Skip to content
Post Views: 8,318
தோட்டத்தில் இருந்தவர்களை தேடி வந்துவிட்டாள் பூஜா, அவளின் விழிகள் தோட்டத்தின் நடுவில் நின்றிருந்த மயூரியின் மீது படிந்து மீண்டது.
“நீ என்ன இங்க” என்று அவளின் முன்னில் வந்து நின்றான் சேனாபதி.
Advertisement
“உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்” என்றவளை ஆராய்ச்சியாய் பார்த்தவன் “தனியா வந்து பேசுற அளவுக்கு என்ன இருக்கு” என்றான் மரநிழலில் இருந்த பலகையில் அமர்ந்துகொண்டு.
பேச்சு இவளிடம் இருந்தாலும் பார்வை என்னமோ நொடிக்கொரு தரம் மயூரியை தொட்டு மீண்டது “எனக்கு அப்பா மாப்பிளை பாத்திருக்கர்”.
Advertisement
Advertisement
“சரி”
“எனக்கு உங்களைக் கல்யாணம் பண்ணிக்கணும் மாமா உங்களைப் பிடிச்சுருக்குனு அப்பாகிட்டயும் சொல்லிட்டேன், நீங்க ஒருதடவை வந்து அப்பாகிட்ட பொண்ணு கேட்டா போதும் அப்பா கல்யாணத்தை நடத்துறேன் சொல்றாரு” என்றவளை பார்த்துக்கொண்டே எழுந்தவன்.
Advertisement
“ஹ்ம்ம்… நல்லாயிருக்கே! எப்படி… வந்து கேட்டா போதும் சொன்னாரா இல்லை அவர் காலைப் பிடிக்கச் சொன்னாரா” என்றவனின் அடக்கப்பட்ட ஆத்திர குரலில் இரண்டடி பின்னே வைத்தாள் பூஜா.
“என்ன தைரியம் இருந்தா என்கிட்டே வந்து இப்படி பேசுவ எனக்கே தெரியாம நீயும் உன் அப்பனும் என் கல்யாணத்தை பேசி முடிவு செய்யிறீங்களா” என்றவன் கோபத்தை கட்டுப்படுத்தி “இனிமே இந்தமாதிரி தைத்தியக்கார தனம் செய்யாத வீட்டுக்குப் போ” என்றான்.
“பெரியவங்களா பேசுனா கூட உங்களுக்கு என்னைக் கட்டிக்க விருப்பம் இல்லையா மாமா” என்றவளுக்கு முதுகு காட்டி நின்றிருந்தான்.
“மாமா” என்றவள் மீண்டும் அழைக்க.
“சேனாபதி பொண்டாட்டி பேரு நிச்சயமா பூஜா இல்ல, நா எப்போவும் அப்படி யோசிச்சதும் இல்ல இதை அப்படியே மறந்துட்டு உன் லைப் பாரு” என்றவன் “மயூ அந்த அக்கம் போகாத பூச்சி இருக்கும்” என்று கூறிக்கொண்டே வேகநடையில் அவளை நெருங்கினான்.
பெரும் அவமானமாக உணர்தாள் பூஜா ‘வந்திருக்க கூடாதோ’ என்று காலம் கடந்து யோசனை தோன்றியது, அவளுடைய கார் கிளம்பி செல்வதை பார்த்தவன் தங்கையையும் மயூரியையும் அழைத்துக்கொண்டு பங்களா வீட்டிற்கு சென்றான்.
வீட்டினரின் முன் என்ன பேசுவது என்றே தெரியாமல் அமர்ந்திருந்தார் தெய்வானை “ஏண்டி நாங்க யாரு டி உனக்குத் திடுதிப்புனு வந்து நாளைக்கு பூ வெச்சு உறுதி பண்றாங்கன்னு சொல்ற, எல்லாத்தயும் பேசி முடிவு பண்ணிட்டு வெறும் தகவல் மட்டும் குடுக்குறியா” என்ற கோசலையின் சத்தம் வீட்டிற்கு வெளியில் கேட்டது.
“அப்பத்தா ஏன் இவ்ளோ சத்தம்” என்று கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்தான் சேனா.
“கேளுயா… இந்த அக்கிரமத்த நீயே கேளு” என்ற கோசலை “இன்னும் எண்ணலாம் நான் பாக்கணுமோ” என்று முந்தியில் கண்ணைத் துடைத்தார்.
