Skip to content
Post Views: 1,477
“ஏன் தயா இப்படி முறைக்கறீங்க..? உண்மைய தானே சொல்றேன்.
சீக்கிரமே என்ன அம்மா ஆக்கிட்டா.. பத்து மாசத்துக்கு இந்த தொல்லை இருக்காது தானே..?” என கண் சிமிட்டியவளை கண்டு வலிக்காத படி தலையில் லேசாக குட்டியவன்,
Advertisement
“இந்த வலிக்கே துவண்டு கிடக்கறே.. மூஞ்சி மூஞ்சூறு மாதிரி சுருங்கி போயிருக்கு.
Advertisement
டெலிவரி பெயின் நினச்சா எனக்கு உன்னை நெருங்கவே பயந்து வருது.
Advertisement
இதுல அம்மாவாகனுமாமே.. முதல்ல உன் உடம்பை தேத்து பாப்பா.. அப்புறம் எல்லாம் தன்னால வரும்..” என்றான் அக்கறையுடன்.
Advertisement
“அதான் இப்போதைக்கு வேண்டாமுன்னு இருக்கீங்களே..! அப்புறம் எப்படி தன்னால வருமாம்..?” என அவள் மூக்கை சுருக்க,
“என்னைய தாங்கவே சத்து இல்லையாம்.. அப்ப அப்ப இடையில பால கொடுத்து தெளிய வைக்க வேண்டி இருக்கு. இதுல என்னோட புள்ளைய தாங்கிடுவாளாம்..” என கிண்டலாக வாய் உரைத்த போதும்,
பரிவாக அவளை தாங்கிக்கொண்டவன், “இன்னும் ஒரு வருஷம் போகட்டும் யமுனா. நீயும் இத்தன வருஷம் வேலைன்னு மெஷன்ல இருந்திருக்கே. கண்டிப்பா அது உனக்கு பாதிப்பை கொடுத்திருக்கும்.
உன் உடம்பை நல்லா தேத்து.. எப்போ நீ டெலிவரி பெயினை தாங்கிப்பேன்னு எனக்கு தோணுதோ.. அப்போ நீ கேட்காமையே அது நடக்கும்..” என்றவனின் வார்த்தைக்கு பின் இருப்பது,
‘அவளின் மீதான அக்கறை மட்டுமே..’ எனும் போது அவனை கொண்டாடாமல் இருக்க முடியுமா பெண்ணால்..?
அவனை இறுக்கி அணைத்தவள் அதே வேகத்தில் அவனின் இதழை தன் வசமாக்கியிருந்தாள்.
அவளாக அவனை நெருங்கியதில் உண்டான மயக்கத்தை சுகமாய் ஏற்றவன் கரங்கள்.. மென்மையாய் அவளின் வயிற்றை வருடி விடவும் மறக்கவில்லை.
மூச்சுக்கு தவித்து சற்று நேரத்திலேயே விலகியவளை கண்டு உடல் குலுங்க சிரித்தவன்,
“கொஞ்ச நேரம் மூச்சை அடக்க முடியல.. அம்புட்டு தான் உன் ஸ்ட்ரென்த்.. இதுல அம்மா ஆகுமோ..?!” என சீண்டி,
அவளை தாயாய் மடி தாங்கி.. சீராட்டி அவள் பாத்ரூம் சென்ற போதெல்லாம் உடனிருந்து .. என எப்படியோ விடியலை நெருங்கும் வேளை ஒரு வழியாய் உறங்க வைத்தவன் அதன் பிறகே கண்ணயர்ந்தான்.
அவள் உறங்கிய சிறிது நேரத்திலேயே எப்போதும் எழ வைத்த அலாரம் அடிக்க, அதை கண்டு கொள்ளும் நிலையில் கூட இல்லை யமுனா.
அவளின் ஓய்ந்த தோற்றம் கண்டு அவளை எழுப்ப மனமில்லாமல் அலாரத்தை நிறுத்திவிட்டு படுத்திருந்தான் தீனா.
“பாப்பா இருக்கற நிலைமைக்கு இவள விட்டுட்டு போக முடியுமா..? வேல வேற இந்த நேரம் பார்த்து இப்படி.. என்ன செய்ய..?” என தனக்குள் யோசனையில் ஆழ்ந்தவன் தூங்காது விட்டத்தை வெறித்தே கிடந்தான்.
உடல் அசௌகரியம் உசுப்ப விழித்தவள் வாட்சில் தெரிந்த நேரத்தை கண்டு வேகமாய் எழ அந்த அசைவில் அவள் புறம் திரும்பிய தீனா, “பாப்பா.. எதுக்கு இவ்வளவு வேகம்.. பாத்ரூம் போகனுமா..? ரொம்ப முடியலையா..?” என்றான் பரபரப்பாக.
