Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஊர் பேசும் ஓவிய சிலையே

ஊர் பேசும் ஓவிய சிலையே – 17

தன் முன்னில் பதட்டத்தோடு அமர்ந்திருந்தவளை எரிச்சலோடு பார்த்த ரகுவரன் அவள் பார்ப்பதற்குள் தன பார்வையை மாற்றிக்கொண்டான் “வந்து அரைமணிநேரம் தான் ஆகுது அதுக்குள்ள பத்து தடவ மணி பாத்துட்ட, வெளில எட்டி பாத்துட்ட இப்படி பயந்தா எப்படி விழி உன் அண்ணன் இங்க வரமாட்டார் அதும் கல்யாண வேல தலைக்கு மேல கிடக்கும்போது எப்படி வருவார்” என்றான் கொஞ்சம் கோபமாக.

 

 



Advertisement

“அதுக்காகயில்ல அண்ணன்னா கொஞ்சம் பயம்தான் எப்போவும்” என்றாள் மெல்ல.

Advertisement

 

Advertisement

“என்ன பயம்… ஏன் உன் அண்ணனும் லவ் மேரேஜ் தான பண்றார்? அதும் சின்ன வயசுலயிருந்து அதெல்லாம் தப்பில்லையா நீ லவ் பண்ணா மட்டும் கோபப்படுவாரா” என்றான் குத்தலாக.

Advertisement

 

“அண்ணாக்கு மயூரி அக்கா… சாரி மயூரி அண்ணினா ரொம்ப ஸ்பெஷல் ஆரம்பதிலேயிருந்தே அது லவ்வான்னு எல்லாம் தெரியல அவங்க ரெண்டுரும் வேற வேறன்னு தோணுனதில்லே எப்போவும் அதனால இப்போவும் அவங்க கல்யாணம் செஞ்சுக்குறது ஒன்னும் பெரிய ஷாக்கிங்கா இல்ல” என்றாள்.

 

“அடுத்தவாரம் பாக்க முடியாது கல்யாணம் சட்டுனு வெச்சுட்டாங்க நிறைய வேலை இருக்கு நீங்கக் கோவிச்சுக்கக் கூடாது, கல்யாணம் முடிஞ்சதும் பாக்கலாம்” என்றாள் அவனிடம்.

 

“தெரியும் இல்லனாலும் உனக்கு என் மேல பெருசா அக்கறை ஒன்னும் இல்ல எனக்குத்தான் உன்னைப் பாக்காம இருக்கமுடியல நீ ப்ரீயா இருக்க” என்றவன் “உன்னைப் பாக்க நான் அவ்ளோ தூரத்துல இருந்து வண்டியோட்டிட்டு வரேன் ஆனா நீ கொஞ்சம் நேரம் பேசவே இவ்ளோ யோசிக்கிற இதுல இன்னும் மூணு வர்ஷம் நான் காத்திருக்கணும் உன் வீட்டில வந்து பொண்ணு கேக்கனும்னா” என்று பெருமூச்சு விட அவன் கோபத்தை விடச் சொன்ன விஷயம் இன்னும் பிடித்தது.

 

தனக்காகக் காத்திருப்பதாகச் சொல்கிறான் அவள் மெல்ல சிரிக்க, பேச்சைப் பிரபுவை நோக்கித் திருப்பினான்.

 

“உன் மாமாவை நினச்சா ரொம்ப எரிச்சலா இருக்கு யாராவது இப்படி மாமியார் வீட்டில காசு கேட்டுட்டே இருப்பாங்களா அவருக்கு ஏன் கொஞ்சம் கூட வெக்கமா இல்ல, இதுக்குதான் நல்லா படிச்சு நல்ல வேலைல இருக்கணும் எனக்கு மாசா மாசம் நல்ல சம்பளம் வீடு கார் எல்லாமே இருக்கு உன் வீட்டில இருந்து எதுவும் நான் கேட்கமாட்டேன், பொண்டாட்டிக்கு ஒழுங்கா செலவு பண்ணமுடியாதவன் என்ன ஆம்பள” என்க அவள் முகமும் அதிர்ப்பதியை காண்பித்தது பிரபுவை நினைத்து.

