் தேவையில்லை, நான் கொலைகாரனோ இல்லையோ… ஆனா இவ முன்னாடி நிக்கிற ஒவ்வொரு நிமிஷமும் நான் செத்துட்டு இருக்கேன்டா,” என்று தழுதழுத்த குரலில் சொன்னவனின் ஒவ்வொரு வார்த்தையிலும் ஒரு ஆழமான ரணம் இருந்தது…

​அவன் மிகவும் மனஅழுத்தத்திற்கு ஆளாகுவதை உணர்ந்த நிதின்…. “தயவு செஞ்சு நீ கிளம்புமா, அவன் கண்டிப்பா நாளைக்கு வீட்டுக்கு வந்துடுவான்,” என்று கெஞ்சும் குரலில் சொல்ல, மிருதுளாவோ அசையாமல் நின்று, “அதை அவர் சொல்லட்டும்,” என்றாள் தீர்க்கமாக…

​”என்னால வர முடியாது,” என்று ரன்வீர் பிடிவாதமாக உரைக்க, “அப்போ நானும் இந்த இடத்தை விட்டு அசைய மாட்டேன்,” என்று மிருதுளாவும் விடாக்கண்டியாகப் பதிலடி கொடுத்தாள்…

​”அங்கே தான் என் நிம்மதியைப் பறிச்சு என்னைத் துடிக்க வைக்கிற… இங்கயாச்சும் என்னை நிம்மதியா இருக்க விடு!” என்று அவன் ஆவேசமாகக் கத்திட..
​”சரி… இனிமே நான் உங்ககிட்ட எதுவும் பேச மாட்டேன், போதுமா? தயவு செய்து வீட்டுக்கு வாங்க,” என்று அவள் ஒரு படி இறங்கி வந்து கேட்க, ரன்வீரின் உள்ளம் ஒரு கணம் தடுமாறியது…

​அவளது அருகாமை தான் அவனுக்கும் தேவையானது, ஆனால் அவளது வார்த்தைகளே ஈட்டியாய் வந்து தைப்பதால் தான் அவன் அவளைத் தவிர்க்கப் பார்க்கிறான், இப்போது அவளே அப்படியெதுவும் பேச மாட்டேன் என்று உறுதி அளித்ததும், அவன் யோசிக்கத் தொடங்கினான். அவனது அந்த மௌனமே ஒரு சம்மதத்தின் அறிகுறியாகத் தெரிந்தது…

​அவன் யோசிப்பதைக் கண்ட நிதின், “அவன் வருவான்மா, நீ இப்போ கிளம்பு,” என்று அவளை அனுப்பி வைக்க முயல,.. ​”சரி… நாளைக்கு அவர் வரலைன்னா, நாங்க குடும்பத்தோட இங்கேயே வந்திடுவோம்!” என்று ஒரு எச்சரிக்கையை வைத்துவிட்டு அங்கிருந்து வெளியேறினாள் மிருதுளா…

​மிருதுளா சென்றதும் ரன்வீர் மீண்டும் அமர்ந்து குடிக்கத் தொடங்கிவிட, அவனை இப்போது தடுக்க முடியாது என்பது நிதினிற்க்குப் புரிந்தது, அவன் மதுவின் துணையோடு தன் வலியை மறக்க முயன்றான், ஆனால் மிருதுளாவிடம் பேசியே ஆக வேண்டும் என்று  அவளை பின்தொடர்ந்து வந்த நிதின் காரை திறக்க போனவளிடம்.. “கொஞ்சம் பேசலாமா?” என்றான்,…

​”என்கிட்ட என்ன பேசணும் நீங்க?” என்று அவள் சற்றே விலகலோடு வினவ, “ரன்வீரைப் பற்றித்தான்,” என்றான் நிதின்,..