‘என்ன பிரச்சனை’ என்பதாக அவன் தன் அத்தையை பார்த்தான், நாளை அவளைப் பெண்பார்க்க வருவதை பற்றிப் பேசியிருப்பார்கள் ஆனாலும் அதில் என்ன பிரச்சனைஎன்றுதான் அவன் யோசனை ஓடியது.
“நாளைக்கு பூஜாவை பொண்ணு பார்க்க வராங்க அதோட பூவெச்சு உறுதி பண்ணிக்க போறாங்க” என்றார் மெல்ல.
இதை அவனே எதிர்பார்க்கவில்லை அப்படியென்றால் பூஜாவிற்கும் தெரியவில்லை என்பது புரிந்தது.
“பாருயா எல்லாத்தயும் முடிவு பண்ணிட்டு வந்து கடமைக்குனு சொல்லிட்டு இருக்கா அதும் நம்மள கூப்பிட வரல விவரம் சொல்லிட்டுப்போக வந்திருக்கா, நமக்கு இந்த மரியாதை போதும்னு அவ புருஷன் சொல்லிட்டாரு போல” என்ற கோசாலைக்கு அத்தனை ஆத்திரம் அது கண்ணீராக மட்டும் வெளிப்பட்டுக்கொண்டு இருந்தது.
“நல்ல விஷயம் தானே அப்பத்தா அதுக்கு ஏன் ஒப்பாரி வெக்குற” என்றவன் “சந்தோசம் அத்த நல்லபடியா நடக்கட்டும்” என்றுவிட்டு அறைக்குச் சென்றான்.
“அண்ணா அவன் ஒண்ணுமே சொல்லாம போய்ட்டான்” என்றார் தெய்வானை, கந்தசாமி மிகுந்த யோசனையில் இருந்தார்.
“அண்ணா ஏதாவது சொல்லுங்க” என்ற தங்கையைப் பார்த்தவர் “சொல்ல என்னமா இருக்கு சேனா சொன்னமாதிரி நல்லபடியா நடக்கட்டும் எங்க ஆசிர்வாதம் எப்போவும் உண்டு” என்றார் அவர்.
“அண்ணா நீங்க வராம எப்படி, அவர் குணம்தான் உங்களுக்குத் தெரியுமே அதனாலதான் நான் மட்டும் வந்து கூப்பிடுறேன், தாய் மாமனா நீங்க வந்து நிக்கவேண்டாமா” என்றார் தெய்வானை.
“இல்ல தெய்வானை நாங்க வரல, நாங்கன்னா… நான் என் மனைவி பவுனு என் மகன் பத்தி மட்டும் பேசுறேன், செந்தில் உன்னோட முடிவை நீயே சொல்லு” என்க.
“என்னண்ணா ஏன் இப்படி பிரிச்சு பேசுறீங்க” என்றார் செந்தில் பதட்டமாக.
“இனிமே எல்லாமே தனிதானப்பா உனக்குக் கொடுக்கவேண்டிய பங்க பிரிக்க ஏற்பாடு செஞ்சாச்சு நமக்குள்ள இன்னும் அதிகமான மனக்கசப்பு வராம இருக்க இதுதான் சரியான முடிவு, அம்மாடி தெய்வானை உனக்காகன்னு உன் புருஷன் கிட்டயும் அவர் வீட்டாளுங்ககிட்டயும் நெறையவே பணிஞ்சு போய்ட்டோம்”.
“பிள்ளைகளுக்குக் காசு பணம் மட்டும் சேத்தா போதாது கொஞ்சம் கௌரவமும் இருக்கணும், முன்னாடி பெருசா தெரியல இப்போ ஒவ்வொரு தடவையும் உன் புருஷன் வீட்டாளுங்க முன்னாடி நாங்க தலை குனிஞ்சு நிக்குறது என் மகனுக்கும் அவமானம், அதை இனிமே நான் செய்யமாட்டேன் குட்ட குட்ட குனியற அவமானம் எங்களோட போகட்டும் மரியாதை இல்லாத இடத்துக்கு இனிமே நான் போறதா இல்ல, உனக்கு எப்போவும் இந்த வீட்டு வாசல் திறந்தே இருக்கும்” என்று முடித்துக்கொண்டார்.
தெய்வானை எதிர்பார்ப்போடு சின்ன அண்ணனைப் பார்த்தார் ‘நீங்களாவது சொல்லுங்களேன்’ என்பதாக “அதான் அண்ணா சொல்லிட்டாரே இதுக்குமேல நான் சொல்ல ஒண்ணுமில்ல” – செந்தில்.
