Skip to content
Post Views: 1,593
“எதுக்கு முடியல..! சேத்த ஆக்கவா..?” என நக்கலாய் கேட்டவர்,
“ஆமாமா.. ஜாமமெல்லாம் கொஞ்சலும் கொழவாலுமா திரிஞ்சா.. அப்புறோ இப்புடி தான் கிடக்க சொல்லும்.
Advertisement
நேத்து ரெண்டும் தூங்காம அடுச்ச கூத்தெல்லாம் கண்டும் காணாத மாதிரி இல்ல கெடக்க வேண்டி இருக்கு..
நேத்து மட்டுமா.. நெதமும் இதே சோலியா கிடந்தா.. அப்புறோ இப்புடி கிடக்காம எப்புடி..?
Advertisement
Advertisement
ச்சை.. சிலதெல்லாம் வாயால சொல்ல கூசுது..
ஊட்டுல பெரியவங்க சின்னவங்க இருக்காங்கன்னு வெவஸ்த்தை வேணாமா..?
Advertisement
இப்புடி மாயமாலம் பண்ணித்தா அவன கைக்குள்ளாற போட்டு வச்சிருக்கா போல..!
இதுக்குன்னு தானே தனியா ரூமு வேற போட்டது.. ச்சை..
ஏன் நாமெல்லாம் புள்ளங்கள வச்சுக்கிட்டு இந்த ஒத்த ரூமுல வாழல..? அம்புட்டுக்கு சொகத்து அலையிது ஒடம்பு..
அவ புத்தி தெரிஞ்சு தா அவ அப்பனாத்தா இன்னக்கி வர பேச்சு வார்த்தயே வேணான்ட்டு ஒதுங்கி இருக்காங்க..” என யமுனா மீதான வன்மத்தில் வரைமுறையின்றி வார்த்தையை வீசிக்கொண்டிருந்தார் ஜெயசீலன் சகுந்தலாவிடம்.
அதற்கு சகுந்தலா என்ன பதிலை சொல்லியிருப்பாரோ..? அதற்குள் இடையிட்டது யமுனாவின் குரல்.
“ஆமா ன்டீ.. இங்கே என்ற அருமை மாம..நாரூ ஊட்டுல தான் குப்பைய கூட்டி தள்ளிட்டு இருக்கேன்..”
“என்ன கூட்டு குடும்பமாவா..ன்னா கேட்கறே..?”
“வேற வழி.. இது என்னோட அத்தைய பெத்தவரோட உழைப்ப வித்ததால வந்த சொத்து.
இங்க இருக்கற எல்லா பொருள் லையும் என் புருஷனோட உழைப்பு இருக்கு.
இத இங்கே இருக்கறதுங்களுக்கு மொத்தமா தார வாத்துட்டு.. என்னோட புருஷனோட நடு ரோட்டுல நிற்க முடியுமா..?”
“என்னடீ.. திமிரா பேசறேனா..?”
“நீ வேற ஏன்டீ.. வாய கிளர்றே..?
மாமனார் சொத்துலையும், மகன் உழைப்பையும் அண்டி இருந்து திங்கறவங்களுக்கே இத்தன ன்னா.. என்னோட புருஷனோட உழைப்புல உட்காந்து திங்கற எனக்கு இருக்காதாடீ திமிரு..?!”
“வீட்டுல எங்க தனிப்பட்ட வாழ்க்கையா..?”
“அந்த கொடுமைய ஏன் கேட்கறே..
வெவஸ்த்தையே இல்லாம கல்யாண வயசுல பொண்ணும், மீச வச்ச பையனும் கூட இருக்கும் போதே.. டேக்கா கொடுத்துட்டு புள்ள பெத்துக்கற சாமர்த்தியமெல்லாம் என்ற புருஷனுக்கு இல்லையே.. அதனால தான் தனி ரூமு வேணுமுன்னு கட்டிக்கிட்டு ஒதுங்கிட்டோம்.
சிலதுங்க மாதிரி இங்கீதம்.. சங்கீதமெல்லாம் பாக்காம நாம இருக்க முடியுமா சொல்லு..?
புருஷனும் பொண்டாட்டியும் இருக்கற இடத்த எட்டி பார்க்க தயங்காத சில ஜென்மங்க இருக்கற இடத்துல தனியா ரூமை போட்டதுல என்ன தப்பு..?