அவளும் யோசனையுடன்​”சொல்லுங்க…” என்று சொல்ல..
​நிதின் ஒரு நீண்ட பெருமூச்சை விட்டுவிட்டு.. “மிருதுளா… உனக்கு ரன்வீரை பத்தி சொல்ல தேவை இல்லைனு நினைக்கிறேன், அவனை பத்தி தெரிஞ்சு புரிஞ்சிக்கிட்டு தான் நேசிக்க ஆரம்பிச்சு இருப்பேன்னு நினைக்கிறேன்” அவன் சொல்ல,.. “நானும் அப்படி தான் நினைச்சேன், ஆனா அவரை நானும் என்னை அவரும் புரிஞ்சிக்கவே இல்லைனு தான் தோணுது, புரிஞ்சிருந்தா அவர் என்கிட்ட காதல் நாடகம் நடத்தியது எனக்கு புரியாம போகுமா?” அவள் விரக்தியுடன் கூற,…

“நீ தப்பா புரிஞ்சிக்கிட்டமா, அவனை உயிருக்கு உயிரா நேசிச்ச நீயே இப்படி பேசுரது தான் ரொம்ப கஷ்டமா இருக்கு, அதை தான் அவனாலயும் தாங்கவே முடியல” என்றான்,..

“இப்போ என்ன தான் சொல்ல வரீங்க, அன்னைக்கு நான் என் கண்ணால பார்த்தது எல்லாம் பொய்யா?” அவள் கோபமாக வினவ,.. “அன்னைக்கு உன் தாத்தா இறந்த இடத்துல ரன்வீர் இருந்தான்ங்கிறது உண்மைதான், ஆனா அவன் எதுக்காக அங்க போனான், அங்க நிஜமா என்ன நடந்ததுன்னு ஒரு தடவையாவது அவனை சொல்ல விட்டியா?” என்று வினவ,.. ​மிருதுளாவின் முகம் சட்டென்று இறுகியது.

“நான் பார்த்தது எதையும் பொய்ன்னு சொல்ல முடியாது, என் தாத்தா அவரோட கையில தான் செத்துக்கிடந்தாரு…”
என்றவளை ​நிதின் இடைமறித்து, “ஆமா, உன் தாத்தா அவனோட கையில தான் உயிர் விட்டாரு, ஆனா அந்த உயிரை பறித்தது ரன்வீர் இல்ல, அன்னைக்கு அந்த கொலையை பண்ணியதே விஷ்வா தான் மிருதுளா, ஆனா அத நிரூபிக்க அவன்கிட்ட எந்த ஆதாரமும் இல்லாதனால தான் இப்போ தவிச்சிக்கிட்டு இருக்கான், தான் நேசிக்கிற பொண்ணு தன்னை நேசிக்காம தன் மேல போடுற பழியை விட, அவகிட்ட தன்னை நிரபராதினு நிரூபிக்க முடியாம இருக்குற அந்த இயலாமை தான் அவனை இப்படி குடிக்கவும் வச்சிருக்கு” என்று சொல்ல,
​மிருதுளா மௌனமாகவே இருந்தாள்…

​ரன்வீர் ஏதோ ஒரு ஃபைலுக்காகத் தான் அவளது வீட்டினுள் நுழைந்தான் என்று அன்று அவன் கூறியதும் அவளுக்கு உறுத்தியது. அந்த ஃபைலுக்காகத் தான் தாத்தாவைக் கொன்றுவிட்டான் என்று தான் ஆழமாக நம்பினாள், விஷ்வா கேவலமானவன் தான் என்பது அவளுக்குத் தெரியும், ஆனால் அவன் சொந்த தாத்தாவையே கொலை செய்திருப்பான் என்பதை அவளது மனம் நம்ப மறுத்து சண்டித்தனம் செய்தது, நிதின் ரன்வீரின் நண்பன் என்பதால் தான் அவனுக்கு ஆதரவாகப் பேசுகிறான் என்றே அவளுக்குத் தோன்றிட,.. ​”என்னை மன்னிச்சிடுங்க அண்ணா, என்னால நீங்க சொல்றதை எல்லாம் நம்ப முடியல,” என்று அவள் சொல்ல, நிதினிற்கு வருத்தமாக இருந்தாலும், “சரி இதை விடு… இனி இதை பத்தி நான் பேசுரதால ஒரு யூஸும் இல்ல, ஆனா தயவு செஞ்சு என் நண்பனை ஹர்ட் பண்ணுற மாதிரி மட்டும் பேசாதமா, இந்த கொஞ்ச நாளாவே அவன் ரொம்ப உடைஞ்சு போயிட்டான், இது இல்லாம அவனுக்குப் பல சொசைட்டி பிரச்சினைகள் வேற,” என்று கூறிட,
​மிருதுளாவின் உள்ளத்தில் ஒரு மெல்லிய பதற்றம் எட்டிப்பார்த்தது.

