Skip to content
Post Views: 2,562
வழக்கம் போல் மதுரா கல்லூரிக்கு கிளம்பி கொண்டு இருந்தாள் அவளுக்கு மதிய உணவை டப்பாவில் வைத்துவிட்டு நாளை உன் கல்லூரிக்கு விடுமுறை சொல்லிவிட்டு வா என்றால் மதுராவின் தாய் ஜானகி. ஏன் அம்மா நாளை சனிக்கிழமை ஒரு நாள் தான் அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை அன்று விடுமுறை தானே நான் விடுமுறை எல்லாம் எடுக்க முடியாது மா..
இல்லை மதுரா ஞாயிற்றுக்கிழமை உன்னை பொண்ணு பார்க்க வரும்போது ரொம்ப டயர்டா தெரிவ அதனால சொல்றேன். அன்னைக்கு ஏதோ பேசியல் என்னமோ சொல்றாங்கல அத செஞ்சிக்குவேன் அப்படின்னு செல்லமா மதுராவிடம் கேட்டாள்.
அம்மா நான் கருப்புதான் என்னை இப்படியே யாருக்கு பிடிக்குதோ அவங்களுக்கு பிடிச்சா போதும் மா. நீ கருப்பெல்லாம் இல்லையே மாநிறம் அதுவும் இல்லாம என் பொண்ணு ரொம்ப லட்சனமான அழகு இன்னும் கொஞ்சம் மெருகேத்திக்க சொல்றேன்…. சேரி சேரி நான் வந்து பண்ணிக்கிறேன். அப்புறம் இன்னைக்கு ஏதோ வெயில்ல நின்னு எடுக்கிற பாடம் எல்லாம் எடுத்துறாத டி வெயில்ல நின்னா அது என்னம்மா ஓ சர்வே பாடத்தை சொல்லுறியா அதான் சொல்றேன் சரி சரி அம்மா என சிரிச்சுக்கிட்டே டைம் ஆச்சு மா பஸ் வந்துடும் என்றவள் தனது ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு விரைந்து சென்றாள். ஸ்டாண்டில் தனது வண்டியை போட்டுவிட்டு கல்லூரி பேருந்தை பிடித்து விட்டாள். தனது தோழிகளுடன் அமர்ந்து கொண்டு ஏதாவது பேசிக் கொண்டு வருவாள் இல்லை என்றால் அலைபேசியில் பாட்டை போட்டு ஹெட்செட்டை காதில் சொருகி கொள்வாள்.
சிறிது நேரம் அந்த மூவர் இருக்கையின் ஓர கம்பியில் சாய்ந்தபடி ஏதாவது கனவு கண்டு கொண்டே வருவாள் அது போல் இன்றும் கண்களை மூடியவாறு தனது தாய் ஜானகி சொன்னதை நினைத்து சிரித்துக்கொண்டால் என் அப்பாவி அம்மா வாழ்க்கையில் எந்த சந்தோஷமும் இல்லாம வாழ்க்கை முழுக்க எனக்காகவே கஷ்டப்பட்டு இருக்காங்களே அவங்களுக்குன்னு இன்னும் நான் ஒன்னும் பண்ணவே இல்ல அப்படியே என்னம்மா வேணும்னு கேட்டா நீ நல்லா இருக்கிறதா பார்த்தா அதுவே எனக்கு ரொம்ப சந்தோஷம் னு சொல்லிடறாங்க அப்பா இல்லாமல் என்னை இப்படி வளர்த்து ஆளாக்குனவங்களுக்கு நான் என்ன செய்யப் போறேன்னு தெரியல….