“பாத்ரூம் போகனும் தான். அதோட லேட் ஆகிடுச்சு. நீங்க கிளம்பறதுக்குள்ள சாப்பாடு செய்ய வேணாமா..?” என்றதும்,
அவளை முறைத்த தீனா, “ஒண்ணும் வேணாம். இன்னைக்கு நா போகனுமா ன்னு யோசிக்கறேன்.. உனக்கு இப்ப எப்படி இருக்கு..?” என்றான் அவளை ஆராய்ந்தபடி,
“எனக்கொன்னுமில்லங்க.. இப்ப வலியும் இல்ல. அதெல்லாம் சமாளிச்சுக்குவேன். ஏதோ ஆர்டர் வந்திருக்கு.. முக்கியமான வேல ன்னீங்களே.. நீங்க போயிட்டு வாங்க..” என்றதும்,
‘உண்மையை தான் சொல்கிறாளா..?’ என பல முறை கேட்டு உறுதி படுத்திக்கொண்டவன்,
சரியென பலத்த யோசனைக்கிடையே தலையசைக்க.. ‘சமைக்க வேண்டும்..’ என கிளம்பியவளை தடுத்தவன்,
“நா போறதுன்னா நேரமே கிளம்பனும். நீ சாதம் குழம்புன்னு செஞ்சு கொண்டு போற அளவு நேரமில்ல.
ஒரு நாள் குமரன் கிட்ட சொல்லி பார்சல் வாங்கி சாப்பிட்டுக்கிறேன்.
பாத்ரூம் போயிட்டு வந்து அடங்கி படு முதல்ல நீ..
வலி இல்லன்னாலும் முகமெல்லாம் பாரு செவந்து கெடக்கு.
ஈரத்தலையோடு இருந்ததுக்கு சளி பிடிக்கும் போல.. உடம்பும் வெகுவெகுன்னு இருக்கு..” என அவளை தொட்டு ஆராய்ந்தபடி சொன்னான்.
“அச்சோ, இந்த மாதிரி நேரத்துல எங்க உடம்பு சூடா தான் இருக்கும். காய்ச்சலெல்லாம் இல்லங்க.
உங்களுக்கு சாப்பாடு வேணாமுன்னா ஜெகாவுக்கு, அப்புறம் எங்களுக்கு சாப்பிட செய்ய வேணாமா..?” என்றவள் பிடிவாதமாய் கட்டிலை விட்டு இறங்கினாள்.
“உங்களுக்குன்னா இன்னும் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு கூட செய்யலாமே.. பாப்பா..?” என்றான் அவளின் பிடிவாதம் கண்டு கடுப்பாக.
“உங்க கூட இவ்வளவு பேசினதுலயே நல்லா தூக்கம் தெளிஞ்சிடுச்சுங்க..
இப்ப தூங்க ட்ரை பண்ணாலும் தூக்கம் வராது.
இப்ப ஃப்ரஷ் ஆகிட்டு சமச்சிட்டு அப்புறமா கூட படுத்துக்கறேன்..” என கண்ணை சுருக்கி கொஞ்சியவளை வேறு வழியின்றி அனுப்பியவன் பின்னோடே வந்து நின்றான் அவளுக்கு உதவ.
அவன் செய்கையை எல்லாம் ரசித்தாலும், “நா நிறைய எல்லாம் செய்யல.. லெமன் ரைஸூம், பொட்டட்டோ ஃப்ரையும் தான் செய்யப்போறேன் நானே பார்த்துக்கறேன்.
நீங்க சீக்கிரம் கிளம்பனும் சொன்னீங்க தானே..? போய் கிளம்புங்க..” என அவள் மறுக்க,
“எல்லாம் எனக்கும் தெரியும்..” என்றவன் தேவையான அளவு கேட்டு உருளைக்கிழங்கை வெட்டி.. வெங்காயம் உரித்து கொடுத்துவிட்டே குளிக்க சென்றான்.
அவன் கிளம்பும் போது அறைக்குள் வந்தவளின் கண்கள் சிவந்து தெரிய அருகே வந்து தொட்டு பார்த்தவனுக்கு நன்றாகவே சூடு தெரிய அவளை முறைத்தபடியே,
“இப்ப எழுந்து இதெல்லாம் செய்யலன்னு யாரு கேட்டா உன்ன..? இப்ப பாரு காய்ச்சல் நல்லா அடிக்குது. இந்த நேரத்துக்கு எந்த ஹாஸ்பிடல் போக..?” என கோபப்பட,
“ம்ப்ச்.. இது சாதாரண ஜலதோஷத்தால வந்தது தான். அதும் பீரியட்ஸ் ங்கறதால கொஞ்சம் டல்லா வேற தெரியறேன் போல உங்க கண்ணுக்கு.
மத்தபடி நா நல்லா தான் இருக்கேன். நீங்க கிளம்புங்க..” என அவனை ஒருவழியாய் கிளப்ப போதும் போதுமென்றானது அவளுக்கு.