“ஒருநிமிஷம்” என்றார் கனகம்.
“என்ன” என்பதாக அனைவரும் அவரைப் பார்க்க.
“இப்படி மொத்தமா வெட்டிவிட்ட மாதிரி பேசினா எப்படி? தாய்மாமன் உறவு என்ன அவ்ளோ லேசா, இப்போ நாம போகலனா அப்படியே இந்த உறவு முடிஞ்சுபோயிடும் நாளைக்கு சபைல அவங்க கூப்பிடலைனு வராது தாய்மாமன் உறவை நீங்க விட்டுகுடுத்துட்டீங்கன்னு பேச்சு வரும், உங்க தங்கச்சி உறவே இனிமே வேண்டாம் அப்படின்னு நினைசீங்கன்னா விட்டுடலாம் போக வேண்டாம் யோசிச்சிச்சு முடிவெடுங்க, பெரிய மாமா ஏதோ வருத்தத்துல பேசுறாரு நீங்கக் கொஞ்சம் யோசிங்க” என்றார் கனகம்.
பவுனு ஆச்சர்யமாகப் பார்த்தார் கனகத்தை முறையாக வந்து அழைத்தாலே முன்னூறு குறை சொல்லும் கனகமா நாத்தனாருக்காக இப்படி பேசுகிறார் என்று.
செந்தில் மனைவியை யோசனையாகப் பார்த்தார், மனைவியின் ரகசிய மொழி புரிய “சரித்தா தெய்வானை யாருமே வராம போய்ட்டா உனக்குத்தான் அது கொறைச்சில், வேற என்ன செய்ய நாங்க ரெண்டுபேரும் வரோம் ஆனா கை நனைக்க மாட்டோம்” என்றுவிட்டார்.
ஞாயிறு காலை வீடே ஆட்களால் நிறைந்து இருந்தது உறுதி செய்வதால் ஒரு பெரிய பட்டாளமே வந்திருந்தது ராஜேந்திரன் வீட்டிற்கு, தெய்வானையின் பக்கம் கனகமும் செந்திலும் மட்டுமே ராஜேந்திரன் சொந்தமே சபை நிறைந்தது, அதிலும் அவனுடைய அண்ணன் வந்ததும் பரபரப்பு தொற்றிக்கொண்டது.
சும்மாவா இந்தச் சம்பந்தமே அவர் கொண்டுவந்தது தானே நீலகிரியின் எம்.பி ராஜப்பன்… ராஜேந்திரனின் உடன்பிறந்த சகோதரன், அண்ணனின் நம்பிக்கையான அடியாள் ராஜேந்திரன் அப்படிதான் தெய்வானை குறிப்பிடுவார் ராஜப்பனின் பதவி பணம் இரண்டும் வைத்துக் குன்னூரின் ராஜாவாக வலம்வருகிறார் ராஜேந்திரன்.
பெண்ணின் சம்மதம் ஒன்றும் கேட்கப்படவில்லை அழைத்துவந்து நிறுத்தப்பட்டாள் பெண்ணிடம் பேச வேண்டும் என்றான் மாப்பிள்ளை நிர்மல், அவன் மட்டுமே பேசிக்கொண்டிருந்தான் மருத்துவத்தை பற்றி நண்பர்கள்பற்றி அவனுடைய விருப்பங்கள் அவனின் பெற்றோர் என்று அனைத்தையும்.
“நீ ஜாப் போகணும்னு அவசியம் இல்ல, நான் அப்பா அம்மா மூணு பேரும் எப்போ போவோம் எப்போ வருவோம் தெரியாது சோ நீ வீட்டில இருக்கறது பெட்டர்” என்றதும் பூஜா அறியாமல் அவளிடம் பெருமூச்சொன்று எழுந்தது, திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் என்பது இப்பொழுதே தெரிந்துவிட்டது.
“சரி ஒகே பாக்கலாம்” என்றவன் ‘உனக்குச் சம்மதமா’ என்றுகூட கேட்க்காமல் அறையைவிட்டு வெளியேறினான்.
“என்ன சம்மந்த காரங்களே இதுதான் உங்க மரியாதையா, பேத்தி விசேஷத்துக்குப் பாட்டி வரல, தங்கச்சி மகளுக்காகத் தாய் மாமன் வரல” என்று நக்கலாகச் செந்திலை பார்த்துக் கேட்டார் ராஜப்பன்.
