Skip to content
Post Views: 1,557
தீனா குளித்து வர அவனுக்கான உணவை சூடாக கொடுத்தவள், அதன் பின் அவனின் இளமை பசியையும் அவனின் எண்ணம் போல தீர்த்துவிட்டே ஓய்ந்தாள்.
விடியலில் கண்விழித்த யமுனா எப்போதும் போல தனது வேலையில் மூழ்கியிருக்க அவளிடம் ஓடி வந்து நின்ற ஜெகாவின், “அண்ணீ..! அண்ணா புது வண்டி வாங்கியிருக்காங்களா..?” என்ற ஆர்வத்தோடான கேள்வியில் சிரிப்போடு,
Advertisement
“ஆமாடா ஜெகா.. வெளியே இருக்கு பார்த்தீயா..?” என்றிட,
“ம்ம்.. அத பாத்துட்டு இருக்கறப்ப தான் அம்மா சொன்னாங்க.. உன்ற அண்ணனோடதுன்னு.. அதான் உங்கிட்ட கேட்டு கன்ஃபார்ம் பண்ண வந்தேன்..” என்றான் துள்ளலோடு.
Advertisement
Advertisement
“இப்ப கன்ஃபார்ம் ஆகிடுச்சு. அடுத்து என்ன செய்ய போறே..?” என யமுனா கேட்க,
“அண்ணா எழுந்ததும் அவரோட ஃபாஸ்ட்டா ஒரு ரைட்.. அப்புறம் அண்ணாகிட்ட கேட்டு ஒரு ட்ரீட்.. அவ்வளவு தான்..” என்றான் சிறுபிள்ளை விழிகள் மின்ன.
Advertisement
“ஓகே டன். உங்க அண்ணா எழுந்ததும் ரெண்டும் நடக்கும். இப்போ இந்தா உன்னோட அண்ணா வண்டி வாங்கினதுக்கு அண்ணியோட ட்ரீட் கேசரி அண்ட் உன் பேவரேட் மெதுவடை..” என கொடுக்க,
“வாவ்..! இருங்க பிரஷ் பண்ணிட்டு ஓடி வர்றேன்..” என்றவன் குதித்துக்கொண்டு பாத்ரூம் நோக்கி சென்றான்.
அவனின் குதூகலமான பேச்சிலும் சிரிப்பிலும் மகிழ்ந்தவள்,
‘தீனாவை எழுப்பலாமா..? இன்று விடுமுறை என்பதால் இன்னும் கொஞ்ச நேரம் தூங்க விடலாமா..?’ என்ற யோசனையோடே காலை உணவை தயாரிக்க தொடங்கினாள்.
தீனாவை எழுப்புவது குறித்த குழப்பத்திற்கு தீர்வாக அவனே எழுந்து வந்திருந்தான் சற்று நேரத்திற்குள்.
“பாப்பா, காபி கொடு..” என்றவன் பாத்ரூம் சென்று வருவதற்குள் அவன் கேட்டதை தயாரித்து அவனிடம் சென்று கொடுத்தவள்,
“இன்னும் கொஞ்ச நேரம் தூங்கியிருக்கலாமே..?” என அக்கறையோடு சொல்ல,
“நேத்து எல்லாருக்கும் கணக்கு பாத்து முடுச்சு கிளம்ப ரொம்ப நேரம் ஆகுமுன்னு மணி அண்ணா காலைல கணக்கு பார்த்து ஜீபே பண்ணிடுன்னு நோட்டோட அனுப்பிட்டார் நேரமே..
பணம் வரனுமுன்னு பார்த்துட்டு இருப்பாங்க இல்ல. அதான் நேரமே எழுந்தேன்.
கணக்கு சரிபாத்து அனுப்பிட்டு.. வண்டிக்கு பூஜை போட குல தெய்வ கோவில் போகனும்.
சக்தி மாமாகிட்ட சொன்னேன். அவங்களும் ரெடியாகிட்டு இருக்காங்க.
நீயும் மதியத்துக்கு அவங்களுக்கு மட்டும் சமச்சுட்டு ரெடியாகு..” என்றதும் ஜெகதீஷ் காலை தன்னிடம் சொன்னதை யமுனா சொல்ல,
“அவனையும் கிளப்பு. அன்னைக்கு நாம கோவிலுக்கு போனப்பவும் அவன விட்டுட்டு தானே போனோம். இன்னைக்கு அவன கூட்டிட்டு போலாம்..” என திட்டமிட்ட படி அனைவரும் கிளம்பினர்.
மூவராக செல்வதால் புடவை கட்டாமல், திருப்பூர் சென்ற போது அங்கிருந்த தனது பொருட்களை எடுத்து வந்ததில் இருந்த சுடிதாரில் ஒன்றை யமுனா போட்டுக்கொண்டு வந்தாள்.
முதல் முறையாக அவளை சுடிதாரில் பார்த்த ஜெகதீஷ் கலகலவென சிரிக்க புரியாது விழித்தாள் யமுனா.