 

“அவர் அப்படிதான் சொன்னா எங்க அம்மாவும் கேக்க மாட்டாங்க அக்காவும் கேக்காது” என்றவளை பார்த்தவன் “சேனாபதி பண்ணதும் தப்புதானே உங்கள வீட்டை விட்டு அனுப்பிட்டார் அவர்தானே உங்களைப் பாத்துக்கணும், மாமா ஏமாளியா இருக்கார் அதான் உன் பெரியப்பா குடும்பம் ஏமாத்துறாங்க” என்க.

 

“அப்படிலாம் சொல்லாதீங்க அவங்க யாரும் அப்படி இல்ல அம்மாவேதான் தனியா போகணும் சொன்னாங்க இப்போகூட அண்ணாதான் என் காலேஜ் பீஸ் மத்த செலவுக்குக் காசு எல்லாம் தராங்க” என்றதும் நிதானித்தான்.

 

ஒரேடியாக அவர்களைப் பற்றி மோசமாகப் பேசிக்கொண்டே இருக்க வேண்டாம் என்று நினைத்தவன் “சரி நான் கொண்டுவந்து விடவா” என்க.

 

“ஐயோ வேண்டாம் வேண்டாம் நானே போய்டுவேன்” என்றவள் வேகமாக எழுந்துகொண்டாள் “சரி மெதுவா போ” என்றவன் பஸ் ஸ்டாப் வரை சென்று வழியனுப்பினான்.

 

வீட்டிற்கு பெயிண்ட் அடிக்கும் வேலை ஒருபக்கம் நடந்து முடிந்தது அவனுடைய அறையில் புதிதாக அவளுக்கென்று சில பொருட்கள் இடம்பெற்றது, பகல் வேளை கல்யாணத்திற்கு வந்துசெல்லும் சொந்தங்களுக்குக் கொடுக்கப் பலகாரங்கள் தயார் செய்யும் வேலை நடந்தது ஆட்களை வைத்துச் செய்தாலும் வீட்டினருக்கும் வேலைகள் இருந்துகொண்டே இருந்தது.

 

திங்கள் அன்று கோயம்பத்தூர் சென்று வந்திருந்தனர் துணி மற்றும் நகைகள் எடுக்க இன்னும் பொண்ணும் மாப்பிள்ளையும் மட்டும் எடுக்க வேண்டும் ‘நான் பார்த்துக்கொள்கிறேன்’ என்றுவிட்டான் சேனா.

 

“வாங்க… வாம்மா வாங்க அண்ணா வாங்க அண்ணி” என்று பரபரப்பாக வாயிலுக்கு ஓட வந்தார் தெய்வானை, உள்ளே நுழைந்தவர்கள் ஹால் சோபாவில் அமர்ந்திருந்த ராஜேந்திரனை பார்த்துத் தயங்கி நின்றனர் அவர்களைப் பார்த்தவர் எழுந்து நின்று “வாங்க” என்க வந்தவர்கள் ஆச்சர்யமாக ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

 

தந்தையை ஆராய்ச்சியைப் பார்த்த பூஜாவுக்கு சேனா பேசியது நிழலாடியது “இன்னும் எவ்ளோ நாள் உங்க அப்பாகிட்ட பேசாம இருக்க போற” என்றான் மயூரின் வீட்டில் அவளுடன் இருந்தவளிடம்.

 

“எதுக்கு பேசணும் எல்லாம் தெரிஞ்ச நீங்களே இப்படி கேக்கலாமா மாமா” என்றவள் “நீங்களும்தானே அவர்கிட்ட பேசறதில்லை கோபமா இருக்கீங்க” என்றவளை பார்த்தவன்.

 

“எனக்கும் அவருக்கும் இருக்குற பிரச்சனையே வேற, நீ அப்படியில்ல ஆயிரம்தான் இருந்தாலும் அவர் உன்னோட அப்பா வெளில நிறைய பேருக்குக் கெடுதல் செஞ்சிருக்கார் ஆனா உங்க விஷயத்தில அவர் செஞ்சதெல்லாம் உங்களுக்கு நல்லதுன்னு நினச்சு செஞ்சதா இருக்கும், நிர்மலும் அப்படிதான் கொஞ்சம் சுயநலமும் இருந்தது காசு நிறைய கிடைக்கும்னு அதுவும் யாருக்காகச் சேர்க்குறாரு உங்க ரெண்டு பேருக்காக”.