Advertisement
மதுராவின் சின்ன வயசுலயே ஜானகியை விட்டுட்டு அவளோட கணவன் பிரிஞ்சுட்டாரு அதுவும் குடிபோதை காரணமாக அப்புறம் ஜானகியையும் மதுராவையும் ஜானகியோட அப்பா அம்மா அவங்களோட அண்ணா எல்லாரும் சேர்ந்து ஒண்ணா பார்த்துகிட்டாங்க அவங்களோட அரவணைப்புல தான் மதுரா வளர்ந்தா பெரிய கூட்டு குடும்பம் அனைவரும் அன்பானவர்கள் அதேசமயம் மனச காயப்படுத்துற மாதிரி சில வார்த்தைகளும் வரும் ஆனா ஜானகிக்கு அவ வாழ்க்கையில ஏற்பட்ட வலியை விட இது ஒன்னும் பெருசு இல்லைன்னு அமைதியா போயிடுவா மதுரா எப்போதும் அப்பாவோட அன்புக்காக ஏங்கிக்கிட்டு இருந்தா. அவளோட படிப்ப பெரியப்பா அப்புறம் மாமாவின் உதவியால் பட்டப் படிப்பை முடித்தால் . ஆனால் அவளது முதுகலை படிப்பை தானே வேலைக்கு சென்று அந்த வருமானத்தில் முடித்துக் கொண்டாள். இப்பொழுது தனியார் தொழில்நுட்பக் கல்லூரியில் சிவில் இன்ஜினியரிங் டிபார்ட்மென்ட் இல் உதவி பேராசிரியராக பணியாற்றுகிறாள். மதுரா கல்லூரிக்கு வந்து சேர்ந்து விட்டால்.
முதல் வகுப்பே அவளோடுது தான் அவளது வகுப்பை தொடங்க சென்றாள். மதுராவை பிடிக்காத ஆளே கிடையாது மதுராவின் வகுப்பு என்றால் மாணவ மாணவிகளுக்கு மிகுந்த விருப்பம். அவளின் பேச்சு அன்பாகவும் அக்கறையாகவும் இருக்கும் ஏன் அவளின் கண்டிப்பு கூட அன்பான கட்டளையாகவே இருக்கும். மிகவும் அழகானவள் காட்டன் புடவையில் செதுக்கிய சிலை போல் இருப்பாள். அவளின் சிரிப்பும் அன்பான பேச்சும் அனைவரையும் கட்டிப்போட்டு விடும். இவள் கல்லூரி ஆசிரியராக இருப்பதால் இவளுக்கு தெரியும் யார் எப்படி பேசுகிறார்? எப்படி அணுக வேண்டும் என்று… ஒரு கட்டுப்பாட்டுடன் தைரியமான தன்னம்பிக்கையான ‘பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக இருக்க அவளுக்கு பிடிக்கும்’ அப்படித்தான் இருக்கவும் செய்வாள். சிறிது நேரம் தனது வகுப்பில் மாணவ மாணவிகளுக்கு அறிவுரை வழங்குவாள்.
ஒரு மாணவி மதுரா மேடம் நான் உங்ககிட்ட ஒன்னு கேட்கலாமா என்ன சொல்லுமா அப்படின்னு கேட்டா நீங்க எந்த சமூக வலைத்தளங்களிலும் இல்லையே ஏன் மேம் அப்படின்னு கேட்டா எனக்கு அதெல்லாம் பிடிக்காது நான் வச்சுக்கல அப்படின்னு சொன்னா. இத பத்தி நானே உங்ககிட்ட பேசணும்னு நினைச்சேன் நீங்க எல்லாருமே சமூக வலைத்தளங்களில் இருக்கீங்கன்னு கேள்விப்பட்டேன்.. பசங்க சொல்லிட்டு இருந்தாங்க சேரி அது நல்லதுக்கு பயன்படற வரைக்கும் சந்தோசம் தான் ஆனா உங்களோட போட்டோ அதுக்கு வர கமெண்ட் அதுக்கு நீங்க அனுப்புற ரிப்ளை இது எல்லாமே இப்ப சரியான யோசிச்சு பாருங்க ரொம்ப சின்ன சந்தோசம் தான் இந்த சின்ன சந்தோசத்துக்காக உங்க வாழ்க்கையில வரப்போற பெரிய சந்தோஷத்தை அனுபவிக்க முடியாம போயிடும். அதனால நீங்க எல்லாரும் இப்ப ரொம்ப சின்ன பொண்ணுங்க இப்ப இந்த வயசு உங்களுக்கு படிக்கிறதுக்கான காலம் அதனால இந்த நேரத்தை உங்க அறிவுக்காக செலவிடுங்க அப்புறம் நீங்க இன்னும் கொஞ்சம் பெரிய ஆளா ஆனா உடனே உங்களுக்கான உங்க வாழ்க்கை உங்ககிட்ட வரும் அப்ப உங்களுக்கு நினைச்ச மாதிரி எல்லாம் வாழலாம் ஆனா ரொம்ப பாதுகாப்பா தைரியமா இருக்கணும்.