தீனாவிற்கு அவனின் சிரிப்புக்கு காரணம் புரிய அவனின் இதழிலும் குறும்பு சிரிப்பு.
இருவரையும் மாறி மாறி பார்த்தவள் குனிந்து தனது உடையையும் சரி பார்த்துவிட்டு,
“என்ன இருக்கு என் ட்ரஸ்ல..? அண்ணனும் தம்பியும் இப்படி சிரிக்கிறீங்க..?” என்றாள் குழப்பத்தோடு.
அப்போதும் சிரிப்பை அடக்க முடியாமல் திணறிய ஜெகதீஷ், “அண்ணா உங்கள பாப்பான்னு ஏன் கூப்பிடறாருன்னு இப்ப தான் அண்ணி புரிஞ்சுது.
இந்த ட்ரஸ்ல உங்கள பார்த்தா.. என்னோட க்ளாஸ்மேட்ஸ் மாதிரி தெரியறீங்க..” என்றிட,
முதல் முறை தீனா தன்னை சிறு பிள்ளை என நினைத்து பேசியது நினைவில் எழ உதட்டை பிதுக்கி செல்லமாக சிணுங்கினாள் யமுனா.
“அச்சோ பாப்பா.. இப்ப நீ பண்ணறது இன்னும் கொழந்த மாதிரி காட்டுது உன்ன..” என தீனாவும் ஜெகதீஷூடன் கூட்டு சேர்ந்து கலாய்க்க என அழகாய் தொடங்கியது அவர்களின் பயணம்.
பாலமுரளி வந்ததும், “அதுல.. மாமா கூத..” என அவனும் ஏறிக்கொள்ள கலகலப்புக்கு பஞ்சமின்றி குலதெய்வ கோவில் வந்து சேர்ந்தனர் இரு குடும்பத்தாரும்.
நிறைவாய் பூஜை போட்டு, அருகே இருந்த தரமான ஹோட்டலில் மதிய உணவை முடித்துவிட்டு வீட்டிற்கு கிளம்பும் போது,
“மாப்ளே.. பசங்கள நாங்க வீட்டுக்கு கூட்டிட்டு போறோம்.
நீ யமுனாவோட தனியா எங்கையாச்சும் போயிட்டு வா..” என சொல்ல தீனாவிற்கும் அந்த ஆசை இருந்ததால் மீண்டும் இருவருக்கும் ஒரு அழகான தனிமை பயணம்.
பொள்ளாச்சி டவுனுக்கு வந்தவன்.. நேராக ஒரு நகைக்கடைக்கு முன் வண்டியை நிறுத்த, “இங்கே என்ன வாங்க போறீங்க..?” என்றாள் யமுனா அதிர்வாக.
ஏனெனில் இப்போது தங்கம் வெள்ளி விற்கும் விலைக்கு எதை வாங்குவதானாலும்.. ஒரு முறைக்கு பல முறை யோசிக்க வேண்டி உள்ளதே..!
திருமணம்.. விருந்து.. அதை தொடர்ந்து வீட்டுக்கு பொருள் வாங்கியது தனக்கு போன்.. இப்போது வண்டி வாங்கியது.. என பெரிய செலவாக தொடர்ந்து செய்தவன் இப்போது நகை கடைக்கு வந்தால் என்ன நினைப்பது..?!
அதனால் அவள் தயங்கி நிற்க, “என்ன வாங்கறேன்னு உள்ள வந்து பாரு பாப்பா..” என்றவன் அவளை அழைத்துக்கொண்டு மெட்டிகள் இருக்கும் பகுதிக்கு சென்று அமர்ந்தான்.
திருமணத்தன்று நடந்த பிரச்சனையில் தாலியை மட்டும் வாங்கி வந்திருந்ததால்.. மெட்டியே அணியாமல் தான் சுற்றிக்கொண்டிருந்தாள் யமுனா.
புடவை கட்டுவதால் பெரிதாக பாதம் வெளியே தெரியாமல் இருக்க.. யாரும் எந்த கேள்வி கேட்கவில்லை இதுவரையிலும்.
யமுனாவிற்கு உள்ளூர அந்த ஆசை இருக்க தான் செய்தது. இருந்தாலும் இப்போதைய சூழ்நிலையை எண்ணி அவள் அதை தீனாவிடம் கேட்கவே இல்லை.
தான் கேட்காமலேயே தனக்காக வாங்கி தர வந்தது அவ்வளவு நெகிழ்ச்சியை அவளுக்கு தர, அவனின் பக்கத்து இருக்கையில் அமர்ந்து அவன் கையை இரு கையாலும் கட்டிக்கொண்டு தன் தலையை அதன் மீது சாய்த்தாள்.
அவளின் செய்கையிலேயே அவளின் நிலை புரிந்து மெல்லிய புன்னகையோடு தன் தலையால் அவள் தலையில் செல்லமாக மோதி விலகியவன், அவளின் கையை லேசாக தட்டிக்கொடுத்து ஆசுவாசப்படுத்தினான்.