“மரியாதையாக நீங்கக் கூப்பிடலையே” என்று சொல்ல ஆசைதான் என்றாலும் அமைதியாக நின்றிருந்தார், எல்லாம் உன்னால என்று மனைவியை முறைத்து நின்றார் வருவதில் துளியும் விருப்பமில்லை முதல்நாள் இரவு கனகம் பேசிப்பேசியே கரைத்திருந்தார்.
“கார்த்திகா பிரசச்னைக்கு இவங்க மூலமா தீர்வு கிடைக்கலாம்”- கனகம்.
“என்னடி பேசுற? இவங்களால என்ன செய்ய முடியும்”.
“பணபலம் இருக்கு அதிகாரம் இருக்கு, நாம கொஞ்சம் வளைஞ்சு கொடுத்தா கார்த்திகாவுக்கு நல்லதா செய்ய முடியும்”.
“என்ன பேசுறோம்னு தெரிஞ்சுதான் பேசுறியா நம்ம குடும்பத்தை விட்டு இவங்ககிட்ட ஏன் வரணும் நாம”.
“என்ன குடும்பம்? அதான் இப்போ பாத்தீங்கள்ல தனியா பிரிச்சுக்க சொல்லிட்டாங்க”.
“சொல்லாம வேற என்ன பண்ணுவாங்க, வீட்ல என்ன அக்ஷய பாத்திரமா வெச்சுருக்கோம் எடுக்க எடுக்க வந்துட்டே இருக்க” என்றார் செந்தில்.
“உங்க அண்ணனுக்குப் பொம்பள பிள்ளை இல்லை, அதனால பொண்ணை கட்டிக்குடுத்தா எண்ணலாம் கஷ்டம் இருக்கும்னு புரியல” என்றவரை வெறுப்போடு பார்த்தார் செந்தில்.
“மனசாட்சி இருக்கா உனக்கு அவங்க அப்படி யோசிச்சிருந்தா நம்ம புள்ளைக்கு கல்யாணமே நடந்திருக்காது, நான் ஒருத்தன்தான் ஒழைக்குறேன் அங்க அண்ணாவும் சேனாவும் வேலை செய்றாங்க இன்னும் சொல்லனும்னா அவன்தான் வேலை செய்றான் அந்தப் பணத்துலதான் கல்யாணம் இதுவரைக்கும் செலவு எல்லாமே, இப்படி நாக்குல நரம்பில்லாம பேசாத” என்றவர்.
“இப்போ தனியா போய் என்ன பண்ண போறோம் எப்படி சம்மாளிக்க போறோம் எனக்கு ஒன்னும் புரியல” என்றார் செந்தில்.
“அதுக்குதான் சொல்றேன் ஒவ்வொரு தடவையும் சேனா கையை எதிர்பார்த்து நிக்க வேண்டாம் அவனோட சொந்த அக்காவா இருந்தா இப்படி சொல்லுவானா சித்தப்பா பசங்களுக்கு நான் ஏன் செய்யணும்ன்ற எண்ணம் அதனாலதான் காசுக்குக் கணக்கு பாக்குறான்” என்ற மனைவியை ஒருவித அச்சத்தோடு பார்த்தார் செந்தில் ‘இது நிச்சயம் அழிவில் சென்றுதான் முடியும்’ என்று தோன்றியது.
தெய்வானையின் வீட்டிலிருந்து தம்பதிகள் திரும்பி வீடு வந்தபோது சேனாவும் கந்தசாமியும் தீவிரமாகப் பேசிக்கொண்டிருந்தனர், விஷேஷம் எட்டி நடந்தது என்று ஒருவரும் விசாரிக்கவில்லை தெய்வானை அப்பொழுதே தாய்க்கு அழைத்து அனைத்தையும் கூறியிருந்தார், கனகம் வாய் ஓயாமல் அனைத்தையும் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்.
“சித்தப்பா கொஞ்சம் பேசணும்” என்றான் சேனா.
“சொல்லுப்பா” என்றார் அவர்.
“தோட்டத்தைப் பாதியா பிரிச்சாச்சு நீங்க விருப்பப்பட்டா வியாபாரம் ஒன்னாவே பண்ணிக்கலாம் லாபத்தை மட்டும் பிரிச்சுக்கலாம், ஏன்னா நம்மகிட்ட தொடர்ந்து வாங்குறவங்ககிட்ட மொத்தமா குடுத்தா நல்லாயிருக்கும், கடை நான் லோன் போட்டு வாங்கினது கடனை நானே அடைச்சுட்டேன்” என்க.