அப்போதும், ‘அவளுக்கு ஓய்வு தேவை..’ என நினைத்தவன்,
“பாப்பா, நீ இங்கிருந்தா எதாவது செஞ்சுட்டே இருப்பே. வாணி வீட்டுல உன்ன விட்டுட்டு போகவா.. நீ அங்கே போய் இருக்கீயா..?” என அக்கறையாக அவளை அணைத்துக்கொண்டு கேட்க,
“ஆமா.. நா இப்ப தா முதல் முறை சடங்காகி இருக்கேன்.. இதெல்லாம் சமாளிக்க முடியாம திண்டாட..!
போய் வேலைய பாருங்க கண்ணழகா..” என்றவளை அவன் மேலும் வற்புறுத்த,
“யோவ்.. இதுக்கும் மேலயும் நீ கிளம்பல.. அப்புறம் அண்ணி வீட்டுலயே ஒரு மாசம் டேரா போட்டுடுவேன். அப்புறம் நீ பட்டினி தான் கிடக்கனும்..” என மிரட்டி அனுப்பியிருந்தாள்.
அவளின் பேச்சில் சிரிப்பு வந்தாலும்.. அவளின் உடல்நிலை அவனை யோசனைக்குள்ளாக்கியே இருந்தது கிளம்பிய நேரம் தொட்டு..
ஏதோ சொல்ல முடியாத தவிப்பு அவனை ஆட்கொள்ள அதிலிருந்து மீளவே இயலாத ஒரு நிலை அவனுள்.
அவளின் தவிப்புக்கு ஏற்ப தான் அவன் அவனவளை திரும்ப காண நேரும் என்பது அறிந்திருந்தால் அவளுடனேயே இருந்திருப்பானோ என்னவோ..?!!
முன்னமே கணிக்கும் திறன் கொண்ட சித்தனில்லையே அவன்.
சாதாரண மனிதனாய் போனானே..!!
***
தீனா இருக்கும் வரை இருந்த திடம் மொத்தமும் வடிந்தது போல அசதி அவளை ஆட்கொள்ள, மெதுவாக மெத்தையில் விழுந்தவள் நன்றாக உறங்கி போயிருந்தாள்.
எவ்வளவு நேரம் சென்றிருந்ததோ, உறக்கமா.. மயக்கமா.. என புரியாத நிலையில் இருந்தவளுக்கு வெளியே ஜெயசீலன் சகுந்தலாவிடம் ஏதோ காரசாரமாக பேசும் சத்தத்தில் லேசாக தூக்கம் கலைந்தது.
எழ நினைத்தால் தலை எல்லாம் மிகுந்த பாரத்தை ஏற்றி வைத்தது போல அழுத்த, மீண்டும் அப்படியே படுத்து விழியை மூடிக்கொண்டாள்.
அப்போது அவள் செவியில், “இப்பவே ஆரம்பிச்சாச்சு இல்ல.. ஒத்த சோத்த ஆக்கி வச்சு போட்டு மகராணி ஒய்யாரமா வெடிஞ்சு இம்புட்டு நேரமா படுத்து கிடக்கறத பாரு.
பொழைக்கற ஊட்டுல நடக்குமா இதெல்லா..?
ஊட்டு நிருவாகத்த அவ கையில வச்சிருக்கோங்கற திமிரு..
இன்னக்கி ஒத்த சோத்தோட நிக்கறது.. நாளக்கி கஞ்சியாகும்.. அப்புறோ அதுக்கு கூட வக்கத்து நிக்கோனும் பாத்துக்கோ..!
இதத்தா ஆரம்பத்துலயே சொன்னேன்.. எல்லாம் புதுசுல இப்படி செய்யறது.. போக போக வேசம் தெரியுமுன்னு.. நீ நம்புனீயா..?” என யமுனாவை ஜெயசீலன் வசைபாட,
“அவ தெனமுமா இப்புடி செய்யறா..? ஏதோ இன்னிக்கி முடியல போல.. உடுங்க..” என்றார் அவளுக்கு ஆதரவாக.
அதில் கொந்தளித்த ஜெயசீலன், “என்ன உன்ற மருமவளுக்கு சப்போட்டோ..? இத்தன வருசோ என்னைய அண்டி வாழ்ந்தே.. இப்போ அவகிட்ட தானே எல்லா இருக்குன்னு அவளுக்கு தொணக்கி நிக்கிறீயோ..?” என இடக்காக கேட்க,
“ச்சே.. அப்படி இல்லைங்க.. அவ இன்னக்கு தான செய்யல.
நானுங்கூட உங்களுக்கு வேற செஞ்சு கொடுத்து சாப்புட்டாச்சே.. அப்புறமும் பேசினா சரித்தானா..?
அவளுக்கு மேலுக்கு முடியல போல..” என்றார் அன்றைய நாளை கணக்கில் வைத்து.
error: Content is protected !!