அதேசமயம் உங்களுக்கு புடிச்ச மாதிரி தான் நீங்க வாழனும். நீங்க மொத உங்கள நேசிங்க நீங்களே உங்கள ரசிங்க போதும். ஏன் யாரோ உங்கள ரசிச்சு சொல்லணும்னு நினைக்கிறீங்க உங்களுக்கான அழகு உங்களுக்கு தெரியும் நீங்க எல்லாரும் ரொம்ப தைரியமா இருக்கணும். யாரு என்ன நினைச்சாலும் சொன்னாலும் உங்களுக்கு நீங்க தான் ராணி.
Advertisement
ஒரு சின்ன கதை சொல்லட்டுமா நான் படிச்சது தான் இது விவேகானந்தர் கிட்ட ஒரு வெள்ளைக்காரன் கேட்டான் ஏன் உங்க நாட்டு பெண்கள் எல்லாம் கை கொடுத்தால் திரும்பி கொடுக்க மாட்டாங்க அதுக்கு பதிலா கையெடுத்து வணக்கம்னு சொல்றாங்க அப்படின்னு அதுக்கு விவேகானந்தர் என்ன பதில் சொன்னார்ன ஒரு சாமானிய மனிதன் உங்கள் நாட்டு மகாராணியிடம் கை கொடுக்க முடியுமா அது எப்படி அவர்கள் எங்கள் நாட்டு ராணி அப்படியெல்லாம் கொடுக்க மாட்டார்கள் ஆமா அது மாதிரி தான் எங்கள் நாட்டுப் பெண்கள் எல்லாரும் எங்களோட ராணிகள் அப்படின்னு சொன்னாராம். புரியுதா சரிங்க மேம்…
Advertisement
அப்படின்னு பொண்ணுங்க கிட்ட பேசிகிட்டு இருந்தா உடனே பசங்க எல்லாரும் மேம் எப்ப பாரு நீங்க அவங்க கிட்ட மட்டுமே சொல்லுறீங்க பேசுறீங்க எங்களுக்கும் ஏதாவது சொல்லுங்க உங்களுக்கு என்னடா நான் சொல்ல நீங்க எல்லாரும் இப்பயே தண்ணி அடிக்கிறீங்க தம்மடிக்கிறீங்கன்னு கேள்விப்படறேன் இந்த பழக்கம் எல்லாம் இல்லாம நல்ல பிள்ளைகளா இருங்க அது மட்டும் இல்லாம எல்லா பொண்ணுங்களுக்கும் மரியாதையை கொடுங்க புரியுதாடா வாழ்க்கை ரொம்ப ரொம்ப அழகானது நீங்க எதிர்காலத்துல ரொம்ப சந்தோசமா வாழனும்னு நினைப்பீங்க ஆனா இப்ப நீங்க பண்ற தப்பால உங்களால நீங்களே நினைச்சாலும் சந்தோசமா வாழ முடியாது அதனால படிக்க வேண்டிய வயசுல படிக்கணும். உங்க எல்லாருக்குமே சொல்றேன் எவ்வளவு சந்தோஷமா இருக்க முடியுமோ அவ்வளவு சந்தோசமா அன்பா வாழ்க்கையே வாழுங்க… சரி டைம் ஆயிடுச்சு நாளைக்கு பார்ப்போம் என்று விடை பெற்று சென்றாள்.
வீட்டிற்குச் செல்ல தயாரானவள் கல்லூரி பேருந்தில் அமர்ந்து கொண்டு நாம எல்லாருக்கும் இவ்வளவு தைரியம் சொல்றோம் ஆனா நம்மளோட வாழ்க்கை அம்மா வாழ்க்கை மாதிரி ஆகிடுமா கொஞ்சம் பயமா இருக்கு எனக்காக வருவங்களுக்கு எந்த கெட்ட பழக்கமும் இருக்கக்கூடாது ரொம்ப நல்லவங்களா இருக்கணும் அப்படின்னு பயந்துக்கிட்டே இருந்தா வீட்டிற்கு வந்தவுடன் ஜானகி நாளைக்கு லீவு சொல்லிட்டியா மதுரா அப்படின்னு கேட்டா ஆமாமா சொல்லிட்டு வந்துட்டேன். சரி மதியான சாப்பாடு சாப்பிட்டியா இல்லம்மா ஒரு பையன் மா ரொம்ப நல்ல பையன் கஷ்டப்படுற குடும்பம் இன்னைக்கு அவங்க அம்மாவுக்கு உடம்பு சரியில்லன்னு சாப்பாடு கொண்டு வரலைன்னு சொன்னா அதனால என் சாப்பாடு எடுத்துக்கோனு கொடுத்துட்டேன். அம்மா நான் என் தோழிகளோட ஷேர் பண்ணி சாப்பிட்டேன். சேரி மதுரா பார்த்து பத்திரமா இரு இந்த காலத்துல நாம நல்லது நெனச்சு உதவி பண்ணினாலும் நம்மள தப்பா தான் பேசும் அதனால சொல்றேன்.