அப்படி இருந்துமே எங்கள வேவு பாத்து எங்க வாழ்க்கைய விமர்சிக்கற கேடுகெட்ட சில ஜென்மங்க கூட தானே வாழ வேண்டி இருக்கு..” என
எப்போதும் போல வராத போனை காதில் வைத்து.. வேண்டுமென்றே ஜெயசீலனின் முன் நின்று திமிராய் பேசியவளை கண்டு முறைக்க மட்டுமே முடிந்தது அவரால்.
அதை கேட்டுக்கொண்டிருந்த சகுந்தலாவிற்கு தான் முகம் கருத்துப்போனது.
‘ஜாடையாக பேசினாலும்.. யமுனா கடைசியாக பேசியது அனைத்தும் உண்மை தானே..?
அன்று அவர்களின் தனிப்பட்ட நேரத்தில் அது ஜெயசீலனின் கட்டளையாக இருந்தாலும் கூட உள்ளே சென்றது தவறு தானே..
அது மட்டுமா.. ஜெகதீஷை அவர்களுக்கு இடைஞ்சலாக இருக்க உள்ளே படுக்க அனுப்பியது எத்தனை பெரிய தவறு..!
தன் மகன் முன் இவர்கள் அந்த நிலையில் இருந்து.. அதை அவன் கண்டிருந்தால்.. என்பதை நினைக்கவே உள்ளம் நடுங்கி போகிறதே..?!
இரு வயது பிள்ளைகள் இருக்கும் போது.. அவர் வாழ்ந்த வாழ்க்கை.. அப்போது அவருக்கிருந்த பயம்..
அந்த மாதிரி நிலையை பெண்ணாய் கடந்து தானே வந்தோம். கேட்பார் பேச்சை கேட்டு எப்படி இப்படி மனசாட்சியின்றி நடந்தேன்..
இப்போதும் ஜெயசீலனின் கேவலமான பேச்சை இடையிலேயே நிறுத்தவில்லையே நான்..’ என நினைத்து கூனிக்குறுகி அமர்ந்திருந்தவரின் கண்ணிலிருந்து சில துளி நீர் வெளியேறி இருந்தது.
அதையும் கண்டு கொண்ட யமுனா, “சிலருக்கு சொன்னா உடனே உரைக்குது.. அப்ப கூட சில ஜென்மங்களுக்கு உரைக்கவே மாட்டிங்குது டீ..
நா சமைக்கறதுல இனி கொஞ்சம் உப்பு உரப்பை கூட்டி போடனும்.. கொஞ்சமாச்சும் அப்ப உரைக்குமில்ல..” என்றுவிட்டு வேகமாய் குளியலறைக்கு சென்று கதவடைத்தாள்.
அதுவரை தோன்றாத ஒரு வித ஒவ்வாமை அவளை ஓக்கரிக்க வைக்க, வெறும் வயிற்றோடு இருந்தவளுக்கு அந்த வாந்தி கூட வராமல் தடையானது.
ஜெயசீலனின் அவர்களின் அந்தரங்கம் குறித்த பேச்சில் எழுந்த அருவருப்பு அவளை மேலும் கலங்க வைக்க, தேவையற்ற எண்ணங்கள் பலவும் அவளை அழுத்ததிற்குள் தள்ளிச்சென்றது.
இன்னும் யமுனாவின் அப்பா அம்மா அவளை ஏற்றுக்கொள்ளாத ஏக்கம் அவளை பாடாய்படுத்திக் கொண்டிருக்க.. அதை அவர் சொல்லிக்காட்டிய விதம்.. அவளை மனதளவில் பலமிலக்க வைத்தது.
மற்ற நேரமாய் இருத்திருந்தால் இந்த அளவு அவளை அந்த பேச்சு பாதித்திருக்குமா தெரியவில்லை.
மாதவிடாய் காலத்தில் எழும் மன அழுத்தமும் வேறு அவளின் சிந்தையை குழப்ப கேட்பாறின்றி அழுது கரைந்தாள்.
“வயசுல பெரியவங்கள இப்படி பேசற மாதிரி கொண்டு வந்து விட்டுட்டாரே..
ச்சே.. இந்த மனுஷன் பேசற பேச்சுக்கு.. நம்மளும் இப்படி தரமிறங்கி பேசனுமா..?’ என கழிவிரக்கம் கொண்டவளுக்கு தன்னை சமாதானம் செய்து கொள்ளவே நீண்ட நேரமானது.