“சேனா என்ன சாமி இதெல்லாம் எதுக்கு சொல்ற எனக்குத் தெரியாதா” என்றார் அவர் சங்கடமாக.
“பேசிடறது நல்லது சித்தப்பா” என்றவன் “வேல்விழிக்கு கொஞ்சம் நகை வாங்கி வெச்சுருக்கேன் அவளுக்குக் காலேஜ் பீஸ் நானே கட்டிட்டேன் அப்புறம் அவ பேர்ல ஒரு இடம் வாங்கியிருக்கேன் அந்தப் பத்ரம்” என்று அனைத்தையும் கொடுக்கச் செந்திலின் பார்வை மனைவியை அழுத்தமாகப் பார்த்தது.
இதையெல்லாம் அவர் எதிர்பார்க்கவில்லை என்றாலும் கிடைத்தவரை லாபம் என்று எண்ணிக்கொண்டார்.
“அப்புறம் சித்தப்பா தனியாயெல்லாம் எங்கயும் போக வேண்டாம் இங்கேயே ஒண்ணா இருக்கலாம்” என்றான்.
“வேண்டாம் ராசா விட்டுடு தனியா போகட்டும்” என்று கோசலை கூற, கனகமும் “ஆமா சேனா தனியா போய்க்கிறோம்” என்றார், அதற்குமேல் அவர்கள் இஷ்டம் என்றுவிட்டுவிட்டான்.
குன்னூரிலிருந்து நீலகிரி செல்லும் வழியில் இருக்கிறது கெட்டி பள்ளத்தாக்கு, அங்கே பழங்கால பொருட்கள் புதைந்துகிடப்பதாகக் கூறி அகழ்வாராய்ச்சி நடந்து கொண்டிருந்தது, இரவு இரண்டுமணி… நான்கு பேர் அங்கே இருளில் ஏதோ வேலை செய்துகொண்டிருக்க நான்கு ஜீப்புகள் அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தது.
சரசரவென்று ஆட்கள் இறங்கி நின்றனர் “யார் நீங்கெல்லாம்? இது கவர்ன்மென்ட் ப்ரொபேர்ட்டி இங்க வரக் கூடாது” என்றார் அகழ்வாராய்ச்சி குழுவின் தலைவர்.
“நாங்களும் கவர்ன்மென்ட்ல இருந்துதான் வந்துருக்கோம்” என்றான் முன்னில் வந்து நின்ற நெடியவன் ஒருவன்.
“யாருங்க நீங்க இப்போ போறீங்களா இல்ல போலீஸ் கூப்பிடட்டுமா” என்றார் அவர்.
நெடியவன் தன் கையில் இருந்த பேட்ஜ் எடுத்துக் காட்டினான் “கிரைம் பிரென்ச்!” என்றார் அவர் அதிர்ச்சியோடு, அவரிடம் எதுவும் பதில் பேசாதவன் “டீம்… செர்ச்” என்க நாலாபுறமும் பறந்தது அவன் டீம், கையைக் கட்டி அவன் நின்றிருக்க அகழ்வாராய்ச்சி என்ற பெயரில் நடந்துவந்த திருட்டுத்தனம் வெளிவந்தது.
பல இடங்களில் இருந்தும் கடத்தி வரப்பட்ட கோவில் சிலைகள் பொருட்கள் அங்குப் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது, இங்குத் தவறு நடக்கிறது என்று புகார் செய்த இரண்டு பழங்குடி இளைஞர்கள் அதைப் பற்றிய கட்டுரை எழுதிய இரண்டு பத்திரிக்கை நிருபர்கள் சடலமும் அந்த இடத்தில் புதைக்கப்பட்டிருந்தது.
அகழ்வாராய்ச்சி நடக்கும்… அல்லது நடந்த இடம் என்பதால் அங்கு யாரும் மீண்டும் தோண்டிப்பார்க்கவோ மண் மேடுகளை பார்த்துச் சந்தேகம் கொள்ளவோ மாட்டார்களே அந்தத் தைரியம்.