சரிமா என்றவள் தனது பெரியம்மா வருவதை பார்த்தால் ஜானகியின் உடன் பிறந்த சகோதரி கலா கலாவின் முயற்சியை மதுராவின் பெண் பார்ப்பின் ஏற்பாடு அனைவரையும் விசாரித்து ஜாதக பொருத்தம் எல்லாம் சரிபார்த்து நாளை பெண்பார்க்கும் நேரம் வரை பேசி அதை தனது தம்பியிடம் கலந்து முடிவும் எடுத்து விட்டாள். அவள் பெரியம்மாவை கலா அம்மா என்றே அழைப்பாள். அவளின் தாய்மாமன் கிருஷ்ணா தந்தைக்கு நிகரான அன்பை மதுராவுக்கு தருபவன். அவரும் பார்த்து பார்த்து வேண்டிய வேலைகளை செய்து கொண்டிருந்தார். மதுராவின் மாமா பிள்ளைகள் அத்தைகள் அனைவரும் எப்பொழுதும் மதுராவை கேலி செய்து விளையாடுவது வழக்கம் அதுபோல் இன்றும் விளையாடிக் கொண்டிருந்தனர் அவளுக்கு அது பெரியதாகவே தெரியாது. நம்மளால எல்லாரும் சிரிச்சு சந்தோசமா இருந்தா போதும் நினைப்பா.
Advertisement
மதுராவின் தோழிகளோடு சினிமாவுக்கு இல்லை எங்கேயாவது வெளியேவோ சுற்றவோ போக முடியாது. ஏன்னா அவ அப்படி போனும்னா எல்லார்கிட்டயும் அனுமதி வாங்கணும் அதுக்காகவே அவள் எங்கேயும் போக மாட்ட இந்த மாதிரி நேரத்துல நமக்கு மட்டும் அப்பா இருந்திருந்தா நாமளும் எல்லார் மாதிரியும் சந்தோசமா இருந்திருக்கலாம் அப்படின்னு நினைச்சு வருத்தப்படுவா.. அவளிடம் நிறைய ஆசைகளும் கனவுகளும் இருக்கும் இது எல்லாத்தையும் திருமணம் முடிஞ்சதுக்கு அப்புறம் தன் கணவனோட சேர்ந்து நிறைவேற்ற வேண்டும் என்ன நினைத்துக் கொள்வாள்…
சிறுபிள்ளை போல் எப்பொழுதும் ஓடி ஆடி விளையாண்டு கொண்டே தான் இருப்பாள் மதுராவின் அம்மாச்சி ஏண்டி மதுரா இன்னும் இரண்டு நாள்ல பொண்ணு பார்க்க வராங்க இப்படி ஆட்டம் போட்டுட்டு இருக்க பொம்பள புள்ளையா அடக்கமா இருடி அப்படின்னு மீனாம்பாள் திட்டிகிட்டு இருந்தா. மதுராவுக்கு அவளோட அம்மாச்சிய ரொம்ப பிடிக்கும் சரிங்க அம்மாச்சி. ஆனா இப்படி இருக்கிறது தானே எனக்கு பிடிக்கும் எப்போதும் சந்தோசமா… ஆமா இப்படி இருந்தாலும் நான் நல்ல பொண்ணு தானே அம்மாச்சி அப்படின்னு கேட்டாள் நீ என் தங்கம் டி மதுரா நீ இரும்மா இப்படியே இரு எப்போதும் சந்தோசமா எல்லார்கிட்டயும் அன்பா உன்ன இப்படியே பாத்துக்குற ராஜகுமாரன் வருவான் அப்படின்னு சொன்னா.. சேரி உங்க பெரியம்மா மாப்பிள்ளை போட்டோ காமிச்சாங்களா ம்ம் ..