“என்ன பிரச்சினை?” என்று மெல்ல வினவ, நிதின் அவளை ஒரு கணம் உற்றுப் பார்த்துவிட்டு.. “உன் கழுத்துல அன்னைக்கு அவன் தாலி கட்டுனது தான்  பிரச்சினை!” ​அவன் சொன்னது புரியாமல் குழப்பத்துடன் அவனைப் பார்த்தாள் அவள்..

அவனோ அவளுக்கு புரியும் விதமாக,.. ​”உனக்கே தெரியும், ரன்வீருக்குன்னு இந்த ஊர்ல ஒரு கௌரவமான நல்ல பெயர் இருக்கு. ஆனா, அன்னைக்கு கல்யாண மேடையில உனக்கு அவன் வலுக்கட்டாயமா தாலி கட்டின விஷயம் ஊர் முழுக்கப் பரவிப் பெரிய சர்ச்சையாகிடுச்சு, அவனோட  பிஸினஸ் பார்ட்னர்ஸ் உட்பட பலரும், அவன் செஞ்சது ஒரு பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதின்னு சொல்லி அவனுக்கு எதிராத் திரும்ப ஆரம்பிச்சுட்டாங்க.

​நமக்குத்தான் பிரஸ்காரங்களைப் பத்தித் தெரியுமே? இல்லாததும் பொல்லாததுமாப் போட்டு ரன்வீரோட பிம்பத்தையே சிதைச்சுட்டாங்க, இதனால ஏற்பட்ட மன உளைச்சல்ல அவன் ஆபீஸ் பக்கமே போயி பல நாளாச்சு, இப்போதைக்கு அந்த பிரச்சினைகளை அவன் ஓரளவுக்குச் சமாளிச்சுட்டான் தான், ஆனாலும் ஒரு நேர்மையான தொழிலதிபரா இருந்தவனுக்கு சமூகத்துல ஏற்பட்ட இந்த அவப்பெயர் ஒரு பெரிய அடி தான்,” என்று நிதின் கூறி முடிக்க, மிருதுளாவிற்கு நிலைமையின் தீவிரம் இப்போதுதான் புரிந்தது…

“இப்படியெல்லாம் நடந்ததுன்னு எனக்குத் தெரியாது, நீங்களாச்சும் என்கிட்ட முன்னாடியே சொல்லி இருக்கலாமே!” என்றவள், சற்று நேரம் யோசித்துவிட்டு, “நான் ஏதாவது பண்ண முடியுமா அண்ணா? இந்த கல்யாணம் என் விருப்பத்தோடுதான் நடந்ததுன்னு நான் வெளியே சொன்னா, தப்பா பேசுறவங்க வாயை அடைக்கலாம் இல்லையா?” என்று கேட்க,
​அவள் சொன்னதைக் கேட்டு நிதினிற்கு ஒரு நிமிடம் பிரமிப்பாகவும், அதே சமயம் குழப்பமாகவும் இருந்தது. ‘இவள் என்ன மாதிரி பெண்?’ என்றும் தோன்றியது…

​ஒரு பக்கம் ரன்வீர் கொலை செய்யவில்லை என்று அவன் எவ்வளவு மன்றாடியும், ‘என் கண்ணால் பார்த்ததுதான் உண்மை’ என்று பிடிவாதமாக நின்று ரன்வீரைச் சாடுகிறாள். இன்னொரு பக்கம் அவனுக்குக் கெட்ட பெயர் வந்துவிட்டது என்பது தெரிந்ததும், தன் தன்மானத்தைக்கூடப் பொருட்படுத்தாமல் ‘என் விருப்பத்தோடுதான் கல்யாணம் நடந்தது’ என்று பொய் சொல்லி அவனைக் காப்பாற்ற முன்வருகிறாள், ​அவளது இந்த முரண்பாடான குணம் நிதினிற்குப் புரியாத புதிராக தான் இருந்தது…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!