அனைத்தும் வீடியோ பதிவும் செய்யப்பட்டது, சிலையைக் கடத்த உதவிய நான்கு பேரோடு குழுவின் தலைவரும் சிலைகளை வாங்க ஹோட்டலில் காத்திருந்த ஏஜெண்டும் கைதுசெய்யப்பட்டார்கள், பொருட்களோடு கைதானவர்களையும் அழைத்துக்கொண்டு அவனுடைய டீம் ஆபிஸ் செல்ல இவன் தன்னுடைய புல்லட்டில் பின்னே சென்றான்.
“எக்ஸலண்ட் ஜாப் மைப்பாய்” என்று அவன் தோளில் தட்டிக்கொடுத்த டி.எஸ். பி “சோ வாட் நெக்ஸ்ட்” என்க.
“ராஜப்பன்… ஐ வில் கெட் ஹிம் சார்” என்றான் மிதமிஞ்சிய கோபத்தோடு.
“ஹ்ம்ம்… குட் லக், என்ன ஹெல்ப் தேவைப்பட்டாலும் என்னைக் காண்டாக்ட் பண்ணு” என்றார்.
“எஸ் சர்” என்றவன் சலியூட் வைத்துத் திரும்பிநடக்க “தேவ சேனாபதி” என்ற அழைப்பில் திரும்பி நின்றான்.
“பி ரெடி, யூனிபோர்ம் போடறதுக்கு” என்றார் புன்னகையோடு.
“தேங்கயு சர்” என்றவன் அதே உற்சாகத்தோடு வீட்டிற்கு பயணமானான்.
டி.எஸ்.பி ஆபிசிலிருந்து நேரே தோட்டத்திற்கு வந்துவிட்டான் சேனாபதி, ஏனோ உறக்கம் வரவில்லை, பல மாதங்களாக உறக்கம் தொலைத்து அலைந்து திரட்டிய ஆதாரங்கள் வைத்து நேற்றய அரெஸ்ட் நடந்திருந்தது.
சரியாக இருள் விலகாத அந்த அதிகாலையே வேலையில் சால்வை போர்த்தி அமர்ந்திருந்தது ஒரு உருவம், தோட்டத்தின் அருகில் நெருங்க அங்கிருந்த மரத்தில் சாய்த்துவைக்கப் பட்டிருந்த சைகிள் அது யார் என்பதை அவனுக்கு உணர்த்தியது.
“மயூரி!” என்றான் அருகில் நெருங்கி.
சட்டென்று எழுந்து நின்றாள் “இங்க என்ன பண்ற! இந்த நேரத்துல யார்கூட வந்த?” என்றவன் முடிக்கும் முன் அவனை இறுக்கமாக அணைத்துக்கொண்டாள்.
“ம…” என்றவனுக்கு அதற்குமேல் வார்த்தைகள் வரவில்லை “மயூ…”.
“ஐ லவ் யு…” என்றவள் அணைப்பை இன்னும் இறுக்கினாள் மெல்ல உணர்வுக்கு வந்தவன் “மயூ இங்கப்பாரு அப்படிலாம் ஒண்ணுமில்ல உனக்குச் சரியா புரியாம…”.
“நான் இன்னும் அந்தப் பதிமூணு வயசு சின்னப் பொண்ணு இல்ல, ஐ நோ, ஐ லவ் யு அண்ட் ஐ நீட் யு தேவா… ஐ நீட் யு” என்றவள் அவன் சட்டையைப் பற்றித் தன்னை நோக்கி இழுத்தாள்.
“என் கண்ணைப் பாத்து சொல்லுங்க உங்களுக்கு உங்க மயூரி வேண்டாம்னு, உங்களோட இந்த மக்கு பொண்ணு வேண்டாம்னு” என்றாள் படபடக்கும் இதயத்தோடு, சில நொடிகள் அசையாமல் அந்த விழிகளையே பார்த்து நின்றவன் அவள் முகத்தைக் கைகளில் தாங்கி முன் உச்சசியில் முத்தம் பதித்தான்.
நிழல் போல நானும்
நடை போட நீயும்
தொடர்கின்ற சொந்தம்
நெடுங்கால பந்தம்
கடல் வானம்
கூட நிறம் மாறக் கூடும்
மனம் கொண்ட பாசம்
தடம் மாறிடாது நான் வாழும்
வாழ்வே உனக்காக
தானே நாள் தோறும்
நெஞ்சில் நான் ஏந்தும்
தேனே எந்நாளும் சங்கீதம்
சந்தோஷமே
error: Content is protected !!