 

“எல்லாத்துக்கும் சேத்து இப்போ பெரிய அடியா விழுந்திருக்கு தன்னுடைய குடும்பத்தைப் பாதிக்காதவரை தப்பு செய்றவங்க அதைத் தனுப்புனே உணர்றதில்லை இவரும் அப்படிதான் மத்தவங்க விஷயத்துல திருந்திட்டாரா தெரியல உன் விஷயத்தில வருத்தம் இருக்கு பேசிடு அப்படியே கொஞ்சம் நல்ல புத்தி சொல்லு இனிமே நீ சொன்னா கொஞ்சம் கேக்க வாய்ப்பிருக்கு” என்று சொல்லிச் சிரித்தான் அன்று.

 

“சேனாவுக்கு கல்யாணம் முடிவாயிருக்கு மாப்பிள குடும்பத்தோட எல்லாரும் கண்டிப்பா வரணும் வந்து நல்ல படியா நடத்திக்கொடுக்கணும்” என்றவர்கள் தட்டைத் தம்பதிகளை நோக்கி நீட்டத் தெய்வானை கணவரைத் திரும்பிப் பார்த்தார்.

 

“வா” என்றவர் மனைவியோடு சேர்ந்துநின்று வாங்கிக்கொண்டார், அப்படியே தெய்வானையின் கையில் காட்டாகப் பணத்தை வைத்த கந்தவேலு “தெய்வா எல்லார்க்கும் எப்படி துணிமணி எடுத்தா பிடிக்கும் தெரியல அதனால பணமாவே குடுத்துடுறோம் உங்களுக்கும் பிள்ளைகளுக்கும் பிடிச்ச மாதிரி எடுத்துக்கோங்க” என்றார்.

 

 

பூஜாவை நெருங்கிய கோசலை அவளின் தலைகோதி நிற்க, கந்தசாமி ராஜேந்திரனிடம் “கவலைப்படாதீங்க மாப்பிள ஏதோ பெருசா வரவேண்டியது இதோட போச்சு நம்ம பிள்ளை ஆபத்தில்லாம நம்மகிட்ட இருக்கிறதே இப்போதைக்கு போதும், பிள்ளைக்குக் கொஞ்சம் மனசு சரியாகட்டும் நல்ல இடமா பார்க்கலாம் எல்லாம் நல்லபடியா நடக்கும்” என்க.

 

முதல்முறையாக ராஜேந்திரன் தலை குனிந்து அமர்ந்திருந்தார் ‘தான் எப்படி நடந்துகொண்டோம் அவர்களிடம் அவர்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள்’ தன்னுடைய சொந்தத்தின் கேலி பேச்சுக்கள்
வன்மம் அனைத்தும் அவர் மனக்கண்ணில் ஓடியது நல்லவிதமாகவே கவனித்து அனுப்பினார் தெய்வானை, ராஜேந்திரன் பெரிதாகப் பேசவில்லையென்றாலும் அமைதியாகப் பார்த்திருந்தார்.

 

 

அந்த வீட்டிற்குள் நுழைவதற்கு பெரும் தயக்கம் இருந்தது அவளுக்கு, என்றாலும் போகாமல் முடியாது நான்கு நாட்களுக்குப் பிறகு இந்த வீட்டிற்குள் அவனின் கைப்பிடித்து அவனின் சரிபாதியாக நுழையப்போகிறாளே, வாசலில் தயங்கி நின்றிருந்தாள் பெரும் மனப்போராட்டம் கல்யாணம் முடிவானதிலிருந்து.

 

‘என் பேரனுக்கு நீ சரியாக வரமாட்டாய் உன்னால் அவனுக்கு ஆபத்து வரலாம் இனிமேல் எங்கள் வீட்டிற்கும் வராதே’ என்று சொல்லிச்சென்றவர் கோசலை, இப்பொழுது இந்தத் திருமணம் நடப்பது அவனின் பிடிவாதத்தால் என்பது அவளுக்கும் தெரியும் அவர்களுக்குத் தன் மீது இருக்கும் வெறுப்பு அப்படியே இருந்துவிடுமோ என்று அஞ்சினாள்.

 

தன்னை ஒதுக்கிவைக்க அவனுடனும் அவர்களுக்குப் பிரச்சனை வந்துவிடுமோ என்ற அச்சம் இத்தனை நாட்களாக மனதை அழுத்திக்கொண்டிருக்கிறது நேரில் அவர்களைப் பார்த்துப் பேசிவிட வேண்டும் என்ற முடிவோடு வந்துவிட்டாள் என்றாலும் வாசலைக் கடந்து உள்ளே செல்லமுடியவில்லை.