ஆமா அம்மாச்சி காமிச்சாங்க ஆனா நான் பாக்கல நீங்க எல்லாரும் பார்த்தா எனக்கு ஓகே..’ உங்க எல்லாரையும் விட யார் அம்மாச்சி எனக்கு நல்லது நினைக்க போறா ‘ என்று பேசிக் கொண்டிருந்தவள் அவளின் அலைபேசி ஒலி கேட்டு இருங்க அம்மாச்சி என்னோட போன் அடிக்குது நான் பேசிட்டு வரேன் என்று அலைபேசியை எடுத்தவள் ஹலோ என்றாள் ஏ மதுரா நான் வருணா பேசுகிறேன். நான் இன்னைக்கு வீட்டுக்கு வர கொஞ்சம் லேட் ஆகும் இதை வீட்ல சொல்லிடு என அலைபேசியை அணைத்து விட்டால். இவ பேசுவதை நாம கேட்கணும் நாம பேசுறத கேட்கவே மாட்டா திமிர் எடுத்தவ என செல்லமாக அவளைத் திட்டிக் கொண்டாள். வருணா மதுராவின் தாய் மாமா பொண்ணு மதுராவிற்கும் வருணாவிற்கும் எட்டு வருடங்கள் வித்யாசம் இருந்தாலும் இவர்கள் இருவரும் நெருங்கிய தோழிகளே .
மதுரா வருணா வந்ததும் எந்த புடவை நல்லா இருக்கும் என்று கேட்டு எடுத்து வை என்றால் ஜானகி சரி அம்மா என்றால்.. வருணா மிகவும் அழகானவள் திறமைசாலி மதுராவை விட சிறியவள் என்றாலும் மிகவும் கெட்டிக்காரி.. மதுராவை பட்டிக்காடு மாதிரி இருக்காத தலையை இப்படி சீவு இந்த மாதிரி எல்லாமே வருணா தான் சொல்லுவா. வருணாவும் மதுராவும் பியூட்டிசனிடம் சென்று பேசியல் பண்ணனும்னு சொன்னாங்க. மதுரா உள்ளே சென்றாள். அவளிடம் எந்த பேசியல் பண்ணனும்னு கேட்க அவ எனக்கு தெரியலையே. அப்படின்னு சொன்னா உடனே வருணா கோல்டன் பேசியல் பண்ணுங்க அக்கா என்றால் இருவரும் செய்து கொண்டு வீட்டுக்கு வந்தனர் .
மதுரா நல்ல நேரம் முடிவதற்குள் . நாளை இங்கிருந்து கிளம்ப வேண்டும் மாப்பிள்ளை வீட்டார் காலை ஒன்பது மணிக்கு எல்லாம் கோவிலுக்கு வந்து விடுவார்கள். சேரி கலாஅம்மா நான் ரெடி ஆகிடுறேன். என்றவள் வருணாவிடம் எனக்கு பயமா இருக்குடி ஏன் பயமா இருக்கு இல்ல தெரியல. அது அப்படி தாண்டி இருக்கும் நீ ஒன்னும் பயப்படாத இல்ல நான். என்ன நான் நீ நல்லா ஹைட்டா கரெக்டா செம பிகரா இருக்க ரொம்ப சீன் போடாத என்றாள் இதைக் கேட்டதும் மதுராவுக்கு சிரிப்பு வந்துவிட்டது. இருவரும் பேசி சிரித்துக்கொண்டிருந்தனர் அதற்குள் மீனாம்பாள் அம்மாடி சீக்கிரம் தூங்குங்க நாளைக்கு காலையில விரச எழுந்திருக்கணும்ல சொன்னா சரிங்க அப்பாயி என்றாள் வருணா . இருவரும் சிறிது நேரம் பேசிக்கொண்டு தூங்கி விட்டனர் .