சேல்ஸ் கேளிடம் சொல்லி, அவளின் அளவு பார்த்து.. அவளின் விருப்பம் போல வாங்கியவன்.. அப்போதே அவள் காலில் போடாமல் பேக் செய்து தரச்சொல்லிவிட்டு கொலுசு எடுக்க சொல்ல,
“மெட்டி ஓகே. வாங்கி தான் ஆகனும். நான் தான் கொலுசு போட்டிருக்கேனே..! இப்ப எதுக்கு இன்னொன்னு..? வேணாம் தயா..” என மெட்டிக்கு போட்ட விலையை கண்டு மறுப்பாக சொல்ல,
“நீ போட்டிருக்கற கொலுசால எத்தன பாடு ன்னு தினமும் அனுபவிக்கறவனுக்கு தானே தெரியும்.
மனுஷனோட அவசரத்துக்கு எதையெல்லாம் கழட்ட வேண்டி இருக்கு..
அதுமட்டுமா காலைல அதை மாட்டி வேற விடனும். எனக்கு தானே தெரியும் அந்த கஷ்டம்..
சத்தமே வராத மாதிரி இப்போதைக்கு ஒண்ணு வாங்கி மாட்டிக்கோ..
நம்ம திருப்பூர்ல தனியா செட்டில் ஆனதும் உன் விருப்பத்துக்கு வாங்கி தர்றேன்.
சங்கீதத்தோட சங்கதிய அப்போ பார்த்துக்கலாம்..” என மற்றவருக்கு கேட்காதவாரு காதோடு தீனா சொல்ல மொத்தமாய் சிவந்து சிலிர்த்து போனாள் யமுனா.
அவனின் பேச்சிற்கு பதில் சொல்லும் நிலையிலோ.. இடத்திலோ.. இல்லாததால் அமைதியை பதிலாக்கி தலை குனிந்து அமர்ந்துவிட,
“அச்சோ..! பாப்பாக்கு வெக்கமா..? இதெல்லாம் நாம தனியா இருக்கும் போது காட்டனும் பாப்பா.. அப்ப தானே கிக்கா இருக்கும்..” என அப்போது அவன் சீண்ட,
யாரும் அறியாமல் பிடித்திருந்த கையில் கிள்ளி கண்ணால் ‘பேசக்கூடாது..’ என மிரட்டினாள் போலியாய்.
செல்ல சீண்டலோடும்.. மனதில் எழுந்த நிறைவோடும்.. தீனா ஆசைபட்டது போல சத்தமிடாத வகையில் கொலுசை வாங்கிக்கொண்டு அருகே இருந்த தியோட்டருக்கு சென்று அமர்ந்த போது,
“ஏற்கனவே நிறைய செலவாகிடுச்சு. இப்ப இதெல்லாம் வாங்கி இன்னும் செலவு தான். அதோட தியோட்டருக்குமா..?
எப்படி எல்லாத்தையும் சமாளிக்கறது..?” என புலம்பியவளிடம், தங்கமணியின் செயலை சொல்லி, இப்போதைய இருப்பு பற்றியும் சொல்ல, தங்கமணியை நினைத்து அத்தனை ஆச்சரியம் யமுனாவிற்கு.
‘இந்த காலத்திலும் இப்படிப்பட்ட மனிதர்களா..?!’ என எண்ணி..
படம் முடிந்து வாணிக்கு போன் செய்து சொல்லியிருந்த படி வரும் வழியிலேயே இரவு உணவு வாங்கி வந்திருக்க, அவர்களுக்கானதை கொடுத்து விட்டு ஜெகதீஷை அழைத்துக்கொண்டு தீனாவின் வீடு வந்து சேர்ந்தனர்.
அன்றைய இரவில் அவளை மொத்தமாய் தன்னோடு ஒன்றாக்கி.. கலந்து.. களித்தவன்.. கூடல் முடிவில் அவள் பாதத்தில் முத்தமிட்டு வாங்கி வந்ததை அணிவிக்க..
யமுனாவிற்கு இந்த உலகமே தொலைந்து போக.. அவளின் மொத்த உலகமும் அவளின் தயாவாகி போனான்.
இருவருக்குமான பிடித்தங்கள் நீண்டு கொண்டே செல்ல.. செல்லும் பாதையின் தூரத்திலும் சலிப்பை உண்டாக்காத ஆலிங்கனங்கள் அழகாய் அரங்கேற்றம் கொண்டது முற்று பெறாது.
அன்பே உன் கைகள் தீண்ட ஹார்மோன்கள் மூங்கில் ஆக
சங்கீதம் படிக்குதே சந்தோசம் வெடிக்குதே
சாகாமல் வாழ்வதற்கு காதல் உண்டு என்பதை
சொன்னாயே நேரில் வந்து
நீ எனக்கு தேவதை
error: Content is protected !!