 

“மயுமா வாடா உள்ள வா, என்ன அங்கேயே நிக்குற” என்று ஓடிவந்து அவளின் கைப்பிடித்தார் பவுனு, அவரைப் பார்த்து மெல்ல புன்னகைத்தாள் மயூரி.

 

“எத்தனை தடவ கேட்டோம் தெரியுமா உன்னைவந்து பாக்க, கல்யாணம் முடிவாயிருக்கு பிள்ளையை ஒருதடவை பாத்துட்டு வரோம்னு சொன்னா முடியாது வேண்டாம்னு ஒரே பிடிவாதம் சேனா, அவளை இங்க வரக்கூடாதுன்னு சொன்னீங்கல்ல இனிமே கல்யாணம் நடக்கறப்போ பாத்தா போதும்னு சொல்லிட்டான்” என்றார் அவர்.

 

அதற்க்கு என்ன பதில் சொல்ல என்றுகூட அவளுக்குத் தெரியவில்லை, விரும்பியவனுடன் திருமணம் என்பதையும் தாண்டி உடலும் மனமும் மிகவும் சோர்ந்திருந்தது காய்ச்சலும் இப்பொழுதுதான் சரியாகியிருக்க அதன் சோர்வும் இருந்தது.

 

“பாட்டி இருக்காங்களா” என்றாள் பவுனிடம்.

 

“இருக்காங்க வா உள்ள வா” என்றவளை அழைத்துச்செல்ல அடுக்கலையிலிருந்து வெளியில் வந்தார் கோசலை, மயூரியை அவர் எதிர்பார்க்கவேயில்லை அவளிடம் என்ன பேச என்று அவருக்கும் தயக்கமாக இருந்தது.

 

அவரை நெருங்கியவள் “என் மேல என்னகோபம்னு எனக்குத் தெரியல என்னோட பிறப்பு… அது என் தப்பில்லை அதை என்னால மாத்த முடியாது, ஆனா இதுவரைக்கும் சரியா வாழ்ந்திருக்கேன்னு நினைக்குறேன் இனிமேலும் அப்படியே, எனக்கு மனுஷங்களை தெரிய ஆரம்பிச்சதிலிருந்து எல்லாமே தேவாதான்”.

 

“அம்மாவா அப்பாவா நல்ல நட்பா… தேவா எனக்கு வெறும் காதல் இல்ல எல்லா உறவையும் நான் அவர்கிட்ட பாக்கறேன் இந்தக்கல்யாணம் கண்டிப்பா அவரோட பிடிவாதத்துலதான் இவ்ளோ அவசரமா நடக்குது எனக்குத் தெரியும், ஆனா அதுக்கு என்ன காரணம்னு எனக்குத் தெரியல எப்படிப்பாத்தாலும் கடைசில நான் சம்பந்தப்பட்ட ஏதோ ஒன்னாதான் இருக்கும்”.

 

“உங்களுக்குக் கோபம் இருக்கும் ஏதா இருந்தாலும் என்மேல காட்டுங்க என்னைக் காரணமா வெச்சு நீங்க யாரும் அவர்கிட்ட கோவிச்சுக்காதீங்க அவருக்கு எல்லாருமே முக்கியம், எனக்கு என்னைப் பாத்துக்க தெரியல பாட்டி அவர் இல்லாம எனக்கு வாழத் தெரியாது அவர்கிட்டயிருந்து என்னைப் பிரிச்சுடாதீங்க ப்ளீஸ்” என்றவளுக்கு வார்த்தைகள் தடுமாறி குரல் உடைந்தது.

 

தன் முன்னில் கைகூப்பி நின்றவளை “ராசாத்தி” என்று தன்னோடு சேர்த்தனைத்தார் கோசலை.

 

தங்கள் பிள்ளையைப் பற்றித் தங்களிடமே விளக்கம் கொடுப்பவளை நெகிழ்ச்சியாய் பார்த்திருந்தார் பவுனு “உன்னை என் ராசாகிட்டயிருந்து பிரிக்குற சக்தியெல்லாம் எங்களுக்கு இல்லம்மா, அப்படி செஞ்சா எங்க பிள்ளை எங்களுக்கு இல்லன்னு ஆயிடும், ஏதோ ஒரு சின்ன மனக்குழப்பம் இப்போ எல்லாத்தயும் அந்த மாரியாத்தாகிட்ட விட்டாச்சு எல்லாத்தயும் நல்லவிதமா அவ பாத்துப்பா நீ சந்தோஷமா கல்யாணத்துக்கு தயாராவு” என்றவர் “பவுனு பிள்ளையைக் கூட்டிட்டு போ” என்க.