ஏற்கனவே இருந்த உடல் உபாதையோடு, இப்போது இந்த மன அழுத்தமும் சேர.. மொத்தமாய் தண்ணீரை அள்ளி தலையிலிருந்து ஊற்றியவள் தள்ளாடியபடியே ஒருவாறு சமாளித்து குளித்து வந்திருந்தாள்.
சாப்பிட கூட தோன்றாமல் தங்களின் அறைக்குள் முடங்கிப்போனவளுக்கு திரும்ப திரும்ப தானும் தரங்கெட்டு போனது போல தோன்ற..
அவளின் அந்த எண்ணங்கள் செல்லும் போக்கில் பயணிக்க தொடங்கியவளின் முடிவு…
***
யமுனா பேசிவிட்டு குளியலறை சென்றதும் ஜெயசீலன் கோபமாய் பேச ஆரம்பிக்க,
“போதுங்க.. நீங்க வரமுற இல்லாம பேசுன பேச்சுக்கு அந்த புள்ள செருப்பால அடிக்காத கொறையா பேசிப்போட்டு போயிட்டா..
இப்போ கெட்டு போனது அவுங்க மருவாதை இல்ல.. உங்கள கட்டிக்கிட்ட பாவத்துக்கு என்ற மருவாதை தான்..
தயவு செஞ்சு கொஞ்சம் இப்படி நாராசமா பேசறத நிறுத்துங்க..” என கண்ணீரோடு சொல்ல,
“நா தா சொன்னேனே அவ கைகாரின்னு.. பாரு எம்புட்டு நேக்கா வார்த்தைய அள்ளி போட்டுட்டு போறா..! பெரியவங்கன்னு மட்டுமருவாத இல்லாம..” என அவர் பொரும,
“அவ வார்த்தய விட்டாளா.. இல்ல நீங்க விட்டீங்களா..?
இப்புடி அவுங்க அந்தரங்கம் வரைக்கும் போய் பேசத்தானே அவளும் கேட்டுப்போட்டு போறா.. நல்லா.
இப்புடி எல்லாம் யாருக்கும் உடனே வராது.. வார்த்த.. உங்களுக்கு சகஜமா வருதுன்னா எனக்கு சந்தேகமா இருக்கு..
உங்க பேச்சுல உள்ள வக்கரம் இப்போ வந்ததில்ல.. உங்களுக்குள்ள அடங்கி இருந்திருக்கு.. இத்தன வருஷமா அது தெரியாம நா வாழ்ந்திருக்கேன்..” என அவரை நேராக பார்த்து கேட்க,
சட்டென எழுந்த தடுமாற்றத்தை மறைத்த ஜெயசீலன்,
“ஏய்.. என்ன பேச்செல்லாம் ஒரு மாதிரியா போவுது..? நா பேசுனதுல என்ன குத்தத்த கண்டே…
அவ தான் பெரியவங்கன்னு மட்டு மருவாதை இல்லாம பேசிபோட்டு போறா..
எல்லா நா பெத்தவன் கொடுக்கற எடம்.. வரட்டும் அவன பேசிக்கறேன்..” என்றவர்,
அடுத்து எதையும் சகுந்தலா கேட்கும் முன் வேகமாக துண்டை உதறி தோளில் போட்டுக்கொண்டு நடையை கட்டிவிட்டார்.
அவர் சென்ற பின்னும் சகுந்தலாவிற்கு யமுனாவின் பேச்சு காதில் ஓயாமல் ஒலித்துக்கொண்டே இருந்தது.
அதிலிருந்து வெளி வரமுடியாத வேதனையில் அவரும் அறைக்குள் சென்று அடைந்து கொண்டார்.
ஜெகதீஷூக்கு அன்று பரிச்சை என்பதால் மதியத்தோடு பள்ளி முடிந்திருக்க காலையிலும் யமுனா உறக்கத்தில் இருந்ததால் பேசாத ஏக்கத்தோடு வந்தவன், தந்தை செருப்பு இல்லாமல் இருந்ததில் குஷியாகி, “அண்ணீ..” என கத்தியபடி வீட்டினுள் நுழைந்தான்.
எப்போதும் அவன் அழைப்புக்கு பதிலாய்.. தன் முன் சிரித்த முகமாய் வந்து நிற்கும் யமுனா வராமல் இருக்க,
“அண்ணீ.. என்ன பண்ணறீங்க..?” என்றவாரு தீனாவிற்கான அறையை திறந்தவன் அங்கே கண்ட காட்சியில்..
“அண்ணீ….!!!” என வீரிட்டான்.
error: Content is protected !!