மறுநாள் காலை ஐந்து மணிக்கு எல்லாம் ஜானகி தனது வேலைகளை முடித்துக் கொண்டு இருந்தாள். மதுராவை எழுப்பி குளித்து தயாராக சொன்னால். மதுரா மரகத பச்சை நிரப்புடவை உடுத்திருந்தாள் காதில் அழகான ஜிமிக்கி தலை நிறைய மல்லிகைப்பூ இரண்டு கைகளிலும் வளையல் கழுத்தில் சின்னதாக ஒரு செயின் நான் ரெடி ஆகி விட்டேன் என்றாள். உடனே வருணா கழுத்தில் உனது நகை ஆரம் இருக்குல அதை எடுத்துப் போடு ஏய் எனக்கு அதெல்லாம் வேணாம் டி சிம்பிளா இருந்தா போதும் அப்படின்னு மதுரா சொன்ன உடனே வருணா எல்லார்கிட்டயும் திட்டு வாங்காத ஒழுங்கா எடுத்து போடு சரி போட்டுக்குறேன் அப்படின்னு போட்டுக்கிட்டா. மதுராவைப் பார்த்த வருணா ரொம்ப அழகா இருக்க டி ஸ்ட்ரக்சரா இருக்க போ வருணா கிண்டல் பண்ணாதடி என்று அவளைச் செல்லமாக அடித்தால். மதுரா அம்மாசியிடம் சென்று நல்லா இருக்கேனா என்று கேட்டால் அந்த சாமி சிலை மாதிரி இருக்கடி தங்கம் என்றாள் நல்ல சாமி கும்பிட்டுக்கோ பத்திரமா போயிட்டு பத்திரமா வாங்க அப்படின்னு அவளுக்கு திருநீர் பூசி விட்டு ஆசிர்வாதம் வாங்கினாள். கார் வரவும் அனைவரும் புறப்பட்டனர்.
அது ஒரு புகழ்பெற்ற சிவன் கோவில் மதுராவின் பெண்பார்க்கும் நிகழ்ச்சி அங்கு தான் நடைபெற உள்ளது மாப்பிள்ளை வீட்டார் வருவதற்குள் அனைவரும் கோவிலுக்கு சென்றனர். அங்கு சென்று அனைவரும் அமர்ந்திருந்தனர். அதற்குள் மதுரா உள்ளே சென்று சுவாமியை தரிசனம் செய்து விட்டு வரலாம் என அம்மன் சன்னதிக்குள் சென்றாள். அம்மன் சன்னதியில் உள்ள ஒரு மண்டபத்தில் தான் பெண் பார்க்க அனைவரும் அமர்ந்திருந்தனர். மதுரா கடவுளிடம் இப்ப என்ன பாக்க வரப்போற மாப்பிள்ளைக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லாமல் ரொம்ப நல்லவங்களா இருக்கணும் அப்படின்னா இத நீங்களே நல்லபடியா நடத்தி வச்சிருங்க அப்படின்னு வேண்டிக்கிட்டா. அவள் அம்மாவின் தனிமை அப்பாவின் செயலால் அவளின் மனம் மிகவும் பாதிக்கப்பட்டு இருந்ததால அதுல இருந்து அவளால சீக்கிரம் வெளியே வர முடியல அந்த பயத்தோடையே அமர்ந்திருந்தவள்.
சற்று தூரத்தில் ஒரு வாலிபன் வயதான பாட்டி ஒருவரின் தோல் மேல் கையை போட்டு பொறுமையா ஏதோ சிரிச்சு பேசிக்கிட்டே அழைத்துக் கொண்டு வருவதை பார்த்தால் பரவாயில்லையே இந்தக் காலத்திலேயும் இப்படி எல்லாம் பசங்க இருக்காங்களே அதுவும் காலேஜ் பேக் வேற மாட்டி இருக்கான் நல்ல பையனா இருப்பான் போல அப்படின்னு அத பாத்து ரசிச்சுக்கிட்டு இருந்தா கொஞ்ச நேரத்துல வா மதுரா உன்னை எல்லாரும் கூப்பிடறாங்கன்னு அவங்க அத்தை சொல்லவும் சென்றாள் அங்குள்ள அனைத்து பெரியவர்களுக்கும் வணக்கம் கூறிவிட்டு அமர்ந்திருந்தால். இவர்தான் மாப்பிள்ளை என்று அவர் மாமா சொல்ல சற்று நிமிர்ந்து பார்த்தவளுக்கு ஒரே ஆச்சரியமாக இருந்தது …
error: Content is protected !!