 

விழிகளைத் துடைத்துக்கொண்டு வந்த பவுனு அவளைத் தன்னோடு அழைத்துக்கொண்டு கிட்சன் சென்றார்.

 

கோயம்பத்தூர் சென்று திரும்பிக்கொண்டிருந்தனர் சேனாவும் மயூரியும் திருமணத்திற்கு உடை எடுக்கச் சென்றிருந்தனர், அவனுடைய விருப்பத்திற்க்கே அனைத்தையும் விட்டுவிட்டாள் “எனக்குத் தெரில தேவா, எனக்கு எது சரியா இருக்கும்னு உங்களுக்குத்தான் தெரியும் நீங்களே எடுங்க” என்றுவிட்டாள்.

 

அவனுக்குப் பச்சை நிறத்தைத் தவிர எதுவும் பிடிக்கவில்லை ஒவ்வொரு பட்டையும் அவள்மேல் வைத்து வைத்துப் பார்த்தவன் இறுதியாக மரகத பச்சையில் பேபி பிங்க் பார்டர் வைத்த பட்டுப்புடவையை எடுத்தான் அத்தனை அழகாக இருந்தது.

 

அதனுடன் அவளுக்கென்று தனியாகக் கொஞ்சம் நகைகளும் வாங்கிக்கொண்டான், பிளவுஸ் பூஜாவின் திருமணத்திற்கு தைத்தவரிடமே கொடுத்துவிட்டு வந்தனர்.

 

அமைதியாக வேடிக்கை பார்த்து அமர்ந்திருந்தவளை யோசனையாகப் பார்த்தவன் “மயூ என்னாச்சு உனக்கு ஏன் இப்படி டல்லா இருக்க” என்றான்.

 

“என்கிட்டே எதையாவது மறைக்குறீங்களா தேவா” என்றவளை திரும்பிப் பார்த்தவன் “ஏன் அப்படி கேக்குற” என்க.

 

அவன் தோளில் சாய்ந்துகொண்டவள் “தோணுது… என்கிட்டே வேற எதையோ மறைக்குறீங்க கிராண்ட்பா சம்மந்தமா… அவருக்கு ஒண்ணுமில்ல தான நல்ல இருக்காரா” என்றவளை பார்த்தவனுக்கு துக்கத்தில் தொண்டை அடைத்தது ‘அவர் நல்லாத்தான் இருக்கார் உன்னைத்தான் நல்லா வெச்சுக்கல’ என்ற வார்த்தைகள் தொண்டையில் சிக்கிக்கொள்ள.

 

 

“அவருக்கு ஒண்ணுமில்ல மயூ நல்லா இருக்கார்”.

 

 

“அப்போ வேற ஏதாவதா அதனாலதான் அவர் இல்லாமலே கல்யாணம் செய்ரோமா” என்றதும் வண்டியை நிறுத்திவிட்டு அவளைத் தன் கையணைப்பில் கொண்டுவந்தவன் “நான் சொன்னா நம்புவல்ல உன் கிராண்ட்பா ரொம்ப நல்லா இருக்கார், ஆனா நம்ம கல்யாணத்துல அவர் வேண்டாம் நீ எதைப் பத்தியும் யோசிக்காத கல்யாணம் நல்லபடியா முடியட்டும் ஹ்ம்ம்” என்றவனை அனைத்துக்கொண்டவளின் கண்ணீர் அவன் சட்டையை நனைத்தது.

 

 

“ஏய்… என்னடா ஏன்” என்றவனை பார்த்தவள் “தெரில என்னமோ பயமா இருக்கு தேவா, நடக்காமலே போய்டுமோ கணவாவே இருந்திடுமோனு கவலை பட்டிருக்கேன்… இப்போ எல்லாமே அவசரமா நடக்குறமாதிரி சொல்லத் தெரியல ஐ ஆம் டையர்ட்” என்றவள் உண்மையிலே தளர்ந்திருந்தாள்.

 

அவளைத் தாயாக மடிதாங்கிக்கொண்டான் அவனுடைய அப்பத்தா அன்றே அவள் வந்து பேசியதை சொல்லியிருந்தார் “எங்ககிட்டவே உனக்காகப் பரிஞ்சுகிட்டு வரா” என்ற கோசலையின் முகத்தில் அவளை வருந்தச் செய்ததின் கவலை தெரிந்தது.

 

“நல்லா பாத்துக்கோயா நீதான் எல்லாமேன்னு உன்னையே சுத்திட்டு இருக்கா, உனக்கு ஒரு பொம்பள பிள்ளை பிறந்தா எப்படி பாதுப்பியோ அதேமாதிரி அவளைப் பாத்துக்கோ” என்றிருந்தார்.

 

மனதின் அலைப்புறுதல் அவனின் அணைப்பில் சிறிது நேரத்திலே உறங்கியிருந்தாள் மயூரி, சீட்டில் நன்றாகச் சாய்த்து அமர்த்தியவன் நேரே அவளுடைய வீட்டிற்க்கே சென்றான்.

 

தெய்வானை அனைவரையும் விரட்டி விரட்டி வேலை வாங்கிக்கொண்டிருந்தார் முதல்நாள் இரவே பூஜாவுடன் வந்துவிட்டார் மயூரியின் வீட்டிற்கு, பெண்ணின் தாய் ஸ்தானத்தில் நின்று அவளுக்கானதை பார்த்துக்கொண்டார், பூஜாவுக்கு வந்திருந்த அதே பியூட்டிஷின் வந்திருந்தார்.

 

“இன்னைக்கு என்ன? கையா… காலா எதை உடைக்க போறீங்க” என்றார் பூஜாவை பார்த்து.

 

“அப்படிலாம் நடக்காது மேம், கல்யாணத்தை யாரவது நிறுத்த நெனச்சா அவங்க மண்டைதான் உடையும் இன்னைக்கு” என்றாள் அவள்.

 

அழகாய் பட்டுடுத்தி அளவான நகைகள் அணிந்து மனதால் அனைவருக்கும் நமஸ்காரம் செய்துகொண்டு தெய்வானை மற்றும் பூஜாவுடன் காரில் சென்று அமர்ந்தாள் மயூரி, சக்தி தான் வந்திருந்தான் பெண்ணை அழைத்துச்செல்ல, கோவிலுக்குச் சென்றவள் விழிகள் அவனைத் தேடி அலைந்தது எங்கும் காணவில்லை அனைவரும் அவளைச் சூழ்ந்துகொண்டு இங்கு அங்கு என்று அழைத்துச்சென்றனர்.

 

சேனாவின் உறவுகள் அவளைச் சூழ்ந்துகொண்டனர் விழிகளில் அவனைக் காணாத ஏக்கம் நிறைந்து நின்றது சந்நிதியின் முன் அவளை நிறுத்திய தெய்வானை “சாமி கும்பிட்டுக்கோமா” என்க, மீண்டும் ஒருமுறை சுற்றிலும் பார்த்துவிட்டு விழிகளை மூடிக்கொண்டாள்.

 

வேண்டுதல் ஒன்றே உறவுகள் அனைத்தும் தன்னை ஒதுக்கி வைத்த இந்த வாழ்வில் உயிராய் நினைக்கும் அவனுடன் இறுதிவரை ஒன்றாய் இருக்கும் வரத்தை வேண்டினாள்.

 

“மயூ…” என்ற குரலில் சட்டென்று விரிந்துகொண்ட அந்த விழிகளில் ஜீவன் மீண்டிருந்ததது.

 

“கட்டவா…” என்றவனை பார்க்கமுடியாமல் விழிநீர் தளும்ப மூன்று முடிச்சிட்டவனின் நெஞ்சில் இதழொற்றினாள், சத்தமிட்டு அழவில்லை அவனைக் கட்டி அணைக்கவில்லை முத்தத்தின் வழி அவனுக்காகச் சேர்த்து வைத்திருந்த மொத்த காதலும் அவனைச் சென்று சேர்ந்துகொண்டிருந்தது.

 

உன்னை சரண் அடைந்தேன்
மன்னவா மன்னவா
இன்னும் ஒரு தேவை
சொல்லவா சொல்லவா

இந்த அழகிய நிமிஷம்
இது வளர்ந்திட வேண்டும்
இது முடிகிற நேரம்
உயிர் விட வேண்டும்
உடலும் மனமும் உன்னையே
தொடர ஆஅ ஆஅ ஆஅ ஆ
உன்னை சரண் அடைந்தேன்
மன்னவா மன்னவா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!